Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை - திண்டுக்கல் ஐ லியோனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை -  திண்டுக்கல் ஐ லியோனி

leoni-7-1616840350.jpg

சென்னை: பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி, பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பிரச்சாரம் - சர்ச்சை

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பிரசாரத்தின் சமயத்தில் பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நியமன அறிவிப்பு

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி கடந்த சில நாட்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனம் குறித்து திண்டுக்கல் லியோனி அவரது ட்விட்டரில், 'தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் தலைவராக முதல்வர் என்னை பணியில் அமர்த்திப் பெருமைப்படுத்தினார்.

30ஆண்டுகள் ஆசிரியப்பணியில் இருந்த எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாக நான் கருதுகிறேன்' எனப் பதிவிட்டிருந்தார்.

பதவியேற்பு

இந்தச் சூழலில் இன்று டி.பி.ஐ வளாகத்தில் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனி இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் லியோனியை வரவேற்ற அன்பில் மகேஷ், அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விருப்ப பாடமாக மாற்றம்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 2011ஆண் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அப்போது கீழே வைத்த பாடப் புத்தகத்தை இப்போது சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் கையில் எடுத்துள்ளேன். பள்ளி புத்தகங்கள் என்றால் மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படிக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி மாணவர்கள் விருப்பத்துடன் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்றுவதே எனது நோக்கம்.

கருணாநிதி வாழ்க்கை வரலாறு

karunanidhi-1533641561.jpg

'நாங்கள் மாணவர்களாக இருந்த சமயத்தில் அண்ணாவின் பேச்சுக்கள் எல்லாம் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தது . கடந்த ஆட்சியில் பாடநூல் புத்தகங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் கூட நீக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க அரசியலுக்காகச் செய்யப்பட்டது. ஆனால் இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரையிலான பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்' என்று அவர் கூறினார்.

https://tamil.oneindia.com/news/chennai/tn-textbook-corporation-chief-dindigul-leoni-said-steps-will-be-taken-to-bring-karunanidhi-s-biograp-426874.html

டிஸ்கி :

உள்ளது உள்ளபடியே போடுங்கப்பா .. 👍 கள உறவுகளின் விருப்பமும் அதே..☺️

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் எவ்வளவு முக்கியம், குடும்பத்துக்காக உழைக்க வேண்டியதன் அவசியம், குடும்பத்துக்காக செய்ய வேண்டிய விட்டு கொடுப்புகள். குடும்பத்தை திறம்பட மேலாண்மை செய்வது எப்படி போன்ற விடயங்களை இவர் வாழ்கையை வைத்து விளக்குவாகள் போலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி,

பிறகென்ன இனி சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு பள்ளிக்கூடங்களுக்கு புத்தகமாய் வரும்.

மற்றவர்களை நையாண்டி பண்ணி பட்டிமன்றம் நடத்துவது போல் பிள்ளைகளின் படிப்பையும் முன்னெடுத்து செல்லட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

பிறகென்ன இனி சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு பள்ளிக்கூடங்களுக்கு புத்தகமாய் வரும்.

மற்றவர்களை நையாண்டி பண்ணி பட்டிமன்றம் நடத்துவது போல் பிள்ளைகளின் படிப்பையும் முன்னெடுத்து செல்லட்டும்.

இணை, துணையுடன், கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத மகிமை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடப்புத்தகத்தில் வரும் தானே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Nathamuni said:

இணை, துணையுடன், கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத மகிமை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடப்புத்தகத்தில் வரும் தானே....

வரும்...வரும் எல்லாம் வரும் 😂

image004.jpg

karuna-3hr-fastimg.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இணை, துணையுடன், கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத மகிமை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடப்புத்தகத்தில் வரும் தானே....

5 hours ago, குமாரசாமி said:

வரும்...வரும் எல்லாம் வரும் 😂

image004.jpg

karuna-3hr-fastimg.jpg

முதலாவது... மனைவியை,  ஏன்.. பாடப் புத்தகத்தில் சேர்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் இப்ப சேர்க்க ஆட்சி மாற வரலாற்றை நீக்க, மாறி மாறி நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை -  திண்டுக்கல் ஐ லியோனி

leoni-7-1616840350.jpg

சென்னை: பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி, பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

karunanidhi-1533641561.jpg

அதுதான் ஆரம்பத்தில் லியோனி சொல்லி விட்டாரே "மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் மாற்றுவது" தனது நோக்கம் என்று.......அதற்கு பொருத்தமாக வேறு யார் இருக்கிறார்கள்......பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர் எல்லாம் அதுக்கு சரிவர மாட்டார்கள்.....அவர்கள் தாம் முன்னேறாவிட்டாலும்  பரவாயில்ல நாடு முன்னேறவேண்டும் என்று பாடுபட்டவர்கள்.....இவரிடம்தான் மகிழ்ச்சி, கவர்ச்சி, கரன்சி,கணக்கு கேட்டால் கட்சியை விட்டு நீக்குதல்,கூட வந்தவர்களை குளத்தில் தள்ளி விட்டு  தன் குடும்பங்களை மட்டும் கரையேற்றுதல்  எல்லாம் சேர்ந்திருக்கிறது.......!   😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

On 12/7/2021 at 20:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை -  திண்டுக்கல் ஐ லியோனி

வரலாறு என்று பார்த்தால் இங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்.😎

ஒரு ரயில் வேகத்துடன் சென்னை பட்டினத்தை நோக்கி வருகின்றது

அந்த ரயிலுக்குள்.......அதாவது ரயிலின் மலசல கூடத்திற்குள்
ஒரு கறுப்பு உருவம்  அழுக்கு துணியை போர்த்திக்கொண்டு பதுங்கியிருக்கின்றது.

ஆம்.....அவரே தான்....அந்த உருவம் தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னென்னு சொல்லிக் கொடுக்கிறது.. துணை மனை இணை என்று மூன்று பொண்டாட்டிகளும் ஊரெல்லாம் வைப்பாட்டிக்களும் வைத்திருங்கள் பிள்ளைகளே. பள்ளிப்படிப்பை 8 டோடு நிறுத்திவிட்டு.. சினிமா அரசியல் என்று அலையுங்கள் சிறுவர் சிறுமிகளே.. தமிழர் என்ற உணர்வை தொலைத்து..  ஈழத்தமிழர்களை பாடையில் ஏற்றி பரிகாசம் பண்ணுங்கள் சின்னஞ்சிறுசுகளே.. கள்ளை குடிக்காவிட்டாலும்.. சாராயக்கடைகளை திறந்து சாராய சமூதாயத்தை ஆக்குங்கள் குஞ்சு குருமானுகளே..  சினிமாவுக்கு விசிலடிப்பதே உங்களின் தலையாக கடமை என்று விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருந்துவிடுங்கள்.. தமிழ் தமிழர் தமிழ்நாடு ஆட்சி அதிகாரம் என்று சிந்தித்துவிடாதீர்கள். அது ஐயா கட்டுமரம் கருநாநிதியின் குடும்பத்துக்கே சொந்தம் ஆகும்... என்று எழுதிப் படியுங்கள் மாணவர்களே. 

இவர் லியோனிக்கு வர வர புத்தி மங்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

மிஸ்டர் நெடுக்ஸ் நீங்கள் சொல்வதெல்லாம் சரியே....ஆனால் இந்த சினிமாவுக்கு விசிலடிக்கிற வசனத்தை எடுத்து விட முடியாதா,  இங்கேயும் இதயத்தில் வலிக்குது......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

மிஸ்டர் நெடுக்ஸ் நீங்கள் சொல்வதெல்லாம் சரியே....ஆனால் இந்த சினிமாவுக்கு விசிலடிக்கிற வசனத்தை எடுத்து விட முடியாதா,  இங்கேயும் இதயத்தில் வலிக்குது......!  😢

தவறு திருத்தப்படுதல் அவசியம். தொடரக் கூடாது. இப்ப யோசிச்சு பாருங்கள்.. உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைகள் சினிமா பார்ப்பார்கள்.. விசிலடிக்கிறார்களா என்று.. மேற்கு நாடுகளில் நீங்கள் வாழ்பவராக இருந்தால்...

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

தவறு திருத்தப்படுதல் அவசியம். தொடரக் கூடாது. இப்ப யோசிச்சு பாருங்கள்.. உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைகள் சினிமா பார்ப்பார்கள்.. விசிலடிக்கிறார்களா என்று.. மேற்கு நாடுகளில் நீங்கள் வாழ்பவராக இருந்தால்...

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

அவர்கள் ஒருவித பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால்.. நாங்கள் எல்லாம் தியேட்டர்களை தரைமட்டமாக பார்த்த பரம்பரை. இன்னொரு வகை. பாவப்பட்ட ஜென்மங்கள்.  ஆனாலும்.. தியேட்டர்களின் திரைகளுக்கு அப்பால்.. தியாகிகளை.. நிஜ ஹீரோக்களை கண்டிட்டம், அதனால்.. சினிமா தாக்கமில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

டிஸ்கி

இன்று நாடு முழுதும் புகையிரதங்கள் ஓடாது.☺️..😊

IMG-20210715-200708.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2021 at 20:25, goshan_che said:

ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் எவ்வளவு முக்கியம், குடும்பத்துக்காக உழைக்க வேண்டியதன் அவசியம், குடும்பத்துக்காக செய்ய வேண்டிய விட்டு கொடுப்புகள். குடும்பத்தை திறம்பட மேலாண்மை செய்வது எப்படி போன்ற விடயங்களை இவர் வாழ்கையை வைத்து விளக்குவாகள் போலும்.

எனக்குள் கன  காலமாக  இருக்கும்  சந்தேகங்கள்  தீரும் என்று  நினைக்கின்றேன்??😜

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

வாழைப்பழத்துக்கு புகையடித்த மாதிரி சிகரட் பீடி சுருட்டு இதையுமல்லவா தாங்கினோம்.

வீட்டை போக மணத்திலேயே பிடித்துவிடுவார்கள்.

நாங்களும் 3-4 பேர் இருந்து ஒரு சிகரட்டில் குனிந்து குனிந்து இழுத்து விட்டு(யாரும் பார்க்கலையாம்).

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் கதையை எழுதினால் தலை குனியப்போவது தமிழினமே தவிர அவரது குடும்பம் அல்ல.😭

  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் கொலைக்குப்பின், இலங்கைத்தமிழ் அகதிகளுக்காக பெரிய அளவில் உதவி ( கல்வி, முகாமகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம், மன உளச்சல் தரும்நெருக்கடி அற்ற) செய்தவர் கருணாநிதி தான், 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.