Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மரணம்

spacer.png

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-அமைச்சர்-மங்கள-சமரவீர-மரணம்/175-279509

Edited by கிருபன்

சந்திரிக்காவின் அரசில் இடம்பெற்ற பல படுகொலைகளுக்கு வெள்ளையடித்தவராயினும், இலங்கையில் இனப்பிரச்சனகைக்கு சமஷ்டி போன்ற உறுதியான அதிகாரப்பரவலாக்கம் ஒன்றின் மூலம் தான் தீர்வு  என்பதை ஏற்றுக் கொண்ட மிதவாத சிங்கள அரசியல்வாதி இவர். மகிந்த சகோதரர்களுக்கு எதிரான ஒரு அமைப்பை தோற்றுவித்து அது செயல்பட முன்னரே கொரனாவால் இறந்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

2005 இல் இவரின் நகர்வுகள் இல்லாவிடில் மகிந்த ஜனாதிபதியாக வந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

இவரது ஜாதகத்தில் அரச தலைவராகும் அமைப்பு இருந்த்தால் எப்போதும் இராஜபக்சேக்கள் இவரையிட்டு கவலையோடு இருந்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, goshan_che said:

இவரது ஜாதகத்தில் அரச தலைவராகும் அமைப்பு இருந்த்தால் எப்போதும் இராஜபக்சேக்கள் இவரையிட்டு கவலையோடு இருந்தனர்.

உண்மையிலையே இவருக்கு கொரோனாதானோ ஆருக்கு தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அளவில் புலிகளை பயங்கரவாதிகளாக காண்பித்து அவர்களை தடை பட்டியலில் சேர்க்க அரும்பாடு பட்ட சிங்கள வெளிவிவகார அமைச்சர்கள் வரிசையில் கதிர்காமருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள்மீதான தடைக்கு மிகபெரும் பங்காற்றியவர். கதிர்காமர் புலிகள் பயங்கரவாதிகள் என்றார் இவர் ஒருபடி மேலே சென்று புலிகள் தமிழருக்கும் எதிரான பயங்கரவாதிகள் என்று ஓயாமல் முழங்கினார்.

இறந்துபோவதால் எல்லோருமே புனிதமானவர்களாகிவிட முடியாது உங்கள் இறப்பு எனக்கு எந்த வருத்தையும் தரவில்லை ஏனெனில் உங்கள் அரசபயங்கரவாத விசுவாசத்தால் நாங்கள் சந்தித்த இறப்புகள் பல்லாயிரம்.

6 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆழ்ந்த அனுதாபங்கள்!

அவர் பிரிவினால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

இறந்துபோவதால் எல்லோருமே புனிதமானவர்களாகிவிட முடியாது உங்கள் இறப்பு எனக்கு எந்த வருத்தையும் தரவில்லை ஏனெனில் உங்கள் அரசபயங்கரவாத விசுவாசத்தால் நாங்கள் சந்தித்த இறப்புகள் பல்லாயிரம்.

எனது நிலைப்பாடும் இது தான்.

நல்ல விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இவரது சகா மகிந்த  அரசால் கொல்லப்பட்டது  நினைவில் உள்ளதா? மரத்துடன் அவரது வாகனம் மோத  வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nunavilan said:

இவரது சகா மகிந்த  அரசால் கொல்லப்பட்டது  நினைவில் உள்ளதா? மரத்துடன் அவரது வாகனம் மோத  வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

ஓம் அவரது பெயர் சிறிபதி சூரியாராச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஆழிகுமரன் ஆனந்த்னின் மாமா என்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டுமென நினைத்தவர் மங்கள - சம்பந்தன் 

(செய்திப்பிரிவு)

உண்மையான ஒரு இலங்கையராக அவர் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டினை எதிர்கால சந்ததியினருக்காக வளர்ச்சியிலும் செழிப்பிலும் முன்கொண்டு செல்லவேண்டும் என விரும்பிய ஒருவர் மங்கள சமரவீர ஆவார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மங்கள சமரவீரவின் இழப்பானது கவலைக்குரியது. உண்மையான ஒரு இலங்கையராக அவர் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டினை எதிர்கால சந்ததியினருக்காக வளர்ச்சியிலும் செழிப்பிலும் முன்கொண்டு செல்லவேண்டும் என விரும்பிய ஒருவராவார்.

அவரோடு எனது உறவு மிகவும் நெருக்கமான ஒன்றாகும். இந்த இழப்பினால் நான் மிகவும் வேதனையடைகிறேன், மீள் நிரப்பமுடியாத வெற்றிடத்தினை இவரது மரணம் ஏற்படுத்தியுள்ளது.

கொள்கைகளுக்காக முன்னின்ற ஒரு உற்ற நண்பனை இழந்துள்ளேன். இந்த கவலைமிக்க நேரத்தில் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டுமென நினைத்தவர் மங்கள - சம்பந்தன்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, பிழம்பு said:

உண்மையான ஒரு இலங்கையராக அவர் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டினை எதிர்கால சந்ததியினருக்காக வளர்ச்சியிலும் செழிப்பிலும் முன்கொண்டு செல்லவேண்டும் என விரும்பிய ஒருவர் மங்கள சமரவீர ஆவார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஓமோம்  அண்டு தொடக்கம் எல்லா சிங்கள தலைவர்களும் விரும்பினவையள் தான்....ஆனால் 😡

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

இறந்துபோவதால் எல்லோருமே புனிதமானவர்களாகிவிட முடியாது

உண்மைதான் இது எல்லோருக்கும், விடுதலைப்புலிகள் உட்பட.

1 hour ago, குமாரசாமி said:

ஓமோம்  அண்டு தொடக்கம் எல்லா சிங்கள தலைவர்களும் விரும்பினவையள் தான்....ஆனால் 😡

சொல்வது இலகு, செய்வது கடினம், தமிழீழம் காண்பது உட்பட, ஓமோம்  அண்டு தொடக்கம் எல்லா ஈழத்தமிழ் தலைவர்களும் விரும்பினவையள் தான்....ஆனால் 😡

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, கற்பகதரு said:

சொல்வது இலகு, செய்வது கடினம், தமிழீழம் காண்பது உட்பட, ஓமோம்  அண்டு தொடக்கம் எல்லா ஈழத்தமிழ் தலைவர்களும் விரும்பினவையள் தான்....ஆனால் 😡

ஓமோம் தமிழீழம் வேண்டாம் எண்டு சொல்லி பாராளுமன்றம் போனவையளும் வெட்டி புடுங்கிக்கொண்டிருக்கினம்....

எதுவும் இலகு இல்லை எண்டு சொல்லுறவையள் புலிகளை மட்டும் திட்டும் அர்த்தம் என்னவோ?😡😡😡😡😡

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:

உண்மைதான் இது எல்லோருக்கும், விடுதலைப்புலிகள் உட்பட.

விடுதலைபுலிகள் புனிதர்கள் என்று சூடு சொரணை மானம் ரோஷமுள்ள தமிழர்கள் சொல்வார்கள், நீங்கள் சொல்லமாட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரிந்ததுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று மங்கள சமரவீர சொல்லித்தான் உலகம் அறியவேண்டிய தேவை காணப்படவில்லை.

விடுதலைப்புலிகளுக்கான தடை தவிர்க்கப்பட முடியாத ஒன்று. இது அவர்களாகவே தங்களுக்கு தேடி பெற்றுக்கொண்ட ஒன்று.

மங்கள சமரவீரவின் அரசியல் பயணம் அவரது இறப்புடன் முற்றுப்பெற்றுள்ளது. இலங்கை அரசியலில் அவர் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அளவில் அறிவும், அனுபவமும், செல்வாக்கும் கொண்டு விளங்கினார்.

எழில் மிகு இலங்கை திருநாட்டின் மைந்தனே சென்று வருக!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று மங்கள சமரவீர சொல்லித்தான் உலகம் அறியவேண்டிய தேவை காணப்படவில்லை.

இது  மஙகள சமரவீர க்கு தெரியுமா 

19 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விடுதலைப்புலிகளுக்கான தடை தவிர்க்கப்பட முடியாத ஒன்று. இது அவர்களாகவே தங்களுக்கு தேடி பெற்றுக்கொண்ட ஒன்று.

இதற்காகத்  தான் போராடினார்களா

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

மங்கள சமரவீரவின் அரசியல் பயணம் அவரது இறப்புடன் முற்றுப்பெற்றுள்ளது. இலங்கை அரசியலில் அவர் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அளவில் அறிவும், அனுபவமும், செல்வாக்கும் கொண்டு விளங்கினார்.

இல்லை  நான் நமபவில்லை காரணம்  எதையும்  நடைமுறையில்  செய்யவில்லை   மாநில சுயாட்சி  அமைய இவர் தடையாக இருந்தார் 

  • கருத்துக்கள உறவுகள்

1990களின் ஆரம்ப காலத்திலேயே இந்தியாவிடம் விடுதலை புலிகள் அமைப்பு தடை வாங்கிவிட்டது. மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றம் சாட்டி அறிக்கைகள் வெளியிட்டு வந்தன. 2006 கனடா, யூரோபியன் யூனியன் தடைகள் பின்னால் மனித உரிமை அமைப்பின் ஆய்வு அறிக்கைக்கு பாரிய பங்கு உண்டு. தமக்கு தடை கிடைக்கப்போகின்றது என்று நிச்சயம் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தெரிந்தே இருக்கும்.

அனைவரும் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்கு என்றே போராட புறப்பட்டார்கள். அது கடைசியில் தத்தம் அமைப்புக்களை நிலைநிறுத்தும் போராட்டமாகவும், அதற்கு தமிழ் மக்களை பயன்படுத்தும் போராட்டமாகவும் மாறியது. 

கவலை வேண்டாம். வரலாற்றின் ஆரம்பம் போல் இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு தமக்கு தேவை என்றால் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பு உயிர்பெறுவதற்கு உதவுவார்கள். அல்லது வேறு ஏதாவது வகையில் தமிழ் இளைஞர்களை தூண்டி உசுப்பேத்துவார்கள். காலம் பதில் சொல்லட்டும்.

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன். 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

எழில் மிகு இலங்கை திருநாட்டின்

எங்கேயோ கேட்ட குரல் 🤣

அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மங்கள சமரவீரவின் இழப்பானது கவலைக்குரியது. உண்மையான ஒரு இலங்கையராக அவர் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டினை எதிர்கால சந்ததியினருக்காக வளர்ச்சியிலும் செழிப்பிலும் முன்கொண்டு செல்லவேண்டும் என விரும்பிய ஒருவராவார்.

அதுதான் தாத்தா சொல்லுறது, இந்த நிமிடமே நிஜமானது, அதில் செய்யக்கூடியதை செய்துடனும். நாளை, என்பதும் அடுத்த தீபாவளி என்பதும் நம் கையில் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

இவர் ஆழிகுமரன் ஆனந்த்னின் மாமா என்கின்றார்கள்

ஆழிக்குமரன் ஆனந்தனின் மனைவியின் சகோதரியான ஹேமா சமரவீரவின் மகனே மங்கள சமரவீர ஆவார்.

Edited by nirmalan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மங்களவின் இறுதிக் கிரியை (வீடியோ இணைப்பு)

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக்கிரியை, பொரளை கனத்தை மயானத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (24) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயரு 65ஆகும்.

அன்னாரது மறைவுக்கு, அரசியல் கட்சி பேதங்களின்றி, இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/மங்களவின்-இறுதிக்-கிரியை-வீடியோ-இணைப்பு/175-279540

  • கருத்துக்கள உறவுகள்

பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மங்களவின் திடீர் மரணத்திற்கு இதுவே காரணம்

பைசர் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.

இருவருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

அவர் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்த மங்கள சமரவீர, நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மங்கள சமரவீர நீண்ட காலமாக நீரிழிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டிருந்த நிலையில், அதற்காக அவர் சிகிச்சைகள் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மங்களவின் திடீர் மரணத்திற்கு இதுவே காரணம் – Athavan News

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.