Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலகத்துல நடக்காததையா கே.டி.ராகவன் செஞ்சாரு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 62
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

கே.டி ராகவன் சொந்தமா வைச்சிருக்கிற காரின் கியரை மாத்தினா மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேக்கிறார் போல,  கியர் மாத்துறது தப்பில்ல, அதை ஏன் மத்தவங்களுக்கு காட்டணும் என்பதே பிரச்சனையென்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

🤣 உப்பிடியே லைனில நில்லுங்கோ…. சுட சுட பந்தி பந்தியா பதில் எழுதி கொண்டு வாறன்🤣…..

பிகு

மீம்ஸ் உலகம் அதிருது🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

 

அண்ண‌ன் சீமான் என்ன‌ சொன்னார் என்று இந்த‌க் காணொளியில் பாருங்கோ............நாட்டில் எவ‌ள‌வோ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு , அதை எல்லாம் த‌விர்த்து விட்டு இதை பேச‌லாமா என்று கூறி உள்ளார்..........

200 ரூபாய் திராவிட‌ கூட்ட‌ங்க‌ள் இப்ப‌வே வெட்டி ஒட்டு வேலையில் இற‌ங்கிட்டின‌ம் , 

அதையும் இந்த‌ திரியில் இணையுங்கோ உங்க‌ளில் க‌லைத்த‌ ம‌ன‌துக்கு ம‌கிழ்வை த‌ரும் 

 

  • கருத்துக்கள உறவுகள்

கே.டி.ராகவன் வீடியோ முதல் கொடநாடு கொலை வரை - சீமான் சொன்னது என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
சீமான்

பட மூலாதாரம்,SEEMAN

 
படக்குறிப்பு,

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி

`கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும், `நாட்டில் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, `எனது வீடியோவை பார்த்து ரசியுங்கள்' என ராகவன் சொன்னாரா?' எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாயோன் பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ``கே.டி.ராகவனின் அனுமதியில்லாமல் தனிப்பட்ட இடங்களில் அவரை வீடியோ எடுப்பது என்பது சமூக அவலம். உலகில் நடக்காத ஒன்றைச் செய்ததாகக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சட்டசபையில் ஆபாச காட்சிகளைப் பார்த்துள்ளனர். அவர் தனது தனிப்பட்ட அறையில் செய்த காட்சிகளை வெளியில் விடுவதன் மூலம், கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதை பதிவு செய்து வெளியிடுவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? இந்த காணொளியை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும். உலகின் யாரும் செய்யாத ஒன்றையா அவர் செய்துவிட்டார். சட்டமன்றத்திலேயே ஆபாசப் படம் பார்த்துள்ள சம்பவங்களும் வெளிவந்துள்ளன" என்றார்.

 

தொடர்ந்து பேசும்போது, ``நாட்டில் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு தனியாருக்கு குத்தகை விடப்போவதாக அறிவித்துள்ளனர். 100 லட்சம் கோடிக்கு சொத்து இருக்கும்போது 6 லட்சம் கோடிக்கு விட வேண்டிய அவசியம் என்ன?

உச்ச நீதிமன்ற நீதியரசர் ரமணா பேசும்போது, `எந்த விவாதமுமின்றி சட்டங்களை இயற்றிக் கொண்டே போகின்றனர்' என்கிறார். அதுதான் நாம் பேச வேண்டிய பிரச்னை. திருச்சி சிவா பேசும்போதும், `20 ஆண்டுகளாக பார்க்கிறேன். எந்த விவாதமும் இல்லாமல் 36 சட்டங்களை இயற்றியுள்ளனர்' என்கிறார். இது சர்வாதிகாரம் இல்லை, கொடுங்கோன்மை. இதையெல்லாம் பற்றிப் பேசாமல் என்னுடைய வீடியோவை பார்த்து ரசியுங்கள் என ராகவன் சொன்னாரா?" எனக் கொதித்தார்.

மேலும், ``லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சியை தனியாருக்கு கொடுக்க உள்ளனர். தனியார் சிறப்பாக நடத்தும் என்றால் அரசு எதற்கு? அரசைவிட தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் சிறப்பாக செய்யும் என்றால் இவர்களின் பணி என்ன? கமுதியில் நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதானி குழுமத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டது. அங்கு வாயில் காவலர் வேலைகூட அம்மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மின்துறையில் ஒரு லட்சம் கோடி இழப்பு உள்ளது. ஆனால், இவர்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை 7 ரூபாய்க்கு எடுத்துக் கொள்வதாக அதானியிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்" என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சட்டசபையில் ஓ.பி.எஸ் பாடிய பாடல் குறித்து சீமானிடம் கேட்டபோது, ``அதற்கு நான் என்ன சொல்ல முடியும். அவர் தனது நிலைமையை கவிதையாக விளக்குகிறார். அவ்வளவுதான்" என்றார். அடுத்ததாக, குடிசை மாற்று வாரிய வீடுகளின் தரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, ``குடிசை மாற்று வாரிய வீடுகள் தொட்டாலே உதிர்கின்றன என்றால் ஏன் தொட வேண்டும். குடிசையில் படுத்தால் உயிரோடு எழுந்திருப்போம் என்பது நிச்சயம் இல்லை. இந்த வீடுகளில் எல்லாம் ஏழாவது மாடியில் படுத்திருப்பவனின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

மேம்பாலம் கட்டிக் கொண்டு வரும்போதே இடிந்து விழுகிறது. கேட்டால், `மணலில் சிக்கல் உள்ளது' என்கிறார்கள். இவர்கள் அடித்த கொள்ளை அப்படி. 5 லட்சம் கோடி கடன் என்கிறார்கள். இவர்களின் வீடுகளில் எத்தனை லட்சம் கோடிகள் உள்ளன. ஆள்பவர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள் எல்லாம் வைத்துள்ள கோடிகளை எடுத்தால் நமது மொத்த கடனை அடைத்துவிட்டு வரியில்லாத ஆட்சியை நடத்தலாம்" என்றார்.

தொடர்ந்து, கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து கேள்வியெழுப்பியபோது, `` விசாரணை நடக்கும்போது இதைப் பற்றியெல்லாம் நாம் பேச முடியாது. முடிவு வரட்டும். பிறகு பேசுவோம்" என்றார். அடுத்து, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்துப் பேசிய சீமான், ``பள்ளிகள் திறப்பதை அச்சத்தோடு கவனிக்கிறேன். கேரளாவில் தொற்று எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இரவு 10 மணி முதல் 6 மணி வரையில் ஊரடங்கு என்கிறார்கள். பத்து மணிக்குத்தான் அனைவரும் இயல்பாக தூங்கப் போய் விடுவார்களே. பிறகு எதற்கு ஊரடங்கு?

கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகள், கல்விக் கூடங்கள் ஆகியவற்றைத் திறந்தால் என்ன ஆகும் எனத் தெரியவில்லை. கேரளாவில் ஓணம் பண்டிகையால் தொற்று அதிகரித்தது. நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்றார் சீமான்.

காங்கிரஸ் எம்.பி விமர்சனம்

இந்த நிலையில், பாஜகவின் கே.டி. ராகவன் செயல்பாடு தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள கருத்தை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

கே.டி. ராகவன் செயலை நியாயப்படுத்திப் பேசுவதன் மூலம் பாஜகவின் பி அணி தான் என்பதை சீமான் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று ஜோதிமணி கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-58381775

எல்லோருமே தலையங்கத்தை தான் வாசிக்கிறார்கள், உள்ளடக்கத்தை வாசிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

கே.டி ராகவன் சொந்தமா வைச்சிருக்கிற காரின் கியரை மாத்தினா மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேக்கிறார் போல,  கியர் மாத்துறது தப்பில்ல, அதை ஏன் மத்தவங்களுக்கு காட்டணும் என்பதே பிரச்சனையென்று நினைக்கிறேன்.

மற்றவங்களுக்கு ராகவன் காட்டவில்லையே யுவர் ஆனர்?😂 இன்னொருவர் அவர் அனுமதியோடு எடுத்ததை அனுமதி வாங்காமலே பரப்பி விட்டார்! 

ஒலி/ஒளிப்பதிவு செய்யும் உரிமையில், தமிழ்நாடு one-party state ஆ?
 

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு எதிரில் இருப்பவரின் விம்பம் தனது  திரையில் தெரியும்போது தனது விம்பமும் அங்கு தெரியும் என்பது தெரிந்திருக்க வேண்டும் ......ஆனால் காமம் கமராவை மறைத்து விட்டது ........!   😄

  • கருத்துக்கள உறவுகள்

30-08-2021 மாயோன் பெருவிழா - சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அவருக்கு எதிரில் இருப்பவரின் விம்பம் தனது  திரையில் தெரியும்போது தனது விம்பமும் அங்கு தெரியும் என்பது தெரிந்திருக்க வேண்டும் ......ஆனால் காமம் கமராவை மறைத்து விட்டது ........!   😄

மகனே இராகவா,

காம்பறைக்குள் இருந்தே செய்தாலும்,

காமரா வழியாக, 

கர்மா துரத்தும் என்பதை

என்னைபார்த்தும் நீ அறியவில்லையேடா செல்லமே.

- நித்தி-

  • கருத்துக்கள உறவுகள்

KTRக்காக குரல் கொடுக்க என்னுடன் இந்த உலகில் இன்னொரு சீவனும் இருக்கு என்று நினைக்கையில் பெருமையா இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீடியோ பார்க்கவில்லை.. பார்த்தவர்கள் சொல்லவும் ராகவன் அந்தபொண்ணை பலாத்காரமா சுயைன்பம் செய்ய சொன்னாரா அல்லது ரெண்டு பேரும் பேசி சம்மதத்துடன் நடக்குதா? ரெண்டுபேருக்கும் என்சாய் எண்டால் எதுக்கு நமக்கு பொறாமை? வீடியோவில் பலாத்காரம் பண்ணி இருக்காவிட்டால் சீமான் சொன்னது சரிதானே.. எதுக்கு அடுத்தவன் பேர்சனல்?

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் வீடியோ பார்க்கவில்லை.. பார்த்தவர்கள் சொல்லவும் ராகவன் அந்தபொண்ணை பலாத்காரமா சுயைன்பம் செய்ய சொன்னாரா அல்லது ரெண்டு பேரும் பேசி சம்மதத்துடன் நடக்குதா? ரெண்டுபேருக்கும் என்சாய் எண்டால் எதுக்கு நமக்கு பொறாமை? வீடியோவில் பலாத்காரம் பண்ணி இருக்காவிட்டால் சீமான் சொன்னது சரிதானே.. எதுக்கு அடுத்தவன் பேர்சனல்?

புலவரே,

அந்த வீடியோ வெறும் ஊமை படம். ஒரு பெண்ணும் ராகவனும் ஏதோ பேசுறாங்கள்.

அவர் கொஞ்சம் ஐட்டம் சாங்கில் நடிகை சுழிப்பது போல் சொண்டை சுழிக்கிறார், பிறகு தன் உறுப்பை காட்டுகிறார். பூசை அறையில் இருந்த படி.

அந்த பெண் யார் என்றே தெரியவில்லை.

அவர் பாஜகவில் பதவி கேட்டு போன் போட்ட கட்சி பெண் என்பதும் அவருக்கு இராகவன் பாலியல் தொல்லை கொடுதார் என்பதும் குற்றசாட்டு.

இராகவன் வீடியோவே போலி என்கிறார். இது வழமையா எல்லாரும் சொல்வதுதானே (ஆடியோ மிமிகிரி).

ஆனால் இது மூன்று வகையாக இருக்கலாம்.

1. குற்றம் கூறபடுவது போல் இராகவன் பாலியல் தொல்லை கொடுதார்

2 பெண்ணும் அவரும் விரும்பி செய்தார்கள்

3. பெண் இவரை சிக்க வைக்க ஏற்பாடு செய்த honey trap இது.

வீடியோவின் ஆடியோ, மேலதிக ஆதாரம் இன்றி யாராலும் மூன்றில் எது என கூற முடியாது.

இதில், சீமான், ஜோதிமணி இருவருமே என்ன நடந்தது என தெரியாமல் கருத்து சொல்கிறார்கள்.

ஆனால் மதனை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று சீமான் சொன்னது சரிதான். அந்த பெண்ணையும் கூட விசாரிக்கலாம்.

இருவரும் மனமொத்து செய்தார்கள் என்றால் அதை அப்படியே விட்டு விடலாம்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவது என்பது சீரியசான விசயம். இதை தனிநபர் விடயம் என ஒரேயடியாக கடந்து போக முடியாது.

நாளைக்கு இதுவே எங்கள் குடும்பத்தில் ஒருத்திக்கும் வேலையிடத்திலோ, கல்லூரியிலோ நடக்கலாம்.  

ஆனால் தீரவிசாரிக்காமல் தனியான பாலியல் நடவடிக்கைகளை பகிரங்கபடுத்துவதும் கூடாதுதான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வீடியோவில் KTR காட்டு காட்டு என்று கூறுகின்றார் அந்தப் பெண்ணும் காட்டுகின்றார். இது இருவரும் இணைந்து செய்ததுதான். அப்பெண் உண்மையானவளாக இருந்தால் போலீசுக்குப் போயிருக்கவேண்டும்

இது ஒரு honeypot ஏற்பாடுதான்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்வது சரிதான்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்??

ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அந்த வீடியோவில் KTR காட்டு காட்டு என்று கூறுகின்றார் அந்தப் பெண்ணும் காட்டுகின்றார். இது இருவரும் இணைந்து செய்ததுதான். அப்பெண் உண்மையானவளாக இருந்தால் போலீசுக்குப் போயிருக்கவேண்டும்

இது ஒரு honeypot ஏற்பாடுதான்

ஆடியோ வந்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

சீமான் சொல்வது சரிதான்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்??

ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

உண்மைதான் - இது வெறும் கற்பனைதான் -  ஆனால் நீங்கள் நலன்புரி சங்கம் மூலம் உதவி கேட்டு வரும் ஒருவரிடம் இப்படி நடந்தால் - அதை கட்டாயம் ஆராய வேணும் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நினைகிறேன்.

It all depends on the context.

ஒரு பேராசிரியர் விரும்பியே கூட ஒரு பல்கலைகழக மாணவியிடம் இப்படி நடக்கலாமா?

வேலையில் மேலதிகாரி?

அதே போலதான் கட்சியின் முக்கிய பொறுப்பும்.

குறிப்பாக தமிழ்நாட்டு பாஜக இல் பாலியல் லஞ்சம் கொடி கட்டி பறக்கிறது என்று ஏலவே குற்றசாட்டு இருக்கும் போது, இதை சீமான் சொல்வது போல் தனியார் விடயம் என்று எடுத்த உடன் சொல்ல முடியாது.

அதே போல் ஜோதி மணி சொல்வது போல் இதை பாலியல் அளுத்தம் எனவும் எடுத்த உடன் சொல்ல முடியாது.

 

8 minutes ago, வாலி said:

மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.

ஓகே பார்கிறேன். நன்றி

12 minutes ago, வாலி said:

மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.

அதிலும் அந்த ஒரிரு வரிகள் மட்டும்தான் கேட்கிறது மீதி எல்லாம் muted ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விலை மாதுவாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது இது சட்டமும் தத்துவமும் கூட....

நான் என்ரைய காட்டுறன் நீ உன்ரைய காட்டுவியோ எண்டு போட்டி வைச்சு பாலியல் விளையாட்டு செய்யிற உலகம் ஆகப்பெரிசு.பாலியல் விசயத்திலை யாருமே நூறுவீதம் சரியானவர்கள் இல்லை. சரியானவர்கள் என்பதை விட சாதாரண வாழ்கையாளர் என்றே சொல்லலாம்.
ரெலிபோன் செக்ஸ் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. அது என் தனிப்பட்ட பிரச்சனை. அதை ஒரு சில வியாபரிகள் விளம்பரப்படுத்தினால் சட்டங்கள் மூலம் தண்டிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

விலை மாதுவாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது இது சட்டமும் தத்துவமும் கூட....

நான் என்ரைய காட்டுறன் நீ உன்ரைய காட்டுவியோ எண்டு போட்டி வைச்சு பாலியல் விளையாட்டு செய்யிற உலகம் ஆகப்பெரிசு.பாலியல் விசயத்திலை யாருமே நூறுவீதம் சரியானவர்கள் இல்லை. சரியானவர்கள் என்பதை விட சாதாரண வாழ்கையாளர் என்றே சொல்லலாம்.
ரெலிபோன் செக்ஸ் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. அது என் தனிப்பட்ட பிரச்சனை. அதை ஒரு சில வியாபரிகள் விளம்பரப்படுத்தினால் சட்டங்கள் மூலம் தண்டிக்கலாம்.

இவர் மதன் இன்னொருவரை ப்ளக்மெயில் செய்யும் நோக்குடன் திட்டமிட்டு ஆள் செட்டப்பண்ணி ஸ்ட்ரிங் ஆப்பரேஷன் செய்துள்ளார்.. காவல் துறை அல்லாமல் ஒரு தனி மனிதன் ஸ்ட்ரிங் ஆப்பரேஷனில் ஈடுபட இந்திய சட்டத்தில் இடம் உள்ளதா என்று தெரியவில்லை.. சுவீடன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதற்கு தடை உள்ளது என்று இணையம் சொல்லுது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர் மதன் இன்னொருவரை ப்ளக்மெயில் செய்யும் நோக்குடன் திட்டமிட்டு ஆள் செட்டப்பண்ணி ஸ்ட்ரிங் ஆப்பரேஷன் செய்துள்ளார்.. காவல் துறை அல்லாமல் ஒரு தனி மனிதன் ஸ்ட்ரிங் ஆப்பரேஷனில் ஈடுபட இந்திய சட்டத்தில் இடம் உள்ளதா என்று தெரியவில்லை.. சுவீடன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதற்கு தடை உள்ளது..

இந்திய சட்டம் பற்றி ஆராயவில்லை. ஆனால் பொதுவாக,

இதை பிளக்மெயில் என்று சொல்ல முடியாது காரணம் இதை வைத்து, இன்னதை செய் அல்லது தா என மதன் இராகவனை மிரட்டவில்லை. 

அடுத்த கேள்வி இது entrapment ஆ? அல்லது sting operation ஆ? என்பது.

Sting operations சட்டபூர்வமானது. ஒரு குற்றத்துகுரிய அமைவுகளை வைத்து விட்டு, ஒருவர் குற்றம் செய்கிறாரா என பார்ப்பது. தெகெல்கா, பாகிஸ்தான் கிரிகெட் வீரர்கள், சிறுவர்களை ஹோட்டலில் போய் சந்திப்போர் என பலர் மாட்டுவது இந்த வகையில். யூகேயில் சன் பேப்பர் அடிகடி எவரையாவது மாட்டிவிடும்.

Entrapment என்பது அப்பாவியான ஒருவரை, தூண்டி ஒரு குற்றத்தை செய்ய வைப்பது. இது சட்ட விரோதம். சும்மா இருக்கும் என்னை வந்து, வாங்க்கோ கஞ்சா விற்போம் நல்ல காசு வரும் என கூறி கூட்டிப்போய் மாட்டி விடுவது.

இராகவனுக்கு என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சீமான் சொல்வது சரிதான்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்??

ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

அந்த பெண்ணுக்கும், கேடிக்கும் நீண்ட கால தொடர்பு இருந்திருக்கிறது. பரஸ்பர நம்பிக்கை இல்லாவிடில் கேடி அவ்வளவு தூரம் வீடியோ காலில் போயிருக்க முடியாது. அப்படி ஒரு அரசியல் முட்டாள் தனம் செய்வார் என்று நினைக்கவில்லை.

முன்பின் அறிமுகமில்லா பெண், அந்தளவு தூரம் போகார். கேடியும் எல்லை தண்டியிரார். அடிக்கடி கெஸ்ட் ஹவுசில் சந்திக்கிறோம், வீடியோ காலிலும் கொஞ்சிக் குலாவுகிறோம் என்று, தனக்கும், கேடிக்கும் உள்ள உறவு குறித்து பெருமையாக அல்லது பீலாவுக்காக யாருக்கோ அடித்து விட்டுள்ளார் பெண்.

அது விபரம் காதுக்கு போனதும் மதன், அண்ணாமலை திட்டம் போட்டு உள்ளனர்.

போலீஸ் புத்தி அண்ணாமலை, தன், தலைமைப்பதவிக்கு  எதிரியாக வரக்கூடிய கேடிக்கு, ஆப்படிக்க யோசித்து, பணத்தினை கொடுத்து, அந்த பெண்ணை மடக்கி, மதனையும் இழுத்து, கேடி கதையை முடித்து விட்டார்.

கேடியை பொறுத்த வரையில், பணத்துக்காக, அந்த பெண் செய்தது, பச்சைத் துரோகம், அயோக்கியத்தனம்.

எமக்கு பொதுவெளியில் கிடைக்கும் விபரங்களை விட, ஒரு கட்சி தலைவரான சீமானுக்கு பல விடயம் போலீஸ் மற்றும்  அதிகாரிகளிடம் இருந்தே வரும். அதனை பெற்று, ஆராய்ந்தே பொது வெளியில் பேசுவர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ, ராகவன் அவர்கள்  மனைவியுடன் படுக்கை அறையில்  இருந்ததை எவனோ ஒருவன் திருட்டுத்தனமாக ஜன்னல் வழியே வீடியோ எடுத்து  வெளியிட்டால்  எப்படி கொந்தளிப்பாரே,  அப்படி கொந்தளிக்கிறார்  அண்ணாச்சி சீமான் .
இங்கு குற்றசாட்டே  கட்சியை சார்ந்த பெண் ஒருவரை, தமது செல்வாக்கை பயன்படுத்தி இச்சைக்கு உள்ளாக்கினார் என்பது தான்.அது கூட யாரும் வெளியிலிருந்து வீடியோ எடுத்ததல்ல.அவரின் செல்ஃபோன் மூலம் வீடியோ உரையாடல் நடத்திய காட்சி தான் கசிந்திருக்கிறது.

தவிர, இந்துக்கள் புனிதம் என கருதும் பூஜையறையை அதற்கு பயன்படுத்தியது அவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அப்படி இருக்கையில், யாரும் செய்யாததையா செய்தார் என்று இவர் கேட்பதன் பொருள் என்ன?.அரசியலில் இருப்பவர்கள் அனைவருமே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி இது போன்று கட்சி பிரமுகர்களிடம் அத்துமீறுவார்கள் அதெல்லாம் சகஜம், அதை  கண்டுகொள்ள கூடாது என்று சொல்ல வருகிறாரா சீமான் அவர்கள்?

சம்மந்தப்பட்ட ராகவனே, இப்படி எதுவும் நடக்கவில்லை என தட்டிக் கழிக்க தான் பார்க்கிறார்.
அப்படியிருக்கையில், இப்படியொரு முரட்டு முட்டு கொடுக்கும் அளவுக்கு சீமானை நிர்பந்திப்பது எது?. இதெல்லாம் தப்பு என சொல்லி விட்டால், "நீ என்ன பெரிய யோக்கியமா?" என்று விஜயலட்சுமி வந்து கேட்டு விடுவார் என்ற பயத்தினால?.

பிஜேபி இன் தமிழ்நாட்டு கிளையில் பிராமணருக்கு, பிராமணர் அல்லாதவருக்கும் இடையில் நடைபெறும் அதிகார பேட்டியே  இக்காணொளி வெளியானதுக்கு காரணமாகும். பிராமணர் அல்லாதவர் தலைவர் ஆனாலும், பிராமணர்களே தற்போது அதிகாரம் மிக்கவர்களாய் இருக்கின்றார்கள்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

ராகவனும் இந்த வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தால்,பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்😁

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் ஏற்கெனவே ராகவனுடன் சமரசம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும். இந்தக் 'கை'பேசி உறவும் அவர்களுக்குள் இன்று புதிதாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. திடீரென்று அப்பெண்ணிடம் இந்த முயற்சியில் இறங்க ராகவன் வெள்ளந்தியும் இல்லை, கிறுக்கனும் இல்லை. அப்பெண் செய்தது பச்சைத் துரோகம், இச்சைத் துரோகம் எல்லாம்தான். பில் கிளின்டனுடன் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான எண்ணத்துடன விந்து படிந்த தனது உள்ளாடையை வருடக்கணக்கில் பத்திரப்படுத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மோனிகா லெவின்ஸ்கியின் கயமை போன்றது. நிற்க.

       எங்கள் நிறுவனத்தில் அதிகார வர்க்கத்தின் கைக்கூலியாக எப்போதும் மக்களுக்கு இன்னல் விளைவித்த ஒருவர், குற்றம் செய்ய வாய்ப்பேயில்லாத ஒரு விடயத்தில் மாட்டி வைக்கப்பட்டு காவல் துறையின் விசாரணை வளையத்துள் வந்து அல்லல் பட்டார். அவர் மீது எவரும் இரக்கம் கொள்ளவில்லை. குற்றமே வாழ்வாகக் கொண்டவன் குற்றமேயில்லாத விடயத்தில் மாட்டியது இயற்கை நீதி என்று கொள்ளப்பட்டது (உண்மையில் இறைவனின் நீதி என்றனர் மக்கள்). இவ்வாறு ஏற்றுக் கொண்டால், அப்பாவிகளும் மாட்டப்படலாமே என்று ஊகத்தின் அடிப்படையில் கேள்வி எழலாம். நடைமுறையில் அம்மாதிரியான தருணத்தில் சமூகமே எழுந்து நின்று அப்பாவியைக் காத்து நின்ற உதாரணமும் உண்டு. 

      தமிழ் அடையாளங்களை நிராகரிப்பது முதல் அனைத்து விடயங்களிலும் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராகவே செயல்படும் பார்ப்பன பாசிசத்தின் உண்மை முகம் ராகவன். நாம் குற்றம் என்றே எண்ணாத ஒரு விடயத்தில் ராகவன் மாட்டிக் கொண்டது இயற்கை நீதி; அவர் போன்றோர் இருப்பதாக நடிக்கும் இறைவனின் நீதி என்று எனக்குள் உறையும் பாமரன் குதூகலிக்கிறான். அதிகார பலம் கொண்டோரை வேறு எப்படித்தான்  'அடிப்பது' எனும் 'கை'யறு நிலை. சீமான் அவர்கள் பேசியதைப் போல் ராகவனையெல்லாம் நியாயப்படுத்த மனம் ஒப்பவில்லை. கிளின்டனுக்கு  இரங்கும் மனம் ராகவனுக்கு இரங்கவில்லை. இப்படி ஏடாகூடமாக நான் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று அப்போது யோசித்துக் கொள்கிறேன்.

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.