Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அதைத்தான் நானும் கேக்கிறன்.இலங்கையில் இதற்கென  தமிழ் அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள் எல்லோ?

இவரு அந்த இமனுவெல் பாதிரி போல இலங்கைக்கு போய் பொச்சுக் கொட்டுறதிற்கு பிளான் போடுறார்..

  • Replies 59
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Quote

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

தமிழர்கள் சார்பாக சுமந்திரன் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார், வீணாக புலம் பெயர் தமிழர்கள் இதற்குள் மண்டையை ஓட்டி குழப்பாமல் அவரை முதலில் ஒரு முடிவுகாண விடுங்கள், குறைந்தபட்சம் நம்பத்தகுந்த, ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு வருவிழைவு இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டால் மட்டுமே இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் புலம் பெயர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறதா இல்லை இருக்கும் பஞ்சத்தில் எவனையாவது  கூப்பிட்டுவைத்து ஏமாற்றி  அறுத்தாவது சாப்பிடுவோம் என்ற கபட நோக்கத்துடன் அழைக்கிறதா என்பதை தர்க்கரீதியாகவேனும்  முடிவுசெய்யலாம் (வர்த்தமானியில் தடை செய்து விட்டு இப்போ பேச்சுக்கு வாங்கோ என்று கூப்பிடும் போதே அலர்ட் ஆகிடுங்கோ, இந்த நிமிடம் வரை இலங்கையில் நீங்கள் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படும் பட்சத்தில் கைது செய்யப்படக்கூடியளவில் தான் நிலைமை உள்ளது ), அதை விட்டு கோத்தா குழைந்ததை பார்த்து உருகி ஊத்துப்பட்டு விழுந்தடித்துகொண்டு  போய் கதிரையில் உட்ட்கார்ந்துவிட்டு பிறகு  சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று பாட்டு பாடும் நிலைமையை ஏற்படுத்திக்கொள்ளாதீங்கோ  
  
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு துரோகி உருவாகிறார்.😄

ஏற்கனவே கறுப்பு பட்டியலில் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களை நோக்கிய கோத்தாவின் அழைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

புலம்பெயர் தமிழர்களை நோக்கி சிறிலங்கா அதிபர் கோத்தா விடுத்திருந்த அழைப்பு தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கருத்தினை தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதாவது

யூத இனப்படுகொலையினைப் புரிந்த ஹிட்லர் ஆட்சியில் இருக்க முடிந்திருந்தால், புலம்பெயர் யூதர்களுடன் பேச ஹிட்லர் அழைப்பது போன்றே, புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கான சிறிலங்கா அதிபர் கோத்தாவின் அழைப்பு உள்ளது.

Rudrakumaran2-300x200.jpg
 
இனப்படுகொலையினை புரிந்த அரசுடன் முக்கிய விடயமான தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக உரையாடல் நடத்துவது கடினமான ஒன்றாகும்.

எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் பொறுப்புக்கூறல் என்பது முக்கியமானதொரு முன்னவசிமாகும். இலங்கைத்தீவில் அமைதியை கொண்டுவருவதில் கோத்தாவுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால், முதற்படியாக, ஐ.நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையர் அல் {ஹசைன் அவர்கள், 2015ல் பரிந்துரைத்திருந்த ‘ரோம் உடன்படிக்கையில்’ கைச்சாத்திட்டுக் கொள்ள வேண்டும். மேலும் கைச்சித்திட்டு பின்னோக்கி காலத்தையும் உள்வாங்கியதாக வேண்டும். இறுதிப்போரில் நடந்த இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர் கைதிகள், அரசியற் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ‘பொது மன்னிப்பு’ என்ற ‘விசர்’ கதைகளை குப்பையில் போடுங்கள். யாரை யார் மன்னிப்பது ?

gota-un-300x169.jpg

தமிழர் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவமயமாக்கல் நீக்கம் (விலக்கி) செய்யப்பட வேண்டும். மேலும், காணாமல்போனோவர்களுக்கான அலுவலகத்தை ஒரு நடுநிலையான, நம்பகமான நிறுவனமாக மாற்றியமைக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்கள் நியமிக்கும் நிபுணர்களை உறுப்பினர்களாக நியமிக்கவும், பாதிக்கப்பட்டவர் உறவுகள் பங்கெடுக்கின்ற வகையிலான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அந்நிய முதலீடுகளை தீர்மானிக்கின்ற அதிகாரம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.

இறுதியாக, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திரு. டேவிட் கேமரூன் அவர்கள், ஸ்கொட்லாந்து விவகாரத்தில் பொது வாக்கெடுப்புக்கான உறுதியான கால அட்டவணையை அமைத்து போல், தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாமே முடிவு செய்கின்ற வகையில் பொதுவாக்கெடுப்புக்கான நடவடிக்கையினை தமிழர் அரசியல் தலைமைகளுடன் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும். இப்பொதுவாக்கெடுப்பில் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழம் உள்ளடங்க பல்வேறு அரசியல் தீர்வுகள் உள்ளடங்கலாக இருக்க வேண்டும்.

தேவையான இந்த செயல்வழிப்பாதையை சிறிலங்கா அதிபர் நிறைவேற்றிய பிறகு, பேச்சுக்களை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதுவே இலங்கை தீவின் நிரந்தரமான அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மற்றும் செழிப்புக்குமான வழித்தடமாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்துரைத்துள்ளது.
 
https://thinakkural.lk/article/139075

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் புலி அமைப்புகள் வேறு ; புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு ; பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை - ஆளுந்தரப்பு

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

புலம்பெயர் புலி அமைப்புகள் என்பது வேறு, புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, எனினும்  தமிழ் புலம்பெயர்  அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலோ எந்த தவறும் இல்லை.

நாட்டை ஐக்கியம் மற்றும் அபிவிருத்தியில் சகலரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சபையில் கூறுகின்றனர். நாட்டில் சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வேலைத்திட்டங்களை உள்ளக பொறிமுறை மூலமாக தீர்க்க புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு  ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கியமாக பயணிக்கவே நாம் முயட்சிக்கின்றோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால்  இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாய்மூல அறிக்கையில் உள்ளடக்க விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர்கள் இதனை கூறினார்,

இது குறித்து ஆளுந்தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார விவாதத்தில் உரையாற்றுகையில்,

நாட்டின் உள்ளக பிரச்சினைகளை தீர்க்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த கருத்து தொடர்பில் பல விமர்சனக்கருத்துக்கள் எழுந்துள்ளன. புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, புலம்பெயர் தமிழ் புலி அமைப்புகள் வேறு என்பதை முதலில் சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எவ்வாறு உருவாகியது.

1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஏற்பட்ட கருப்பு ஜூலை கலவரத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய அநியாயங்கள் காரணமாக, வரலாற்றில் அழிக்கவே முடியாத அந்த சம்பவத்தினால் இந்த நாட்டில் வாழ்ந்த கற்ற தமிழ்  சமூகத்தினர், பொருளாதார ரீதியில் பலமாக இருந்தவர்கள், வியாபாரிகள் சகலருக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

f3b4b61b568e0de2f1c5e6560178c8d8_XL.jpg

தமிழ் மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறினர். ஆரம்பத்தில் இந்த நாட்டில் தமிழ் வைத்தியர்கள் அதிகளவில் இருந்தனர், பாகுபாடு இல்லாது அவர்களின் சேவை எம் அனைவருக்கும் கிடைத்தது. அவ்வாறு இருக்கையில் முக்கியமான ஒரு தரப்பை இந்த நாட்டை விட்டு விரட்டியடித்தனர். அவர்களே சர்வதேச தளத்தில் புலம்பெயர் அமைப்புகளை உருவாக்கினர்.

இன்று ஒரு பக்கம் விடுதலைப்புலிகள் அமைப்புகள் உள்ளன, மறுபக்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் உள்ளனர். தமிழ் புலம்பெயர்  அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலும் எந்த தவறும் இல்லை. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்துவிட்டது.

தற்போது வரையிலும் 12 ஆயிரத்திற்கு அதிகமான முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்து சமூக மயப்படுத்தியுள்ளோம். இது குறித்து ஏன் எவரும் பேசுவதில்லை. சிறையில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கலாம் தவறில்லை,.

ஆனால் சர்வதேசத்திடம் செல்லும் வேளையில் நாம் இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் பயணிக்க வேண்டும் . இலங்கை இராச்சியத்தில் எதிர்க்கட்சிகளும் உள்ளன. ஆகவே இதனை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும. சர்வதேச மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளில் ஒன்றாக செயற்பட வேண்டும்.  சிறைச்சாலையில் இடம்பெற்ற  சம்பவத்தை இனவாத பிரச்சினையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதன்போது உரையாற்றுகையில்,

அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த வாக்குவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன. முன்னைய ஆட்சியில் இதே கொள்கை முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஆதரித்தவர்கள் இன்று அதனை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து ஆரோக்கியமான விடயங்களையும் முன்வைத்துள்ளார் . நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அவர் ஆதரித்துள்ளார். உள்ளக பொறிமுறையில் அவருக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது.

99.jpg

நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள தூதரகங்கள், ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் கலந்துரையாடி வருகின்றோம். பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து தெளிவான நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளோம். உள்ளக பொறிமுறை மூலமாக இதனை நாம் முன்னெடுக்க தயாராக உள்ளோம். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை 15 நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரித்துள்ளன.

சர்வதேச தரப்பில் உயரிய மட்ட பேச்சுவார்த்தைகளை இப்போதும் ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வேலைத்திட்டங்களை உள்ளக பொறிமுறை மூலமாக தீர்க்க புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு  ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கியமாக பயணிக்கவே நாம் முயட்சிக்கின்றோம். சவால்களை வெற்றிகொள்ள சகல விதத்திலும் முயட்சிக்கின்றோம் என்றார். 
 
https://www.virakesari.lk/article/113870

  • கருத்துக்கள உறவுகள்

பற தெமலு டயஸ்போரா என்றும், கொட்டி டயஸ்போரா என்றும் கத்தி கத்தி பதவிக்கு வந்து திரும்பவும்  அப்படியே கத்தி கத்தி அமைப்புகளை தடைசெய்து சிங்கள இனவெறியர்களை உசுப்பேற்றியே சதாகாலமும் ஆட்சியிலிருக்கலாம் என்று நினைத்த இனவாதிகள் இன்று கோவணத்திற்கும் வழியில்லாமல் நிக்கினம், இனி தங்களை Bail out பண்ண (பிரதியுபகாரம் பார்க்காமல் உதவ) கொட்டி  டயஸ்போறாக்களை விட சிறந்த இலங்கையர்களோ, மனிதர்களோ இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை என்று வாயால்  தேன் ஒழுக ஒழுக கதைப்பார்கள். கதையில் மனம்குளிர்ந்து அள்ளிக்கொடுத்துவிட்டு அம்போ என்று தலையில் கைவைத்துக்கொண்டு நிற்காதீங்கோ    

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சிறைச்சாலையில் இடம்பெற்ற  சம்பவத்தை இனவாத பிரச்சினையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

சிறைச் சாலையில் கொல்லப்பட்டோர் யார்? எதற்காக கொல்லப்பட்டனர் என்றும் விளக்கிய பின் உந்த கருத்தை சொன்னால் கேட்பவர்கள்  விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும். நாடு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பது இவர்கள் கொடுக்கும் விளக்கத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கஸ்ரப்பட்டு பெற்ற தீர்வு மாகாண சபை ....புதிய மாகாண அரசு தெரிவு செய்யும் வரை மாகாண அரசைக் கலைக்கது வைத்திருத்தல் வேண்டும் 

பல தடவைகள் பேசி தீர்வு எட்டப்பட்டுள்ளது ஆனால் செயல்ப்டடுக்கு வரவில்லை  காரணம் எதிர்ப்பு...புத்தபிக்குகளின் எதிர்ப்பு...இனிவரும் பேச்சுவார்த்தைகளிலும் இதுவே நடைபெறும் இப்படி நடைபெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை 

போர்குற்றவாளியுடன் நாங்கள் தமிழர்கள் நேரடியாக பேசினால் அவன் போர் குற்றவாளி இல்லை என்று ஆகி விடும் எனவே மனித உரிமை பேரவையின் விசாரணை  முடியும் வரை நாம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது

தமிழரின் தலையில் குண்டுகள் போட்டபோது யாருடன் பேசி குண்டுகள் போட்டாய். தமிழ் பெண்களை கற்பழி என்றும் தமிழ் ஆண்களை கொன்று முல்லைத்தீவுக் கடலில் போடுமாறு கூறியவனுடன் என்னத்தை..எப்படி பேச முடியும் 

தீர்வு உன்னிடம் இருந்தால் தமிழனுடன் பேசாமல் நடைமுறைப்படுத்தமுடியாத. புலம்பெயர் தமிழன் தலையில் குண்டு போடமுடியவில்லை. எனவே பேச்சுவார்த்தை என்னும் எலிப்பொறியை  வைக்கிறார் வேதனை என்னவென்றால் பல தமிழர்கள் எற்கனவே மாட்டிக்கொண்டு விட்டார்கள் கோத்தா மனித உரிமைபேரவையைப் பார்த்துக் கேட்க போகிறார் நான் தமிழருடன் பேசுகிறேன் நான் எப்படி போர் குற்றவாளி ஆக முடியும் 

சுமந்திரன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது காரணம் போர் குற்றம் நடத்துள்ளது நிருபிக்க முடியாது என்றும் எனவே போர்குற்ற விசாரணை தேவையில்லை‘ என்றவர்..எங்களுக்கு போர் குற்ற விசாரணை முடிவு பற்றி கவலையில்லை...விசாரணை நடைபெற வேண்டும்..6...7...வருடங்கள்  இழுத்தடித்து முடிவு வர வேண்டும் அங்கே நாங்கள் உரத்துக் பேச வேண்டும் 

நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை

நாங்கள் போரை விரும்பவில்ல...போராட நிர்ப்பந்தம் செய்யப்பட்டோம்...இனக்கலவரங்கள் என்ற பெயரில் தமிழன் வக..தொகை இன்றி கொல்லப்பட்ட ஆன...  இப்படியாக சர்வதேச அரங்கில் எமது நியாயத்தை எடுத்துசொல்லும் மேடை போர் குற்ற விசாரணை ஆகும்  சுமந்திரன் அதனை இல்லாமல் செய்ய முயற்சி க்கிறார்

Global Tamil Forum (GTF) does not represent the Tamil Diaspora

https://www.einpresswire.com/article/552174901/global-tamil-forum-gtf-does-not-represent-the-tamil-diaspora

சுரேன் எனும் தனி நபர் நடாத்தும் இந்த அமைப்பு சிறிலங்கா அரசால் தற்போது வழி நடாத்தப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிறீலங்கா அரசு எங்கு இருந்து கொண்டு இந்த அழைப்பை விடுத்துள்ளது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதைத்தொடர்ந்து அவசர அசரமாக சுரேன் வெளியிட்ட அறிக்கையிலிருந்தே தெரிகிறது அவரின் அவசரம்.

இதுவரை காலமும் அதவது 2009இல் இருந்து இன்று வரை தாயக மக்கள் தொடர்பாகவோ அல்லது புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவோ GTF இன் செயற்பாடு யாது?

அரசுடன் எதை நோக்கி பேசப் போகிறார்?

ஒரு திட்டமும் இல்லாது வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கையை மட்டும் வழங்குவதால் எந்த விதமான பிரயோசனமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மிஸ்டர் சுரேன் புலம்பெயர் சுமந்திரனா.....?    உருப்பட்ட மாதிரித்தான்  அப்போ பயப்படவே தேவையில்லை 
தாராளமாக போய் பேசுங்க மிஸ்டர் சுரேன், நோ பிராப்லம் அட் ஆல் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, narathar said:

Global Tamil Forum (GTF) does not represent the Tamil Diaspora

https://www.einpresswire.com/article/552174901/global-tamil-forum-gtf-does-not-represent-the-tamil-diaspora

சுரேன் எனும் தனி நபர் நடாத்தும் இந்த அமைப்பு சிறிலங்கா அரசால் தற்போது வழி நடாத்தப் படுகிறது.

நாரதர், நன்றி.  லவன் முத்து பொதுப்படையாக "இந்த அமைப்பு தமிழ் மக்களின் நன்மைக்காகச் செயல்படவில்லை" என்று மட்டும் சொல்லியிருக்கிறார். அத்தோடு ஊர் சங்கக் கடை அமைப்புகளில் வழமையாக முன்வைக்கப் படும் குற்றச்சாட்டான "கணக்குக் காட்டவில்லை" என்றும் சொல்லியிருக்கிறார். 

2012 இல் என்ன மாறியது?, நீங்கள் குறிப்பிட்டது போல, எப்படி சிறிலங்கா இவ்வமைப்பை வழி நடத்துகிறது என்று விபரம் தாருங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழருக்கு தம்மிடையே ஒற்றுமை இல்லை, ஒருவரை ஒருவர் கள்ளன் என்றும் துரோகி என்றும் மாறி மாறி குற்றம் சுமத்துகின்றார்கள் , அதற்குள் அவர்கள் தாயக அரசியல் வாதிகளுக்கு  பாடம் எடுக்கின்றார்கள். இவர்களுடன் ஒப்புடும் போது தாயக அரசியல் வாதிகள் பரவாய் இல்லை போல் உள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

மேலே அறிக்கை விட்டிருக்கும் Reformed GTF இன் மின்னஞ்சல் முகவரி nainaimoon@gmail.com : நாய்நாய்மூன்?  பான் கீமூனுக்கு உள்குத்தா இது?😂

  • கருத்துக்கள உறவுகள்

Breaking News: Tamil Diaspora Organization's Declaration of Common Principles of Tamils " 

NEW YORK, UNITED STATES OF AMERICA, September 23, 2021 /EINPresswire.com/ -- Six Tamil Diaspora organizations jointly issued Declaration of Common Principles of Tamils: 
 
1) An internationally conducted and monitored Referendum that allows people living in the north-eastern region of the island of Sri Lanka (Northern and Eastern province) prior to 1948 and their descendants to find a democratic, peaceful, permanent, and political solution that meets Tamils' aspirations. 
 
2) An interim International Protection Mechanism in the north-eastern region of the island. 
 
3) The Repeal of the Sixth Amendment to the Sri Lankan Constitution 
 
4) The referral of the situation in Sri Lanka to the International Criminal Court with respect to genocide, crimes against humanity and war crimes, and legal action against Sri Lanka before the International Court of Justice under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide and the Convention against Torture. 
 
Seetharam Sivam, President, United States Tamil Action Group(USTAG) 
 
Meena Ilancheyan, President Tamil Americans United PAC 
 
Viswanathan Rudrakumaran, Prime Minister Transnational Government of Tamil Eelam (TGTE) 
 
Rajendra Nadaraja, President Ilankai Thamil Sangam Ravi Subramaniam, 
 
President World Tamil Organization (WTO) 
 
Shanthini Jeyarajah, President North Carolinians for Peace 
 
BELOW, PLEASE FIND THE FULL DECLARATION:  

  • கருத்துக்கள உறவுகள்

chrome://external-file/EINPresswire-552173469-breaking-news-tamil-diaspora-organization-s-declaration-of-common-principles-of-tamils.pdf

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

Breaking News: Tamil Diaspora Organization's Declaration of Common Principles of Tamils " 

NEW YORK, UNITED STATES OF AMERICA, September 23, 2021 /EINPresswire.com/ -- Six Tamil Diaspora organizations jointly issued Declaration of Common Principles of Tamils: 
 
1) An internationally conducted and monitored Referendum that allows people living in the north-eastern region of the island of Sri Lanka (Northern and Eastern province) prior to 1948 and their descendants to find a democratic, peaceful, permanent, and political solution that meets Tamils' aspirations. 
 
2) An interim International Protection Mechanism in the north-eastern region of the island. 
 
3) The Repeal of the Sixth Amendment to the Sri Lankan Constitution 
 
4) The referral of the situation in Sri Lanka to the International Criminal Court with respect to genocide, crimes against humanity and war crimes, and legal action against Sri Lanka before the International Court of Justice under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide and the Convention against Torture. 
 
Seetharam Sivam, President, United States Tamil Action Group(USTAG) 
 
Meena Ilancheyan, President Tamil Americans United PAC 
 
Viswanathan Rudrakumaran, Prime Minister Transnational Government of Tamil Eelam (TGTE) 
 
Rajendra Nadaraja, President Ilankai Thamil Sangam Ravi Subramaniam, 
 
President World Tamil Organization (WTO) 
 
Shanthini Jeyarajah, President North Carolinians for Peace 
 
BELOW, PLEASE FIND THE FULL DECLARATION:  

என்னுடைய தாழ்மையான கருத்து: இந்தத் தீர்மானம் எங்கேயும் நகரப் போவதில்லை!

மேலேயிருக்கும் நான்கில், மூன்றாவது நடந்தால் தான் மிகுதி மூன்றும் நடப்பதற்கான வெளியே திறக்கும்!

சிங்களவர்கள் ஒரு நாடு என்றிருக்கும் வரை மூன்றாவதை நிறவேற்றப் போவதில்லை! எனவே, இந்த அறிக்கை "இலங்கையோடு பேச மாட்டோம்" என்ற ஒரு வரிப் பதிலின் நீண்ட வடிவம் தான்!
 
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

முதலே அரைவாசி என்று கேட்கப் போனால் அதிலும் குறைவாகவே தருவார்கள்.

ஆனபடியால் கூடுதலாக கேட்டால்த் தான் கொஞ்சம் குறைத்தேனும் கிடைக்கலாம்.

அவர்கள் விரும்பும் தீர்வுக்கு ஆமா போடுவதென்றால் அப்புறம் ஏன் பேச்சுவார்த்தை?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலே அரைவாசி என்று கேட்கப் போனால் அதிலும் குறைவாகவே தருவார்கள்.

ஆனபடியால் கூடுதலாக கேட்டால்த் தான் கொஞ்சம் குறைத்தேனும் கிடைக்கலாம்.

அவர்கள் விரும்பும் தீர்வுக்கு ஆமா போடுவதென்றால் அப்புறம் ஏன் பேச்சுவார்த்தை?

ஆமா போடுவதென்றால் பேசவே வேண்டியதில்லை - உண்மை! ஆனால், இந்த "செவ்வாய்க்கு மனிதரை அனுப்பும் தோரணை" கொண்ட நிபந்தனைகள் பேச்சு வார்த்தைக்குப் பூட்டு என்பதே என் கருத்து!.

ஆயுதப் போர் ஒரு துருப்புச் சீட்டாக இருந்த காலத்தில் புலிகளே "ஒற்றையாட்சிக்குள் தீர்வைப் பற்றிப் பேசுவோம்" என்றே 2002 இல் போனார்கள். இப்ப ஒரு துருப்புச் சீட்டும் இல்லாமல் எதை வைத்து இந்த 6 அமைப்புகளும் இந்த எட்ட முடியா நிபந்தனை போடுகிறார்களாம்?

அருகில் வசிக்கும் ராஜேந்திராவிடம் நான் கேட்கிறேன், ஏனையோரிடம் நீங்கள் ஒருக்கா அறிந்து சொல்லுங்கள்!

எல்லோரும் இணைந்தோ அல்லது தனியாகவோ  பேசி  வேண்டியவர்களுடன் பேசி சிறிது சிறிதாகவெனிலும் பெற கூடியதை பெறுவதே தமிழ் மக்களுக்கு  நல்லது.  ஆனால் அதை செய்ய போனால் துரோகியாக முத்துரை குத்தப்படுவோம் என்று புலம் பெயர் அத்தனை தமிழ் அமைப்புக்களுக்கும் நன்கு தெரியும். ( பாம்பில் கால் பாம்பறியும்  என்பார்கள். 😂

ஆகவே  தூர நின்று வெட்டி வீரம் பேசி காலத்தை போக்குவதே இவர்களது தமிழ் தேசியத்துக்கு அழகு. 

😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

தனியாக பேசி பெற்றா சந்தையில் கடை திறக்க போறீர்களாக்கும்???

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஆயுதப் போர் ஒரு துருப்புச் சீட்டாக இருந்த காலத்தில் புலிகளே "ஒற்றையாட்சிக்குள் தீர்வைப் பற்றிப் பேசுவோம்" என்றே 2002 இல் போனார்கள். இப்ப ஒரு துருப்புச் சீட்டும் இல்லாமல் எதை வைத்து இந்த 6 அமைப்புகளும் இந்த எட்ட முடியா நிபந்தனை போடுகிறார்களாம்?

அந்தநேரம் புலிகள் பலமாக இருந்தார்கள்.

இப்போ அரசு பலவீனமாக இருக்கிறது.

3 hours ago, tulpen said:

எல்லோரும் இணைந்தோ அல்லது தனியாகவோ  பேசி  வேண்டியவர்களுடன் பேசி சிறிது சிறிதாகவெனிலும் பெற கூடியதை பெறுவதே தமிழ் மக்களுக்கு  நல்லது.  ஆனால் அதை செய்ய போனால் துரோகியாக முத்துரை குத்தப்படுவோம் என்று புலம் பெயர் அத்தனை தமிழ் அமைப்புக்களுக்கும் நன்கு தெரியும். ( பாம்பில் கால் பாம்பறியும்  என்பார்கள். 😂

ஆகவே  தூர நின்று வெட்டி வீரம் பேசி காலத்தை போக்குவதே இவர்களது தமிழ் தேசியத்துக்கு அழகு. 

😂😂😂

சிங்களம் மட்டும் என்ன தமிழருக்கு எப்படியும் ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்றா இறங்குகிறது.

பேச்சுவார்த்தை எனும் போர்வையில் புலம்பெயர் தமிழர்களை இழுத்து முதலீடு செய்ய வைப்பதில் தான் கரிசனையாக உள்ளது.

உண்மையிலேயே தீர்வு என்றால் யாருடனும் பேசவே தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

சிங்களம் மட்டும் என்ன தமிழருக்கு எப்படியும் ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்றா இறங்குகிறது.

பேச்சுவார்த்தை எனும் போர்வையில் புலம்பெயர் தமிழர்களை இழுத்து முதலீடு செய்ய வைப்பதில் தான் கரிசனையாக உள்ளது.

உண்மையிலேயே தீர்வு என்றால் யாருடனும் பேசவே தேவையில்லை.

சிங்களம் தட்டில் வைத்து கை வலிக்க காத்திருக்குது.  தமிழர்களுக்கு தான் அதை வாங்க தெரியவில்லை. நாங்க அதை வாங்க மயிக் ஒன்று வைத்திருக்கிறம். ஆனால் சொல்லமாட்டம் செய்யமாட்டம்.😡

சிறி லங்கா வுடன் பேசி எதனையும் தமிழர் பெற முடியாது. சுரேன் GTF அறிக்கை கள் சிறிலங்கா வின் ஊடகங்கள் மூலமே வெளியிடப் படுகின்றன. மேலும் தடை செய்யப்பட்ட gtf இன் தலைவர் எவ்வாறு சிறிலங்காவில் வாழ்கிறார். சுரேன் பல சிறிலங்கா அரசியல் வாதிகளை பல முறை சந்தித்து உள்ளார். இவருக்கு இவ் அதிகாரத்தை எந்த அமைப்பு வழங்கியது ? GTF இல் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

அமெரிக்க அரசுடனான பேச்சு வார்த்தைகள் தான் நடக்க இருக்கின்றன. அதற்காக ன அடிப்படைகளே வெளியிடப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

முதலில் சிறீலங்கா அரசு எங்கு இருந்து கொண்டு இந்த அழைப்பை விடுத்துள்ளது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதைத்தொடர்ந்து அவசர அசரமாக சுரேன் வெளியிட்ட அறிக்கையிலிருந்தே தெரிகிறது அவரின் அவசரம்.

இதுவரை காலமும் அதவது 2009இல் இருந்து இன்று வரை தாயக மக்கள் தொடர்பாகவோ அல்லது புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவோ GTF இன் செயற்பாடு யாது?

அரசுடன் எதை நோக்கி பேசப் போகிறார்?

ஒரு திட்டமும் இல்லாது வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கையை மட்டும் வழங்குவதால் எந்த விதமான பிரயோசனமும் இல்லை.

13 hours ago, MEERA said:

இதுவரை காலமும் அதவது 2009இல் இருந்து இன்று வரை தாயக மக்கள் தொடர்பாகவோ அல்லது புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவோ GTF இன் செயற்பாடு யாது?

தென்னாபிரிக்க அரசுக்கும், இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கும் GTF க்கும் என்ன சம்பந்தம் என்று இணையத்தில் தேடினால் இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமே? 

13 hours ago, MEERA said:

அரசுடன் எதை நோக்கி பேசப் போகிறார்?

மின்னஞ்சல் அனுப்பி கேட்டால் சொல்லிவிடுவாரே? கேட்கவில்லையா?

13 hours ago, MEERA said:

ஒரு திட்டமும் இல்லாது வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கையை மட்டும் வழங்குவதால் எந்த விதமான பிரயோசனமும் இல்லை.

“ஒரு திட்டமும் இல்லாது வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கையை மட்டும் வழங்குவதால்”😃 - எல்லோரையும் என்னைப்போன்ற யாழ்களத்து இராஜதந்திரிகள் என்று நினைத்து எழுதக்கூடாது. அவரிடம் உள்ள திட்டங்கள் பற்றி அவருடன் தொடர்பு கொண்டு கேட்டீர்களா? 🙃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.