Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

மணமக்கள் இருவருமே ஆண் பெண் வேறுபாட்டுடன் தோழன் தோழி என கலியாணம் செய்திருக்கிறார்கள். 

அவர்கள் தாங்கள் ஒத்த பாலினம் என்றால் இருவருமே பெண்களாகவோ அல்லது ஆண்களாகவோ வெளிப்பட்டிருக்கலாம். அவர்களே தங்கள் இருவருக்குமான வேறுபாட்டை காட்டி உள்ளார்கள்.

இது இது  போன்ற திருமணங்களில்  ஏற்கனவே இருவராலேயும்  தீர்மானிக்கப்படுகிறது என்று நினைக்கின்றேன்

அண்மையில் எனது  கடைக்கு    தாடி  மீசையுடன்  ஒருவர் வந்தார்

வந்தவர் எனது  கணவன் இங்கே  வருவதாக  சொன்னார்   வந்தாரா  என்று  கேட்டார்

கொஞ்ச நேரம் நான்  யோசித்தேன்

அதற்கிடையில் இன்னொருவர்  அது  தாடி  மீசையுடன் வந்து விட்டார்...

எனவே  கணவர் யார்?

மனைவி யார் என்று அவர்களுக்குள் ஒரு  ஒப்பந்தம் இருக்கக்கூடும்.???

  • Replies 386
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

விசுகு அண்ணா,
கனேடிய சட்டத்தின் படி தவறான தடையான ஒரு காரியத்தை செய்யாத, சட்டத்துக்கு உட்பட்ட ஒரு நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை தொழில் ரீதியாக தனது கடமையை நடாத்திய குருக்கள் மீதா உங்கள் ஆட்சேபம்? 
ஓரினசேர்க்கை உங்கள் பலருக்கு ஒவ்வாத விடயமா? சரி கடந்து செல்லுங்கள். அதில் தவறவில்லை.
ஆனால் அவர்களை வாழ்த்தும் பக்குவம் உள்ளவர்களை கண்டால் ஏன் பதறுகிறீர்கள்? இது எனக்கு புரியவில்லை.
கோஷன், நிழலி, கிருபன் இன்னும் பலர் மிக அழகாக அந்த மனிதர்கள் வாழ்வியல், தாம்பத்திய தெரிவு முறை குறித்து தெளிவாக எழுதிவிட்டார்கள். 
சமூக இடைவெளி, அனைவருக்கும் முகக்கவசம், வக்சீன் பாஸ்போர்ட் இவை ஒன்றும் நாம் பழக்கப்பட்டது அல்ல. ஆனால் சரியான புரிதல் ஏற்படும்போது உடன்பட்டது. சமூக புது ஒழுங்குகளை சீர்தூக்கி பார்க்கவேண்டிய காலம் இது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பிடித்தால்

இந்து / சைவ  சமயம் ஒருநாளும் இந்த மாதிரி விடயங்களில் தலையிடுவது இல்லை என நினைக்கிறன்.
முருகனுக்கு 2 பொண்டாட்டி சந்தோசமாய் கோயிலை கட்டி கும்பிடுவார். 
ஒரு ஆணின் மீது இன்னும் ஒரு ஆணுக்கு எழுந்த கவர்ச்சி / மோகம் (சிவன் / விஷ்ணு ) விளைவு ஐயப்பன் 
புராணக்கதைகள் / இதிகாசங்கள் சொன்னது. அவருக்கும் கோவில். 😃
சனாதன தர்மம்  vs தலிபான்களின் சட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா,
கனேடிய சட்டத்தின் படி தவறான தடையான ஒரு காரியத்தை செய்யாத, சட்டத்துக்கு உட்பட்ட ஒரு நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை தொழில் ரீதியாக தனது கடமையை நடாத்திய குருக்கள் மீதா உங்கள் ஆட்சேபம்? 
ஓரினசேர்க்கை உங்கள் பலருக்கு ஒவ்வாத விடயமா? சரி கடந்து செல்லுங்கள். அதில் தவறவில்லை.
ஆனால் அவர்களை வாழ்த்தும் பக்குவம் உள்ளவர்களை கண்டால் ஏன் பதறுகிறீர்கள்? இது எனக்கு புரியவில்லை.
கோஷன், நிழலி, கிருபன் இன்னும் பலர் மிக அழகாக அந்த மனிதர்கள் வாழ்வியல், தாம்பத்திய தெரிவு முறை குறித்து தெளிவாக எழுதிவிட்டார்கள். 
சமூக இடைவெளி, அனைவருக்கும் முகக்கவசம், வக்சீன் பாஸ்போர்ட் இவை ஒன்றும் நாம் பழக்கப்பட்டது அல்ல. ஆனால் சரியான புரிதல் ஏற்படும்போது உடன்பட்டது. சமூக புது ஒழுங்குகளை சீர்தூக்கி பார்க்கவேண்டிய காலம் இது.

நன்றி தம்பி சசி

உங்கள் ஆதங்கமும் புரிதலும்  புரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழகத்தில்......

கட்டிபுடி கட்டி புடிமா கண்ணம்மா கண்டபடி கட்டிபுடிமா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

பெண்கள் விளைநிலம் அல்ல. ஆனால் இயற்கையின் நியதியில் பெண்களால் மட்டுமே பிள்ளை பெற்றெடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பெண்கள் விளைநிலம் அல்ல. ஆனால் இயற்கையின் நியதியில் பெண்களால் மட்டுமே பிள்ளை பெற்றெடுக்க முடியும்.

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அல்லது வாடகைத்தாய் மூலம்  பிள்ளை  பெற்றுக்கொண் ட  அனைத்து  பெண்களும்  தாம் விளைநிலமல்ல  என்பவர்கள்  தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, விசுகு said:

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அல்லது வாடகைத்தாய் மூலம்  பிள்ளை  பெற்றுக்கொண் ட  அனைத்து  பெண்களும்  தாம் விளைநிலமல்ல  என்பவர்கள்  தான்.

விசுகர்! உங்களை/என்னைப் போன்றவர்கள் நியதியுடன் சேர்ந்த யதார்த்த கருத்துக்களை எழுதுபவர்கள். புத்தக படிப்பை மட்டும் வைத்து மேடைப்பேச்சு பேசுபவர்கள் அல்லர்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அல்லது வாடகைத்தாய் மூலம்  பிள்ளை  பெற்றுக்கொண் ட  அனைத்து  பெண்களும்  தாம் விளைநிலமல்ல  என்பவர்கள்  தான்.

தாங்கள் விளைநிலமா அல்லது வேறெதுவுமா என்பதை பெண்களே தீர்மானிக்கட்டும் என்பது தான் கோசான் உட்பட பலரின் கருத்து!

ஆண்களை  "உன் விந்தையெல்லாம்  எங்கள் சந்ததி பெருகுவதற்காக கொடையாகத் தர வேணும்!" என்று ஒரு சட்டம் வந்தால் இதே மாதிரி கூலாக இருக்குமா உங்கள் துலங்கல்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! உங்களை/என்னைப் போன்றவர்கள் நியதியுடன் சேர்ந்த யதார்த்த கருத்துக்களை எழுதுபவர்கள். புத்தக படிப்பை மட்டும் வைத்து மேடைப்பேச்சு பேசுபவர்கள் அல்லர்.

உண்மையண்ணா

நான்  பல  தலைமுறையுடன் பழகுபவன்

நாங்கள் புலம் பெயர்ந்து வந்து பலவற்றிற்கும்  ஈடுகொடுத்து

மாற்றங்களை எதிர்கொண்டு

புடம்போடப்பட்டு...................

இன்று  பிள்ளைகளின் திருமணம் சார்ந்து  எமது  ஆகக்கூடிய எதிர்பார்ப்பு

ஒரு எம்மினத்தவரை கொண்டு வந்து  விடணும் என்பது  தான்

ஓரினச்சேர்க்கை  எல்லாம் எம் வட்டத்துக்குள் எமது கண்ணுக்குள் இல்லை

ஆனால்  எமது  அடுத்த தலைமுறையினரின் வட்டம் அல்லது கண்ணுக்குள் அதுவும் வந்து  வாட்டுகிறது?

எனது  மகள் தனது மகனுக்கு சொல்லிக்கொள்வதைக்கேட்டேன்

அப்பு ராசா நீ  ஒரு  பொண்ணை  கொண்டு  வந்தால் போதும்??

இது  அடுத்த  தலைமுறையின் தலையிடி

இங்கே  பிறந்த எனது மகளே இப்படியென்றால்

இங்கே  கருத்து எழுதுபவர்கள் அவளுக்கு முதல் தலைமுறையினர்

இவர்களுக்கு  எவ்வளவு  பயம்   இருக்கும்  என்பது  தெரிந்ததே???

சும்மா அடித்து  விடுவதில் ஒன்றுமில்லை

ஆனால் வாழ்க்கை அதன் ஒவ்வொரு நகர்வும் சுலபமல்ல...

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் நியதி ஒன்றுதான். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் நியதி. இவ்வாறான திருமணங்களை கடுமையாக எதிர்க்கிறேன்.

@சசிவர்ணம்,

பல இடங்களில் சிவனும் விஸ்ணுவும் கூடித்தான் அய்யப்பன் பிறந்தார் என்று சொல்கிறார்கள். இதைவிட இந்து மதத்தை எவரும் கேவலப்படுத்திவிட முடியாது.

சிவன் என்ற ஆணும் விஸ்ணு என்ற ஆணும் கூடி அய்யப்பன் பிறக்கவில்லை. மாறாக சிவன் என்ற ஆணும் விஸ்ணு எடுத்த பெண் அவதாரமாகிய மோகினிக்கும் தான் பிறந்தார். இன்னும் பச்சையாகச் சொன்னால் சிவன் விஸ்னுவுடன் ஹோமோசெக்ஸ் வைத்து பிறக்கவில்லை, சிவன் மோகினியுடன் ஹெட்ரோசெக்ஸ் வைத்துதான் அய்யப்பன் பிறந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாலி said:

நீங்கள் சொல்வது ஒன்றும் புதுக் கதை கிடையாது வாலியர். மோகினி, அவதாரம் போன்ற நீண்ட விளக்கங்கள் தேவையில்லை என கருதினேன் அவ்வளவே. என் மதத்தை நான் அறிவேன்.

ஐயப்பனை கையப்பன் என அழைப்பதாகவும் ஒரு கதை உண்டு. காரணம் விஷ்ணு கையிலே ஏந்திய சிவனின் இந்திரியத்தில் இருந்து உருவானவர் கையப்பன் (ஐயப்பன்) இப்படியும் கூட கதைகள் உண்டு. 
இதை கேவலமாக பார்ப்பது நாம் அல்ல. மாறாக புத்தகங்களில் எழுதி வைத்து சட்டமாக காட்ட முனைபவர்களே.    

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

உண்மையண்ணா

நான்  பல  தலைமுறையுடன் பழகுபவன்

நாங்கள் புலம் பெயர்ந்து வந்து பலவற்றிற்கும்  ஈடுகொடுத்து

மாற்றங்களை எதிர்கொண்டு

புடம்போடப்பட்டு...................

இன்று  பிள்ளைகளின் திருமணம் சார்ந்து  எமது  ஆகக்கூடிய எதிர்பார்ப்பு

ஒரு எம்மினத்தவரை கொண்டு வந்து  விடணும் என்பது  தான்

ஓரினச்சேர்க்கை  எல்லாம் எம் வட்டத்துக்குள் எமது கண்ணுக்குள் இல்லை

ஆனால்  எமது  அடுத்த தலைமுறையினரின் வட்டம் அல்லது கண்ணுக்குள் அதுவும் வந்து  வாட்டுகிறது?

எனது  மகள் தனது மகனுக்கு சொல்லிக்கொள்வதைக்கேட்டேன்

அப்பு ராசா நீ  ஒரு  பொண்ணை  கொண்டு  வந்தால் போதும்??

இது  அடுத்த  தலைமுறையின் தலையிடி

இங்கே  பிறந்த எனது மகளே இப்படியென்றால்

இங்கே  கருத்து எழுதுபவர்கள் அவளுக்கு முதல் தலைமுறையினர்

இவர்களுக்கு  எவ்வளவு  பயம்   இருக்கும்  என்பது  தெரிந்ததே???

சும்மா அடித்து  விடுவதில் ஒன்றுமில்லை

ஆனால் வாழ்க்கை அதன் ஒவ்வொரு நகர்வும் சுலபமல்ல...

எம் இனம், தமிழர் எதிர்காலம் என்று கலங்குபவர்கள் சிலவேளைகளில் அதே தமிழ் தேசிய தலைமை மெய்யுணர்ந்து இந்த புதிய பந்தங்களை உலக ஒழுங்குகளின் பிரகாரம் ஏற்றுக்கொண்டால் வாளாவிருப்பார்கள் என நம்புகிறேன். 
   
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இதெல்லாம் தனி மனித உரிமைகளோ அதே மாதிரி இப்படியானவர்களை வாழ்த்தாமல் விடுவதும் தனி மனித சுதந்திரம் தான்.மற்றும் படி அவர்கள் தாராளமாக வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ...ஆனால், இப்படியான திருமணங்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாழ்த்த தேவையில்லை ...அதே நேரத்தில் துற்றவோ, கணக்கில் எடுக்கவோ தேவையில்லை

இவர்கள் தமிழர்கள் என்பதற்காய் சொல்லவில்லை . மனிதர்கள் என்பதற்காய் சொல்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பெண்கள் விளைநிலம் அல்ல. ஆனால் இயற்கையின் நியதியில் பெண்களால் மட்டுமே பிள்ளை பெற்றெடுக்க முடியும்.

4 hours ago, விசுகு said:

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அண்ணாக்களே,

பெண்கள் உடல் மீதான உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கு மட்டுமே உரியது. அதை கொண்டு என்ன செய்வது, திருமணம், வாடகைதாய், ஒலிம்பிக்கில் பளுதூக்குவது - என்பது அவர்களின் (மட்டுமே) உரிமை. 

பெண்கள்தான் பிள்ளை பெறலாம். ஆனால் அதுக்கு ஆண்களின் உதவி தேவை அல்லவா?

அந்த உதவியை கொடுப்பதா இல்லையா என்பது ஆண்களின் தனி உரிமை. யாருக்கும், இனம் அழிகிறது என கூறி அதை வலுக்கட்டாயமா ஒரு ஆணிடம் இருந்து பெறும் அதிகாரம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அடிக்கடி இஸ்லாமியர்களை உதாரணம் காட்டுவதால், இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கு எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் அவர்களைப்போல தனியே பெண்களை விளைநிலங்களாக மட்டும் எங்களது குடும்பங்களில் பார்ப்போமா?

இங்கே கருத்துக்களின்  போக்குகளை எல்லாம் பார்க்கும் போது அப்படி சந்தேகம் வரும் தானே 😟

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இவர்களுக்கு  எவ்வளவு  பயம்   இருக்கும்  என்பது  தெரிந்ததே???

சும்மா அடித்து  விடுவதில் ஒன்றுமில்லை

ஆனால் வாழ்க்கை அதன் ஒவ்வொரு நகர்வும் சுலபமல்ல...

நான் இந்த சமூகத்தின் எதிர் வினையை இட்டு பயப்படுவேன் என எனது முதலாவது பதிவிலேயே கூறியுள்ளேன் அண்ணா. 

என்போன்றோரும், உங்கள் பிள்ளைகளும் ஒரே தலைமுறைதான்.  ஒரு தலைமுறை என்பது 20-30 வருடம். ஆனால் எம்மை, உங்கள் பிள்ளைகளை விட வயது குறைந்தோரும் கூட, மிக மோசமான தன்னினசேர்க்கையாளர் வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

உத்தர பிரதேசத்தில் பத்து பிள்ளைகளை பெற்று நம்பரை கூட்டி, எம்பிகளை கூட்டினாலும், குறைந்த நம்பரில், வளங்களை சரியாக பயன்படுத்திய மாநிலங்களே முன்னேறுகிறன. 

உண்மை தான். இப்போது உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்பவர்களுக்கு அரச சலுகைகள் பெற முடியாது என்று கட்டுபாடு கொண்டு வந்துள்ளார்கள் என்று செய்தி பார்த்தேன் .இந்த மாகாணம் ஒரு இந்து சாமியாரால் முதல்வர் ஆளப்பட்டாலும் பெண்களை விளைநிலங்கள் என்று பார்க்காமல் இப்படி சட்டம் கொண்டுவந்திருக்கிறர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ...ஆனால், இப்படியான திருமணங்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாழ்த்த தேவையில்லை ...அதே நேரத்தில் துற்றவோ, கணக்கில் எடுக்கவோ தேவையில்லை

இவர்கள் தமிழர்கள் என்பதற்காய் சொல்லவில்லை . மனிதர்கள் என்பதற்காய் சொல்கிறேன் 

சட்டத்துக்கு புறம்பல்லாத எதையும் யாரும் வாழ்த்தலாம். 

எனக்கு பிடிக்காத ஒரு விசயத்தை இன்னொருவர் செய்யகூடாது என்பதும், அதை அடுத்த ஒருவர் வாழ்த்தவே கூடாது என்பதும் மிக மோசமான அடக்குமுறை, தனிமனித உரிமை மீறல்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

சட்டத்துக்கு புறம்பல்லாத எதையும் யாரும் வாழ்த்தலாம். 

எனக்கு பிடிக்காத ஒரு விசயத்தை இன்னொருவர் செய்யகூடாது என்பதும், அதை அடுத்த ஒருவர் வாழ்த்தவே கூடாது என்பதும் மிக மோசமான அடக்குமுறை, தனிமனித உரிமை மீறல்.

எனக்கு பிடிக்காது என்பதற்காய் இதை எதிர்க்கவில்லை ...அவர்களை என்கரேஜ் பண்ண வேண்டாம் என்று தான் சொல்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

எனக்கு பிடிக்காது என்பதற்காய் இதை எதிர்க்கவில்லை ...அவர்களை என்கரேஜ் பண்ண வேண்டாம் என்று தான் சொல்கிறேன் 

என்கரேஜ் பண்ண இது ஒன்றும் பழக்கம் (habit) இல்லை. உள்ளார்ந்த விடயம். 

எவ்வளவுதான் என்கரேஜ் பண்ணினாலும் நீங்களோ நானோ இப்படி செய்வோமா? 

Sexuality என்பது நோயோ, பழக்கவழக்கமோ, அங்கவீனமோ, பேஷன் டிரெண்டோ இல்லை.

நாம் எப்படி உள்ளக உந்தலால், எந்த என்கரேஜ்மண்டும் இன்றி எதிர்பாலினத்தவரால் ஈர்க்கப்படுகிறோமே அப்படி அவர்கள் தன்பாலினத்தபரால் ஈர்கப்படுகிறனர்.  அவ்வளவுதான் இதில் மேட்டர்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

உங்களை போல தைரியமாக சொந்த பெயரில் எழுத என்னால் முடிவதில்லை பிரபா. 

அண்ணைமார் இப்படியான விசயங்களில் கொஞ்சம் டென்சன் ஆகிடுவினம். எங்கட வீட்டிலும் இப்படித்தானே. மற்றும்படி அச்சா பிள்ளையள்.

தொடர்ந்து எழுதுங்கோ, யாழ் சில சமயங்களில் gentleman’s club போல இருக்கும். நீங்கள் எமது சமூகத்தின் 50% இல் ஒருவர். உங்களை போன்றவர்களின் கருத்து ஐந்து ஆண்களின் கருத்துக்கு சமன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

1. நேரு - கஸ்மீரி பண்டிட்

2. குல்சரி லால் நந்தா - பஞ்சாபி இந்து

3. இந்திரா - நேருவின் மகள்

4. மொராஜி தேசாய் - குஜராத்தி

5. ரஜீவ் - இந்திராவின் மகன்

6.  நரசிம்ம ராவ் - ஆந்திரா 

7. தேவேகெளடா - கர்நாடகா

8. குஜ்ரால் - பஞ்சாபி இந்து

9. மன்மோகன் - பஞ்சாபி சீக்கியர்

10. மோடி - குஜராத்தி இந்து

10/14 நீங்கள் சொன்ன மாதிரி இல்லை.

இவர்கள் எல்லாம் பேருக்குதான் குஜராத்தி பஞாபி.. அவர்கள் மொழியை இழந்து கிந்திக்காரர்கள் ஆகி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.. இவர்கள் ஆட்டினால் ஆடும் பொம்மைகள்.. எங்களிலும்தான் பல கதிர்காமர்கள் இலங்கை அரசியலில் இருந்தார்கள் அதற்காக நாம் இலங்கையில்  அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளா..? யார் பிரதமர் ஆனாலும் ஓட்டுப்போட்டு தீர்மானிக்கும் மாநிலங்கள் அந்த மூன்றும்தான்.. இதை எலெக்சன் எண்ணுபோது ஊடகங்களியே சொல்லுவார்கள் தீர்மானிக்கும் மாநிலங்களின் ஓட்டு எண்ணப்படுகிறது என்று..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர்கள் எல்லாம் பேருக்குதான் குஜராத்தி பஞாபி.. அவர்கள் மொழியை இழந்து கிந்திக்காரர்கள் ஆகி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.. இவர்கள் ஆட்டினால் ஆடும் பொம்மைகள்.. எங்களிலும்தான் பல கதிர்காமர்கள் இலங்கை அரசியலில் இருந்தார்கள் அதற்காக நாம் இலங்கையில்  அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளா..?

இல்லை புலவரே வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது இப்போ காலாவதியாகிவிட்ட விடயம். இந்தியாவில் மிக மோசமான, பின்தங்கிய பகுதிகள் எது என்று பார்த்தால் நீங்கள் சொன்ன Hindi speaking belt தான். தமிழர்களும், தெலுங்கர்களும், மராட்டியரும், பஞ்சாபிகளும், குஜராத்திகளும், ஓரளவுக்கு வங்காளிகளும் அடைந்துள்ள வளர்சிக்கு கிட்டவும் இல்லை இந்த மாநிலங்கள். 

வத வத என பிள்ளைகளை பெறுவது, சாமியார்கள் பின்னால் போவது, அடுத்த தலைமுறையை படிபிக்கும் எண்ணம் இல்லை, எண்ணிக்கையில் அதிகம்தான், ஆனால் இந்தியாவை ஆளுபவர்கள் இவர்கள் இல்லை. 

இந்தியாவின் அரச, பொருளாதாரத்தின் ஆட்சியாளர்கள் 3% உள்ள பிராமணரும், ஹிந்தியை இரெண்டாம் மொழியாக பேசும், மலையாளிகள், குஜராத்திகள் போன்றோர்தான்.

இந்த மாநிலங்களை பார்த்தால் அவற்றில் எல்லாம் அரசின் குடும்பநல கொள்கை நன்றாக இருக்கும்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான். இப்போது உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்பவர்களுக்கு அரச சலுகைகள் பெற முடியாது என்று கட்டுபாடு கொண்டு வந்துள்ளார்கள் என்று செய்தி பார்த்தேன் .இந்த மாகாணம் ஒரு இந்து சாமியாரால் முதல்வர் ஆளப்பட்டாலும் பெண்களை விளைநிலங்கள் என்று பார்க்காமல் இப்படி சட்டம் கொண்டுவந்திருக்கிறர்கள்.

யாராவது ஒரு சாமியார் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது ஆகவே எல்லாரும் பிள்ளை பெறுங்கள் என அறைகூவல் விடுவார் - அடுத்த கணமே அரசு நிலைப்பாட்டை மாற்றும் 🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.