Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னமா பாசம் பொங்கி வழியுது? என்னதான் கொரோனா வெருட்டினாலும் பாசத்திற்கு தடையில்லை. சாணக்கியன் பிரமிச்சுப்போனார், நாளைக்கு இந்த நிலையில் அவர் இருப்பார்! அமெரிக்கா கிளம்ப முதல் பாத்து ஆசி வாங்கி, ஆறுதல் சொல்ல போயிருப்பினமோ? எதுக்கும் சம்பந்தரையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்.... இந்த ஆனந்தத்தை கண்ணாரக்கண்டு மகிழ. அவரின் செய்தியும், வாழ்த்தும் பரிமாறப்பட்டிருக்கும். யாம் இருக்கப் பயமேன்.

2 hours ago, goshan_che said:

நானே ஒரு சந்தேக பிராணி🤣. சாத்தான் எனக்கும் மேலே. அவ்வளவுதான்.

அவ்வளவும் பட்ட வலி ராசா! ரணமாய் இருக்குது. அவ்வளவு சுலபமாய் மறக்கவும் முடியல, யாரையும்  நம்பவும்  முடியவில்லை. காரணம் நானுமல்ல!

  • Replies 119
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

அவ்வளவும் பட்ட வலி ராசா! ரணமாய் இருக்குது. அவ்வளவு சுலபமாய் மறக்கவும் முடியல, யாரையும்  நம்பவும்  முடியவில்லை. காரணம் நானுமல்ல!

நியாயமான நிலைப்பாடுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.... ஐயோ .... சிறியர்! அவர்கள் அமெரிக்காவுக்கு போகப்போறோம் எண்டு சொல்லபோயிருப்பினம், இங்கிலாந்து பிரதிநிதியை சந்திச்சுப்போட்டு வாற வழியில்  உடுப்பு மாத்த மறந்து, அவசரமாய்  கதைச்சதை பரிமாறப்போயிருப்பின. நீங்கள் வேறை! ஏதோ இவர்களுக்காகவே விருந்து ஏற்பாடு செய்து காத்திருந்ததுபோல் தெரிகிறது. எல்லோரும் எழுந்து நின்று வரவேற்கிறார்கள், இவாளுக்கோ காணாமற் போன மகனை கண்ட சந்தோஷம் பொங்கி ஆரத்தழுவுகினம். 

5 hours ago, குமாரசாமி said:

அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே.....:cool:

Bild

இந்த சிவப்பு சால்வைக்காரரை ஜதார்த்தவாதி என்று கூறி பதவிக்கு கொண்டுவர ஆதரவளித்தவர்களுக்கு நடந்ததை கண்முன்னே பார்தத பின்னரும் திருந்தாமல் விட்டால் ஒன்றுமே செய்யமுடியாது. 

5 hours ago, குமாரசாமி said:

எங்களை விட்டால் வேறை ஆக்கள் இல்லையெண்ட நினைப்பு....😎

உண்மை தான் அப்படி முன்பு நினைத்து பேராசைப்  பட்டு பேராசை பெரு நட்டம் என்பதை பார்தத பின்பும்  தற்போதைய அரசியல்வாதிகள் அதை உணராமல் நடப்பது தமிழரின் துரதிஷ்ரம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

அதுக்காகத்தான்... நாதமுனியும், 
நாங்களும்.. உங்களை, "தல" என்று செல்லமாக சொல்லுறனாங்கள். 👍 :)

15 hours ago, goshan_che said:

தறு தொக்கி நிற்கிறது 🤣

கோசான் முழுமையானவர் நம்புங்கள்.🤗

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Paanch said:

கோசான் முழுமையானவர் நம்புங்கள்.🤗

உண்மையானவருங்கூட.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே.....:cool:

Bild

எதிரியும் வியக்கும் ஆளுமை.
முந்தி தலைவரை பப்பா மரத்தில் எத்தின மாதிரி,  சுமந்திரனையும் ஏத்துவம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

கோசான் முழுமையானவர் நம்புங்கள்.🤗

நீங்கள் எந்த கோஷானை சொல்கிறீகள் ஐயா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

உண்மையானவருங்கூட.

முன்பே சொல்லி விட்டேன். உங்கள் சந்தேகத்தை நான் புரிந்து கொள்கிறேன். அதற்கான காரணத்தையும் கூட.

ஆனால் தீயில் இறங்க நான் சீதையும் இல்லை, நீங்கள் இராமனும் இல்லை 🤣.

மலையாளியாக, ரோவாக, ஒட்டு குழுவாக, ஒட்டாத குழுவாக, முஸ்லிம்மாக, முஸ்லிம் விரோதியாக, தமிழ் தெரிந்த சிங்களவராக, கொழும்பு மேட்டுகுடியாக, “கிழக்கு மாகாணத்தானாக”, சுமந்திரன் செம்பாக,  200 ரூபாய் உபியாக, இப்படி ஒவ்வொரு இடத்திலும் நான் முன்வைக்கும் கருத்தின் அடிப்படையில் இங்கே பலவாறு முத்திரை குத்தபட்டவந்தான் நான்.

சிலர் தமது கபட வேடத்தை மறைக்க என்மேல் முத்திரை குத்துவார்கள்.

பலர் யானை பார்த்த குருடன் போல் எனது ஒரு கருத்தை வைத்து முத்திரை குத்துவார்கள்.

ஆனால் என் அவதாரில் உள்ளது போல, வாள் முறியும் வரை, அல்லது என் பேனா முறிக்கப்படும் வரை - என் மனசாட்சிக்கு உண்மையனதை எழுதுவது நடந்தே தீரும்.

பிகு

நினைவூட்டல் தலைப்பு சுமதிரனை பற்றி, கோஷானை பற்றி அல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நீங்கள் எந்த கோஷானை சொல்கிறீகள் ஐயா?🤣

நிச்சயமாக! நான் எங்கள் கள உறவு கோசான் என்ற உங்களை, முழுமையான தமிழன் என்றே சொல்லவந்தேன். பாருங்கள்.... உங்கள் பெயரில் நான் வடமொழி சேர்க்காமல், முழுவதும் தமிழ் எழுத்துமொழி கொண்டு எழுதியுள்ளேன் ஐயா.!! 🙏

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Paanch said:

நிச்சயமாக! நான் எங்கள் கள உறவு கோசான் என்ற உங்களை, முழுமையான தமிழன் என்றே சொல்லவந்தேன். பாருங்கள்.... உங்கள் பெயரில் நான் வடமொழி சேர்க்காமல், முழுவதும் தமிழ் எழுத்துமொழி கொண்டு எழுதியுள்ளேன் ஐயா.!! 🙏

இல்லை ஐயா, திண்ணையில் கோசான்  ஒரு ஆள், கோஷான் இன்னொரு ஆள் என்று ஜெயலலிதா ரசிகர்கள் @நிழலி  @கிருபன் ஆகியோர் சொல்லியுள்ளார்கள் 🤣. அதுதான் கேட்டேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இல்லை ஐயா, திண்ணையில் கோசான்  ஒரு ஆள், கோஷான் இன்னொரு ஆள் என்று ஜெயலலிதா ரசிகர்கள் @நிழலி  @கிருபன் ஆகியோர் சொல்லியுள்ளார்கள் 🤣. அதுதான் கேட்டேன்.

சொல்லுவார் என்ன தான்  சொல்லட்டும்
படிப்பவர் எதையும் படிக்கட்டும்
எழுதுவர் என்ன தான்  எழுதட்டும்
செய்வது எப்படியும் செய்யட்டும்
ஆண்டவனைப் பல பெயர்கள்கொண்டு அழைக்கிறார்களே! கவலையை விடுங்கள்.!! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, tulpen said:

இந்த சிவப்பு சால்வைக்காரரை ஜதார்த்தவாதி என்று கூறி பதவிக்கு கொண்டுவர ஆதரவளித்தவர்களுக்கு நடந்ததை கண்முன்னே பார்தத பின்னரும் திருந்தாமல் விட்டால் ஒன்றுமே செய்யமுடியாது. 

நீங்கள் எப்ப பாத்தாலும் ஒரு பழஞ்சீலையை வைச்சுக்கொண்டு எல்லா இடமும் கிழிச்சுக்கொண்டு திரியுறியள் .....

இப்ப ஈழத்தமிழினம்,ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் என்ன செய்யவேணும்? யாரை அணுகி எதை செய்ய வேண்டும்? அதற்கு சரியான தமிழ் அரசியல்வாதி யார் எண்டதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2021 at 04:43, goshan_che said:

அவர்கள் எந்த திரியிலும் வாயே திறக்கவில்லை என்பதை பவ்வியமாக இங்கே நினைவூட்ட கடமைபட்டுள்ளேன்.

On 13/11/2021 at 04:43, goshan_che said:

எல்லாம் சும்மை ஒரு காலத்தில் நம்பி வாயை விட்ட அனுபவப்பாடம்தான்

நீங்களும் வாயைத் திறக்கக் கூடாது.  மீறி  யாராவது வாயைத் திறந்தால், மதம் கொண்டு மூடி விடுவோம். ஆமா...! இது அமுல்படுத்தப்படாத சட்டம்.

11 hours ago, goshan_che said:

மலையாளியாக, ரோவாக, ஒட்டு குழுவாக, ஒட்டாத குழுவாக, முஸ்லிம்மாக, முஸ்லிம் விரோதியாக, தமிழ் தெரிந்த சிங்களவராக, கொழும்பு மேட்டுகுடியாக, “கிழக்கு மாகாணத்தானாக”, சுமந்திரன் செம்பாக,  200 ரூபாய் உபியாக, இப்படி ஒவ்வொரு இடத்திலும் நான் முன்வைக்கும் கருத்தின் அடிப்படையில் இங்கே பலவாறு முத்திரை குத்தபட்டவந்தான் நான்.

கோசானுக்கு மறைக்கத் தெரியாது வெள்ளைமனம்! அப்படியே எல்லாவற்றையும் போட்டுடைத்து விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

இந்த சிவப்பு சால்வைக்காரரை ஜதார்த்தவாதி என்று கூறி பதவிக்கு கொண்டுவர ஆதரவளித்தவர்களுக்கு நடந்ததை கண்முன்னே பார்தத பின்னரும் திருந்தாமல் விட்டால் ஒன்றுமே செய்யமுடியாது. 

உண்மை தான் அப்படி முன்பு நினைத்து பேராசைப்  பட்டு பேராசை பெரு நட்டம் என்பதை பார்தத பின்பும்  தற்போதைய அரசியல்வாதிகள் அதை உணராமல் நடப்பது தமிழரின் துரதிஷ்ரம். 

ரனிலை விட்டிருந்தால் தீர்வு வந்திருக்குமோ?
மேற்கு நாடுகள் யார் வந்திருந்தாலும் புலிகளுக்கு அடிக்கும் படி செய்திருப்பார்கள். 
திரும்ப திரும்ப ஒன்றையே கூறி நாறடிக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடைவெளியில் புலிகளை கொண்டுவந்து பலி கொடுக்க மாட்டோமா என்கிற நப்பாசை!

9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எப்ப பாத்தாலும் ஒரு பழஞ்சீலையை வைச்சுக்கொண்டு எல்லா இடமும் கிழிச்சுக்கொண்டு திரியுறியள் .....

இப்ப ஈழத்தமிழினம்,ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் என்ன செய்யவேணும்? யாரை அணுகி எதை செய்ய வேண்டும்? அதற்கு சரியான தமிழ் அரசியல்வாதி யார் எண்டதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்?

இப்போதுள்ள நிலையில் தமிழரின் உரிமை, அரசியல் தீர்வு விடயத்தில் எந்த திறமையான அரசியல்வாதிகளாலும் ஒரு சிறிய கல்லை கூட அசைக்க முடியாத அளவுக்கு தமிழர் போராட்டம் பின்னோக்கி போயுள்ளது. இப்போதுள்ள அரசியல்வாதிகள் சுயநலத்துடன் தமக்குள் அடிபடுவதை விடுத்து குறைந்தது மக்களின் அன்றாட பிரச்சனைகளையாவது தீர்கக முன்வர வேண்டும். அதை விட இந்த நடப்பு அரசியல்வாதிகளால் எதுவும் செய்யும் வலு இவர்களிடம் இல்லை. 

ஆயுதங்களை காப்பாற்றவேண்டும் என்பதற்காக எமது அரசியல் லட்சியங்களை குழி தோன்றி புதைத்துவிட்டோம். எமது போராட்டம் இருநூறு வருடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அறிவாற்றல் உள்ளவர்கள் கையில் தான் எமது மக்களின் விடுதலை தங்கியுள்ளது என்ற,  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் மகளிர் பொறுப்பாளர் தமிழினியின் கூற்று எவ்வளவு யதார்ததமானது என்பதை காலம் எமக்கு உணரத்தியுள்ளது

இவ்வாறு உண்மையை கூறியதற்காக  வரிசையில் வந்து திட்டுங்க. 😂

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 08:02, tulpen said:

இவ்வாறு உண்மையை கூறியதற்காக  வரிசையில் வந்து திட்டுங்க. 😂

உண்மையை கூறுவது பழஞ்சீலையை கிளிப்பது போன்று இருக்கும்
கூடி இருந்து ஒப்பாரி வைப்பதும் பழம் பெருமை புழுகுவது சுவார்சியமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2021 at 20:57, kalyani said:

ரனிலை விட்டிருந்தால் தீர்வு வந்திருக்குமோ?
மேற்கு நாடுகள் யார் வந்திருந்தாலும் புலிகளுக்கு அடிக்கும் படி செய்திருப்பார்கள். 
திரும்ப திரும்ப ஒன்றையே கூறி நாறடிக்கிறீர்கள்.

குறைந்த பட்சம் அடி புலிகளுக்கு மட்டும் விழ, வன்னியில் மக்கள் மாட்டுப் படாமல் தப்பியிருக்க வாய்ப்பிருந்திருக்கும். இது ரணிலோடு பிரபாகரன் "டூ" போட்டதால் ஒரு இழக்கப் பட்ட நன்மை தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2021 at 07:09, goshan_che said:

முதலில் வேற யாரோ போவதாக இருந்ததாம் - பிறகு திருமதி சந்திரஹாசன் சேர்க்கப்பட்டாராம்.

On 13/11/2021 at 07:36, பெருமாள் said:

மிச்ச இரண்டு பேரையும் யார் தெரிவு செய்தது ? அமெரிக்காவா ? இந்தியாவா ? இல்லை தமிழரசு கட்சியா ? எப்போது தமிழரசு கட்சி தெரிவு செய்தது ?

ஏற்கனவே சொன்னதுதான் இன்னுமொருமுறை ஞாபகப்படுத்துகிறேன்.
எமக்கு இனி தலைவர்கள்(இந்திய Proxy க்கள்) தரப்படுவார்களேயொழிய தலைவன் உருவாவதெல்லாம் தேசியத்தலைவருடன் முடிந்துவிட்டது, எப்போது இந்தியாவில் தொலைபேசியை அணைத்துவிட்டு பாயில் சுருண்டு கிடந்த  தமிழ்தேசிய(!?)  ஊத்தைவாளிகளை உரிமைகளை பெற வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினோமோ அன்று எம்முடைய ஒட்டுமொத்த அரசியல் களமும் Hijack செய்யப்பட்டுவிட்டது. 
இன்று நாம் உரிமைக்காக போராடும் இனமக்கள் அல்ல இந்தியாவின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ள தெற்காசியாவில் இருக்கும் இழக்கத்தக்க வளம் (expendable resource), எமது தேசிய அரசியல் என்பது தமிழ் தேசியத்தை பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு   இந்தியாவின் நலன் பேண செய்யும் நாடு கடந்த அரசியல், நாம் இந்த Proxyக்கள் போவதையும் வருவதையும் செய்யப்போவதையும்  பற்றி அலசுவதே ஒரு நேரவிரயம். தமிழ் தேசிய தியேட்டரில் புதிய படத்தை ஓட்ட ஒப்பரேட்டர் ரீல் மாற்றுகிறார் அம்புட்டுத்தே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அக்னியஷ்த்ரா said:

எமக்கு இனி தலைவர்கள்(இந்திய Proxy க்கள்) தரப்படுவார்களேயொழிய தலைவன் உருவாவதெல்லாம் தேசியத்தலைவருடன் முடிந்துவிட்டது

நம்ம மக்கள் முன்னணி கஜன் & கஜன் இந்தியாவின் புரொக்ஸியாக இல்லையே! அவர்கள் 13+ க்கு மேலால் தீர்வு வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளார்களே!

37 minutes ago, கிருபன் said:

நம்ம மக்கள் முன்னணி கஜன் & கஜன் இந்தியாவின் புரொக்ஸியாக இல்லையே! அவர்கள் 13+ க்கு மேலால் தீர்வு வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளார்களே!

கஜன் & கஜன் கொம்பனி புலம் பெயர்ஸ் பரொக்ஸியாக இருந்தது தெரியும். ஆனால் இப்போதும் அப்படியோ தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நம்ம மக்கள் முன்னணி கஜன் & கஜன் இந்தியாவின் புரொக்ஸியாக இல்லையே! அவர்கள் 13+ க்கு மேலால் தீர்வு வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளார்களே!

அவர்கள்,

இலங்கையுடன் பேச மாட்டார்கள். 

இந்தியாவிடனும் பேசமாட்டார்கள்.

மேற்குடனும் பேச மாட்டார்கள்.

சீனாவுடனும் பேச மாட்டார்கள்.

பாராளுமன்றத்தில் மட்டும் பேசுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் வேண்டி நிற்பது 13 பிளஸ் அல்ல.

1 பிளஸ்.

யாழ் மாவட்டத்தில் ஒரு எம் பி சீட் + கிழக்கு மாகாண மக்களின் தலையில் சம்பல் அரைத்து ஒரு போனஸ் சீட். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நம்ம மக்கள் முன்னணி கஜன் & கஜன் இந்தியாவின் புரொக்ஸியாக இல்லையே! அவர்கள் 13+ க்கு மேலால் தீர்வு வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளார்களே!

அதுதான் அவர்களை, சீனாக்காரனை சந்திக்க, அனுப்பிறது குறித்து தீவிரமாக ஆலோசணை செய்யிறம். 🤨

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 07:02, tulpen said:

இப்போதுள்ள நிலையில் தமிழரின் உரிமை, அரசியல் தீர்வு விடயத்தில் எந்த திறமையான அரசியல்வாதிகளாலும் ஒரு சிறிய கல்லை கூட அசைக்க முடியாத அளவுக்கு தமிழர் போராட்டம் பின்னோக்கி போயுள்ளது. இப்போதுள்ள அரசியல்வாதிகள் சுயநலத்துடன் தமக்குள் அடிபடுவதை விடுத்து குறைந்தது மக்களின் அன்றாட பிரச்சனைகளையாவது தீர்கக முன்வர வேண்டும். அதை விட இந்த நடப்பு அரசியல்வாதிகளால் எதுவும் செய்யும் வலு இவர்களிடம் இல்லை. 

இதன் மறுபக்கமும் அதே நிலையில் உள்ளதை கவனித்தீர்களா?

சிங்களவரும், மேற்கு, இந்தியா விரும்பிய ரணிலை வீட்டுக்கு அனுப்பி, சீனா விரும்பிய கோத்தாவை தேர்ந்தெடுத்து, சிக்கிப் போய் உள்ளது.

பெரும் அருக்கானம் விட்டுக் கொண்டிருந்த, இஸ்லாமியர் அரசியல் வாதிகள் தமது கையறு நிலை உணர்கிறார்கள்.

தம்மை இலங்கை சிங்கள, தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவும், சர்வதேசமும் கண்டுகொள்ளாமல் விட, மனோவுடன்.... கக்கீம் சம்பந்தரை சந்திக்கும் அரசியல் நிலைமை.

ஆக... சகலமும், ஸ்னேக் அன்ட் லடர் விளையாட்டில், சகலருமே, ஸ்னேக்கால் விழுங்கப் பட்டு, மீண்டும் ஆரம்பிக்கும் நிலையில்.

நடந்ததை விடுவோம்.... நடக்கப்போவது குறித்து சிந்திப்போம். 👌

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.