Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளனுக்கு வாழ்த்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பணி சிறக்கவும் பிறருக்கு முன்மாதிரியாகவும் இருக்க உளமார வாழ்த்துகிறேன். 🙏

  • Replies 66
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன்,

மிகவும் சிறப்பான முயற்சி, பணி சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுகளும். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு முட்டை 200 ரூபாயா ??? எனக்கு இந்தக் கணக்குப் புரியவில்லையே சாமானியன்.

அடி  ஆத்தி  இம்புட்டு  வெவகாரமாவா  பயாஸ்கோப்பு  கண்ணாடி  வெச்சு  ஒவ்வொரு  எழுத்தா  கண்ணுக்குள்ள  எண்ணெய்  விட்டு  பாப்பாக  ..🤔

யக்கோவ்  , வயசு    போன  நேரத்தில  கையில  மெல்லிய  நடுக்கம்  ரெண்டு  வாட்டி  பிரஸ்  பண்ணிப்பூடிச்சு  , மன்னிச்சுக்கோ  அக்கா ...

முட்டை  சாதாரணமா  இருவது  ரூவா     தான்  , அக்காவுக்கு  மொத்தமா  எடுத்தால்  குறைக்கச்சொல்லி  ரெகமெண்ட்ஸ்  பண்ணிப்பூடலாம் ...😀

எங்கே,   மகளுடன்  போன  பயணம்  பற்றிய  பதிவிற்கு  பிறகு  இப்பதான்  பார்க்கக்கூடியதாக  இருக்கிறது. கொரோனாப்  பூச்சி  தொல்லைகள்  இல்லை  என்று  நம்புகிறேன்  …

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சாமானியன் said:

தம்பியா 0 என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டீர்கள்.  கை சிலிப் ஆவது பரவாயில்லை. ஆனால் இல்லாத கொம்பனியை எல்லாம் இருப்பதாய்ப் படம்காட்டி காசுவாங்கிய ஆட்கள் உலவும் காலம். அதுதான் கேட்டேன். கொரோனா எல்லாம் சிறு தொல்லை. அதைவிடப் பெரிதெல்லாம் இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் உங்கள் பணி சிறக்க நல் வாழ்த்துகள். சட்டபூர்வமான பதிவை அவசியம் செய்யுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் பணிகளை விரிவுபடுத்தும் போது விமர்சனங்கள் எனும் பெயரில் வரும் சந்தேகங்கள் உங்களுக்கு சோர்வை தந்துவிடும். 

சட்ட ரீதியாக ஆவணங்கள் கையில் வைத்துக் கொண்டு திட்டங்களை விரிவுபடுத்துங்கள். அதுவே உங்களை தொடர்ந்து இயங்க பாதுகாப்பு தரும். 

சின்ன வேண்டுகோள் 😊

எந்த விமர்சனமும் உங்களை சோரவைக்காத மனநிலை வர காலம் எடுக்கும். அந்த உறுதியை உங்களுக்குள் இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

புலர் பலருக்கு ஒளியூட்ட வாழ்த்துகள். 

காணிகள் எடுத்துக் கொடுத்து குடியேற்றங்கள் அல்லது விவசாயம் ஊக்குவிப்பு ஏதாவது திட்டங்கள் இருப்பின் தனிமடலிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

பதிவு செய்வது மிக அவசியம் என்பது புரிந்து கொண்டுள்ளேன் அக்கா. ஆக்கபூர்வமான விமர்சனங்களை உள்வாங்கியும் அபத்தங்களை புறந்தள்ளும் மனநிலையும் கைவரப் பெற்றிருப்பதாக நினைக்கிறேன்.

மீண்டும் மீண்டும் உங்கள் எல்லோருடைய வாழ்த்துகளிற்கும் நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே இவ் வாழ்த்துகளிற்கு உரித்தானவர்கள்.

8 hours ago, ஏராளன் said:

உள்ளூரில் / உள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொண்டு அமைப்பு ஒன்று வெளிநாட்டில் உள்ளவர்களின் நிதியையும் பொருளாதார உதவிகளையும் பெற்றுக் கொள்வது தொடர்பாக சட்ட மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் உள்ளதா தகுந்த வழக்கறிஞர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம். எதிர்காலத்தில் உங்களதும் அமைப்பில் உள்ளவர்களதும் பாதுகாப்பு தொடர்பானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நன்றி அண்ணா உங்கள் கரிசனைக்கு.
சட்டத்தரணியின் ஆலோசனை பெற்று தான் யாப்பு இறுதி செய்யப்படும், பதிவு செய்யும் விண்ணப்பத்தில் வெளிநாட்டு மூலங்கள் என்று கேட்டிருக்கு. இது சம்பந்தமாக மேலதிக விளக்கங்களை அரச உத்தியோகத்தர்களிடம் வினவ இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் இருந்து உதவி விட்டு அங்கு யாரும் வரும் போது,உங்களுக்கோ இல்லை வருபவர்களுக்கோ எந்த விதமான (ச)ட்ட சிக்கல் களும் ஏற்படாதவாறு ஒரு ஒழுங்கு அமைப்பு அனைவருக்கும் வேண்டும் ஏராளன்.✍️👋

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 12:34, குமாரசாமி said:

உதுக்குத்தான் விசயம் தெரிஞ்ச ஆக்கள் வேணுமெண்டுறது :grin:

பகிடி விடுறியள்.... அக்காவும் அத்தாரும் பியர் கடை வைச்சிருந்த ஆட்கள்... கணக்கில புலி...

என்ன... அந்த கள்ளன் டிமிக்கா கொடுத்து போட்டான்.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நன்றி அண்ணா உங்கள் கரிசனைக்கு.
சட்டத்தரணியின் ஆலோசனை பெற்று தான் யாப்பு இறுதி செய்யப்படும், பதிவு செய்யும் விண்ணப்பத்தில் வெளிநாட்டு மூலங்கள் என்று கேட்டிருக்கு. இது சம்பந்தமாக மேலதிக விளக்கங்களை அரச உத்தியோகத்தர்களிடம் வினவ இருக்கின்றோம்.

இது போன்ற விடயங்களில், நீங்கள் செய்யும் வேலைகளில் விடாமுயற்சி, வெளிப்படைத்தனம் இருக்கும் போது, தொடர்ந்து உதவிகள், கிடைக்கும். 

ஒரு சிறு தவறும் உதவிகளை நிறுத்த வைத்து விடும்.

யாழ் இந்து கல்லூரிக்கு ஒரு பேருந்து வாங்க பணம் திரட்டினார்கள் லண்டனில். பணத்தினை கொண்டு சென்றவர், அதனை தனது வியாபார தேவைக்கு வைத்துக் கொண்டு, பேருந்தினை.. மாத தவணை கட்டும் முறையில் எடுத்திருக்கிறார்.

வியாபாரம் நொடிய, அதனை சீஸ் பண்ண வந்து விட்டார்கள். பாடசாலை லண்டனுக்கு அறிவிக்க, பணத்தினை கொண்டு சென்றவர், சுத்து மாத்தினால் மேலதிக உதவி மறுக்கப்பட, நியூயார்க் பழைய மாணவர்கள் பணம் சேர்த்து, கொடுத்தார்கள்.

அவர் இன்னும் அங்கேயே இருக்கிறார்.

ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.

வெளிப்படை தன்மை, தெளிவான கணக்குகள், உதவி விபரங்கள், அரச அதிகாரிகள் அனுமதி... தேவையில்லாத சிக்கல்களை தவிர்ப்பதுடன் உங்களை சேவைகளை விரிவாக்க உதவும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/11/2021 at 22:47, shanthy said:

எந்த விமர்சனமும் உங்களை சோரவைக்காத மனநிலை வர காலம் எடுக்கும். அந்த உறுதியை உங்களுக்குள் இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

பொது வாழ்க்கைக்கு  வந்துவிட்டால்  துரும்பிலும் குற்றம் பிடித்து விமர்சனம் செய்வார்கள்.இது உலகளாவிய நோய் ஒன்று.

செல்வச்சந்நதி அன்னதான மடத்திலை கூட விமர்சனங்கள் எக்கச்சக்கம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

பொது வாழ்க்கைக்கு  வந்துவிட்டால்  துரும்பிலும் குற்றம் பிடித்து விமர்சனம் செய்வார்கள்.இது உலகளாவிய நோய் ஒன்று.

செல்வச்சந்நதி அன்னதான மடத்திலை கூட விமர்சனங்கள் எக்கச்சக்கம்.🤣

தொண்டு சேவை செய்வதாயின், சார்பு அரசியல் பேசாமல் இருப்பது முக்கியமானது. 👍

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2021 at 19:35, நிழலி said:

ஏராளன்,

உள்ளூரில் / உள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொண்டு அமைப்பு ஒன்று வெளிநாட்டில் உள்ளவர்களின் நிதியையும் பொருளாதார உதவிகளையும் பெற்றுக் கொள்வது தொடர்பாக சட்ட மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் உள்ளதா தகுந்த வழக்கறிஞர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம். எதிர்காலத்தில் உங்களதும் அமைப்பில் உள்ளவர்களதும் பாதுகாப்பு தொடர்பானது.

On 19/11/2021 at 23:34, யாயினி said:

வெளியில் இருந்து உதவி விட்டு அங்கு யாரும் வரும் போது,உங்களுக்கோ இல்லை வருபவர்களுக்கோ எந்த விதமான (ச)ட்ட சிக்கல் களும் ஏற்படாதவாறு ஒரு ஒழுங்கு அமைப்பு அனைவருக்கும் வேண்டும் ஏராளன்.✍️👋

சட்டத்தரணியோடு கதைத்த போது வெளிநாட்டில் இருந்து வங்கிகள் ஊடாக சட்டபூர்வமாக அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை. எ.கா Western union, Ria. money laundering பற்றியும் குறிப்பிட்டார்.
உண்டியல் மூலமாக அனுப்புவது பிரச்சனை என்று நினைக்கிறேன்.
வரும் வாரத்தில் சட்டத்தரணியை நிர்வாகிகள் சந்திக்க இருக்கிறோம். மேலதிக விளக்கங்கள் இருந்தால் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்டியல் அல்லது Money Transfer  மூலம் நீங்கள் பதிந்து அனுப்பினாலும் அங்கு அரச வரி திணைக்களத்தினால்
ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 

பிரித்தானியாவிலிருந்து Global Exchange மூலம் அனுப்பினாலும் சிக்கல். ஆனால் நேரடியாக வங்கியினூடாக சிறீலங்கா வங்கிக்கு எவ்வளவு தொகையும் அனுப்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

உண்டியல் அல்லது Money Transfer  மூலம் நீங்கள் பதிந்து அனுப்பினாலும் அங்கு அரச வரி திணைக்களத்தினால்
ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 

பிரித்தானியாவிலிருந்து Global Exchange மூலம் அனுப்பினாலும் சிக்கல். ஆனால் நேரடியாக வங்கியினூடாக சிறீலங்கா வங்கிக்கு எவ்வளவு தொகையும் அனுப்பலாம்.

பிரித்தானியாவில் உண்டியல், அனுமதிக்கப்பட்டிருப்பதன் காரணம் பணம், நாட்டில் தங்கும், நாட்டைவிட்டு செல்வதில்லை.

இலங்கையில்...... நாட்டுக்குள் வராமல், அங்குள்ள ஊழல் பணமே... சுழலும் என்பதால், உண்டியல் அங்கீகாரம் இல்லை.

வங்கி மூலம், பணம் நாட்டினுள் வரும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.