Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி

spacer.png

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர்.  

இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளதுடன்,  22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  

கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து, பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.  

பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது.  38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்.  

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கடந்த மார்ச் மாதம் ஆமைக்கறியை சாப்பிட்ட 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.thaarakam.com/news/838873b7-38c6-4e35-9c6d-bbac600f8dda

  • Replies 67
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சே, நானும் ஏதோ ஹொற் மேற்றர் எண்டு ஓடி வந்தால் ஸப்பை மேட்டர்! இறந்தோருக்கு அனுதாபங்கள்!

(கிருபனுக்கு லொள்ளு கூடிப் போச்சுது!😎)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைக் கறிக்கு நல்லா  மிளகாய் தூள் போட்டு வெந்து வரேக்க லைட்ட உப்பும் மிளகும் போட்டு பிரட்டிச் சாப்பிட்டால் ஆக்கள் சாக மாட்டினம்

இவேல் வேறமாதிரி செய்ஞ்சு சாப்ட்டிருக்கினம் அது food poison ஆகீட்டுது

🐢

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நம்ம மைண்ட் அங்கயே போகுதே….🤣.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க நியுசுல தீய வைக்க.. ஆபிரிக்காவில ஆமைய துன்னு செத்தா எங்களை ஏண்டா படுத்துறீங்க..நானும் ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்…😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வழமையாக பால்ஆமை, உடும்பு, முயல், உக்கிளான், பன்றி , அலுங்கு சாதாரண  இறைச்சி வகைகள் அடிக்கடி சாப்பிடுவோம்.

புழுங்கல் அரிசி சோறு என்றால் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவோம். பச்சை அரிசி ஏனெனில் கொஞ்சம் குறைவு.😆

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா குசா,

நான் நகைச்சுவைக்காக கூறினேன். யாரையும் சீண்டும் நோக்கம் இல்லை.

😀

3 hours ago, வாலி said:

ஆமைக் கறிக்கு நல்லா  மிளகாய் தூள் போட்டு வெந்து வரேக்க லைட்ட உப்பும் மிளகும் போட்டு பிரட்டிச் சாப்பிட்டால் ஆக்கள் சாக மாட்டினம்

இவேல் வேறமாதிரி செய்ஞ்சு சாப்ட்டிருக்கினம் அது food poison ஆகீட்டுது

🐢

அப்ப நம்ம கபாலி நீங்கள் சொன்ன றிசெப்பில சமைச்சத தான் சாப்பிறிருக்காரு. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

ஐயோ நம்ம மைண்ட் அங்கயே போகுதே….🤣.

எங்கை போகுது?
அந்த வரைபடத்தை இங்கு இணைக்க முடியுமா சார்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

நாங்கள் வழமையாக பால்ஆமை, உடும்பு, முயல், உக்கிளான், பன்றி , அலுங்கு சாதாரண  இறைச்சி வகைகள் அடிக்கடி சாப்பிடுவோம்.

புழுங்கல் அரிசி சோறு என்றால் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவோம். பச்சை அரிசி ஏனெனில் கொஞ்சம் குறைவு.😆

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

இது பற்றிய தகவல் தெரியுமா?

@நன்னிச் சோழன்நீங்களும் முடிந்தால் தேடிப்பார்க்கவும்.

சூழலியல் சம்பந்தமாக அவர்கள் எடுத்த பல நல்ல முயற்சிகள் ஆதாரம் இல்லாமல் வரலாற்றில் அழிந்து போவது கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

ஐயா குசா,

நான் நகைச்சுவைக்காக கூறினேன். யாரையும் சீண்டும் நோக்கம் இல்லை.

😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

செமை..👍 ஈழத்தமிழர்கள் 90வீதமானவர்களுக்கு சீமான் சொன்னதன் உண்மை தெரியும்.. மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை.. ஆனா தமிழக மக்கள் பலருக்கு அது தெரியாது.. அதனால் சீமான் அதை சொன்னபோது புரியவில்லை.. கிண்டலடிக்கிறார்கள்.. சீமானும் அதை தமிழக மக்களின் மனநிலையில் இருந்து கவனமாக யோசிச்சு பேசி இருக்கலாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

செமை..👍 ஈழத்தமிழர்கள் 90வீதமானவர்களுக்கு சீமான் சொன்னதன் உண்மை தெரியும்.. மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை.. ஆனா தமிழக மக்கள் பலருக்கு அது தெரியாது.. அதனால் சீமான் அதை சொன்னபோது புரியவில்லை.. கிண்டலடிக்கிறார்கள்.. சீமானும் அதை தமிழக மக்களின் மனநிலையில் இருந்து கவனமாக யோசிச்சு பேசி இருக்கலாம்..

சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்து முன்னேற நினைத்தால் ஆயிரம் வழிகள் உண்டு.

ஈழத்தமிழர் பிரச்சனை வல்லரசுகளுக்கே சவாலான தாய விளையாட்டு பிரச்சனை.ஈழ போலி அரசியல் செய்து மோதுப்பட சீமான் ஒன்றும் முட்டாள் அல்ல.
 
ஓமோ இல்லையோ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஐயா குசா,

நான் நகைச்சுவைக்காக கூறினேன். யாரையும் சீண்டும் நோக்கம் இல்லை.

😀

போனா மயிர்

வந்தா மலை.

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, goshan_che said:

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

இது பற்றிய தகவல் தெரியுமா?

@நன்னிச் சோழன்நீங்களும் முடிந்தால் தேடிப்பார்க்கவும்.

சூழலியல் சம்பந்தமாக அவர்கள் எடுத்த பல நல்ல முயற்சிகள் ஆதாரம் இல்லாமல் வரலாற்றில் அழிந்து போவது கவலைக்குரியது.

அண்ணை, உதுவந்து நாளிதள்கள் மாதயிதழ்களுக்குள்தான் கிடைக்கும். பொது வெளியளில் நான் எங்குமே கண்டதில்லை. தேடியும் கிடைக்கவில்லை. 

பின்னாளிலை ஏதேனும் தேடிப்போகும்போது கிடைத்தான் தெரியப்படுத்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

செமை..👍 ஈழத்தமிழர்கள் 90வீதமானவர்களுக்கு சீமான் சொன்னதன் உண்மை தெரியும்.. மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை.. ஆனா தமிழக மக்கள் பலருக்கு அது தெரியாது.. அதனால் சீமான் அதை சொன்னபோது புரியவில்லை.. கிண்டலடிக்கிறார்கள்.. சீமானும் அதை தமிழக மக்களின் மனநிலையில் இருந்து கவனமாக யோசிச்சு பேசி இருக்கலாம்..

நான் இந்த ஆமை கறி விடயத்தில் அதிகம் மினகெடுவதில்லை.

எமது ஊர் சந்தையில் கோடாலியால் கடலாமையை ரத்தம் ஆறாக வடிய கொத்தி பங்கு போட்டதை கண்டுள்ளேன்.

ஆகவே இலங்கையில் வாழ்ந்த யாரும் ஆமைகறி என்று ஒன்று இல்லவே இல்லை என சொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் புலிகள் தடை செய்திருந்தால் - அதை தாமே மீறி இருப்பார்களா? ((மான், மரையை உணவுக்காக (விற்பனைக்கு அல்ல) கொல்வதை புலிகள் தடை செய்யவில்லை என நினைக்கிறேன்)). ஆனால் புலிகள் கடலாமை பிடிப்பதை, கொல்வதை தடை செய்தார்கள் என என்னால் (இன்னும்) ஆதாரபூர்வமாக நிறுவ முடியவில்லை. 

சரி யுத்த நேரம் உணவுக்கு பஞ்சம் அதனால் மீறினார்கள் என்றே வைத்துகொள்வோம்.

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

மூல வியாதி உள்ளாக்கள் ஆமை இறைச்சி சாப்பிட்டால் நல்லமாம். ஆமை இறைச்சி நல்ல குளிர்மையாம் உடம்புக்கு!😁

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாலி said:

மூல வியாதி உள்ளாக்கள் ஆமை இறைச்சி சாப்பிட்டால் நல்லமாம். ஆமை இறைச்சி நல்ல குளிர்மையாம் உடம்புக்கு!😁

வாலி யாழில் கனக்க ஆமை தேவையாக இருக்கிறதே?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

எமது ஊர் சந்தையில் கோடாலியால் கடலாமையை ரத்தம் ஆறாக வடிய கொத்தி பங்கு போட்டதை கண்டுள்ளேன்.

கடலாமை  சாப்பிட்டால் ஆறுமாதம் கோவில் பக்கம் அனுமதிக்க மாட்டார்கள் என்ற கதையும் உண்டு தலை கேள்விப்படலையா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

மூல வியாதி உள்ளாக்கள் ஆமை இறைச்சி சாப்பிட்டால் நல்லமாம். ஆமை இறைச்சி நல்ல குளிர்மையாம் உடம்புக்கு!😁

🤣…சிலவேளை மேடை பேச்சின் தொனியை பார்த்து விட்டு, ஒரு மருந்தாக செய்து கொடுத்திருப்பார்களோ?🤣.

47 minutes ago, பெருமாள் said:

கடலாமை  சாப்பிட்டால் ஆறுமாதம் கோவில் பக்கம் அனுமதிக்க மாட்டார்கள் என்ற கதையும் உண்டு தலை கேள்விப்படலையா ?

கோவிலுக்கு போறெண்டு போய் நேரா ஐஸ்கிறீம் கடை, பிறகு ஆமி செட், துவக்கு எண்டு திரிஞ்சதால இந்த விடயம் கேள்விபடேல்ல🤣.

ஆனால் சாப்பிடுற ஆக்களுக்கு தோல் தடிக்கும், மருந்து ஊசியும் ஏறாதாம் எண்டு கேள்வி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

வாலி யாழில் கனக்க ஆமை தேவையாக இருக்கிறதே?

ஆமா!  ஆபிரிக்கன் ஆமையை இறக்குதி செய்யத்தான் வேணும்😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

உண்மையாகவே, தெரியாமல் கேட்கிறீர்கள் என்பதை நம்பி.....

ஈழமக்கள், பரிசில், வத்தைகளில், கட்டுமரங்களில், படகுகளில் பயணிக்கும் அளவுக்கு, பெரிய குளங்கள், ஏரிகள், ஆறுகள், இல்லையே.

அங்கே.... குக்கிராமங்கள் இல்லை. நகர் சார்ந்த, கிராமப்புறமே உள்ளது.

யுத்தகாலத்தில், கிளாலி, அராலி ஊடாக படகுப்பயணம் இருந்தது.

ரொபிடோ என்றபெயரில், தனி ஒருவர், ஒத்தைக் கரும்புலி பயணிக்கும், முதலில் நிஜ ஆமை ஓட்டில் ஒரு குறியீடாக ஆரம்பித்து பின்னர், வேறு உலோகத்திலும் வந்து, சிங்களத்தை, கடற்படையை கதிகலங்க வைத்ததாக, இது குறித்த டிபிஎஸ் ஜெயராஜ் கட்டுரை வாசித்துள்ளேன்.

புலிகளின் ராணுவ தளபாட, தொழிற்பட்டறைக்கு வந்த சீமானுக்கு, அங்கே, குறியீடாக, இருந்த ஆமையோட்டை காட்டியே விளக்கமளிக்கப்பட்டதாக அறிகிறேன்.

நன்னிச்சோழன் இது குறித்து கருத்து சொல்லுவார் என நிணைக்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அந்த டி பி எஸ் ஜெயராஜ் கட்டுரையை இணைக்க முடியுமா?

நான் அறிந்தவரையில் புலிகள் ஆமை போன்ற தோற்றத்தை ஒத்த ஒரு படகை வடிவமைத்தார்களே ஒழிய (modeled on a turtle shell) ஆமை ஓட்டையே கறியை சாப்பிட்டுவிட்டு கவிட்டு பாவிக்கவில்லை.

கடற்புலிகள் பற்றிய @நன்னிச் சோழன்யின் கட்டுரையிலும் இந்த தகவல் இடம்பெறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நானும் கவுட்டு பாவித்தாக சொல்லவில்லையே..... 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஈழமக்கள், பரிசில், வத்தைகளில், கட்டுமரங்களில், படகுகளில் பயணிக்கும் அளவுக்கு, பெரிய குளங்கள், ஏரிகள், ஆறுகள், இல்லையே.

இருக்கிறது. வன்னியில் குளங்கள், யாழில் கடல்நீரேரி, மட்டில் வாவி - எமது காலத்தில் எல்லாம் fibreglass boat ஆகி விட்டது. முன்னர் வத்தை, பரிசல், கட்டுமரம்தான் - நீரின் தன்மையை பொறுத்து.

4 hours ago, Nathamuni said:

ரொபிடோ என்றபெயரில், தனி ஒருவர், ஒத்தைக் கரும்புலி பயணிக்கும், முதலில் நிஜ ஆமை ஓட்டில் ஒரு குறியீடாக ஆரம்பித்து பின்னர்,

ஆமை ஓடு மிதக்குமா?

ஒத்தை கரும்புலி ஆமை ஓட்டில் ஏறி, அலைகடலாடும் இந்து மா சமுத்துரத்தில் நேவி கப்பலை அணுகினாரா?

4 hours ago, Nathamuni said:

புலிகளின் ராணுவ தளபாட, தொழிற்பட்டறைக்கு வந்த சீமானுக்கு, அங்கே, குறியீடாக, இருந்த ஆமையோட்டை காட்டியே விளக்கமளிக்கப்பட்டதாக அறிகிறேன்.

ஆனால் சீமான் தான் ஆமை ஓட்டில் பயணித்ததை கண்ணால் கண்டதாக அல்லவா அந்த பேச்சில் கூறினார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.