Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசியாவின் ராணியை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published by J Anojan on 2022-01-05 19:55:27

ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000  கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

This Giant 683-Pound Blue Sapphire Could Be Worth Over $100 Million – Robb  Report

இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட  மிகப் பெரிய இரத்தினக்கல்லான  'ஆசியாவின் ராணி' எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 2,000  கோடி  ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று முன்வந்துள்ளது.

அந்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை. டுபாய் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலையை அறிவித்திருந்தது. 

அதனை விடவும் அதிக விலை எதிர்பார்ப்பில் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்திலுள்ள சுரங்கமொன்றிலிருந்து 310 கிலோகிராம் எடையுடைய 'கொரண்டம்' வகை மாணிக்கக்கல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் ராணியை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை மறுப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட அரசிற்கு தற்துணிவு அதிகம்!

டுபாய் இன்னும் இலங்கைக்குக் கடன் குடுக்கவில்லை என்று நினைக்கிறேன் 😂 அதனல பயப்படத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, இணையவன் said:

டுபாய் இன்னும் இலங்கைக்குக் கடன் குடுக்கவில்லை என்று நினைக்கிறேன் 😂 அதனல பயப்படத் தேவையில்லை.

இந்த ராணியை,  வாங்கத்தானோ…மற்ற நாடுகள் எல்லாம்,
நீயா… நானா… என்று, போட்டி போட்டுக் கொண்டு கடன் கொடுக்கிறார்கள் போலுள்ளது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

இந்த ராணியை,  வாங்கத்தானோ…மற்ற நாடுகள் எல்லாம்,
நீயா… நானா… என்று, போட்டி போட்டுக் கொண்டு கடன் கொடுக்கிறார்கள் போலுள்ளது. 😁

3 பில்லியனுக்கு 30 ராணியை வாங்கலாமே?🤣

ஒரு அந்தபுரமே வைக்கலாம் 😜

30x👸

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

3 பில்லியனுக்கு 30 ராணியை வாங்கலாமே?🤣

ஒரு அந்தபுரமே வைக்கலாம் 😜

30x👸

கடைசியாய்…. அந்தப்புரத்து, அத்திவாரத்துக்குத்தான்…
இந்த ராணிக்கல்லு, உதவப் போகுது போலை கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

3 பில்லியனுக்கு 30 ராணியை வாங்கலாமே?🤣

சில்லறை காசு வைச்சிருக்கிற எனக்கே போற வாற இடமெல்லாம் ராணியள் எண்டேக்கை.....😎

3 பில்லியன் எண்டால்....? 🥰 😍 😍 🥰 

  • கருத்துக்கள உறவுகள்

அந்நியருக்கு நாட்டையும் நாட்டின் சொத்தையும் விற்கத் தயங்காத சிங்களம்..தமிழர்களுக்கு ஒரு துண்டு நிலத்தை தானும் கொடுக்க தயாராக இல்லை என்றால்.. சிங்கள அரசுகளின் எண்ணத்தில் எவ்வளவு மோசமான தமிழர் எதிர்ப்பு வக்கிரம் அடங்கி இருக்கென்று பார்த்துக் கொள்ளோனும். 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மதிப்பீடு  செய்பவர்களை இந்தக்கல்லை இன்னமும் பரிசோதிக்க விடவில்லை கல்லுக்கு நீல வெளிச்சம் கொடுத்து வைத்து இருக்கினம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, பெருமாள் said:

சர்வதேச மதிப்பீடு  செய்பவர்களை இந்தக்கல்லை இன்னமும் பரிசோதிக்க விடவில்லை கல்லுக்கு நீல வெளிச்சம் கொடுத்து வைத்து இருக்கினம் .

யூ  மீன் புத்தர்ரை பல்லு மாதிரி....😁

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகள். அப்பா வயது போன காலத்தில்  அவரை பராமரிக்க யாரும் முன்வரவில்லை. ஆனால் அப்பா ஒரு பையில் புளியங்கொட்டைகளை போட்டு, தலையணைக்கு கீழ் வைத்து, பிள்ளைகள் காணும்படி அதை எடுத்து மீண்டும் தலையணைக்கு கீழ் வைத்து விட்டு, அதன்மேல் படுத்துக்கொள்வாராம். இதைப்பார்த்து இரண்டு பிள்ளைகளும் நீயா? நானா? என்று போட்டிப்போட்டு கந்தையை பராமரித்தார்களாம். இறுதியில் அப்பாவும் இறக்க, இரு பிள்ளைகளும் அப்பாவின் தலையணைக்கு கீழ் இருந்த பையை ஆவலோடு பிரித்து பார்த்தபோது, புளியங்கொட்டைகளை கண்டு தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று வருந்தியதோடு, தங்கள் கடமையை தாங்கள் செய்யாமல் விட்டதாலேயே தந்தை இப்படியான தந்திரத்தை கையாண்டார் என்பதையும் நினைத்து வெட்கப்பட்டார்களாம். இது ஒரு வேடிக்கையான கதை. இவர்கள் விலையை அதிகம் எதிர்பார்த்தால் இதையும் இழக்க வேண்டியேற்படலாம். யாரும் திரும்பிப் பார்க்காத நிலை வரலாம்.  விற்பதற்கு தேயிலையையும் மக்களையும் தவிர எதுவுமே  இல்லை நாட்டில் இல்லை இப்போ.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

அந்நியருக்கு நாட்டையும் நாட்டின் சொத்தையும் விற்கத் தயங்காத சிங்களம்..தமிழர்களுக்கு ஒரு துண்டு நிலத்தை தானும் கொடுக்க தயாராக இல்லை என்றால்.. சிங்கள அரசுகளின் எண்ணத்தில் எவ்வளவு மோசமான தமிழர் எதிர்ப்பு வக்கிரம் அடங்கி இருக்கென்று பார்த்துக் கொள்ளோனும். 

இது வக்கிரமல்ல, வரலாற்றுரீதியாக சோழ தமிழர்கள் சிங்களவருக்கு செய்த அக்கிரமத்தின் விளைவு.

  • கருத்துக்கள உறவுகள்

510 கிலோ ஆக இருந்த இந்த இரத்தினக்கொத்து இப்போது 310 கிலோ ஆகிவிட்டதா? நாள் ஆக ஆக சிறிதாகிக் கொண்டே போய் இறுதியில் இரத்தினத்தை யாராவது பார்த்தீங்களா என்று விசாரித்தாலும் ஆச்சரியமில்லை.

https://www.bbc.com/news/world-asia-57981046

  • கருத்துக்கள உறவுகள்

உப்புக்கல்லாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vanangaamudi said:

510 கிலோ ஆக இருந்த இந்த இரத்தினக்கொத்து இப்போது 310 கிலோ ஆகிவிட்டதா? நாள் ஆக ஆக சிறிதாகிக் கொண்டே போய் இறுதியில் இரத்தினத்தை யாராவது பார்த்தீங்களா என்று விசாரித்தாலும் ஆச்சரியமில்லை.

https://www.bbc.com/news/world-asia-57981046

மகிந்த சகோதரர்கள்…. இரத்தினக் கல்லை, சுரண்டி… விற்றிருப்பார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சில்லறை காசு வைச்சிருக்கிற எனக்கே போற வாற இடமெல்லாம் ராணியள் எண்டேக்கை.....😎

3 பில்லியன் எண்டால்....? 🥰 😍 😍 🥰 

நம்பீட்டம் நீங்கள் சில்லறைக் காசு தான் வைச்சிருக்கிறியள்🤭

கவனம் Finanzamt வீடுதேடி வரப்போகினம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

நம்பீட்டம் நீங்கள் சில்லறைக் காசு தான் வைச்சிருக்கிறியள்🤭

கவனம் Finanzamt வீடுதேடி வரப்போகினம்🤣

சில்லறைக் காசுக்கா? ராணிகளுக்கா?😆

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

ஒரு அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகள். அப்பா வயது போன காலத்தில்  அவரை பராமரிக்க யாரும் முன்வரவில்லை. ஆனால் அப்பா ஒரு பையில் புளியங்கொட்டைகளை போட்டு, தலையணைக்கு கீழ் வைத்து, பிள்ளைகள் காணும்படி அதை எடுத்து மீண்டும் தலையணைக்கு கீழ் வைத்து விட்டு, அதன்மேல் படுத்துக்கொள்வாராம். இதைப்பார்த்து இரண்டு பிள்ளைகளும் நீயா? நானா? என்று போட்டிப்போட்டு கந்தையை பராமரித்தார்களாம். இறுதியில் அப்பாவும் இறக்க, இரு பிள்ளைகளும் அப்பாவின் தலையணைக்கு கீழ் இருந்த பையை ஆவலோடு பிரித்து பார்த்தபோது, புளியங்கொட்டைகளை கண்டு தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று வருந்தியதோடு, தங்கள் கடமையை தாங்கள் செய்யாமல் விட்டதாலேயே தந்தை இப்படியான தந்திரத்தை கையாண்டார் என்பதையும் நினைத்து வெட்கப்பட்டார்களாம். இது ஒரு வேடிக்கையான கதை. இவர்கள் விலையை அதிகம் எதிர்பார்த்தால் இதையும் இழக்க வேண்டியேற்படலாம். யாரும் திரும்பிப் பார்க்காத நிலை வரலாம்.  விற்பதற்கு தேயிலையையும் மக்களையும் தவிர எதுவுமே  இல்லை நாட்டில் இல்லை இப்போ.

சர்வதேச நிறுவனங்கள் இன்னும் விலைமதிப்பற்ற கல்லுக்கு சான்றளிக்கவில்லை ஏன் என்பது புதிராக உள்ளது .

13 hours ago, கற்பகதரு said:

இது வக்கிரமல்ல, வரலாற்றுரீதியாக சோழ தமிழர்கள் சிங்களவருக்கு செய்த அக்கிரமத்தின் விளைவு.

அப்படி சோழர்கள் சிங்களவருக்கு செய்தவற்றை  சொல்லிடுங்க எனக்கும் வரலாறு ரொம்ப பிடிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த சகோதரர்கள்…. இரத்தினக் கல்லை, சுரண்டி… விற்றிருப்பார்கள். 😂

உண்மையாகவே இது விலை மதிப்பிட முடியாத அளவு விலை உயர்ந்த ராணியாக இருந்திருந்தால்; ராஜபக்ஸ குடும்பம் எப்பவோ தங்கள் அந்தப்புரத்தில் சேர்த்திருப்பார்கள், ஒருவேளை ராணியை மாற்றி ராணியின் தோழியை  வைத்து விட்டார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, shanthy said:

கவனம் Finanzamt வீடுதேடி வரப்போகினம்🤣

வாற Finanzamt   என்ரை நிலமையை பாத்திட்டு  தங்களாலை முடிஞ்ச சில்லறையை தட்டுலை போட்டுட்டுத்தான் போவினம்...😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

சில்லறைக் காசுக்கா? ராணிகளுக்கா?😆

குமாரசாமி தான் பதில் சொல்ல வேண்டும்.😊

6 hours ago, குமாரசாமி said:

வாற Finanzamt   என்ரை நிலமையை பாத்திட்டு  தங்களாலை முடிஞ்ச சில்லறையை தட்டுலை போட்டுட்டுத்தான் போவினம்...😁

வாற அலுவரரைப் பொறுத்தது. எதுக்கும் வீட்டுப் பக்கம் பூசணிக்காய் வெட்டி வையுங்கோ.😊

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

அப்படி சோழர்கள் சிங்களவருக்கு செய்தவற்றை  சொல்லிடுங்க எனக்கும் வரலாறு ரொம்ப பிடிக்கும் 

பிடித்திருந்தால் படித்திருப்பீர்களே? 😇

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

பிடித்திருந்தால் படித்திருப்பீர்களே? 😇

எனக்கு தெரிந்து ராஜராஜ சோழன் செய்த பிழை விகாரைகளுக்கு மானியமும் குடுத்து பிக்குகளை வளர்த்து விட்டதும் தான்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

பிடித்திருந்தால் படித்திருப்பீர்களே? 😇

உங்கடை பார்வையில் எப்படி என்பதை அறிய ஆவல் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, shanthy said:

வாற அலுவரரைப் பொறுத்தது. எதுக்கும் வீட்டுப் பக்கம் பூசணிக்காய் வெட்டி வையுங்கோ.😊

வாற அலுவலர் வந்து என்னத்தை புடுங்குறது?......நான் ஜேர்மனிக்கு வந்தநாள் தொடக்கம்  சோசல் வாசகன் எண்டது பரமரகசியம் கண்டியளோ😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.