Jump to content

கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: வன்முறை தீவிரமானதால் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்ட அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை இரு தரப்பினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இந்த வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் வெடித்துள்ளன. இருப்பினும் இந்த வழக்கில் இன்று விசாரணை முடிவடையாததால் புதன்கிழமையும் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கில் தர்க்கம் மற்றும் சட்டத்தின்படி முடிவெடுப்போம் என்று நீதிமன்றம் கூறியது. அந்த முடிவில் உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்தாது என்றும் நமக்கு பகவத் கீதை என்பது அரசியலமைப்பு சட்டமே என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித், கடலோர பகுதிகளில் இருந்து மாநிலத்தின் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு வன்முறை பரவியதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ``அமைதியை பேண வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

சீருடை தொடர்பான அரசாணையை எதிர்த்து மனுதாரர்களின் வாதங்களை கேட்கும் வேளையில், நீதிமன்றத்துக்கு வெளியே வன்முறை நடப்பது குறித்து நீதிபதி கிருஷ்ணா தீட்சித் கவலை தெரிவித்தார்.

மோதலாக மாறிய ஹிஜாப் வன்முறை

பிப்ரவரி 8ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில், சில கல்லூரிகளில் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக தீவிரமானது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பு ஆதரவாளர்களும் பரஸ்பரம் கல் வீச்சு மற்றும் முழக்கங்களை எழுப்பினர். சிவமோகா மற்றும் பன்னஹட்டியில் கல் வீச்சு சம்பவங்கள் கடுமையாக இருந்தன.

ஒரு காணொளியில் மாணவி ஒருவரின் பெற்றோரும் கற்களை வீசுவதை பார்க்க முடிந்தது.

இதேவேளை பன்னஹட்டியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் பிபிசி இந்தியிடம் தெரிவித்தனர்.உடுப்பி மாவட்டத்தில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியில் மாணவர்கள் திரண்டு ஹிஜாப் அணிந்தபடி பள்ளிக்குள் நுழைந்தனர். அங்கு ஏற்கெனவே சில மாணவிகள் கல்லூரிக்கு வந்திருந்தனர்.

அப்போது மாணவர்கள் தரப்பு காவி தலைப்பாகை மற்றும் சால்வை அணிந்து காணப்பட்டனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் கல்வி நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை.

உடுப்பியிலும், பன்னஹட்டியிலும் மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலப்பிரயோகம் செய்து காவல்துறையினர் கலைத்தனர்.

ஷிவமோகாவில் பள்ளி வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றி விட்டு காவி நிற கொடியை ஒரு பிரிவு மாணவர் போராட்டக்குழு ஏற்றியது. பிறகு காவல்துறையினர் தலையிட்டு அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.முன்னதாக, ஹிஜாப் அணிந்து வந்த மாணவி நம்மிடையே கூறுகையில், "ஆண்டு முழுவதும் ஹிஜாப் அணிந்துதான் பள்ளி, கல்லூரிக்கு வர அனுமதிக்கப்பட்டோம். கல்லூரியில் பெண்கள் பகுதியில் கூட ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று திடீரென கூறப்பட்டது.அதே நேரத்தில், காவி சால்வை அணிந்த ஒரு பெண் கன்னட தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "எங்களுக்கு ஒரே சீரான ஆடை வேண்டும். நாங்கள் இதற்கு முன் காவி சால்வை அணிந்து வந்ததில்லை," என்று கூறினார்.

பள்ளி வளாக அளவில் நடைபெற்ற இந்த போராட்டம் இப்போது கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் இருந்து மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் நகரங்களில் வன்முறையாக விரிவடைந்தது.

இந்த விவகாரத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தால் காவி நிற ஆடையில் வருவோம் என மற்றொரு தரப்பும் போராட்டத்தில் குதித்துள்ளது.

தாவணகெரேவில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஷிவமோகாவில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலோர நகரான உடுப்பி மற்றும் குந்தாபுராவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் தொடங்கிய கல் வீச்சு சம்பவங்களே, வடக்கு கர்நாடகாவின் பாகல்கோட்டில் உள்ள பன்னஹட்டிக்கு பரவ காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் ஷிவமோகாவில் இரண்டு கல்லூரிகளில் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. அங்கு கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டது.

தாவணகெரேவில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி வாகனங்களுக்கு தீவைக்க முயன்றதைத்தொடர்ந்து இந்த வன்முறை தீவிரமானது.

 
ஹிஜாப் சர்ச்சை

பட மூலாதாரம்,UMESH MARPALLY/BBC

 
படக்குறிப்பு,

பள்ளி ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஹிஜாப் அணிந்த மாணவிகள்

நிலைமை கட்டுக்குள் உள்ளது: காவல்துறை

இந்த நிலையில், ஹிஜாப் விவகாரத்தால் வன்முறை ஏற்பட்ட பல மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கர்நாடக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் பிரதாப் ரெட்டி பிபிசி இந்தியிடம் கூறுகையில், சம்பந்தப்பட்ட கல்லூரியில் முதலில் மாணவர்கள் கோஷம் எழுப்பினர், அதன் முதல்வர் டாக்டர் தேவதாஸ் பட் உயர் நீதிமன்ற உத்தரவு வரும் வரை கல்லூரியை மூடுவதாக அறிவித்தார். அதன் பிறகு வெளியே வந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சிறிய அளவிலான சம்பவங்கள் நடந்தாலும் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது," என்று தெரிவித்தார்.இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தாலும், அதற்கு முன்பாகவே கர்நாடக அரசு பல்கலைக்கழக முன் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிவதை கட்டாயமாக்கும் புதிய உத்தரவை சனிக்கிழமை மாநில கல்வித்துறை பிறப்பித்தது.அதன்படி மாணவ, மாணவிகளின் சீருடை எப்படி இருக்கும் என்பதை, அரசு கல்வி நிறுவனங்களின் கல்லுாரி வளர்ச்சிக் குழுக்கள் முடிவு செய்யலாம். கல்லூரிகளில் சீருடை தேவையா இல்லையா என்பதை தனியார் நிறுவனங்கள் முடிவு செய்யலாம்.

எப்படி தொடங்கியது சர்ச்சை?

சமீபத்தில், உடுப்பியில் உள்ள ஒரு முன் பல்கலைக்கழக அரசு கல்லூரியில் சுமார் அரை டஜன் மாணவிகள் முகத்தை மறைக்கும் வகையிலான ஹிஜாபை அகற்ற மறுத்ததால் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இரண்டாம் ஆண்டு படித்த அந்த மாணவிகள் ஹிஜாபைக் கழற்றிய பிறகே வகுப்பில் அமர வேண்டும் என்று கல்வி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தனர்.

அந்த மாணவிகளின் பேச்சை கேட்காததால், அவர்கள் பள்ளிக்குள்ளேயே வகுப்பறைகளுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பது, பள்ளி வளாகத்தில் அமர்ந்தபடி அவர்கள் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். சிலர் தனியார் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்தனர்.

இந்த நிலையில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் காவி சால்வை அணிந்து வந்ததால் இந்த விவகாரம் தீவிரமானது.

இதையடுத்து மாணவிகளில் சிலர் காவி நிற தாவனியும் மாணவர்கள் காவி துண்டை போட்டுக் கொண்டும் தனியார் கல்லூரி வளாகத்தில் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக வலதுசாரி மாணவர்கள் குழுக்கள் களத்தில் குதித்தன. ஹிஜாப் அணிந்த மாணவர்களுக்கு ஆதரவாக சிறுபான்மையினர் நல அரசியல் இயக்கங்கள் களமிறங்கின. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் மத ரீதியிலான பிரச்னையாக தீவிரம் அடைந்திருக்கிறது.

இத்தகைய சூழலில்தான் ஹிஜாப் அணிவதை நிறுத்தக் கோரி சில மாணவர்கள் மற்றும் மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஹிஜாப் அணிவது அவர்களின் அரசியலமைப்பு உரிமை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இன்றைய விசாரணை நிறைவு பெறாததால் வழக்கு பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: வன்முறை தீவிரமானதால் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்ட அரசு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புடின் அணுகுண்டு உக்கிரேனுக்கு போடுவேன் என்று உலக அழிவுக்கு சன்னதம் ஆடுகிறார் இதுகள் உடுப்புக்கு கொள்ளுப்படுதுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜாப் சர்ச்சை: இந்திய முஸ்லிம் மாணவிகளின் உரிமையை தடுக்காதீர்கள் - மலாலா

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அவர் இன்று ஒரு இடுகையை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "படிப்புகளுக்கும் ஹிஜாபுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மை கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. குறைவாகவோ, அதிகமாகவோ - தங்களுடைய ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.

ஹிஜாப் சர்ச்சை: "இந்திய முஸ்லிம் பெண்களின் உரிமைகளை தடுக்காதீர்கள்" - மலாலா - தமிழில் செய்திகள் (bbc.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான விடயம்.

இந்தியா உடைவதற்கான இன்னொரு படிக்கல். 

இந்தியாவின் துரோகத்திற்குரிய பலனை இப்படித்தான் அறுவடை செய்யும். 

❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை பெரிதாக வரும் போல் தெரிகின்றது. மதவாதத்தையும் இனவாதத்தையும் வைத்து வயிறு வளர்க்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இங்கு புடின் அணுகுண்டு உக்கிரேனுக்கு போடுவேன் என்று உலக அழிவுக்கு சன்னதம் ஆடுகிறார் இதுகள் உடுப்புக்கு கொள்ளுப்படுதுகள் .

இரண்டு இடங்களிலும் அழிவுகள் வந்தால் சந்தோசமே.

1 hour ago, Kapithan said:

மிகவும் மகிழ்ச்சியான விடயம்.

இந்தியா உடைவதற்கான இன்னொரு படிகல். 

இந்தியாவின் துரோகத்திற்குரிய பலனை இப்படித்தான் அறுவடை செய்யும். 

❤️

அந்தப் பொன்னான நாளைக் காண ஆவலாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஹிஜாப் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்க"- அப்படி இல்லைனா நாங்களும் ஹிஜாப் போட வேண்டி வரும்.....

 

Link to comment
Share on other sites

ஹிஜாப்பிற்கு எதிராக தாம் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்று காட்ட காவி சால்வையை அணிந்தவர்கள், பூணூலை அணிந்து வந்திருக்க வேண்டும்... அப்ப தெரியும் பா.ஜ.க எனும் பார்ப்பன இந்துத்துவா கட்சியின் உண்மை முகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

ஹிஜாப்பிற்கு எதிராக தாம் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்று காட்ட காவி சால்வையை அணிந்தவர்கள், பூணூலை அணிந்து வந்திருக்க வேண்டும்... அப்ப தெரியும் பா.ஜ.க எனும் பார்ப்பன இந்துத்துவா கட்சியின் உண்மை முகம்.

கனேடிய Quebec மாகாணம் அரச (?) பொது நிறுவனங்களின் வேலைத் தளங்களில் மதச் சின்னங்களைத் தடை செய்தது எவ்வளவு தூர நோக்கான விடயம். 

மேற்கு  வேகமாக முன்னேறுவதற்கு பின்னாலுள்ள சிந்தனை முறை ஆச்சரியமளிக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஹிஜாப்பிற்கு எதிராக தாம் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்று காட்ட காவி சால்வையை அணிந்தவர்கள், பூணூலை அணிந்து வந்திருக்க வேண்டும்... அப்ப தெரியும் பா.ஜ.க எனும் பார்ப்பன இந்துத்துவா கட்சியின் உண்மை முகம்.

கிஜாப் அணிவதற்கு..எமது ஆதரவை எப்படித்தான் ..குத்தி முறிந்து கொடுத்தாலும்...முசுலிமை திருத்த முடியாது...இலங்கை இந்தியாவிலும்  சரி ....வாலை நிமிர்த்த முடியாது...உதாரணத்திற்கு..ரிசாட் உட்பட்டோரின் வழக்கில்  ஆஜாரானது நம்ம இனம்... இந்தியாவில் இப்ப நடக்கிற வழக்கில்  ஐயர்...வென்று முடிய அல்லாதான் வென்றவர் என்பர்...எம்மை பொய்யர் என்பர்...இலங்கையில் இவர்களின் பாடப்புத்தகத்தையே வாங்கி கிழித்து,,மீள அடித்துக் குடுபடுகிறது...அதற்கு மூச்சுவிட்டார்களா ..ஆர்ப்பாட்டம் செய்தார்களா...இல்லைய்யே...ஆக ஒரு இந்துப்பாடசாலையில் போய் நீட்டுச்சட்டை போடுவதற்கு மட்டும் ஆர்ப்பாட்டம்.எமது பெண்களைமட்டும் வேசித்தனமாக உடமு காட்டுகிறர்கள் என்று எங்கும் ஏச்சு...புருசன் 7 பெண்களை கட்டுவதற்கு ..ஓம்...கட்டின புருசனை மீள காட்டுவதற்கு பள்ளிவாசலில் றூம் போட்டுகுடுப்பது....அது வேசித்தனம்..இல்லை....தன்னினம் பாடசாலைக்கு தாடியுடன் போகக்கூடாது...இதுசட்டமாம்...இந்துக்கல்லுரிக்கு மட்டும் வெருளி உடை வேணுமாம்....இது என்ன நியாயம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


spacer.png

ஒரு ஹிஜாப் அணிந்தவளின் பாடல்
——————-மனுஷ்ய புத்திரன் கவிதை: ❤️


முகத்திரை அணிவதும் முகத்திரை விலக்குவதும்
என் முகத்தில் என் கைகள் மட்டுமே செய்யட்டும்

முகத்திரையை வற்புறுத்தி 
என் முகத்தில் திணித்தபோது
முகத்திரையை அல்ல
அந்த வற்புறுத்தலையே  நான் வெறுத்தேன்
அதனாலேயே நான் அதை
அணியாமலும் இருந்திருக்கிறேன்
ஆயினும் எனக்கு 
ஒரு  நீண்ட கடந்த காலம் இருக்கிறது
அது பல நூறு ஆண்டுகள் 
நினைவுகளைக்கொண்டது
நான் என்னை ஒரு பாரசீகத்து பேரழகியாக
நினைத்துக் கொண்ட நாளில்
இந்த முகத்திரையும் முக்காடும் 
பொருத்தமான ஆடையாக இருந்தது

பல்லாயிரம் அண்டங்களை ஆளும்
ஒரு இறைவனை முழங்காலிட்டு வணங்கும்போது
இந்த முக்காடு என் பிரார்த்தனையின் 
அடையாளமாக இருந்தது

நான் என்னை ஒரு முழு நிலவாக உணர்ந்த நாளில்
என்னை ஒரு கட்டற்ற காற்றாக அறிந்த நாளில்
நான் முக்காடும் முகத்திரையும் 
இல்லாமலும் இருந்திருக்கிறேன்

எனக்கு போவதற்கும் திரும்புவதற்கு
எல்லாப் பாதைகளும் திறந்திருக்க வேண்டும் என
நான் உறுதியாக நம்புகிறேன்

அவர்கள் சொல்கிறார்கள்
'முக்காடை அணியாதே
முகத்திரையை அணியாதே' என்று
அதற்காக என்னை 
நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்துகிறார்கள்
வகுப்பறைக்குச் செல்ல விடாமல்
படிக்கட்டுகளிலேயே உட்கார வைக்கிறார்கள்
இதுவரை அவ்வளவு அவசியமாக இல்லாத முக்காடு
இப்போது எனக்கு மிக மிக அவசியமாகி விட்டது
என் முகத்திரையையோ முக்காடையோ
ஒருவர் பலவந்தமாகப் பிடுங்குவது
அது என் மேலாடையை பிடுங்குவது போன்றதுதான்
அதை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்துவிடமாட்டேன்
இதற்கு எதிராக நான் கூச்சலிடுவேன்

நாங்கள் ஏன் அடையாளமற்றவர்களாக இருக்க வேண்டும்?
பொதுப்பண்பாடு என்ற முகமற்ற சாக்கடைக்குள்
நாங்கள் ஏன் குதிக்க வேண்டும்? 
அவர்களுக்கு ஒரு பெயர் இருப்பது போல
எனக்கும் ஒரு பெயர் இருக்கிறது
அவர்களுக்கு ஒரு பண்பாடு இருப்பது போல
எனக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது
அவர்கள் அதை எங்கும் சுமந்தலைவது போல
நானும் என் அடையாளத்தை சுமந்தலைவேன்

எதை அடிமைத்தனம் என்றார்களோ
அதுவே ஒரு போர்க்கொடியாகும் என்பதைத்தான்
வரலாறு திரும்பத் திரும்பக் காட்டுகிறது
நிறத்தால் இழிவுபடுத்தப்பட்டவர்கள்
அந்த நிறத்தைத்தான் தங்கள் கலகக் குரலாக்கினார்கள்
சாதியால் நசுக்கப்பட்டவர்கள் 
தங்களை அவமதிக்கும் பெயர்களையே
தங்கள் எதிர்க்குரலாக்கினார்கள்
எல்லாம் ஏற்கனவே வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது
துருக்கியில் முகத்திரை வேண்டாம் என்று சொன்ன
அதே பெண்கள்
அமெரிக்கர்கள் முகத்திரையை தடை செய்த போது
முகத்திரை அணிவதை ஒரு இயக்கமாக்கினார்கள்

முகத்திரையும் முக்காடும்
மெல்லிய மஸ்லின் துணியால் நெய்யப்படுகின்றன
அவை தலையிலும் முகத்திலும் இருக்கும்போது
நான் மிகவும் அந்தரங்கமாக உணர்கிறேன்
ஒரு பிரியமான கை அந்த முகத்திரையை விலக்கும்போது
என் முகம் மலர்ந்து விடுகிறது

ஒரு கிருமி உலகத்தையே 
முகத்திரை அணிய வைக்கும்போது
இன்னொரு கிருமி பலவந்தமாக
என் முகத்திரையை விலக்க முற்படுகிறது

எத்தகைய
விசித்திரமான காலம் இது?

6.2.2022
காலை 9.23


OOOO


ஒரு மக்கள் திரளின் அரசியல், கலாசார நிலைப்பாட்டை ஆணித்தரமாகச் சொல்ல  நமக்கு ஒரு கவிஞன்/கவிஞை  தேவைப்படுகிறான்/ள்! மிக மொக்கைத்தனமான பதிவுகளை படித்து , சண்முகா அதிபரின் , அதற்கு பின்னிருப்போரின் ஊடக அறிக்கைகளைப் பார்த்து, அவர்களின் வீடியோ பதிவுகளைக் கேட்டு, தலையை எங்கு மோதலாம் என நினைத்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நண்பரும் கவிஞருமான மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதை நமக்கு தெளிந்த அரசியல் , சிந்தனை உணர்வை மேலும் பலப்படுத்துகிறது! .

ஒடுக்கப்படும் மக்களின் அரசியல், பண்பாட்டு அடையாளங்கள் தொடர்பான அடிப்படை அறிவுகூட இல்லாது, ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் விடுதலை பேசிய, பேசும் அடி முட்டாள்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம்!!
ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!
 

https://www.facebook.com/100000000176167/posts/5194808773862410/?d=n

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜாப் விவகாரம்: தொடரும் பதற்றம்!


spacer.png

கர்நாடகா மாநிலத்தில் அரசு கல்லூரி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை ஏற்காமல் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வகுப்பறைக்கு வெளியே, கல்லூரி வளாகத்திற்குள்ளே மாணவிகள் போராடி வந்தனர்.

ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கவில்லையெனில், நாங்கள் காவி சால்வை அணிந்து வகுப்பறைக்கு வருவோம் என ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் தூண்டுதலினால் மாணவர்கள் காவி சால்வை அணிந்து வந்தனர். இருதரப்பினர்களிடையே நடந்த போராட்டம் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சினை மாநிலத்தின் மற்ற மாவட்டங்களான பாகல்கோட்டை, பெலகாவி, கோலார், குடகு, சாம்ராஜ்நகர், மண்டியா, தாவணகெரே, சிக்கமகளூரு, ஹாசன், யாதகிரி, கலபுர்கி என பெரும்பான்மையான மாவட்டங்களில் எதிரொலித்தது.

இந்த நிலையில், நேற்று மாண்டியா நகரில் பிஈஎஸ் கல்லூரி நுழைவு வாயிலில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள், அப்போது ஹிஜாப் அணிந்து தனியாக வந்த மாணவியை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என சத்தமாக மாணவர்கள் முழக்கமிட்டனர்.

தன்னைச் சுற்றி பெரிய கூட்டம் இருக்கிறது என்ற அச்சம் சிறிதும் இல்லாமல், அம்மாணவி துணிச்சலாக ‘அல்லா ஹூ அக்பர்’ என்று அவர்களை எதிர்த்து முழக்கமிட்டார்.

spacer.png

இதையடுத்து,கல்லூரி விரிவுரையாளர்கள் அந்த மாணவியை அழைத்து சென்றனர். தற்போது சமூகவலைதளத்தில் எங்கே பார்த்தாலும் இந்த வீடியோதான் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. ‘அல்லா ஹூ அக்பர்’ என்பது தற்போது அரசியல் முழக்கமாக மாறியது.

ஒருகட்டத்தில் போராட்டம் கலவரமாக மாற ஆரம்பித்தது. தாவணகெரே, ஷிவமொக்கா மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் பொதுவாகனங்கள் மற்றும் போலீசாரின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

அமைதியை பேணிகாக்கவும், கலவரத்தை குறைக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமில்லாமல், தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகையில், ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.

ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை அண்ணா சாலையில் தாராப்பூர் டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

spacer.png

இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகும் நிலையில், இதற்கான எதிர்ப்பும் விரிவடைந்து செல்கிறது.

பாஜக ஆளும் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், மற்ற மாநிலங்களிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் வந்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில், ” கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,” விரும்பிய மதத்தைத் தழுவதற்கும், அதுதொடர்பான வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதற்கும், அதுகுறித்தக் கருத்துப்பரவலைச் செய்வதற்குமான வாய்ப்பை இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமையாக வரையறுத்து வழங்கியுள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக, இசுலாமியப் பெண்களின் உடைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், மதவாத அடையாளமானக் காவித்துண்டை அணிந்துக் கல்விக்கூடங்களுக்கு வருகைதருவதுமானப் போக்குகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. ‘வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் அரசின் கொடுமைகளுக்கெதிராகப் போராடும் உரிமையையாவது கொடுத்தார்கள். விடுதலைபெற்ற நாட்டில் அந்த உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது’ என்றார் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் மானுட உரிமைக்காகவும், மண்ணின் நலனுக்காகவும், மக்களின் நலவாழ்வுக்காகவுமாக அறவழியில் போராடும் மனித உரிமை ஆதரவாளர்களை, சனநாயகப்பற்றாளர்களை கடும் சட்டங்களின் கீழ் கைதுசெய்து, சிறையிலடைத்து கொடும் சித்திரவதை செய்கிறது பாசிச பாஜக அரசு.

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நம்பிக்கைத் தூண்களாக திகழும் இளைய தலைமுறைகளின் மனதில் மதவாத வன்மத்தை விதைத்து, அவர்களது எதிர்காலத்தையே அழிக்க நினைக்கும் மனிதகுல விரோதியான பாஜகவின் எதேச்சதிகாரச்செயல்பாடுகளையும், கொடும் வன்முறைச்செயல்களையும் தடுத்து நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், சமூகத்தின் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் அணிதிரள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும், கடமையுமெனக்கூறி, அறைகூவல் விடுக்கிறேன்.

கர்நாடகாவில் மதவெறிக் கும்பலால் அரங்கேற்றப்படும் நாசகாரச்செயல்பாடுகளுக்கு இளைய தலைமுறைப்பிள்ளைகள் இரையாகாமல் காப்பாற்றக் களமிறங்கி, மதவாதத்திற்கு எதிராக மனிதம் காக்கவும், மக்களை நல்வழிப்படுத்தவுமாக சனநாயகப்பேராற்றல்களும், மானுடப்பற்றாளர்களும் ஒன்றிணைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதவெறிச்செயல்கள் தமிழ்நாட்டிலும் தலைதூக்காது தடுக்க மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இந்துத்துவக்கும்பலை இரும்புக்கரம் கொண்டு, சட்டத்தின் துணைநின்று ஒடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

spacer.png

நோபல் பரிசு பெற்றவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமை போராளியுமான மலாலா யூசுப், “ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது. இஸ்லாமிய பெண்களை புறந்தள்ளுவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும். பெண்களின் ஆடை குறைந்தாலோ கூடினாலோ அது பிரச்சினையாகி விடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “ பிகினி, ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் எதுவாக இருந்தாலும், பெண் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு ட்விட்டரில்,"கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் சார்ந்தது. பள்ளியில் சீருடை அணிவதையே நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே. இந்த விஷயத்தில் அரசியலில் ஈடுபடுவது அவமானம். நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட அப்படி இல்லை. அப்போது யாரும் குறை கூறவும் இல்லை. உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்? பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஹிஜாப் அணிந்துவர அனுமதி கோரி மாணவிகள் தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இன்று அவ்வழக்கு குறித்தான விசாரணை நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்றம் என்ன சொல்லும் என்றஎதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
 

 

https://minnambalam.com/politics/2022/02/09/21/hijab-issues-continue-to-tenison-in-india

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள படத்தில் சல்வாருடன் தலையை மறைத்து மொட்டாக்கு போட்டிருக்கும் பெண்ணையும் அதற்கருகில் முற்று முழுதாக கறுப்புடையால் ஆளையே மறைக்கும் உடைக்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா ? 

இந்த கறுப்பு உடை  எதன் வெளிப்பாடு ? இது எங்கே போய் நிற்கும்? 

இலங்கையில் இந்த வகாபிசம் ஏற்படுத்திய  அழிவு எல்லோருக்கும் தெரிந்ததே.

☹️

Link to comment
Share on other sites

கல்வி கற்கும் ஒரு  பாடசாலையில், கல்லூரியில் முகத்தை முழுதுமாக மறைக்கும் ஆடை அணிவதற்கு ஏற்பட்ட அவசியம் என்ன? முழு உடலுடன் முகத்தை மறைத்துக் கொண்டு வருவதன் பெயர் தான் சுதந்திரமா?

இந்த விடயத்தில் கேரளா மாநில அரசை பாராட்ட வேண்டும். இவ்வாறான பிரச்சனையை ஒரு சில மாணவிகள் எழுப்பியதால் முழு உடலையும் மூடும் ஹிஜாப்/பர்தா ஆகிய ஆடைகளை கல்லூரிகள், பாடசாலைகள் போன்ற பொது இடங்களில் அணிவதற்கு தடை செய்து அரச ஆணையையே வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

காவியையும் தடை செய்ய வேண்டும், முழு உடலை மூடும் ஹிஜாப்பையும் தடை செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவியை தடை செய்ய வேண்டும்
ஹிஜாப்பையும் தடை செய்ய வேண்டும்.

கன்னியாஸ்திரிகள் உடையை என்ன செய்வது? :cool:

Authentic Looking 7-piece Nun Costume Habit | Etsy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவள் கூந்தலைக் காட்டச் சொல்லி

சுற்றி நெருங்கும் காவிக்

கூட்டம்

அச்சம் பற்றிப் படரவில்லை.

 

 

கூனிக் குறுகி வெட்கித்து

நாணிக் கோணி நாலாய் மடிந்து

புகலிடம் தேடி ஓடுவாள் - புழுவாய்த் துடிப்பாள்

என்று எதிர்பார்த்த கூட்டத்திற்கு

எதிர்பாரா பெருத்த அவமானம்

 

 

எதிர்த்தாடுகிறாள் எரிஅமிலமாய் - ஒரு கணம் நின்று நிதானித்து

ஏறிட்டு அவள் பார்த்த அலட்சியப் பார்வையில்

ஆயிரம் எரிகணைகள் -

வீரியம் குறைந்தே போனது

கழுதைப்புலிக் கூட்டத்திற்கு...

 

 

 

ஆண் தோல் போர்த்திய அசிங்கங்களின் அச்சுறுத்தும்

கோஷம் தாண்டி உரத்தொலிக்கிறாள்

 

 'அல்லாஹு அக்பர்'

கூந்தல் காட்டச் சொன்னவர்களே

நீங்கள் எல்லாம் என் அடியுதிர்ந்த கூந்தலுக்குச் சமானம்

என்றரபியில் சொல்கிறாளோ என்றால் அதுதான் இல்லை

 

 

 

'இறைவனே மிகப் பெரியவன்' என்று பொருளாம் - இருக்கட்டுமே

அரக்கர்களின் அச்சுறுத்தலுக்கு நான் பயப்படவில்லை

 

 

உன் ஜெய் ஸ்ரீராம் கோஷத்திற்கு

எதிர்க்கோஷம்

நானும் போட்டே தீருவேன்

உன் கடவுள் பேர் சொல்லி

பெண்ணை அச்சுறுத்த உன்னால்

இயலுமென்றால்

என் கடவுள் பேர் சொல்லி

என்னைத் தேற்றிக் கொள்ள என்னாலும்

இயலுமென்றாள்...

 

 

 இப்போட்டியில் இவளே வென்றாள்...

 

 

முன் செல்லும் வரை மார்புச் சதை

பின் சென்றால் பிட்டச் சதை

எனும் கண் விபச்சாரம் செய்து

களிக்க இயலவில்லையோ?

 

அவளாடை தடுக்கிறதோ?

யாரோ தூண்டிய திரியில் புதிதாய் எரிகிறாய் கொதிக்கிறாய்

உன் வீட்டு உலை கொதிக்க வேண்டுமே - ஜெய்க் கோஷமிட்டால்

மெய் கொதிக்கும் - உலை கொதிக்குமா?

 

 

 

கூட்டமே கலைந்து செல்... அத்தனையும் 'அவர்களின்' கொடுந்திட்டமே புரிந்து கொள்....

 

 

 

அப்பெண்கள் முக்காடிட்டால் நீயும் காவித்துணி தோளிடுவேன் என்கிறாய்

இருக்கட்டும் நியாயம்தான்

 

- அவ் ஆண்கள் 'முன்தோல்' நீக்கியவர்கள்

அதை மட்டும் வசதியாய் மறந்துவிட்டாயே?

ஏன் வலிக்கிறதா?

 

- கீதா மோகன் (இந்தியா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 'அல்லா ஹு அக்பர்' முழக்கமிட்ட கர்நாடக மாணவிக்கு பாகிஸ்தானில் ஆதரவு - பெங்களூரு வழக்கு என்ன ஆனது?

கர்நாடகாவில் நேற்று ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி ஒருவர் காவி நிற துண்டை கழுத்தில் மாட்டிக் கொண்டு வந்த மாணவர்களை எதிர்கொண்டபோது திடீரென கேமிரா முன்பு தோன்றி 'அல்லா ஹு அக்பர்' என்ற முழக்கமிட்ட செயல் மூலம் அவர் வன்முறை தூண்ட முற்பட்டாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ்.

"காவி துண்டு போட்டிருந்த மாணவர்கள், அந்த பள்ளி மாணவியை 'கேரோ' செய்ய விரும்பவில்லை. ஆனால் அவர் திடீரென அல்லா-ஹு-அக்பர் என்று ஏன் குரல் எழுப்பினார்? அந்த மாணவியைச் சுற்றி அப்போது ஒரு சக மாணவி கூட இல்லை. பள்ளி வளாகத்தில் அப்படியொரு முழக்கத்தை எழுப்ப அவருக்கு என்ன அவசியம்? கல்வி நிலையத்தில் "அல்லா-ஹு-அக்பர்' அல்லது 'ஜெய் ஸ்ரீராம்' போன்ற முழக்கங்களை ஊக்குவிக்க முடியாது," என்று அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்தார்."இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை யாரும் தங்களின் கைகளில் எடுக்க முடியாது. எந்தவொரு தவறான நபரையும் அரசாங்கம் விட்டுவிடாது" என்று அமைச்சர் நாகேஷ் எச்சரித்தார்.

 

நாகேஷ்

பட மூலாதாரம்,ANI

 

படக்குறிப்பு,

பி.சி. நாகேஷ்

கல்வி நிறுவனங்களில் ஹிஜாபை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில் நேற்று மாண்டியா முன் பல்கலைக்கழக கல்லூரியில் இந்த மாணவி குரல் எழுப்பிய காட்சியும் பிறகு அவருக்கு எதிராக மற்றொரு தரப்பு எதிர் குரல் எழுப்பிய காட்சிகளும் இடம்பெற்ற காணொளி வைரலாகின.

அந்த காணொளியில் 'அல்லா ஹு அக்பர்' என குரல் எழுப்பிய மாணவியின் பெயர் முஸ்கான் என அடையாளம் தெரிய வந்துள்ளது. பள்ளி வளாகத்தில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வகுப்புகளுக்குச் செல்லும் வேளையில் சில ஆண்கள் குழு "ஜெய் ஸ்ரீ ராம்" என்று குரல் எழுப்புவதையும், அவர்கள் காவி நிற துண்டை கழுத்தில் போட்டிருந்ததையும் காணொளியில் பார்க்க முடிகிறது. அவர்களைப் பார்த்துக் கொண்டே நடக்கும் மாணவி திடீரென பின்னோக்கி வந்து, "அல்லா-ஹு-அக்பர்!" என்று குரல் எழுப்பி தனது கையை உயர்த்திக் காட்டினார். அப்போது அந்த ஆண்கள் அவரை நோக்கி நகர, மீண்டும் அவர் "அல்லா-ஹு-அக்பர்" என்று குரல் எழுப்பியபடியே நடந்தார்.

பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பி.டி.ஐ, மாணவி ஆல்லா ஹு அக்பர் என முழங்கும் காணொளியை தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, "துணிச்சலுக்கு உதாரணம்! அல்லாஹு அக்பர். மோதியின் ஆட்சியில் இந்தியாவில் அழிவு மட்டுமே உள்ளது. ஜின்னா சொல்வது சரிதான்," என்று கூறியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இதே விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முஸ்லிம் பெண்களின் கல்வியை பறிப்பது அடிப்படை உரிமை மீறல். இந்த அடிப்படை உரிமையை பறித்தும் ஹிஜாப் அணிந்தால் அச்சுறுத்துவதும் கூட முற்றிலும் அடக்குமுறையாகும். ஒரு சமூகத்தை இறுக்கமான சூழலில் வாழ நிர்பந்திக்கும் இந்தியாவின் திட்டம் இது," என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

அதே நேரத்தில், இம்ரான் கான் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த செளத்ரி ஃபவாத் ஹுசைன், "மோதியின் இந்தியாவில் நடப்பது பார்ப்பது பயங்கரமானது. ஒரு நிலையற்ற தலைமையின் கீழ் இந்திய சமூகம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. பிற ஆடைகளைப் போலவே ஹிஜாப் அணிவதும் தனிப்பட்ட தேர்வாகும். அதை தேர்வு செய்யும் சுதந்திரம் குடிமக்களுக்கு இருக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அரசியல் ஆலோசகரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் செய்தித் தொடர்பாளருமான ஹுசைன் ஹக்கானியும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய ஹக்கானி, "9/11 சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் துன்புறுத்தப்பட்டபோது, அதிபராக இருந்த புஷ், இது அமெரிக்காவின் உணர்வு அல்ல என்று கூறியிருக்கிறார். ஒருவேளை நரேந்திர மோதியும் வெளிப்படையாக இப்படிச் சொல்ல வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இந்தியா முழுவதும் நடைபெறுவதை நிறுத்த வேண்டும். இது எங்கு நடந்தாலும் அது சரியல்ல," என்று ஹுசைன் ஹக்கானி குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

இந்தியாவில் வசிக்கும் பிரபல வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸரீன், கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்த சிறுமியின் வைரலான வீடியோவை பயங்கரமான தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவுடன் ஒப்பிட்டுள்ளார். "அல்லாஹு அக்பரின் குரல் ஐஎஸ்ஐஎஸ் தலை துண்டிக்கும் காணொளியை எனக்கு நினைவூட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

இந்த நிலையில், ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் அரசாணையின் காரணமாக, கல்லூரிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறி, கர்நாடகாவைச் சேர்ந்த சில முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மனுக்களை பெரிய அமர்வு விசாரிக்க பரிந்துரைத்திருக்கிறது அந்த மாநில உயர் நீதிமன்றம்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித், "இந்த விஷயத்தை பெரிய அமர்வு விசாரணைக்கு பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மற்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகளும் இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், " என்று தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, இந்த விவகாரம் பெரிய அமர்வுக்கு மாற்றப்படும் வேளையில், சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது அவர், "மாணவிகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே (கல்வி ஆண்டு) எஞ்சியுள்ளன. பெரிய அமர்வு விசாரிக்கும்வரை அவர்களை விலக்கி வைக்க வேண்டாம். எந்த ஒரு பெண் குழந்தையும் கல்வியை இழக்காத வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இன்று மிகவும் முக்கியமானது அமைதி திரும்புவதும் அரசியலமைப்பு உரிமை கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்," என்று கூறினார்.கல்லூரி வளர்ச்சிக் குழுவிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சாஜன் பூவய்யா, ரிட் மனுக்களில் எழுப்பப்பட்ட கேள்விகள் நீதியரசர் தீட்சித்தின் வரம்புக்குள் வரக்கூடியவையே என்று வாதிட்டார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இடைக்கால உத்தரவுக்கு அரசு எதிர்ப்பு

 
ஹிஜாப் வன்முறை

பட மூலாதாரம்,

இதே வேளை, அரசின் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவித்தார். "மனுதாரர்கள் தரப்பு அதன் வாதத்தை முன்வைத்து விட்டது. அரசு தரப்பு அதன் நிலையை தெரிவிக்கிறது. இதன் பிறகே முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இந்த மனுக்கள் தவறான புரிதலுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசின் ஆணையை மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தன்னாட்சி உரிமை உள்ளது. அவற்றின் முடிவுகளில் அரசு தலையிடாது," என்று அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார். இருந்தபோதும், அரசியலமைப்பு உரிமை, மத உரிமை தொடர்பான இந்த விவகாரத்தை தாம் விசாரிப்பதை விடபெரிய அமர்வு விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று கூறினார் நீதிபதி கிருஷ்ணா எஸ். தீட்சித்.

முன்னதாக, நேற்றைய விசாரணையின் போது, மனுதாரர் ஒருவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத ஒழுக்கத்தின் அடையாளம் என்று வாதிட்டார்.அரசயலமைப்பின் 19(1)(a) பிரிவு ஹிஜாப் அணியும் மாணவிகளின் உரிமையை பாதுகாக்கிறது மற்றும் பிரிவு 19(6) அடிப்படையில் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும் என்று காமத் கூறினார். உச்ச நீதிமன்றம் விசாரித்த புட்டாசாமி தீர்ப்பின் 21வது பிரிவின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிவது என்பது அங்கீகரிக்கப்பட்ட தனியுரிமைக்கான அம்சமாகும் என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.

 
ஹிஜாப் வன்முறை

அரசாங்க உத்தரவு கர்நாடகா கல்வி விதிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் அப்படியொரு அரசாணையை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் வாதிட்டார். தேர்வுகள் நெருங்கி வருவதையும், மனுதாரர்கள் ஹிஜாப் அணியும் உரிமையை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்ததை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் காமத் கேட்டுக் கொண்டார்.அதைத்தொடர்ந்து அரசு உத்தரவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடாமல் மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அமைதியைப் பேணுமாறு நீதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தொடரும் வன்முறை

ஷிவமோகா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும், தேசிய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் புதன்கிழமை காலையில் அங்குள்ள பல்கலைக்கழக முன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தனர்.

 
ஹிஜாப் வன்முறை

பட மூலாதாரம்,UMESH MARPALLY

அவர்கள் புதன்கிழமை காலையில் 'பகவத்வஜ்' அல்லது காவி கொடியை இறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றினர்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கூட்டத்தைக் கலைத்தனர். இரண்டு கொடிகளையும் போலீஸார் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை ஷிவோகா கல்லூரியில் காலியாக உள்ள கொடி கம்பத்தில் மட்டுமே மாணவர்கள் குழு காவி கொடியை ஏற்றியதாக போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அவர்கள் தேசிய மூவர்ணக் கொடியை அகற்றி விட்டு காவி நிற கொடியை ஏற்றியதாக கூறப்படும் தகவலை அதிகாரிகள் மறுத்தனர்.

இதற்கிடையில், வன்முறையைக் கண்டித்து சில இந்து அமைப்புகள் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பனஹட்டி நகரில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தனற்.

அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 15 பேரை காவல் துறை கைது செய்தனர்.

 
ஹிஜாப் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கர்நாடகா ஹிஜாப்

இந்த நிலையில், மாநிலத்தில் நிலவும் அமைதியின்மை குறித்து மாநில அமைச்சரவையை கூட்டி முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சையை ஊக்குவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் எச்சரித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு சில மாணவர்கள் மட்டுமே ஹிஜாப் அணிய உரிமை கோருகிறார்கள், அவர்கள் தங்கள் சொந்த சமூகத் தலைவர்களைக் கூட கேட்காமல் இப்படி செய்கிறார்கள். ஹிஜாப் தொடர்பான எதிர்ப்புகள் இருந்தும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை குறையவில்லை என்று தெரிவித்தார்.இதேவேளை, ஹிசாப் உரிமை வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவடாவுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் கல்வி நிலையங்களின் நிலைமை குறித்து முதல்வரிடம் கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ். மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் காவல்துறை (ஐஜி) தலைவர் பிரவீன் சூத், பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் பந்த் ஆகியோர் விளக்கினர்.

கர்நாடக உள்துறையின் தகவலின்படி, மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள 7 கல்லூரிகளில் மோதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. கர்நாடகாவில் 19 மாவட்டங்களில் உள்ள 55 கல்லூரிகளில் ஹிஜாப் தொடர்பான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வன்முறை தொடர்பாக ஹரிஹரா போலீசார் நான்கு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் மஞ்சுநாத் நாயக் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. அவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹிஜாப் சர்ச்சை: 'அல்லா ஹு அக்பர்' முழக்கமிட்ட கர்நாடக மாணவிக்கு பாகிஸ்தானில் ஆதரவு - பெங்களூரு வழக்கு என்ன ஆனது? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:


காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “ பிகினி, ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் எதுவாக இருந்தாலும், பெண் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

https://minnambalam.com/politics/2022/02/09/21/hijab-issues-continue-to-tenison-in-india

அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.. பெண்ணின் ஆடை அது பெண்ணின் தெரிவு.. ஆனால் இங்கு நடக்கும் பிரச்சின்னை வேறு பிரியங்க காந்தி அவர்களே.. ஒரு பாடசாலைக்கு பிகினி உடையில் நாம் செல்ல முடியுமா..? இந்த ஆடைப்பிரச்சினையை சரிசெய்யவேண்டியது பாடசாலை நிர்வாகம்.. அதனால் முடியவில்லை என்றால் நீதிமன்றம்.. ஆனால் இங்கு சட்டத்தை கையில் எடுத்த சங்கி குண்டர்கள் மேல்தான் உங்கள் கண்டனத்தை தெரிவிக்கவேண்டும்.. அதே வேளை பாடசாலைக்குள் எந்த மத,உடை,பணக்காரன் ஏழை வேறுபாடுகளும் இருக்ககூடாதுஎன்பதை சங்கிகளுக்கு மட்டுமல்ல இஸ்லாமிய மதவாதிகளுக்கும் அடித்து சொல்லவேண்டியது உங்கள் போன்ற அரசியல்வாதிகளின் கடமை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹு அக்பர் என்றால்

நீதி வேண்டும் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
என்னை அச்சுறுத்த முடியாது என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
இது எனது நாடு என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் சம உரிமை கொண்டவர்கள் என்றுபொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் தனித்துவமானவர்கள் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
ஒருவர் அடையாளத்தை 
மற்றவர்கள் பாதுகாத்தல் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
தேச பக்தி என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
கோழைத்தனத்தின்மேல்
காறி உமிழ்தல் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
அது 'அடிபணிவதென்றால் அல்லா ஒருவனுக்கே'
என்று பொருள்

இன்று 'அல்லாஹு அக்பர்' என்று சொல்ல
ஒருவன் இஸ்லாமியனாக இருக்கவேண்டும் என்பதில்லை
அவன் அல்லாவை வணங்குபவனாக 
இருக்கவேண்டும் என்று கூட
அவசியமில்லை

நீதி நிலவ வேண்டும் என்று விரும்புகிற
எவரும் சொல்லலாம்
'அல்லாஹு அக்பர் '

சமாதானம் வேண்டும் என்று சொல்கிற
எவரும் முழங்கலாம்
'அல்லாஹு அக்பர்'

அநீதிக்கு தலைவணங்கமாட்டோம்
என்று சொல்கிற எவருக்கும் உரியதுதான்
'அல்லாஹு அக்பர்'

அதை ஒரு சிறுபெண்
நூறு அர்த்தங்கள் கொண்ட 
ஒரு வரலாற்றுப்  பிரகடனமாக்கிவிட்டாள்

8 2.2022
இரவு 11.01
மனுஷ்ய புத்திரன்

https://www.facebook.com/100000477613498/posts/7681504341875410/?d=n

—————-//—-///——//—————-

 

 

அந்த மாணவி குரல் எழுப்பிய 
அல்லாஹூ அக்பருக்கு என்ன அர்த்தம்?

அவர்கள் கும்பலாக சேர்ந்து என்னை பயமுறுத்தும்போதும்  
நான் பயப்பட மாட்டேன் என்று அர்த்தம்.

அவர்கள் பள்ளிக்கு வெளியே நிறுத்தப் பார்த்தாலும் 
நான்  பள்ளிக்குள் செல்வேன் என்று அர்த்தம்.

அவர்கள் கடவுளின் பெயரால் அநியாயம் செய்யும் போது
நான் கடவுளின் பெயரால் நியாயம் கேட்பேன் என்று அர்த்தம்.

அவர்களே பயங்கரவாதிகள், தீவீரவாதிகள்
நான் அல்ல என்று அர்த்தம்.

அவர்கள் வெறுப்பை உமிழும்போது 
நான்  அன்பை வேண்டுகிறேன் என அர்த்தம். 

அவர்கள்  நிராதரவாக என்னை நிறுத்தும்போது
நான் என்னை ஆதரிக்கும் மனிதர்களை 
அழைக்கிறேன் என்று அர்த்தம்.

அவர்கள் என்னை  வீழ்த்திட  மூர்க்கத்தனம் கொண்டபோது
வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும்  சரி, 
யுத்தம் செய்வேன் என அர்த்தம்.

அவள் தனியே இல்லை; 
நாமெல்லாம் அவளோடு இருக்கிறோம் 
என்பதற்கான அர்த்தம்
‘அல்லாஹூ அக்பர்.”

00000

https://www.facebook.com/1292633171/posts/10221141358825571/?d=n

 

அல்லாஹு அஹ்பர் என்பது,
வெறுப்பையும் துவேசத்தையும் பரப்பும் காவிக்கும்பலுக்கு எதிரானது மட்டும் என்று அர்த்தம் அல்ல,

உலகமெல்லாம் வெறுப்பையும் துவேசத்தையும் பரப்பும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும்
எதிரானது என்றும் அர்த்தம்..

அல்லாஹு அஹ்பர் என்பது,
அபாய போட விருப்பமுள்ள முஸ்லிம் பெண்களின் தனிமனித சுதந்திரத்துக்கான குரல் என்று மட்டும் அர்த்தம் அல்ல,

அபாய போட விருப்பமில்லாத முஸ்லீம் பெண்களின் தனிமனித சுதந்திரத்துக்குமான குரல் என்றும் அர்த்தம்..   

அல்லாஹு அஹ்பர் என்பது,
மதத்தின் பெயரால் முஸ்லீம் பெண்களின் உரிமைகளை பறிக்க நினைக்கும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான குரல் என்று மட்டும் அர்த்தம் அல்ல,

மதத்தின் பெயரால் அநேக நாடுகளில் முஸ்லிம் பெண்களின் ஓட்டு உரிமைகளை கூட பறிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எதிரான குரல் என்றும் அர்த்தம்.. 

அல்லாஹு அஹ்பர் என்பது,
ஆர் எஸ் எஸ் கும்பல் வெளியே தடுத்து நிறுத்தினாலும் நான் பள்ளி சென்று படிப்பேன் என்று மட்டும் அர்த்தம் அல்ல,

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தடுத்து நிறுத்தினாலும் பள்ளி சென்று படிப்பேன் என்றும் அர்த்தம்.. 

அல்லாஹு அஹ்பர் என்பது,
காவிக்கும்பல் கடவுளின் பெயரால் அநியாயம் செய்யும்போது நான் கடவுளின் பெயரால் நீதிகேட்பேன் என்று மட்டும் அர்த்தம் அல்ல,

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடவுளின் பெயரால் அநியாயம் செய்யும்போதும் நான் கடவுளின் பெயரால் நீதிகேட்பேன் என்றும் அர்த்தம்..

இவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.. 
இவற்றை சேர்க்காமல் எந்த ஒரு அல்லாஹு அக்பர் கவிதையும் ஒருபோதும் முற்றுப்பெறாது..

https://www.facebook.com/100071996287357/posts/151287853947757/?d=n

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹு அக்பர் எண்டு அப்பாவிகளின் கழுத்து வெட்டுறது இதில சேர்ப்பு இல்லையா கொழும்பன் சார்?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அல்லாஹு அக்பர் என்றால்

நீதி வேண்டும் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
என்னை அச்சுறுத்த முடியாது என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
இது எனது நாடு என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் சம உரிமை கொண்டவர்கள் என்றுபொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் தனித்துவமானவர்கள் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
ஒருவர் அடையாளத்தை 
மற்றவர்கள் பாதுகாத்தல் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
தேச பக்தி என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
கோழைத்தனத்தின்மேல்
காறி உமிழ்தல் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
அது 'அடிபணிவதென்றால் அல்லா ஒருவனுக்கே'
என்று பொருள்

அல்லாஹு  அக்பர்....அல்லஹு அக்பர்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலபத்ர ஓணாண்டி அவர்களே! எதற்காக வேலியில் போகிற ஓணானைப் பிடித்து பத்திரமாக மடியில்கட்ட முனைகிறீர்கள். இனி நீங்கள் குத்துது குடையுது என்று கத்தப்போற சத்தம் இப்பவே யாழ்வெளியில் கேக்கும்போல் தெரிகிறதே.😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

காவியை தடை செய்ய வேண்டும்
ஹிஜாப்பையும் தடை செய்ய வேண்டும்.

கன்னியாஸ்திரிகள் உடையை என்ன செய்வது? :cool:

Authentic Looking 7-piece Nun Costume Habit | Etsy

கன்னியாஸ்திரிகளின் உடை கட்டாயமான ஒன்றல்ல. கன்னியாஸ்திரியாக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமல்ல. சேலை உடுத்திய லன்னியாஸ்திரிகளை இந்தியா இலங்கையில் தாராளமாக காணலாம். 

கன்னியாஸ்திரிகள் இவ்வாறுதான் உடையுடுத்த வேண்டும் என்று சமயக் கட்டுப்பாடுகள் எவையும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

கன்னியாஸ்திரிகளின் உடை கட்டாயமான ஒன்றல்ல. கன்னியாஸ்திரியாக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமல்ல. சேலை உடுத்திய லன்னியாஸ்திரிகளை இந்தியா இலங்கையில் தாராளமாக காணலாம். 

கன்னியாஸ்திரிகள் இவ்வாறுதான் உடையுடுத்த வேண்டும் என்று சமயக் கட்டுப்பாடுகள் எவையும் இல்லை. 

இந்து மதத்திலும் முஸ்லீம் சமயத்திலும் உடைகளில் கட்டாயம்/கட்டுப்பாடுகள் உள்ளதா?

தெரியாததை தெரிந்து கொள்ள மட்டும் அந்த கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இந்து மதத்திலும் முஸ்லீம் சமயத்திலும் உடைகளில் கட்டாயம்/கட்டுப்பாடுகள் உள்ளதா?

தெரியாததை தெரிந்து கொள்ள மட்டும் அந்த கேள்வி.

இந்து மதம் உடையில் வரையறைகள் ஏதும் விதித்தது போன்று தெரியவில்லை. இஸ்லாம் என்ன சொல்கிறதென்று தெரியாது, ஆனால் இஸ்லாம் மதத்தின் பெயரால் நடைபெறும் நாகரீக வளர்ச்சிக்கோ மனிதத் தன்மைக்கோ துளியளவு சம்பந்தமும் இல்லாத செயல்களை தினமும் நாம் பார்க்கின்றோமே..☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.
    • விசிகு, ஒன்றியத்தின் தலைவராக இருந்து  அதன் யாப்புக்குள் கட்டுப்பட்டு செயற்பட்ட உங்களது   நேர்மையைப் பாராட்டுகிறேன். 👏 இப்பொழுது தமிழரசுக் கட்சியை  எடுத்துக் கொள்ளுங்கள். சிறீதரன், அரியநேத்திரன் ஆகியோர் கட்சியின் யாப்புக்குள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை கட்சிக்குள் இருந்து கொண்டே வெளியில் உமிழ்ந்து கொண்டிருக்கிறார்களே நியாயமாகத் தெரிகிறதா?  பொது வேட்பாளராகப் போட்டியிட அரியநேத்திரன் தனது கட்சியிடம் கேட்டாரா? கட்சிதான் அனுமதித்ததா? ஒரு கட்சியின் யாப்புக்குள் கட்டுப்படாதவர்கள் எப்படி தமிழினத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவார்கள்?      
    • எதுவுமே ஒருவரால் தான் தொடங்கப்படுகிறது. இந்த மக்கள் கூட்டம் நிச்சயமாக நம்பிக்கை தரும். 
    • Kula Sellathurai 1d  ·  Dear Friends and Family, We are deeply honored and humbled to share that we, Ganesan Sugumar and I, have been awarded the His Majesty King Charles III Coronation Medal by the Government of Canada. We received this prestigious recognition among 18 other remarkable individuals. This medal acknowledges our commitment to community service and philanthropy, striving to make our community, country, and world a better place for future generations. We are sincerely grateful to the selection committee and the Government of Canada for this recognition. We also want to extend our heartfelt thanks to each of you—our friends and family—whose unwavering support and encouragement have been our guiding light and strength throughout our journey. Thank you once again for being such integral parts of our lives and for celebrating this achievement with us.         reacti
    • தமிழரசுக் கட்சிதான் கூறுகிறது. அப்படியாயின் அந்தக் கட்சிக்குள் அரியம் இல்லையா?
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.