Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரஞ்சித் said:

நாம் கவனிக்கத் தவறும் ஒரு விடயம் தான் ரஸ்ஸியா என்பது நிலப்பரப்பில் உலகின் பெரிய ஒரு நாடு என்பதும், 140 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினைக் கொண்டிருக்கிறதென்பதும், உலகின் மிகப்பெரிய ராணுவத்தையும், மற்றைய எல்லா நாடுகளையும் விட மிக அதிகளவான அணுவாயுதங்கலையும் கொண்டிருக்கிறது என்பதும். ஆகவே, ரஸ்ஸியா என்பது தன்னைச் சுற்றியுள்ளவர்களால் இலகுவாக அச்சுருத்தப்படக் கூடிய நாடு என்று எவராவது எண்ணினால் அது வேடிக்கையானதும், அறிவற்ற நிலைப்பாடும் ஆகும் என்பதே உண்மை.

 

அது தான் உண்மை.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எப்போதும் கவலையாக சொல்லி கொள்வது ரஷ்ய அப்பாவியை மற்றவர்கள் பயமுறுத்தி போட்டார்கள்.

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரபுநாடுகள் ரஷ்யாவை விட மிகப்பெரியது.. வளமானவை.. ஆனால் அவற்றைத்தான் அமெரிக்கா தலைமையில் மேற்குலகு ஒன்று சேர்ந்து ஒவ்வொன்றாக அழித்து ஒழித்து ஒடுக்கி வருகிறது.. இன்று அரபுதேசங்கள் நாளை ரஷ்யா அதன் பின் சீனா தேவைப்பட்டால் இந்தியாவைக்கூட… வாஸ்கொடகாமா காலத்தில் இருந்தே கீழைதேச தேசங்களை அடக்கியும் ஒடுக்கியும் அடிமைப்படுத்தியும் சீரழித்தும் வரலாற்றை ஒவ்வொரு முறையும் மேற்குலகுதான் எழுதுகிறது.. இப்பொழுது ஜனநாயகம் பேசிக்கொண்டுபோய் ஆக்கிரமித்து பொருளாதாரத்தின் மூலம் அடிமைப்படுத்துகிறார்கள்.. அதற்கு வெட்கமே இல்லாமல் கீழைத்தேசத்தில் இருந்து போன அடிமைகள் முட்டுக்குடுக்கின்றனர்.. ஒவ்வொரு முறையும் காக்கைவன்னியர்கள் கீழைத்தேசத்தில் இருப்பதால்தான் அவர்கள் எம்மை அடிமை ஆக்கமுடிகிறது..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நீர்வேலியான் said:

யாழின் ஆக்கத்துக்காக  ஒருவர் எழுதும் சொந்த படைப்பில்போய், அவர் தொடர்ந்து எழுதமுடியாத அளவுக்கு தொடர் கும்மி அடிப்பதும், அவர் எழுதுவதுக்கும் அதிகமாக, அவரது பதிவில், வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து தொடர்ந்து இணைத்து குழப்புவதும் நேர்மையாகவோ அல்லது constructive criticism ஆகவோ கருதப்படுவதில்லை.

யாழுக்கான ஆக்கம் சரிதான். அதற்காக எல்லா ஆக்கங்களுக்கும் தொடருங்கள் அல்லது வாழ்த்துக்கள் என்று சும்மா போய் விட முடியாது. 

ஜேர்மனியில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் உக்ரேனின் உண்மை முகமும் அவர்களின் கள்ளத்தன அரசியலும் இந்தியாவை விட ஊழல்களும் நிறைந்த நாடு அது.  சகல உரிமைகளுடனும் வாழும் மக்கள் உள்ள நாடு அது. ஆனால் ரஷ்ய மொழி பேசுபவர்களை ஒதுக்கி வைக்கவும் அவர்கள் பின்னிற்பதில்லை.

 

எந்தவொரு உரிமையுமில்லாத ஈழத்தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் அழிவையும் சகல உரிமைகளுடன் வாழும் உக்ரேனின் அழிவையும் ஒப்பிடுவது முழுமையான விசமத்தனம்.

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரியோபோல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இல்லை காரணம் முள்ளிவாய்க்கால் உலகநாடுகளாலும் அனைத்துலக நிறுவனங்களாலும் இலங்கைத்தீவின் தமிழ் இனத்தைக் கைவிடப்பட்டு அனைத்துத் தப்பும் வழிகளும் மறிக்கப்பட்டு நாம் இப்போது தீர்வுபெற்றுத்தா என எந்த நாடுகளின் காலகளைக் கழுவுறோமோ அதே நாடுகளது ஆதரவுக்கரம் மற்றும் இனாமாகவோ கடனாகவோ நவீன ஆயுதங்கள் கொடுப்பனவுடன் நடாத்தப்படும் உக்ரைன் ரஸ்யா யுத்தத்துடனும் அதனால் ஏற்படும் மனித அவலங்களுடனும் ஒப்பிடமுடியாது.

எனினும்

மனித அவலம் எங்கு நடப்பினும் அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்கூறுவதும் ஆதரிப்பதும் நியாயமானது.

ஆனால் ரஸ்யா எந்தவித நிபந்தனையுமின்றி தமிழர் அழிப்பிற்கு உதவியது உக்ரைனும் அதே போலவே தவிர உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் அனைத்துமே தமிழர் அழிப்புக்குத் துணைபோனது 

இவைகளை நான் மனதில் நிற்கும்போது நான் யார்பக்கம் நிற்கவேண்டும் ? யாராவது யாழ்கள நியாயவாஙள்  கூறுங்களேன்

எனுனும் யுத்தம் கொடியது அதிகாரவர்க்கத்தின் அகோரப்பசிக்கு சாதாரண குஞ்சுகுருமான் உட்பட சிறுகச் சிறுகத்தேடிய தேட்டங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விட்டு அகன்று அகதியாக வேறிடம் செல்வது கொடூரத்திலும் கொடூரம். நான் வாழும் நாட்டில் பேரூர்ந்துச் சாரதியாக வேலைசெய்யும் இலங்கையிலிருந்து அகதியாகவந்து இப்போது தன்னை இந்த நாட்டில் நிலைநிறுத்திய ஒருவர்

உக்ரேன் கடவுச்சீட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்த அரசாங்கம் அறிவித்தவுடன் எல்லாரும் பஸ்ஸில வந்த்  ஏறத்தொடங்கிட்டுதுகள் எனச்சொல்லும்போது தான் யார் எனும் அறுவுகூட இல்லாது வாழும் ஜந்துகள்போல வாழும் இவர்கள்போல் வாழ என்னால் முடியாது. 

எனது மனம் உக்ரேனில் வாடும் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறது.

  • Like 6
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

சிலரின் விசமத்தனமான கருத்துக்களுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கும்போது, அது அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டுகிறது. ஆகவே அவர்கள் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதுபோல குப்பைகளை இங்கே அள்ளி வந்து கொட்டுகிறார்கள், இது எனது சொந்த ஆக்கம் என்று தெரிந்தும். 

நானும் என்னால் முடிந்தளவிற்கு அவற்றை பெருக்கி, எரித்து வருகிறேன், பார்க்கலாம். 

 நீங்கள் ஆதாரம் எதனையும் கொடுக்க்வில்லை. பிழைகளை, பக்கச்சார்பை சுட்டிக்காட்டுவது ஆத்திரத்தில் அல்ல. அது பிழை என்பதாலே. உங்களால்தான் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

உங்கள் ஆக்கத்தை இதுவரை எவருமே குப்பை என்று கூறவில்லை. ஆனால் தவறுகளைச் சுட்டிக்காட்டும்  கருத்துக்களை நீங்கள்தான் குப்பை என்று கூறுகிறீர்கள். வேருபாடு புரிகிற்தா ? 

 

 

 

4 hours ago, நீர்வேலியான் said:

யாழின் ஆக்கத்துக்காக  ஒருவர் எழுதும் சொந்த படைப்பில்போய், அவர் தொடர்ந்து எழுதமுடியாத அளவுக்கு தொடர் கும்மி அடிப்பதும், அவர் எழுதுவதுக்கும் அதிகமாக, அவரது பதிவில், வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து தொடர்ந்து இணைத்து குழப்புவதும் நேர்மையாகவோ அல்லது constructive criticism ஆகவோ கருதப்படுவதில்லை.

உண்மையைக் கூறுங்கள் 

ரஞ்சித்தின் இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்து வருகிறீர்களா ? வாசித்திருந்தால் முள்ளிவாய்க்காலுடன் இதனை ஒப்பிடுவது நீதியானதுதானா ? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, Elugnajiru said:

மரியோபோல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இல்லை காரணம் முள்ளிவாய்க்கால் உலகநாடுகளாலும் அனைத்துலக நிறுவனங்களாலும் இலங்கைத்தீவின் தமிழ் இனத்தைக் கைவிடப்பட்டு அனைத்துத் தப்பும் வழிகளும் மறிக்கப்பட்டு நாம் இப்போது தீர்வுபெற்றுத்தா என எந்த நாடுகளின் காலகளைக் கழுவுறோமோ அதே நாடுகளது ஆதரவுக்கரம் மற்றும் இனாமாகவோ கடனாகவோ நவீன ஆயுதங்கள் கொடுப்பனவுடன் நடாத்தப்படும் உக்ரைன் ரஸ்யா யுத்தத்துடனும் அதனால் ஏற்படும் மனித அவலங்களுடனும் ஒப்பிடமுடியாது.

எனினும்

மனித அவலம் எங்கு நடப்பினும் அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்கூறுவதும் ஆதரிப்பதும் நியாயமானது.

ஆனால் ரஸ்யா எந்தவித நிபந்தனையுமின்றி தமிழர் அழிப்பிற்கு உதவியது உக்ரைனும் அதே போலவே தவிர உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் அனைத்துமே தமிழர் அழிப்புக்குத் துணைபோனது 

இவைகளை நான் மனதில் நிற்கும்போது நான் யார்பக்கம் நிற்கவேண்டும் ? யாராவது யாழ்கள நியாயவாஙள்  கூறுங்களேன்

எனுனும் யுத்தம் கொடியது அதிகாரவர்க்கத்தின் அகோரப்பசிக்கு சாதாரண குஞ்சுகுருமான் உட்பட சிறுகச் சிறுகத்தேடிய தேட்டங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விட்டு அகன்று அகதியாக வேறிடம் செல்வது கொடூரத்திலும் கொடூரம். நான் வாழும் நாட்டில் பேரூர்ந்துச் சாரதியாக வேலைசெய்யும் இலங்கையிலிருந்து அகதியாகவந்து இப்போது தன்னை இந்த நாட்டில் நிலைநிறுத்திய ஒருவர்

உக்ரேன் கடவுச்சீட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்த அரசாங்கம் அறிவித்தவுடன் எல்லாரும் பஸ்ஸில வந்த்  ஏறத்தொடங்கிட்டுதுகள் எனச்சொல்லும்போது தான் யார் எனும் அறுவுகூட இல்லாது வாழும் ஜந்துகள்போல வாழும் இவர்கள்போல் வாழ என்னால் முடியாது. 

எனது மனம் உக்ரேனில் வாடும் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் கட்டுரையை விமச்சிக்க வேண்டாம் என்று கூறுங்கள். அத்துடன் யாரும் கட்டுரையை விமர்சிக்கப்போவதில்லை.

நீங்களும் மற்றும் பலரும், எல்லோரும் நிம்மதியாக உறங்கலாம். உங்கள் பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும். 

🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இன்று அரபுதேசங்கள் நாளை ரஷ்யா அதன் பின் சீனா தேவைப்பட்டால் இந்தியாவைக்கூட… வாஸ்கொடகாமா காலத்தில் இருந்தே கீழைதேச தேசங்களை அடக்கியும் ஒடுக்கியும் அடிமைப்படுத்தியும் சீரழித்தும் வரலாற்றை ஒவ்வொரு முறையும் மேற்குலகுதான் எழுதுகிறது.

இது உண்மை. American deep State பற்றிய கேந்திர சிந்தனைவியலாளர்களின் சிந்தனை போக்கும் ஏறத்தாழ இது போன்றது

John Mearsheimar இந்த வீடியோ வீடியோகளை youtube இல் பார்க்கலாம்.

இது அண்மைக்கால வீடியோ: https://www.youtube.com/watch?v=8mCzbiF5TmQ


இந்த யுத்தத்துக்கு, இன்னொரு மறைமுக, முக்கிய காரணம், பூமி வெப்பம் அடைதல் (global warming).

காரணம், ஆர்டிக் உருகுகிறது, ஆர்டிக் சர்வதேச கப்பல் ப்பதையாக மாற தொடங்கிவிட்டது, ஆர்டிக் இல் உள்ள பெருமளவு வளங்கலாய் எப்படி பகிர்வது என்பதில் போட்டி.

அனால், ரஷ்யா ஐ பொறுத்தவரையில், எந்தவொரு மனித பிரசன்னமும் தாக்கு பிடிக்க முடியயாத, நீண்ட வட  எல்லை, மற்றவர்களுக்கு, முக்கியமாக மேற்கின் ஆயுத  பல பிரசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யா வுக்கு இது அதனது இருப்புக்கு கேந்திர தன்மையான அச்சுறத்தலும்,  ஆபத்தும்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது, நேட்டோ கொடுத்த வாக்குறுதியான, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பால்டிக் நாடுகளுக்கு நேட்டோ பரவாது, என்பதை கடைபிடித்து இருந்தால், ரஷ்யா இவ்வளவு தீவிரவமாக இருந்திருக்காது.

சொறி சிங்களம் இறைமையை கொண்டுள்ள அரசு கொண்டுள்ளதாயினும், மனித உரிமை சபையில் உப்புச் சாப்பிலா தீர்மானத்தை கொண்டுவருவதத்திற்கு,  மேற்கு நாடுகள் ஹிந்தியை எதிர்க்க கூடாது என்ற நிலையில்,  ரஷ்யா அதன் இருப்புக்கு வரும் கேந்திர அச்சறுத்தலை வாளாது பார்த்துக் கொண்டு  இருக்க வேண்டும்  என்று எதிர்பார்க்க முடியாது.       

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Saudi Arabia is sideshow compared to our real problems in Middle East |  TheHill

மிகவும் பிரமாண்டமான ரஷ்ய நாட்டின் சக்கரவர்த்தி புரின் பாவத்தையே பயமுறுத்தி அச்சுறுத்துகிறார்கள் கொடியவர்கள்.  இவர் பாவத்திற்கும் என்னென்ன பயமுறுத்தல் பிரச்சனைகளோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kapithan said:

உண்மையைக் கூறுங்கள் 

ரஞ்சித்தின் இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்து வருகிறீர்களா ? வாசித்திருந்தால் முள்ளிவாய்க்காலுடன் இதனை ஒப்பிடுவது நீதியானதுதானா ? 

ரஷ்யா தன் பிராந்திய அரசியலுக்காக/பாதுகாப்பிற்காக இந்த யுத்தத்தை செய்கின்றது.இது எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ரஷ்யா பலமுறை உக்ரேனுக்கு எச்சரித்தும் உக்ரேன் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய  யூனியனுடனும் சேர்ந்து ரஷ்யாவை எள்ளி நகையாடிய வண்ணமே இருந்தது.அதியுச்சமாக இன்றைய உக்ரேன் சனாதிபதியின் வாய் வீரங்கள் தான் ரஷ்யாவை மேலும் சினப்பட வைத்தது.

பிராந்திய அரசியல் எவ்வளவு முக்கியமானது.

எமது தேசியத்தலைவர் அவர்கள் ஒரு மாவீரர் உரையின் போது பிராந்திய அரசியலில் இந்திய முக்கியத்துவம் பற்றி  கூறினார். இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக நாம் எதையும் செய்யமாட்டோம் என கூறியதாகவும் ஞாபகம்.இந்தியா எமது அயல் நாடு அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறியிருந்தார்.

முள்ளிவாய்க்கால் அழிவின் போது   எம் இனத்திற்கு யாருமே உதவவில்லை. ஆயதங்களை மௌனித்து விட்டோம் என கூறிய பின்னரும் நிர்கதியாக நின்ற இனத்தை அடியோடு சரித்து அழித்தார்கள்.அதற்கு இன்றுவரை கூட நீதி கிடக்கவில்லை.

எமக்கு இந்தியா எவ்வளவு முக்கியம் என கூறப்பட்டாலும் அதே இந்தியா முள்ளிவாய்க்கால் அழிவை முன்னின்று செய்தது துரோகத்திலும் துரோகம். சரி அதன் பின் ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் எதுவுமே இதுவரை இல்லை.அங்கிருக்கும் ஈழத்து அகதிகளைக்கூட அவர்களால் சரிவர கவனிக்க முடியவில்லை.

உக்ரேனில் அப்படியா நடக்கின்றது? மேற்குலகு ஏட்டிக்கு போட்டியாக தடுப்பு ஆயுதங்களை கொடுக்கின்றார்கள். மேற்குலக மக்கள் பணம் பொருள்  உக்ரேன் மக்களுக்காக சேகரிக்கின்றார்கள்.அண்டை நாடுகளுக்கு புலம் பெயரும் மக்களுக்கு உக்ரேன் என்ற பெயர் சொன்னாலே போதுமானது. தங்கள் பாதி வீட்டை எவ்வித கேள்விகளுமின்றி தங்க கொடுக்கின்றார்கள். உக்ரேன் சனாதிபதியுடன் நாள்தோறும் மேற்குலக தலைவர்கள் தொடர்புகொண்டு ஆறுதல் சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்கள்.அதை விட உக்ரேனில் பாதிக்கப்பட்ட இடங்களை கட்டியெழுப்புவது பற்றி இப்போதே மேற்குலகு  சிந்திக்க ஆரம்பித்து விட்டது.

இது இப்படியிருக்க......

மரியோபுல் இரண்டாம் முள்ளிவாய்க்கால் என எழுதுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?

 

சிரியாவின் அலெப்போ(Aleppo) அழிவுக்கு வராத கண்கலங்கல்களும் வியாக்கியானங்களும் மரியோபுல் அழிவிற்கு மட்டும் வருகின்றதென்றால் மேற்குலகின் இரட்டை வேடத்திற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

Abasivile babarirwa mu bihumbi bagotewe mu burasirazuba bwa Aleppo kandi bari gushirirwa n'ibiryo ndetse n'amazi.

Syrischer Bischof: „In Aleppo wird gefeiert!“ - Vatican News

 

எதோடு எதை கொண்டு வந்து ஒப்பிடுவது என்பதற்கும் ஒரு நீதி நியாயம் வேண்டும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/3/2022 at 21:04, ரஞ்சித் said:

மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்

சரியாகப் 12 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழினம் தனது சரித்திரத்தில் மிகப்பெரும் மனித அழிவைச் சந்தித்தது. தீவிர பெளத்த இனவாத அரசின் தலைமையில் மொத்த சிங்களத் தேசமும் அதன் ராணுவமும் உருவேற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு, ஆடி 26 ஆம் திகதி தமிழர் மீதான இனக்கொலை யுத்தம் தொடங்கப்பட்டது.

கிழக்கில் சிங்கள விவசாயிகளுக்கான நீர் வழங்கலை புலிகள் தடுக்கிறார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தமிழினம் மீதான இனக்கொலை யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி கொடூரமான இரத்தக் குளியலுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

இனக்கொலை யுத்தத்தினைத் தொடங்கும் நடவடிக்கைகளில் முதலாவதாக தனது திட்டம் வெளியுலகிற்குத் தெரியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய சிங்களம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றிவந்த சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு "உங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரமுடியாது" எனும் மிரட்டலினை விடுத்து ஒரே நாளில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. பின்னர், சர்வதேசச் செய்தியாளர்கள் எவரும் யுத்தம் நடைபெறும் பகுதிக்குச் செல்லமுடியாதெனும் கட்டளையினை விடுத்து விரியவிருக்கும் கொலைக்களத்திலிருந்து உண்மைச் செய்திகள் வெளியே கசிவதை அது தடுத்துக்கொண்டது. சர்வதேசத்தையும், உள்நாட்டுச் சிங்களவர்களையும் ஏமாற்றும் நோக்கில் தமிழினம் மீது தான் நடத்தத் திட்டமிட்டிருந்த இனவழிப்பிற்கு " மனிதாபிமான மீட்பு நடவடிக்கை" என்று பேர்சூட்டிக்கொண்டது. 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மாவட்ட அரச அதிபர்களின் கணிப்பீட்டின்படி உள்ளே தஞ்சம் அடைந்திருந்த மக்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து இருபதினாயிரம் என்றிருக்க, அவ்வெண்ணிக்கையினை வேண்டுமென்றேகுறைத்து மதிப்பிட்டு வெறும் எழுபதினாயிரம் மட்டுமே என்று சர்வதேசத்தை ஏமாற்றி வந்தது. ஆனால், தான் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்ட எண்ணிக்கையான 70,000 மக்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதற்குப் பதிலாக வெறும் ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான உணவுப் பொருட்களை அனுப்பிவைத்து சர்வதேசத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றிவந்தது. 

உணவையும், மருத்துவப் பொருட்களையும் யுத்தத்தில் ஒரு ஆயுதமாகப் பாவித்தல் கூடாது எனும் சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு முரணாக  உணவையும் மருந்தினையும் உள்ளே தஞ்சமடைந்த மக்களுக்கு வழங்கமறுத்து அவர்களை பட்டினிச் சாவினுள் தள்ளுவதன் மூலம் மக்கள் கொல்லப்படுவதை உறுதிப்படுத்தியதுடன், போரிடும் மனோவலிமையினையும் அடித்து நொறுக்கியது. வேண்டுமென்றே குரைத்து மதிப்பிடப்பட்ட மக்கள் எண்ணிக்கை, அக்குறை மதிப்பீட்டிற்கும் கூட போதாத உணவுப் பொருட்கள் என்ற சதிகளின் மேல், உணவுப்பொருட்களைக் காவிச் சென்ற பாரவூர்திகளையும் தனது வான்படையைக் கொண்டு அழித்துக் கொண்டது.

எந்த இடத்திலும் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதைத்தவறு என்று சொல்லுவதில் ஓர் பழையும் இல்லை. இதைத்தவிர இந்த இடத்தில் மேற்குலம் ஒன்று சேர meriupol massacre என்று வர்ணிக்கும் போது அதை முள்ளிவாய்க்காலுடன் தோடர்புபரத்தி மேற்குலக ஆதரவை எடுக்க வேண்டும். நான் பல மேற்குலக நண்பர்களோடு கதைக்கும் போது இத்த உதாரணங்களை சொல்லி videoஅவை அனுப்பும் போது தான் அவர்களுக்கு இதுபற்றிய விளக்கம் வந்தது. அது மட்டுமல்ல இரஸ்ஸியா தான் இலங்கையை ஐநா போர் குற்றத்திலிருந்து  காப்பாற்றுகின்றது. அது போதும் எனக்கு யுக்கிரேனை ஆதரிப்பதற்கு. ரஞ்சித் நல்ல ஆக்கம்👌

  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bayraktar TB2 drones. Photograph: Efrem Lukatsky/AP. ...
Switchblade drones. Photograph: U.S. Marine Corps/Cover-Images.com. ...
Stinger missiles. Photograph: Valda Kalniņa/EPA. ...
Javelin missiles. Photograph: AP. ...
Portable anti-tank weapons. ...
Light anti-tank Weapon missiles. ...
Starstreak anti-aircraft missiles. ...
Mi-17 helicopters.

 

What weapons have other countries supplied to Ukraine?

The west’s military assistance began cautiously but now includes drones that can destroy Russian tanks

 

US soldiers aim a Stinger missile launcher during a military exercise in Yeonchun, South Korea. US soldiers aim a Stinger missile launcher during a military exercise in Yeonchun, South Korea. Photograph: Chung Sung-Jun/Getty Images

 
Thu 17 Mar 2022 15.34 GMT
  •  
  •  
  •  
 
 

The US president, Joe Biden, has announced an $800m (£610m) package of arms to Ukraine as the west steps up military aid against invading Russia forces.

The west’s military assistance to Ukraine began cautiously with helmets and flak jackets but now includes drones that can destroy Russian tanks and artillery from 50 miles away.

 

The west has repeatedly refused to enforce a no-fly zone over Ukraine but is now supplying a range of powerful weapons. They include:

Bayraktar TB2 drones

 

A Turkish-made Bayraktar TB2 drone is displayed during a rehearsal of a military parade dedicated to Independence Day in Kyiv, Ukraine.  Photograph: Efrem Lukatsky/AP

These Turkish-made drones featured prominently in videos at the start of the invasion. They showed a number of successful attacks against Russian tanks and armoured vehicles. They have since became less effective after Russia set up air defences in the battlefield. Turkey began selling the TB2 drones to Ukraine in 2019. Turkish officials have refused to disclose how many, but independent estimates reckon Ukraine has up to 50 TB2s.

Aaron Stein, director of research at the US Foreign Policy Research Institute, described them as the “Toyota Corolla of drones”. He said: “It doesn’t do everything that your high-end sports car does, but it does 80% of that. So even for a high-end military, like the US the basic concept of using in an attritable, cheap platform to strike a superior force has inherent value.”

Switchblade drones

 

U.S. Marine launches a Switchblade Drone during a training exercise at Camp Lejeune, Nort Caroline, 7 July 2021.  Photograph: U.S. Marine Corps/Cover-Images.com

Advertisement

Biden’s “unprecedented assistance” includes 100 drones, which officials have said are the Switchblade or “kamikaze drone” that explode on impact. Each drone is folded into a lightweight mortar launcher. Once it is fired the drone’s wings open out as the weapon is guided to its target. The most powerful version travels at 115mph and has a range of 50 miles. A lighter version has a range of six miles.

Stinger missiles

 

US service personnel fire a Stinger missile from their Stryker armoured fighting vehicle during the Saber Strike 22 military exercise in Rutja, Estonia.  Photograph: Valda Kalniņa/EPA

The latest US package includes 800 Stinger anti-aircraft systems in addition to more than 600 already promised. The FIM-92 Stinger is a “man-portable air-defence system” – or Manpads – that is typically used by ground troops but can also be used from helicopters. This type of weapon was seen as crucial to the mujahideen’s successful guerrilla conflict in the Soviet-Afghan war in the 1980s. Germany has also pledged to send 500 Stinger missiles.

Javelin missiles

 

Ukrainian soldiers use a launcher with US Javelin missiles during military exercises in Donetsk region  Photograph: AP

Advertisement

The Javelin is an anti-tank missile system that uses thermal imaging to find its target. The latest US package includes 2,000 of these missiles. They can be fired from a shoulder launcher or from the ground.

Portable anti-tank weapons

 

A member of the Territorial Defence Forces trains to operate an AT4 anti-tank launcher during military exercises in Ukraine.  Photograph: Valentyn Ogirenko/Reuters

The White House says it is sending 6,000 AT4 portable anti-tank weapons as part of the package outlined by Biden. The Swedish-made 84mm-calibre weapon has a range of 500 metres. It requires little training to use, but is single-shot so it has be discarded after it is fired. Thousands more anti-tank weapons are being supplied by European countries. These include Germany, which has pledged 1,000 anti-tank weapons from its inventory; Norway with 2,000; and Sweden, which has delivered 5,000.

Light anti-tank Weapon missiles

 

A Ukrainian soldier holds a Next Generation Light Anti-tank Weapon (NLAW) that was used to destroy a Russian armoured personal carrier (APC) in Irpin, north of Kyiv, on 12 March 2022.  Photograph: Sergei Supinsky/AFP/Getty Images

Advertisement

The UK has sent 3,615 of these British-Swedish-made short-range next generation light anti-tank weapons – or NLAW missiles. Hundreds more are also expected to be sent at a cost of £120m. The missiles weigh only 12.5kg and are just over 1 metre long, making them easy for infantry to use. They have a maximum range of just 800 metres. The US has also pledged 1,000 light anti-armour weapons.

https://www.theguardian.com/world/2022/mar/17/what-weapons-have-other-countries-supplied-to-ukraine

இவ்வளவு ஆயுதங்கள், மேற்கால் கொடுக்கப்பட்ட ஆயுதங்கள், 34 மில்லியன் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் , 40 நாடுகளின் இராணுவ ஆலோசனைகள்,  மேற்குலகின் பிரச்சார ஊடகங்கள் இவ்வளவும்  யூக்ரேனுக்கு  உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒருவருடைய சுய ஆக்கம், அதை முழுமையாக எழுத விடாமல்; எதோ மற்றையவர்கள் ஒன்றும் அறியாத உலக விடயங்களாக இவர்களாக கருதிக்கொண்டு...  சிரியா முதல் சமாறா வரை நடந்த யுத்தங்களின் படங்கள், பாவித்த ஆயுதங்கள் என்று இந்த திரியில் குப்பை கொட்டுவது அநாகரீகமாகவே தோன்றுகிறது.
இதை எப்படி கையாளலாம், ரஞ்சித் தனது ஆக்கத்தை எழுதி முடிய, அந்த  கட்டுரை குறித்த ஒரு பார்வை, விமர்சனமாக நீங்கள் ஒரு திரியை திறக்கலாம். அப்போது ரஞ்சித் பயன்படுத்திய தலைப்பில் இருந்து தரவுகள் வரை பல கேள்விகள் கேட்கலாம், கண்டனம் தெரிவிக்கலாம்.
அதுவரையிலும் அவசர உடுக்கை அடித்து உரு ஏறாமல், மற்றையவர்களுக்கும் உரு ஏற்றாமல் பொறுமை காக்கலாம்.

முள்ளிவாய்க்கால் அவலத்தை பொழுதனிக்கும் மனதிலும் சுமந்து , அதன் வலியையும், கொடூரத்தையும் பிறரிடம் செய்தியாக காவித்திரியும் பல நல்லுள்ளங்களையும் இந்த ஒரு உலக நடப்பு பற்றிய அவர்களின் பார்வை காரணமாய் எதோ தேசத்துரோகம் செய்தவர்கள் போல ஒரு விம்பத்தையும் காட்டுகிறார்கள்... 😥

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Sasi_varnam said:

தேசத்துரோகம் செய்தவர்கள் போல ஒரு விம்பத்தையும் காட்டுகிறார்கள்

உண்மை, இதை நான் உணர்கிறேன் சசி !

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Sasi_varnam said:

இது ஒருவருடைய சுய ஆக்கம், அதை முழுமையாக எழுத விடாமல்; எதோ மற்றையவர்கள் ஒன்றும் அறியாத உலக விடயங்களாக இவர்களாக கருதிக்கொண்டு...  சிரியா முதல் சமாறா வரை நடந்த யுத்தங்களின் படங்கள், பாவித்த ஆயுதங்கள் என்று இந்த திரியில் குப்பை கொட்டுவது அநாகரீகமாகவே தோன்றுகிறது.
இதை எப்படி கையாளலாம், ரஞ்சித் தனது ஆக்கத்தை எழுதி முடிய, அந்த  கட்டுரை குறித்த ஒரு பார்வை, விமர்சனமாக நீங்கள் ஒரு திரியை திறக்கலாம். அப்போது ரஞ்சித் பயன்படுத்திய தலைப்பில் இருந்து தரவுகள் வரை பல கேள்விகள் கேட்கலாம், கண்டனம் தெரிவிக்கலாம்.
அதுவரையிலும் அவசர உடுக்கை அடித்து உரு ஏறாமல், மற்றையவர்களுக்கும் உரு ஏற்றாமல் பொறுமை காக்கலாம்.

முள்ளிவாய்க்கால் அவலத்தை பொழுதனிக்கும் மனதிலும் சுமந்து , அதன் வலியையும், கொடூரத்தையும் பிறரிடம் செய்தியாக காவித்திரியும் பல நல்லுள்ளங்களையும் இந்த ஒரு உலக நடப்பு பற்றிய அவர்களின் பார்வை காரணமாய் எதோ தேசத்துரோகம் செய்தவர்கள் போல ஒரு விம்பத்தையும் காட்டுகிறார்கள்... 😥

முழு உலகத்தாலும் கைவிடப்பட்ட முள்ளிவாய்க்கால் எங்கே, முழு மேற்குலகும் ஆயுதம் அள்ளிக்கொடுக்கும்/மக்கள் மீதான தாக்குதல் முடிந்த அளவு தவிர்க்கப்படும் உக்ரேன் எங்கே ?

முள்ளிவாய்க்கால் என்ன உங்கள் எல்லோருக்கும் கிள்ளுக்கீரையா போவோர் வருவோர் எல்லாம் நுள்ளிப் பார்ப்பதற்கு ?

 

ரஞ்சித் தனது ஆக்கத்தை விமர்சிக்க வேண்டாம் என்று கூறட்டும். எல்லா விமரிசனங்களும் முடிவுக்கு வரும்.  

சொல்வாரா ? 

அவர் அப்படிச் சொல்லாதவரைக்கும் நீங்கள்தான் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். 

😏

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் எழுதி முடிக்கும்வரையாவது உங்களின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தூற்றுதல்களையும் சற்று ஒதுக்கிவைய்யுங்கள்.

ஏனென்றால், உங்களின் குறுக்கு விசாரணைகளுக்குப் பதிலளிக்க முற்படுவதால் நான் எழுத நினைப்பது நீண்டு செல்கிறது.

உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி!

 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ரஞ்சித் said:

நான் எழுதி முடிக்கும்வரையாவது உங்களின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தூற்றுதல்களையும் சற்று ஒதுக்கிவைய்யுங்கள்.

ஏனென்றால், உங்களின் குறுக்கு விசாரணைகளுக்குப் பதிலளிக்க முற்படுவதால் நான் எழுத நினைப்பது நீண்டு செல்கிறது.

உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி!

ரஞ்ஜித்,  நீங்கள்... 
மரியபோலை, முள்ளிவாய்க்காலுடன்.. 
முடிச்சுப் போட்டதைத்தான் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாது உள்ளது.
தலைப்பை மாற்றினால், அதுக்குப்  பிறகு, குறுக்கீடு இருக்காது என நினைக்கின்றேன்.

உங்களின், புரிந்துணர்விற்கு... நன்றி!!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, ரஞ்சித் said:

நான் எழுதி முடிக்கும்வரையாவது உங்களின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தூற்றுதல்களையும் சற்று ஒதுக்கிவைய்யுங்கள்.

ஏனென்றால், உங்களின் குறுக்கு விசாரணைகளுக்குப் பதிலளிக்க முற்படுவதால் நான் எழுத நினைப்பது நீண்டு செல்கிறது.

உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி!

 

1) இதை ஆரம்பத்தில் கூறியிருக்கலாம். 

2) விமரிசனங்களுக்கு அஞ்சுபவன் பொதுத் த்ளத்திற்கு வரக்கூடாது. வந்தாலும் பொய் புனைவுகளை ஓரளவுக்கு மேல் சொல்லக் கூடாது. அளவு மீறினால் விமரிசனங்கள் வரும். 

3) தூற்றுதலுக்கும் விமரிசனத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாத அளவில்தான் உங்கள் புரிதலின்அளவு உள்ளதென்றால் நீங்கள் எழுதும் கட்டுரையும் அதே அளவிலான புரிந்துகொள்ளலின் அடிப்படைல்தான் எழுதப்படுகிறதென்று பொருள்படும். ஆகவே முள்ளிவாய்க்காலுக்கும் மரியுபோலிற்கும் இடையில் முடிச்சுப்போடும் உங்களின் புரிதலின் அளவை புரிந்துகொள்கிறேன். 

4) இத்துடன் உங்கள் புனைவுகளின் மீதான விமரிசனங்கள் நிறுத்தப்படுகிறது( திரும்பவும் இதற்குப் பதில் எழுதாதீர்கள் புண்ணியமாப் போகும்)

விமரிசனங்களை ஏற்கமாட்டாதவர்கள் தயவுசெய்து அதனை முன்கூட்டியே தெரியப்படுத்தி எங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

4-FD22-FEA-0-B03-47-A9-9-E7-A-4-EAE05489
 

@Kapithan

வணக்கம் அண்ணா, அவர் முதலே உங்கள் எல்லோரிடம் கேட்டிருந்தார்.. ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் எழுதியிருந்தார்.. ஆனால் ஒருவரும் கவனிக்கவில்லை???? கவனித்திருந்தால் நேரத்தை வீண் விரயமாக்கியிருந்திருக்க மாட்டீர்கள்.. 

உண்மையில் உங்கள் எல்லோருக்கும் துரோகத்தின் நாட்காட்டி எழுதும் அவரால் நீங்கள் நினைப்பது போல இருக்கவில்லை என்ற கோபமோ என நினைக்கிறேன்.

அங்கே கூட அவர் அப்படி எழுதுவதை ஒருபட்ச கட்டுரை என சிலர் கூறினார்கள் பின் அவர் கேட்டுக்கொண்ட படி விலகியே இருந்தார்கள். இங்கே மட்டும் இது தனது சொந்த ஆக்கம் என கூறியபின்பும் எத்தனை இடையூறுகள்..

நன்றி..

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

4-FD22-FEA-0-B03-47-A9-9-E7-A-4-EAE05489
 

@Kapithan

வணக்கம் அண்ணா, அவர் முதலே உங்கள் எல்லோரிடம் கேட்டிருந்தார்.. ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் எழுதியிருந்தார்.. ஆனால் ஒருவரும் கவனிக்கவில்லை???? கவனித்திருந்தால் நேரத்தை வீண் விரயமாக்கியிருந்திருக்க மாட்டீர்கள்.. 

உண்மையில் உங்கள் எல்லோருக்கும் துரோகத்தின் நாட்காட்டி எழுதும் அவரால் நீங்கள் நினைப்பது போல இருக்கவில்லை என்ற கோபமோ என நினைக்கிறேன்.

அங்கே கூட அவர் அப்படி எழுதுவதை ஒருபட்ச கட்டுரை என சிலர் கூறினார்கள் பின் அவர் கேட்டுக்கொண்ட படி விலகியே இருந்தார்கள். இங்கே மட்டும் இது தனது சொந்த ஆக்கம் என கூறியபின்பும் எத்தனை இடையூறுகள்..

நன்றி..

 

 

வணக்கம் பிரபா, 

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர் தனது கட்டுரையை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தெளிவாக/வெளிப்படையாகக் கூறவில்லை. பலதடைவைகளில்  விமரிசனம் வேண்டாம் என்று ரஞ்ஜித் வெளிப்படையாகக்  கூறும்படி  குறிப்பிட்டிருந்தேன். தற்போதுதான் நேராகவே கூறியிருக்கிறார். நல்ல விடயம். 

1) எனக்கு உள்ள கடுங்கோபம் முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது. 

2) தவறான தகவல்கள், பக்கச்சார்பான, முழுமையற்ற கருத்துக்கள் (என நான் கருதும்) வரும்போது அதனை விமர்சிக்கிறேன். ஆனாலும் தற்போது குறிப்பிட்டுள்ளதுபோல ஆரம்பத்தில் தனது கட்டுரையை விமர்சிக்க வேண்டாம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தால் இந்தப் பிரச்சனையை பெருமளவு தவிர்த்திருக்கலாம் என நம்புகிறேன். 

மற்றது..

சக மனிதனது துன்பத்தை நியாயப்படுத்தும் எவனும் மனிதன் இல்லை என்பது எனது நிலைப்பாடு. ஆதலால் பொது மக்களது அழிவில் பெருமைகொள்ள எதுவுமே இல்லை. அது உக்ரேனாகட்டும் அல்லது பலஸ்தீனமாகட்டும். 

துரோகத்தின் நாட்காட்டியை நினைவுபடுத்தியதற்கு நன்றி பிரபா, 

துரோகத்தின் நாட்காட்டியை நான் பெரிதாக வாசிப்பதில்லை. அதற்குக் காரணம்

1) முரளிதரனது செயற்பாடு எங்களால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் அவரும் ஒரு தமிழர், எமது போராட்ட/துரோக வரலாற்றில் அவருக்கும் பெரும் பங்கிருக்கிறது. இதனை எம்மால் மாற்ற முடியாது. எனவே அது தொடர்பாக எழுதப்படவேண்டி இருந்தாலும் அதுவும் ஒருவகை எமது பல்லைத் தோண்டி மணக்கக் கொடுக்கும் வேலைதானே. அதனால் அதனை வாசிக்கும்போது ஏற்படும் வேதனையும் வெட்கமும் மேற்கொண்டு வாசிப்பதைத் தடுக்கிறது. 

2) துரோகத்தின் நாட்காட்டியில் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக எனக்கு எதுவுமே தெரியாது. ஆகவே அது தொடர்பாக என்னால் கருத்துக்கூற முடியாது. 

 

தற்போது என்னுள் எழும் கேள்வி.

உக்ரேன் தொடர்பான கட்டுரையில் உள்ள(தாக நான் கருதும்) பக்கச்சார்பும் தவறான தகவல்களும், துரோகத்தின் நாட்காட்டியில் இருக்காதா ?

இந்தக் கட்டுரையும் அதனை விமர்சிக்கும்போது எழும் அவரது கோபமும்  ரஞ்ஜித்தின் ஏனைய எழுத்துக்களில் உள்ள நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறதே ?

 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அதெல்லாம் முடியாது.. கருத்து எல்லாம் எழுதாம இருக்கமுடியாது.. நாலுபேர் வந்து சொல்லுவினமாம் நாங்கள் கருத்து எழுதாமல் இருக்க யாழ் என்ன அந்த நாலுபேர் வீட்டு அப்பன் ஆத்தா சொத்தா..? நிர்வாகம் அடிச்சுக்கலைக்கும் வரை நாங்கள் கருத்து எழுதிக்கொண்டேதான் இருப்பம்.. கப்பித்தன் அப்படி எல்லாம் அவசரப்பட்டு கருத்து எழுதமாட்டன் எண்டு வார்த்தையை விடாதேங்கோ.. அப்புரம் இவர்கள் உருட்டுற உருட்டை எல்லாம் வாசகர்களுக்கு மறுத்து எழுதுறது ஆராம்.. அதமாரி நாம உருட்டரப்போ மற்றவர்களும் எழுதோனும்.. அப்பதான் கருத்துக்களம் உசிரோட இருக்கும்.. சரியெண்டா சரியெண்டு சொல்லி பாராட்டுவம் தவறு எண்டால் தவறை சுட்டி காட்டி எழுதுவம்.. நாலுபேர் நாலுகருத்து எழுதி விவாதிக்காட்டி ரஞ்சித்தின்ர திரி ஒரே ஆமாப்பாட்டில சப்பெண்டு போயிடும்.. ஒருத்தனும் வாசிக்க வரான்.. இந்த ஆமாம் சாமியளை பக்கத்தில வச்சிருந்தா எப்பவும் வச்சிருக்கிறவருக்கு ஆபத்துதான்.. அதெல்லாம் முடியாது எழுதாமல் இருக்க.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 4
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உக்ரேனில் ரஸ்ஸியா நிகழ்த்திவரும் போர்க்குற்றங்கள்

Mariupol Hospital in Ukraine destroyed by Russian bomb attack

கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலான காலப்பகுதியில் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு ராணுவம் உக்ரேனின் மருத்துவமனைகள், காயப்பட்டோரைப் பராமரிக்கும் நிலையங்கள், நோயாளர் காவு வாகனங்கள், வைத்தியர்கள், காயப்பட்ட பொதுமக்கள், பாலகர்கள் என்று பல சிவிலியன் இலக்குகள் மீது கண்மூடித்தனமான விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதுவரை பதிவுசெய்யப்பட்ட இத்தாக்குதல்களில் குறைந்தது 34 வைத்தியசாலைகளும், நோயாளர் பராமரிப்பு நிலையங்களும் ரஸ்ஸியாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. சர்வதேச ஊடகங்கள் இத்தாக்குதல்களை தொடர்ச்சியாகச் சேகரித்து வருகின்றன.

இவ்வாறான ஒவ்வொரு தாக்குதலின்பொழுதும் ரஸ்ஸியாவின் சர்வாதிகாரி புட்டினுக்கும், அவரது ஏவலாளிகளான ரஸ்ஸிய ராணுவ ஜெனரல்களுக்கும், புட்டினின் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கும்  எதிரான பலமான போர்க்குற்ற விசாரணைக்கான கூக்குரல்கள் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டு வருகின்றன. 

இவர்கள் மீதான போர்க்குற்றங்களை உறுதிப்படுத்துவதற்கு இத்தாக்குதல்கள் வெறும் தற்செயலானவை என்றல்லாமல், வேண்டுமென்றே இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தான் என்பது உறுதிப்படுத்தப்படுதல் அவசியம். ஆனால், தொடர்ச்சியாக நடந்துவரும் இத்தாக்குதல்களைப் பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகவும், மிகக் கடுமையாகவும் நடத்தப்படும் இத்தாக்குதல்கள் உக்ரேனின் பலவீனமான வயோதிபர்கள், சிறுவர்கள், நோயாளிகள், காயப்பட்டவர்கள் ஆகியோரைப் பராமரிக்கும் வைத்தியசாலைகளும் மருத்துவ நிலையங்களும் வேண்டுமென்றே இலக்குவைத்து தாக்கப்பட்டு வருகிறது என்பது புலனாகிறது.

சிவிலியன் கட்டடங்கள் மீது ரஸ்ஸியாவினால் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அப்பகுதிக்கு உடனடியாகச் சென்ற பல சர்வதேச செய்தியாளர்கள் பல குழந்தைகளின் உடல்கள் குண்டுச் சிதறல்களால் சல்லடை போடப்பட்டு, உடல்ப் பாகங்கள் பிடுங்கியெறியப்பட்ட நிலையில் அப்பகுதியெங்கும் சிதறிக் கிடந்ததை சாட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறான உருக்குலைந்து கிடந்த பல அடையாளமற்ற சடலங்களை அத்தாக்குதலில் இருந்து உயிர்தப்பியவர்கள் பாரிய புதைகுழிகளுக்குள் போட்டு மூடியதை அவதானித்திருக்கிறார்கள்.

"இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது , இவை வேண்டுமென்றே சிவிலியன்களை இலக்குவைத்து, பாரிய மனித அழிவை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. ஆகவே இவை போர்க்குற்றங்களாக கருதப்படக் கூடியவைதான்" என்று நியு யோக் பல்கலைக் கழக சட்டத்துறைப் பேராசிரியர் ரையன் குட்மான் கூறுகிறார். "இப்போர்க்குற்றங்களை விசாரிப்பவர்கள், எத்தனை மருத்துவமனைகள் தாக்கப்பட்டன, ஒரே மருத்துவமனை எத்தனை முறை தக்கப்பட்டது, ஒவ்வொரு தாக்குதலுக்கும் இடையில் எவ்வளவு நேர இடைவெளி இருந்தது என்பதையெல்லாம் கணக்கிடுவார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தொடரும்

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைத்தியசாலைகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பிலும் புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் மருத்துவமனைகள் இலங்கை ராணுவத்தாலும் விமானப்படியினராலும் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டும் எம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். 

TamilNet: 13.01.09 Doctors call for attack free zones surrounding displaced  hospitals


வைத்தியசாலைகள் மீதான ரஸ்ஸியாவின் திட்டமிட்ட, ஒருங்கைமைக்கப்பட்ட தாக்குதல்களை குறைந்தது  இரு சர்வதேச செய்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக சாட்சிப்படுத்திவருகின்றன.இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரொப்பா சந்தித்திருக்கும் மிக மோசமான அழிவு யுத்தத்தில் இத்தாக்குதல்கள் போர்க்குற்ற்ங்களாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

இச்செய்தி நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்ச் சேகரிப்பில், தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள், சிவிலியன் குடியிருப்புக்கள் மற்றும் சிவிலியன் கட்டுமானங்கள் மீதும் ரஸ்ஸியா வேண்டுமென்றே நடத்திவரும் திட்டமிட்ட அழிப்பும் உள்ளடக்கப்பட்டு வருகிறது. இச்செய்தி நிறுவனங்களின் கருத்துப்படி, உக்ரேன் மீது ரஸ்ஸியா நடத்திவரும் அழித்தொழிப்பு யுத்தம் நடக்கும் காலம்வரை இத்தகவல்கள் தொடர்ச்சியாகச் சேகரிக்கப்பட்டு வரும் என்று தெரியவருகிறது. இவ்வாறு தகவல் சேகரிப்பதன் நோக்கம் ஒன்றுதான். அதாவது, பக்கச்சார்பற்ற, உண்மையான அழிவுகளையும், மக்கள் இறப்பையும் ஆவணப்படுத்துவதன் மூலம் பிற்காலத்தில் இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளுக்கெதிரான சாட்சியங்களைத் தொகுப்பதுதான்.

இச்செய்தி நிறுவனங்களில் ஒன்றான அஷோஷியேட்டட் பிரஸ் அமைப்பு, காணொளிச் சாட்சிகளாகவும், ஒளிப்படங்களாகவும் பல சாட்சியங்களைச் சேகரித்து வைத்திருக்கிறது. அத்துடன், உக்ரேனுக்கு வெளியில் இயங்கும் நிருபர்கள் போரரங்கிலிருந்து தப்பிவரும் மக்களிடமிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும், இழப்புக்கள் பற்றியும் அறிந்து பதிவிடுவதோடு, சமூக வலைத் தளங்களில் பலராலும் தரவேற்றப்பட்டு வரும் ஒளிப்படங்கள் மற்றும் புகைப்படங்களின் நம்பகத்தன்மையினையும் உறுதிப்படுத்தி வருகிறார்கள்ர்கள். 

ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையம் ரஸ்ஸியாவின் தாக்குதல் தொடங்கிய நாளிலிருந்து முதல் நான்கு வாரத்தில் மட்டுமே கொல்லப்பட்ட பொதுமக்களின் இழப்புக்களைப்பற்றிக் குறிப்பிடும்போது, குறைந்தது 1035 சிவிலியன்கள் ரஸ்ஸியாவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இதில் 90 குழந்தைகளும் அடங்குவதாக அது தெரிவிக்கிறது. இதற்கு மேலதிகமாக குறைந்தது 1650 சிவிலியன்கள் இத்தாக்குதல்களில் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதே ஐ நா அறிக்கை இத்தாக்குதல்கள் பற்றி மேலும் கூறுகையில், "முற்றாக அழிக்கப்பட்டு, வீழ்ந்து நொறுங்கியிருக்கும் கட்டிடச் சிதைவுகளுக்கடியில் இன்னும் பலநூற்றுக்கணக்கான மக்கள் இறைந்து கிடக்கவும் வாய்ப்பிருக்கின்றது" என்று கூறியிருக்கிறது. மேலும், மிகக்கடுமையான தாக்குதல்களும், மோதல்களும் நடந்த பகுதிகள் தற்போது ரஸ்ஸிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் உண்மையிலேயே கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை என்பது ஐ நா வினால் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிரது. இது, தமிழ் இனவழிப்பின் ஆரம்பகாலத்தில் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பல தமிழ்க் கிராமங்களில் இருந்து காணாமலாக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலைக்கு ஒப்பானது என்றால் அது மிகையில்லை.

ஆனால், தனது தொடர்ச்சியான கண்மூடித்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்திவரும் ரஸ்ஸியா, பொதுமக்கள் எவருமே இத்தாக்குதலில் கொல்லப்படவில்லையென்றும், கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் அனைவருமே நடிகர்கள் என்றும் விடாப்பிடியாக மறுத்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது 2008 இலிருந்து 2009 வரை வன்னியின் கொலைக்களங்களில் எம்மை அழித்த மகிந்த எனும் போர்க்குற்ரவாளியின் மேற்கோளான, "நாம் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையொன்றினையே அங்கு மேற்கொள்கிறோம். ஒரு தமிழ் மகணுக்கும் இழப்பு ஏற்படாதபடி நாம் யுத்தம் செய்கிறோம். கொல்லப்பட்டதாகக் காட்டப்படும் அனைத்துமே புலிகளின் பிரச்சாரம் தான்" என்று தனது தாக்குதல்களை நியாயப்படுத்தியதை நாம் இத்தருணத்தில் நினைவுபடுத்துவது தற்போதைய உக்ரேன் நிலைமையினை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். 

தொடரும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதெல்லாம் முடியாது.. கருத்து எல்லாம் எழுதாம இருக்கமுடியாது.. நாலுபேர் வந்து சொல்லுவினமாம் நாங்கள் கருத்து எழுதாமல் இருக்க யாழ் என்ன அந்த நாலுபேர் வீட்டு அப்பன் ஆத்தா சொத்தா..? நிர்வாகம் அடிச்சுக்கலைக்கும் வரை நாங்கள் கருத்து எழுதிக்கொண்டேதான் இருப்பம்.. கப்பித்தன் அப்படி எல்லாம் அவசரப்பட்டு கருத்து எழுதமாட்டன் எண்டு வார்த்தையை விடாதேங்கோ.. அப்புரம் இவர்கள் உருட்டுற உருட்டை எல்லாம் வாசகர்களுக்கு மறுத்து எழுதுறது ஆராம்.. அதமாரி நாம உருட்டரப்போ மற்றவர்களும் எழுதோனும்.. அப்பதான் கருத்துக்களம் உசிரோட இருக்கும்.. சரியெண்டா சரியெண்டு சொல்லி பாராட்டுவம் தவறு எண்டால் தவறை சுட்டி காட்டி எழுதுவம்.. நாலுபேர் நாலுகருத்து எழுதி விவாதிக்காட்டி ரஞ்சித்தின்ர திரி ஒரே ஆமாப்பாட்டில சப்பெண்டு போயிடும்.. ஒருத்தனும் வாசிக்க வரான்.. இந்த ஆமாம் சாமியளை பக்கத்தில வச்சிருந்தா எப்பவும் வச்சிருக்கிறவருக்கு ஆபத்துதான்.. அதெல்லாம் முடியாது எழுதாமல் இருக்க.. 

பாலபத்திர ஓணாண்டியாரே... நீங்கள் சொல்வது  சரியான கருத்து.
ரஞ்சித்.... மற்றவர்களை கருத்து எழுத வேண்டாம் என்று, 
எல்லோருடைய கைகளையும் கட்டிப் போட்டு, தனிய நின்று.. 
முள்ளிவாய்க்காலை.... உக்ரேனுடன்  உருட்டி, விளையாட பிளான் போட்டிருக்கிறார்.
அதனை... கண்டு பிடித்த உங்களுக்கு நன்றி. 👍 👏🙏 🙂

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee   “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/  
    • சிலரின் அமைதி திமிர் அல்ல அது அவர்களுக்குள் இருக்கும் வலி..
    • வைரமுத்துவின் இரங்கல் பா...   10 பேர் கூட இல்லாத கடைசி ஊர்வலம் இளங்கோவன் செய்த கேவலமான செயல்களுக்கு இதுவே சாட்சி! ஒருவன் இறப்பில் தான் தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று இதிலிருந்து தெரிகிறது இந்த இளங்கோவன் யார் என்று!    
    • ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து  வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.  
    • சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.