Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களை, பட்டினியாக கிடக்க...  இந்தியா விடாது – ஆனந்தசங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை பட்டினியாக கிடக்க இந்தியா விடாது – ஆனந்தசங்கரி

எங்களை, பட்டினியாக கிடக்க...  இந்தியா விடாது – ஆனந்தசங்கரி

பிரதமர் ரணில் இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எங்களை பட்டினியாக கிடக்க எங்கள் தாய்நாடு இந்தியாவும் எமது சகோதரங்களும் விடாது எனவே நாங்கள் கேட்காமல் முதல் வருவது இந்தியா தான். பஞ்சம் வராமல் பார்க்க கூடிய மனப்பான்மை இந்தியாவுக்கு இருக்கின்றது என தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாடு மிக மோசமான நிலையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க போக கூடாது ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது யாராவது நல்ல சிந்தனை தெரிவித்தால் அதனை எல்லோரும் பகிர்ந்து கொள்ள கூடிய கடமை இருக்கின்றது எனவே மக்களுடைய தேவையை உணர்ந்து நாட்டுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நாட்டில் இன்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற நேரத்தில் அரசியலில் ஒரு ஒற்றுமையை கொண்டுவரக் கூடிய நிலமையை உருவாக்கியிருக்க வேண்டும். எனவே ரணில் அல்ல எவர் இந்த பதவிக்கு வந்தாலும் அதைதான் தெரிவிப்பேன். இந்த பிரச்சனையை தனியாக தீர்க்க முடியாது

ஜுன் மாத்தில் உணவு பஞ்சம் ஏற்படப் போவதாக பிரதமர் ரணில் தெரிவிப்பது அவர் கோணத்தில் சரியாக இருக்கலாம் என்னுடைய கோணத்தில் இருந்து பார்க்கும் போது அது பிழையாக தெரிகின்றது எங்களுடைய எல்லா விடையங்களுக்கும் எதிர்பார்ப்பது எங்களுடைய தாய்நாடான  இந்தியாவை. எனவே நாங்கள் இந்தியாவுக்கு சொல்ல தேவையில்லை இந்தியா தானாக செய்யக்கூடிய விடையங்களை செய்து வருகின்றது

தமிழ் தலைமைகளுக்கு இராஜதந்திரம் தெரியாது வாயைக் கொடுத்து பழுதாக்குகின்றனர்.  எனவே நல்லது கெட்டது இந்தியாவுக்கு தெரியும் மகாத்துமா காந்தி காலத்தில் மாகாத்மா காந்தி இலங்கையும் இந்தியாவுத் சண்டை பிடிக்க இயலாது என சொல்லிவைத்து சென்றுள்ளார்.

எனவே அனுபவரீதியாக பார்த்தால் சுனாமி காலத்தில் முதல் முதலில் இந்திய மருத்துவதுறையின் உடனடியாக வந்து செயற்பட்டார்கள் இவ்வாறு பல நெருக்கடியான நிலையில் இந்தியா உடன் வந்து உதவி புரிந்துள்ளது எனவே நாங்கள் கேட்காமல் முதல் வருவது இந்தியா தான். ஆகவே இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக மக்களை பயப்படுத்தாமல் உற்சாகம் ஊட்டவேண்டும்.

ஊடகங்களுக்கு ஒரு புனிதமான கடமை இருக்கின்றது எது சரியோ அதை மக்களுக்கு தெரியப்படுத்துவது சில ஊடகங்கள்  குத்தகைக்கு சிலரை வளர்க்கின்ற மனப்பான்மையை கைவிடவேண்டும் ஊடகவியலாளர்களுக்கு ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரத்தை அதனை கட்டளையாக ஏற்று இனமத பேரம் இல்லாமல் நாட்டின் நன்மை கருதி செயற்படவேண்டும்.

தமிழ் விடுதலை கூட்டணி ஆரம்பிக்கும் போது என்ன மனப்பான்மையுடன் கொள்கைகளை கொண்டிருக்கின்றதே அதே செயற்பாட்டில் எந்த விதமான மாற்றமும் இல்லை சிலர் தமது சுயநலத்துக்காக சிலர் திட்டமிட்டு கட்சியை அப்படி கொண்டுவந்துள்ளனர் ஆனால் கட்சி கட்சியாக தான் இருக்கின்றது தலைமை புனிதத்துவமாகவும் இருக்கின்றது எனவே மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

கட்சியின் தலைவர் என அண்மைகாலமாக சிலர் தங்களை தாங்களபக அறிவித்தனர் இது ஒரு ஜோக், கூட்டி கழித்து பார்த்தால் அவர்கள் உறுப்பிர்கள் கூட இல்லை 10 பேர் போலி  பணவைப்பு பற்றுசீட்டுன் 2021 ஆண்டு உறுப்பினராக அங்கத்துவம் கேட்டுள்ளனர். சுருக்கமாக சொல்லப் போனால் தாங்கள்தான் கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கட்சியை அழிப்பதற்கு திட்டம் போட்டு செயற்பட்டனர்.

விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை திட்டமிட்டு அழித்தமாதிரி நிலமையை கொண்டுவந்தவர்கள் அதனை மட்டக்களப்பு மறுமலர்ச்சி கழகம் காப்பாற்றி வைத்தது

அந்த நேரத்தில் மறுமலர்ச்சி கழகம் செய்த பணி மறக்க முடியாத பணி அவர்களது முயற்சியின் படி போயிருந்தால் 2004 ம் ஆண்டு ஏப்பிரல் 2ம் திகதி தேர்தல் முடிந்த அன்று நாடு சுதந்திரம் அடைந்த மாதிரி எல்லோரும் சம உரிமையோடு வாழக்கூடிய வாய்ப்பை விடுதலைப் புலிகளின் ஆதரவோடு தீர்வு கண்டிருக்கும் ஆனால் துரஸ்டமாக யுத்தம் 6 ஆண்டு தொடர்ந்தது.

அந்த 6 ஆண்டு எத்தனையே அனர்த்தங்கள் நடக்கும் போது காப்பாற்ற வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  காப்பாற்றாமல் வாய்திறக்காமல் ஒளித்திருந்ததுடன் அரைவாசிபேர் வெளிநாட்டில் இருந்தார்கள்.

அப்போது நான் வன்னியில் 3 இலச்சம் மக்கள் இருப்பதாக ஜனாதிபதி மகிந்தவிடம் தெரிவித்தேன் அப்போது அவர் சத்தம் போட்டு கத்தினார் உனக்கு யார் சொன்னது என்று பின்னர் நான் சொல்லித்தான் அங்கு 3 இலச்சம் மக்கள் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்தார்

எனவே இந்த 3 இலச்சம் பேரின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் அந்த யுத்த காலத்தில் இந்தியாவில் 22 பேர் தீக்குளித்தனர் ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட இராஜினாமா செய்ததில்லை இந்த 3 இலச்சம் உயிருக்கும் மானிட ஜாதிகள் பெறுப்பேற்க வேண்டும்

நான் எழுதிய 6 கடிதத்தில் ஒன்றையாவது படித்திருந்தால்  இது நடந்திருக்காது தூரதிஷ்டவசமாக கட்சிக்கு கட்சி ஊடகத்துக்கு ஊடகம் ஓரு இணைப்பு இல்லாதது எல்லோரும் கும்பலில் கோவிந்தா என்று. இப்போ அரோகரா... என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.” என்றார்.

https://athavannews.com/2022/1282836

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, அங்கையும் பஞ்சம் வரலாம் என்று கதைக்கிறாங்க!

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்....

உங்களுக்கு வேற வேலை இல்லை, ஒருத்தர் உடன், ஒருத்தர் அடிபடுவியல்..... உள்ள எல்லா வசதியான ஆட்களை விடமாடியல்... ஒண்டு கடத்தி கப்பம் பறிப்பியல் அல்லது அவர்களின் ஆதனங்களை எரிப்பியல்....

படிச்ச நாடு எண்டு தப்பட்டம் அடிக்கிறது..... படிச்ச ஆட்களை நாட்டிலிருந்து அடித்து திரத்திப்போட்டு, படிக்காத கொலை பாதக அடி முட்டாளுக்கு நாட்டை ஆள விடுவியல். அந்த வலு கெட்டிக்காரன்  விவசாயத்திலை, சேதன பசலை பாவிக்கப்பட்டது எண்டு, ஒரு நாளிரவு பே மப்பில ஆர்டர் போடுவாராம்..

உதெல்லாம் செய்து போட்டு, அந்த முட்டாளை வைத்துக்கொண்டே.... பக்கத்து வீட்டுக்காரன் கைவிடான்... பசிக்கு சோறு தருவான் எண்டால் என்ன நியாயம் அய்யா.. 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆனந்தசங்கரியாருக்குப் பஞ்சமா ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாடு மிக மோசமான நிலையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க போக கூடாது ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது யாராவது நல்ல சிந்தனை தெரிவித்தால் அதனை எல்லோரும் பகிர்ந்து கொள்ள கூடிய கடமை இருக்கின்றது எனவே மக்களுடைய தேவையை உணர்ந்து நாட்டுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நாடும் மக்களும் பஞ்சத்தில் அல்லோலகல்லோல பட ஆனந்தசங்கரிக்கு உல்லாச விடுதியில் என்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

என்ன ஆனந்தசங்கரியாருக்குப் பஞ்சமா ? 

உடும்பு இறைச்சி இருக்கையில் நமக்கென்ன பயம்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எங்களுடைய எல்லா விடையங்களுக்கும் எதிர்பார்ப்பது எங்களுடைய தாய்நாடான  இந்தியாவை. எனவே நாங்கள் இந்தியாவுக்கு சொல்ல தேவையில்லை இந்தியா தானாக செய்யக்கூடிய விடையங்களை செய்து வருகின்றது

இத்தனை லட்ஷம் மக்கள் இறந்தபோது, அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டபோது, ஏதிலிகளாக்கப்பட்டபோது இந்தியா என்ன செய்தது? என்ற சங்கதியையும்  எடுத்து விடுங்கோ சங்கரியாரே!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே போனா அங்காலை அடுத்தடுத்த நாடுகளையும் வருசைப்படுத்தலாம் ஐயா...நீங்க அப்படியே உல்லாசமா உல்லாச விடுதியில் இருந்து கொள்ளுங்க...இருக்கிற கொஞ்ச நஞ்ச சனமும் பசி பட்டினியில கிடக்கட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாடும் மக்களும் பஞ்சத்தில் அல்லோலகல்லோல பட ஆனந்தசங்கரிக்கு உல்லாச விடுதியில் என்ன வேலை?

ஆடின காலும், பாடின வாயும் சும்மா கிடவாது சங்கரியாருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இத்தனை லட்ஷம் மக்கள் இறந்தபோது, அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டபோது, ஏதிலிகளாக்கப்பட்டபோது இந்தியா என்ன செய்தது? என்ற சங்கதியையும்  எடுத்து விடுங்கோ சங்கரியாரே!

என்னது அழிக்கப்பட்ட போதா?

அழித்ததே இந்தியா தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது யாராவது நல்ல சிந்தனை தெரிவித்தால் அதனை எல்லோரும் பகிர்ந்து கொள்ள கூடிய கடமை இருக்கின்றது 

தாய்மாரே, பெரியோர்களே ஐயாவுக்கு ஒரு அவார்டு கிடைத்ததெல்லோ. எப்படி,ஏன் கிடைத்தது  என்று மனச்சாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தாய்மாரே, பெரியோர்களே ஐயாவுக்கு ஒரு அவார்டு கிடைத்ததெல்லோ. எப்படி,ஏன் கிடைத்தது  என்று மனச்சாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

கட்டிக் கொடுத்தமைக்காக கிடைத்த அவார்டு.
அத்துடன் ஒரு கோடி ரூபாயும், சன்மானமாக கொடுத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நிராகரித்ததைக் கூட புரிய முடியாமல் ஓர் கட்சித் தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சத்திலும்,சிங்களவர் விரும்பியதையே  தமிழர்  பெற வேண்டும் அல்லது கூடாது என்ற ஒழுங்கை இலங்கைத்தீவில் நிலைநாட்ட கிந்தியா  நாண்டு பிடிக்கிறது . 

பழம் திண்டு கோட்டை போட்ட சங்கரிக்கு, புரியவில்லையா அல்லது அறளை பெயர்ந்து விட்டதா? 

கிந்தியா, தமிழர்கள் என்ற வழித்தேங்காயை சுக்கு நூறாக அடித்தேனும், சிங்களத்தின் மனதை வெல்வதே கிந்தியாவின் மூலோபாய நோக்கம். 

இப்போது, சிங்களத்துக்கு கட்டமைப்பு இனப்படுகொலைக்கு  வேண்டிய எல்லாவிதமான சூழலையும், வசதியையும்,  13 என்ற பன்னாடையை தமிழர்  என்ற வண்டில்  மாட்டுக்கு முன்னால்  பிடித்து, உருவாக்கி வருகிறது.     

ஆனந்த சங்கரி, சம்பந்தன் போன்றவர்களுக்கு ஓர் பாரிய பொறுப்பு இருக்கிறது. எமது அடுத்த சந்ததி கிந்தியவை  (பிரச்சனைகளுக்கு) முதலில் சிந்திக்காத சந்ததியாக உருவாக்குவது.  

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விடாது தான்.. காட்டிக்கொடுக்கிறவைக்கு.. ஹிந்தியக் கூலிகளுக்கு படியளப்பினம் தானே.

அதற்காக தமிழ் மக்களை ஹிந்திய இராணுவத்தை ஏவியும்.. சிங்கள இராணுவத்தை ஏவியும் இனப்படுகொலை செய்த ஹிந்தியா தமிழர்களை பட்டினி போடாது என்று சொல்ல இவர் யார்..?! முள்ளிவாய்க்கால் கஞ்சி சாட்சியம்.

எத்தனையோ நல்ல ஜென்மங்களுக்கு எல்லாம் என்னென்னவோ நடக்குது.. இப்படியான கறுமாந்திரங்களை மட்டும் இன்னும் இனத்தை அழிக்க விட்டு வைச்ச மாதிரி இருக்குது.

இதொன்டு.. டக்கிளசு.. சம்பந்தன்.. சித்தார்த்தன்.. என்று கொஞ்சம் இன்னும் இருந்து கொண்டு பழைய எஜமானர்களுக்கு ஜால்ரா போடுவதையே தொழிலா வைச்சிருக்குதுங்க. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.