Jump to content

உலகில் வேகம் குறைந்த வீதிகளைக் கொண்ட நாடாக இலங்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் வேகம் குறைந்த வீதிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வீதிப்போக்குவரத்து வேகம் பொலிவியாவை போன்று மணித்தியாலத்துக்கு  50 கிலோ மீற்றர் என்ற அளவிலேயே உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த வேகம் குறைந்த  வீதிகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக  சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பங்களாதேஷ் மற்றும் நிக்கரகுவா ஆகிய நாடுகளை காட்டிலும் முன்னிலையில் உள்ளது.

இந்த நாடுகளில் முறையே மணித்தியாலத்துக்கு 41 கிலோ மீற்றர் மற்றும் 46 கிலோமீற்றர் என்ற வேகமுறையே நடைமுறையில் உள்ளது.

வேகம் குறைந்த வீதிகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது, இதன் சராசரி வீதி வேகம் மணிக்கு 58  கிலோமீற்றர் ஆகும்.

ஆப்கானிஸ்தானில் 57 கிலோமீற்றர், மங்கோலியா 56 கிலோமீற்றர், இந்தோனேசியாவில் 55   கிலோமீற்றர் 

உலகின் வேகம் கூடிய நாடுகளாக  அமெரிக்கா 107 கிலோ மீற்றர், போர்த்துக்கல் 106 கிலோ மீற்றர், சவுதி அரேபியா 106 கிலோ மீற்றர் மற்றும் கனடா 106 கிலோமீற்றர் என்ற வேகமுறையே நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் தொலைதூர சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லக்கூடிய அதிவேக சாலைகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன.

வறுமையை குறைக்கின்றன மற்றும் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிக்கின்றன என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

உலகில் வேகம் குறைந்த வீதிகளைக் கொண்ட நாடாக இலங்கை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பிழம்பு said:

ஆப்கானிஸ்தானில் 57 கிலோமீற்றர், மங்கோலியா 56 கிலோமீற்றர், இந்தோனேசியாவில் 55   கிலோமீற்றர் 

உலகின் வேகம் கூடிய நாடுகளாக  அமெரிக்கா 107 கிலோ மீற்றர், போர்த்துக்கல் 106 கிலோ மீற்றர், சவுதி அரேபியா 106 கிலோ மீற்றர் மற்றும் கனடா 106 கிலோமீற்றர் என்ற வேகமுறையே நடைமுறையில் உள்ளது.

உலகில் வேகம் குறைந்த வீதிகளைக் கொண்ட நாடாக இலங்கை | Virakesari.lk

பாயசம் எங்கடா !! பருப்பு பாயாசமா || சிங்கம்புலி வயிறு குலுங்க சிரிக்க  வைக்கும் காமெடி - YouTube

ஜேர்மனி  எங்க(டா) 😁
ஆஃப்கானிஸ்தானுக்கு பிறகுதான்... ஜேர்மனி வரும்போல. 😂 
இந்தக் கணக்கெடுப்பு எடுத்தவன், கையிலை சிக்கினான்... சங்குதான். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யாது குண்டுங் குழியுமாக இருந்த AB17 வீதி அம்போனு விட்டாச்சு. இனி எத்தனை வருடங்கள் ஆகுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பிழம்பு said:

உலகில் வேகம் குறைந்த வீதிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது மிகவும் பாரபட்சமான விடயம்.
சிங்கள தேசங்களில் நெடுங்சாலைகளில் வாகனங்களே அரிது.ஆனாலும் 2-3 அடுக்காக நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளனர்.

தமிழர் பிரதேசங்களில் வெள்ளைக்காரன் போட்ட வீதிகளே உள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு விமானநிலையம் வெறும் 225 மைல்கள்(350 கிலொ.)இதைக் கடப்பதற்கு ஏழு மணிநேரமாவது தேவை.

இதற்கிடையில் 10 இடங்களிலாவது பொலிசாரின் கொடுமைகள்.

சிங்கள பகுதிகளில் இந்த கெடுபிடியைக் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

20 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யாது குண்டுங் குழியுமாக இருந்த AB17 வீதி அம்போனு விட்டாச்சு. இனி எத்தனை வருடங்கள் ஆகுமோ?

உது மானிப்பாய் பொலிஸ் சந்தி - ஐந்து லாம்பு சந்தி ரோட்தானே? 

கல் எல்லாம் குவிச்சு, சில இடங்களில மதகுகளுக்கு மேலால புது ரோட்டும் போடப்பட்டது.

வீதி காப்பெற் ஆக்கி அகலிக்க படும் எண்டாங்கள். 

என்ன நடந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உது மானிப்பாய் பொலிஸ் சந்தி - ஐந்து லாம்பு சந்தி ரோட்தானே? 

கல் எல்லாம் குவிச்சு, சில இடங்களில மதகுகளுக்கு மேலால புது ரோட்டும் போடப்பட்டது.

வீதி காப்பெற் ஆக்கி அகலிக்க படும் எண்டாங்கள். 

என்ன நடந்தது?

டீசல் விலை ஏற்றம், தட்டுப்பாடு வேலை செய்த வாகனங்கள் எல்லாம் பறந்திட்டுது. இப்ப 100 மீற்றர் காப்பற் போட்டிருந்தால் 500 மீற்றருக்கு இடையில போடவில்லை. மானிப்பாய் நகர் பகுதிகளிலும், வேறு பல இடங்களிலும் வீதி அகலிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பில்ல போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி  எங்க(டா) 😁
ஆஃப்கானிஸ்தானுக்கு பிறகுதான்... ஜேர்மனி வரும்போல. 😂 
இந்தக் கணக்கெடுப்பு எடுத்தவன், கையிலை சிக்கினான்... சங்குதான். 

உள்ள நெடுஞ்சாலைகளில் ஜேர்மனி தானே திறம் என்கிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் கடைசியாக உள்ளது வேகக் கட்டுப்பாடே இல்லை என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உள்ள நெடுஞ்சாலைகளில் ஜேர்மனி தானே திறம் என்கிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் கடைசியாக உள்ளது வேகக் கட்டுப்பாடே இல்லை என்கிறார்கள்.

நெடுஞ்சாலை வேகத்தையும், உள்ளூர் வீதியின் வேகத்தையும்....
சராசரியாக பார்த்து கணக்கெடுக்கிறார்களோ தெரியவில்லை.

காற்று மாசு படாமல் இருப்பதற்காக... 
உள்ளூர் வீதிகளின் வேகத்தை 40 கிலோ மீற்றராக இந்த வருடம் குறைத்தவர்கள்.
வருகின்ற வருடம் 30 கிலோ மீற்றராக்கப் போகின்றார்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

நெடுஞ்சாலை வேகத்தையும், உள்ளூர் வீதியின் வேகத்தையும்....
சராசரியாக பார்த்து கணக்கெடுக்கிறார்களோ தெரியவில்லை.

காற்று மாசு படாமல் இருப்பதற்காக... 
உள்ளூர் வீதிகளின் வேகத்தை 40 கிலோ மீற்றராக இந்த வருடம் குறைத்தவர்கள்.
வருகின்ற வருடம் 30 கிலோ மீற்றராக்க போகின்றார்கள்.

சிறி உங்கு எத்தனை வயதுக் கார்கள் வைத்திருக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி உங்கு எத்தனை வயதுக் கார்கள் வைத்திருக்கலாம்?

வயது கட்டுப்பாடு என்று இல்லை... 25 - 30 வருடத்துக்கு மேற்பட்டது என்றால், 
குறிப்பிட்ட சில நகர எல்லைக்குள் ஓட அனுமதி இல்லை.

அதற்கு மேல் உள்ள கார்கள்... Old Timer என்ற வரையறைக்குள் வந்து விடும்.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

உலகில் வேகம் குறைந்த வீதிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பெற்றோல் இல்லாமல் பள்ளிக்கும் வேலக்கு போக முடியாமல் மக்கள் இருக்கிறார்கள் இப்போது இது தான்  அவசியமோ
இந்த குறைந்த வேகத்தில் பயணித்தே போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பாரதுரமான விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள்.பலர் இறந்து போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

டீசல் விலை ஏற்றம், தட்டுப்பாடு வேலை செய்த வாகனங்கள் எல்லாம் பறந்திட்டுது. இப்ப 100 மீற்றர் காப்பற் போட்டிருந்தால் 500 மீற்றருக்கு இடையில போடவில்லை. மானிப்பாய் நகர் பகுதிகளிலும், வேறு பல இடங்களிலும் வீதி அகலிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பில்ல போல.

தகவலுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

உது மானிப்பாய் பொலிஸ் சந்தி - ஐந்து லாம்பு சந்தி ரோட்தானே? 

கல் எல்லாம் குவிச்சு, சில இடங்களில மதகுகளுக்கு மேலால புது ரோட்டும் போடப்பட்டது.

வீதி காப்பெற் ஆக்கி அகலிக்க படும் எண்டாங்கள். 

என்ன நடந்தது?

என்ன மானிப்பாய் வீதியா....? மனிப்பாய்வாசிகள் வாங்கோ காசு தாங்கோ ரோட்டு போடுவோம் .....மகிநதா & கோத்தா அழைப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் பெற்றோல் இல்லாமல் பள்ளிக்கும் வேலக்கு போக முடியாமல் மக்கள் இருக்கிறார்கள் இப்போது இது தான்  அவசியமோ
இந்த குறைந்த வேகத்தில் பயணித்தே போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பாரதுரமான விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள்.பலர் இறந்து போகிறார்கள்.

2 கிழமை பாடசாலை, அரசு அலுவலகங்கள் பூட்டு. எரிபொருள் விநியோகம் சீராகும் வரை.

காசு கட்டி லைசன்ஸ் எடுத்தால் விபத்துகள் ஏற்படும் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

காசு கட்டி லைசன்ஸ் எடுத்தால் விபத்துகள் ஏற்படும் தானே!

☹️  பாதுகாப்பை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

என்ன மானிப்பாய் வீதியா....? மனிப்பாய்வாசிகள் வாங்கோ காசு தாங்கோ ரோட்டு போடுவோம் .....மகிநதா & கோத்தா அழைப்பு 

🤣 லாபாய், லாபாய்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

என்ன மானிப்பாய் வீதியா....? மனிப்பாய்வாசிகள் வாங்கோ காசு தாங்கோ ரோட்டு போடுவோம் .....மகிநதா & கோத்தா அழைப்பு 

1 hour ago, goshan_che said:

🤣 லாபாய், லாபாய்.

ஆமாம் அவர்களுக்குத் தெரியும் காப்பற் வீதியை விடவும் பாய் வீதி மலிவு.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழர் பிரதேசங்களில் வெள்ளைக்காரன் போட்ட வீதிகளே உள்ளன.

சில வேளை நினைவுச் சின்னமாக பாதுகாக்கின்றார்கள் என நினைக்கின்றேன்.:cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2022 at 03:12, goshan_che said:

வீதி காப்பெற் ஆக்கி அகலிக்க படும் எண்டாங்கள். 

என்ன நடந்தது?

காப்பெற் வீதியைப்பற்றி தனியிடம் தனிமையாய் கேளுங்கள், விலாவாரியாக சொல்லுவார். அதில் அலுங்காமல், குலுங்காமல்  பயணித்த அனுபவம் அவருக்குதானுண்டு!

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

காப்பெற் வீதியைப்பற்றி தனியிடம் தனிமையாய் கேளுங்கள், விலாவாரியாக சொல்லுவார். அதில் அலுங்காமல், குலுங்காமல்  பயணித்த அனுபவம் அவருக்குதானுண்டு!

பனையால் விழுந்தவனை (புலம்பெயர்) மாடும் ஏறி மிதிச்சிச்சாம் 😔.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2022 at 09:00, putthan said:

என்ன மானிப்பாய் வீதியா....? மனிப்பாய்வாசிகள் வாங்கோ காசு தாங்கோ ரோட்டு போடுவோம் .....மகிநதா & கோத்தா அழைப்பு 

அப்படியே அந்த, உடுவில் girls college ல போய் சண்டிலிப்பாய்,சங்குவேலி வயல்வெளி ரோட்டையும் திருத்துவீங்க என்டால் நான் ரெடி!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கொஞ்சம் பொறுங்கோ.வெகு விரைவில் மாட்டு வண்டில் தான் ரோட்டில போகப் போகுது.அதுக்கு ஏன் காப்பற் ரோட்டு.😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2022 at 03:16, ஏராளன் said:

வேறு பல இடங்களிலும் வீதி அகலிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பில்ல போல.

சில நேரங்களில் மக்களும்தான் என்ன செய்வார்கள், ஏற்கனவே சிறிய காணிக்களுக்குள் இருப்பவர்கள், அதனையும் விட்டு எங்கே போவார்கள்?

அரசு ஒழுங்கான நட்ட ஈடும் கொடுத்திருக்குமோ தெரியாது.. 

 பலாலி வீதி, கந்தர்மடத்திலும் இந்த மாதிரி   உள்ளது.. பெரிதாக்கப்பட்ட பலாலி வீதி, கந்தர்மடத்தில் ஒரு இடத்தில் வீதியை பெரிதாக்க முடியவில்லை என்பதால் அந்த இடத்தில் குறுகி பின் விரிவடைந்து போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சில நேரங்களில் மக்களும்தான் என்ன செய்வார்கள், ஏற்கனவே சிறிய காணிக்களுக்குள் இருப்பவர்கள், அதனையும் விட்டு எங்கே போவார்கள்?

அரசு ஒழுங்கான நட்ட ஈடும் கொடுத்திருக்குமோ தெரியாது.. 

 பலாலி வீதி, கந்தர்மடத்திலும் இந்த மாதிரி   உள்ளது.. பெரிதாக்கப்பட்ட பலாலி வீதி, கந்தர்மடத்தில் ஒரு இடத்தில் வீதியை பெரிதாக்க முடியவில்லை என்பதால் அந்த இடத்தில் குறுகி பின் விரிவடைந்து போகும்

எல்லா நாடுகளும் அடுத்த 50 ஆண்டுகளின் பின் தங்கள் நாடுகள் எப்படி இருக்கவேணும் என்று திட்டமிடலோடு செயற்பட, எங்கடையள் 50 ஆண்டுகளில் தங்கட குடும்பத்துக்கு எப்பிடி சொத்து சேர்க்கிறது என்று சிந்திக்கிறாங்கள்.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எல்லா நாடுகளும் அடுத்த 50 ஆண்டுகளின் பின் தங்கள் நாடுகள் எப்படி இருக்கவேணும் என்று திட்டமிடலோடு செயற்பட, எங்கடையள் 50 ஆண்டுகளில் தங்கட குடும்பத்துக்கு எப்பிடி சொத்து சேர்க்கிறது என்று சிந்திக்கிறாங்கள்.

கடன் குடுத்தவன் கூட புத்திமதி சொல்லேல்லை போல.....

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.