Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்ட பதவி துறப்பு, நாளை கூடுகிறது பாராளுமன்றம், ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு- சபாநாயகர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் குதித்தார் டலஸ் அழகபெரும (நாதம் நாதம் லுக் ஹியர்😆).

https://www.newsfirst.lk/2022/07/15/dullas-ready-to-contest-for-vacant-post-of-president/

  • Replies 51
  • Views 2.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.newswire.lk/2022/07/15/slpp-decides-to-vote-for-ranils-presidency-in-parliament/

மொட்டு கட்சி ரணிலை ஆதரிக்கும்!

கங்கிராட்ஸ் நாதம் @Nathamuni😆

  • கருத்துக்கள உறவுகள்

நரியார் வெல்லுவார். காரணம்:

1. இந்திய, மேலை நாடுகள் அழுத்தம்
2. மொட்டுவின் தேர்வு, மகிந்தா ஆதரவு
3. கூட்டமைப்பு, முஸ்லீம் கட்சிகள், இதொக, மற்றும் இதர தமிழ் கட்சிகள் ஆதரவு
4. பிரதமர் பதவி தருகிறேன் எண்டால், சஜித், கட்சி ஆதரவு வரும். ஏனெனில், அவர் ஜனாதிபதியாக போதிய பலம் இல்லை. மேலும், அங்கிருப்பவர்கள் அனைவரும் முன்னாள் ஐதேக காரர்கள். தமது ஆள், ஜனாதிபதியாகும் சந்தர்ப்பத்தை விடமாட்டார்கள்.
5. ஆதரவு தரும் கட்சிக்களுக்கு அமைச்சரவையில் இடம் எண்டால், டக்ளஸ் ஆதரவும் உண்டு.

😜

39 minutes ago, goshan_che said:

https://www.newswire.lk/2022/07/15/slpp-decides-to-vote-for-ranils-presidency-in-parliament/

மொட்டு கட்சி ரணிலை ஆதரிக்கும்!

கங்கிராட்ஸ் நாதம் @Nathamuni😆

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

நரியார் வெல்லுவார். காரணம்:

1. இந்திய, மேலை நாடுகள் அழுத்தம்
2. மொட்டுவின் தேர்வு, மகிந்தா ஆதரவு
3. கூட்டமைப்பு, முஸ்லீம் கட்சிகள், இதொக, மற்றும் இதர தமிழ் கட்சிகள் ஆதரவு
4. பிரதமர் பதவி தருகிறேன் எண்டால், சஜித், கட்சி ஆதரவு வரும். ஏனெனில், அவர் ஜனாதிபதியாக போதிய பலம் இல்லை. மேலும், அங்கிருப்பவர்கள் அனைவரும் முன்னாள் ஐதேக காரர்கள். தமது ஆள், ஜனாதிபதியாகும் சந்தர்ப்பத்தை விடமாட்டார்கள்.
5. ஆதரவு தரும் கட்சிக்களுக்கு அமைச்சரவையில் இடம் எண்டால், டக்ளஸ் ஆதரவும் உண்டு.

😜

மொட்டு பலமே போதும் ரணில் வெல்ல. நான் நினைக்கவில்லை ஐதேக, சுயாதீன குழு, கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் என. ஆனால் சொல்லமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

மொட்டு பலமே போதும் ரணில் வெல்ல. நான் நினைக்கவில்லை ஐதேக, சுயாதீன குழு, கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் என. ஆனால் சொல்லமுடியாது. 

ரணில் இன்று வரை, கோத்தா போகவேண்டும் எண்டு, சொல்லியிருக்கவில்லை. ஆனால், கட்சிக்குள்ள இருந்து கொண்டு டல்லஸ் சொல்லிப்போட்டார். அதால மகிந்த, நமால் இரண்டு முக்கிய மொட்டு எம்பிமாரை கடுப்பேத்திப்போட்டார் 😁

இரண்டாவது விருப்பு வாக்குவில் ரணில் வெல்வார். அதாவது சஜித்துக்கு போடும் ஆட்கள், ரணிலுக்கு இரண்டாவது விருப்பு வாக்கு போடுவர். சஜித் வெல்லார். ஆகவே செக்கன் ரவுண்டு போகும் போது.... ரணில் எகிறுவார். 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ரணில் இன்று வரை, கோத்தா போகவேண்டும் எண்டு, சொல்லியிருக்கவில்லை. ஆனால், கட்சிக்குள்ள இருந்து கொண்டு டல்லஸ் சொல்லிப்போட்டார். அதால மகிந்த, நமால் இரண்டு முக்கிய மொட்டு எம்பிமாரை கடுப்பேத்திப்போட்டார் 😁

இது ரகசிய வாக்கெடுப்பாக நடந்தால் - பல திடீர் திருப்பங்களும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இது ரகசிய வாக்கெடுப்பாக நடந்தால் - பல திடீர் திருப்பங்களும் வரலாம்.

ரகசிய வாக்கெடுப்புதானே 👍

  • கருத்துக்கள உறவுகள்

ரனிலை உலகம் ஆதரித்தால் நாமும் ஏற்கத்தன் வேணும்.ஏன் என்றால் அவர்கள் தான் தீர்வைத் தர வேணும்.சோறு உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது ரகசிய வாக்கெடுப்பாக நடந்தால் - பல திடீர் திருப்பங்களும் வரலாம்.

எல்லாவற்றுக்கும் மேலே..... ரணில் அரசியலில் என்ன செய்வார் என்பதை விடுவோம்.....

அந்த மனிதரின்..... மிக நீண்டகால விடாமுயற்சி ஏதோ ஒரு வகையில் கை கூடிவருவது மகிழ்வுக்குரியது.

Winners never quit and quitters never win !!

போன தேர்தலில் கைகழுவி விடப்பட்ட, இழக்க ஏதுமில்லா ஒருவர். வீட்டையும் கொழுத்தியாச்சு.

ஆக.... இங்கே ஒருவர் சொன்னது போல, மயிரைக் கட்டி மலையை இழுத்தால், வந்தா மலை... போனா மயிர்.

மலை.... அரைவாசி வந்துட்டுது.... இன்னும் கொஞ்சம் தான்... ஓரே இழுவை..... நரியார். ம்...ம்ம்...

இந்த வகையில் மட்டுமே நான் பார்கிறேனே அன்றி, அவர் செய்த, செய்யக்கூடிய அரசியலை வைத்தல்ல என்பதை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.😁

பிறகு ஏன் சம்பந்தருக்கு ஆதரவு கொடுக்கேல்ல என்று கேட்கிறேல்ல.😜

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

ரனிலை உலகம் ஆதரித்தால் நாமும் ஏற்கத்தன் வேணும்.ஏன் என்றால் அவர்கள் தான் தீர்வைத் தர வேணும்.சோறு உட்பட.

நியாயமான கருத்துத்தான். 

ஆனால் (மேற்கு) உலகம் ரணில் பின்னால் நிற்கிறதா அல்லது அவர் அப்படி பாவ்லா காட்டுகிறாரா?

ஏனென்றால் இப்படி என்றால் அமெரிக்கா கூட்டமைபுக்கு ஒரு சமிக்ஞையாவது கொடுத்திருக்கும் அவர்களும் நல்லாட்ட்சி காலம் போல ரணிலுக்கு முண்டு கொடுத்திருப்பார்கள்.

ஆனால் இப்போ ரணிலோடு முறுக்கி கொண்டு அல்லவா நிற்கிறார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

எல்லாவற்றுக்கும் மேலே..... ரணில் அரசியலில் என்ன செய்வார் என்பதை விடுவோம்.....

அந்த மனிதரின்..... மிக நீண்டகால விடாமுயற்சி ஏதோ ஒரு வகையில் கை கூடிவருவது மகிழ்வுக்குரியது.

Winners never quit and quitters never win !!

இது விடா முயற்சி என்பதை நான் ஏற்றுகொண்டாலும், இதற்காக நாட்டை, கட்சியை, வீட்டை, ஏனையோர் உயிரை, வாழ்வாதாரத்தை, தனது கொள்கைகளை விலையாக கொடுத்த இந்த வெற்றி - pyrrhic victory யாகவே எனக்கு படுகிறது.

சிலவேளை முழு அதிகாரம் கைக்கு வந்தபின் சில அற்புதமான செயல்களை கேற்கொண்டு ரணில் வரலாற்றில் தன் பெயரை காப்பாற்றி கொள்ளக்கூடும்.

அப்படி இல்லாமல் தொடர்ந்தும் மொட்டு கட்சியின் கைபொம்மையாக ரணில் இருப்பாராயின், நாடு ஒரு முக்கிய சந்தியில் நின்றபோது தனது அதிகார பசிக்காக நாட்டை தவறானோர் வழியில் கொண்டு போய், பதவிக்கு “பின்கதவால்” வந்த ஒருவர் - என்றே வரலாறு இவரை நினைவில் கொள்ளும்.

அது மட்டும் இல்லாமல் - இனி எடுக்கப்படகூடிய மிக கடுமையான, மக்களின் நலனை பாதிக்க கூடிய முடிவுகள் (அரச வேலை குறைப்பு, ஜனசக்தி குறைப்ப்பு) கூட ரணில் என்கிற “பின் கதவு” ஜனாதிபதியால் எடுக்கப்படும் போது அது நிச்சயம் விமர்சனத்துக்கு, அவருக்கு அதை எடுக்கும் அதிகாரம் உள்ளதா என்பது கேள்விக்கு உள்ளாகும்.

தந்தையை உயிரோடு சுவரில் வைத்து சாந்து பூசிய மன்னன், பிரதானி மகனை உரலில் இட்டு வதைத்தவன், போத்துகேயரின் கைப்பாவையாய் இருந்தவன் என பலரை நெடிய இலங்கை வரலாறு நியாபகம் வைப்பது போல் ரணிலையும் வைக்க கூடும்.

https://en.m.wikipedia.org/wiki/Pyrrhic_victory

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்க.

இல்லானை இல்லாலும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.....

இல்லாத இலங்கையை ஈழத்தமிழனும் வேண்டான், தினவெடுத்துத் திரிந்த சிங்களவனும் வேண்டான்.

ரணில் பொருளாதாரப் போரில் வெல்லாவிடில் அவரே ஒன்றினைந்த இலங்கை.ின் கடைசி ஜனாதிபதி ஆக இருப்பார்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்க.

இல்லானை இல்லாலும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.....

இல்லாத இலங்கையை ஈழத்தமிழனும் வேண்டான், தினவெடுத்துத் திரிந்த சிங்களவனும் வேண்டான்.

ரணில் பொருளாதாரப் போரில் வெல்லாவிடில் அவரே ஒன்றினைந்த இலங்கை.ின் கடைசி ஜனாதிபதி ஆக இருப்பார்.

அப்படி எண்டால் எல்லாரும் ஹேப்பிதானே.

ஆனால் இவர் இலங்கையை மேலும் “பூரண ஆயுசு நித்திய கண்டம்” என இழுத்தபடி, இன ஒடுக்குமுறையை நுணுக்கமாக, வெளியில் தெரியாமல் தொடர்ந்த படி -ராஜபக்சேக்களின் நீட்சியாக கொண்டு சென்று, தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி, லகானை நாமலின் கையில் கொடுக்கவே வாய்புகள் அதிகம்.

முன்பே சொன்னது போல - இதில் எவர் வெல்லுவது எமக்கு நல்லம் என என்னால் ஊகிக்க முடியாதிருந்தாலும், ரணிலின் வருகை எமக்கு நல்லது என என் மனதுக்கு படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

முன்பே சொன்னது போல - இதில் எவர் வெல்லுவது எமக்கு நல்லம் என என்னால் ஊகிக்க முடியாதிருந்தாலும், ரணிலின் வருகை எமக்கு நல்லது என என் மனதுக்கு படவில்லை.

ஒரு முறை சந்திரிகா ஒத்தைக்கண்ணை காட்டி இவர் வெற்றியினை பறித்தார். மறுமுறை... பகிஸ்கரிப்பு.... 

ஆக அவருக்கு உள்ள வழியே இந்த பின்கதவு தான்.

ஜேர் ஜெயவர்த்தனே ஜானதிபதி பதவிக்கு வந்தபோது வயது 73. ரணிலுக்கும் அதே வயது தான்.

அதே போல, அவர் பொருளாதாரப் போரில் வெல்வாராயின், அடுத்த தேர்தலில், மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

இனப்பிரச்சனையும் தீர்த்தால் சிறுபான்மையினரும் வாக்களிப்பார்கள்.

****

தெரிந்த பிசாசு, தெரியாத பேயிலும் பார்க்க நல்லது.

ரணில் என்ன செய்தாலும், எமக்குரிய பாரிய நம்பிக்கை, நாட்டின் இன்றய பொருளாதார நிலைமை.

அதனை மீறி, பழைய இனவாத அரசியல், தினாவெட்டு அரசியல் வேலைக்காகாது என்று பல சிங்களவர்களுக்கு புரிந்திருக்கும்.

வயிரு காஞ்சா.... தலைக் கொழுப்பு இறங்கும்..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா.. மைத்திரிபால சிறிசேனாவை விட்டு விட்டீர்களே 

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவு ; விசேட பாராளுமன்ற அமர்வு நாளை

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பினை எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நடத்த கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்ப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் 2ஆவது இலக்கத்திற்கமைய ஜனாதிபதி தெரிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றம் நாளை (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

1981 ஆம் 2ஆவது இலக்க ஜனாதிபதி தெரிவு (விசேட ஏற்பாடுகள்)சட்டத்தின் 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியதை தொடர்ந்து மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

அதற்கமைய 5ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார். நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னர் தீர்மானித்ததற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி வேட்பு மனுக்கல் கோரப்பட்டு,எதிர்வரும் 20ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும். 

ஜனநாயக வரைபிற்குள் சபை நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் சகல உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் என சபாநாயகர் கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவு ; விசேட பாராளுமன்ற அமர்வு நாளை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கட்சிகள் தமிழர் அரசியல்தீர்வை வலியுறுத்தி வேட்பாளர்களுடன் 19ம திகதிக்குமுதல் பேசவேண்டும்.ஒருவரும் எழுத்துமூலமான உறுதிமொழி கொடுக்காவிடில் தமிழ்க்கட்சிகள் தங்களில் ஒருவரை அடையாளத்துக்காக நிறுத்தி தமிழர்அரசியல் தீர்வை முன்னிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டும்.இது உடனடி வெற்றியைத் தராது.ஆனால் தமிழர்கள் பிரச்சினை வேறு சிங்களவர்பிரச்சினை வேறு என்பதை உலகத்திற்கு உணர்த்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஒரு முறை சந்திரிகா ஒத்தைக்கண்ணை காட்டி இவர் வெற்றியினை பறித்தார். மறுமுறை... பகிஸ்கரிப்பு.... 

ஆக அவருக்கு உள்ள வழியே இந்த பின்கதவு தான்.

ஜேர் ஜெயவர்த்தனே ஜானதிபதி பதவிக்கு வந்தபோது வயது 73. ரணிலுக்கும் அதே வயது தான்.

அதே போல, அவர் பொருளாதாரப் போரில் வெல்வாராயின், அடுத்த தேர்தலில், மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

இனப்பிரச்சனையும் தீர்த்தால் சிறுபான்மையினரும் வாக்களிப்பார்கள்.

****

தெரிந்த பிசாசு, தெரியாத பேயிலும் பார்க்க நல்லது.

ரணில் என்ன செய்தாலும், எமக்குரிய பாரிய நம்பிக்கை, நாட்டின் இன்றய பொருளாதார நிலைமை.

அதனை மீறி, பழைய இனவாத அரசியல், தினாவெட்டு அரசியல் வேலைக்காகாது என்று பல சிங்களவர்களுக்கு புரிந்திருக்கும்.

வயிரு காஞ்சா.... தலைக் கொழுப்பு இறங்கும்..

ரணிலுடன் நாம் இராஜதந்திர சண்டை இட்டு இருக்கவேண்டியது 2005ல். தலைவர் கட்டி எழுப்பிய இராணுவ பலம், பாலா அண்ணையின் மதிநுட்பம் என்ற இரெட்டை துப்பாக்கி எம்மிடம் இருந்த போது.

சிவாஜி, விக்கி, சித்தரையே டீல் பண்ண முடியாத ஆட்கள் சம் & சும். கஜே & கஜே பக்சேகளுக்கு ஆபத்து என்றதும் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள் 🤣.

நீங்கள் சொல்வது போல பொருளாதாரம் அப்படி எமக்கு கைகொடாது. ரணில் இதை ஒரு வர்க்க போராட்டமாக ஏலவே மாற்ற தொடங்கி விட்டார். இனி நாடு மொத்தமாக தாளவும் மாட்டாது மீளவும் மாட்டாது என்ற நிலையில், வர்க அரசியல், இனவாத அரசியலை தூண்டியபடி - சேவை வழமைக்கு திரும்பி விடும் என்றே படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புலவர் said:

தமிழ்க்கட்சிகள் தமிழர் அரசியல்தீர்வை வலியுறுத்தி வேட்பாளர்களுடன் 19ம திகதிக்குமுதல் பேசவேண்டும்.ஒருவரும் எழுத்துமூலமான உறுதிமொழி கொடுக்காவிடில் தமிழ்க்கட்சிகள் தங்களில் ஒருவரை அடையாளத்துக்காக நிறுத்தி தமிழர்அரசியல் தீர்வை முன்னிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டும்.இது உடனடி வெற்றியைத் தராது.ஆனால் தமிழர்கள் பிரச்சினை வேறு சிங்களவர்பிரச்சினை வேறு என்பதை உலகத்திற்கு உணர்த்தும்.

வழமையாக நான் தமிழர் ஜனாதிபதி தேர்தலில் தனியே நிற்பதை எதிர்ப்பவன். 

ஆனால் இந்த முறை ஒரு பெரிய ஆபத்து ரணில் மூலம் வருகிறது. அதுதான் இலங்கையில் இப்போ இருப்பது மிகபெரிய வர்க/பொருளாதார முரண் என்ற தோற்றப்பாடு.

இதன் மூலம் இன ஒழிப்பு, யுத்த குற்றம் மட்டும் அல்ல, காணி பறிப்பு, அரசியல் தீர்வு எல்லாமே அடிபட்டு போய்விட்டது.

இங்கே தப்பி ஓடியது கோட்டா மட்டும் அல்ல, இலங்கையின் பொறுப்புகூறலும்தான்.

ஏலவே பலர் சொன்னது போல பாண் பருப்பை கண்டதும் எம்மை மறந்து பைலா போட போய்கொண்டிருக்கிறார்கள்😆.

ஆகவே எமது மிக அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து, எமது பிரச்சனை தனிதுவமானது என காட்டி - அதை ஏற்போருக்கே எமது வாக்கு அல்லது தமிழ் வேட்பாளருக்கு என சொல்வது நல்ல வழியாகவே படுகிறது.

கூடவே பொறுப்புகூறல் நாட்டுக்கு தொடர்கிறது என்பதை வலியிறுத்தவும் வேண்டும். 

ஆனால்,

சிலவேளை ரகசிய வாக்கெடுப்பில் எதிர்கட்சி பொது வேட்பாளர் வெல்ல கூடிய ஒரு நிலை இருந்தால் - இப்படி செய்வது அதை பாதிக்காதா?

பிகு

தமிழ் தலைவர்கள் நீங்கள் சொன்ன வழியை சீந்தவும் மாட்டார்கள் (தனிப்பட்ட காரணங்களுக்காக). ஆனால் ஒரு கேள்விக்காக கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people sitting, people standing and suit

13.05.2022

May be an image of 3 people, people sitting, people standing and suit

14.07.2022

ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிச்சாம்.  😂
-ஜனாதிபதியின் செயலாளர், காமினி சேனாரத்... மைண்ட்  வாய்ஸ்.- 🤣

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, புலவர் said:

தமிழ்க்கட்சிகள் தமிழர் அரசியல்தீர்வை வலியுறுத்தி வேட்பாளர்களுடன் 19ம திகதிக்குமுதல் பேசவேண்டும்.ஒருவரும் எழுத்துமூலமான உறுதிமொழி கொடுக்காவிடில் தமிழ்க்கட்சிகள் தங்களில் ஒருவரை அடையாளத்துக்காக நிறுத்தி தமிழர்அரசியல் தீர்வை முன்னிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டும்.இது உடனடி வெற்றியைத் தராது.ஆனால் தமிழர்கள் பிரச்சினை வேறு சிங்களவர்பிரச்சினை வேறு என்பதை உலகத்திற்கு உணர்த்தும்.

இதனை ஒருங்கிணைந்து ஒரு அடையாள நடவடிக்கையாகச் செயற்படுத்தக்கூடிய  தலைவர்கள் யாராவது தமிழர் தரப்பில் இருக்கிறார்களா? உதயசூரியனாகி..... வீடாகி..... சையிக்கிளாகி.... இப்போது கான்ரில் ஒரு பக்கமாகவும் கரியர் ஒருபக்கமாகவும்  போய்கிடக்கிறது எப்படியிவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people, people sitting, people standing and suit

13.05.2022

May be an image of 3 people, people sitting, people standing and suit

14.07.2022

ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிச்சாம்.  😂
-ஜனாதிபதியின் செயலாளர், காமினி சேனாரத்... மைண்ட்  வாய்ஸ்.- 🤣

நரியின் மைன்ட் வொய்ஸ்; இது இன்னும் எத்தனை நாளைக்கோ தெரியாது. கடவுளே...என்ர வாழ்நாள் கனவை நனவாக்கப்பா ....🤣

😉

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 
1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

ரணில் வருவார், சஜித் உடன் போட்டியாக இருக்கும், டலஸ் இற்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்று நினைக்கிறேன். சுமந்திரன், சம்பந்தர் போன்றோருக்கு உண்மையிலேயே போட்டி போடும் எண்ணம் உள்ளதா?

Edited by நீர்வேலியான்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

ரணில் வருவார், சஜித் உடன் போட்டியாக இருக்கும், டலஸ் இற்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்று நினைக்கிறேன்.

அறிய வருவது என்னென்டால், மொட்டுக்கட்சீக்குள், நம்ம ஆளு டல்லஸ் அல்லது வேறு ஒரு நம்மாளை போடலாம் தானே என்று பெரும் அமளிதுமளி.
 
பெரிசு மகிந்தா சூமீலை வந்து.. வீட்டோ பண்ணி..... ரணில் தான் எண்டுட்டாராம்..... நான் ஏன் சும்மா இருக்கிறன் எண்டு நிணைக்கிறீர்கள்? 

நாம கட்சிய காப்பாத்த வேண்டுமென்றா.... கம்மெண்டு இருக்க வேணும்...... நாடு இருக்ககிற நிலையில் சும்மா அலம்பறை பண்ணி அடிவாங்க கூடாது.... எண்டு ஓவ் பண்ணிப் போட்டாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நியாயமான கருத்துத்தான். 

ஆனால் (மேற்கு) உலகம் ரணில் பின்னால் நிற்கிறதா அல்லது அவர் அப்படி பாவ்லா காட்டுகிறாரா?

ஏனென்றால் இப்படி என்றால் அமெரிக்கா கூட்டமைபுக்கு ஒரு சமிக்ஞையாவது கொடுத்திருக்கும் அவர்களும் நல்லாட்ட்சி காலம் போல ரணிலுக்கு முண்டு கொடுத்திருப்பார்கள்.

ஆனால் இப்போ ரணிலோடு முறுக்கி கொண்டு அல்லவா நிற்கிறார்கள்?

கூத்தமைப்பு பம்முகிறது. தங்கட சனத்தட்ட இருந்து கல்லெறி வேண்ட ஏலாதுதானே..

விமல் வீரவன்ச மாதிரி சுமந்திரன் தப்பி ஓடிவிடுவார். சம்பந்தரால ஏலுமோ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.