Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அணுசக்தியை இலங்கை பயன்படுத்துவது குறித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வது குறித்து நாங்கள் தீவிரமாக சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ranil_555.jpg

அதிக    வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம்  அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணில் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பிழம்பு said:

அதிக    வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம்  அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதை…. உகண்டாவுக்கு கொண்டு போக மாட்டீர்கள் தானே… 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நரிப்புத்தி?

உலக  ஒழுங்கை  சீர்கெடுப்பதாக எதிப்பு அரசியலை  கையிலெடுத்துப்பார்க்கிறார்?

உதவ ஓடி  வருவார்கள்  என்று?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரத்தில் ஒரு நற்சிந்தனை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

சர்வதேச தரத்தில் ஒரு நற்சிந்தனை.

2048´ம் ஆண்டில்... ஸ்ரீலங்கா, உலகத்துக்கே முன்னோடியாக இருக்கும். 🤨

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சூறு தான் போக வழி காணேல்லையாம்...இதோடை விளக்குமாற்றையும் இழுத்துக்கொண்டு.... நரி யின் அபூர்வ சிந்தனை..

  • கருத்துக்கள உறவுகள்

சரியான சிந்தனைப்போக்கு. 

எட்டாவது பாஸ் கோத்தா, பொன்னர் பத்தாவது தாண்டா, மி்கிந்த, பசில் காக்கா விலும் பரவாயில்லை.

எதிர்காலம் எண்ணெயில் இல்லை. மின்சாரத்தில் தான்.

அந்த மின்சாரம் தயாரிக்க எண்ணைக்கு போவது முட்டாள் தனமானது.

மேற்கில், அணுசக்திக்கு மாற்றான வேறு சிந்தனை வருகிறது.

கிழக்கே... இப்போதைக்கு வேறு வழியில்லை.

சோலர், காற்டாடி, காணாது என்றே நிணைக்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

மூஞ்சூறு தான் போக வழி காணேல்லையாம்...இதோடை விளக்குமாற்றையும் இழுத்துக்கொண்டு.... நரி யின் அபூர்வ சிந்தனை..

அதே.....🤣

கனவு காண்பதற்கும் அளவிருக்கல்லே...........😜

வடகொரியா என்று  நினைப்பு

உலகமே  ஓடிவந்து செய்யாது

செய்யாதே என்று  தடுக்கும் என்று...

செய்யுமன்  என்பார்கள்

வாலைச்சுறுட்டிக்கொண்டு  படுக்கவேண்டியது தான்..

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, தமிழ் சிறி said:

2048´ம் ஆண்டில்... ஸ்ரீலங்கா, உலகத்துக்கே முன்னோடியாக இருக்கும். 🤨

2048லை பலாலி விமான நிலையம் இப்பிடி இருக்கும். :cool:

Riesen-Airports: Die 10 größten Flughäfen der Welt | FLUG REVUE

அப்ப இரண்டு பேரும் பலாலியில இறங்கிறம்.இரண்டு பியர் வாங்கி அடிக்கிறம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

2048லை பலாலி விமான நிலையம் இப்பிடி இருக்கும். :cool:

Riesen-Airports: Die 10 größten Flughäfen der Welt | FLUG REVUE

அப்ப இரண்டு பேரும் பலாலியில இறங்கிறம்.இரண்டு பியர் வாங்கி அடிக்கிறம் 😁

நல்ல  கனவு  அண்ணா

என்னையும்  சேர்த்து கனவு  காணக்கூடாதா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

2048லை பலாலி விமான நிலையம் இப்பிடி இருக்கும். :cool:

Riesen-Airports: Die 10 größten Flughäfen der Welt | FLUG REVUE

அப்ப இரண்டு பேரும் பலாலியில இறங்கிறம்.இரண்டு பியர் வாங்கி அடிக்கிறம் 😁

நீங்கள் வேணுமெண்டால்… பியர் வாங்கி அடியுங்கோ. 😂
எனக்கு… “கூல்” பண்ணின  கள்ளு வேணும். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, விசுகு said:

நல்ல  கனவு  அண்ணா

என்னையும்  சேர்த்து கனவு  காணக்கூடாதா?🤣

அடடா....வாங்க வாங்க சேர்ந்தே போவம்.😁

5 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் வேணுமெண்டால்… பியர் வாங்கி அடியுங்கோ. 😂
எனக்கு… “கூல்” பண்ணின  கள்ளு வேணும். 🤣

சிறித்தம்பி கள்ளு அடிக்கிறதெண்டால்  இப்பிடியான ஏரியாவில இருந்து அடிச்சால் தான் அதிலை ஒரு கிக் இருக்கும் 🤣

கருகம்பனையும் காய்வெட்டிக் கள்ளும் | ஆசி கந்தராஜா – Vanakkam London

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அடடா....வாங்க வாங்க சேர்ந்தே போவம்.😁

சிறித்தம்பி கள்ளு அடிக்கிறதெண்டால்  இப்பிடியான ஏரியாவில இருந்து அடிச்சால் தான் அதிலை ஒரு கிக் இருக்கும் 🤣

கருகம்பனையும் காய்வெட்டிக் கள்ளும் | ஆசி கந்தராஜா – Vanakkam London

இறக்கி வைக்க  நுரையோட  அடிக்கணும்

நான்  ரெடி...😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை உள்ள கருத்துக்கள் ஒன்டுக்கொன்டு முரனாக இருக்குது.எனக்கு சின்ன வீடு அனுவைத்தவிர வேறு அனுவைப் பற்றி ஒன்டும்
தெரியாது.ஆனால் நல்லது நடந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானமான நோக்கங்களுக்காக அணுசக்தியை பயன்படுத்த எண்ணும் நாடுகளுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்ய தனது நாடு தயார் என்று கடந்தவாரம்தான் ரஷ்ய ஜனாதிபதி  பூட்டின் குறிப்பிட்டிருந்தார்.  எனவே இலங்கை ஜனாதிபதி ரணில் குறிவைப்பது இலங்கை ரஷ்ய அணுசக்தி ஒப்பந்தமாகவும் இருக்கலாம்.

ஏற்கனவே இந்திய அணு உலைகளின் அபாய எல்லைக்குள் தமிழர் பிரதேசங்கள் அமைந்திருப்பதை கருத்தில் கொண்டு இலங்கையும் தனது அணு உலைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் அமைப்பதும் சிங்கள அரசாங்கத்தின் திட்டமாக அமையலாம்.

இது போன்ற செய்திகள் அரச உயர்மட்டங்களில் இருந்து கசியவிடப்படும்போது அவை உடனடியாகவே தமிழ் அரசியல்வாதிகளின் காதில் அபாய மணியாக ஒலிக்கவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளின் திட்டங்களை தகர்க்க சரியான அணுகு முறையுடன் தமிழ் தரப்பு தன்னை தயார் நிலையில் வைக்க வேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, விசுகு said:

இறக்கி வைக்க  நுரையோட  அடிக்கணும்

நான்  ரெடி...😂

ஓம் விசுகர்! 2048ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை ரிக்கற் புக் பண்ணுறம்.பலாலியிலை இறங்கிறம். மூண்டு பேரும் கூடியிருந்து ஒரு பனைமரக்கள்ளு நுரையோட அடிக்கிறம்.😂

Richard Branson will neues Überschall-Passagierflugzeug entwickeln

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஓம் விசுகர்! 2048ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை ரிக்கற் புக் பண்ணுறம்.பலாலியிலை இறங்கிறம். மூண்டு பேரும் கூடியிருந்து ஒரு பனைமரக்கள்ளு நுரையோட அடிக்கிறம்.😂

Richard Branson will neues Überschall-Passagierflugzeug entwickeln

அண்ணைக்கு 100 வயதையும்  கொண்டாடலாம்?😍

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்ன வேண்டாம் என்று அடம் பிடிக்கிறோமா?

அனு சக்தியை பயன்படுத்த ... அனு ஒத்துக்கொள்ளணுமே 

May be a closeup of 1 person, standing and outdoors

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Maruthankerny said:

நாங்கள் என்ன வேண்டாம் என்று அடம் பிடிக்கிறோமா?

அனு சக்தியை பயன்படுத்த ... அனு ஒத்துக்கொள்ளணுமே 

May be a closeup of 1 person, standing and outdoors

மருதர் காஜலை விட்டு அணு(னு)வுக்கு மாறீட்டார்!🤭

8 hours ago, குமாரசாமி said:

ஓம் விசுகர்! 2048ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை ரிக்கற் புக் பண்ணுறம்.பலாலியிலை இறங்கிறம். மூண்டு பேரும் கூடியிருந்து ஒரு பனைமரக்கள்ளு நுரையோட அடிக்கிறம்.😂

Richard Branson will neues Überschall-Passagierflugzeug entwickeln

எல்லாம் சரி அப்ப பனையள் இருக்குமே?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

எல்லாம் சரி அப்ப பனையள் இருக்குமே?!

இந்த யுகம் அழிந்தாலும் கற்பகதரு அழியாது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

இந்த யுகம் அழிந்தாலும் கற்பகதரு அழியாது. 😎

இப்ப இருக்கும் பனைகள் இல்லாமல் விட்டாலும் புது பனைகள்  வளர்ந்து இருக்கும் 2048 க்கு.   இன்னும் 46 ஆண்டுகள் உண்டு உங்கள் மூவருக்குமே இப்போது 60 வயதுக்கு மேல் வரும்   ........இப்படி பகல் கனவு காண்பதைவிட....சத்தியப்படக்கூடிய. கனவுகளை காணுங்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஓர் காலத்தில்.. நீர் மின் (சுற்றுச் சூழலுக்கு ஆபத்துக் குறைந்த) உற்பத்தியில் தன்னிறைவில் இருந்தது. 

சந்திரிக்கா அம்மையாரின் சுயநல அரசியல் மற்றும் ஊழலுக்காக உருவானதே.. எரிபொருள் மின் உற்பத்தி நிலைகளின் பெருக்கம். இதன் மூலம் சந்திரிக்கா அம்மையார் செல் கம்பனியிடம் இருந்து பெருமளவு நிதியை கமிசனாகப் பெற்று அந்தப் பணத்தை வைச்சே.. லண்டனில் கென்சிங்டன் பளசின் ஒரு பங்களாவை சொந்தமாக்க முடிந்தது. பிள்ளைகளை லண்டனில் படிக்க வைச்சு செற்றில் பண்ண முடிந்தது.

ஆனால்.. இலங்கைக்கு உகந்த நீர் மின் உற்பத்தியை தேவைக்கு ஏற்ற வகையில் புதிய உக்திகளைப் புகுத்தி அதிகரிக்க வக்கற்ற நிலையில் தான் இன்று மின்வெட்டு நிலைக்குப் போயிருக்கினம். எரிபொருளை நம்பி மின் உற்பத்தியை கொண்டு வந்தது சந்திரிக்கா அம்மையாரும் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்தோரும். அதனால் அமைந்த கமிசன்கள்.. பல கோடிகளாகும்.

இலங்கையை ஆட்சி செய்தவர்கள் எவருமே நாட்டின் எதிர்காலம் மக்களின் எதிர்காலம் குறித்து செயற்படவில்லை.. தமது கமிசன்.. ஊழல்.. பணம் குறித்து தான் ஆட்சி செய்தார்களே தவிர... 

இந்த நிலைக்கு முக்கிய காரணம் சிங்கள அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கு எடுபட்டு அவர்களுக்கு வாக்குப் போட்டு வந்த..  சிங்கள வாக்களர்கள் தான். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.