Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.இந்துக் கல்லுாரியில் ஹந்தி மொழி வகுப்புக்கள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எப்பவோ.. இந்தியன் ஆமி,  ஹிந்தி சொல்லித் தந்திட்டான்.... 😀 😀
ஏக்(ஒன்று)..தோ(இரண்டு)..தீ(மூன்று)...சார்(நாலு)...பாஞ்(ஐந்து).... பானி(தண்ணி)... 😀சலோ...சலோ....(போ...போ...) 😀😀 பீடி.....வேண்டிக் கொண்டு வா எண்டுவான்...
பயந்து வேண்டிக் கொண்டந்து குடுத்தால்...அச்சா ...பச்சா..
😀 (நல்ல பெடியன்)😀😀  எண்டுவான்.... 😀 😀 😀

ஆவரங்கால் சிறிவாஸ் ஆதரவாளர்கள் பேரவை

Edited by தமிழ் சிறி

  • Replies 50
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எங்களுக்கு எப்பவோ.. இந்தியன் ஆமி,  ஹிந்தி சொல்லித் தந்திட்டான்.... 😀 😀
ஏக்(ஒன்று)..தோ(இரண்டு)..தீ(மூன்று)...சார்(நாலு)...பாஞ்(ஐந்து).... பானி(தண்ணி)... 😀சலோ...சலோ....(போ...போ...) 😀😀 பீடி.....வேண்டிக் கொண்டு வா எண்டுவான்...
பயந்து வேண்டிக் கொண்டந்து குடுத்தால்...அச்சா ...பச்சா..
😀 (நல்ல பெடியன்)😀😀  எண்டுவான்.... 😀 😀 😀

ஆவரங்கால் சிறிவாஸ் ஆதரவாளர்கள் பேரவை

நீங்கள் இப்பதான் ஆரம்ப பாடத்தில் நிக்கிறீர்கள்.......!

ஹம் தும் ஏக் கமரே மே பந்துகோ (நானும் நீயும் ஒரு அறைக்குள் ) நான் இதுவரை வந்து விட்டேன் சிறியர்  ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

பெருமைமிகு யாழ். இந்துக் கல்லூரி, இன்று முதல் யாழ் ஹிந்திக் கல்லூரி என அழைக்கப்படும். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
சுவிஸ், ஜேர்மனுக்கு.. போனா... Deutsch ல போன் லாங்குவேஜ்ஜ வச்சுக் கொள்றது,
பிரான்சுக்கு போனா... பிரஞ்சில மாத்துறது,
நோர்வேக்கு போனா... நொர்ஸ்க் ல மாத்துறது,
அமெரிக்காவில காட் கிடைச்சா... அமெரிக்கன் இங்கிலீஸ்ல விடுறது,
போன்ல... தமிழ் என்ற ஒரு ஒப்சன் இருக்கிறதே தெரியாத மாதிரியும்,
ஏதோ அந்த அந்த நாட்டு மொழி பாவிச்சாதான் எல்லாம் ஈசியா விளங்கும்
என்ற மாதிரியும் பில்டப் குடுக்கிறது
 
பிள்ளைக்கு.. தமிழ்ல சொன்னா விளங்காதென்று,
குடியேறப்போன நாட்டின் மொழியில பேசுறது
பிறகு இஞ்சால இந்தி கற்பிக்க, சிங்களம் கற்பிற்க...
எவனும் வெளிக்கிட்டா உடனே... 
ஐயோ... திணிக்கிறாங்கள், அமத்துறாங்கள்....
உங்க மானத் தமிழர் இல்லையோ... இந்தியனுக்கோ, சிங்களவனுக்கோ...
பிறந்திங்கள்?  அதைப்போய் படிக்கிறீங்கள் என்று பொங்கல் வைக்கிறது...
குத்தி குடைஞ்சிடுவன்.... ராஸ்##ஸ்.
 
மேலுள்ள கருத்துடன்... எனக்கு உடன்பாடு இல்லை. 
ஆனால் அதை வாசித்தவுடன், சிரிப்பு வந்ததால் இணைத்துள்ளேன். 😂
  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் "ஹிந்தி நகி மாலும் ஹை..!" என்றளவில் தான் இங்கே திரிகிறேன். 😉

ஏதேது, போகிற போக்கை பார்த்தால், ஜி யாழ்ப்பாணம் வந்து 'வடை சுடுவார்' போல தெரிகிறதே..!

யா அல்லா..! 😱

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

இந்தியாவின் தேசிய மொழி(National Language) எது எனக் கேட்டால் பலர் இந்தி(Hindi) என்று பதில் கூறுகின்றனர்.வட இந்தியாவைச் சேர்ந்தவர் ஹிந்திதான் தேசிய மொழி என்கின்றனர்.ஆனால் உண்மையில் ஹிந்தி தேசிய மொழி அல்ல.இந்தியாவின் அரசு ஏற்பு பெற்ற 22 மொழிகளில் இந்தியும் ஒன்று.வட மாநிலங்களில் அதிகமாக பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது.அவ்வளவுதானே தவிர இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.

மிக்க நன்றி. 🙏

உங்களுக்காவது இது பற்றி தெரிந்துள்ளதே..! 👌

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஹிந்தி மொழி ஏன் கற்பிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லாமல் வந்த “செய்தி”யை வைத்து வீணான கற்பனைகளில் கருத்துக்கள் வருகின்றன. 

அடுத்த வாரம் ஜேர்மன் மொழி கற்பித்தல் ஆரம்பிக்கவுள்ளது. பின்னர் பிரெஞ்ச் மொழியும் கற்பிக்கப்படுமாம். 

யாழ் இந்துக் கல்லூரியில் அண்மையில் திறக்கப்பட்ட வெளிநாட்டு கற்கைகள் மற்றும் திறன்விருத்தி நிலையத்தில் ஜேர்மன், பிரஞ், ஹிந்தி போன்ற பல பிறமொழி கற்கைகளை மாணவர்களுக்கு கற்பிக்கவிருக்கின்றோம். அதன் முதற்கட்டமாக ஹிந்தி மொழி கற்கை நெறியினை 17.08.2022 அன்று ஆரம்பித்திருக்கின்றோம். மேற்படி கற்கை நெறியின் வளவாளராக முன்னாள் களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி ஹாந்தி டீ சொய்சா அவர்கள் கடமையாற்றுவார். இவ்விரிவுரையாளரை ஒழுங்கமைத்து தந்த இந்திய துணைத்தூதரகம் யாழ்ப்பாணத்திற்கு நன்றிகள். மேற்படி மொழித்தேர்ச்சியூடாக எமது மாணவர்கள் உயர் புலமைப்பரிசில்களை இந்திய பல்கலைக் கழகங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
கற்கைநெறி வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை முடிவடைந்ததும் இடம்பெறும். பழைய மாணவர்களும் பங்கேற்கலாம்.
வரும் வாரம் ஜேர்மன் மொழி கற்கையை ஆரம்பிக்கின்றோம். ஆர்வமுள்ள பழைய மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/134653173274570/posts/7819827461423731/?d=n

பிர்ச்ஞ்சும் ஜேர்மனும் கற்பதால் ஏதாவது கொஞ்சம் அனுகூலமாவது கிடைக்கும், ஹிந்தி கற்பதால் ? 

பானிபூரி விற்பதற்கா ? 

அதவிட சிங்களம் கற்பித்தால் மக்களின் நாளாந்தப் பிரச்சனைகள் பலவற்றைக் களையலாமே ? 

😏

  • கருத்துக்கள உறவுகள்

Hindi, not a national language: Court

Gujarat High Court has observed that though majority of people in India have accepted Hindi as a national language, there was nothing on record to suggest that any provision has been made or order issued declaring Hindi as a national language of the country.

The observation was made by division bench of Chief Justice S.J. Mukhopadhaya and justice A.S. Dave recently while rejecting a Public Interest Litigation (PIL) by one Suresh Kachhadia.

Mr. Kachhadia had filed the PIL last year seeking direction to Central and State government to make it mandatory for manufacturers to print details of goods like price, ingredients and date of manufacture in Hindi.

The court observed, “Normally, in India, majority of the people have accepted Hindi as a national language and many people speak Hindi and write in Devanagari script but there is nothing on record to suggest that any provision has been made or order issued declaring Hindi as a national language of the country.”

“No mandamus can be issued on any manufacturer or others for giving details or particulars of package in Hindi in Devanagari script,” it further said.

It was contended by Mr. Kachhadia’s lawyer that Hindi was the national language and was understood by a large number of persons in the country.

The Counsel representing central government submitted that specific provision has been made under the Standard of Weight and Measures (Packaged Commodities) Rules of 1977 that particulars of declaration should be in Hindi in Devanagari script or in English.

The court said that the Constituent Assembly while discussing the Language Formula noticed the recommendation of the Sub-Committee on Fundamental Rights, which recommended the formula as per which, “Hindustani, written either in Devanagari or the Persian script at the option of the citizen, shall, as the national language, be the first official language of the Union. English shall be the second official language for such period as the Union may, by law, determine.”

However, in the constitution, Hindi was declared as an official language and not a national language.

The court in its order said Part XVII of the Constitution deals with Official Language. Under Article 343, official language of the Union has been prescribed, which includes Hindi in Devanagari script and English.

https://www.thehindu.com/news/national/Hindi-not-a-national-language-Court/article16839525.ece

யாழில் பொய்யை பரப்பாதீர்கள்..!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

மிக்க நன்றி. 🙏

உங்களுக்காவது இது பற்றி தெரிந்துள்ளதே..! 👌

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பது ஹிந்தியனைத் தவிர மிகுதி எல்லோருக்கும் தெரியும். 

😉

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தெற்கில் கிந்தி படிப்பிக்கவில்லை?  யாழ் மாணவர்களில் அவ்வளவு அக்கறையா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

கோசான், உங்கள் கருத்துப்படி பார்த்தால், யாழ் இந்து அந்தத்தில் இருந்து தான், இந்திய தேசீய கீதம் வந்திருக்கும் போல…!😊

ரவி தாகூர் எண்ட பெடியன் பழைய ஓல்ட் போய் எண்டு சொல்லாத மட்டும் ஓகே அண்ணா🤣.

4 hours ago, suvy said:

நீங்கள் இப்பதான் ஆரம்ப பாடத்தில் நிக்கிறீர்கள்.......!

ஹம் தும் ஏக் கமரே மே பந்துகோ (நானும் நீயும் ஒரு அறைக்குள் ) நான் இதுவரை வந்து விட்டேன் சிறியர்  ......!  😂

ரைட்டு, சுவி அண்ணா ஊர்பக்கம் பஞ்சாப் ரெஜிமெண்ட் நின்றிருக்குது🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, nunavilan said:

ஏன் தெற்கில் கிந்தி படிப்பிக்கவில்லை?  யாழ் மாணவர்களில் அவ்வளவு அக்கறையா?

ஹிந்தி சிங்களத்துடன் எப்படித்தான் ஒட்டி உறவாடினாலும் சிங்களம் சிங்களமாகவே இருக்க விரும்புகின்றது.
மறந்தும் காந்தி,நேருவைப் பற்றி பள்ளி பாடங்களில் கூட படிக்க மாட்டார்கள்.இதற்குள் ஹிந்தியாவது மந்தியாவது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

நீங்கள் இப்பதான் ஆரம்ப பாடத்தில் நிக்கிறீர்கள்.......!

ஹம் தும் ஏக் கமரே மே பந்துகோ (நானும் நீயும் ஒரு அறைக்குள் ) நான் இதுவரை வந்து விட்டேன் சிறியர்  ......!  😂

அந்தர் ‍ ‍உள்ளே.
உப்பர்‍ மேலே
நீச்சே கீழே
அமாரா என்னுடையா
துமாரா உன்னுடைய‌
போலோ பேசு

70கள் ஆரம்பத்தில் மேரே மித்துவா/ ருப்பிதெரா மஸ்தானா  என்று படினோம் அல்லவா?

இப்போ சாருகான் பாடியதுபோல் குச்சி குச்சி ஒஹ்த்தாயே என்று யாழில் இளைஞர்கள் பாடப்போகின்றார்கள்.

இந்தியா ஒரு சூத்தியா நாடு
 
7 hours ago, ராசவன்னியன் said:

மிக்க நன்றி. 🙏

உங்களுக்காவது இது பற்றி தெரிந்துள்ளதே..! 👌

அனாலும் இந்தி மொழிதான் ஆட்சி செய்கின்றது. அவர்களாது கடவுச்சீட்டில் கூட இந்தியில் தான் எழுதப்பட்டுள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

..அனாலும் இந்தி மொழிதான் ஆட்சி செய்கின்றது. அவர்களாது கடவுச்சீட்டில் கூட இந்தியில் தான் எழுதப்பட்டுள்ளது..

இந்தியோ, மந்தியோ அது இந்தியாவின் தேசிய மொழி அல்ல.. இந்தியாவுக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை..! அதுவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.

ஆங்கிலமும், இந்தியும் அலுவல் மொழி, அவ்வளவே..! PERIOD.

அலுவல் மொழி வேறு, தேசிய மொழி என்ற அந்தஸ்தும், அங்கீகாரமும் வேறு.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

..ஹம் தும் ஏக் கமரே மே பந்துகோ (நானும் நீயும் ஒரு அறைக்குள் ) நான் இதுவரை வந்து விட்டேன் சிறியர்  ......!  😂

"வெளியிலிருந்து ஒருத்தரும் உள்ளே வர முடியாது..
உள்ளேயிருந்து ஒருத்தரும் வெளியே போக முடியாது..
இம்மாதிரி சூழலில் என்ன நடக்கும் என நினை..

நீயும், நானும் இந்த அறையில் மாட்டிக்கினோம்..
சாவி வேற தொலைஞ்சி போச்சி..
உன் கவர்ந்திழுக்கும் கண்களால்..
......   ......  ......  ....."

அப்புறம் கதை எப்படியெல்லாம் போகுது தெரியுமா..? 🤭 😉

இதுதான் அப்பாடலின் தமிழாக்கம்..!🤗

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் இந்துக் கல்லூரியில் அண்மையில் திறக்கப்பட்ட வெளிநாட்டு கற்கைகள் மற்றும் திறன்விருத்தி நிலையத்தில் ஜேர்மன், பிரஞ், ஹிந்தி போன்ற பல பிறமொழி கற்கைகளை மாணவர்களுக்கு கற்பிக்கவிருக்கின்றோம். அதன் முதற்கட்டமாக ஹிந்தி மொழி கற்கை நெறியினை 17.08.2022 அன்று ஆரம்பித்திருக்கின்றோம். மேற்படி கற்கை நெறியின் வளவாளராக முன்னாள் களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி ஹாந்தி டீ சொய்சா அவர்கள் கடமையாற்றுவார். இவ்விரிவுரையாளரை ஒழுங்கமைத்து தந்த இந்திய துணைத்தூதரகம் யாழ்ப்பாணத்திற்கு நன்றிகள். மேற்படி மொழித்தேர்ச்சியூடாக எமது மாணவர்கள் உயர் புலமைப்பரிசில்களை வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
கற்கைநெறி வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை முடிவடைந்ததும் இடம்பெறும். பழைய மாணவர்களும் பங்கேற்கலாம்.
வரும் வாரம் ஜேர்மன் மொழி கற்கையை ஆரம்பிக்கின்றோம். ஆர்வமுள்ள பழைய மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
299510942_7819822741424203_1859091526563
 
298987181_7819822714757539_1701768517518
 
299965540_7819822758090868_5690811843739
 
299879546_7819822884757522_1543801780838
 
374374
 
191 comments
61 shares
 
=====
இந்தச் செய்தி தொடர்பான யாழ் இந்துக் கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் சமூக வலைப் பக்கத்தில் கல்லூரியால் இணைக்கப்பட்ட செய்தி இது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நகைச்சுவையை மறக்க முடியுமா..? 🤗

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

சிங்களம் கற்பிக்கப்படுகிறதா? 

திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றத்தை நிறுத்திவிட்டால் இனிமேல் இலங்கையில் தமிழருக்குப் பிரச்சனையே இல்லை என்றாகிவிடும் போல தென்படுகிறது ? 

😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

சிங்களம் கற்பிக்கப்படுகிறதா? 

திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றத்தை நிறுத்திவிட்டால் இனிமேல் இலங்கையில் தமிழருக்குப் பிரச்சனையே இல்லை என்றாகிவிடும் போல தென்படுகிறது ? 

😎

சிங்களம் நாங்க படிக்கும் போதே படிப்பிச்சது தானே. குறிப்பாக பேராதனை.. மொரட்டுவ.. கொழும்பு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானவர்களுக்கு மாலை நேர வகுப்பு நடந்தது. இப்போது பாடசாலையில் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது சிங்களம்.

விடுதலைப்புலிகள் சிங்களம் படிப்பதை தடுக்கவில்லை. மேலும்.. சிங்கள மொழி சேவையை தமிழீழ வானொலியில் நடத்தினர். 

ஒரு மொழித் திணிப்புக்கும்.. ஒரு மொழியை விருப்பத் தெரிவாக.. தேவைக்கு ஏற்ப கற்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுண்டு. 

ஹிந்தி திணிப்பு தமிழகத்தில் என்றால்.. சிங்களத் திணிப்பு தமிழீழத்தில். திணிப்புகள் ஏற்புடையவை அல்ல. அவை அடிப்படை மனித உரிமை மீறல்களாகவே அமையும். விருப்பத் தெரிவாவது அப்படி அமையாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

நான் இன்னும் "ஹிந்தி நகி மாலும் ஹை..!" என்றளவில் தான் இங்கே திரிகிறேன். 😉

ஏதேது, போகிற போக்கை பார்த்தால், ஜி யாழ்ப்பாணம் வந்து 'வடை சுடுவார்' போல தெரிகிறதே..!

யா அல்லா..! 😱

அவரால் நல்லூர் கோவிலுக்குள் புக முடியாது சட்டையை கழட்டனும் ஜி 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கால யாழ் இந்து பட்டதாரிகள் பேசிக்கொள்ளும் போது.....

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2022 at 16:28, nedukkalapoovan said:

சிங்களம் நாங்க படிக்கும் போதே படிப்பிச்சது தானே. குறிப்பாக பேராதனை.. மொரட்டுவ.. கொழும்பு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானவர்களுக்கு மாலை நேர வகுப்பு நடந்தது. இப்போது பாடசாலையில் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது சிங்களம்.

விடுதலைப்புலிகள் சிங்களம் படிப்பதை தடுக்கவில்லை. மேலும்.. சிங்கள மொழி சேவையை தமிழீழ வானொலியில் நடத்தினர். 

ஒரு மொழித் திணிப்புக்கும்.. ஒரு மொழியை விருப்பத் தெரிவாக.. தேவைக்கு ஏற்ப கற்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுண்டு. 

ஹிந்தி திணிப்பு தமிழகத்தில் என்றால்.. சிங்களத் திணிப்பு தமிழீழத்தில். திணிப்புகள் ஏற்புடையவை அல்ல. அவை அடிப்படை மனித உரிமை மீறல்களாகவே அமையும். விருப்பத் தெரிவாவது அப்படி அமையாது. 

அப்படிப் பார்த்தால்,

இப்போது எங்களுக்கு என்னதான் பிரச்சனை ? 

யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படுவதை வரவேற்று மகிழும் இந்தி(ய)விசுவாசிகள், இப்போது பிரெஞ்சு, டொச்(ஜேர்மன்) கற்பிக்கப்படுவதை யாரும் கண்டிக்கவில்லை என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.“எங்கோ தொலைவில் இருக்கும் அந்திய மொழியைக் கற்கலாம், எங்கள் அயலில் இருக்கும் இந்தியை கற்கக் கூடாதா” என்றும் இவர்கள் கேட்கிறார்கள்?
மொழியைக் கற்பது என்பது வாழ்வியல் சார்ந்தது.மொழியைக் கற்பிக்க வைப்பது என்பது கலாச்சார ஆக்கிரமிப்பின் அடையாளம் சார்ந்தது.
மேற்கு ஐரோப்பாவிலே அதிக மக்களால் பேசப்படுகிற மொழி டொச்.(9 கோடி 70 இலட்சம் பேர்) அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பிரெஞ்சு(7கோடியே 15இலட்சம் பேர்) முன்றாம் இடத்தில் இத்தாலி உள்ளது.(6கோடி 50 இலட்சம்) நான்காம் இடத்தில்ஆங்கிலம்உள்ளது.(6கோடி 30இலட்சம் பேர்) இவை 2022 ‌ஜூன் மாத நிலவரம். மேற்கு ஐரோப்பாவிலே அதிக நாடுகளில் பேசப்படும் மொழியாக முதலிடத்தில் பிரெஞ்சு இருக்கிறது.(பிரான்ஸ் -பெல்ஜியம் -சுவிஸ் -லுசேம்பேர்க் -இத்தாலியின் வடபகுதி-ஸ்பெனின் பாஸ்க் பகுதி.)அடுத்து டொச்.(ஜெர்மனி -ஓஸ்ரியா -சுவிஸ்-பெல்ஜியம்) ஆங்கிலம் மூன்றம் இடத்தில் உள்ளது(ஐக்கிய இராட்ச்சியம் -அயர்லாந்து). பிரான்சிலும் ஜெர்மனியிலும் சுவீசிலும் இத்தாலியிலும் பெல்ஜியத்திலும் ஏறக்குறைய 4 இலட்சம் இலங்கைத்தமிழர்கள் வாழ்கிறார்கள்.இந்த நாடுகளில் வாழும் ஏறக்குறைய ஒரு இலட்சம் தமிழ் பிள்ளைகள் பிரெஞ்சு, டொச் ஆங்கிலம் தமிழ் ஆகிய 4 மொழிகளில் தேர்ச்சியுள்ளவர்களாக இருக்கிறர்கள்.ஏறக்குறைய 5ஆயிரம் பிள்ளைகள் அதி உயர்கல்வி பட்டப்படிப்புகளை முடித்திருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த 5 நாடுகளிலும் மருத்துவர்களாக விஞ்ஞானிகளாகப் பொறியிலாளர்களாக உலக பெரு வணிக நிறுவனங்களில் உயரதிகாரிகளாக, காவல்துறை இராணுவம் விமானப்படை கடற்படைஅதிகாரிகளாக இருக்கிறர்கள்.இங்கே இவர்கள் மீதுஅகதிகள் தமிழர்கள் என்று எந்தப் பாரபட்சமும் காட்டப்படவில்லை.
ஆனால் இந்தியாவிலே நிலைமை என்ன ? 50 வருடங்களாக அங்கே எங்கள் மக்கள் அகதிகளாகத்தான் இன்னும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.அங்கே இலங்கை தமிழ் அதிகளின் குழந்தைகள் உயர் கல்வி கற்பதற்கு தடை, அதை மீறிக் கற்றாலும் வேலை வாய்ப்பு பெற முடியாது.(யாரும் வரதராசப் பெருமாளின் மகள் விமானியாக வர முடிந்தது தானே என்று சொல்ல வேண்டாம்.)இங்கே பிரான்சிலே தொடரூந்துகளிலே திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்புடன் எழுதப்பட்டிருக்கிறது.ஆனால் வட இந்தியாவிவே திருவள்ளுவருக்கு சிலை வைக்க முடியாத நிலை தானே இருக்கிறது.இங்கே ஐரோப்பாவில் 5 முதல் 8 வருடங்கள் இருந்து இந்த நாட்டு மொழிகளைக் கற்றுத் தேறினால் குடியுரிமை பெறலாம். இந்தியயை கற்றால் இந்திய குடியுரிமை கொடுப்பார்களா?நாங்கள் எந்தவொரு மொழிக்குமோ அந்த மொழியைக் கற்பதற்குமோ எதிரானவர்கள் அல்ல.எங்கள் மொழியைச் சிறுமைப்படுத்தி எங்கள் கலாச்சர அடையாளங்களை அழிக்க முற்படும் ஆக்கிரமிப்பையே நாங்கள் எதிர்க்கிறோம். 

 https://www.facebook.com/photo.php?fbid=6042967482385408&set=a.132576320091250&type=3&notif_id=1661323997248453&notif_t=feedback_reaction_generic&ref=notif

Edited by Siva Sinnapodi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Siva Sinnapodi said:

அருமை.
இதை விட  விளக்கமாக , தரவுகளுடன் விபரமாக எழுத முடியாது. நன்றி ஐயனே.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

May be an image of text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.