Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொலருக்கு எதிராக... பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு, வீழ்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டொலருக்கு எதிராக பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி!

டொலருக்கு எதிராக... பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு, வீழ்ச்சி!

உலகளவில் புதிய முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தை நோக்கி விரைந்துள்ள நிலையில், டொலருக்கு நிகரான பவுண்ட், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்ட், திங்கட்கிழமை ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்து 1.0327 பவுண்டாக இருந்தது.

திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங், 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய வரிக் குறைப்புத் திட்டத்தை வெளியிட்ட பிறகு 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய வீழ்ச்சியைக் கண்டது.

45 பில்லியன் பவுண்டுகள் வரி குறைப்பு தொகுப்பு பொது நிதி நிலைத்திருக்குமா என்பது குறித்த தீர்ப்பை சந்தை வழங்கியுள்ளது.

ஆசிய வர்த்தகத்தில் திங்கட்கிழமை தொடக்கத்தில் 1985ஆம் ஆண்டு பெப்ரவரியில் அமைக்கப்பட்ட 1.054 பவுண்டகள் என்ற கிரீன்பேக்கிற்கு எதிராக பவுண்ட் அதன் எல்லா நேரத்திலும் இல்லாத அளவுக்கு கீழே சரிந்தது.

ஆற்றல் நெருக்கடி அல்லது உக்ரைனில் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் குளிர்காலம் நெருங்கி வருவதால், மந்தநிலையின் அபாயம் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளுக்கு மத்தியில், ஆசிய வர்த்தகத்தில் டொலருக்கு எதிராக யூரோ 20 ஆண்டுகளில் புதிய வீழ்ச்சியை எட்டியுள்ளது.

https://athavannews.com/2022/1301249

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு தானே ஆசைப்பட்டான் உலகப் பொலிஸ்!🤭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

டொலருக்கு எதிராக... பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு, வீழ்ச்சி!

அமெரிக்காவின் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டு வருகின்றது.
ஐரோப்பாவின் கொட்டத்தை அடக்குவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்காவின் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டு வருகின்றது.
ஐரோப்பாவின் கொட்டத்தை அடக்குவார்களா?

உக்ரேன் -ரஸ்ய யுத்தம் என்பது Dollar v. Euro+Pound யுத்தம்தான். Euro Zone படிப்படியாக உடையும். US க்குப் போட்டியாக வரும் எல்லாவற்றிற்கும் இதுதான்  நிலை

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 

  • கருத்துக்கள உறவுகள்

எறத்தாள இரண்டு மடங்காக இருந்த யூரோ அண்மையில் டாலருக்கு கீழே போயிருந்தது.

இப்போ அதே நிலமை பவுண்ஸ்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவின் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டு வருகின்றது.
ஐரோப்பாவின் கொட்டத்தை அடக்குவார்களா?

அஞ்சு எருமைகள், சிங்கம் கதை தான்.

பிரித்தானியாவை, ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கழர வைத்து, தனித்தனியாக பிரிச்சு மேயுது டாலர்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, Nathamuni said:

அஞ்சு எருமைகள், சிங்கம் கதை தான்.

பிரித்தானியாவை, ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கழர வைத்து, தனித்தனியாக பிரிச்சு மேயுது டாலர்...

அடுத்தது இத்தாலி போல கிடக்கு......

நேற்று முந்தநாள் எல்லாம் இத்தாலியில ஐரோப்பிய ஒன்றிய கொடியெல்லாத்தையும் சனம் களட்டி எறிஞ்சத கவனிச்சனீங்களோ.......? 

1 hour ago, Kapithan said:

உக்ரேன் -ரஸ்ய யுத்தம் என்பது Dollar v. Euro+Pound யுத்தம்தான். Euro Zone படிப்படியாக உடையும். US க்குப் போட்டியாக வரும் எல்லாவற்றிற்கும் இதுதான்  நிலை

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 

ரஷ்யாவை ஏன் அமெரிக்கா  பலவீனப்படுத்த துடிக்குது எண்டு விளங்குதோ......🤣

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் ஒரு பொருளாதார சரிவை எதிர்கொள்ள போகிறதோ என கருதுகிறேன்.

பெரும்பான்மையான மூலப்பொருள்கள் அமெரிக்க  நாணயத்திலேயே விற்பனை செய்யப்படுவதால், அமெரிக்காவில் உள்ள பணவீக்கம் அனைத்து நாடுகளிலும் ஒரு புற்று நோய்போல பரவும்.

அமெரிக்கா தனது reserve currency எனும் நிலையிலிருந்து இறங்க விரும்பாது, ஏனென்றால் அமெரிக்காவின் மொத்த உற்பத்தியின் அளவை விட அதன் கடன் அளவு அதிகம்.

உதாரணமாக 1000 ரூபா வருமானம் வருபவர் 1100 செலவு செய்தால் (தொடர்ந்து) என்ன ஆகும்?

அமெரிக்க செலவு அதிகமாக இருக்க காரணம் தொடர்ந்தும் தானே உலக சண்டியனாக இருக்க வேண்டும் என்பதற்கான செலவு, அதன் மூலம் ஏற்படும் பொருளாதார ஆதாயம் வருமானம் ஆகும் இவை ஒரு வட்ட பாதையில் பயணிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வு பெரும்பான்மையான மக்களை வறுமைக்கோட்டினை நோக்கி தள்ளும் அதே நேரம் ஏற்படுகின்ற பணவீக்கம் பொது மக்களின் செலவினை மட்டுப்படுத்த பொருளாதார மந்தம் ஏற்படும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் நிலமை கட்டுக்கடங்காமல் செல்லும் போது பொருளாதார சரிவு ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, vasee said:

இந்த வீழ்ச்சியிலிருந்து பிரசைகளின் கவனத்தைத் திருப்புவதற்காக உலகெங்கிலும் US கலகங்களையும் யுத்தங்களையும் தூண்டிவிடும். 

பாதிக்கப்படும் நாடுகளில் பொது அமைதியின்மை ஏற்படும். அதன் தொடர்ச்சியாக கலகங்களும் ஆட்சி மாற்றங்களும் ஏற்படும். 

அமைதியாக USA அதன் பலனை அறுவடை செய்யும். உதாரணமாக, தற்போது ரஸ்யா மீதான எரிவாயுத் தடையால் அதிக வருமானமீட்டுவது USA , Euro, Pounds வீழ்ச்சியால் பயனடைவது US (Dollar) ......இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.....

ரஸ்ய உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளம் ஆகிய உக்ரேனுக்கும் பொதுமக்களாகிய எமக்கும்  இருபக்கமும் அடி.... 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி லண்டன்காரர் ..ஊர்பக்கம் போகாயினமோ?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, alvayan said:

அப்ப இனி லண்டன்காரர் ..ஊர்பக்கம் போகாயினமோ?

இலங்கையில் டொலர் பாவனையில்  உண்டா?.   இல்லையே     ரூபாய் அல்லவா?. பவுண்டுகள் மாற்றும் போது அதிகமான ரூபாய்களை பெற முடியும்    வர வர    அதிகம் ரூபாய்களை பெறுவது கூடி செல்லும்  ஆகவே   லண்டன்காரர்  இலங்கை போவது கூடும்’ 😂

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kandiah57 said:

இலங்கையில் டொலர் பாவனையில்  உண்டா?.   இல்லையே     ரூபாய் அல்லவா?. பவுண்டுகள் மாற்றும் போது அதிகமான ரூபாய்களை பெற முடியும்    வர வர    அதிகம் ரூபாய்களை பெறுவது கூடி செல்லும்  ஆகவே   லண்டன்காரர்  இலங்கை போவது கூடும்’ 😂

கந்தையர் மாறி நடக்கும்..! பயணச் சீட்டுக்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் பெறப்படும் ரூபாய்கள் குறையும். அதனால் இவர்கள் ஊர் போய்ப் படம் காட்டுவதும் குறையும். ஏனெனில் அவர்களின் சேமிப்புக் குறையும்…!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதங்களை உயர்த்த தயங்கமாட்டோம்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த... வட்டி வீதங்களை உயர்த்த, தயங்கமாட்டோம்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததை அடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதங்களை உயர்த்த தயங்கமாட்டோம் என்று இங்கிலாந்து வங்கி கூறியுள்ளது.

வளர்ச்சிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் நவம்பர் மாதத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் வங்கி கூறியது.

முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கும் முயற்சியில் கடனைச் சமாளிக்கும் திட்டத்தை வெளியிடுவதாக திறைசேரி கூறியதை அடுத்து அதன் அறிக்கை வந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) ஆசிய நாணய சந்தை வர்த்தகத்தில், பவுண்ட் 1 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து 1.08 டொலராக இருந்தது.

திங்கட்கிழமை, சில பிரித்தானிய கடன் வழங்குநர்கள் புதிய அடமான ஒப்பந்தங்களை நிறுத்துவதாகக் கூறினர்.

இங்கிலாந்தின் மிகப்பெரிய அடமானக் கடன் வழங்கும் நிறுவனமான ஹாலிஃபாக்ஸ், சந்தை ஏற்ற இறக்கம் காரணமாக கட்டணத்துடன் வரும் அனைத்து அடமானப் பொருட்களையும் தற்காலிகமாக திரும்பப் பெறுவதாகக் கூறியது.

விர்ஜின் மணி மற்றும் ஸ்கிப்டன் பில்டிங் சொசைட்டி ஆகியவை புதிய வாடிக்கையாளர்களுக்கு அடமான பொருட்களை வழங்குவதை நிறுத்தியுள்ளன.

சந்தைக் கொந்தளிப்பு காரணமாக நீண்ட காலக் கடன் வாங்கும் செலவில் அதிகரிப்பு, புதிய அடமான ஒப்பந்தங்களை வழங்குவதற்கான கடன் வழங்குபவர்களின் செலவு மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1301521

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

இந்த வீழ்ச்சியிலிருந்து பிரசைகளின் கவனத்தைத் திருப்புவதற்காக உலகெங்கிலும் US கலகங்களையும் யுத்தங்களையும் தூண்டிவிடும். 

பாதிக்கப்படும் நாடுகளில் பொது அமைதியின்மை ஏற்படும். அதன் தொடர்ச்சியாக கலகங்களும் ஆட்சி மாற்றங்களும் ஏற்படும். 

அமைதியாக USA அதன் பலனை அறுவடை செய்யும். உதாரணமாக, தற்போது ரஸ்யா மீதான எரிவாயுத் தடையால் அதிக வருமானமீட்டுவது USA , Euro, Pounds வீழ்ச்சியால் பயனடைவது US (Dollar) ......இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.....

ரஸ்ய உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளம் ஆகிய உக்ரேனுக்கும் பொதுமக்களாகிய எமக்கும்  இருபக்கமும் அடி.... 

☹️

இப்ப நிலமை அனைத்து  நாடுகளிலும் மோசமாக உள்ளது, மத்திய வங்கி வங்கிகளிற்கான வட்டி விகித நிர்ணயத்தில் வட்டி விகித குறைப்பை நிகழ்த்தும் போது 1 க்கு 1000 தடவை யோசித்து மெதுவாக வட்டியினை குறக்கும் வங்கிகள், வட்டி விகிதம் அதிகரிக்கும் போது மட்டும் போட்டி போட்டு வட்டி விகிதத்தினை உயர்த்துவார்கள்.

பாவம் மக்கள் ஏற்கனவே அளவிற்கதிகமான வீட்டுக்கடனினால் தவிக்கிறார்கள், சில நகரங்களில் ஏற்கனவே மொத்த வருமானத்தில் (Gross) 28% ஆபத்து கட்டத்துக்கு மேல் அதிகரித்து செல்கிறது.

அதற்கேற்ப வருமான அதிகரிப்பின்மை, வருமான இடைவெளி அதிகரிப்பு என பொருளாதாரம் ஒரு நெருக்கடியான நிலையில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

அப்ப இனி லண்டன்காரர் ..ஊர்பக்கம் போகாயினமோ?

இந்த நெருக்கடி இங்கிலாந்துக்கு மாத்திரம் அல்ல உலகெங்கும் பரவுது சுண்டங்காய் சொறிலங்கா குருந்தூர் மலையில் நின்று சொறியினம் அங்கும் இங்குள்ளதை விட நிலைமை மோசமாகும் ரூபா மிதப்பை நிறுத்தியுள்ளார்கள் அதனால் மாயத்தோற்றம் காட்டுகிறார்கள் பள்ளிக்கு தேங்காய் பூ சாப்பிட கொண்டு போன செய்தியையே மூடி மறைகிறார்கள் https://www.newswire.lk/2022/09/22/reports-of-student-eating-coconut-kernels-false-pmd/

சொல்லபோனால் அங்குள்ள ஊடகங்கள் மூலம் மக்களுக்கு மாஜயால உணவு காட்டுகிறார்கள் இனி வரும் காலம் நிலைமை இன்னும் மோசமாகும் வெளிநாட்டு சனம் வடகிழக்கு பக்கம் போகாமால் விட்டால் பணபுழக்கம் குறைந்து  இன்னும் நிலைமை மோசமாகும்.சந்திக்கு சந்தி அன்னதான குடில்கள் அமைக்கும் அளவுக்கு நிலமை பாரதூரமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

சொறி சிங்களம் விட்ட பிழையை, UK செய்து இருக்கிறது, வரியை குறைத்து, அந்த வருமானத்தை கடனால் பெறுவது.

எல்லாருக்கும் வகுப்பெடுத்த IMF, வாயை திறந்து இருக்கிறது வளர்முக நாடுகளை சாடும் தொனியில். us, மற்றும் eu, g 7 சாடி உள்ளது. 

அனால், இந்த வரி குறைப்பு, அந்த வருமானத்தை கடனால் பெறுபவது பற்றி 3 நாட்களுக்கு முதல், இப்போதைய  நிதியமைச்சர் (இவர் JP Morgan மற்றும் hedge funds இல் முன் வேலை பார்த்தவர்), இந்த மினி பட்ஜெட் இ பற்றிய idea வை hedge funds உடன் பகிர்ந்ததாகவும், அதை வைத்து பல hedge funds, மற்றும் முதலீடு வங்கிகள் pounds ஐ short செய்து (இதுவும் ஓர் காரணம் pounds குறைந்ததற்கு), பாரிய இலாபம் அடைந்துள்ளன.

pounds இன் பெறுமானம், மற்றும் அதன் மீதுள்ள மதிப்பு, நம்பிக்கை போன்றவற்றை தக்க வைக்க, இப்பொது மத்திய வாங்கி வட்டியை (எதிர்பார்க்கப்பட்ட 4% க்கு ) கூட (6% அளவுக்கு ) வேண்டிய நிலைக்கு வந்துள்ளது, படிப்படியாக அடுத்த வருடம் அளவில். 

ஆனால், இது எல்லாம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டே, இந்த கொள்கை, மினி பட்ஜெட் அறிவிப்பை இந்த அரசஅங்கம் செய்தது,  (பொருளியல்) சிஸ்ட த்தை மறுசீரமைப்பதற்கு (reset) என்ற ஒரு கதையும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய ஏகாதிபத்தியம் உலகை ஆள வேண்டும் என்று மேற்குலகில் வாழ்ந்து அனுபவித்தபடி ஏங்குபவர்கள், பிரித்தானியா இலங்கை தமிழர்களை அடிமையாக்கிவிட்டது என்பவர்களும்  பிரித்தானிய பவுண்ஸ், யுரோ வீழ்ச்சி அடைந்து விட்டது என்று மிகவும் கவலை கொள்கிறார்களாம் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.