Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணம்

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னரான நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கருத்துவெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியின் கீழ் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இறையாண்மை கொண்டதொரு நாட்டில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றது எனவும், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல முடியாது என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், உள்நாட்டு பொறிமுறையின் கீழ் தீர்காண்பதே பொருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1303202

 

  • கருத்துக்கள உறவுகள்

20221006_173705.jpg

நன்றி  Newswire

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப கொடியிறக்கம்.....

அப்புறம்... போங்கப்பா, போயி... பிள்ளை குட்டியள படிப்பிச்சிடுங்க கதை தானே? 🤔

  • கருத்துக்கள உறவுகள்

China No 

India ? 
 

கடவுளே, எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று.  - நெப்போலியன்(?)

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  நாடுகளுக்கு   நன்றி

பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

Paris Club Seeks Cooperation With India & China to Restructure Sri Lanka’s Foreign Debt

2 hours ago

© AP Photo / Eranga Jayawardena

Subscribe

Dhairya Maheshwari 

All materials

Sri Lankan President Ranil Wickremesinghe told the parliament on Thursday that his government has kicked off debt-restructuring talks with Beijing, with the negotiations set to continue after the Communist Party’s Congress later this month.

The Paris Club, an informal group comprising officials from 23 advanced economies or creditor nations, has formally approached India and China to seek the cooperation of the two governments in restructuring Sri Lanka’s foreign debt, Bloomberg reported on Monday.

The Paris Club's formal request to New Delhi and Beijing was made in August, with a response still awaited, according to the report.

In an official statement in the first week of September, the Paris Club said that it was willing to coordinate with Sri Lanka’s official creditors in a bid to restructure Colombo’s overall debt.

The International Monetary Fund (IMF) announced a staff-level agreement (SLA) for $2.9 billion with Colombo on September 1. However, the IMF will start disbursing the funds under the bailout pact only if Colombo manages to get assurances that its foreign creditors would restructure their respective debt.

Japan, China and India are Sri Lanka's biggest creditors, accounting for around $10 billion of Colombo’s nearly $51 billion in foreign borrowings. So far, none of the governments has agreed to restructure their debt to help Colombo meet the terms of the IMF deal.

Unlike China and India, Japan is a member of the Paris Club.

World

Sri Lanka Resumes FTA Talks With China As Debt Restructuring Talks Proceed With Foreign Creditors

30 September, 15:34 GMT

Sri Lankan authorities have said that the debt-restructuring talks could go on till 2023, which would prolong the economic crisis.

As a middle-income country, Sri Lanka wasn’t included in the G-20 ‘Common Framework’ adopted in 2020. The framework allows low-income countries to restructure the loans owed to the G-20 governments, which include the Paris Club economies as well as India and China.

So far, Zambia, Chad and Ethiopia have availed themselves to the facility, and had their foreign debt reorganized under the ‘Common Framework’.

Meanwhile, consumer inflation in Sri Lanka topped 70 percent in August, mostly driven by high food and fuel prices.

The nation of about 22 million is facing its worst economic crisis in over seven decades, with depleting forex reserves leading to the government being unable to pay for food and fuel imports, amid escalating commodity prices in the wake of the Ukraine crisis.

In April, Sri Lanka announced that it would be defaulting on its foreign debt repayments.

https://sputniknews.com/20221006/paris-club-seeks-cooperation-with-india--china-to-restructure-sri-lankas-foreign-debt-1101571427.html

😏

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குறித்த புதிய பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றம்

06 OCT, 2022 | 05:45 PM
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

FeYl94wWIAIXHMu.jpg

இலங்கை குறித்த புதிய பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. பிரேரணைக்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 20 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று 06 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில், இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/137140

51 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ! இலங்கை குறித்தும் விவாதம் !

By PRIYATHARSHAN

06 OCT, 2022 | 06:01 PM
image

இலங்கை குறித்து இணையனுசரணை நாடுகளால் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பம் !

 

இலங்கை குறித்த புதிய பிரேரணை ஜெனிவாவில் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை குறித்த புதிய பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. பிரேரணைக்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 20 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று 06 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில், இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது.

கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார்.

இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி  ஜெனிவா சென்றுள்ள தூதுக்குழுவின் தலைவர் அலிசப்ரி மனித உரிமைப் பேரவையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் உரையாற்றவிருக்கிறார்.

 

 

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 17 பக்க எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் 

https://cdn.virakesari.lk/uploads/medium/file/188707/Press-Release-Sri-Lanka-2022-09-Tamil.pdf

 

 

  • நாடுகளை அடிப்படையாக கொண்ட பொறிமுறைகளை ஆதரிக்கவில்லை என  பெலாரஸ் தெரிவிப்பு 

 

  • அரசியல்நோக்கங்களை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள்  உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுபவை என அந்த நாடு தெரிவித்துள்ளது.

 

  • நாடுகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள் ஐ.நா. சாசனத்தின் அடிப்படையை மீறுபவையென புரூண்டி தெரிவித்துள்ளது.

 

  • கடந்த தீர்மானம்  குறிப்பிட்ட நாட்டின் ஆதரவுடன் நிறைவேற்றப்படாததால் அது பயனுள்ளதாக அமையவில்லை என சிம்பாப்வே தெரிவித்துள்ளது.

 

  • மனித உரிமைகளிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள வியட்நாம் இழப்பீடு மற்றும் நிலங்கை விடுவிப்பது குறித்த இலங்கையின் தேசிய முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

  • இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலவரத்தை பெரிது படுத்தும் எண்ணமில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

  • ஐக்கியநாடுகள் மனித உரிமைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுடன் இலங்கை தன்னை இணைத்துக்கொள்வது அவசியம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

  • முக்கியமான நடவடிக்கையாக இலங்கை  நீண்டகாலமாக காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஊழல் ஆகியவற்றிற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

  • இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்து கனடா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

 

  • ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அண்மைய தாக்குதல்கள் இலங்கையில் தொடர்ந்து நிலவும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத்தினர் துன்புறுத்தப்படும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றது என கனடா தெரிவித்துள்ளது.

 

  • அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான இலங்கையின் அணுகுமுறை கடினமாவது குறித்து நியுசிலாந்து கவலை தெரிவித்துள்ளது.

 

  • பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகளை சுட்டிக்காட்டியுள்ள நியுசிலாந்து சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

  • இலங்கைக்கு தனது தளர்ச்சியற்ற ஆதரவை வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இலங்கை முன்னெடுத்துள்ள உள்நாட்டு முயற்சிகளை மனித உரிமை பேரவை அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

  • இலங்கை தனது ஆணையை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்படவேண்டுமென துருக்கி தெரிவித்துள்ளது.

 

  • முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இலங்கை ஜனநாயக ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளமைக்கு உகண்டா பாராட்டு தெரிவித்துள்ளது.

 

 

 

 

------------------------------------------------------------------------------------------------------------------------

 

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை ஜனநாயக சீர்திருத்தங்களிற்கு வாய்ப்பில்லை - ஜெனீவாவில் நுவான் போபகே

https://www.virakesari.lk/article/135485

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி சிங்கங்கள் கியூபா, எரித்திரியா எமக்கு எதிராக வாக்களித்துள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

புரட்சி சிங்கங்கள் கியூபா, எரித்திரியா எமக்கு எதிராக வாக்களித்துள்ளன.

இந்தியாவுக்கு… இலங்கையில் என்ன நடந்தது என்று தெரியாத படியால்,
நடுநிலைமை வகித்து இருக்கு. 
பிறகென்ன… வாற வருசமும், வடக்கு கிழக்கில்… காந்தி ஜெயந்திதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை பேரவையில் இந்தியா இன்று தெரிவித்துள்ளது என்ன?

By RAJEEBAN

06 OCT, 2022 | 06:03 PM
image

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மாகாணசபை தேர்தல்களை முன்கூட்டியே நடாத்துதல் குறித்த தனது உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது

இலங்கை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்திர மணிப்பாண்டே இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

 

அருகில் உள்ள அயல்நாடு என்ற அடிப்படையில் 2009ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையின் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளிற்கு இந்தியா பெருமளவு உதவியை வழங்கியுள்ளது.

மிகச்சமீபத்தில் ஜனவரிக்கு பின்னர் இலங்கை மக்கள் சமீபத்தைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவுவதற்காக இந்தியா முன்வந்து முன்னர் ஒருபோதும் இல்லாத உதவியை வழங்கியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இந்தியா எப்போதும் தமிழ்மக்களின் சமத்துவம் நீதி கௌரவம்அமைதி ஐக்கியம் ஆகிய அபிலாசைகளிற்கு ஆதரவளித்தல் இலங்கையின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு  ஆதரவளித்தல் என்ற இரு அடிப்படை கொள்கைகளால் வழிநடத்தப்பட்டுள்ளது.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மாகாணசபை தேர்தல்களை முன்கூட்டியே நடாத்துதல் குறித்த இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகளை நாங்கள் கருத்தில் எடுத்துள்ளோம்.

இது தொடர்பான முன்னேற்றம் போதுமானதல்ல என நாங்கள் கருதுகின்றோம்.

இதனடிப்படையில் இந்த உறுதிமொழிகளை விரைவில் நடைமுறைப்படு;த்துவது குறித்து அர்த்தபூர்வமாக இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

அனைத்து இலங்கையர்களிற்கும் பொருளாதார செழிப்பை ஏற்படுத்துவதும் இலங்கையில் தமிழ் மக்களின் கௌரவம் அமைதி மற்றும் பொருளதார வளம் ஆகியவற்றிற்கான நியாபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவதும்ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

இலங்கையில் தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவது அனைத்து இலங்கையர்களிற்குமான பொருளாதார செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்தியா இலங்கை மற்றும் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்படும்.

https://www.virakesari.lk/article/137145

  • கருத்துக்கள உறவுகள்

இது சேப்பில்லை. ஜனநாயகத்துக்கு எதிரான மேற்குலக நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம். புறக்கணிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

 பெயரளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுப் பின்னர் பேரம் பேசுவதே மேற்குலகின் தந்திரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தின் காவலர்கள் எமக்கு ஆதரவாக வாக்களித்தால் சம்பந்தர்  ஐயாவிடம் தமிழீழத்தை கையளிப்பார்கள்.🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

ஜனநாயகத்தின் காவலர்கள் எமக்கு ஆதரவாக வாக்களித்தால் சம்பந்தர்  ஐயாவிடம் தமிழீழத்தை கையளிப்பார்கள்.🙃

4 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு… இலங்கையில் என்ன நடந்தது என்று தெரியாத படியால்,
நடுநிலைமை வகித்து இருக்கு. 
பிறகென்ன… வாற வருசமும், வடக்கு கிழக்கில்… காந்தி ஜெயந்திதான்.

ஜனநாயக தூண்கள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தபடியால் வாற தைப்பொங்கல் அல்லது அடுத்த தைப்பொங்கல் நிச்சயம் சுயநிர்ணயம் பெற்ற தமிழ் மண்ணில் தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

 பெயரளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுப் பின்னர் பேரம் பேசுவதே மேற்குலகின் தந்திரம்

இலங்கையை வழிக்கு கொண்டவந்து தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இந்தியா எப்போதும் தமிழ்மக்களின் சமத்துவம் நீதி கௌரவம்அமைதி ஐக்கியம் ஆகிய அபிலாசைகளிற்கு ஆதரவளித்தல் இலங்கையின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு  ஆதரவளித்தல் என்ற இரு அடிப்படை கொள்கைகளால் வழிநடத்தப்பட்டுள்ளது.

சுத்த பச்சோந்தித்தனம். இலங்கையின் இறைமை; தமிழர்களை அடக்கியாள்வது.  எப்படி இரு துருவங்களான இரு பக்கமும் ஆதரவளிக்க முடியும்? தமிழரின் நீதி, சமத்துவம், அமைதி, அபிலாஷைகளிற்கு ஆதரவளிப்பவர், எப்படி அதை துடிக்க துடிக்க அழிக்க ஆதரவளித்தார்? எங்களவருக்கும் இந்தியா ,சொல்வதை  புரிந்துகொள்ள முடியவில்லை இந்தியாவுக்கும் தான் சொல்வது எதுவென புரியவில்லை, இந்தியாவை நன்கு புரிந்து காரியமாற்றும் திறமை இலங்கைக்கே உண்டு!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

பொலிவியா சீனா கியூபா வெனிசூலா   இந்த நாலு நாடுகளும் அமெரிக்கா ஆதரிக்கும் எந்த தீர்மானங்களையும். எதிர்க்கும் சரி பிழை நன்மை தீமை  என்று பார்ப்பதில்லை     எனவே… இந்த நான்கு கழிக்கலாம் 7-4=3 தீர்மானத்துக்கு ஆதரிக்க நாடுகள் மூன்று ஆகும்       அதுசரி   எரித்திரியாவில் தான் தமிழ் ஈழ விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிந்தேன்.  எங்கே அவை?  எரித்தியாவுககு சொந்தமாகி விட்டதா?இலலை இலங்கை பெற்று கொண்டதா. அல்லது பொறுப்பேற்றார் விற்பனை செய்து விட்டார்களா?. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

பொலிவியா சீனா கியூபா வெனிசூலா   இந்த நாலு நாடுகளும் அமெரிக்கா ஆதரிக்கும் எந்த தீர்மானங்களையும். எதிர்க்கும் சரி பிழை நன்மை தீமை  என்று பார்ப்பதில்லை     எனவே… இந்த நான்கு கழிக்கலாம் 7-4=3 தீர்மானத்துக்கு ஆதரிக்க நாடுகள் மூன்று ஆகும்       அதுசரி   எரித்திரியாவில் தான் தமிழ் ஈழ விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிந்தேன்.  எங்கே அவை?  எரித்தியாவுககு சொந்தமாகி விட்டதா?இலலை இலங்கை பெற்று கொண்டதா. அல்லது பொறுப்பேற்றார் விற்பனை செய்து விட்டார்களா?. 

கந்தையர்

அது எரித்திரியா அல்ல எதியோப்பியா என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

பொலிவியா சீனா கியூபா வெனிசூலா  

இந்த நாலு நாடுகளும் அமெரிக்கா ஆதரிக்கும் எந்த தீர்மானங்களையும். எதிர்க்கும் சரி பிழை நன்மை தீமை  என்று பார்ப்பதில்லை     எனவே… இந்த நான்கு கழிக்கலாம் 7-4=3 தீர்மானத்துக்கு ஆதரிக்க நாடுகள் மூன்று ஆகும்       அதுசரி   எரித்திரியாவில் தான் தமிழ் ஈழ விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிந்தேன்.  எங்கே அவை?  எரித்தியாவுககு சொந்தமாகி விட்டதா?இலலை இலங்கை பெற்று கொண்டதா. அல்லது பொறுப்பேற்றார் விற்பனை செய்து விட்டார்களா?. 

 

இவர்கள்  சிவப்பு புத்தககாறர்கள்

என்னவெல்லாம் தத்துவங்கள்  தெரியுமா?

இப்ப  நினைத்தாலும்  புல்லரிக்குது😡

நாசமாப்போவார்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

On 6/10/2022 at 18:04, ஏராளன் said:

இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலவரத்தை பெரிது படுத்தும் எண்ணமில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

ரஷ்யாவுக்கு வேறு சோலி இருப்பதால் அடக்கமாக உள்ளது. இல்லாவிட்டால் அதன் ஆதரவு நாடுகளுடன் சேர்ந்து வழக்கம்போல் வெட்டி ஆடியிருக்கும்.

 முன்னர் தமிழர்கள் கொடிகளுடன் பெரும் எடுப்பில் ஜெனீவா நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்துவார்கள். ஆனால் இந்தத் தடவை பெரிய அளவில் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை, ஆனால் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்மானத்தில் என்ன உள்ளது என்ற முழுமையான விபரம் யாருக்காவது தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

வருசா வருசம் தீர்மானம் போட்டு வாக்கும் போட்டுக் கிட்டு இருக்கினமே தவிர.. பாதிக்கப்பட்ட மக்களுக்கோ.. இனத்திற்கோ விடிவு கிடைப்பதாக இல்லை.

இதிலும் வாக்குப் போடாமலே இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

வருசா வருசம் தீர்மானம் போட்டு வாக்கும் போட்டுக் கிட்டு இருக்கினமே தவிர.. பாதிக்கப்பட்ட மக்களுக்கோ.. இனத்திற்கோ விடிவு கிடைப்பதாக இல்லை.

இதிலும் வாக்குப் போடாமலே இருக்கலாம். 

எங்களின் அரசியல்வாதிகளுக்கு  தேர்தல்போல; இவர்களுக்கும் இங்கு கூடுவதும், வாசிப்பதும், விவாதிப்பதும், பின்னர் கலைவதும் அவர்களின் பிழைப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டால் இவர்ளின் பிழைப்பு  என்னாவது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.