Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலையில் பழி சுமத்தப்பட்ட நளினி உட்பட்ட ஆறுபேர் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people, people standing and text that says "BREAKING NEWS புதிய தலைமுறை உல உண்மை உடனுக்குடன் FILE PHOTO BELL N ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேரும் விடுதலை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நளினி, ரவிச்சந்திரன் மனுக்களை விசாரித்த பி.ஆர்.கவாய் பி.ஆர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு 11|11|2022- 01:30 PM www.puthiyathalaimurai.com"

  • Replies 62
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, valavan said:

May be an image of 6 people, people standing and text that says "BREAKING NEWS புதிய தலைமுறை உல உண்மை உடனுக்குடன் FILE PHOTO BELL N ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேரும் விடுதலை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நளினி, ரவிச்சந்திரன் மனுக்களை விசாரித்த பி.ஆர்.கவாய் பி.ஆர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு 11|11|2022- 01:30 PM www.puthiyathalaimurai.com"

என்னமோ நடக்குது....

ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

11 நவம்பர் 2022, 07:57 GMT
புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்
 

நளினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

நளினி

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் மனுச் செய்திருந்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

https://www.bbc.com/tamil/india-63593731

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை - வரலாற்று தீர்ப்பை அறிவித்தது இந்திய உச்சநீதிமன்றம்

By RAJEEBAN

11 NOV, 2022 | 01:37 PM
image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது.

கடந்த 2000 ஆம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டால் 2014 ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது.

தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது. பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது.

குறிப்பாக 7 தமிழரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது கவர்னர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

பின்னர் பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட்டு தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர்.

இம்மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நளினி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட்டு தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது. அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/139738

  • கருத்துக்கள உறவுகள்

11-11-22 

நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்கள்… செய்யாத குற்றத்திற்காக சிறை வாசம் இருப்பது கொடுமை.
இனியாவது அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்.

தமிழ் நாட்டு… அல்லக்கை காங்கிரஸ் அரசியல் வாதிகள்,
வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

  • கருத்துக்கள உறவுகள்

6 பேரும் விடுதலை : தீர்ப்பில் நீதிபதிகள் சொன்னது என்ன?

KaviNov 11, 2022 13:59PM
alau.png

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவாளிகள் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். சிறையில் இவர்களின் நடத்தை திருப்திகரமாக இருந்ததாகவும் இந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு கடந்த மே 17ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.

பேரறிவாளன் வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஆளுநரின் முடிவு என்பது மாநில அரசின் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டது என்பதைத் தெரிவித்திருந்தது.

இதை மேற்கோள்காட்டி பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 

இதையடுத்து நளினியும் , ரவிச்சந்திரனும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இந்த வழக்கில் இன்று (நவம்பர் 11) தீர்ப்பளித்த நீதிபதிகள், ”ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை கைதியான ராபர்ட் பயாசை பொறுத்தவரை அவரது நடத்தை சிறையில் திருப்திகரமாகவே இருந்துள்ளது. மேலும் அவர் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆயினும் பல்வேறு பட்டங்களைச் சிறையிலிருந்தபடியே பெற்றுள்ளார்.

ஜெயக்குமாரின் நடத்தையும் சிறையில் திருப்திகரமாகவே இருந்துள்ளது. அவரும் சிறையிலிருந்தபடி பல்வேறு படிப்புகளைப் படித்துள்ளார்.

இன்னொரு தண்டனை கைதியான ராஜா பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தவாறு அவர் எழுதிய கட்டுரைகள் வெளியிடப்பட்டதோடு விருதுகளையும் பெற்றிருக்கின்றன.

ரவிச்சந்திரனை பொறுத்தவரை அவரது நடத்தையும் திருப்திகரமாகவே இருந்துள்ளது. அவரும் பல்வேறு படிப்புகளை முடித்துள்ளார். சிறையிலிருந்தபடியே பல தொண்டுகளையும் அவர் செய்துள்ளார்.

முருகனின் செயல்பாடும் திருப்திகரமாகவே இருந்துள்ளது. அவரும் பல்வேறு படிப்புகளை படித்துள்ளார்” என்று ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு கூறியுள்ள நீதிபதிகள் நளினியை பற்றி குறிப்பிடும் போது, ஒரு பெண்ணான நளினி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளார்.

அவரது நடத்தையும் திருப்திகரமாகவே இருந்துள்ளது. சிறையில் இருந்தபடியே அவர் கணினி துறையில் பட்டய படிப்பு படித்துள்ளார். இவர்கள் அனைவரும் வேறு எந்த வழக்கும் இல்லை எனில் விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று உத்தரவிட்டுள்ளனர். 

2018ல் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் காலதாமதம் ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

https://minnambalam.com/political-news/supreme-court-release-all-convicts-in-rajiv-gandhi-assassination-case/

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலையில் மிக மிக நிம்மதி தரும் செய்தி ...... இதுவரை இன்னல்களை அனுபவித்தும் இளமையை தொலைத்தும் வாழ்ந்தவர்கள் இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும்........!   🌹

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை பெற்று நலமாக வாழ வேண்டுகின்றேன்.

2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் நாட்டு… அல்லக்கை காங்கிரஸ் அரசியல் வாதிகள்,
வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

ஒரு சில ஊடகங்களில் நீதி செத்துவிட்டதென அலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலையாவதிற்கு காரணமான  முக்கியஸ்தர்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையை தமிழ் நாடு நிர்வாகமே கோரியுள்ளது.


இதில் இருந்து தெரிவது, கிந்தியா தமிழ் தேசத்துக்கு குரோதம், பகையை நீக்க முடியாது.

இப்பொது அந்த குரோதம்,கிந்தியா ந்தியா  சிங்களத்துக்கு   சிங்களத்தின் தமிழ் இன கட்டமைப்பு படுகொலையில் பாதுகாவலனாகவும், பங்காளியாகவும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோஷமான செய்தி, அவர்கள் தமது உறவுகளுடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

11 நவம்பர் 2022, 07:57 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

நளினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

நளினி

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் கடந்த மே 18-ம் தேதி விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் மனுச் செய்திருந்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் இந்த தீர்ப்பினால், விடுதலை பெற இருக்கிறார்கள்.

 

ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளன் கடந்த மே மாதம் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டாரோ அதே அடிப்படையிலேயே மீதமுள்ள இந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

வேறு எந்த வழக்கிலாவது இவர்கள் சிறையில் இருப்பது தேவை இருந்தால் ஒழிய இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நளினி, ரவிச்சந்திரன் சிறை நடத்தையில் திருப்தி

மனு தாரர்களான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் நன்னடத்தையை வெளிப்படுத்தியிருப்பதையும், இவர்கள் மிக நீண்ட காலம் சிறையில் இருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"நளினி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். சிறையில் அவரது நடத்தை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. கணினி பயன்பாட்டில் அவர் பிஜி டிப்ளமா முடித்துள்ளார். ரவிச்சந்திரனின் சிறை நடத்தையும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. சிறையில் அவர் பி.ஜி. டிப்ளமா உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைத் தொடர்ந்தார். பல்வேறு அறப் பணிகள் செய்தார்," என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

 

ராஜீவ் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேரறிவாளன் வழக்கை அடிப்படையாக கொண்டு தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி இந்த இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

கடந்த மே மாதம் அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில், 2018ம் ஆண்டு இவர்களை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் 6 பேர் சிறையில் இருந்துவந்தனர்.

நான்கு இலங்கை நாட்டவர்

தற்போது விடுதலையாகும் 6 பேரில், நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாந்தன் இலங்கைக் கடவுச் சீட்டின் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் கடவுச் சீட்டு உண்டு. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்துகொண்டவர்கள். இவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு இலங்கைக்கு திரும்பிச் செல்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

காங்கிரஸ் எதிர்ப்பு

 

ஜெய்ராம் ரமேஷ்

"மீதம் சிறையில் இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு முற்றிலும் ஏற்க முடியாததும், முழுவதும் தவறானதும் ஆகும். காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்தியாவின் ஆன்மாவுக்கு இசைவாக செயல்படாதது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு

முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தி, 1991 மே 21ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். புலனாய்வில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கண்டறிந்தது. மனித வெடிகுண்டாக செயல்பட்ட தனு சம்பவத்திலேயே இறந்துவிட்டார். கொலைச் சதியின் பின்னணியில் இயங்கியதாக சிபிஐ கண்டறிந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் பெங்களூருவில் தங்கியிருந்த வீட்டை போலீஸ் சுற்றி வளைத்த நிலையில் அவர்கள் சயனைடு அருந்தி இறந்துவிட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தலை மறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்கள் தவிர பல்வேறு காரணங்களுக்காக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு இதற்கென அமைக்கப்பட்ட தடா சிறப்பு நீதிமன்றம் 1998 ஜனவரி 28-ம் தேதி மரண தண்டனை விதித்தது.

தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையிலான அமர்வு நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மட்டுமே மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒருவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். மற்ற 18 பேரும் குற்றம் சாட்டப்பட்டதைவிட தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக நீதிமன்றம் கூறியது. அவர்கள் அதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுதலைசெய்யப்பட்டனர்.

மீதமிருந்த 7 பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் தண்டனை முதலில் உச்ச நீதிமன்றத்தால் 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களில் பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை அடைந்தார். இப்போது மீதம் இருந்த 6 பேரும் விடுதலை பெறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  மீது இன்னொரு வழக்கை கிந்தியா ஏவும். தீர்ப்பும் இடம் விட்டு இருக்கிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒரு சில ஊடகங்களில் நீதி செத்துவிட்டதென அலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இந்திரா காந்தியின் கொலையையே... மன்னித்தவர்கள்.
ஏனென்றால்... அவன் சீக்கியன் 

ராஜீவ் காந்தி கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தும்...
தமிழர்கள் என்ற ஒரு காரணத்திற்காக... 
30 வருடம் கடந்தும் வன்மம் கக்கிக்  கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வளவிற்கும்... சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் 
அவர்களை மன்னித்து விட்டதாக  10 வருடத்துக்கு முன்பே தெரிவித்து விட்டார்கள்.
இவர்களுக்கு... எதில் அரசியல் செய்வது என்று விவஸ்தையே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவை பார்சி, கேரளா மற்றும் இத்தாலிய  மாபியா கூட்டங்கள் தமது வீட்டை அதட்டி வைக்கும் தேசகமாகவேர் பார்க்கின்றன.

உச்ச நீதி மன்ற முடிவை விமிர்சிகா முடியாது.; கூடாது. அது சட்ட விரோதம்.

அனால் சட்ட ஆட்சி என்று சொல்லி கொண்டு, காங்கிரஸ் உச்ச நீதி மன்ற தீர்ப்பை உணர்வு பூர்வமாக எதிர்க்கிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு தமிழர் விடுதலை- தமிழக முதல்வர் வரவேற்பு

By RAJEEBAN

11 NOV, 2022 | 03:58 PM
image

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்பு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக-வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்குபோதும், ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, முதன்முதலில் 2000-ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அதன்பிறகு இவர்கள் அனைவரின் விடுதலையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை மற்றும் மனிதநேயத்தின் பக்கமாக நின்று நீதிமன்றத்திலும் வாதாடியும் போராடியும் வந்தோம்.

Stalin.JPG

பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகளை மையப்படுத்தி வாதங்களை வைத்து வாதாடினோம். மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையில் இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது. அடுத்தபடியாக நளினி, ரவிச்சந்திரன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோரின் விடுதலையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளனின் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139756

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி -நளினியின் தாயார்.

By RAJEEBAN

11 NOV, 2022 | 03:18 PM
image

 

விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி என நளினியின் தாயார் தெரிவித்துள்ளார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலைக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து 30 ஆண்டுகள் சிறையிலிருந்துவரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவர்களின் விடுதலை குறித்து நளினியின் தாயார் பத்மா  தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘ நளினியின் விடுதலைக்காக பாடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், மறைந்த முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

nalini4054-1667451743.jpg

மேலும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களைத்தாண்டி எத்தனையோ மனிதநேயம் படைத்த பலர் எங்களுக்காகப் போராடினர். அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் விடுதலையாகும்  இந்த ஆறுபேரும் அனைவருக்கும் ஒத்துழைத்து நல்ல முறையில் இருப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

என் மகளும் நன்றாக படித்துள்ளார், அது அவருக்கு கைகொடுக்கும். என் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என விரும்புகிறேன் என்று  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139748

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின் மிகமிக மகிழ்ச்சியாக செய்தி.

தகவலுக்கு நன்றி @valavan.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோஷமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, சாந்தன் உள்பட 6 பேர் விடுதலை - யார் இவர்கள்?

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்தவர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

நளினி (கோப்புப்படம்)

45 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ஆர்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருக்கிறது.

இதன்படி, நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கடந்த மே 18ஆம் தேதி மற்றொரு கைதி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு அளித்த தீர்ப்பின்படி, தற்போது அந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மேலும் ஆறு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியின் கணவரான ராஜீவ் காந்தியைக் கொல்ல நடந்த சதிக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் ஆறு பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த ஆறு பேர் யார், அவர்களைப் பற்றிய சிறிய குறிப்புகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

எஸ். நளினி

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

நளினி கோப்புப்படம்

ராஜீவ் காந்தி கொலையில் பிரதான குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி ஸ்ரீஹரன்.

இந்தியாவின் மிக நீண்ட காலம் சிறை தண்டனை பெற்ற பெண் ஆக இவர் கருதப்படுகிறார்.

53 வயதாகும் நளினி, கிட்டத்தட்ட 29 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை மட்டுமே அவர் சிறைக்கு வெளியே பரோலில் வந்தார்.

2016இல் முதன் முதலாக இவர் 12 மணி நேரம் பரோலில் வந்து தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

இரண்டாவதாக 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு 51 நாள் பரோல் வழங்கப்பட்டது. மகள் ஹரித்ராவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி அவர் பரோலில் வெளியே வந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தமிழக அரசு நளினியை பரோலில் விடுவிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

ஸ்ரீஹரன் என்கிற முருகன்

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள்

 

படக்குறிப்பு,

முருகன்

ஸ்ரீஹரன் என்றழைக்கப்படும் முருகன்தான் இந்தக் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் என்று இந்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஈ) என்ற தமிழ் போராளிக் குழுவின் தீவிர உறுப்பினராக அவர் இருந்தார்.

இலங்கையைச் சேர்ந்த இவர் இளம் வயதிலேயே எல்டிடிஈ இயக்கத்தில் சேர்ந்தார்.

முருகன், இந்திய குடிமகளான நளினியை மணந்தார். 1992 இந்த தம்பதி சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

ராபர்ட் பயஸ்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான பி. ராபர்ட் பயஸ் இலங்கை குடிமகன்.

முன்னாள் பிரதமரின் கொலையுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிர உறுப்பினர்களுக்கு பயஸ் அடைக்கலம் அளித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அது புலனாய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

பயாஸ் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்று புலனாய்வுத்துறையால் சந்தேகிக்கப்பட்டவர்.

அவர் போராளிக் குழுவின் தளங்களை அமைப்பதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் என்றும் மற்ற குற்றவாளிகள் தங்கியிருந்த இடங்களை வாடகைக்கு எடுத்து ராஜீவ் காந்தி படுகொலைக்கான திட்டமிடலுக்கு உடந்தையாக இருந்தார் என்கிறது சிபிஐ.

ஜெயகுமார்

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

 

படக்குறிப்பு,

ராபர்ட் பயாஸ் (கீழ் வரிசையில் இரண்டாவது), ராபர்ட் பயாஸ் (கீழ் வரிசையில் மூன்றாவது) சாந்தன்(முதல்வரிசையில் மூன்றாவது)

விடுவிக்கப்பட்டுள்ள மற்றொரு கைதியான ஜெயகுமார், ராபர்ட் பயஸின் மைத்துனர்.

குற்றவாளிகள் படுகொலை நிகழ்த்த ஒரு வீட்டை தமிழ்நாட்டில் ஏற்பாடு செய்ய உதவியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ரவிச்சந்திரன்

தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு இலங்கை பிரஜை ரவிச்சந்திரன்.

இந்தியாவில் பயண நிறுவனம் ஒன்றை நிறுவி, முன்னாள் பிரதமரைக் கொல்ல விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதற்காக ஒரு வாகனத்தை வாங்கியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

டி.சுதேந்திரராஜா என்கிற சாந்தன் என்கிற சின்ன சாந்தன்

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான சுதேந்திரராஜா விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்.

பொட்டு அம்மானால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொலையாளிகள் குழுவில் இருந்த ஒன்பது பேரில் இவரும் ஒருவர்.

கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கும் சுருக்கமான பின்னணியும்

 

ராஜீவ் காந்தி

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

ராஜீவ் காந்தி, 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில், இலங்கையைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தைச் சேர்ந்த பெண் தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் நேரடியாக பங்கேற்றவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஏழு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தியின் மனைவியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி ஸ்ரீஹரனின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2008ல் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்தார்.

மேலும் 6 குற்றவாளிகளின் தண்டனையும் 2014-ல் குறைக்கப்பட்டது.

அதே ஆண்டு, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடங்கினார்.

கடந்த மே மாதம் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவிக்க உச்ச நீதிமன்றம் தனது அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தியது.

அவரது விடுதலை தொடர்பாக மாநில ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் செய்தார் என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க நேர்ந்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அந்த அடிப்படையே தற்போது மீதமுள்ள ஆறு பேரின் விடுதலைக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. முன்னதாக, குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை 2018ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநருக்கு பரிந்துரை செய்ததாகவும், அதற்கு ஆளுநர் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

https://www.bbc.com/tamil/articles/cp9r9xgwr2vo

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி..

  • கருத்துக்கள உறவுகள்+

முதலில் வெளியில் வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையாகும் இலங்கை பிரஜைகள் தாயகம் வர முடியுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 11 நவம்பர் 2022, 14:01 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ராஜீவ் காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த ஆறு பேரில் நால்வர் இலங்கை பிரஜைகள்.

நளினியின் கணவரான முருகன் என்றழைக்கப்படும் ஸ்ரீஹரன், சாந்தன், ராபர்ட் பயஸ் மறறும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்.

இவர்களில் சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் இலங்கை கடவுச்சீட்டை கொண்டவர்கள்.

ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் 1990ம் ஆண்டு தமிழகத்திற்கு பயணித்து, அங்கு அகதி அந்தஸ்த்தை கொண்டவர்கள்.

 

இவ்வாறு இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த நான்கு இலங்கையர்களுக்கும் இலங்கைக்கு வருகைத் தர சந்தர்ப்பம் உள்ளதாக என்பது தற்போது கேள்விகுரியதாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் தொடர்ந்து தடை அமலில் உள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, விடுவித்து விடுதலையான இலங்கை பிரஜைகளால் நாட்டிற்கு மீள வர முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

இலங்கைக்கு வர முடியுமா?

ஒருவேளை இலங்கைக்கு வருகை தரும் இவர்களை, விடுதலைப் புலிகளாக கருதி இலங்கை அரசாங்கம் அவர்களை மீள கைது செய்ய முடியுமா?

இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்கள், மீண்டும் நாட்டிற்கு வருகை தர சந்தர்ப்பம் உள்ளதா? என்பது குறித்து பிபிசி தமிழ், சட்ட நிபுணர்கள் சிலரிடம் வினவியது.

 

ராஜீவ் காந்தி

 

படக்குறிப்பு,

ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா

இவ்வாறு எழுந்த கேள்விகளை, பிபிசி தமிழ், இலங்கையின் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவிடம் வினவியது.

''அவர்களுக்கு இலங்கைக்கு வருகைத் தருவதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது. அவர்களுக்கு கடவுச்சீட்டு உள்ளது என்றால், அவர்களுக்கு விசா உள்ளது என்றால், நிச்சயமாக நாட்டிற்கு வருகை தர முடியும். எனினும், ஏதேனும் குற்றச்சாட்டு தொடர்பில் இவர்களின் பெயர்கள் சந்தேக நபர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களை கைது செய்ய முடியும்," என்கிறார் சில்வா.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ளவர்களை மீள அதே குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய முடியுமா? என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவிடம் நாம் வினவினோம்.

''அந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய முடியாது. இலங்கைக்குள் ஏதேனும் குற்றம் செய்திருக்க வேண்டும். உதாரணமாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதி வழங்கியிருந்தால், அல்லது வேறு விதமான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தால், அவர்களை கைது செய்ய முடியும்" என அவர் பதிலளித்தார்.

மனித உரிமைகள் ஆணையக்குழு என்ன சொல்கிறது?

இதே கேள்விகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவாவிடம் நாம் வினவினோம்.

 

ராஜீவ் காந்தி

 

படக்குறிப்பு,

சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா

''அவர்களுக்கு இலங்கைக்கு வருகைத் தர முடியும். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் தொடர்ந்தும் தடை காணப்படுகின்றது. இவர்கள் உறுப்பினர்கள் என்றால், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்களும் கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேக நபர்கள் மாத்திரமே. எனினும், அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயர் அவர்கள் மீது பொறிக்கப்படவில்லை.

வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுகின்றார்கள் என்றால், அவர்களுக்கு தண்டனை இல்லாது செய்தே, விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படி என்றால், அவர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. இலங்கை பிரஜையொருவருக்கு எந்தவொரு நேரத்திலும் இலங்கைக்கு வருகைத் தர முடியும்.

எந்தவொரு நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் முடியும் என ஆட்டிக்கல் 14ல், இறுதியாக கூறப்பட்டுள்ளது. வேறு குற்றங்களை செய்திருந்தால், கைது செய்யப்படலாம். ஆனால், வேறு குற்றங்கள் கிடையாது.  

அப்படி என்றால், கைது செய்ய முடியாது" என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

 
Play video, ""ராஜீவ் காந்தி இறந்தப்போ நான் பாதுகாப்புப் பணியில் இருந்தேன்"", கால அளவு 4,09
04:09

p0c85ywb.jpg காணொளிக் குறிப்பு,

இன்னும் என் உடம்பில தோட்டாக்கள் இருக்கு - ராஜீவ் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த பெண்

இதேவேளை, குறித்த நான்கு பேரும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அது அவர்களுக்கு பிரச்சினையாக உருவாகலாம் என மூத்த சட்டத்தரணி இளையதம்பி தம்பையா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

சந்தேகம் எழுப்பும் வழக்கறிஞர்

 

இலங்கை

 

படக்குறிப்பு,

சட்டத்தரணி இளையதம்பி தம்பையா

''விடுதலைப் புலி உறுப்பினர்களாக இருந்து, அவர்கள் இந்த தாக்குதலை நடத்த உதவி செய்துள்ளார்கள் என குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அவர்களுக்கு பிரச்சினை உள்ளது. விடுதலைப் புலிகள் தடை விதிக்கப்பட்ட அமைப்பு.

இலங்கை அரசாங்கம் தடையை நீக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சிலரின் பெயர்களை, தடை பட்டியலிலிருந்து இலங்கை நீக்கியுள்ளது. இவர்கள் மீது தடை இருந்தால், அந்த தடையை நீக்க வேண்டும். இந்தியாவிலும் அவர்களுக்கு பிரச்சினை உள்ளது.

அவர்களை முகாம்களுக்கே அனுப்புவார்கள். அவர்களை இந்தியாவில் நடமாட விடமாட்டார்கள். சொந்த நாட்டு பிரஜைகள் இல்லாதமையினால், அவர்களை முகாமிற்கே அனுப்புவார்கள்.

ஆனாலும், இந்தியா விஸா கொடுத்தால், அவர்களுக்கு அங்கு இருக்க முடியும். நாடு கடத்தினாலும், இலங்கை ஏற்குமா என்ற கேள்வி இருக்கின்றது. எங்களுக்கு இலங்கைக்கு போக முடியாது, தங்குமிட விசாவை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்க முடியும்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கப்படும் பட்சத்தில், அந்த நாட்டு நீதிமன்றத்தை நாட முடியும். இவர்களை வருகைத் தர இலங்கை அனுமதி வழங்கினால், பிரச்சினை கிடையாது" என  மூத்த சட்டத்தரணி இளையதம்பி தம்பையா குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/articles/clk2kp3e7ngo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.