Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில

நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார்.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த கூட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கள தரப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இதேவேளை பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்பாக, அதிகாரப் பரவலாக்கம் குறித்து அனைவரும் இணக்கத்திற்கு வரவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டதாக கூறினார்.

65 வருடங்களாக இதுதொடர்பாக தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் இதன்மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், மீண்டும் இதற்கான முயற்சிகளை எடுக்கும் இந்த அரசாங்கத்திற்கு உண்மையில் பைத்தியம் பிடித்துவிட்டதாகவே கருத வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1315475

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, தமிழ் சிறி said:

65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார்.

அடேய் உங்களுக்கு 500 வருச அவகாசமே போதாது. பூமாதேவி தானாக மாற்றங்களை செய்தால் மட்டுமே உண்டு. :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அடேய் உங்களுக்கு 500 வருச அவகாசமே போதாது. பூமாதேவி தானாக மாற்றங்களை செய்தால் மட்டுமே உண்டு. :cool:

சிங்களவனுக்கு 500 வருட அவகாசம் கொடுத்தால்…
முஸ்லீம்களுக்கு எத்தனை வருட அவகாசம் கொடுக்க வேண்டும். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவனுக்கு 500 வருட அவகாசம் கொடுத்தால்…
முஸ்லீம்களுக்கு எத்தனை வருட அவகாசம் கொடுக்க வேண்டும். 😁

எப்பிடித்தான் தூக்கி விட்டாலும் தாமாகவே பிரச்சனையை தேடும் கூட்டத்திற்கு கால அவகாசமா? 😂

Sheep Gets Stuck And Jumps Back In Ditch on Make a GIF

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில

உங்களைப் போன்றோரை நம்பித் தான் ரணில் இந்த படகு சவாரிக்கு புறப்பட்டுள்ளார்.

ஆனபடியால் அவரைக் கைவிட்டு விடாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

உங்களைப் போன்றோரை நம்பித் தான் ரணில் இந்த படகு சவாரிக்கு புறப்பட்டுள்ளார்.

ஆனபடியால் அவரைக் கைவிட்டு விடாதீர்கள்.

அங்காலை… அமைச்சர் நசீரையும் கிள்ளி விட்டாச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழ் கட்சிகள் இதுவரை ஒரு செய்தியும் வெளியிடவில்லை?

Just now, தமிழ் சிறி said:

அங்காலை… அமைச்சர் நசீரையும் கிள்ளி விட்டாச்சு. 

அப்புறம் என்ன தீர்வு வந்து உலகம் பணம் கொடுத்த மாதிரி தான்.

17 minutes ago, குமாரசாமி said:

எப்பிடித்தான் தூக்கி விட்டாலும் தாமாகவே பிரச்சனையை தேடும் கூட்டத்திற்கு கால அவகாசமா? 

படத்துக்கு ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளும், விமலும், சரத் வீரசேகரவும் சேரந்து, களவும், இனவாதக் காவடியும் தான் எடுக்கேலும். கடனில் இருந்து நாட்டை மீட்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களால்  எந்த இனத்துக்கும் பிரயோசனமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நரியின் விளையாட்டு...புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ...கடன் வாங்க ஒரு நாடகம் தேவை...கிடைச்சாச்சு நடிகர்கள்.. இதிலை முசுப்பாத்தி என்னவென்றால்....சம்பந்து அய்யாவின் ஜோக்கு..13 வருட வேதனையில் காணாமல் போன உறவுகள் 2300 நாளுக்குமேல் நீதிகேட்டு வீதியில் போராட்டம் நடத்துகினம்...இது அரசாங்கத்திற்கு பெரிய தலையிடி...அய்யா சிம்பிளா சொல்லுறார்...அவையை சாகடித்துப்போட்டியள் என்று தெரியும்   ..அப்ப அரசின் தலியிடி அய்யா மூலம் ஓவர்...இதுக்கு ஒருலட்சம் ரூபா சப்பிரியும் ..ஒருலட்சம் ரூபாவுடன் சமாளிக்க ஓமாம்.. அப்ப காணாமல் போனோர் விடையம் ஒவர்..அய்யாவுகு விசேடபெட்டி ரெடி..அதை விட  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி ..நோ மூச்...அவையு வடக்கு தமிழர் பற்றியே அழுத்தி அழுத்தி கதைக்கினம்...அதற்குள்  சோனி பங்கு போட்டு கிழக்கை பறிக்கவும் ரெடி...இப்ப எமக்கு மிஞ்சுவது ...பருத்திதுறை முனைப்பகுதி மட்டுமே

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

@island நேற்று சொன்னேனே சிங்கள இனம் மீதான எங்கள் அவநம்பிக்கை அனுபவப்பாடம், பிரமையோ அல்லது பயமோ அல்ல என்று, அது இதைத்தான்.

நீங்கள் சொல்வது போல் சிங்களவர் அடிப்படையில் ஒரு இனக்குழுவாக இனவாதிகள் இல்லை, என்றால் அடுத்த தேர்தலில் ரணவக்க போல ஒரு அரைகுறை தீர்வு முயற்சியை கூட எதிர்ப்போரை சிங்கள மக்கள் தோற்கடிப்பார்கள் என எதிர்பார்க்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

65 வருடங்களாக இதுதொடர்பாக தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் இதன்மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

இந்தா .... தொடங்கிற்றான் அடுத்த பைத்தியம் அலட்ட! இனி முழு பைத்தியமும் வரிசையில் வரப்போகுது வாந்தியெடுக்க. அதுதானே! தமிழருக்கு தீர்வு ஒன்று வேண்டுமென்று நம்ம தலைமைகளோ, சிங்களமோ நினைத்திருந்தால்  அறுபத்தைந்து வருடங்கள் எதற்கு? நடக்காத ஒன்றுக்காக ஏன் காலத்தை இழுத்தடித்து, மக்களை ஏமாற்ற வேண்டும்? விடுங்கள் ... நாடு தானாகவே நம் கைக்கு வரும். ஆனால் தமிழர், சிங்களவரை பார்த்து பயப்படுகிறார்கள், சிங்களவரை நம்பத்தயாரில்லை, சிங்களவரை குற்றஞ்சாட்டுகிறார்கள், நம்ம தலைமைகள் தீர்வை பெற்று விடப்போகிறார்கள் என்பவர்கள், என்ன சொல்லப்போகிறார்கள் இதற்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வது போல் சிங்களவர் அடிப்படையில் ஒரு இனக்குழுவாக இனவாதிகள் இல்லை, என்றால் அடுத்த தேர்தலில் ரணவக்க போல ஒரு அரைகுறை தீர்வு முயற்சியை கூட எதிர்ப்போரை சிங்கள மக்கள் தோற்கடிப்பார்கள் என எதிர்பார்க்கலாமா?

அடுத்த தேர்தலில் பொடி மைனா நாமல் பேபி ஜனாதிபதியானாலும் ஆச்சர்யமில்லை.
அதற்கு புதிதாக கிட்னி திருடி விற்கும் அலி பாயை இறங்கியிருக்கிறார்கள். ஷாபியை வைத்து சிங்கவர்களை போன தடவை மடையர்களாக்கியது போல் இந்த முறை அலி பாய் வந்திருக்கிறார்.    
சிங்கவர்களின் இனவெறி என்பது ரத்தத்தில் ஏறி வேரில் ஊறியது. அதனால் தான் நானும்   இந்த ரணில்-சம் சும் கூத்திற்கு அசிப்பே காட்டவில்லை. கூத்தமைப்பும் ரணிலும் சேர்ந்து  கூத்தாட்டம் போட ரெடி  என்றாலும் 
இந்த கம்மன்பில வகையறா கூத்தமைப்பை கூத்தாட்ட மேடைக்கு அருகிலேயே போக விடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

@island நேற்று சொன்னேனே சிங்கள இனம் மீதான எங்கள் அவநம்பிக்கை அனுபவப்பாடம், பிரமையோ அல்லது பயமோ அல்ல என்று, அது இதைத்தான்.

நீங்கள் சொல்வது போல் சிங்களவர் அடிப்படையில் ஒரு இனக்குழுவாக இனவாதிகள் இல்லை, என்றால் அடுத்த தேர்தலில் ரணவக்க போல ஒரு அரைகுறை தீர்வு முயற்சியை கூட எதிர்ப்போரை சிங்கள மக்கள் தோற்கடிப்பார்கள் என எதிர்பார்க்கலாமா?

வணக்கம் கோஷான், நான் கூறிய கருத்தை தெளிவாக என்னால் எழுதப்படாததால் நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

சிங்களவர்களிடம் இனவாதம் இல்லை என்ற பொருளில் எனது அந்த கருத்து இல்லை. மாறாக சிங்களவரது  இனவாதத்திற்கான தோற்றுவாய் என்ன  என்பதையே அங்கு தெரிவித்திருந்தேன். அந்த வெறுப்பு பயத்தை அடிப்படையாக கொண்டதே அன்றி மனித வெறுப்பை கொண்டதல்ல. 

 இனவாதம் என்ற சொல் பல வித்தியாசமான பரிணாமங்களைக் கொண்டது. சிங்கள பேரினவாதம் தமிழரை வெறுப்பதற்கும் ஒரு உயர் சாதி மேல்தட்டு  தமிழர் அவர்களால் தாழ்ததபட்ட அடிமட்ட மக்களை வெறுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. முன்னையது மக்களிடையான தனிப்பட்ட உறவை, குடும்ப உறவை  பெரிதாக பாதிக்காது. ஆனால் இரண்டாவது தனிப்பட உறவுகளை கூட பாரியளவில் பாதிக்கிறது.  இதுவும் ஒரு விதத்தில் இனவாதம் தான். 

அண்மையில் கிழக்கு கிழக்காக என று யாழ் இணையத்தில் கட்டுரை ஒன்று பார்ததேன். அக்கட்டுரையாளருடன் என்னால் முழுமையாக உடன் பட முடியாமல் விட்டாலும் அவர் கூறிய விடயங்கள் பல நான் பல கிழக்கு நண்பர்களிடம் கேள்விப்பட்ட விடயம் தான். கொழும்பில்  அரசில் உயர் பதவிகளில் இருந்த மேல்தட்டு யாழ் மேலாதிக்க சிந்தனை உள்ளவர்களால் பல கிழக்கு ஊழியர்கள் பாதிக்கபட்டார்கள். இவை தமிழரிடையே இவ்வாறான பிரிவினைகளை தோற்றுவித்தது. 

ஆனால் இவ்வாறான எம்மிடையே உள்ள அக முரண்பாடுகள்  எமது போராட்டத்தை அதிகமாக பாதித்தாலும் இவற்றைப்பற்றி விரிவாக இங்கு பேசுவது tabboo என்பது எனக்கு தெரியும். அதனால் முடிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 03:32, அக்னியஷ்த்ரா said:

அடுத்த தேர்தலில் பொடி மைனா நாமல் பேபி ஜனாதிபதியானாலும் ஆச்சர்யமில்லை.
அதற்கு புதிதாக கிட்னி திருடி விற்கும் அலி பாயை இறங்கியிருக்கிறார்கள். ஷாபியை வைத்து சிங்கவர்களை போன தடவை மடையர்களாக்கியது போல் இந்த முறை அலி பாய் வந்திருக்கிறார்.    
சிங்கவர்களின் இனவெறி என்பது ரத்தத்தில் ஏறி வேரில் ஊறியது. அதனால் தான் நானும்   இந்த ரணில்-சம் சும் கூத்திற்கு அசிப்பே காட்டவில்லை. கூத்தமைப்பும் ரணிலும் சேர்ந்து  கூத்தாட்டம் போட ரெடி  என்றாலும் 
இந்த கம்மன்பில வகையறா கூத்தமைப்பை கூத்தாட்ட மேடைக்கு அருகிலேயே போக விடாது. 

ஓம்.

எப்படியோ ஒரு தரப்பு “நாட்டை கூறு போடுராங்கள்” என கூப்பாடு போட, மறு தரப்பு (ரணில்) - ஏலவே தீர்மானித்த படி, கூத்தில் இருந்து பின்வாங்கத்தான் போகிறது.

இதை நிலாந்தன் பேச்சுக்கு போய் அம்பலபடுத்த வேண்டும் தமிழர் தரப்பு என்கிறார். 

அம்மணமா நிக்கிற தமிழர் தலைவர்களுக்கு இந்த இயலுமை இல்லை.

அப்படி அம்பலபடுத்தினாலும் ஒன்றும் ஆக போவதில்லை.

ஆனால் இந்த முறை எதுவும் தமிழர்க்கு கொடாவிடில் - கடன் கிடையாது என்றால் - அதை அடைய ஏதும் நாடகம் ஆடி பின் ஆப்படிப்பார்கள். 

எப்படி 87 இல் தற்காலிகமாக வடக்கு-கிழக்கை இணைத்து பின்னதை 20 வருடத்துக்கும் பின் பிரித்தார்களோ அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 12:43, island said:

சிங்களவர்களிடம் இனவாதம் இல்லை என்ற பொருளில் எனது அந்த கருத்து இல்லை. மாறாக சிங்களவரது  இனவாதத்திற்கான தோற்றுவாய் என்ன  என்பதையே அங்கு தெரிவித்திருந்தேன். அந்த வெறுப்பு பயத்தை அடிப்படையாக கொண்டதே அன்றி மனித வெறுப்பை கொண்டதல்ல. 

பதிலுக்கு நன்றி.

இல்லை நீங்கள் தெளிவாக சொன்னதை நானும் தெளிவாகவே புரிந்து கொண்டேன்.

சிங்கள இனவாதத்தின் தோற்றுவாய் பற்றித்தான் நானும் சொல்கிறேன்.

இந்த இனவாதத்தின் அடிப்படையே இலங்கை தீவின் ஒவ்வொரு இஞ்சி நிலமும் சிங்களவருக்கு உரியது என்ற கருத்தியல்.

இந்த கருத்தியல் தமிழர் மீதான பயத்தாலோ, வெறுப்பாலோ எழுந்ததல்ல.

மாறாக வேறு எங்கும் இல்லாத எமது இனத்தை, மொழியை, மதத்துடன் சேர்த்து பாதுகாக்க இலங்கை மட்டுமே உள்ள ஒரே இடம், இந்த இடத்தில் நாம் சகல பகுதிகளையும் எமது ஒட்டு மொத்த ஆளுகைக்குள் கொணர்ந்து, தீவின் ஒவ்வொரு உதவி அரசாங்க பிரிவையும் சிங்கள பெரும்பான்மை பகுதியாக மாற்ற வேண்டும் என்ற சிங்கள் கூட்டு முஸ்தீபே சிங்கள இனவாதத்தின் அடிப்படை.

இதனோடு,

தமிழர் மீதான பயம், வரலாற்று கோவம், காலனித்துவ கால கோவம், அடங்க மறுக்கிறார்கள் இல்லையே என்ற கோவம், தமிழர் மீதான பொறாமை, xenophobia  இன்ன பிற காரணங்கள் சேர்ந்து தமிழர் மீதான வெறுப்பு ஆகிறது.

எங்கும்  தனியே பயத்தால் இனவாதம் வருவதில்லை.

பயம் காரணம்க்களில் ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் இனவாதம் - வெறுப்பினாலேதான் கட்டி அமைக்க படுகிறது.

இலங்கையில் இந்த வெறுப்பு சிங்கள மக்கள் மத்தியில் ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகளாக இருக்கிறது.

இந்த வெறுப்பை அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை. மாறாக ஏலவே இருக்கும் வெறுப்பை அவர்கள் மூலதனமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 12:43, island said:

சிங்கள பேரினவாதம் தமிழரை வெறுப்பதற்கும் ஒரு உயர் சாதி மேல்தட்டு  தமிழர் அவர்களால் தாழ்ததபட்ட அடிமட்ட மக்களை வெறுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. முன்னையது மக்களிடையான தனிப்பட்ட உறவை, குடும்ப உறவை  பெரிதாக பாதிக்காது. ஆனால் இரண்டாவது தனிப்பட உறவுகளை கூட பாரியளவில் பாதிக்கிறது.  இதுவும் ஒரு விதத்தில் இனவாதம் தான். 

On 15/12/2022 at 12:43, island said:

அண்மையில் கிழக்கு கிழக்காக என று யாழ் இணையத்தில் கட்டுரை ஒன்று பார்ததேன். அக்கட்டுரையாளருடன் என்னால் முழுமையாக உடன் பட முடியாமல் விட்டாலும் அவர் கூறிய விடயங்கள் பல நான் பல கிழக்கு நண்பர்களிடம் கேள்விப்பட்ட விடயம் தான். கொழும்பில்  அரசில் உயர் பதவிகளில் இருந்த மேல்தட்டு யாழ் மேலாதிக்க சிந்தனை உள்ளவர்களால் பல கிழக்கு ஊழியர்கள் பாதிக்கபட்டார்கள். இவை தமிழரிடையே இவ்வாறான பிரிவினைகளை தோற்றுவித்தது. 

முன்னையது தனிப்பட்ட உறவை பாதியாது ஆனால் ஒரு தீவையே 75 வருடமாக ரத்தகளறி ஆக்கி விட்டுள்ளது.

சாதி, மத வேற்றுமை என்பதும் இனவாதத்துக்கு இணையான ஒரு புற்று நோயே. 

இந்தியாவில் இது இனவாதத்தை விட பாரிய அழிவை தந்துள்ளது. இலங்கையில் மாறி நடந்துள்ளது.

அதற்காக யாழ், கண்டி மையவாதங்களோ, சாதி வாதமோ, மதவாதமோ அழிக்கபட வேண்டியவை அல்ல என்பது அல்ல - ஆனால் இலங்கையின் நோக்கில் (in the Sri Lankan context) - இனவாதத்தினால் வந்த அழிவை, சாதி, மைய வாதத்தினால் வந்த அழிவுடன் ஒப்பிடக்கூட முடியாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 12:43, island said:

ஆனால் இவ்வாறான எம்மிடையே உள்ள அக முரண்பாடுகள்  எமது போராட்டத்தை அதிகமாக பாதித்தாலும் இவற்றைப்பற்றி விரிவாக இங்கு பேசுவது tabboo என்பது எனக்கு தெரியும். அதனால் முடிக்கிறேன். 

இல்லை அக முரண்களை விவாதிப்பது இங்கே “தகாதது” (taboo) அல்ல.  மாவீரரை அகெளரவிக்க முடியாது. ஆனால் அக முரண்களை, குறிப்பாக, தமிழர் மத்தியிலான மத, பிரதேச, இயக்க அக முரண்களை போதியளவு சுந்ததிரத்தோடு விவாதிக்கலாம். 

நான் அறிய போராட்டம் நியாமற்றது என வாதிட முடியாது என ஒரு தேவையில்லாத taboo வை தவிர இப்போ நான் எதிர்க்கும் “தகாததுகள்” இங்கே இல்லை.

மட்டுறுத்தினர் சிலசமயம் தமது அதிகாரத்தை over reach செய்வது உண்டு என்பது துரதிஸ்டவசமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

மாறாக வேறு எங்கும் இல்லாத எமது இனத்தை, மொழியை, மதத்துடன் சேர்த்து பாதுகாக்க இலங்கை மட்டுமே உள்ள ஒரே இடம், இந்த இடத்தில் நாம் சகல பகுதிகளையும் எமது ஒட்டு மொத்த ஆளுகைக்குள் கொணர்ந்து, தீவின் ஒவ்வொரு உதவி அரசாங்க பிரிவையும் சிங்கள பெரும்பான்மை பகுதியாக மாற்ற வேண்டும் என்ற சிங்கள் கூட்டு முஸ்தீபே சிங்கள இனவாதத்தின் அடிப்படை.

ஏற்கெனவே பல சிங்கள அரசியல் வாதிகள் குறிப்பிட்டுள்ளனர், நாமும் பலதடவை விவாதித்துள்ளோம். அண்மையில் சரத் வீரசேகரவும் கூறியுள்ளான். தனக்கு வேறொரு நாடு இல்லை என்பதற்காக  மற்றவருக்கும் சொந்தமான நாட்டை அவர்களை துரத்தி தனதாக்க முயற்சித்தால் உள்ளதையும் இழந்து அலைய நேரிடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2022 at 15:29, குமாரசாமி said:

எப்பிடித்தான் தூக்கி விட்டாலும் தாமாகவே பிரச்சனையை தேடும் கூட்டத்திற்கு கால அவகாசமா? 😂

Sheep Gets Stuck And Jumps Back In Ditch on Make a GIF

On 14/12/2022 at 15:43, ஈழப்பிரியன் said:

படத்துக்கு ஒரு பச்சை.

May be an image of text that says 'cena cena எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை... இந்த இடுக்கில் எவ்வளவு கூச்சல் ஒலித்திருக்கும் எவ்வளவு பசி, தாகம், வலி, வேதனை'

இந்த செம்மறி ஆட்டைப் போலத்தான்...
ஒரு மானும், மலை இடுக்கில் மாட்டுப் பட்டு...
தூக்கி விட  எவரும் இல்லாமல் இறந்து போயுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'cena cena எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை... இந்த இடுக்கில் எவ்வளவு கூச்சல் ஒலித்திருக்கும் எவ்வளவு பசி, தாகம், வலி, வேதனை'

இந்த செம்மறி ஆட்டைப் போலத்தான்...
ஒரு மானும், மலை இடுக்கில் மாட்டுப் பட்டு...
தூக்கி விட  எவரும் இல்லாமல் இறந்து போயுள்ளது.

பார்க்கவே கஸ்டமாக உள்ளது.

எங்க தான் இப்படி படங்களை தேடி பிடிக்கிறீங்களோ.

இணைப்புக்கு நன்றி சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் உப்புமா பரிமாறப்பட்டது.  

அந்த 100 பேரில், 80 பேர் தினமும் உப்புமாவுக்குப் பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும் என்று புகார் கூறி வந்தனர்.

  ஆனால், மற்ற 20 பேரும் உப்புமா சாப்பிட்டு மகிழ்ந்தனர்.  

மீதமுள்ள 80 பேர் உப்புமாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர்.

  இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், விடுதி வார்டனால், வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது.

  இதன்படி எந்த டிபன் அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அந்த டிபன் அன்றைய தினம் சமைக்கப்படும்.

  உப்புமா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர்.  

மீதமுள்ள 80 பேர் கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர்.

  18 பேர் மசாலா தோசை
  16 பேர் ஆலு பரோட்டா &     
         தாஹி
  14 பேர் ரொட்டி & சப்ஜி
  12 பேர் ரொட்டி & 
        வெண்ணெய்
  10 பேர் நூடுல்ஸ்
  10 பேர் இட்லி சாம்பார்

  எனவே, வாக்களிப்பு முடிவுகளின்படி, உப்புமா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது, அதனால், 
ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது.

  பாடம்: மக்கள் தொகையில் 80% சுயநலவாதிகளாகவும், பிளவுபட்டவர்களாகவும், சிதறடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் வரை, 
*20% பேர் நம்மை ஆளுவார்கள்.

இது ஒரு மௌன செய்தி.

இந்த கருத்தாடலுக்கு பொருந்தலாம் என்ற எண்ணத்தில் இணைத்தேன்.

திசை திருப்பும் கருத்தாக இருந்தால் கடந்து செல்லுங்கள்.
 
Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் உட்பட பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகள் நினைப்பதையே இவர் சொல்கிறார். ஏன் எம் தமிழர்களில் கூட ஒரு பகுதி இதே சிந்தனையோட்டத்தில் தான் இருக்குது.

இல்ல.. எமது போராட்டத்தை காட்டிக்கொடுத்து அழிக்க நினைச்சிருக்குமா.. அதுபோதாதென்று.. இருந்த ஒரு அரசியல் சக்தியான தமிழ் தேசிய அரசியலையும் பலவீனப்படுத்தி இருப்பாங்களா..??! 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'cena cena எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை... இந்த இடுக்கில் எவ்வளவு கூச்சல் ஒலித்திருக்கும் எவ்வளவு பசி, தாகம், வலி, வேதனை'

இந்த செம்மறி ஆட்டைப் போலத்தான்...
ஒரு மானும், மலை இடுக்கில் மாட்டுப் பட்டு...
தூக்கி விட  எவரும் இல்லாமல் இறந்து போயுள்ளது.

இணைப்புக்கு நன்றி.. தோழர் ஒரு புகைப்பட டேட்டா பேஸ்..👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.