Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டா அமெரிக்கா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

துபாய் என்று சொல்கிறார்கள். துபாய், அமெரிக்கா வாழும் நம் கள உறவுகள் உறுதிப்படுத்தலாம். 

சாத்தான்… துபாய் என்றால், ஷேக்கு மார்களை காணவில்லை.
ஆன படியால் இது அமெரிக்கா போலுள்ளது.

  • Replies 70
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான்… துபாய் என்றால், ஷேக்கு மார்களை காணவில்லை.
ஆன படியால் இது அமெரிக்கா போலுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் கூடும் இடம்போலுள்ளது. கோஷான், வன்னியருக்கு ஒருவேளை தெரிந்திருக்கும். அண்மையில் அமெரிக்காவில் பனிப்புயல் என்று அறிந்தேன், ஆனால் இந்தப்படத்திலுள்ளவர்கள் கோடைகால உடையோடு காணப்படுகிறார்கள் சிறி. அவர்கள் எங்கேயிருந்தாலும்   கண்டம் ஒன்று எங்களைவிட்டு கடந்துபோனதில் சந்தோஷமே! 

  • கருத்துக்கள உறவுகள்

டுபாய் விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமை

8.jpg

டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பான தொகையை கோட்டாபய ராஜபக்ஷ செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
https://akkinikkunchu.com/?p=234029

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

அரசியலில் இருந்து எல்லா சுகங்களையும், வரப்பிரசாதங்களையும் இலவசமாக அனுபவித்த விதம் போற இடங்களிலும் எதிர்பார்க்குது, இல்லையென்றால் வாய்விட்டுகேக்குது. தன் மக்களின் வரிப்பணத்தை எங்கிருந்தோ வந்த ஒருவர் அனுபவிக்க அவர்கள் அனுமதிப்பார்களா? இதிலிருந்தே இவர்களின் செல்வாக்கையும், வசதிகளையும் உலகம் அறிந்துகொள்ளும்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் எமிரேட்ஸ் பிசினஸ் கிளாஸ்(Bushiness Class) லவுஞ்சில் பயணத்திற்கு முன் ஓய்வெடுத்திருக்கிறேன். வசதிகள், உணவுகள் மிக நன்றாக இருக்கும். ஆனால் கட்டணம் மிக அதிகம்.

கீழுள்ள அட்டவணையை பார்த்தால் புரியும்.

முதல் தர (First Class) வகுப்பென்றால் அமெரிக்க நாணயப்படி ஒரு ஆளுக்கு $300 கட்டணம் செலுத்த வேண்டும். இது இலங்கை நாணயத்தில், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கணக்கீடு சொல்கிறது. 😲

https://www.emirates.com/ae/english/experience/our-lounges/paid-lounge-access/

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பான தொகையை கோட்டாபய ராஜபக்ஷ செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலவசம் என்றால்... வாயை பிளந்து கொண்டு நிற்பார்கள்.
சொகுசு பயணம் வேண்டுமென்றால்... சொந்தக் காசில் 
அந்த இரண்டரை லட்சம் ரூபாவை கட்டி போகிறதுதானே.
பிறகேன் மற்றவனிடம், பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.
சொகுசும் வேணும், அதுகும்... ஓசியிலை வேணுமாம். பைத்தியக்காரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

சொந்தக் காசில் 
அந்த இரண்டரை லட்சம் ரூபாவை கட்டி போகிறதுதானே.

முந்தியென்றால் மக்கள் வரிப்பணத்தில், கொள்ளையடிச்ச பணத்தில கேள்வியே கேக்காமல் அள்ளி வீசிவிட்டு போயிருப்பார். அதெல்லாத்தையும் பயத்தில, அவசரத்தில விட்டிட்டு இவர் ஓட, போராட்டக்காரர் கைப்பற்றி நீதிமன்றத்திடம் கையளிச்சாச்சு. இனி எங்கிருந்து வரும் பணம்? அரசியல்வாதிகளின் தனிச் சிறப்புச் சலுகையும் கிடையாது ராஜினாமா செய்திட்டார். "கேடுவரும் பின்னால் மதிகெட்டு வரும் முன்னால்" பிறந்த நாட்டில் பதவியிழந்து அந்நியர் போல வாழப்பிடிக்கேல, அரசியலை நம்பி  குடியுரிமை கொடுத்த நாட்டையும் துறந்து இப்போ போக முடியேல. இப்போ சொந்தப்பணமுமில்லை, அரசியல் சொகுசுமில்லை. பேசிய பேச்சென்ன, விட்ட சவாலென்ன, கட்டிய அறைகளென்ன, கூடிய கூட்டமென்ன, முறுக்கிய முஸ்டியென்ன? அத்தனையும் கைவிட்டு நிக்கதியில். இனிவருங்காலங்களில் சொந்தநாட்டிலேயோ, வெளிநாட்டிலேயோ கைதும் செய்யப்படலாம். 

அவர் அமெரிக்கா போகும் முன், அளித்த கடைசி பேட்டியில்...
தான், தமிழ் மக்களுக்கு தீர்வு கொடுக்க தயாராக இருந்ததாகவும்,
தமிழ் தலைமைகள்... தன்னில்   நம்பிக்கை வைக்கவில்லை என, 
போற போக்கில்... அடித்து விட்டுட்டுத்தான், விமானம் ஏறினவர்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

அவர் அமெரிக்கா போகும் முன், அளித்த கடைசி பேட்டியில்...
தான், தமிழ் மக்களுக்கு தீர்வு கொடுக்க தயாராக இருந்ததாகவும்,
தமிழ் தலைமைகள்... தன்னில்   நம்பிக்கை வைக்கவில்லை என, 
போற போக்கில்... அடித்து விட்டுட்டுத்தான், விமானம் ஏறினவர்.  😂

தமிழ் மக்களுக்கு அறணைப்புத்தி என்று எல்லோருக்கும் தெரியும். விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், அவர்களுக்கு அரசியல் தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை, விரும்பினால் இந்தநாட்டில் அவர்கள்  இருக்கலாம் அரசியல் தீர்வென்று கேட்கமுடியாது என்று சொன்ன வாய் எந்த வாய்? ராஜ பக்ஸ குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நாமல் உட்பட பதவியிழந்த பின் வைக்கும் குற்றச்சாட்டு; தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க தாம் (ராஜ பக்ஷக்கள்) தயாராக இருந்ததாகவும் கூட்டமைப்பினரே பின்னடித்ததாகவும், வேறு சிங்கள அரசியல்வாதிகளும் இதையே கூறுகின்றனர் அதாவது "த. தே. கூட்டணி சரியான அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை, தமிழ் மக்களுடைய பிரச்சனையைப்பற்றி அவர்களுக்கு உண்மையான அக்கறையில்லை, அவர்கள்  சுய அரசியல் லாபம் தேடுகின்றனர்." இவர்களோ மௌனம் சாதிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

உங்களுக்கு தீர்வு குடுக்க ஆசையெண்டால் குடுத்திட்டுப் போய்க்கொண்டே இருக்க வெண்டியதானே கூட்டமைப்பைப் பற்றி உங்களுக்கென்ன கவலை. கேட்கிறவன் எல்லாம் கேனையன் எண்டநினைப்பு

டுபாய் விமான நிலையத்தில் கோட்டாவுக்கு சிக்கல்!

டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் விமான நிலையத்தின் விசேட விஐபி முனையத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

இது தொடர்பான தொகையை கோட்டாபய செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/231138

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாணத்தில்260,000 ரூபா கோட்டபாயவுக்கு பாரிய பிரச்சனையாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

டுபாய் விமான நிலையத்தில் கோட்டாவுக்கு சிக்கல்!

டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் விமான நிலையத்தின் விசேட விஐபி முனையத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

இது தொடர்பான தொகையை கோட்டாபய செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/231138

இதென்ன செய்தி? ஊகம் போல உள்ளதே...

நான், இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர். எனக்கு, இந்த VIP lounge பயன்படுத்த முடியுமா என்று விசாரிக்க, இல்லை பயன்படுத்துவதால் நீங்கள் இவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள்.

அவர்கள் சொல்லி இருக்க கூடிய பணத்தினை, இலங்கை நாணயத்தில் மாத்தி சொல்லி இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

டுபாய் விமான நிலையத்தின் விசேட விஐபி முனையத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோட்டாபய ராஜபக்கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

மொழி புரிதலில் ஏற்பட்ட தவறாய் இருக்குமோ? செய்தி சேகரித்தவருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாதவூரான் said:

உங்களுக்கு தீர்வு குடுக்க ஆசையெண்டால் குடுத்திட்டுப் போய்க்கொண்டே இருக்க வெண்டியதானே கூட்டமைப்பைப் பற்றி உங்களுக்கென்ன கவலை. கேட்கிறவன் எல்லாம் கேனையன் எண்டநினைப்பு

தேவையென்றால்; கூட்டமைப்பை கூட்டியணைப்பது, தேவை முடிந்தால் மாட்டிவிடுவது. அதெப்படி .... சேர்ந்து விளையாடியவர்களை விட்டிட்டு தான் மட்டும் தோல்வியில் பங்கெடுப்பது, பழிசுமப்பது அதுதர்மமாகாது! நாங்கள் மக்களை நம்பி களமிறக்கினோம், அவர்கள் விளையாடிவிட்டு இவர்களுக்கு களமே இல்லாமல் செய்கிறார்கள், அரசியல் தர்மம்! 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, satan said:

முந்தியென்றால் மக்கள் வரிப்பணத்தில், கொள்ளையடிச்ச பணத்தில கேள்வியே கேக்காமல் அள்ளி வீசிவிட்டு போயிருப்பார். அதெல்லாத்தையும் பயத்தில, அவசரத்தில விட்டிட்டு இவர் ஓட, போராட்டக்காரர் கைப்பற்றி நீதிமன்றத்திடம் கையளிச்சாச்சு. இனி எங்கிருந்து வரும் பணம்?

சொந்தப் பணம் இல்லாமல் அல்ல. இது போன்ற ஆடம்பரங்களை ஏன் சொந்தப்பணத்தில் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையின் விளைவு. அதைவிட அவர்களிடம் இல்லாத பணமா? ராயபக்ச அன்ட் கொம்பனி மற்றும் சக கொம்பனிகளின் முதலீடுகளை சிறிலங்கா அரசு என்ன முடக்கியாவிட்டது. சும்மா நாடகம் ஆடுகிறார்கள். அவர்கள் 15 -20 ஆண்டுகளுக்குள் அரசின் உயரடுக்குப் பதவிகளிலும், 80வீதத்துக்கு மேற்பட்ட அரச நிறுவனங்களில் தமது உறவுகளையும்  கொண்டவர்கள் மட்டுமன்றித் தனியார் நிறுவனங்களிற் பங்குதாரர்களாகவும் இருந்தவர்களிடம் இல்லாத செல்வமா? வன்னியிற் தமிழீழ நடைமுறை அரசினது வைப்பகத்தில் இருந்து கையகப்படுத்திய வெளிநாட்டுப் பணமுட்பட தங்க ஆபரணங்களின் கணக்கே காட்டப்படவில்லை. 

 பலவீனமான நாடுகளைச் சுரண்டலுக்கேற்ப வளைத்தெடுத்தல் அல்லது முறித்துவிடுதல் என்பதே  கோட்பாடு என்ற அமெரிக்காவினது சனநாயகத்தை உலகமே அறிந்ததுதானே. இதில் கோத்தாவையும் தேவைக்கேற்ப கையாளும். 

  • கருத்துக்கள உறவுகள்

இது கோட்டாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.

பயணிகளின் Lounge ற்கு போவதற்கு பயம், அதனாலேயே அரசியல்வாதிகள் Celebrities பயன்படுத்தும் Lounge ஐ கேட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, road and text

 🙂எப்படி  இருந்த  நான்... இப்படி ஆயிட்டேன். - கோத்தா.-  🙃

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுவார்ஷ்யமான செய்தி படித்தேன். கோத்தா நாடில்லாமல் அந்தரிக்கிறாராம் அமெரிக்கா கருணை காட்டவேண்டுமாம்! பிறந்த நாடு, ஆண்டு அதிகாரம் செலுத்திய நாடு, சொத்து சுகம் உறவுகள் சூழ உள்ள நாடு, யாரும் அவரை விரட்டவில்லை, தானே முடிவெடுத்து வெளியேறினார். பாருங்கள் காலம் எங்கே கொண்டுவந்து விட்டிருக்கு! பாரம்பரியமாக வாழ்ந்த மக்களை அதிகார செருக்கினால் நாட்டை விட்டு விரட்டினார், அது அவர்களுக்கு சொந்தமானதில்லை என்று முழங்கினார். இன்று அந்நிய நாட்டிடம் தங்க இடம் கேட்டு காத்திருக்கிறார். விடுமுறையில் சென்றார் என்கிறது ஒரு செய்தி, நாடில்லாமல் அந்தரிக்கிறார் என்கிறது வேறொரு செய்தி. இவருக்கு அமெரிக்கா விஷா கொடுத்தாலும் நிம்மதியாக இருப்பாரா என்பது அடுத்த கேள்வி. இருப்பதெல்லாம் இழந்து, இன்று நம் பெற்றோர் தெருவில் நிற்பது போல் நிலையும் வரலாம் யார் கண்டா விதியின் விளையாட்டை? "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."

  • கருத்துக்கள உறவுகள்

துபாய் சென்றுள்ள கோட்டாபய நாடு திரும்பும் திகதி தொடர்பில் வெளியான தகவல்!

By Digital Desk 5

03 Jan, 2023 | 12:06 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் கடந்த  ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி  சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர்  நாடு திரும்பினார்.

பின்னர் அவர் சமீபத்தில் துபாய் நாட்டுக்குச்  சென்றுள்ள  நிலையில், குடியுரிமையை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா  இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,

'முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக்   கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்க்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் துபாய் சென்றுள்ளனர். இந்நிலையில்    இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர்  நாடு திரும்புவார்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
https://www.virakesari.lk/article/144827

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்தார் கோட்டா !!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் எந்த நாட்டிலும் புகலிடம் கிடைகாதமை காரணமாக அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்க அரசாங்கம் இன்னும் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் கோட்டபாய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1318449

  • கருத்துக்கள உறவுகள்

👉  இது, 26.12.2022´ல்  வந்த செய்தி. 👇

குடும்ப உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம்!

குடும்ப உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்  அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (திங்கட்கிழமை) இவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.- 649 என்ற விமானம் மூலம் அதிகாலை 02.55 க்கு பயணமாகியுள்ளனர்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மனைவி அயோமா ராஜபக்ஷ, மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1317405

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா செல்ல முயன்ற, கோத்தா... இடையில் நின்றது ஏனோ. 
இவர்... விசா இல்லாமல், செல்ல முயற்சித்து இருக்க மாட்டார்.
துபாயில் நிற்கும் போது... இவர் அமெரிக்காவில் கைது செய்யப்படலாம் 
என்ற தகவல் கிடைத்திருக்கலாம் என்பது
எனது ஊகம்.
அதனால்... நாட்டுக்கு திரும்புகின்றார் என நினைக்கின்றேன்.

புது மொழி: 
"கற்றவனுக்கு... சென்ற இடம் எல்லாம் சிறப்பு, 
கோத்தாவுக்கு.. சென்ற இடம் எல்லாம் செருப்பு."  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனப்படுகொலையாளி உல்லாச பயணம்! சிங்கள தேசம் ஒன்று சேர்ந்து காப்பாற்றியிருக்கிறது! தேசத்தின் மீதுள்ள இயற்கையின் சாபம் எப்படி தீரும்?

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2022 at 07:31, தமிழ் சிறி said:

ஷேக்கு மார்களை காணவில்லை.

அதான் பெரிய உடுப்பா போட்டு மறைச்சிருக்காங்க இல்ல. எப்படி தெரியும்?🤣

2 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்கா செல்ல முயன்ற, கோத்தா... இடையில் நின்றது ஏனோ. 
இவர்... விசா இல்லாமல், செல்ல முயற்சித்து இருக்க மாட்டார்.
துபாயில் நிற்கும் போது... இவர் அமெரிக்காவில் கைது செய்யப்படலாம் 
என்ற தகவல் கிடைத்திருக்கலாம் என்பது
எனது ஊகம்.
அதனால்... நாட்டுக்கு திரும்புகின்றார் என நினைக்கின்றேன்.

புது மொழி: 
"கற்றவனுக்கு... சென்ற இடம் எல்லாம் சிறப்பு, 
கோத்தாவுக்கு.. சென்ற இடம் எல்லாம் செருப்பு."  😂

டுபாய்க்கு கிரிஸ்மஸ் சொப்பிங் போனதை, ஊடகங்களும், ஆய்வாளரும் சேர்ந்து அமெரிக்கா போறார், யுரேனஸ் போறார் எண்டு வசந்திய கிளப்பி விட்டிருக்கானுவோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.