Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!

7-29.jpg

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்ஜ்-நிதி நிறுவனத்தின் நிறுவுனரான ராஜ் ராஜரத்தினம் என்பவரே இவ்வாறு அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.

இது தொடர்பில் மேலம் தெரியவருகையில்,

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஹெட்ஜ்-நிதி, உள் வர்த்தக வலயங்களின் பிரதான வகிபாகத்தை கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையில் பிறந்த கேலியன் ஹெட்ஜ் நிதி நிறுவுனர் ராஜ் ராஜரத்தினம் தற்போது சிறிலங்கா வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், அவர் எதிர்வரும் நாட்களில் சிறிலங்கா அரசியல்வாதிகள் சிலரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 2009 ஆம் ஆண்டில், உள் வர்த்தகப் பத்திர மோசடிகளில் குற்றவியல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சில வருடங்கள் சிறைப்படுத்தலின் பின்னர் விடுவிக்கப்பட்டார். எனினும் தாம் குற்றமற்றவர் என்று கூறி அவர் அண்மையில் ‘சீரற்ற நீதி’ (uneven Justice) என்ற நூலை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை தமிழர் புனர்வாழ்வு அமைப்புக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அதிகாரம் இன்றி கிருலப்பனையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட் வங்கிக் கிளையில் வைப்பு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துடன் ராஜரத்தினம் தொடர்புபட்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பெயர் இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் இணைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு, பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி பணச் சலவை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கருணாநாயக்க பின்னர் விடுவிக்கப்பட்டார்.
 

 

https://akkinikkunchu.com/?p=233722

  • Replies 136
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

ஓணாண்டியார், நீங்கள் நினைப்பது போல அல்ல இங்கே விடயம். insider dealing என்றால்..... நான் ஒரு கொம்பனி கணக்கர். கணக்கு தயாரிக்கும் எனக்கு தெரிகிறது, இந்த முறை கொழுத்த லாபம் அல்லது பெரு நஷ்டம் எ

தமிழ் சிறி

@Kapithan மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்…. பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது.  அத்

விசுகு

வணக்கம்  உறவுகளே இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன் தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர் எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார் பாசத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையை சேர்ந்த அமெரிக்க பில்லியனர் இலங்கை வந்துள்ளார்  முதலில் எழுதிய கொழும்பு பத்திரிகை பின்னர், அமேரிக்க சரித்திரத்தில், மிகப்பெரிய மோசடி குழுவை வைத்திருந்தவர் இலங்கை வருகை என்று மாத்தி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப நான் இந்த தலையங்கத்தை பார்த்துவிட்டு இன்று வருடக்டைசி நாள் என்பதால் பீட்சா வங்கியுள்ளார்கள் கீழே கிச்சனுக்கு போய் ஒருதுண்டு எடுத்துவிட்டு வந்து எழுதுவோம் என்று இருந்தேன் அதற்குள் நாதமுனி எழுதியிருக்கிறீர்கள். 

இவர் அமெரிக்க பங்குச்சந்தையில் மோசடியான insider formation  முறையில் லாபமீட்டிய ஒரி கிறிமினல் அல்லவா? பின்பு ஏன் இப்படி தமிழ் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, colomban said:

 

இவர் அமெரிக்க பங்குச்சந்தையில் மோசடியான insider formation  முறையில் லாபமீட்டிய ஒரி கிறிமினல் அல்லவா? பின்பு ஏன் இப்படி தமிழ் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதுகிறார்கள்?

ஏனென்றால், எங்களுக்கு பணம் மட்டும்தான் கண்ணில் தென்படும். அது எப்படி வந்தது என்று தெரிந்தாலும் அது மட்டும் கண்களுக்குத் தெரியாது. 

கருவாடு வித்த காசு மணக்குமா என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லை, இவர் மிகவும் வெற்றி அடைந்த வெள்ளை அல்லாதவர் என்பதால், சிக்க வைக்கப்பட்டார் என்கிறார். அது விடயத்தில், இன்னோரு ஈழத்தமிழரே உளவு பார்க்க அனுப்பட்டார். இவர் அமெரிக்க நீதித்துறை குறித்து ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் சட்டம், படித்தவர்களால் (nobles) எழுதப்பட்டது. அமெரிக்க சட்டம் அடிமைகளை வைத்திருந்த வெள்ளை ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் எழுதப்பட்டது. அங்கே, அரச வழக்குரைஞர் பொய் சொல்லி தப்பிக்க முடியும். எதிராளி அப்படி அல்ல. ஆகவே, சுமத்தப்பட்ட பொய்யான குற்றசாட்டினை, எதிர்த்தால் நீண்ட சிறை தண்டனை கிடைக்கும் என்பதால், அவுட் ஒப் கோர்ட் செட்டில்மென்ட் முறைமை போலவே, கிரிமினல் விடயங்களில், குற்றசாட்டினை ஏற்றுக் கொள்வதாக சொல்லி, குறைந்த தண்டனையை பெறும் ஒரு கேவலமான முறைமை உள்ளது.

இதனையே இவர் புத்தகம் சொல்லி, அமெரிக்க சட்டம் மாறுதலுக்கு உள்ளாக வேண்டும் என்கிறார்.

13 minutes ago, colomban said:

இப்ப நான் இந்த தலையங்கத்தை பார்த்துவிட்டு இன்று வருடக்டைசி நாள் என்பதால் பீட்சா வங்கியுள்ளார்கள் கீழே கிச்சனுக்கு போய் ஒருதுண்டு எடுத்துவிட்டு வந்து எழுதுவோம் என்று இருந்தேன் அதற்குள் நாதமுனி எழுதியிருக்கிறீர்கள். 

இவர் அமெரிக்க பங்குச்சந்தையில் மோசடியான insider formation  முறையில் லாபமீட்டிய ஒரி கிறிமினல் அல்லவா? பின்பு ஏன் இப்படி தமிழ் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதுகிறார்கள்?

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.amazon.com.au/Buy-Side-Street-Traders-Spectacular/dp/0770437176

இந்த புத்தகத்தில் இவரைப்பற்றி பேசப்படுகிறது, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதற்கான சில கருத்துகள் உள்ளது.

தவறு யார் செய்தாலும் தவறுதானே?

இவரது சொத்து கிட்டதட்ட 7 பில்லியனாக அப்போது இருந்தது என கருதுகிறேன்.

உள்வீட்டு தகவலின் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்பட்ட விடயங்கள் அந்த புத்தகத்தில் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, vasee said:

https://www.amazon.com.au/Buy-Side-Street-Traders-Spectacular/dp/0770437176

இந்த புத்தகத்தில் இவரைப்பற்றி பேசப்படுகிறது, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதற்கான சில கருத்துகள் உள்ளது.

தவறு யார் செய்தாலும் தவறுதானே?

இவரது சொத்து கிட்டதட்ட 7 பில்லியனாக அப்போது இருந்தது என கருதுகிறேன்.

உள்வீட்டு தகவலின் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்பட்ட விடயங்கள் அந்த புத்தகத்தில் உள்ளது

மேற்கின் இன்சைடர் டீலிங் சட்டப்படி, இவர் சிறை சென்றாலும், இவர் சம்பாதித்த பணம் பறிமுதல் ஆகாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்  உறவுகளே

இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன்

தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர்

எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார்

பாசத்தின் உறைவிடம்.

எனவே  கவனமாக கருத்துக்களை  வையுங்கள்

நன்றி

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

வணக்கம்  உறவுகளே

இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன்

தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர்

எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார்

பாசத்தின் உறைவிடம்.

எனவே  கவனமாக கருத்துக்களை  வையுங்கள்

நன்றி

அண்ணை பற்றாளர் தந்தையா? இவரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

அண்ணை பற்றாளர் தந்தையா? இவரா?

இவர் யாழ்ப்பாணம் போய் இரண்டு, மூன்று மாதம் இருந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆவல் என்று சொல்லி தான் வருகிறார். பாதுகாப்பை உறுதி செய்ய, கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடும்.

விசயம் தெரிந்த நம்மவர்கள், மலேசியா, பிரிட்டன், அவுஸ், கனடாவில் உள்ள இருந்து இவரை ஒன்லைன் மூலம் பங்கு சந்தை நெளிவு சுழிவுகளை சொல்லித் தருமாறு கோரி, அவரும் உதவுகிறார்.

அதனையே இலங்கையில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டும்.

இவர் குறித்த அலம்பறைகளை விடுத்து, பிரயோசனம் மிக்க, அனுபவங்களை பெற்றுக் கொள்வது சிறப்பு.

இவர் மீது, FBI சுமத்திய சார்ஜ் சீட்டில், இயக்கத்துக்கு பணம் கொடுத்து உதவினார் என்பது முக்கியமானது. 

Edited by Nathamuni
  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ஏராளன் said:

அண்ணை பற்றாளர் தந்தையா? இவரா?

தந்தை தாயார் 

எனவே...?

இன்றைய நிலையில் 

அவர் படும்பாட்டுக்குள் நாம் கதை  பேசவேண்டாமே???

41 minutes ago, Nathamuni said:

இவர் யாழ்ப்பாணம் போய் இரண்டு, மூன்று மாதம் இருந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆவல் என்று சொல்லி தான் வருகிறார். பாதுகாப்பை உறுதி செய்ய, கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடும்.

விசயம் தெரிந்த நம்மவர்கள், மலேசியா, பிரிட்டன், அவுஸ், கனடாவில் உள்ள இருந்து இவரை ஒன்லைன் மூலம் பங்கு சந்தை நெளிவு சுழிவுகளை சொல்லித் தருமாறு கோரி, அவரும் உதவுகிறார்.

அதனையே இலங்கையில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டும்.

இவர் குறித்த அலம்பறைகளை விடுத்து, பிரயோசனம் மிக்க, அனுபவங்களை பெற்றுக் கொள்வது சிறப்பு.

இவர் மீது, FBI சுமத்திய சார்ஜ் சீட்டில், இயக்கத்துக்கு பணம் கொடுத்து உதவினார் என்பது முக்கியமானது. 

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் இராஜ் இராஜரட்ணம் இலங்கை விஜயம்

By VISHNU

29 DEC, 2022 | 08:15 PM
image

அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் இராஜ் இராஜரட்ணம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

இதன்படி இராஜ் இராஜரட்ணம் 28 ஆம் திகதி புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர்.

20221229_152959.png

2006 ஆண்டில் இராஜ் இராஜரட்ணம் அவர்களின் நிதி உதவியானது இருதய சரித்திர சிகிச்சை பிரிவு எகோ இயந்திரம் உட்பட பல சேவைகளை புதிதாக  ஆரம்பிக்க பெரும் உதவியாக இருந்ததென யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

20221229_153103.jpg

இராஜ் இராஜரட்ணம் எழுதிய “Uneven Justice” என்னும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ” விளைந்த நீதி” என்ற நூல் சில மாதங்களில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.

https://www.virakesari.lk/article/144478

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

இவர் எமது நாட்டின் பற்றாளரும் கூட...

இவரால் வன்னியில் பல திட்டங்கள், நடைமுறையரசின் காலத்தில், தொடங்கப்பட்டிருந்தன. 

ஒரு பெரும் பண்ணையைக் கூடத் தொடங்கியிருந்தார்.

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, நன்னிச் சோழன் said:

இவர் எமது நாட்டின் பற்றாளரும் கூட...

இவரால் வன்னியில் பல திட்டங்கள், நடைமுறையரசின் காலத்தில், தொடங்கப்பட்டிருந்தன. 

ஒரு பெரும் பண்ணையைக் கூடத் தொடங்கியிருந்தார்.

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கப்பூரில், ஒரு ஐரோப்பிய வங்கியான பெயரிங் பேங்க்ல் வேலை பார்த்த ஒருவர் நிக் லீசன், இவர் தனது பெண் நண்பியுடன் அங்கே தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். திருமண வேலைகளும் நடந்து கொண்டிருந்தன.

அவர், பங்குசந்தையில், வங்கி அனுமத்திருந்த தொகையிலும் பார்க்க மிக அதிக தொகையை பங்கு சந்தையில் விட (சூதாட்டம் போலவே) அது இழப்பில் முடியப்போகிறது என்றவுடன், இரவோடிரவாக, கிடைத்த விமானத்தில், ஜெர்மனி வந்துவிட்டார். மறு நாள், லண்டன் கிளம்ப முனைந்த போது, சிங்கப்பூர் அரசின் கோரிக்கையில் கைதானார். 

லண்டன் திரும்பிய பெண் நண்பி, சில மாதங்களில் வேறு ஒரு பழைய நண்பரை பிடித்துக் கொண்டது வேறு கதை. இப்படி துரோகம் செய்யலாமா என்று மீடியா கேட்டபோது, அவர் நிக் சிறையில் இருந்து வர நீண்ட காலமாகலாம், அதுவரை காத்திருந்தால் வயதாகி விடும் என்று எடுத்தெறிந்து பேசி இருந்தார்.

அதேவேளை, நிக் ஐரோப்பாவில் இருந்த படியால், அவரை சிங்கப்பூருக்கு அனுப்புவது உடனடி சாத்தியம் இல்லாமல் போனது. சிங்கப்பூர் அரசு அவருடன், திரும்பி வந்து, விசாரணைக்கு உடன்படு. ஒரு வாரத்துக்கு மேல் சிறையில் வைத்திருக்க மாட்டோம். எங்கே தவறு என்று அறிந்து அதனை திருத்தவே முயல்கிறோம் என்று நேரடியாக உடன்பாடு செய்து கொண்டது.

அதன் பேரில் அவரும் சுஜமாக சிங்கப்பூர் சென்று விசாரணைக்கு ஒத்துழைத்து, (அவர் திருடவில்லை என்பது முக்கியமானது) வங்கியின் கட்டுப்பாட்டு முறைமையில் பலவீனம் என்று சிங்கப்பூர் அரசு கண்டறிந்து, அவரை இருவாரங்களில் அனுப்பி வைத்தது.

திரும்பி வந்த அவர், என்ன செய்யக்கூடாது என்பதில், இன்வெட்மென்ட் வங்கிகளுக்கு lecture கொடுத்து பெரும் பணம் சம்பாதித்து, இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது, பெண் நண்பி கவலைப்பட்டிருப்பார். இவரது துரோகம், சுஜநலம் குறித்து பல கட்டுரைகள் வந்தன.

சரி, இந்த செய்தியின் நோக்கம், ராஜ் ராஜரத்தினத்தின், பெரும் அனுபவத்தினை பெற வேண்டுமே அன்றி, அவர் சிறைக்கு போனார் என்பது குறித்து பேசுவது தேவையில்லாத வேலை. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Nathamuni said:

இவர் .....பாதுகாப்பை உறுதி செய்ய, கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடும்.

உண்மையான, நடைமுறைச் சாத்தியமான விடயம் இதுதான்.🖕

ஆனால், இந்த அணுகுமுறை இவருக்கு மட்டுமே பிரத்தியேகமானதா அல்லது புலம்பெயர்ந்த தமிழர் எல்லோருக்கும் பொதுவானதா ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, Kapithan said:

உண்மையான, நடைமுறைச் சாத்தியமான விடயம் இதுதான்.🖕

ஆனால், இந்த அணுகுமுறை இவருக்கு மட்டுமே பிரத்தியேகமானதா அல்லது புலம்பெயர்ந்த தமிழர் எல்லோருக்கும் பொதுவானதா ? 

நீங்கள்,  நல்லூர் திருவிழாவுக்கு… போகின்ற புலம்பெயர் தமிழர்களுக்கும்
பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களா? 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, Kapithan said:

உண்மையான, நடைமுறைச் சாத்தியமான விடயம் இதுதான்.🖕

ஆனால், இந்த அணுகுமுறை இவருக்கு மட்டுமே பிரத்தியேகமானதா அல்லது புலம்பெயர்ந்த தமிழர் எல்லோருக்கும் பொதுவானதா ? 

 

9 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்,  நல்லூர் திருவிழாவுக்கு… போகின்ற புலம்பெயர் தமிழர்களுக்கும்
பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களா? 🤣

ஆள் பில்லியனனியர்.

உந்த வாழ் வெட்டு கோஸ்ட்டிகள் கைமாத்து, கால்மாத்து எண்டு போய் நிக்க கூடாது கண்டியளே.

அமேரிக்க அலன் தம்பதிகளை கடத்தின டக்ளஸ் இன்னும் அங்கை தானே இருக்கிறார். இவரும் அமெரிக்கர் தான். 🤗

அப்ப பாதுகாப்பு முக்கியம் எல்லோ. 😜

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

வணக்கம்  உறவுகளே

இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன்

தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர்

எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார்

பாசத்தின் உறைவிடம்.

எனவே  கவனமாக கருத்துக்களை  வையுங்கள்

நன்றி

நானும் அவருடன் பல தடவைகள் சந்தித்தும் சேர்ந்து பயணம் செய்தும் இருக்கிறேன்.

அவர் எப்போதும் பொதுநலமாகவே பேசுவார்.மாவீரர் தினங்களில் சிறிது உரையாற்றுவார்.

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் அவருடன் பல தடவைகள் சந்தித்தும் சேர்ந்து பயணம் செய்தும் இருக்கிறேன்.

அவர் எப்போதும் பொதுநலமாகவே பேசுவார்.மாவீரர் தினங்களில் சிறிது உரையாற்றுவார்.

உண்மை அண்ணா

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று அவரை விடச்சொன்ன ஆடம்பர கோட்டலின் பெயரைக் கேட்டதும் புரிந்தது வருபவரின் பொருளாதாரம். (அதுவரை யாருக்கும் அப்படி இருந்ததில்லை)

ஆனால் ஒரு சிறிய கைப்பையுடன் அவர் வந்த விதம் காருக்குள் எம்முடன் பேசிய விதம் பேசிய விடயங்கள்.............

உண்மையிலேயே உயர்ந்த மனுசன் தான்.🙏

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாதுகாப்பு முக்கியம் என்பதை ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருக்கிறேன. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. ஆனால் அவர் அரச தரப்புடன் உரையாடுவது , அவர்களின் ஆதரவுடன் அல்லது சம்மதத்துடன் வேலைத்திட்டங்களைச் செய்வதுதான் சாத்தியமானதுங்கூட. 

ஆனால் எனது கேள்வி, அரச தரப்புடன் வேறு ஆட்கள் இதே நோக்கத்துடன் உரையாட முட்பட்டால் அதனைப் பகிரங்கமாக  ஏற்றுக்கொள்வீர்களா ? (உங்களை அல்ல, பொதுவாகக் கேட்கிறேன். ஏனென்றால் இங்கே பலரும் தங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துளனர. அதில் எனக்கு உடன்பாடே) 

ஏனென்றால், கடந்த காலங்களில் அரசுடன், அரச அதிகாரிகளுடன் பேசிய பலருக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டதுதான் வரலாறு. 

3 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள்,  நல்லூர் திருவிழாவுக்கு… போகின்ற புலம்பெயர் தமிழர்களுக்கும்
பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களா? 🤣

👆

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, Nathamuni said:

இவர் யாழ்ப்பாணம் போய் இரண்டு, மூன்று மாதம் இருந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆவல் என்று சொல்லி தான் வருகிறார். பாதுகாப்பை உறுதி செய்ய, கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடும்.-இவர் மீது, FBI சுமத்திய சார்ஜ் சீட்டில், இயக்கத்துக்கு பணம் கொடுத்து உதவினார் என்பது முக்கியமானது. 

 

14 hours ago, Nathamuni said:

இவர் மிகவும் வெற்றி அடைந்த வெள்ளை அல்லாதவர் என்பதால், சிக்க வைக்கப்பட்டார் என்கிறார். அது விடயத்தில், இன்னோரு ஈழத்தமிழரே உளவு பார்க்க அனுப்பட்டார். இவர் அமெரிக்க நீதித்துறை குறித்து ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளார்.

 

12 hours ago, விசுகு said:

தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர்

 

9 hours ago, நன்னிச் சோழன் said:

இவர் எமது நாட்டின் பற்றாளரும் கூட...

இவரால் வன்னியில் பல திட்டங்கள், நடைமுறையரசின் காலத்தில், தொடங்கப்பட்டிருந்தன. 

ஒரு பெரும் பண்ணையைக் கூடத் தொடங்கியிருந்தார்.

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் அவருடன் பல தடவைகள் சந்தித்தும் சேர்ந்து பயணம் செய்தும் இருக்கிறேன்.

அவர் எப்போதும் பொதுநலமாகவே பேசுவார்.மாவீரர் தினங்களில் சிறிது உரையாற்றுவார்.

@Kapithan
மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்….
பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார்
என்பதை அறிய முடிகின்றது. 

அத்துடன்  தான் வெற்றியடைந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதால்….
சிக்க வைக்கப் பட்டதாக அவரே தனது புத்தகத்தின் மூலம் தெரிவிக்கின்றார்.

நீங்கள் குறிப்பிடுவது…. அண்மையில் கனடாவில் இருந்து சென்ற தொழிலதிபர்களைப் பற்றி என நினைக்கின்றேன். அவர்களைப் பற்றி நீங்களும், வேறு சிலரும்…. போர் நடந்த காலத்தில்  கூட,   அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும்… 
மகிந்த, கோத்தா காலத்திலும் அவர்கள் நாட்டுக்கு வந்து அரசுடன் உறவைப் பேணியவர்கள் என்றும் முன்பு வேறொரு தலைப்பில் எழுதியுள்ளார்கள்.

அரசுடன் பல்வேறு கட்டங்களில் தொடர்பிலிருந்தவர்களுடன்
திரு. ராஜ் ராஜரத்தினத்தை ஒப்பிட்டு…
அவர் மனதை நோகடித்து, தாயக மக்களுக்கு செய்ய வரும் உதவியை தடுத்து நிறுத்தாமல்
இருப்பதே தாயக மக்களை நேசிக்கும் எமக்கு அழகு. 

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜ் பற்றிய முன்னைய திரி.

யாரெல்லாம் என்ன கருத்து சொல்லி இருக்கிறார்கள் என பார்க்க இலகுவாக 😝.

என் கருத்து

Rehabilitation of Offenders என்று குற்றம் செய்தவர்களை சமூக வாழ்வில் மீள இணைக்கும் வழக்கம் எங்கும் உளது.

அதுவும் ராஜ் அமெரிகாவிலேயே plea bargain மூலம் குறைந்த தண்டனை பெற்றவர்.

கூடுதலாக இனத்துக்கு உதவியவர்.

ஆனால்…

தனியாக, தானாக வருகிறார் என நினைக்கவில்லை. 

டீல் போடுவது (நிதி அல்லது சட்ட) ராஜுக்கு புதிதல்ல.

யாரோ அனுப்பி இருக்கிறார்கள். அல்லது உத்தரவாதமாவது கொடுத்திருப்பார்கள். 

பரவாயில்லை, ஒரு எச்சரிக்கை சேர் வரவேற்பை (cautious welcome) கொடுத்தே வைப்போம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, தமிழ் சிறி said:

 

 

 

 

மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்….
பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார்
என்பதை அறிய முடிகின்றது. 

அத்துடன்  தான் வெற்றியடந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதால்….
சிக்க வைக்கப் பட்டதாக அவரே தனது புத்தகத்தின் மூலம் தெரிவிக்கின்றார்.

நீங்கள் குறிப்பிடுவது…. அண்மையில் கணடாவில் இருந்து சென்ற தொலதிபர்களைப் பற்றி என நினைக்கின்றேன். அவர்களைப் பற்றி நீங்களும், வேறு சிலரும்…. போர் நடந்த காலத்தில்  கூட,   அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும்… 
மகிந்த, கோத்தா காலத்திலும் அவர்கள் நாட்டுக்கு வந்து அரசுடன் உறவைப் பேணியவர்கள் என்றும் முன்பு வேறொரு தலைப்பில் எழுதியுள்ளார்கள்.

அரசுடன் பல்வேறு கட்டங்களில் தொடர்பிலிருந்தவர்களுடன்
திரு. ராஜ் ராஜரத்தினத்தை ஒப்பிட்டு…
அவர் மனதை நோகடித்து, தாயக மக்களுக்கு செய்ய வரும் உதவியை தடுத்து நிறுத்தாமல்
இருப்பதே தாயக மக்களை நேசிக்கும் எமக்கு அழகு. 

நன்றி👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

 

@Kapithan
மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்….
பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார்
என்பதை அறிய முடிகின்றது. 

அத்துடன்  தான் வெற்றியடைந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதால்….
சிக்க வைக்கப் பட்டதாக அவரே தனது புத்தகத்தின் மூலம் தெரிவிக்கின்றார்.

நீங்கள் குறிப்பிடுவது…. அண்மையில் கனடாவில் இருந்து சென்ற தொழிலதிபர்களைப் பற்றி என நினைக்கின்றேன். அவர்களைப் பற்றி நீங்களும், வேறு சிலரும்…. போர் நடந்த காலத்தில்  கூட,   அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும்… 
மகிந்த, கோத்தா காலத்திலும் அவர்கள் நாட்டுக்கு வந்து அரசுடன் உறவைப் பேணியவர்கள் என்றும் முன்பு வேறொரு தலைப்பில் எழுதியுள்ளார்கள்.

அரசுடன் பல்வேறு கட்டங்களில் தொடர்பிலிருந்தவர்களுடன்
திரு. ராஜ் ராஜரத்தினத்தை ஒப்பிட்டு…
அவர் மனதை நோகடித்து, தாயக மக்களுக்கு செய்ய வரும் உதவியை தடுத்து நிறுத்தாமல்
இருப்பதே தாயக மக்களை நேசிக்கும் எமக்கு அழகு. 

சிறியர்,

1) ராஜ் தொடர்பாக  எனது கருத்தை மிகத் தெளிவாகவே (வரவேற்பதாக) கூறியுள்ளேன். எனவே  அவரைப்பற்றியது அல்ல  எனது கரிசனை. 

2) சிங்களத்துடன் ஆரம்பத்திலிருந்தே சேர்த்து இயங்குபவர்களைப் பற்றி எவருக்குமே கேள்வி எழப்போவதில்லை.

 இனிவரும் காலங்களில், வடக்கு கிழக்கிற்கு உதவ விரும்புவோர் சிங்கள அரசாங்க நிர்வாகிகள்+அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் உதவ முயன்றால், ராஜிற்குக் கிடைக்கும் அதே வரவேற்பு அவர்களுக்கும் கிடைக்குமா என்பதே எனது கேள்வி.  

[ஏனென்றால் சிங்களத்துடன் (நன்நோக்குடன்) தொடர்புகொள்ளும் எல்லோரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டதே வரலாறு. ]




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார்.   கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.   இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார்.    தமிழ் மக்களின் நெருக்கடிகள் இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lankan-mp-sumanthiran-visits-ottawa-1734244102?itm_source=parsely-detail
    • இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 75 ஆயிரம் கிலோ நாட்டரிசி, மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.  நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. பாவனைக்கு உதவாத அரிசி   அதன்படி தற்போது இந்தியாவில்(India) இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் சனிக்கிழமை வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது.   அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என நேற்று (14) உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் அடையாளம் கண்டுள்ளனர். சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர், சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை   அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை. தற்போதைக்கு மனித பாவனைக்கு உதவாத குறித்த அரிசித் தொகையை மீண்டும் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/imported-rice-in-sri-lanka-found-infested-1734238699
    • தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளன.  எனவே, நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது 'முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக் கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்தாது என்பதையும் காண்பித்திருக்கிறது.  இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும்.  13 ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும்.  ஆகையினாலேயே 13 ஆம் திருத்தத்தை ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தைப் பெரும்பான்மை தலைமைகள் மக்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.  இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் 'ஏக்கிய இராச்சிய' முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது.  இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.  இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் தீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது.  எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப் பதிலாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.   https://www.hirunews.lk/tamil/390819/தமிழ்-மக்களுக்கு-அவசியமான-ஆதரவினை-இந்தியா-வழங்கவேண்டுமெனக்-கோரிக்கை  
    • உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது. செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள். செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.