Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இலட்சம் இலங்கைக் குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ஒரு காலத்தில் பிரித்தானிய சுதேசிய செந்நிற அணில்களால்.. விவசாயத்துக்குப் பாதிப்புன்னு.. குறிப்பாக பழப்பயிர்களில் விளைச்சல் பாதிப்புன்னு.. அவற்றுக்குப் போட்டியாக.. அமெரிக்காவில் இருந்து சாம்பல் நிற அணில்களைப் புகுத்தினார்கள். இதனை உயிரியல் கட்டுப்பாடு என்று சொல்வது. ஆனால்.. இப்ப செந்நிற அணிகளை வென்று.. சாம்பல் நிற அணில்கள் பெருகிவிட்டன. செந்நிற அணில்கள் அருகி வரும் இனமாகிவிட்டது.

பெரிய விஞ்ஞான அறிவுள்ள நாடுன்னு பீற்றிக்கொண்ட பிரித்தானியாவுக்கே இந்த நிலை.. இதில சொறீலங்கா.. குரங்குகளையும் மயில்களையும் அழிச்சு.. சூழல் சமநிலையை மட்டுமல்ல.. இந்த இனங்களை அருகி வரும் நிலைக்கு கொண்டு செல்லாமல் விட்டாலே பெரிய விடயம்.

The Magpie's Hoard: Reds and Greys

Edited by nedukkalapoovan

  • Replies 85
  • Views 5.7k
  • Created
  • Last Reply
1 hour ago, nedukkalapoovan said:

இப்படித்தான் ஒரு காலத்தில் பிரித்தானிய சுதேசிய செந்நிற அணில்களால்.. விவசாயத்துக்குப் பாதிப்புன்னு.. குறிப்பாக பழப்பயிர்களில் விளைச்சல் பாதிப்புன்னு.. அவற்றுக்குப் போட்டியாக.. அமெரிக்காவில் இருந்து சாம்பல் நிற அணில்களைப் புகுத்தினார்கள். இதனை உயிரியல் கட்டுப்பாடு என்று சொல்வது. ஆனால்.. இப்ப செந்நிற அணிகளை வென்று.. சாம்பல் நிற அணில்கள் பெருகிவிட்டன. செந்நிற அணில்கள் அருகி வரும் இனமாகிவிட்டது.

பெரிய விஞ்ஞான அறிவுள்ள நாடுன்னு பீற்றிக்கொண்ட பிரித்தானியாவுக்கே இந்த நிலை.. இதில சொறீலங்கா.. குரங்குகளையும் மயில்களையும் அழிச்சு.. சூழல் சமநிலையை மட்டுமல்ல.. இந்த இனங்களை அருகி வரும் நிலைக்கு கொண்டு செல்லாமல் விட்டாலே பெரிய விடயம்.

The Magpie's Hoard: Reds and Greys

நெடுக்கு,

இலங்கையில் எட்டுப் பேருக்கு ஒரு குரங்கு என்ற விகிதத்தில் குரங்குகளின் எண்ணிக்கை இருக்கு என்று அரசு சொல்கின்றது. அத்துடன் குரங்கை உணவாக உண்ணும் விலங்குகளான நரி போன்றவற்றின் எண்ணிக்கையும் குடியேற்றங்களால் குறைகின்றதாம். 

இந்த அபரிதமான குரங்குகளின் பெருக்கம் இயற்கை சமநிலையை உடைக்காதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நீங்க இன்னும் பவா போல் உள்ளீர்கள் அரசியல் வாதிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப கூட்டி குறைத்து சொல்வார்கள் பாஸ் . சீனா கேட்டபின்தானே இந்த புள்ளி விபரங்களை ஒல் பாஸ் பண்ணாத அரசியல்வாதிகள் பேப்பருக்கு சொல்லுகினம் இதற்க்கு முன் குரங்குகளால் பயிர் செய்கை பாதிப்பு அதிக குரங்கினம் என்று செய்திகளில் வந்ததா ?

அபரிதமான குரங்கு இனபெருக்கம் மழைகாடுகளை இலகுவில் உருவாக்கும் என்னை பொறுத்தவரை இந்த அவ்வளவு குரங்கும் சைனாவுக்கு போகணும் சொரிலங்கா பாலைவனம் ஆகணும் அப்பத்தான் சிங்களவன் திருந்துவான் .

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவுக்கும்… சிலோன் குரங்கு மட்டும்தான் வேணுமாம். 😁
சீனா… என்ன செய்தாலும், 🤪
அமெரிக்கா… தானும் அதையே செய்ய வேணும் என்று அடம் பிடிக்குது. 🤣

இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகளெல்லாம் வரிசையில் வந்து ஒவ்வொன்றாக கேட்கப்போகிறார்கள், இல்லையென்று சொல்லவா முடியும்? எதையெதை கேட்டுத்தொலைக்கப்போகிறார்களோ தெரியலையே?

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of slow loris

No photo description available.

No photo description available.

May be a doodle of slow loris and text that says '2023-04-17 Da D Follow Û on @Daii එතකොට මම විතරද වගා පාලු කලේ...???'

No photo description available.

May be a doodle

May be an illustration

  • கருத்துக்கள உறவுகள்

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

குரங்குகள் விவகாரம் குறித்து அரச மட்ட பேச்சு இல்லை – பந்துல

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என மைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2023/1330340

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

நீங்க இன்னும் பவா போல் உள்ளீர்கள் அரசியல் வாதிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப கூட்டி குறைத்து சொல்வார்கள் பாஸ் . சீனா கேட்டபின்தானே இந்த புள்ளி விபரங்களை ஒல் பாஸ் பண்ணாத அரசியல்வாதிகள் பேப்பருக்கு சொல்லுகினம் இதற்க்கு முன் குரங்குகளால் பயிர் செய்கை பாதிப்பு அதிக குரங்கினம் என்று செய்திகளில் வந்ததா ?

அபரிதமான குரங்கு இனபெருக்கம் மழைகாடுகளை இலகுவில் உருவாக்கும் என்னை பொறுத்தவரை இந்த அவ்வளவு குரங்கும் சைனாவுக்கு போகணும் சொரிலங்கா பாலைவனம் ஆகணும் அப்பத்தான் சிங்களவன் திருந்துவான் .

வசதிக்கேற்ப கணக்கெடுப்பார்கள்😁

இலங்கையிலிருந்து குரங்குகள் சீன ஆய்வுகூடங்களிற்கே கொண்டுசெல்லப்படும் – சுற்றாடல் குறித்த அமைப்பு

இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவின் ஆய்வகங்களிற்கே அனுப்பப்படலாம் என  இலங்கையை சேர்ந்த சுற்றாடல் நீதி அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகளை சோதனைக்கும் அழகுசாதனப்பொருட்களை சோதனை செய்வதற்கும் மருத்துவபரிசோதனைகளிற்கும் சீனா பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சி சாலைகளிற்கான சர்வதேச வரைவிலக்கணங்களின் படி சீனாவில் 18 மிருகக்காட்சிசாலைகளே உள்ளன என தெரிவித்துள்ளஅவர் ஒரு மிருககாட்சி சாலைக்கு 5000 குரங்குகள் என கணக்கிட்டாலும் சீனா தெரிவிப்பது நம்பக்கூடிய விடயமாக இல்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஒருஇலட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பினாலும் இலங்கையி;ல் குரங்குகளின் எண்ணிக்கை குறையப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகை குரங்குகளை தலதா மாளிகை அனுராதபுர மிகிந்தல போன்ற ஆலயங்கள் உள்ள பகுதிகளில் இருந்தே பிடிக்கவேண்டும் இந்த வகை குரங்குகளிற்கு மனிதர்கள் போல அந்த பகுதிகளில் வாழ்வதற்கான உரிமையுள்ளது எனவும் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இந்த வழிபாட்டுத்தலங்கள் உள்ள பகுதிகளில் இருந்து குரங்குகளை சீன ஆய்வுகூடங்களிற்கு அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இந்த முடிவை கைவிடுவார் என கருதுகின்றோம்,அமைச்சரால் தான் நினைத்தபடி விலங்குகளை வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது,ஆனால் வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/monkeys-from-sri-lanka-will-be-transported-to-chinese-laboratories/

12 hours ago, பெருமாள் said:

நீங்க இன்னும் பவா போல் உள்ளீர்கள் அரசியல் வாதிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப கூட்டி குறைத்து சொல்வார்கள் பாஸ் . சீனா கேட்டபின்தானே இந்த புள்ளி விபரங்களை ஒல் பாஸ் பண்ணாத அரசியல்வாதிகள் பேப்பருக்கு சொல்லுகினம் இதற்க்கு முன் குரங்குகளால் பயிர் செய்கை பாதிப்பு அதிக குரங்கினம் என்று செய்திகளில் வந்ததா ?

நீங்கள் சொல்வதும் சரிதான். ஒரு பெரும் இனவழிப்பை நடாத்தி விட்டு, பொதுமக்களில் ஒருவரைக் கூட கொல்லவில்லை என்று சாதிக்கும் சிங்களம், தனக்கு ஏற்ப பொய்களை சொல்லும்.

ஆனாலும், கல்கிசை போன்ற கொழும்புக்கு அருகில் இருக்கும் உப நகரங்களிலேயே இந்த குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து, வீடு புகுந்து பொருட்களை எடுத்துக் கொண்டு போகும் அளவுக்கு வந்துவிட்டன என்று சிங்கள களில் உரையாடுகின்றனர். வவுனியாவிலும் இந்த பிரச்சனை மிக மோசமான அளவுக்கு சென்றுவிட்டதாக சொல்கின்றனர்.

12 hours ago, பெருமாள் said:

 என்னை பொறுத்தவரை இந்த அவ்வளவு குரங்கும் சைனாவுக்கு போகணும் சொரிலங்கா பாலைவனம் ஆகணும் அப்பத்தான் சிங்களவன் திருந்துவான் .

எனக்கும் ஆசை தான். ஆனால் இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழர்கள் இன்னும் செறிவாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். சிங்களவர்களுக்கு ஒரு கண் போகும் போது, தமிழர்களுக்கு இரு கண்களும் போய் விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

நெடுக்கு,

இலங்கையில் எட்டுப் பேருக்கு ஒரு குரங்கு என்ற விகிதத்தில் குரங்குகளின் எண்ணிக்கை இருக்கு என்று அரசு சொல்கின்றது. அத்துடன் குரங்கை உணவாக உண்ணும் விலங்குகளான நரி போன்றவற்றின் எண்ணிக்கையும் குடியேற்றங்களால் குறைகின்றதாம். 

இந்த அபரிதமான குரங்குகளின் பெருக்கம் இயற்கை சமநிலையை உடைக்காதா?

மனிதன் எடுத்த பிற நடவடிக்கையே, இயற்கை சமநிலையினை பாதிக்க காரணம். ஆகவே, முதலில் அரசு எடுக்க கூடிய நடவடிக்கை, குரங்குகளை ஓரளவுக்கு மலடாக்கள்... 

கொண்டோம் கொடுக்கலாமா என்று கேக்கிறேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

நெடுக்கு,

இலங்கையில் எட்டுப் பேருக்கு ஒரு குரங்கு என்ற விகிதத்தில் குரங்குகளின் எண்ணிக்கை இருக்கு என்று அரசு சொல்கின்றது. அத்துடன் குரங்கை உணவாக உண்ணும் விலங்குகளான நரி போன்றவற்றின் எண்ணிக்கையும் குடியேற்றங்களால் குறைகின்றதாம். 

இந்த அபரிதமான குரங்குகளின் பெருக்கம் இயற்கை சமநிலையை உடைக்காதா?

மனிதன்-யானை மோதல் (human-elephant conflict) இலங்கையில் இருக்கிறது (யானை பாதுகாக்கப் படும் ஒரு விலங்கினம்). அதே போல மனிதன்-குரங்கு மோதலும் (human-monkey conflict) இலங்கையின் சில விவசாயப் பிரதேசங்களில் பல வருடங்களாகவே இருக்கிறது. கீழே இருக்கும் ஆய்வு 2019 இல் வந்திருக்கிறது.

https://www.karger.com/Article/Fulltext/496025

சில எழுத்துப் பிழைகளுடன் இருந்தாலும், இலங்கையின் விவசாயிகளில் ஒரு சிறு மாதிரிக் குழுவினர் குரங்குகளின் பாதிப்புப் பற்றி என்ன நினைக்கின்றனர் என இந்த ஆய்வில் தெரிகிறது. நான்கு குரங்கினங்கள் இலங்கையில் இருக்கின்றன - அவற்றுள் இரண்டு பாதுகாக்கப் பட்ட இனங்கள் (protected Species). இந்தப் பாதுகாக்கப் பட்ட குரங்கினங்கள் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதில்லை (எண்ணிக்கை மிக குறைவு, மனிதர்களை எதிர்கொள்ள அவை விரும்புவதில்லை!).

எண்ணிக்கையில் மிக அதிகமாகி விட்ட மகாக் (Macaque) குரங்குகள் தான் விவசாயிகளுக்கு நட்டம் விளைவிப்பவையாக இருக்கின்றன. இந்த மகாக் குரங்குகளையே சீனா காசு கொடுத்து வாங்க விரும்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் விலை உயர்ந்த களில் குரங்கு இறைச்சியும் அடங்குவதாக கூறுகிறார்கள். 
சிறிலங்கா எந்த உயிரினங்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது என சட்டம் உள்ள போது குரங்குகள் மட்டும் எப்படி விதிவிலக்கானது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

சீனாவின் விலை உயர்ந்த களில் குரங்கு இறைச்சியும் அடங்குவதாக கூறுகிறார்கள். 
சிறிலங்கா எந்த உயிரினங்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது என சட்டம் உள்ள போது குரங்குகள் மட்டும் எப்படி விதிவிலக்கானது.

சீனாவின் ஒரு மாகாணம் தானே… ஶ்ரீலங்கா. ஆனபடியால்… ஏற்றுமதி செய்யலாம்.

😀

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

நெடுக்கு,

இலங்கையில் எட்டுப் பேருக்கு ஒரு குரங்கு என்ற விகிதத்தில் குரங்குகளின் எண்ணிக்கை இருக்கு என்று அரசு சொல்கின்றது. அத்துடன் குரங்கை உணவாக உண்ணும் விலங்குகளான நரி போன்றவற்றின் எண்ணிக்கையும் குடியேற்றங்களால் குறைகின்றதாம். 

இந்த அபரிதமான குரங்குகளின் பெருக்கம் இயற்கை சமநிலையை உடைக்காதா?

Food Web - Peafowl Research

Food Chain and Food Web - Tropical Rainforests

குரங்களின் பெருக்கத்தை இரண்டு வகையில் கட்டுப்படுத்தலாம். 

1. அவற்றை இரையாக்கக் கூடிய இரையுண்ணிகளை அறிமுகம் செய்தல்.

2. செயற்கை முறை கருத்தடை.

இதனை விட.. குரங்குகளை மனிதர்களின் விளை நிலங்கள்.. குடியிருப்புக்களில் இருந்தும்.. தூர அனுப்பி வைக்கலாம். குறிப்பாக காடுகளுக்கு அனுப்பலாம். இதன் மூலம் காடுகளில் தாவர விதைப் பரம்பலுக்கு அவை உதவி செய்வதோடு காடுகளின் மீள்சிக்கு உதவும்.

அதேபோல் மயில்கள்.. அவை குறிப்பிடத்தக்க அளவு பீடைகளை உணவாக்கிக் கொள்கின்றன. அந்த வகையில்.. மயில்களின் பெருக்கம் பீடைகளை ஒழிக்க உதவலாம். மயில்களின் பரம்பலை விரிவு படுத்துவதன் மூலம் இதனைச் செய்யலாம்.

இந்த விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும்.. ஆராய்ச்சிகளுக்காகவே குரங்கிற்கு அடிபடுகிறார்கள். ஆராய்ச்சிகளுக்கு குரங்குகளின் தேவை இன்றியமையாதது. இலங்கைக் குரங்குகள் இலகுவாக இனப்பெருக்கம் செய்யப்படக் கூடியவை மட்டுமன்றி.. இலகுவாக பராமரிக்கப்படக் கூடியவை. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான்.. இலங்கைக் குரங்கிற்கு இந்த அடிபாடு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Drug discovery and development scheme for liver-targeting bridged nucleic  acid antisense oligonucleotides: Molecular Therapy - Nucleic Acids

ஒவ்வொரு மருந்து மற்றும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சில்.. குரங்கு மற்றும் எலிகளின் பங்கு தவிர்க்க முடியாதவை. சீனா பெருமளவில் மருந்துகளை அல்லது உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கும் நோக்கோடு இந்த கொள்வனவை செய்யக் கூடும். அதுதான் அமெரிக்காவும் பதிலுக்கு இதனை இன்னும் முன்னேற்ற கரமாக செய்ய முயலும். இவை எல்லாவற்றிற்கும் குரங்குகள் அவசியம். ஏனெனில்.. குரங்குகளில் ஆராய்ந்த பின் தான் மனிதரில் அவற்றின் விளைவுகளை சோதிப்பார்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

Drug discovery and development scheme for liver-targeting bridged nucleic  acid antisense oligonucleotides: Molecular Therapy - Nucleic Acids

ஒவ்வொரு மருந்து மற்றும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சில்.. குரங்கு மற்றும் எலிகளின் பங்கு தவிர்க்க முடியாதவை. சீனா பெருமளவில் மருந்துகளை அல்லது உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கும் நோக்கோடு இந்த கொள்வனவை செய்யக் கூடும். அதுதான் அமெரிக்காவும் பதிலுக்கு இதனை இன்னும் முன்னேற்ற கரமாக செய்ய முயலும். இவை எல்லாவற்றிற்கும் குரங்குகள் அவசியம். ஏனெனில்.. குரங்குகளில் ஆராய்ந்த பின் தான் மனிதரில் அவற்றின் விளைவுகளை சோதிப்பார்கள். 

அட இலங்கை குரங்குகளுக்கு இவ்வளவு மதிப்பா என்று தமிழ் வின் தலைப்பை போட போகுது கவனித்து வையுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமக்களை கொன்றொழித்து கொண்டாடியநாடு அதற்காக நாட்டின் வளங்களையெல்லாம் அடகு வைத்த நாடு அவலைப்பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்று சொத்து குவிக்கும் நாடு இதில குரங்குகளுக்கு அழுகிறார்கள். அப்போவெல்லாம் இத்தனை எதிர்ப்பு கேலிச்சித்திரம் வரையவில்லையே அது ஏன்? அவர்கள் குரங்கிலும் தாழ்ந்தவர்களா? அல்லது குரங்கு இவர்கள் இனமா? கடனைக்கொடுத்து, எல்லா வளங்களையும் அன்னியர் சுரண்டிக்கொண்டு போக அதற்கொரு காரணம் தேடி கொடுத்துவிட்டு அந்த நாட்டுக்குப்பைகளை இறக்குமதி செய்துகொண்டு இனவாதம் பேசத்தான் இவர்கள் லாயக்கு. ஏன் குரங்கை வைத்து சீனா செய்யப்போகும் ஆராய்ச்சிகளை இவர்கள் செய்யக்கூடாது? இன்றைக்கு அனுப்பி காசு பாத்துவிட்டு எதிர்காலத்தில் இவைகளை இறக்குமதி செய்ய முடியுமா? தருவார்களா? ரணிலின் தன்னிறைவு கனவென்பது நாட்டிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்து ஒன்றுமில்லாமலாக்குவது. எமக்கொன்றும் பிரச்சனையில்லை. விகாரை கட்டுபவர்கள் கட்டிக்கொண்டே இருக்கட்டும் பின் பிரதிஷ்டை செய்ய சீனபிக்குகள் வராமலா பொய் விடுவார்கள்?            

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

நம்ம அனுமான்களை சீனாவுக்கு குடுக்கிறாங்கள் எண்டு மோடிக்கு சொல்லி விடுங்கப்பா...:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...ஓ.... சீனாவுக்கு அனுப்பப்படும் குரங்குகள் எதிர்காலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் பாலம் போட உதவப்போகின்றன. பெருமையான விடயம். இது இந்தியாவிற்கு தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குடி மக்களையே  நிம்மதியாக வாழ விடாதவர்கள் குரங்குகளையும் சுதந்திரமாக வாழ விடுகிறார்கள் இல்லையே பாவம் வாயில்லா ஜீவன்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம அனுமான்களை சீனாவுக்கு குடுக்கிறாங்கள் எண்டு மோடிக்கு சொல்லி விடுங்கப்பா.

கண்டனம் வருவதற்கு முன், வஞ்சகமில்லாமல் அவர்களுக்கும் இரண்டு அனுப்பிவைக்கப்படுமாம். அதோடு மோடி அமைதியாகிவிடுவார் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் குரங்குகளால் ஏற்படும் அழிவுகளை விட பாராளுமன்றத்திலுள்ள குரங்குகள், யானைகளாற்தானாம் நாடு பேரழிவை சந்திக்கிறதாம். ஆகவே அவர்களை சீனாவுக்கென்ன கேக்கிற நாடுகள் எல்லாவற்றுக்கும் அனுப்பிவிடட்டாம் புண்ணியமாய்ப்போகுமாம் என மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏன் இலங்கை அழியிறது பத்தாது என்று சீனாவோ மற்ற நாடுகளோ அழியிறதுக்கோ? முதலில் அறிவுள்ள எவனாவது வாங்குவானா இந்தக்குரங்குகள? ஒன்று வெளிநாட்டில குடிச்சுப்போட்டு விழுந்தடிச்சதை பாத்துக்கொண்டும், நாடுகளை நாறடிச்சுப்போடுங்கள் இந்தக்குரங்குகள். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து குரங்குகளை ஏற்றுமதி செய்ய திட்டமா- மறுக்கின்றது சீன தூதரகம்

Published By: RAJEEBAN

19 APR, 2023 | 02:42 PM
image

சீனாவிற்கு இலங்கையிலிருந்து குரங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சீன தூதரகம் சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் இதனை நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனா அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது என தெரிவித்துள்ள  சீன தூதரகம் 1988 இல் சீனா தனது வனவிலங்கு சட்டத்தினை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

சீனா எப்போதும் வனவிலங்கு பாதுகாப்பிற்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குகின்றது எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது

https://www.virakesari.lk/article/153223

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகள் ஏற்றுமதிக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை – சீன அரசாங்கம்

குரங்குகள் ஏற்றுமதிக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை – சீன அரசாங்கம்

இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக தனியார் சீன நிறுவனமொன்றுக்கு, ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என்றும், எந்தத் தரப்பிலிருந்தும் அத்தகைய விண்ணப்பத்தை தாம் பெறவில்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒப்பந்த உறுப்பினராகவுள்ள சீனா, 1988 ஆம் ஆண்டின், அதன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான சட்டம் அமுலாக்கத்தில் சிறந்த நாடுகளில் சீனாவும் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1330433

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

சீனாவிற்கு இலங்கையிலிருந்து குரங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை

11 hours ago, ஏராளன் said:

சீனாவில் உள்ள அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சீன தூதரகம் சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் இதனை நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனத்தூதரகம் பொய் சொல்லுகிறதா அல்லது இவர்களின் வழக்கமான புலுடாவா? இப்படி கதை கிளம்பினால் சீனாவுடன் கடுப்பில் இருக்கும் நாடுகள் போட்டியில் குரங்குகளை விற்று காசு பாக்கும் குரங்குபுத்தி.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

ஒரு மாதிரி... சீனா அடையாள அட்டை எடுத்தாச்சு. 🐒
இப்ப நான்.... சீனா சிற்ரிசன். 🐵  🤣

animiertes-winken-bild-0054குட்  பை...  ஸ்ரீலங்கா animiertes-winken-bild-0022.gif

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.