Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN

02 JUN, 2023 | 06:25 AM
image
 

அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜோபைடன் நிலத்தில் வீழ்ந்த சம்பவம்  ஊடகங்களில் கவனத்தை பெற்றுள்ளது.

அமெரிக்க விமானப்படை கல்லூரியின்  பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தவேளை ஜோ பைடன் கால்தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் வயது கூடியவரான( 80) பைடனை  அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டனர் அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை.

பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921பேருடனும் கைகுலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு ஜனாதிபதி நின்றபடி காணப்பட்டார்.

ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அவர் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருந்த பகுதியில் மணல்மூடையொன்று காணப்பட்டது என ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேடைக்கு செல்லும்போது பைடன் மணல்மூடையில் தடுக்கி விழுந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நிலத்தில் விழுந்த பைடனை விமானப்படை அதிகாரிகளும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தூக்கிவிடும் வேளை ஜனாதிபதி மணல்மூடையை நோக்கி கைகளை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

தனது விமானத்திற்கு திரும்பியவேளை ஜனாதிபதி கேள்விகளிற்கு பதில் அளிக்கவில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நல்லநிலையில் காணப்படுகின்றார் அவர் உற்சாகாமான சிரிப்புடன் விமானத்தில் ஏறினார் என வெள்ளை மாளிகையின்  ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

275994.jpg

ஜோபைடன் மீண்டும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வயதாகிவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அவரது வயது குறித்து பெருமளவு வாக்காளர்கள் கரிசனை கொண்டிருப்பதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

முன்னர் பைடன் சைக்கிளில் இருந்து விழுந்ததும் இந்த சம்பவமும் அவரின் வயது குறித்த கரிசனைகளை அதிகரிக்கலாம்.

https://www.virakesari.lk/article/156741

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திடீரென தடுமாறி கீழே விழுந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன் | Us President Joe Biden Stumbled And Fell Down

திடீரென தடுமாறி கீழே விழுந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்

அமெரிக்க விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தவேளை  அதிபர் ஜோ பைடன் கால்தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து  பைடனை அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 விமானப்படை கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921பேருடனும் கைகுலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு ஜனாதிபதி நின்றபடி காணப்பட்டார்.

வெள்ளைமாளிகை வெளியிட்ட தகவல்

ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதிபர்  பைடன் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருந்த பகுதியில் மணல்மூடையொன்று காணப்பட்டது என ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேடைக்கு செல்லும்போது பைடன் மணல்மூடையில் தடுக்கி விழுந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நிலத்தில் விழுந்த பைடனை விமானப்படை அதிகாரிகளும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தூக்கிவிடும் வேளை ஜனாதிபதி மணல்மூடையை நோக்கி கைகளை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

 ஜோபைடன் மீண்டும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வயதாகிவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது வயது குறித்து பெருமளவு வாக்காளர்கள் கரிசனை கொண்டிருப்பதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

https://canadamirror.com/article/us-president-joe-biden-stumbled-and-fell-down-1685682327

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பட்டமளிப்பு விழாவில் திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! | Joe Biden Stumbled Fell Down Graduation Ceremony

 

பட்டமளிப்பு விழாவில் திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! | Joe Biden Stumbled Fell Down Graduation Ceremony

பட்டமளிப்பு விழாவில் திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் Joe Biden திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான அதிபாராக ஜோ பைடன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, விழா மேடையின் அருகே தடுமாறி விழுந்த ஜோ பைடன் கீழே விழுந்தார். பின்னர் துரிதமாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிகள் அவருக்கு உதவினர்.

பின்னர், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார்.

விழாவின் போது சுமார் ஒன்றரை மணித்தியாலம் ஜனாதிபதி ஜோ பைடன் நின்ற நிலையில் 921 பேர்களுக்கு பட்டமளித்துள்ளதுடன் அவர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த சூழலில் வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலில், 

அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார், பாதிப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழா நடந்த மேடையில் மணல் மூட்டைகள் இருந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் அந்த மணல் மூட்டை ஒன்றில் மிதித்து கால் தடுமாறி கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

திடீரென தடுமாறி கீழே விழுந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன் | Us President Joe Biden Stumbled And Fell Down

திடீரென தடுமாறி கீழே விழுந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்

அமெரிக்க விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தவேளை  அதிபர் ஜோ பைடன் கால்தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து  பைடனை அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 விமானப்படை கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921பேருடனும் கைகுலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு ஜனாதிபதி நின்றபடி காணப்பட்டார்.

வெள்ளைமாளிகை வெளியிட்ட தகவல்

ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதிபர்  பைடன் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருந்த பகுதியில் மணல்மூடையொன்று காணப்பட்டது என ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேடைக்கு செல்லும்போது பைடன் மணல்மூடையில் தடுக்கி விழுந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நிலத்தில் விழுந்த பைடனை விமானப்படை அதிகாரிகளும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தூக்கிவிடும் வேளை ஜனாதிபதி மணல்மூடையை நோக்கி கைகளை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

 ஜோபைடன் மீண்டும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வயதாகிவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது வயது குறித்து பெருமளவு வாக்காளர்கள் கரிசனை கொண்டிருப்பதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

https://canadamirror.com/article/us-president-joe-biden-stumbled-and-fell-down-1685682327

அமைதியாக வெள்ளைமாளிகையில். ஓய்வில் இருக்கலாம்   ...வயது போன காலத்தில்  மூன்று...நான்கு மணிநேரத்துக்கு   மேல் வேலை செய்வது… கடினம்..  கமலா அக்காவை    இப்படியான நிகழ்வுகளுக்கு அனுப்பாலம் .....அவா.  கை கொடுக்கும் போது இராணுவ வீரர்கள் மகிழ்ச்சியாகவும்  ஊசாராகவும்.  கம்பீராமகவும்  இருப்பார்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, Kandiah57 said:

அமைதியாக வெள்ளைமாளிகையில். ஓய்வில் இருக்கலாம்   ...வயது போன காலத்தில்  மூன்று...நான்கு மணிநேரத்துக்கு   மேல் வேலை செய்வது… கடினம்..  கமலா அக்காவை    இப்படியான நிகழ்வுகளுக்கு அனுப்பாலம் .....அவா.  கை கொடுக்கும் போது இராணுவ வீரர்கள் மகிழ்ச்சியாகவும்  ஊசாராகவும்.  கம்பீராமகவும்  இருப்பார்கள் 😄

Biden falls at US Air Force Academy graduation ceremony: 'I got  sandbagged!' - ABC News  President Joe Biden trips and falls during graduation ceremony | US News |  Sky News

Biden falls at Air Force Academy graduation ceremony 

Trump reacts to Biden's Air Force commencement fall: 'That's not inspiring'  | Fox News

President Biden falls down walking up steps of Air Force One - YouTube   Biden falls as he climbs up stairs to Air Force One

President Joe Biden, 78, falls up the stairs of Air Force One | Daily Mail  Online

 

Joe Biden falls off bike riding near Delaware beach home

Biden Falls Off Bike During Visit to Rehoboth Beach - The New York Times

Joe Biden falls off bike near Delaware beach home | Daily News

US President Joe Biden takes a fall from his bike while on a morning ride  with the first lady - ABC News Joe Biden Falls Off Bike Near Vacation Home

Video: Biden falls while riding his bike | CNN Politics  Watch: Joe Biden falls off bike while cycling in Delaware  

இவர்... இப்போ விழுந்தது முதல் முறை அல்ல.
விமான படிக்கட்டில் ஏறும் போதும், சைக்கிள் ஓடும் போதும் பலமுறை  விழுந்து...
வீரத் தழும்புகளை... முதுகிலும், மார்பிலும் சுமந்து கொண்டிருப்பவர்.
இந்த வயதில்... எலும்பு முறிந்தால், ஓட்டுறது கஸ்ரம். ஆணி வைத்துத்தான் பூட்ட வேணும்.

வயோதிபர் என்றால்... ஒரு பொல்லை பிடித்து நடக்கலாம். 
பொல்லு பிடித்தால்... கிழவர் என்று சொல்லி விடுவார்கள் என்று கூச்சப் படுகிறார் போலுள்ளது.

வெள்ளை மாளிகையில்... பைடன் என்ற வயோதிபரை வைத்து...  கொடுமைப் படுத்துகிறார்கள்.
நீங்கள் சொன்ன மாதிரி... கமலா அக்காவுக்கு, முடி சூட்டி விடுறது நல்லது போலுள்ளது.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வயசு அப்படி!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

வயசு அப்படி!!

கருணா நிதி,  சம்பந்தன் ஐயா… எல்லாரும்,
தடுமாறி விழுந்து கொண்டா அரசியல் செய்தார்கள்.
இவருக்கு…. வேறை ஏதோ பிரச்சினை இருக்குது என்று நினைக்கின்றேன்.
நல்ல டாக்டரிடம், ஒருக்கால் உடம்பை காட்டுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, தமிழ் சிறி said:

கருணா நிதி,  சம்பந்தன் ஐயா… எல்லாரும்,
தடுமாறி விழுந்து கொண்டா அரசியல் செய்தார்கள்.
இவருக்கு…. வேறை ஏதோ பிரச்சினை இருக்குது என்று நினைக்கின்றேன்.
நல்ல டாக்டரிடம், ஒருக்கால் உடம்பை காட்டுவது நல்லது.

அண்ணா,
கருணாநிதி சம்பந்தன் ஐயா எல்லாரும் நாற்காலில் இருந்து கொண்டே தான் அரசியல் செய்கிறர்கள். ஜோ பைடன் நடந்து திரிகிறார் எல்லோ.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, தமிழ் சிறி said:

கருணா நிதி,  சம்பந்தன் ஐயா… எல்லாரும்,
தடுமாறி விழுந்து கொண்டா அரசியல் செய்தார்கள்.
இவருக்கு…. வேறை ஏதோ பிரச்சினை இருக்குது என்று நினைக்கின்றேன்.
நல்ல டாக்டரிடம், ஒருக்கால் உடம்பை காட்டுவது நல்லது.

கருணாநிதி   சம்பந்தன்.     தங்களாக. நடத்து...சைக்கிள் ஓடிச்சென்று     விமானம் ஏறி....நான் கண்டதில்லை    ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களின்     உதவியுடன் தான்    செய்திருக்கிறார்கள்     ஆனால் அரசியல் முடிவுகள் தன்னிச்சையாக செய்வார்கள்   எவரும் ஏன்.  ?எப்படி.......?போன்ற கேள்விகள் கேட்க முடியாது   பைடன் அப்படியில்லை   எவராதும்.  உதவிகளின்றி   சைக்கிள் ஓடுகிறது   விமானம் ஏறுவது    ..இருந்த இடத்திலிருந்து கை கொடுப்பதில்லை  நடந்து திரிந்து கை கொடுப்பார்   அதிக நேரம் வேலையும்.....மற்றும் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது    பென்டகனுக்கு  கட்டுபட்டு தான் செயல்பட முடியும்    பென்டகனின். முடிவு  பலரும் விவாதித்து  ஆராய்ந்து எடுக்கப்படுவது   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, தமிழ் சிறி said:

கருணா நிதி,  சம்பந்தன் ஐயா… எல்லாரும்,
தடுமாறி விழுந்து கொண்டா அரசியல் செய்தார்கள்.
இவருக்கு…. வேறை ஏதோ பிரச்சினை இருக்குது என்று நினைக்கின்றேன்.
நல்ல டாக்டரிடம், ஒருக்கால் உடம்பை காட்டுவது நல்லது.

கருணாநிதி 2008 முதல் சக்கர நாற்காலி.

சம்பந்தர் இப்பத்தான் கதிரைக்குள்ள சுருண்டுவிட்டார்.

இவர், மேடைக்கு வரும் போதே, ஒடுவது போலவே வருவார். இவர் விழுந்தெழும்ப, அடுத்த கிழவர்..... டொனால்ட் ரசிப்பார்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

...மெரிக்காவிற்கு விழும் காலம்போல..😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

கருணா நிதி,  சம்பந்தன் ஐயா… எல்லாரும்,
தடுமாறி விழுந்து கொண்டா அரசியல் செய்தார்கள்.
இவருக்கு…. வேறை ஏதோ பிரச்சினை இருக்குது என்று நினைக்கின்றேன்.

எழும்பி நடந்தா தானே விழுகிறதுக்கு.

  • Like 1
  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

எழும்பி நடந்தா தானே விழுகிறதுக்கு.

இதைத்தான் நானும் யோசிச்சனான்😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

நிலத்தில் விழுந்த பைடனை விமானப்படை அதிகாரிகளும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தூக்கிவிடும் வேளை ஜனாதிபதி மணல்மூடையை நோக்கி கைகளை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

மண் சாக்கிலை தடக்கி விழாட்டில்.......ராஜ நடையிலை நடந்திருப்பார் எண்டுறியள்? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதியோர்களை கொடுமை படுத்தினால் அமெரிகாவில் என்ன தண்டனை, வாக்கு போட்ட அத்தனை பேரையும் முதியோர் வன் கொடுமை சட்டத்தால் தண்டிக்க வேண்டும்👹

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, உடையார் said:

முதியோர்களை கொடுமை படுத்தினால் அமெரிகாவில் என்ன தண்டனை, வாக்கு போட்ட அத்தனை பேரையும் முதியோர் வன் கொடுமை சட்டத்தால் தண்டிக்க வேண்டும்👹

இதனை PETA வுக்குத்தான் அறிவிக்க வேண்டும்.. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணா,
கருணாநிதி சம்பந்தன் ஐயா எல்லாரும் நாற்காலில் இருந்து கொண்டே தான் அரசியல் செய்கிறர்கள். ஜோ பைடன் நடந்து திரிகிறார் எல்லோ.

Kalaignar Karunanidhi added a new... - Kalaignar Karunanidhi   Kalaignar Karunanidhi added a new... - Kalaignar Karunanidhi

Awards ceremony of Institute of Politics': Sampanthan ...

விளங்க நினைப்பவன்... இவர் ஒரு முறை விழுந்தால் பரவாயில்லை.
ஆனால், இவர் அடிக்கடி விழுவதால்.... உடலில்  வேறு உபாதைகள் இருக்க வேண்டும்.

இவர் கருணாநிதி மாதிரி.. ஒரு சக்கர நாற்காலியில் இருந்து அரசியல் அவருக்கு நல்லது.
சம்பந்தன் ஐயா மாதிரி... இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு நிற்க..
இரண்டு தடியன்களை...  ஒழுங்கு செய்வது நல்லது.

பாவம்... அந்த மனுசனை போட்டு, வருத்துகிறார்கள். 😥

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

கருணாநிதி 2008 முதல் சக்கர நாற்காலி.

சம்பந்தர் இப்பத்தான் கதிரைக்குள்ள சுருண்டுவிட்டார்.

இவர், மேடைக்கு வரும் போதே, ஒடுவது போலவே வருவார். இவர் விழுந்தெழும்ப, அடுத்த கிழவர்..... டொனால்ட் ரசிப்பார்...

Sampanthan given gold award for democracy by Institute of Politics

சம்பந்தன் ஐயாவும்... ஒரு சக்கர நாற்காலி வைத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கால் இடறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - தேர்தலுடன் தொடர்புபடுத்தப்படுவது ஏன்?

கால் இடறி கீழே விழுந்த அதிபர்

பட மூலாதாரம்,சாம் கேப்ரல்

 
படக்குறிப்பு,

கொலராடோவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் கால் இடறி கீழே விழுந்தார்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.

அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே வயது முதிர்ந்த அதிபரான பைடனுக்கு தற்போது 80 வயதாகிறது. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் கீழே விழுந்த போது, அவரது உதவியாளர்கள் அவரைத் தாங்கிப்பிடித்து மேலே எழவைத்தனர். இந்த சம்பவத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

921 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி கை குலுக்கிய அதிபர், இதற்காக சுமார் ஒன்றரை மணிநேரம் நின்றுகொண்டே இருந்தார்.

"அவருக்கு காயங்கள் ஏதுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்," என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

"வியாழக்கிழமையன்று பட்டம் பெற்றவர்களுடன் அவர் கைகளை குலுக்கிக் கொண்டு நின்றிருந்த இடத்தில் ஒரு மணல் நிரப்பப்பட்ட பை வைக்கப்பட்டிருந்தது," என பென் லாபோல்ட் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

வெள்ளை மாளிகை திரும்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், "மணல் பையில் நான் சிக்கிக்கொண்டேன்," என சிரித்தபடியே கூறினார்.

 

வெள்ளை மாளிகையின் செய்தி அறையின் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், மேடை மீது நின்றிருந்த அதிபர், அங்கிருந்த கருப்பு நிற மணல் பையில் கால் பட்டு இடறி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் நடந்த போது பதிவான காட்சிகளில், அதிபர் உரை நிகழ்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த டெலிப்ராம்ப்டர் சாய்ந்துவிடாமல் பிடிப்பதற்காக இருபுறமும் இருந்த மணல் பையில் தவறுதலாக கால் பட்டு இடறி கீழே விழுந்தார். அப்போது விமானப் படை அலுவலர்களும், அதிபரின் ரகசிய பாதுகாப்பு அதிகாரிகளும் அவரைத் தாங்கிப்பிடித்தனர்.

பின்னர் அவர் யாருடைய உதவியுமின்றி அவரது இருக்கைக்கு நடந்து சென்ற காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன. நிகழ்ச்சி முடிந்த பின் அவர் வேகமாக நடந்து சென்றதையும் காணமுடிந்தது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு அலுவலர் மேலும் பேசுகையில், அதிபர் தமது விமானத்துக்குத் திரும்பிய போது செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு அலுவலர் கரைன் ஜீன்-பியாரே, அதிபரின் உடல் நிலை "நன்றாக இருப்பதாகவும்" விமானத்தில் ஏறிய போது அனைவரையும் பார்த்து ஒரு "பெரிய புன்னகையுடன்" விமானத்தில் ஏறியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட அவரது வயது தடையாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த தேர்தல் நடைபெறும் போது அவருக்கு 82 வயதாகி இருக்கும் என்பதால், இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாலும், அதிபர் பதவியில் அவர் மீண்டும் தொடர முடியுமா என்பது குறித்து அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்களில் பெரும்பாலான பொதுமக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

ஏற்கெனவே ஒருமுறை தனது சைக்கிளில் இருந்து விழுந்த அதிபர், மற்றொருமுறை விமானத்தில் ஏற முயன்ற போது கீழே விழுந்த சம்பவமும் தற்போதைய சம்பவத்துடன் சேர்ந்து பொதுமக்களின் கவலையை அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பைடனை எதிர்த்துப் போட்டியிடத் தயாராகி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அயோவாவில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், பைடன் கீழே விழுந்தது குறித்து அப்போது கருத்து தெரிவித்தார். அப்போது, பைடன் இப்படி சிறுபிள்ளையைப் போல் கீழே விழுந்திருந்தாலும், "அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்காது என நான் நம்புகிறேன்," என்றார். 76 வயதான டிரம்ப், பைடனின் வயது குறித்து அடிக்கடி கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டில் ஒரு மேடையில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப், அந்த மேடையில் மிகவும் கவனமாக நடந்து சென்ற செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் விதமாகப் பேசிய அவர், "கால் விரல் இடறினால் கூட கீழே விழும் ஆபத்து இருப்பதால் இது போன்ற நிலையில் ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்," என்றார்.

அந்த சம்பவத்தின் போது, நியூயார்க் நரின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ கல்வி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சாய்வுப் பாதை வழுக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி தமது உடல் நிலை குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் பொய்யானவை என்றும் கூறியிருந்தார்.

ஃப்ளோரிடா ஆளுனரும், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடத் தயாராகும் மற்றொரு நபருமான ரோன் டேசான்டிஸ், நியூஹாம்ப்ஷையரில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்த போது, பைடன் கீழே விழுந்தது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது,"இந்த சம்பவத்தில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்,

டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும், "ஜோ பைடனின் தவறான கொள்கைகளால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் அமெரிக்காவும் விரைவில் அதிலிருந்து மீண்டு வர வாழ்த்துகிறேன்," என்றார்.

அதிபர் ஜோ பைடன் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் உடல் பரிசோதனை செய்துகொண்டார்.

அப்போது வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓ'கான்னர், "அதிபர் தமது பொறுப்புக்களை நிறைவேற்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் தமது வேலைகள் முழுவதையும் தாமாகவே செய்துகொள்கிறார். எந்த ஒரு வேலையையும் அவர் செய்யாமல் விடுவதில்லை," என தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

முதுகு தண்டுவடம் மற்றும் கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அதிபர் ஜோ பைடன் நடக்கும் போது சிறிது வித்தியாசமாகத் தெரிகிறது என்றும் இருப்பினும் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் போது எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறார் என்றும் டாக்டர் ஓ' கான்னன் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது கடந்த 2012ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மாடிப்படிகளில் ஏறிய போது இப்படி கால் இடறிய சம்பவம் நடந்தது. இதே போல் கடந்த 1975ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் விமானப் படை படிக்கட்டில் இருந்து கால் இடறி கீழே விழுந்தார்.

https://www.bbc.com/tamil/articles/clm52nl8g1eo

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, குமாரசாமி said:

மண் சாக்கிலை தடக்கி விழாட்டில்.......ராஜ நடையிலை நடந்திருப்பார் எண்டுறியள்? :rolling_on_the_floor_laughing:

 

Biden's falls are a serious issue that may hurt Dems — and even the nation

         👆                                             animiertes-augen-bild-0036.gif

மண் சாக்கு... ஒன்று  மேடையில்  இருந்தது,  கண்ணுக்கு  தெரியவில்லை என்றால்,
கண்ணிலும் பார்வைக்  கோளாறு உள்ளது. 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யனின் ட்ரோன் மண் சாக்கை ஒருவருக்கும் தெரியாமல் திடீரென வைத்திருக்கலாம். இது ரஷ்யாவோடு ட்ரம்ப் செய்த சதி  வேலை மாதிரித்தான் தெரிகின்றது!

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுவது எழும்புவதற்காகத்தான்........அதனால் விழுவது நல்லது.......!  😂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, கிருபன் said:

ரஷ்யனின் ட்ரோன் மண் சாக்கை ஒருவருக்கும் தெரியாமல் திடீரென வைத்திருக்கலாம். இது ரஷ்யாவோடு ட்ரம்ப் செய்த சதி  வேலை மாதிரித்தான் தெரிகின்றது!

 

வாழ்க  கோசத்துடன்  தான் இது முடியும்  என்று எதிர்பார்த்தேன்?😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

...மெரிக்காவிற்கு விழும் காலம்போல..😁

உங்களுக்கு அமெரிக்க விசா ஏதாவது நிராகரிக்கப்பட்டதா??

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, suvy said:

விழுவது எழும்புவதற்காகத்தான்........அதனால் விழுவது நல்லது.......!  😂 

இதன் மறுதலையும்  உண்மையா. ??. சுவியணணை....



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.