Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு!

புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு!

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது.

அதற்கமைவாக எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்து அவருக்கு மரணதண்டனை உத்தரவினை வழங்கினார்.

வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ்மக்கள் விடுதலை கழகத்தின்(புளட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இன்றையதினம் தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1334014

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாட்டில் அரசு கைவைத்தால் எதுவும் தலைகீழாக மாறும் ( தீர்ப்பும்)

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கை நாட்டில் அரசு கைவைத்தால் எதுவும் தலைகீழாக மாறும் ( தீர்ப்பும்)

மரண தண்டனை விதிக்கப் பட்டவர் தமிழன் என்பதால்,
அரசு... பெரிதாக கண்டு கொள்ளாது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ்மக்கள் விடுதலை கழகத்தின்(புளட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புளட் வன்முறையில் ஈடுபட்டதா?

நம்பவே முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

புளட் வன்முறையில் ஈடுபட்டதா?

நம்பவே முடியவில்லை.

இராணுவத்தை தவிர.... மற்றவர்களை சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கை நாட்டில் அரசு கைவைத்தால் எதுவும் தலைகீழாக மாறும் ( தீர்ப்பும்)

கொலை செய்யப்படடவர் எந்த இனத்தவர், கொலை செய்தவர் எந்த இனத்தவர் , தீர்ப்பு வழங்கியவர் எந்த இனத்தவர் என்பதை பொறுத்து முடிவுகள் மாறலாம். இங்கு அதட்கான சந்தர்ப்பமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Cruso said:

கொலை செய்யப்படடவர் எந்த இனத்தவர், கொலை செய்தவர் எந்த இனத்தவர் , தீர்ப்பு வழங்கியவர் எந்த இனத்தவர் என்பதை பொறுத்து முடிவுகள் மாறலாம். இங்கு அதட்கான சந்தர்ப்பமில்லை.

ஸ்ரீலங்காவில், சட்டத்தரணிக்கு படித்து... 
அப்புக்காத்து வேலை பார்ப்பதெல்லாம் வீண் வேலை என்கிறீர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

கொலை செய்யப்படடவர் எந்த இனத்தவர், கொலை செய்தவர் எந்த இனத்தவர் , தீர்ப்பு வழங்கியவர் எந்த இனத்தவர் என்பதை பொறுத்து முடிவுகள் மாறலாம். இங்கு அதட்கான சந்தர்ப்பமில்லை.

ஆக மொத்தத்தில் ஒரு தமிழர் இறந்தால் அல்லது இல்லாமல் போனால் அரசுக்கு நல்லது

4 hours ago, தமிழ் சிறி said:

மரண தண்டனை விதிக்கப் பட்டவர் தமிழன் என்பதால்,
அரசு... பெரிதாக கண்டு கொள்ளாது என நினைக்கின்றேன்.

ஆக மொத்தத்தில் ஒரு தமிழர் இறந்தால் அல்லது இல்லாமல் போனால் அரசுக்கு நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் புளாட் செய்த அநியாயங்கள் அளவுக்கு இலங்கை ராணுவம் செய்தது கிடையாது.

அப்பொழுது யாரும் வெளிநாடுகளில் இருந்து வவுனியாவுக்கு வரவே கூடாது. வந்தால் கடத்தப் பட்டு பணம் பறிக்கப்படும்

வீட்டில் வடிவான பெட்டைகள் இருந்தால் கடத்திக் கொண்டு போய் கலியாணம் செய்து விடுவார்கள் இந்தக் கபோதிகள்.

அலவாங்கு தாஸ், மாணிக்கதாஸ், கண்ணாடிக் குமார் என்று அன்று வவுனியாவை கதிகலங்க வைத்துக்கொண்டு இருந்த அனைவரையும் அவர்கள் எப்படி சாக வேண்டுமோ அப்படி ஒரு சாவைக் கொடுத்து அனுப்பி வைத்தவர்கள் புலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை, புளட்காரர் என்பதற்காகச் சொல்லவில்லை, சரியான தீர்ப்பு இது. பயங்கரவாதிகள் காட்டுமிராண்டிகள் போன்றோருக்கு மரண தண்டனையை விட மேலான பரிசு எதுவுமில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பகிடி said:

வவுனியாவில் புளாட் செய்த அநியாயங்கள் அளவுக்கு இலங்கை ராணுவம் செய்தது கிடையாது.

அப்பொழுது யாரும் வெளிநாடுகளில் இருந்து வவுனியாவுக்கு வரவே கூடாது. வந்தால் கடத்தப் பட்டு பணம் பறிக்கப்படும்

இன விடுதலைக்கான போராட்ட காலங்களிலும் புளொட் அமைப்பினர் வவுனியாவில் செய்த அட்டூளியங்கள் சொல்லிலடங்காது. இவர்களை தட்டி கேட்டவர்களை தான் சகோதர படுகொலை செய்தவர்கள் என பட்டியலிட்டு......

இன்று ஒட்டு மொத்த தமிழினமும் நடுத்தெருவில் நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்காவில், சட்டத்தரணிக்கு படித்து... 
அப்புக்காத்து வேலை பார்ப்பதெல்லாம் வீண் வேலை என்கிறீர்கள். 😂

அரசியல், இனவாத தலையீடுகள் இருக்கும் வரைக்கும் இதே நிலைமைதான். வீண் என்று சொல்ல முடியாது. சீவிப்பதட்காக செய்யலாம். அப்படி இல்லாவிட்ட்தால் இந்த நாட்டில் இருக்கவே முடியாத நிலைமை எட்டப்படும். இதையும் தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது.

20 hours ago, பகிடி said:

அலவாங்கு தாஸ், மாணிக்கதாஸ், கண்ணாடிக் குமார் என்று அன்று வவுனியாவை கதிகலங்க வைத்துக்கொண்டு இருந்த அனைவரையும் அவர்கள் எப்படி சாக வேண்டுமோ அப்படி ஒரு சாவைக் கொடுத்து அனுப்பி வைத்தவர்கள் புலிகள்.

இந்த படுகேவலமான அயோக்கியர்களை புனிதர்களாக சித்திகரித்து ஒவ்வொரு ஆண்டும் இவர்களை புனிதப்படுத்தி அஞ்சலி செலுத்தும் இதே போன்ற செயல்களை செய்து விட்டு வெளிநாடு வந்த  ஒரு கூட்டம் முக நூலில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பதிவுகள் போட்டு இயங்கிக் கொண்டு இருக்கும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுஞ்செழியன்  போன்றவர்களால்  மட்டுமே இவ்வாறான தண்டனைகளை வழங்கமுடிகிறது

நன்றி  ஐயா

யாரையெல்லாம் மாவீரர்  பட்டியலில்  சேர்க்கணும்  என்று அலைகிறார்களோ

அவர்களை  மேலும்  இனம்  காட்டுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு மரணதண்டனை தீர்ப்பளித்தார் நீதிபதி இளஞ்செழியன் !

Published By: VISHNU

08 JUN, 2023 | 03:14 PM
image
 
வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். 

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட  எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.  

அந்தவகையில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது.

அந்தவகையில்  எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய அவருக்கு மரணதண்டை வழங்கப்பட்டிருந்தது.

வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ்மக்கள் விடுதலை கழகத்தின்(புளட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்திருந்தது. இன்றையதினம் தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/157250

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் சுட்டுக் கொலை – குற்றவாளிக்கு 14 வருடங்களின் பின்னர் மரணதண்டனை !

law-2.jpg
வவுனியாவில் வைத்திய நிபுணர், கலாநிதி மொஹமட் சுல்தான் மீரா மொஹைதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று(08) மரணதண்டனை விதித்துள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலை மகப்பேறியல் நிபுணர், வைத்திய கலாநிதி மொஹமட் சுல்தான் மீரா மொஹைதீன் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி வவுனியா தனியார் வைத்தியசாலையொன்றின் வௌிவாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 4 வெற்று துப்பாக்கி ரவைகள் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டன. வவுனியா – மரக்காளம் பளையில் வைத்து இராணுவ சிப்பாய் ஒருவரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவருடைய உடைமையில் இருந்து கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டது.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 4 துப்பாக்கி ரவைகளும் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கிக்கு உரியது என இரசாயன பகுப்பாய்வாளர் இன்று(08) வவுனியா மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த மரணமானது துப்பாக்கிச் சூட்டினால் இடம்பெற்றுள்ளமை பிரேத பரிசோதனை ஊடாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, பிரதிவாதியை கொலை வழக்கின் குற்றவாளியென நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இதுவரை பிணையில் இருந்த குறித்த சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில், அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/257428

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இந்த படுகேவலமான அயோக்கியர்களை புனிதர்களாக சித்திகரித்து ஒவ்வொரு ஆண்டும் இவர்களை புனிதப்படுத்தி அஞ்சலி செலுத்தும் இதே போன்ற செயல்களை செய்து விட்டு வெளிநாடு வந்த  ஒரு கூட்டம் முக நூலில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பதிவுகள் போட்டு இயங்கிக் கொண்டு இருக்கும்.
 
இவர்களெல்லாம் ஒட்டுக்குழுக்குழுக்குள் அடக்கமாட்டார்களா ஒரு வேளை இணைந்து அரசியல் செய்வதால் இவர்களை அந்த லிஸ்டில்  சேர்க்கமாட்டார்களோ கட்டுரையாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் 
இதே குழுக்களால்  செய்த  அத்தனை கொலைகளும் குற்றங்களும் வெள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது 

கூட்டணிக்க்குள்ள சேர்ந்து கும்மி தட்டுறாங்கள் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

இந்த புளட் தேச விரோதக் கும்பல் மணலாறில அமைக்கப்பட்டிருந்த சிங்கள குடியேற்றங்களுக்கு சிங்களப் படைத்துறை மற்றும் சிங்களக் காவல்துறையோடு சேர்ந்து பாதுகாப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் சிங்களவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். (31/10/1992, உதயன்)

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மரணதண்டனையை சந்திரிகா நீக்கியதா ஞாபகம் 
இப்போதும் நடைமுறையில் இருக்கிறதா ?

இவருக்கு ஆயுதம் பயிற்சி மற்றும் அடைக்கலம் கொடுத்த புளட் அமைப்பிற்கு 
ஏன் விசாரணை இல்லை ? 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Maruthankerny said:

இலங்கையில் மரணதண்டனையை சந்திரிகா நீக்கியதா ஞாபகம் 
இப்போதும் நடைமுறையில் இருக்கிறதா ?

இவருக்கு ஆயுதம் பயிற்சி மற்றும் அடைக்கலம் கொடுத்த புளட் அமைப்பிற்கு 
ஏன் விசாரணை இல்லை ? 

சோறு சாப்பிட கொடுக்கப் பட்டது பயிற்சிக்கெல்லாம் விசாரணை தேவையில்லை என்று விட்டிருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

சோறு சாப்பிட கொடுக்கப் பட்டது பயிற்சிக்கெல்லாம் விசாரணை தேவையில்லை என்று விட்டிருக்கலாம் 

நடந்தது கொலைவழக்கு 
பாவித்த ஆயுதம் வழங்கியவருக்கும் 
அந்த கொலையில் உடன்பாடு இருக்க வேண்டும் அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

நடந்தது கொலைவழக்கு 
பாவித்த ஆயுதம் வழங்கியவருக்கும் 
அந்த கொலையில் உடன்பாடு இருக்க வேண்டும் அல்லவா? 

நான் சும்மா பகிடிக்காக பதிந்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நன்னிச் சோழன் said:

இந்த புளட் தேச விரோதக் கும்பல் மணலாறில அமைக்கப்பட்டிருந்த சிங்கள குடியேற்றங்களுக்கு சிங்களப் படைத்துறை மற்றும் சிங்களக் காவல்துறையோடு சேர்ந்து பாதுகாப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் சிங்களவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். (31/10/1992, உதயன்)

வவுனியா எல்லைக் கிராமங்களில் புளொட் மக்களை குடியேற்றியதனால்தான் இன்று வவுனியா நகரமாவது எமது தமிழர்களின் கைகளில் உள்ளது. புளொட்டில் மாணிக்கதாசன் குழுவினர் பாரிய அட்டூழியங்களை செய்ததனால்தான் புளொட்டுக்கு கெட்ட பெயர் வந்தது. அதனை சித்தார்த்தன் தரப்பினரே பகிரங்கமாக ஒப்புக் கொண்ட விடயம்.

சந்திரிகா, குமார் பொன்னம்பலம், ஜே.வி.பி. தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு கொழும்பில் புளொட் பாதுகாப்பு வழங்கிய வரலாறு எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. அதுதான் உண்மை. குமார் பொன்னம்பலத்துக்கு புளொட் வழங்கிய பாதுகாப்பை பின்னர் மீளப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் சிறிது காலத்திலேயே அவர் கொல்லப்பட்டு விட்டார்.

குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டது கூட அரசியல் படுகொலை அல்ல. இதனை அரசியல் மட்டத் தொடர்புகளில் இருப்பவர்கள் பலருக்கே நன்கு தெரியும். 

அடுத்து இந்த மருத்துவர் படுகொலை தொடர்பாக நீதிபதி நெடுஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் பல விவாதங்களை முன்வைக்கின்றீர்கள். இந்த மருத்துவர் எமது தமிழ்ப் பெண்களுக்கு செய்த கொடுமைகளை தயவு செய்து நேரம் ஒதுக்கி வவுனியாவில் உள்ள மக்களிடம் அப்பகுதி காலகட்டங்களில் வாழ்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இங்கே கொலைகளை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அந்த தீர்ப்பு கூட தவறான நபருக்கே வழங்கப்பட்டுள்ளது. எய்தவன் இருக்க அம்பை நொந்த கதைதான். விடுதலைப் புலிகளுடன் இணைந்து புளொட்டின் ஒரு பகுதி செய்த கொலைதான் இந்த கொலை என்று அங்குள்ள ஊடக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 

நீதிபதி உண்மையான கொலையாளிக்கு தீர்ப்பினை வழங்கினால் நீங்கள் பாராட்டலாம். தவறான நபருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று அங்குள்ள ஊடக நண்பர்கள் தெரிவிக்கின்றனர். நெடுஞ்செழியன் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு முதல் அமைச்சர் கனவில் இருக்கின்றார் என்றும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பல தரப்பினரின் ஆதரவினை திரட்டும் ஒரு நோக்கிலேயே இந்த தீர்ப்பினை அவர் வழங்கி இருப்பதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, nirmalan said:

புளொட்டில் மாணிக்கதாசன் குழுவினர் பாரிய அட்டூழியங்களை செய்ததனால்தான் புளொட்டுக்கு கெட்ட பெயர் வந்தது. அதனை சித்தார்த்தன் தரப்பினரே பகிரங்கமாக ஒப்புக் கொண்ட விடயம்.

ஓ, அப்ப மாணிக்கதாசன் இல்லையென்டால் உந்த தேசவிரோதக் கொலைக் கும்பல் நல்லவர்கள்... 

மாணிக்கதாசனின் கொலையுடன் தொடர்புடைய சிறிலங்கா அரசுக்கு எதிராக இயங்கத்தொடங்கி பின்னர் காட்டுக்குள் சென்று மறைந்திருந்த புளட் உறுப்பினர்கள் 127 பேரை கைதுசெய்யச் சொல்லி சித்தார்த்தன் சிங்கள அரசின் உதவியை நாடியிருந்தாரே (உதயன் 1998), அந்தக் கொலைகார சித்தார்தனை ஏதோ பெரிய ஆள் போல எழுதுகிறீர்கள். அதாவது வன்புணர்ச்சிப் புகழ் மாணிக்கதாசனால் தான் புளட்டிற்கு கெட்டப் பெயர் போன்றும் இல்லையென்றால் அந்த கொலைக்கும்பல் புனிதர்கள் என்ட மாதிரி எழுதிரியள்?  (சித்த. செய்த கொலைகளுள் குறிப்பிடத்தக்கது மாமனிதர் சிவராமினுடையது ஆகும்!)

ஒரு சொந்த இனப் பெண்களை வேட்டையாடிய கும்பலை புனித்தப்படுத்த எப்படியெல்லாம் தாவுகிறீர்கள்....

"எந்தெந்த ஆட்கள் பண்ணுற கூத்திது?"🤪

3 hours ago, nirmalan said:

அடுத்து இந்த மருத்துவர் படுகொலை தொடர்பாக நீதிபதி நெடுஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் பல விவாதங்களை முன்வைக்கின்றீர்கள். இந்த மருத்துவர் எமது தமிழ்ப் பெண்களுக்கு செய்த கொடுமைகளை தயவு செய்து நேரம் ஒதுக்கி வவுனியாவில் உள்ள மக்களிடம் அப்பகுதி காலகட்டங்களில் வாழ்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஓ, அதாவது புளட்டின் காவாலித்தனத்திற்கு போட்டியாக ஒருவன் வந்துவிட்டான் என்பதற்காக அவனை போட்டிருக்கிறார்கள், நீங்கள் வெள்ளையடிக்க முற்படுபவர்கள்! (இலங்கை முசிலீம் என்டபடியாலை நீங்கள் சொல்வது சிலவேளை மெய்யாக இருக்கலாம். அதற்காக புளட்டின் காவாலித்தனத்திற்கு முன்னால் உதெல்லாம் ஈடாகாது)

3 hours ago, nirmalan said:

நீதிபதி உண்மையான கொலையாளிக்கு தீர்ப்பினை வழங்கினால் நீங்கள் பாராட்டலாம். தவறான நபருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று அங்குள்ள ஊடக நண்பர்கள் தெரிவிக்கின்றனர். நெடுஞ்செழியன் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு முதல் அமைச்சர் கனவில் இருக்கின்றார் என்றும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பல தரப்பினரின் ஆதரவினை திரட்டும் ஒரு நோக்கிலேயே இந்த தீர்ப்பினை அவர் வழங்கி இருப்பதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஞ்சபாருங்கோவன் விளையாட்டை, நீதிபதி காவாலி கொலைகும்பலைச் சேர்ந்த ஒருவனுக்கு சாவொறுப்பு வழங்கிவிட்டதால் உடனே நீதிபதி மீதே குற்றச்சாட்டு!!

(ஒருவேளை மதிப்பிற்குரிய நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் அரசியலிற்கு வந்தால் அப்போது இக்கருத்தை மெய்யென ஏற்பேன். அதுவரை இதையொரு புளட்டிற்கு வெள்ளையடிப்போனின் காழ்ப்புணர்ச்சிக் குற்றச்சாட்டாகவே நான் தனிப்பட்ட முறையில் கருத்திலெடுப்பேன்.)

3 hours ago, nirmalan said:

வவுனியா எல்லைக் கிராமங்களில் புளொட் மக்களை குடியேற்றியதனால்தான் இன்று வவுனியா நகரமாவது எமது தமிழர்களின் கைகளில் உள்ளது.

உதையே தேஞ்சு போன ரேப் ரெக்கோர்டர் மாதிரி திரும்பத் திரும்ப எழுதி புளட்டை ஏதோ கோவில் கட்டின ஆக்கள் மட்டத்திற்கு புனிதப்படுத்தி வெள்ளையடிக்க முயலவேண்டாம். 

உது எந்தளவு வீரியமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் உவ்வாறு ஆகக் குறைந்தது ஒரு தடவையேனும் நடைபெற்றுள்ளது. ஆசிகுளம் கிராம சேகவகர் பிரிவிலுள்ள (வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்குக் கோட்டத்திலுள்ள தமிழீழ-சிறிலங்கா எல்லையிலுள்ள கிராம சேவகர் பிரிவு) சிதம்பரபுரத்தில் இவ்வாறு நடைந்தேறியுள்ளது. ஆனால் அது நடந்தது 1984 ஆம் ஆண்டு😂

அதற்காக உது 1985இற்குப் பின்னர் (சில வேளை முன்னருமெனலாம்) வவுனியாவில் புளட் செய்த காவாலித்தனங்கள், படுகொலைகள், காட்டிக்கொடுப்புகளையெல்லாம் புனிதமாக்கி விடாது. கொலைக்கும்பல் கொலைக்காரரே.
 
Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nirmalan said:

வவுனியா எல்லைக் கிராமங்களில் புளொட் மக்களை குடியேற்றியதனால்தான் இன்று வவுனியா நகரமாவது எமது தமிழர்களின் கைகளில் உள்ளது. புளொட்டில் மாணிக்கதாசன் குழுவினர் பாரிய அட்டூழியங்களை செய்ததனால்தான் புளொட்டுக்கு கெட்ட பெயர் வந்தது. அதனை சித்தார்த்தன் தரப்பினரே பகிரங்கமாக ஒப்புக் கொண்ட விடயம்.

சந்திரிகா, குமார் பொன்னம்பலம், ஜே.வி.பி. தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு கொழும்பில் புளொட் பாதுகாப்பு வழங்கிய வரலாறு எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. அதுதான் உண்மை. குமார் பொன்னம்பலத்துக்கு புளொட் வழங்கிய பாதுகாப்பை பின்னர் மீளப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் சிறிது காலத்திலேயே அவர் கொல்லப்பட்டு விட்டார்.

குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டது கூட அரசியல் படுகொலை அல்ல. இதனை அரசியல் மட்டத் தொடர்புகளில் இருப்பவர்கள் பலருக்கே நன்கு தெரியும். 

அடுத்து இந்த மருத்துவர் படுகொலை தொடர்பாக நீதிபதி நெடுஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் பல விவாதங்களை முன்வைக்கின்றீர்கள். இந்த மருத்துவர் எமது தமிழ்ப் பெண்களுக்கு செய்த கொடுமைகளை தயவு செய்து நேரம் ஒதுக்கி வவுனியாவில் உள்ள மக்களிடம் அப்பகுதி காலகட்டங்களில் வாழ்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இங்கே கொலைகளை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அந்த தீர்ப்பு கூட தவறான நபருக்கே வழங்கப்பட்டுள்ளது. எய்தவன் இருக்க அம்பை நொந்த கதைதான். விடுதலைப் புலிகளுடன் இணைந்து புளொட்டின் ஒரு பகுதி செய்த கொலைதான் இந்த கொலை என்று அங்குள்ள ஊடக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 

நீதிபதி உண்மையான கொலையாளிக்கு தீர்ப்பினை வழங்கினால் நீங்கள் பாராட்டலாம். தவறான நபருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று அங்குள்ள ஊடக நண்பர்கள் தெரிவிக்கின்றனர். நெடுஞ்செழியன் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு முதல் அமைச்சர் கனவில் இருக்கின்றார் என்றும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பல தரப்பினரின் ஆதரவினை திரட்டும் ஒரு நோக்கிலேயே இந்த தீர்ப்பினை அவர் வழங்கி இருப்பதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்மலன், என்ன சொல்ல முனைகிறீர்கள்? ஒரு காலத்தில் (கொல்லப் பட்ட காலத்தில் அல்ல) இலங்கையின் வடக்கில்  ஒரேயொரு மகப்பேற்று மருத்துவராக இருந்த மொஹிதீனைக் கொன்றதில் புலிகளுக்கு தொடர்பென்கிறீர்களா? மொஹிதீன் ஒரு கொதி பிடித்த மருத்துவர், அவ்வளவே. ஆனால், கடோற்கஜன் போன்றோர் வவுனியா மகப்பேற்று வார்ட்டிற்கு நியமிக்கப் படும் வரை வடக்கில் ஏராளமான தாய்மாருக்கு அவர் தான் மகப்பேறு பார்க்கக் கிடைத்த ஒருவராக இருந்தார். என்ன அநியாயம் செய்தார் என்று புலிகள் கொல்ல வேண்டி வந்ததாம் என்பதையும் சொல்லலாமே?

மொஹிதீனைப் புளொட் கொன்றது அவர் கப்பம் வழங்க மறுத்தமையால். கற்குழி வீதியில் முன்னாள்  பா.உ, மருத்துவர் சிவமோகன் ஒரு பெரிய தனியார் மருத்துவ மனையை 2003 இலிருந்து நடத்தி வருகிறார். புளொட்டிற்கு கப்பம் கட்டாமல் அவர் இதைச் செய்திருக்க இயலாது. மொஹிதீனின் மனைவியின் உறவினர்கள் இலங்கை இராணுவத்தில் இருக்கிறார்கள். இந்தத் துணிவில் அவர் புளொட் கேட்ட இலட்சக் கணக்கான கப்பத்தைக் கொடுக்க மறுத்தமை தான் அவர் கொல்லப் படக் காரணம். இந்தக் கொலையோடு தான் வவுனியாவில் புளொட்டை இலங்கை இராணுவமே அடித்து விரட்டியது. கோவில் குளம் கிளீனாகியது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.