Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாழ்ப்பாண தமிழர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாழ்ப்பாண தமிழர்!

 
image-227.png

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழர் தர்மன் சண்முகரத்தினம்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்! | Presidential Election Dharman Shanmugaratnam

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார்.

image-228.png

அதோடு அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS), GIC இன் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் பதவியில் அவர் ஆற்றி வரும் பிற பொறுப்புகளில் இருந்து விலகுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

https://tamilnews.com/2023/06/09/jaffna-tamil-to-compete-in-singapore-presidential-election/

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன யாழ்ப்பாணத்தமிழர்????

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

அதென்ன யாழ்ப்பாணத்தமிழர்????

அதான.. ஈழத்தமிழர் எண்டு சொல்லலாம் இல்லாட்டி இலங்கைத்தமிழர் எண்டு சொல்லலாம்.. முஸ்லீம்களும் சிங்களவர்களும் வடகிழக்கு இணையவிடமாட்டம் எண்டு நிக்கிறார்கள்.. அவர்களுக்கு அந்த சிரமம் ஒண்டும் தேவை இல்லை.. யாழ்ப்பாணியே அதை இணையவிடமாட்டான்.. வடகிழக்கை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்களையே சாதிபாத்துதான் இணைப்பான்.. இதில ஒற்றுமை கிலோ எண்ணவிலை எண்டு தூர நிண்டு எங்களமாதிரி ஆக்கள் கேக்கவேண்டியதுதான்.. வேறு வழி இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதான.. ஈழத்தமிழர் எண்டு சொல்லலாம் இல்லாட்டி இலங்கைத்தமிழர் எண்டு சொல்லலாம்.. முஸ்லீம்களும் சிங்களவர்களும் வடகிழக்கு இணையவிடமாட்டம் எண்டு நிக்கிறார்கள்.. அவர்களுக்கு அந்த சிரமம் ஒண்டும் தேவை இல்லை.. யாழ்ப்பாணியே அதை இணையவிடமாட்டான்.. வடகிழக்கை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்களையே சாதிபாத்துதான் இணைப்பான்.. இதில ஒற்றுமை கிலோ எண்ணவிலை எண்டு தூர நிண்டு எங்களமாதிரி ஆக்கள் கேக்கவேண்டியதுதான்.. வேறு வழி இல்லை..

 

தமிழர்கள்

ஒரு  தலைமையின்  கீழ்

ஒரு கொடியின் கீழ்

ஒரு  இனமாக உருப்பட வாய்ப்பே இல்லை

பிள்ளைகளின் வாழ்வையாவது ஒளி  மயமாக்குங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தனிநபர்களின் கடின உழைப்பிற்கும், விடா முயற்சிக்கும் கிடைக்கும் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் உரிமை கொண்டாடும் இந்தியர்களின் பழக்கம் எம்மவர்களுக்கும் வந்துவிட்டது வெட்கக்கேடு. 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

அதென்ன யாழ்ப்பாணத்தமிழர்????

அவருக்குத் தெரியுமே, ஆள் உரும்பராய் எண்டு?

இப்படித் தான் அனந்தகிருஸ்ணன் எண்டு மலேசிய பெரும் தனவந்தர். யாழ் கந்தர்மடம், குமாரசாமி வீதீல இருந்து போன இந்த தலைமுறைக்காரர்.

எந்த நாட்டில் முன்னேறி வந்தார்களோ அதுக்கு உண்மையா இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அவருக்கு தமிழ் தெரியுமோ

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

முதலில் அவருக்கு தமிழ் தெரியுமோ

சிங்கப்பூரில் தமிழுக்கு தனி  மதிப்புண்டு

பற்றும்  உண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலுமகேந்திராவை மட்டக்களப்பு தமிழர் என்றேஅழைப்பர். அவரும் அதையே  விரும்பினார்.

முன்னர் யாழ்ப்பாண தமிழர் இராசரத்தினம் என்பவர்தான்  சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர்.

அவர்கள்  இவர்கள் எல்லோரும்  தமிழர்கள் என சந்தோசப்படுவதுடன் நிறுத்திக்கணும்.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, சுவைப்பிரியன் said:

முதலில் அவருக்கு தமிழ் தெரியுமோ

இப்பவெல்லாம் தமிழனே இல்லாத தமிழே ஒழுங்காய் தெரியாதவர்கள் தான் தங்களை சுத்த தமிழன் என்கிறார்கள்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவருக்குத் தெரியுமே, ஆள் உரும்பராய் எண்டு?

இப்படித் தான் அனந்தகிருஸ்ணன் எண்டு மலேசிய பெரும் தனவந்தர். யாழ் கந்தர்மடம், குமாரசாமி வீதீல இருந்து போன இந்த தலைமுறைக்காரர்.

எந்த நாட்டில் முன்னேறி வந்தார்களோ அதுக்கு உண்மையா இருப்பர்.

போன வருடம் பெறாமகளின் திருமணத்திற்கு மலேசியா சென்றிருந்த போது அங்கு N.K. Nathan (கோலாலம்பூரில் உள்ள இரட்டை கோபுரத்தை கட்டியவர்) வந்து இருந்தார். சாதாரணமாக வந்து அனைவருடனும் சேர்ந்து ஆடி மேடையில் தனது குரலில் பாடி இறுதிவரை இருந்தார். நம்மவர்கள் தான் தூக்கி பந்தா காட்டுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2023 at 15:40, Nathamuni said:

எந்த நாட்டில் முன்னேறி வந்தார்களோ அதுக்கு உண்மையா இருப்பர்.

மிகவும் நியாயமான செயல்.

சம்பந்தமே இல்லாத நாட்டுக்காக பிரசாரம் செய்வது தான் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2023 at 16:22, குமாரசாமி said:

அவர்கள்  இவர்கள் எல்லோரும்  தமிழர்கள் என சந்தோசப்படுவதுடன் நிறுத்திக்கணும்.:rolling_on_the_floor_laughing:

இது ஒரு சரியான பார்வை.......ஈழத்தமிழன். என்றே   இலங்கை தமிழன் என்றே    சொன்னால்     உடனடியாக அடுத்த நொடியில் வரும் கேள்வி       யாழ்ப்பாணமா.?  மட்டக்களப்பா.?  இல்லை மலையகமா. ?என்பது தான்    கேட்பது வேறு இனத்தவர் இல்லை    தமிழர்கள் தான்    .......அதுவும் விசேஷமாக.  ...இந்த யாழ்ப்பாணத் தழிழன்.     மேற்குறிப்பிட்ட தமிழனை கேட்டால்   அவர் நான் ஒரு சிங்கப்பூர் தமிழன் என்று தான் சொல்வான்.....ஈழத்தமிழன்  இலங்கை தமிழன். யாழ்ப்பாணத் தமிழன். என்று சொல்லப் போவதில்லை  

1...மட்டக்களப்பு தமிழ் மாணவன்   முதல் இடம....

2... கிளிநொச்சி தமிழ் மாணவி.  சிறந்த பெறுபேற...

3....மலையக தமிழ் மாணவர்கள் அதிகம் பேர். பல்கலைக்கழகத்திற்கு தெரிவ...இப்படி பல செய்திகள்   வந்திருக்கிறதோ   ? இது மட்டும் சரியா  ?

 ஏன்? அதிகம்   ...பிரபாகரனையே    வல்வெட்டித்துறை    என்றால் தான்   தெரியும் நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள்   🤣 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2023 at 16:39, குமாரசாமி said:

இப்பவெல்லாம் தமிழனே இல்லாத தமிழே ஒழுங்காய் தெரியாதவர்கள் தான் தங்களை சுத்த தமிழன் என்கிறார்கள்...:cool:

தமிழ்நாட்டில திராவிடன் எண்டிராங்கள்.. ஈழத்தில யாழ்ப்பாணத்தமிழன் எண்டுராங்கள்.. ஈழத்தமிழன் எண்டோ தமிழ்நாட்டு தமிழன் எண்டோ சொல்ல ஒரு நாதியும் இல்லை தமிழ் இனத்துக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்நாட்டில திராவிடன் எண்டிராங்கள்.. ஈழத்தில யாழ்ப்பாணத்தமிழன் எண்டுராங்கள்.. ஈழத்தமிழன் எண்டோ தமிழ்நாட்டு தமிழன் எண்டோ சொல்ல ஒரு நாதியும் இல்லை தமிழ் இனத்துக்கு..

சிங்கப்பூர் தமிழனோ, மலேசிய தமிழனோ, புலம்பெயர் தமிழனோ, யாழ்ப்பாணத்து தமிழனோ, மட்டக்களப்பு தமிழனோ தமிழர் என்ற போர்வைக்குள் ஒருங்கிணைய வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் திராவிடன் தமிழன் என்ற நேர் கோட்டுக்குள் வரமாட்டான். ஏனெனில்  தமிழினத்திற்கு  திராவிடன் என்ற முகமூடி ஏன் என்ற கேள்வி என்றும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண தமிழரின் உலகளாவிய தாக்கம் ‘சிங்கப்பூரின் ஜனாதிபதி வேட்பாளராக தர்மன் சண்முகரத்தினம்’ - ஜீவன் தியாகராஜா

Published By: VISHNU

13 JUN, 2023 | 04:14 PM
image
 

பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருந்தது. சுதந்திரமடைந்ததன் பின்னர் 1966 ஆகஸ்ட் 9ஆம் திகதி சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிக்குடியரசாகியது. அதற்கு முன்னதாக, முதலாவது உலகப் போர் உக்கிரமாக நடைபெற்றது. 

அப்போரின் பின்னரான காலத்தில் வட,மாகாணத்தைச் சேர்ந்தவர் மலாயாவுக்குச் சென்றார். அவர் உட்பட அங்கு சென்ற நபர்கள் தமது முன்னேற்றத்துக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் கடினமாக உழைத்தார்கள். தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

தற்போது சிங்கப்பூர், பொருளாதார, சமூக, பல்லின கலாசார ரீதியாக முன்னேற்றகரமான நிலைமையில் உள்ளது. அந்த நாட்டின் பிரஜைகளும் உயர்ந்த வாழ்வுவாதார நிலையில் உள்ளார்கள் என்பதை கண்கூடாக அவதானிக்க முடிகின்றது. 

தர்மன் சண்முகரத்தினத்தின் வரலாறும் மேற்படி நிலைமைகளை மையப்படுத்துவதாகவே உள்ளது. தமிழரான தர்மன் சண்முகரத்தினம் தற்போது சிங்கப்பூரின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இதன்மூலமாக வடமாகாணத்தைப் பூர்வீகத்தைக் கொண்டவரின் பிறிதொரு நாட்டில் செலுத்தும் தாக்கம் வெளிப்பட்டுள்ளது.

தர்மன் சண்முகரத்தினத்தின் தாயாரின் பெற்றோர் (பாட்டனார்) ஊரெழு மற்றும் உரும்பிராயைச் சேர்ந்தவர்கள். அவருடைய தாத்தா வைத்தியர் விஸ்வலிங்கம். அவர் சிலோனியர்களுடன் சேர்ந்து செந்தூழ் சிவன் கோவிலை கட்டினார். 

அதேநேரம், அவர் ஒரு மருத்துவராகவும் அர்ப்பணிப்பான சேவையை முன்னெடுத்திருந்தார். இவரது தந்தை கே.சண்முகரத்தினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவருடைய தயார் மலாயாவில் பிறந்தவர். 

பின்னர், தர்மன் சண்முகரத்தினம  ஜப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியில் முதன்மை

தர்மன் சண்முகரத்தினம் லண்டன் ஸ்கூல் ஒஃப் எக்கனொமிக்ஸில் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவராவர். அவர் பட்டப்படிப்புக்கு முன்னதாக, ஆங்கிலோ-சீனப் பாடசாலையில் கல்வி கற்றார்.

பின்னர் 2011இல் அவர் புலமைப்பரிசிலைப் பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் முதுகலைத் தத்துவப் பட்டம் பெற்றார், மேலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கெனடி அரசாங்கப்பாடசாலையில் பொது நிர்வாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றார், அங்கு அவருக்கு சிறந்த செயல்திறன் மற்றும் தலைமைத்துவத் திறனுக்காக ‘லூசியஸ் என் லிட்டாவர் ஃபெலோ’ விருது வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

அரசியலில் பிரவசம்

துறைசார்ந்தவொரு பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம் ஒசிங்கப்பூருக்கான அரச சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றினார். 

அதனையடுத்து, சிங்கப்பூர் அரசியலுக்குள் பிரவேசித்தார். அவர் முதன்முதலில் மக்கள் செயல் கட்சி ஊடாக அரசியலில் பிரவேசித்தவர், 2001 நவம்பரில் ஜூரோங் ஜிஆர்சி தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

மக்கள் செயல்கட்சியானது 79.75 சதவீத வாக்குகளைப் பெற்றதையடுத்து, ஆட்சி அமைத்தது. அதன்பின்னர் அவர் தொடர்ச்சியாக நான்கு முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர், சிங்கப்பூரின் துணைப் பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சராக பல பரினாமங்களை வகித்ததன் பின்னர் 2019 மே முதல் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சராகவும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் உள்ளார்.

மேலும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பிரதமருக்கு ஆலோசனை வழங்குபவராகவும், சிங்கப்பூர் நாணய நிதியத்தின் தலைவராகவும் மற்றும் சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டுக் கழகத்தின் துணைத் தலைவராகவும், அதன் முதலீட்டு உத்திகள் குழுவின் தலைவராகவும் வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றார்.

2014 முதல் பொருளாதார மேம்பாட்டு திணைக்களத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்து வரும் அவர், 2011-2019 காலப்பகுதியில் துணைப் பிரதமராகவும், 2011-2015 பொருளாதாரமற்றும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் செயற்பட்டுள்ள அவர் 2007-2015 வரையில் ஒன்பது ஆண்டுகள  நிதி அமைச்சராகவும், 2003-2008 ஐந்து ஆண்டுகள் கல்வி அமைச்சராகவும் இருந்தார்.

பொதுச் சேவையில் பங்களிப்பு

தர்மன் சண்முகரத்தினம் கல்வி அமைச்சராக பணியாற்றிய போது, எதிர்கால சந்ததியினர் பரந்துபட்ட மற்றும் நெகிழ்வான தகுதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியமை விசேட அம்சமாகும்.

குறிப்பாக, ‘முனைளுவுயுசுவு’, பாலர் கல்வியின் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றைக் முன்னெடுத்தமையைக் குறிப்பிடலாம். பின்னர் ‘ளுமடைடளகுரவரசந’ திட்டத்தை வழிநடத்தினார், இத்திட்டமானது, சிங்கப்பூரர்களிடையே வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்த 2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

கொரோனா தொற்றுப் பரவலின்போது, சிங்கப்பூரர்களுக்கான பணிகளை ஆதரித்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்பார்வையிட்ட தேசிய செயற்பாடுகள் தொடர்பான சபைக்கும் தலைமைத்துவத்தினை வழங்கியிருந்தார்

முற்போக்கான ஊதியச் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் குறைந்த ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவதையும், சமூக சேவையாளர்களின் நிலைமைகளையும், சமூக சேவை அலுவலகங்களின் திறன்களை மேம்படுத்துவதையும் அவர் மேற்பார்வையிட்டிருந்தார்.

ஏனைய வகிபாகங்கள்

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூருக்கு வெளியே,  சிங்கப்பூர், இந்திய மேம்பாட்டு சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார், இது இந்திய சிங்கப்பூர் சமூகத்தில் கல்வி செயற்றிறன் மற்றும் சமூக பின்னடைவை மேம்படுத்த முயல்கிறது.

தர்மன் சண்முகரத்தினம் பல சர்வதேச சபைளுக்குகு தலைமைகு தாங்கினார், குறிப்பாக பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்களில் கவனம் செலுத்திய அவர், 2017 முதல் 2022 வரை பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் சுதந்திரமான உலகளாவிய சபையின் ஜி-30 முப்பது குழுவின் தலைவராக இருந்துள்ளதோடு 2011 முதல் 2014 வரை சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுவின் முதல் ஆசியத் தலைவராக இருப்பதும் பதவி வகித்திருந்மையும் விசேடமானதாகும்.

இந்நிலையில் தர்மன் சண்முகரத்தினம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் குழுவிலும், மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் அறங்காவலர் குழுவின் வெளிப்புற ஆலோசனைக் குழுவிலும் உள்ளார். 

இத்தகைய பதவி நிலைகளை வகித்து, உச்சத்துக்கே சென்றுவிட்ட அவருடைய வாழ்வியல் கதை இலங்கைக்கு வெளியே வடமாகாண தமிழர்களின் திறனைக் காண்பித்து நிற்கின்றது. 

அத்துடன் அவருடைய வாழ்க்கைப் பயணமும் சாதனைகளும் தமிழர்களுக்கு ஒரு மிகச் சிறந்த பாடம். வடமாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் என்ற அடிப்படையிலும், நானும் கலாநிதி விஸ்வலிங்கமும் ஊரெழுவிலிருந்து மலாயாவிற்கும் மீண்டும் இலங்கைக்கும் ஆற்றிய பணியின் ஊடாக புதிய உறவுப்பாலத்தினை அமைத்தக்கொண்டேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகின்றது. 

https://www.virakesari.lk/article/157622

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது நோக்குநிலை எப்போதும் நேர்மையானதாக இருக்கும் : சிங்கப்பூர் ஜனாதிபதி வேட்பாளர் தர்மன் சண்முகரத்தினம்

Published By: SETHU

29 JUL, 2023 | 10:23 AM
image
 

சிங்கப்பூரின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினம், புதிய சகாப்தத்துக்கான ஜனாதிபதியாக தான் விளங்கப்போவதாகவும் சிங்கப்பூர் கலசாரத்தை உலகின் பிரகாசிக்கும் ஸ்தானமாக பரிமணிக்கச் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற பிரபல பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம் (66) சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சரும் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் மற்றும் சமூக கொள்கைகள் அமைச்சரர் மற்றும் மத்திய வங்கித் தலைவர் உட்பட பல பதவி விகித்து வந்த தர்மன் சண்முகரத்தினம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்பதவிகளிலிருந்தும் ஆளும் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் (PAP) கடந்த மாதம் விலகினார்.

சிங்கப்பூரின் ஜனாதிபதி பதவி அரச சார்பற்றது என்பதால், ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என்பதே இந்த விலகலுக்குக் காரணம்.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக தன்னை முன்மொழிபவரையும் வழிமொழிபவரையும் அறிமுகப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டை கடந்த புதன்கிழமை தர்மன் சண்முகரத்தினம் நடத்தினார்.

'ஒருவருக்கொருவர் மரியாதை' என்ற தொனிப்பொருளில் இச்செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் கலாசாரத்தை பரிணாமமடையச் செய்ய வேண்டும் நான் உறுதியாக நம்புவதால் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.  

எமது கலாசாரத்திலும் எமது சில வழக்கங்களிலும் ஒருவரோடொருவர் இணைந்து செயற்படும் எமது முறைமையிலும்  மாற்றங்கள் செய்வதன் மூலம் சிங்கப்பூரை உலகின் பிரகாசிக்கும் இடமாக நீடிக்கச் செய்யலாம் என அவர் கூறினார்.  

'Tharman-Shanmugaratnam---Respect-for-all

சிங்கப்பூர் ஜனாதிபதியாக நான் தெரிவானால், புதியதும் மேலும் சவாலானதுமான சகாப்தத்தில் உங்கள் ஜனாதிபதியாக சேவையாற்றுவதற்கு, தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எனது முழு அனுபவங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன்' என தர்மன் சண்முகரத்தினம் கூறினார்.

தனது  22 வருட கால அரசியல வாழ்க்கையானது  மக்களை ஐக்கியப்படுத்துவதற்கான அனுபவத்தை தனக்கு வழங்கியுள்ளது என அவர் கூறினார்.

'ஐக்கியப்படுத்தும் நபர் எனக் கூறும்போது, நான் வெறுமனே சொல்லாட்சிக்காகவோ, ஆசைக்காகவோ கூறவில்லை.  மாறாக உண்மையான செயற்பாட்டு வரலாற்றிலிருந்து பேசுகிறேன்.

 வித்தியாசமான நோக்குகள், வித்தியாசமான அரசியல் சார்புகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் பொது இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் ஆகியனவும் இதில் அடங்கும்.

 நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தனது அடிப்படை நோக்கு நிலையானது நேர்மை ஆனதாக இருக்கும் எனவும், தனது ஜனாதிபதி பதவியை அது வரையறை செய்யும்.

ஒரு பச்சோந்தி போன்று எனது நிறத்தை நான் மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. நான் அதே நேர்மையும் அதே சுயாதீன மனதையும் கொண்ட அதே நபர். ஜனாதிபதி பாத்திரத்துக்கு இது முக்கியமானதாகும்' எனவும் அவர் கூறினார்.

'சிங்கப்பூர் மக்கள் மேலும் வித்தியாசமான கருத்துக்களைக் கெர்ணடிருக்கின்றனர். அத்துடன் பிளவுபட்ட சமுதாயமாக மாறுவதைத் தவிர்ப்பதே நாட்டின் உண்மையான சவால்' எனவும் அவர் கூறனார்.

வேட்பாளர்களை அவர்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் அல்லாமல் அவர்களின் அரசியல் தொடர்பு அடிப்படையில் மதிப்பிடுவது குறித்தும் சண்முகரத்தினம் எச்சரித்தார்.  

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலீமா யாகோப்பின் பதவிக்காலம் எதிர்வரும் 13 ஆம் திகதி பூர்;த்தியாகவுள்ளது. அதற்குமுன் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.

இத்தேர்தலில்; தொழிலதிபர் ஜோர்ஜ் கோஹ் உட்பட வேறு சிலரும் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகுவதற்கு பல்வேறு தகுதிகளைக் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதித் தேர்தல்கள் குழுவின் தகுதிச் சான்றிதழையும் பெற வேண்டும்.

சிங்கப்பூரின் 6 ஆவது ஜனாதிபதியாக தமிழரான எஸ்.ஆர்.நாதன் 1999 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரானது நேர்மையான நிர்வாகத்துக்கு பெயர்பெற்றதாகும்.

அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஊல் குற்றச்சாட்டு தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் டான் சுவான் ஜின், ஆளுங்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்  செங் லி ஹூயியுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டார். அதையடுத்து சபாநாயகர்  டான் சுவான் ஜின்னும், பாராளுமன்ற செங் லி ஹூயியும் அப்பதவிகளிலிருந்து அண்மையில் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. (சேது)

https://www.virakesari.lk/article/161187

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிங்கப்பூரில்.. போதைப்பொருள் வைச்சிருந்தார் விற்றார் விற்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மனித உயிர்களைப் பறிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள். கடும் குற்றவாளிகளை கிலோ கணக்கில் தொன் கணக்கில் போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும்.. சட்டபூர்வாமாக்கி வைச்சிருக்கும் நாடுகளோடு சிங்கப்பூர் எல்லைகளை மூடுமா...??! அதைச் செய்யாமல்.. அவுன்ஸ்.. கிராம் கணக்கில் போதைப் பொருள் வைச்சிருந்ததாகச் சொல்லி மனிதர்களை ஈவிரக்கமின்றி கொல்லும் போக்கை சிங்கப்பூர் கைவிட வேண்டும். இப்படி திருந்த வாய்ப்பளிக்கக் கூடிய..  குற்றங்களுக்காக மனிதர்களைக் கொல்வது..  சிங்கப்பூரின் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

மனித உயிர்களைப் பறிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்.

மனிதர்களை ஈவிரக்கமின்றி கொல்லும் போக்கை சிங்கப்பூர் கைவிட வேண்டும். இப்படி திருந்த வாய்ப்பளிக்கக் கூடிய..  குற்றங்களுக்காக மனிதர்களைக் கொல்வது..  சிங்கப்பூரின் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.

சரியான கருத்து.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முந்தும் தமிழர் - யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

தர்மன் சண்முகரத்னம்

29 ஆகஸ்ட் 2023

சிங்கப்பூரில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 3 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த சிறிய தீவை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் பொது வாக்கெடுப்பாகவே இந்த தேர்தல் கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று அடுத்த அதிபராக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. அவர் யார்?

அதிபர் தேர்தலில் தமிழர் உள்பட 3 பேர் போட்டி

சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 வேட்பாளர்களில் முன்னாள் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம்(66) என்பவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. ஆளும் மக்கள் செயல் கட்சியின் தேர்வாக அவர் கருதப்பட்டாலும், அதுகுறித்து அந்த கட்சி சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

1959-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் இமேஜ், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

தர்மன் சண்முகரத்னம் தவிர, காக் சோங் (75), டான் கின் லியான்(75) ஆகிய இருவரும் அதிபர் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.

இந்த 3 பேரில் வெற்றி பெறும் வேட்பாளர், சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா யாகூப்பிடம் இருந்து பொறுப்புகளை ஏற்பார்கள்.

சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் எப்படி?

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

பிரதமர் லீ சியென் லூங்

நாடாளுமன்றம் செய்த சட்டத்திருத்தங்களால், 2017-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது அவர் மட்டுமே போட்டியிடத் தகுதியானவராக இருந்தார். அந்த திருத்தத்தின்படி, குறிப்பிட்ட இனக்குழுவில் இருந்து தொடர்ந்து 5 தடவை யாரும் அதிபராகவில்லை என்றால் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார். 2017-ம் ஆண்டு 4 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அங்கே அரிதான நிகழ்வாக போராட்டங்கள் எழுந்தன.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் நான்கில் 3 பகுதியினர் சீனர்கள். எஞ்சியவர்கள் மலாய், இந்தியா அல்லது யுராஷியன் வம்சாவளியினர் ஆவர்.

இந்த ஆண்டு அனைத்து இனக் குழுவினரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1991-ம் ஆண்டு சட்டம் பொதுமக்களே நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்ட பிறகு நடைபெறும் மூன்றாவது தேர்தல் இது. சிங்கப்பூரில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தேர்தல்களில் மக்களின் பெருவாரியான வாக்குகளால் தொடர்ந்து வெற்றி பெற்றவர். 2016-ம் ஆண்டு யாகூ நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சிங்கப்பூரில் அதிகார மிக்க பிரதமர் பதவிக்கு தர்மன் சண்முகரத்னம் வர வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

1959-ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் சிங்கப்பூர் இதுவரை 3 பிரதமர்களை மட்டுமே கண்டுள்ளது. அவர்கள் மூவருமே பெரும்பான்மை சீன இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். முதல் பிரதமரான லீ குவான் யூ-வின் மகனான லீ சியென் லூங் தான் தற்போது அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். 2025-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

 
சிங்கப்பூர் அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,REUTERS

ஆனால், அது பெரும்பான்மை சீனர்களை தர்மசங்கடப்படுத்தும் என்ற கருத்து கட்சிக்குள் எழுந்ததால் அதுகுறித்த தயக்கம் இருந்து வந்தது. தர்மன் சண்முகரத்னமும் தாம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தர்மன் சண்முகரத்னத்தை அதிபராக்குவதன் மூலம் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் தற்போதைய பிரதமர் லீ சியென் லூங் தனக்கான நெருக்கடியை சற்று குறைத்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. செப்டம்பர் 13-ம் தேதி தற்போதைய அதிபர் ஹலிமாவின் பதவிக்காலம் முடிவடையும் என்பதால் அதற்குள் தர்மன் சண்முகரத்னம் அடுத்த அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

https://www.bbc.com/tamil/articles/crg8kdyg042o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாற்பது வருடங்களுக்கு முன்னரும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இராசரத்தினத்தை நினைத்து புளகாங்கிதம் அடைந்திருந்தோம்.

காலாகாலமாக தமிழன் பெயரை எங்கு கண்டாலும் ஆவேசப்படுவது நம்ம பிறவிக்குணம். :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் தேர்தல்: திருமணம் கடந்த உறவு, ஊழல் புகார்களில் சிக்கிய ஆளும் கட்சி தப்பிக்குமா?

சிங்கப்பூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரதமருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரில் அதிபருக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது

8 மணி நேரங்களுக்கு முன்னர்

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

திருமணத்துக்கு வெளியே உறவு, ஊழல் புகார்கள் போன்றவற்றால் விமர்சிக்கப்படும் ஆளும் கட்சி மீதான மக்களின் தீர்ப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் கட்சி மீதான மக்களின் நம்பிக்கைக்கான சோதனை இது.

எனினும் பிரதமருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரில் அதிபருக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்று அடுத்த அதிபராக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

ஆளும் மக்கள் செயல் கட்சியின் சார்பில் அவர் களத்தில் இருக்கிறார்.

 
சிங்கப்பூர் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

1959-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் இமேஜ், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

1959-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் இமேஜ், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

தர்மன் சண்முகரத்னம் தவிர, காக் சோங் (75), டான் கின் லியான்(75) ஆகிய இருவரும் அதிபர் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.

இந்த 3 பேரில் வெற்றி பெறும் வேட்பாளர், சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா யாகூப்பிடம் இருந்து பொறுப்புகளை ஏற்பார்கள்.

நாடாளுமன்றம் செய்த சட்டத்திருத்தங்களால், 2017-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது அவர் மட்டுமே போட்டியிடத் தகுதியானவராக இருந்தார். அந்த திருத்தத்தின்படி, குறிப்பிட்ட இனக்குழுவில் இருந்து தொடர்ந்து 5 தடவை யாரும் அதிபராகவில்லை என்றால் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார்.

2017-ம் ஆண்டு 4 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அங்கே அரிதான நிகழ்வாக போராட்டங்கள் எழுந்தன.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் நான்கில் 3 பகுதியினர் சீனர்கள். எஞ்சியவர்கள் மலாய், இந்தியா அல்லது யுராஷியன் வம்சாவளியினர் ஆவர்.

இந்த ஆண்டு அனைத்து இனக் குழுவினரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1991-ம் ஆண்டு சட்டம் பொதுமக்களே நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்ட பிறகு நடைபெறும் மூன்றாவது தேர்தல் இது. சிங்கப்பூரில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.

 
சிங்கப்பூர் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தேர்தல்களில் மக்களின் பெருவாரியான வாக்குகளால் தொடர்ந்து வெற்றி பெற்றவர். 2016-ம் ஆண்டு யாகூ நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சிங்கப்பூரில் அதிகார மிக்க பிரதமர் பதவிக்கு தர்மன் சண்முகரத்னம் வர வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

1959-ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் சிங்கப்பூர் இதுவரை 3 பிரதமர்களை மட்டுமே கண்டுள்ளது. அவர்கள் மூவருமே பெரும்பான்மை சீன இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். முதல் பிரதமரான லீ குவான் யூ-வின் மகனான லீ சியென் லூங் தான் தற்போது அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். 2025-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், அது பெரும்பான்மை சீனர்களை தர்மசங்கடப்படுத்தும் என்ற கருத்து கட்சிக்குள் எழுந்ததால் அதுகுறித்த தயக்கம் இருந்து வந்தது. தர்மன் சண்முகரத்னமும் தாம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார்.

மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தர்மன் சண்முகரத்னத்தை அதிபராக்குவதன் மூலம் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் தற்போதைய பிரதமர் லீ சியென் லூங் தனக்கான நெருக்கடியை சற்று குறைத்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் 13-ம் தேதி தற்போதைய அதிபர் ஹலிமாவின் பதவிக்காலம் முடிவடையும் என்பதால் அதற்குள் தர்மன் சண்முகரத்னம் அடுத்த அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

 
திருமணம் கடந்த உறவு, ஊழல் குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

54 வயதான சபாநாயகர் டான் சுவான் - ஜின், 47 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹியூர் ஆகியோர் இடையே திருமணத்தை தாண்டிய உறவு இருப்பது தெரியவந்ததும் இருவரும் பதவி விலகினர்.

திருமணம் கடந்த உறவு, ஊழல் குற்றச்சாட்டுகள்

அண்மையில் ஊழல் தொடர்பாக சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் 64 வருடங்களாக ஆட்சி செய்துவரும் மக்கள் செயல் கட்சி தனது நற்பெயரை இழந்து வருவதாகவும் கருதப்பட்டது.

இது தவிர, நாடாளுமன்ற சபாநாயகரும், பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பது தெரியவந்ததும் ராஜிநாமா செய்தனர்.

மிகவும் தூய்மையான நிர்வாகத்துக்குப் பெயர் பெற்ற, உலகிலேயே அதிக ஊதியம் பெறும் தலைவர்களைக் கொண்ட சிங்கப்பூர் மக்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

1959 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆட்சியை கைவசப்படுத்தி நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு (PAP) தற்போதைய நெருக்கடி ஆதரவைக் பெருமளவில் குறைத்துவிடும் எனப் பல அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

54 வயதான சபாநாயகர் டான் சுவான்-ஜின் 47 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹியூர் ஆகியோர் இடையே திருமணத்தை தாண்டிய உறவு இருப்பது தெரியவந்ததும் கட்சி, நாடாளுமன்ற பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களில் டான் திருமணமானவர், செங் திருமணமாகாதவர்.

இதுபோல சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மற்றும் ஹோட்டல் அதிபர் ஓங் பெங் செங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போதே வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்தன. 2008-இல் சிங்கப்பூருக்கு கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தைக் கொண்டு வந்ததில் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர்.

ஈஸ்வரன் தனது அமைச்சர் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c3gz4x0vyx7o

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் தெரிவு

02 SEP, 2023 | 07:15 AM
image
 

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் அந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் நாட்டின் சம்பிரதாயமான ஜனாதிபதி பதவிக்கு போட்டியின் மூலம் தெரிவாகியுள்ளார். 

எதிர்த்து போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களை விட 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று 66 வயதான பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றதாக சிங்கப்பூர் தேர்தல்கள் திணைக்களம் வெள்ளிக்கிழமை (1) அறிவித்தது.

சிங்கப்பூரை பொறுத்தமட்டில் ஜனாதிபதி பதவி என்பது பெரும்பாலும் ஒரு சம்பிரதாயம், அரசியலமைப்பின் கீழ் கட்சி சார்பற்ற பதவி என்றே கருதப்படுகிறது. 

தற்போது சண்முகரத்தினம் தெரிவானதை அடுத்து 2017ல் இருந்து ஜனாதிபதி பொறுப்பில் இருக்கும் Halimah Yacob பதவி விலக உள்ளார்.

தற்போது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள தர்மன் சண்முகரத்தினம் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/163676

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்கள் : உறுதியளித்த தர்மன் சண்முகரத்னம்

Sep 02, 2023 10:02AM IST ஷேர் செய்ய : 
Challenges facing Singapore tharman

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கூப்பின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 22ஆம் தேதி பெறப்பட்டது.

இந்த தேர்தலில் ஹலிமா யாக்கூப் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

இந்தநிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான, சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்ற, தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.

நாட்டின் 9ஆவது அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று நடைபெற்ற தேர்தலில், சுமார் 27 லட்சம் மக்கள் வாக்களித்தனர். இந்த  தேர்தலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் என வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களும் வாக்களித்தனர்.

அதன்படி, 70.4 சதவிகித வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தமிழரான தர்மன் சண்முகரத்னம்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காச்சோங்15.72 சதவிகித வாக்குகளும், டான்கின் லியான் 13.88 சதவிகித வாக்குகளும் பெற்று தோல்வியுற்றனர்.

இந்த தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரி டான் மெங்க் அறிவித்தார். வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கூப்பிடம் இருந்து பொறுப்பை பெறுகிறார் தர்மன் சண்முகரத்னம் .

தர்மன் சண்முகரத்னம் பற்றி… 

1.2011-2019 வரை சிங்கப்பூரின் துணை பிரதமர்

2.2003 – 2008  வரை கல்வி அமைச்சராகவும், 2007 – 2015 வரை  நிதி அமைச்சராகவும், 2011 – 2012 வரை மனித வள துறை அமைச்சராகவும், 2015 – 2023 வரை சமூக கொள்கைக்கான ஒருங்கிணைப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

3. 2001 பொதுத் தேர்தலில் இருந்து அரசியலிலிருந்து வரும் தர்மன் சண்முகரத்னம் 2006, 2011, 2015 மற்றும் 2020 இல் நடந்த பொதுத் தேர்தல்களில் நான்கு முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. அடிப்படையில் இவர் ஒரு பொருளாதார நிபுணர்.

5. பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில் மற்றும் பேனல்களுக்கும் தலைமை தாங்கியிருக்கிறார்.

6. 2011 – 2014 வரை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொள்கை ஆலோசனைக் குழுவான சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுவின் தலைவராக இருந்தார்.

7. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வொல்ப்சன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை தத்துவப் பட்டம்பெற்றார்.

8. “அனைவருக்கு மரியாதை” என்ற முழக்கத்துடன் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

9. புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய, ‘மருத்துவ விஞ்ஞானி’, ‘”சிங்கப்பூரின் நோயியல் தந்தை’ என்று அழைக்கப்படும் பேராசிரியர் கே. சண்முகரத்தினத்தின் மகன் ஆவார்.

10.தர்மன், சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யுமிகோ இட்டோகியை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மன் சண்முகரத்னம்,  “எனக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள “நம்பிக்கை வாக்குகள்” ஆகும். சிங்கப்பூர் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதைக் காப்பாற்றுவேன். இனம், மதம் இன்றி அனைத்து சிங்கப்பூர் மக்களுக்கான அதிபராக இருப்பேன்.

நாட்டை ஒருங்கிணைக்க கடுமையாக உழைப்பேன், சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்களான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட எஸ்.ஆர். நாதன் என்ற செல்லப்பன் ராமநாதன், 2009ம் ஆண்டு அதிபராக தேர்வானார். அவரைத் தொடர்ந்து தர்மன் சண்முகரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுபோன்று மலையாள வம்சாவளியைச் சேர்ந்த தேவன் நாயர் சிங்கப்பூர் அதிபராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

“தர்மன் சண்முகரத்தினத்தின் தமிழ் பாரம்பரியம், ஈர்க்கக்கூடிய தகுதிகள் எங்களை பெருமைப்படுத்துகிறது. அவரது வெற்றி சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது” என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
 

 

https://minnambalam.com/political-news/challenges-facing-singapore-tharman-shanmugaratnam-promises/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழண்டா! தமிழண்டா!! குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டம்…!

தமிழண்டா! தமிழண்டா!!     குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டம்…!

 — அழகு குணசீலன் —

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தர்மன் கனகரெட்ணம் வெற்றி பெற்றதுதான் தாமதம்.  தமிழ்த்தேசியம் வளர்த்துவிட்ட அடையாள அரசியலுக்கு மகிழ்ச்சியில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. 75 ஆண்டுகால அகிம்சை, ஆயுத அரசியல் பிறவிப் பயன் கிடைத்த பெருமிதம். 

தமிழண்டா…. தமிழண்டா…. என்று  தர்மனில்  ஆர்முடுகலில் தொடங்கி தமிழன் உலகை ஆளப்போகிறான் (ள்) என்று கமலா ஹரிஷில்  அமர்முடுகலில் போய் ஓய்ந்திருக்கிறது. சிங்கப்பூர் சின்ன முதலாளிக்கும் அமெரிக்க பெரிய முதலாளிக்கும் பாலம் கட்டும் அனுமார் அரசியல். TAMILS FOR OBAMA, TAMILS FOR KAMALA என்று தொடங்கி TAMILS FOR ELISABETH என்று மகாராணிக்கு செத்தவீடும் கொண்டாடிய “தமிழண்டா….” இவர்கள்.

தர்மன் கனகரெட்ணம்  வெற்றி பெற்ற செய்தி வெளிவந்தபோது தமிழ் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பதிவுகளில் சில கவனத்திற்குரியவை.

* சிங்கப்பூர்  ஜனாதிபதி தேர்தலில் தர்மன் கனகரெட்ணம் வெற்றி.

* சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இந்திய/ இலங்கை வம்சாவழி தர்மன் கனகரெட்ணம் வெற்றி.

* சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இந்திய/ இலங்கை வம்சாவழி தமிழன் தர்மன் கனகரெட்ணம் வெற்றி.

* சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில்  இலங்கை வம்சாவழி யாழ்ப்பாண தமிழன் தர்மன் கனகரெட்ணம் வெற்றி.

இந்த செய்தியிடல் பாணி மக்களுக்கு சொல்லுகின்ற செய்தி என்ன..?

வாக்கியங்களும், வார்த்தைகளும் நீள்கின்றன. ஆனால் எங்கள் அடையாள அரசியல்  ஒருமனிதனை “யாழ்ப்பாணத் தமிழனாக” குறுக்கி அடையாளம் காண்பதில் மகிழ்ச்சிப்பெருமிதம் கொள்கிறது. எந்த அரசியல் பிரக்ஞையும் இல்லாமல் “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”  என்ற கோஷம். இதுவே தமிழர் அரசியலில் இருக்கின்ற வெறுமை – வரட்சி. இதுவே தமிழ்த்தேசிய அரசியல் மக்களை கொண்டு விட்டுள்ள அரசியல் விளிம்பு. மானிடத்தை மறுத்த இந்த குறுகிய அரசியல்  தமிழ்க் குறுந்தேசியவாதத்தின் ஒரு குறியீடு.

தமிழை முதலிட்டு தமிழையே இலாபமாகப்பெறும் அரசியல்.

தர்மன் கனகரெட்ணம் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலும், மேற்குலகிலும் , சர்வதேசத்திலும் நன்கறியப்பட்டவர். பொருளாதார -நிதி நிர்வாக நிபுணர். சர்வதேசநாணயநிதி, உலக பொருளாதார பேரவை போன்றவற்றில் முக்கிய புள்ளி. சிங்கப்பூரின் உதவிப்பிரதமராக, நிதி அமைச்சராக, மத்திய வங்கியின் நாணயசபையின் ஆளுனராக பதவிகளை வகித்த அவரின் அத்தனை தகுதிகளையும் மறைத்து வெறுமனே “தமிழன்” என்பதே  ஒரு தகுதியாக காட்டப்படுகிறது. சிங்கப்பூர் மக்கள் 70.4 வீதம் வாக்குகளை அளித்து அவரை தமிழன் என்பதற்காக தெரிவுசெய்தார்களா….? இல்லை  அவரின் ஒட்டுமொத்த அரசியல் செயற்பாட்டிற்கும், தகுதிக்கும், திறமைக்கும் வாக்களித்தார்களா? இதை ஈழத்தமிழர் அரசியல் வறுமை அன்றி வேறு எவ்வாறு அழைப்பது.

இந்த கூட்டம் தான் புலம்பெயர்ந்த நாடுகளின் அரசியலில் உள்ளவர்களை தமிழண்டா….தமிழண்டா…. என்று கொண்டாடுகிறது. மேற்குலக மக்கள் இவர்களுக்கு கட்சிக் கொள்கைக்காக  வாக்களிக்கிறார்களா ? அல்லது தமிழன் என்ற இன அடையாளத்திற்காக வாக்களிக்கிறார்களா?   ஆனால்  புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த அடையாளத்திற்காகவே ஊர்பார்த்து, மதம்பார்த்து, சாதிபார்த்து, சம்பந்தம் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. இது அம்பலமாகும் போது மேற்குலக மக்கள் இவர்களை நிராகரிக்கிறார்கள்.

நிராகரித்தும் இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில், இலங்கையின் சமகால அரசியல் பல விடயங்கள் பற்றி பேசுகிறது.  அரசியல் அமைப்பு மாற்றம், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு, இனப்பிரச்சினைக்கு தீர்வு,  ஊழல்ஒழிப்பு, நீதி, நிர்வாகத்துறையின் சுதந்திரமான செயற்பாடு, மனித உரிமைகள் மேம்பாடு, ஜனநாயக அரசியல், இன, மத நல்லிணக்கம், தேசிய பாதுகாப்பு, சீர்திருத்தங்கள்… இப்படி பல விடயங்கள் பேசப்படுகின்றன. 

இலங்கைத் தலைவர்கள் காலத்துக்கு காலம், தேர்தலுக்கு தேர்தல் இலங்கையை “சிங்கப்பூராக்குவோம்” என்று கூறுவதற்கும் தயங்கியதில்லை. ஜே.ஆர்.ஜயவர்த்தன சுதந்திர வர்த்தக வலையம் அமைத்தார். பிரேமதாசா மேம்பாலங்கள் அமைத்தார். சிறிசேனா சிங்கப்பூர் நல்லாட்சி என்றார். ராஜபக்சாக்கள் தாமரைக்கோபுரம், போர்ட் சிற்றி என்றார்கள். இப்போது இலங்கை சிங்கப்பூர் தானே இல்லையா?

 சிங்கப்பூரின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பபை, அணுகுமுறையை, செயற்பாட்டை நோக்குவதே ஜதார்த்தத்தை  உணர்த்தும். தமிழண்டா….என்பதைவிடவும் ஒரு சிறுபான்மை சமூகத்தில் இருந்து தர்மன் கனகரெட்ணம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு சிங்கப்பூர் சமூக, பொருளாதார, அரசியல் சூழல் வழங்கிய வாய்ப்புக்கள் எவை என்பதை ஆராய்வது முக்கியம்.  இன்னொரு வகையில் கூறுவதானால் இலங்கை போன்ற ஒரு நாட்டில் இதை சாத்தியப்படாமல் தடுக்கின்ற காரணிகள் எவை என்பதை ஆராய்ந்து அறிவதே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

சுமார் 6 மில்லியன் மக்களைக் கொண்ட சிங்கப்பூரில் 77 வீதமானோர் சீனர்கள். 14 வீதம் மலாயர், 8வீதம் இந்தியர்.   மதரீதியாக பார்த்தால் 31 வீதம் பௌத்தர்கள், 20 வீதம் மதமற்றவர்கள், 19 வீதம் கிறிஸ்த்தவர்கள்,16 வீதம் இஸ்லாமியர்கள், 5வீதம் இந்துக்கள். சில ஊடகங்கள் தர்மன் கனகரெட்ணம் சிங்கப்பூரின் முதலாவது தமிழ் ஜனாதிபதி என்று காட்ட முற்படுகின்றன. இதில் உண்மை இல்லை . இதற்கு முன்னர்  செல்லப்பன் ராமநாதன்  – இவர் எஸ்.ஆர். நாதன் என்று அழைக்கப்பட்டவர் அடுத்தடுத்து  (1999, 2005) இருதடவைகள் 1999முதல் 2011 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார். 

ஒரு வித்தியாசம் நாதன் எதிர் வேட்பாளர் இல்லாததால் தேர்தலின்றி – போட்டியின்றி தெரிவானவர். இதன்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தமிழர் தர்மன் கனகரெட்ணம் என்பதே சரியானது. தற்போதைய ஜனாதிபதி கலிமா யாகூப் கூட 2017 இல் போட்டியின்றி- தேர்தல் இன்றியே தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவரே சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதி. 

இங்கு ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவரல்ல. அதேவேளை ஜனாதிபதி அதிகாரம் எதுவும் அற்ற வெறும்  ரப்பர் முத்திரை என்றும் கூறமுடியாது. இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அதிகார நிலை என்று கூறலாம். ஏனெனில் ஜனாதிபதிக்கு சில விடயங்களை தீர்மானிப்பதற்கு வீட்டோ அதிகாரம் உண்டு. அரசியல் நியமனங்களைச் செய்வதற்கான அதிகாரமும் உண்டு. ஜனாதிபதி வேட்பாளர் அரசில் அதி உயர்பதவி ஒன்றை அல்லது ஒரு தேசிய நிறுவனத்தில் தலைவர்பதவியை வகித்திருக்கவேண்டும். இது ஜனாதிபதி வேட்பாளருக்கான முக்கிய தகுதி.

சிங்கப்பூரின் முக்கிய  நான்கு மொழிகளும்  மலாய், சீன, தமிழ், ஆங்கில மொழிகள்  நிர்வாகமொழிகளாக உள்ளன.  உள்ளன என்றால் வெறும் காகிதத்தில் அல்ல  நடைமுறையில். மொழிகளுக்கு இடையே சம அந்தஸ்த்து பேணப்படுகிறது. இதை அரசியல் அமைப்பு சட்டம் உறுதிப்படுத்துகிறது. அதன் படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இங்கு 80 வீதமான மக்கள் அரச குடியிருப்புக்களில் வசிக்கின்றனர். அவை குறிப்பிட்ட இனம், மதம், மொழிக்கான தனித்துவமானவை அல்ல.  சமூக பன்முகத்தன்மையை பேணும் வகையில் குடியிருப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதன் மூலம் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையிலும் வேற்றுமை பேணப்படுகிறது. சமூகங்களுக்கு இடையிலான அங்கீகாரம், புரிந்துணர்வு, சகவாழ்வு , ஒருங்கிணைந்த வாழ்வு இயங்குநிலையில் இருக்கிறது. எவரும் குறிப்பிட்ட மதத்தவராக இருப்பதற்கும்,அதை அனுட்டிப்பதற்கும் பூரண சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் பல்கலாச்சாரமும், திறமையின் அடிப்படையிலான கல்வி, தொழில்வாய்ப்பும் மிகவும் முக்கியமான சமூகப்பண்புகள். ஊழலும், இலஞ்சமும் மிகமிக குறைவான ஒரு தேசம். குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. போதைவஸ்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. பகிரங்கமாக பொதுவெளியில் பிச்சை எடுப்பது குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால்  தண்டம் மூவாயிரம், இருவருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. அரசு, நீதி, நிர்வாகத்துறைகள் சுயாதீனமாக செயற்படுகின்றன. இவை இலங்கையில் சாத்தியமா…?  இந்த அடிப்படைகள் இல்லாமல் சிங்கப்பூராக்குவது என்பது வெறும் கட்டிடக்காடாக்குவது என்று இலங்கைத்தலைவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

சிங்கப்பூர் ஒரு நடுநிலையான நாடு. சர்வதேச அமெரிக்க, ரஷ்ய,  பிராந்திய சீன, இந்திய  அதிகார சதுரங்கங்களுக்குள்  சிக்காமல் இருப்பதை கொள்கையாகக்கொண்டுள்ளது. சிறிய ஒரு சுப்பர்மாநகர நாடு என்ற வகையில் சர்வதேச முக்கியத்துவத்துவம் பொருளாதாரம் சார்ந்ததாகவும், பிராந்திய முக்கியத்துவம் வெளியுறவுக் கொள்கை சார்ந்ததாகவும் உள்ளது. இதனால்தான் தகுதியின் அடிப்படையில் துறைசார் நிபணர்களான,ஆளுமைமிக்கவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். 

தற்போது 99 எம்.பி. களைக்கொண்ட பாராளுமன்றத்தில் 88 பேர்  தொகுதிவாரியாக மக்களால் நேரடி ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.  வாக்குரிமைக்கான வயது 21. 11 பேர் நியமன எம்.பி.கள் . ஆகக்கூடியது12 பேரை ஜனாதிபதி  நியமிக்கமுடியும். கட்சிகளின் மொத்தவாக்கு, பிரதிநிதித்துவம் அற்ற சமூகங்களில் இருந்து இவர்கள் நியமிக்கப்படுகின்றனர். நியமன எம்.பி.கள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படாதவர்கள் என்பதனால் பாராளுமன்ற வாக்கெடுப்புக்களில் வாக்களிக்கின்ற உரிமை கிடையாது. கருத்துரிமை உண்டு.

ஜனாதிபதி அரச தலைவராக செயல்படுவார். பிரதமர் அரசாங்கத்தின் – அமைச்சரவையின் தலைவராக செயற்படுவார். ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது எந்த ஒரு கட்சியையும் சாராதவராக இருக்கவேண்டும். 

கட்சி அங்கத்தவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் துறக்கவேண்டும்.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 1965 இல் இருந்து  PAP  மக்களின் செயல் கட்சியை ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கிறது. இது ஒரு ஒற்றை கட்சி ஆட்சியாக விமர்சிக்கப்படுகிறது. பல சிறிய கட்சிகள் கூட்டணியாக செயற்பட்டபோதும் , பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ள போதும் ஆட்சியை அமைக்க முடியவில்லை. சிங்கப்பூர் அரசு அதி பலமான அரசாங்கத்தையும், மிகவும் பலவீனமான எதிர்க்கடசியையும் கொண்டது. இது சிங்கப்பூர் ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்தும் ஒன்றாகும்.

கட்சிகளின் பெயர்களில் எந்த இன, மத,மொழி சமூக அடையாளங்கள் இல்லை. மக்கள், லிபரல், தொழிலாளர், முற்போக்கு என அரசியல் வார்த்தைகளே உண்டு.இது சிங்கப்பூரின் சமூகங்களுக்கு இடையிலான ஐக்கியத்திற்கு சாதகமான ஒன்றாக அமைகின்றது.

ஸ்திரமான ஆட்சி, வெளிநாட்டுக் கடன்கள் அற்ற ஒரு அரசு, வரவு செலவுத்திட்டம் எப்போதும் மிகையானது. அரச செலவுகளை விடவும் அரச வருமானம் அதிகமானது. இதுவே சிங்கப்பூரின் இராட்சத பொருளாதார பலம். பொருளாதாரம் மிகவும் வளர்ச்சி அடைந்தது. மின்னியல் பொருட்கள், இயந்திரங்கள் ஏற்றுமதி வர்த்தகம், சர்வதேச நிதிச்சந்தை, உல்லாசப்பிரயாணம், சரக்கு கப்பல் போக்குவரத்து என்பன சிங்கப்பூர் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.

இத்தனை  அரசியல், பொருளாதார உறுதியை கொண்டுள்ள போதும் சமூக ஏற்றத்தாழ்வு, வெளிநாட்டு தொழிலாளர் உரிமைகள், மரணதண்டனை, பெயரளவிலான பல்கட்சி  ஜனநாயகம் என்பன குறித்து சர்வதேச மட்டத்தில் சிங்கப்பூர் பெரும் விமர்சனங்களைப் சந்தித்து வருகின்றது. சிங்கப்பூரின் பொருளாதார அபிவிருத்தி மக்களுக்கு  சரியாக பகிர்ந்தளிக்கப்படாத கொள்கை சமூக நீதியற்றது என்று விமர்சிக்கப்படுகிறது. இது பொதுவாக முலாளித்துவ பொருளாதாரம் சார்ந்த குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இன்னும் ஒரு விடயம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதாகும். கருத்துக்கணிப்பு ஒன்றில் அடுத்த பிரதமராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பான்மையான மக்கள் தாங்கள் தர்மன் கனகரட்ணத்தை விரும்புவதாக தெரிவித்தனர்.

ஆனால் தற்போதைய பிரதமர் சீன மக்கள் பெரும்பான்மையாக உள்ள சிங்கப்பூரில் அது முறையல்ல. சீனர் ஒருவரே பிரதமராகவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பிரதமரின் இந்த கருத்து பெரும் கண்டனத்தை பெற்றது. ஆனால் தர்மன் கனகரெட்ணம் அதை பொருட்படுத்தாது ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொண்டார். இது சிங்கப்பூரில் அரசியல் மட்டத்தில் இனவாதம் முளைவிடத்தொடங்கி இருக்கிறது என்பதை காட்டுகிறது. எதிர்காலமே இந்தப் போக்கை நிர்ணயிக்கும்.

இந்த நிலையில்…..!

சிங்கப்பூர் அரசியலை “தமிழண்டா…..”அடையாள அரசியல் ஆக்குவதும், சிங்கப்பூரின் புறம் காலுக்கும் ஒப்பிடமுடியாத இலங்கை சமூக, பொருளாதார வங்குரோத்து அரசியலை வைத்துக்கொண்டு  “சிங்கப்பூராக்குவோம்” என்பதும்  அம்மணமான வாய்ச்சொல் அரசியலே.

 

https://arangamnews.com/?p=9925

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.