Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் ஒரு நிபந்தனை. - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

நீங்கள் கூறும் சொர்க்கபுரிகளிலிருந்து ரஷ்யாவிற்கு குடிபெயர்ந்தவர்களை நீங்கள் அறியவில்லை என்றால் அது உங்கள் அறியாமை.
அதே சொர்க்கபுரிகளிலிருந்து தென்னமெரிக்க நாடுகளுக்கு குடிபெயரும் செய்திகளை அறியா விட்டால் அது உங்கள் அறியாமை
நீங்கள் வாழும் சொர்க்கபுரியிலிருந்து ஆசிய ஆபிரிக்க நாடுள் நோக்கி புலம்பெயரும் செய்திகள் அறியாவிட்டால் அது உங்கள் அறியாமை
ஏன்.....அடுத்த எதிர்காலம் சீனா என சொல்லிக்கொண்டு அங்கே புலம்பெயரும் சொர்க்கபுரியர்கள் ஏராளம்...ஏராளம். அதாவது தெரியுமா?????

இதில் எந்த இடத்திலும் ரஷ்யா நடவடிக்கைகள் சரியானது ..இந்த உலகில் மற்ற நாடுகளை விட.  சிறப்பானது    என்று எடுத்து காட்டப்படவில்லை   போதிய ஆதாரம் கள்.  முன் வைக்கப்படவில்லை    ...எனவேதான் நான்  எழுதியது  ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது   என. உறுதியாக நம்புகிறேன்   ....மற்றைய நாடுகள் பிழைவிடுகுன்றன   என சுட்டி காட்டுவது......ரஷ்யாவின். செயல்களை   ஆதரிக்க...பாரட்ட போதிய கருத்துகள்  இல்லை....அல்லது தகுதிகள் இல்லை   எனலாம்...🤣.  அமெரிக்கா  கனடா.....போன்ற நாடுகளில் வாழ்வோர்......பெரும்பாலும்  ஆசிய ஆபிரிக்கா    கண்டங்களை   சேர்ந்தவர்கள்           இவர்களுக்கு இடம்பெர்வது.   என்பது   ..கைவந்த் கலை    அத்துடன் சிறந்த பொழுதுபோக்கு ஆகும்   .....

18 hours ago, குமாரசாமி said:

கனக்க வேண்டாம்.....நீங்கள் மெச்சி புகழும் சொர்க்கபுரிகளிலிருந்து இலங்காபுரிக்கு குடிபெயரும் வெள்ளையினத்தவர்களின் விடயங்களாவது தெரியுமா?.......தெரியாதா?

ஓ....தெரியும்...கிட்டத்தட்ட இரண்டு கோடி சனம்.   வரும் என்கிறார்கள்.......அடுத்த இலங்கையின் பிரதமர். ஐனதிபதி     நிச்சயமாக ஜேர்மன்காரன்.  தான் .......சிங்களவர்.  இப்போது இலங்கையில் சிறுபான்மையினர்......இடம்பெயர்ந்த ஜேர்மனியன தான் பெரும்பான்மை...😂🤣

  • Replies 75
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kandiah57 said:

ஓ....தெரியும்...கிட்டத்தட்ட இரண்டு கோடி சனம்.   வரும் என்கிறார்கள்.......அடுத்த இலங்கையின் பிரதமர். ஐனதிபதி     நிச்சயமாக ஜேர்மன்காரன்.  தான் .......சிங்களவர்.  இப்போது இலங்கையில் சிறுபான்மையினர்......இடம்பெயர்ந்த ஜேர்மனியன தான் பெரும்பான்மை...😂🤣

கந்தையா....இனிமேல் இப்பிடி பகிடி விடாதேங்கோ....சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறெல்லாம் நோகுது.... :zany_face:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, இணையவன் said:

நல்லது உங்கள் உலக அரசியல் அறிவிற்காக -
ரஸ்யாவிலிருந்து சென்ற ஆண்டு முதல் 6 மாதங்களில் 419000 ரஸ்யர்கள் வெளியேறியுள்ளனர். 369000 ரஸ்யர்கள் சோவியத்திலிருந்து பிரிந்த நாடுகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இதில் 80000 ரஸ்யர்கள் உக்ரெயினுக்குள் புகலிடம் தேடியுள்ளனர். 

இதே வருடத்தில் ரஸ்யாவுக்குள் குடியேறியவர்களின் எண்ணிக்கை 295000.

https://www.rtbf.be/article/guerre-en-ukraine-plus-de-400000-russes-auraient-emigre-au-cours-du-premier-semestre-2022-110610

மேற்குலகு ஊடகங்கள் சொல்வதை நம்பவேண்டும்.அதுதான் உங்கள் தாரக மந்திரம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

தாய்வானுக்கு காலை வாரி விட்டார்கள் அமெரிக்கா. 

10 hours ago, குமாரசாமி said:

கந்தையா....இனிமேல் இப்பிடி பகிடி விடாதேங்கோ....சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறெல்லாம் நோகுது.... :zany_face:

உலக அரசியல் அறிவாளிகளோடுதான் கருத்தாடுவேன், ஏனைய அரைவேக்காடுகளுடன் சேர்ந்து அவிய மாட்டேன் என்பவர் ஏன் இன்னும் இங்கு நின்று முக்கி முனகுகிறார் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, இணையவன் said:

உலக அரசியல் அறிவாளிகளோடுதான் கருத்தாடுவேன், ஏனைய அரைவேக்காடுகளுடன் சேர்ந்து அவிய மாட்டேன் என்பவர் ஏன் இன்னும் இங்கு நின்று முக்கி முனகுகிறார் ?

விடிய வெள்ளனவே போட்டாச்சு போல....

உங்களுக்கெல்லாம் நன்றியுணர்ச்சி உச்சத்தில் நிற்பதால் உலக யதார்த்த/கபட அரசியல் தெரிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2023 at 02:14, nunavilan said:

தாய்வானுக்கு காலை வாரி விட்டார்கள் அமெரிக்கா. 

அமெரிக்கா எப்போதுமே தனது நலன்களின் முன்னால் தாய்வானாவது உலகமாவது... , அதுதான் அமெரிக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

அமெரிக்கா எப்போதுமே தனது நலன்களின் முன்னால் தாய்வானாவது உலகமாவது... , அதுதான் அமெரிக்கா.

உக்ரேனுக்கும் அதே நிலை தான். இங்கு பலர் தெரிவித்து இருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

உக்ரேனுக்கும் அதே நிலை தான். இங்கு பலர் தெரிவித்து இருந்தார்கள். 

உண்மையில் யாழிணையத்தின் உறுப்பினர்களிடையேயான ரஸ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்புப் போர் அல்லது ரஸ்யாவின் மேற்கிற்கெதிரான தற்காப்புப் போர் குறித்த வாதப்பிரதிவாதங்களின் இறுதிநிலையை நாம் காணத்தானே போகின்றோம். இந்தப் போரின் பெறுபேறாக உலக ஒழுங்கில், தொடர்ந்தும் அமெரிக்க நாட்டாண்மையா அல்லது புதியதொரு மாற்றமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மக்களின் அழிவின்மேல் தமது அதிகாரத்தையும், வளச்சுரண்டல்களையும் கட்டமைத்துவரும்  அதிகார மையங்களோ, அவற்றை வழிநடாத்தும் சக்திகளோ அழிவதுமில்லை. ஒரு சிறு கீறுகூடப்படுவதுமில்லை. அப்பாவிகளின் மக்களின் மரணஓலம் இந்த அதிகாரசக்கிகளின் காதில் விழுவதுமில்லை. அதிகார ஓய்விலும் பாதுகாப்பு படாடோபமென உல்லாசமாக மனித அவலங்களின் மேலும், மனிதக் கொலைகளின் மேலும் அனுபவித்து முடித்துவிட்டு மீண்டும் சிலையாகக் கம்பீரமாக நிறுவப்பட்டு நின்றுகொண்டிருப்பர். அதனைப் பராமரிப்பதற்கும் மக்கள் மீது மீண்டும் சுமை. 

இந்தப் போலியான நீதிபேசும் பொய்மை உலகே அழிந்து புதிய உலகு தோன்றினால் மட்டுமே மாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

ரஸ்-உக்ரேன் யுத்தம் ஆரம்பமாகி ஒன்றரை வருடங்களிலேயே புதிய உலக ஒழுங்கு ஆரம்பமாகிவிட்டதை நாம் கண்கூடாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். இந்த மாற்றத்தை ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளின் நடவடிக்கைகளின் ஊடாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தாய்வானுக்கு காலை வாருகிறது உக்ரேனுக்கும் நாளை காலைவார போகின்றது என்று யாழ்கள உறுப்பினர்கள் சிலர் உக்ரேனுக்காக தாய்வானுக்காக குரல் கொடுப்பது கண்ணில் ஆனந்த கண்ணீரை வரவைக்கின்றது 😂
மறுபக்கம் புதிய உலக ஒழுங்கு தொடங்கிவிட்டது என்று மகிழ்ச்சி கொள்கின்றனர். அமெரிக்கா உக்ரேனுக்கும் தாய்வானுக்கும் காலை வாரினால் உக்ரேனும் தாய்வானும் ரஷ்யா சீனாவால் ஆக்கிரமிக்கபடும் இது தான் புதிய உலக ஒழுங்கு முறையோ? உக்ரேன் மீதான  ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆரம்பமாகி 16 மாதங்களாகிவிட்டன. புதிய உலக ஒழுங்கு ஆரம்பமாகிவிட்டதா என்பதை  பார்க்க நாம் ஆபிரிக்க தென்னஅமெரிக்க நாடுகள் நாடுகள் எல்லாம் போக தேவையில்லை.மேற்குலநாடுகளில் உள்ள எம்மவர்களில் ரஷ்ய ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை அவதானித்தாலே போதுமானது.புதிய உலக ஒழுங்கு முறைதொடங்கிவிட்டதா இல்லையா என்பதை துல்லியமாக சொல்லிவிட முடியும்.அவர்கள் நடவடிக்கைகளை அவதானித்ததில் அவர்கள்கள் வழக்கம் போன்றே மிகவும் மகிழ்சியாக மேற்குலநாடுகளில் உள்ளனர். பிரசாரம் மட்டுமே  ரஷ்யாவுக்காக. 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உலக ஒழுங்கு, உலகை ஆளும் பலமிக்க சக்திகளின் கூட்டணி அல்லது தனி நாடுகள் என கொள்ளலாம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இரட்டை ஆளுமை கொண்ட உலக ஒழுங்கு(bipolar world order) நிலவியது இந்த பனிப்போர்காலம் 1991 இரஸ்சியாவின் உடைவின் பின்னர் ஒற்றை ஆளுமை கொண்ட உலக ஒழுங்கு உருவானது.

தற்போது ஏற்பட உள்ள உலக ஒழுங்கைனை பல துருவ உலக ஒழுங்கு (Multi polar world order)என வரைய்றுக்கிறார்கள், இதன் மூலம் பல சமனிலைகள் உருவாகும் பல சுதந்திர நாடுகள் உருவாகும், ஆனால் அதேவேளை உலகம் முழுக்க அமைதின்மை நிலவும் முன்பு போல ஒற்றை ஆளுமை உலக ஒழுங்கில் இவ்வாறான விடுதலை போர்கள் அமைதியின்மையினை உருவாக்குவதால் அவற்றினை நசிக்கிவிடவே துடித்தனர் ஆனால் பலதுருவ உலக ஒழுங்கில் அப்படி இருக்காது, ஆனால் எப்போதும் உலகம் போர் முடிவுறாமல் இருக்கலாம் என கருதுகிறேன்.

அமெரிக்கா நேட்டோ என்பவை இந்த பலதுருவ உலக ஒழுங்கிலும் தொடர்ந்தும் காணப்படும் ஆனால் பல்லுப்போன பாம்பு போல காணப்படும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

உலகம் போர் முடிவுறாமல் இருக்கலாம் என கருதுகிறேன்.

உக்ரேனுக்குத் தனியே சநனாயகத்தின் மீதான உறுதிப்பாட்டிற்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் மட்டும் மேற்கினது கட்டற்ற வாரியிறைத்தல் நிகழவில்லை. உலகிற்கான ஒற்றைத் தலைமையைத் தக்கவைப்பதற்காகவுமே. ஆனால், நீடித்துச்செல்லும் போரானது மக்களை விரைந்து ஒரு சலிப்புநிலையையும் பொருண்மிய இழப்பையும் நோக்கி இட்டுச்செல்வதால், உக்கிரேனின் ஒருமைப்பாட்டிற்காக நாம் பலியாக முடியாதெனும் குரல்கள் வீச்சோடு எழும்போது போர் ஓயலாம். அதுவரை அரசுகளின் அடாவடிகள் தொடரும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kapithan said:

ரஸ்-உக்ரேன் யுத்தம் ஆரம்பமாகி ஒன்றரை வருடங்களிலேயே புதிய உலக ஒழுங்கு ஆரம்பமாகிவிட்டதை நாம் கண்கூடாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். இந்த மாற்றத்தை ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளின் நடவடிக்கைகளின் ஊடாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

ஏற்கனவே ஆபிரிக்க நாடுகளில் சீனா கோலோச்சுகின்றது. மேற்குலகின் ஆயுத வியாபார கலாச்சாரம் இனியும் மூன்றாம் உலக நாடுகளில் எடுபடாது. அதனால் அரபு நாடுகளும் சீனா பக்கம் சாய்ந்து தங்களுக்குள் ஒற்றுமை பேச்சுவார்த்தைகளை  சீனாவின் மத்தியஸ்துடன் ஆரம்பிக்கின்றன.உலகின் முக்கிய பிரச்சனையாகிய பலஸ்தீன பிரச்சனையையும் சீன தன் கைவசம் எடுத்துள்ளது. ரஷ்யாவும் தென்னமெரிக்க நாடுகளும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவும் தெரிவிக்கின்றன. இதுதான் உலகு வேறொரு ஒழுங்கிற்கு சென்று கொண்டிருக்கின்றதிற்கான ஆதாரங்கள்.

சுய நலத்திற்காகவும்,தங்கள் அரசியல் நலன்களுக்காவும், தங்கள்  ஆயுத வியாபாரங்களுக்காகவும், எரிபொருள் நோக்கிய யுத்தங்களுக்காவும் நடத்தப்படும் யுத்தம் உக்ரேனுடன் முடிவுகட்டப்படும் என நினைக்கின்றேன்.

உக்ரெயினை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான தயார்படுத்தலுக்காகச் சென்ற வியாழன் இங்கிலாந்தில் 60 நாடுகள் கூடியுள்ளன. இதற்கான செலவு 411 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உதவியில் உலக வங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரும் பங்கு வகிக்கும். போருக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதுபோல் தெரிகிறது. 

இவை யாவும் போர் கட்டுப்பாட்டுக்குள் விரைவில் வரும் என்பதற்கான அறிகுறிகள் போல் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, இணையவன் said:

60 நாடுகளும் இதற்கு தங்கள் கையால் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கொள்ளைக்கு பேர் போன மேற்குலகு உக்ரேன் யுத்தத்தை காரணம் காட்டி ரஷ்யர்களின் சொத்துக்களை  திருடிய பணமே இதற்கு போதுமானது. 😎

10 minutes ago, குமாரசாமி said:

60 நாடுகளும் இதற்கு தங்கள் கையால் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கொள்ளைக்கு பேர் போன மேற்குலகு உக்ரேன் யுத்தத்தை காரணம் காட்டி ரஷ்யர்களின் சொத்துக்களை  திருடிய பணமே இதற்கு போதுமானது. 😎

60 நாடுகள் பணம் கொடுக்காது. ஏன் 60 நாடுகள் கூடின என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, இணையவன் said:

60 நாடுகள் பணம் கொடுக்காது. ஏன் 60 நாடுகள் கூடின என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. 🙂

அதே சூட்மத்தை தான் ரஷ்யாவும் சீனாவும் மறு பக்கமாக செய்கின்றார்கள்.

தாய்வான் விடயத்தில் அமெரிக்கார் பல்டியாமே? :rolling_on_the_floor_laughing:

Edited by குமாரசாமி
சுய தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

'வாக்னர் குழுவால் மாறிய உலக ஒழுங்கும் ரஸ்யாவும்' என்று பேசுகின்ற நிலையை புதின் ஏற்படுத்திவிடுவார் போலுள்ளது. நேற்று இங்கு உலகில் புதிய ஒழுங்கு என்று எழுதப்பட்டது. எழுதி 24மணிநேரம் கூட ஆகவில்லை. ............ எல்லாம் அவனுக்கே வெளிச்சம். அவனெண்டது கடவுளை....  யாராவது பிறகு, CIA என்றோ  அல்லது வேறு படைகளோ என்று நினைத்துவிடக்கூடாதல்லவா?

நான் நேற்றே  உங்கள்  கனவைக்கண்டேன்

கலைக்க  விரும்பவில்லை

ஆனால் கன நேரம்  நீடிக்காது  இக்கனவு  என்று  மட்டும்  தெரியும்☺️

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2023 at 20:14, nunavilan said:

தாய்வானுக்கு காலை வாரி விட்டார்கள் அமெரிக்கா. 

"தாய்வானுக்கு அமெரிக்கா காலை வாரி விட்டது"😂

இதைச் சொல்வோர் அமெரிக்காவின் தாய்வான் தொடர்பான வெளியுறவுக் கொள்கையை தேடி வாசிக்காமல் 30 செக்கன் காணொலிகளில் இருந்து உலக அரசியல் படிக்கும் அரசியல் அறிஞர்களென நினைக்கிறேன். இவர்களுள் களத்தை நிர்வகிக்கும் மட்டுவும் உள்ளடங்கியிருப்பது தான் உலக அரசியல்  அறிவில் எங்கள் தமிழ் சமூகத்தின் அவல நிலையைக் காட்டுகிறதென நினைக்கிறேன். 

அமெரிக்காவின் தாய்வான் தொடர்பான நீண்டகாலக் கொள்கை: ஒற்றைச் சீனாக் கொள்கை. சுதந்திர தாய்வானை அமெரிக்கா ஆதரிக்காது என்பதை எழுத்திலேயே சொல்லி வருகிறது (2022 இல் வெளிவந்த ஆவணம் கீழே இணைப்பில்).

https://www.state.gov/u-s-relations-with-taiwan/ 

ஆனால், தாய்வானுக்கு சொந்தப் பாதுகாப்பிற்கு அவசியமான ஆயுதங்களை வழங்க வேண்டுமென Taiwan Relations Act என்ற காங்கிரசினால் நிறைவேற்றப் பட்ட சட்டம் நியமித்திருக்கிறது. இந்தச் சட்டத்தை சீனாவும் மௌனமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலை, மூன்று தரப்புகளும் தங்கள் நிலையில் இருந்த படி, சமாதானம் பேண வசதியான ஒரு ஏற்பாடு.

இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவில் தாய்வான் உயர்ஸ்தானிகராலயம் (Taiwan Embassy) என்று ஒன்று இல்லை. தாய்வான் கலாச்சார பொருளாதாரப் பிரதிநிதி மட்டும் தான் இருக்கிறார். 

இதெல்லாம் புரிய தகவல்களை வாசித்து அறியும் ஆர்வம் வேண்டும், தேடும் இயலுமை வேண்டும். சும்மா 30 செக்கன் வீடியோவை வட்சப்பில் விரலால் சுண்டி விட்டு "யுரேக்கா" என்று அம்மணமாக வீதியில் ஓடாமலிருக்க வாசியுங்கள் நண்பர்களே! 😅

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

அமெரிக்காவின் நிக்சன் காலத்தில் இருந்து இருக்கும் One China policy பற்றிய மிக தெளிவான விளக்கம். நன்றி.

One China Policy vs Taiwan Relations Act

இரெண்டுக்கும் இடையான வித்தியாசம்தான் தாய்வான் பற்றிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அமெரிக்காவின் நிக்சன் காலத்தில் இருந்து இருக்கும் One China policy பற்றிய மிக தெளிவான விளக்கம். நன்றி.

One China Policy vs Taiwan Relations Act

இரெண்டுக்கும் இடையான வித்தியாசம்தான் தாய்வான் பற்றிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கை.

நன்றி மீள் வரவுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2023 at 08:29, இணையவன் said:

உலக அரசியல் அறிவாளிகளோடுதான் கருத்தாடுவேன், ஏனைய அரைவேக்காடுகளுடன் சேர்ந்து அவிய மாட்டேன் என்பவர் ஏன் இன்னும் இங்கு நின்று முக்கி முனகுகிறார் ?

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முயலுங்க அதை விட்டு அவரை  குத்தி முனகுகிறார்  என்று  யாழில் எழுத வேண்டாம் முக்கியமாய் அவரை எழுத விட கூடாது என்பதை மறைமுகமாய் "இன்னும் இங்கு நின்று முக்கி முனகுகிறார் ?"என்பது அழகா ஒரு மட்டுவுக்கு ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.