Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியின் தலைநகரில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்த சிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 JUL, 2023 | 03:45 PM
image
 
ஜேர்மனி தலைநகரில் சிங்கமொன்று அலைந்து திரிவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பேர்ளினின் தென்மேற்கு புறநகர் பகுதியில் பெண்சிங்கமொன்று காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அருகில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து சிங்கமொன்று மக்கள் குடியிருப்பிற்குள் வந்துள்ளதை காண்பிக்கும் படம் இன்று டுவிட்டரில் வெளியாகியிருந்தது.

F1eLiyIXwAEaa8t.jpg

இதனை தொடர்ந்து அதனை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

எனினும் உள்ளுர் மிருகக்காட்சி சாலைகளும் சரணாலயங்களும்  சிங்கம் எதுவும் தப்பி வெளியேறவில்லை என குறிப்பிட்டுள்ளன.

சிங்கம் எங்கிருந்து வந்தது என்பது தெரியாது என பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிங்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்து  குறித்து பொதுமக்களுக்கு எச்சரித்துள்ள பொலிஸார் அவர்களை வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளதுடன்  செல்லப்பிராணிகள் குறித்தும் எச்சரித்துள்ளனர்.

ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி சிங்கத்தினை தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

மயக்கஊசிகளுடன் வேட்டைக்காரர்களையும் மிருகவைத்தியர்களையும் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/160503

சிங்கத்தை பிடிக்கும் வரை ஜேர்மனில் வசிக்கும் உறவுகள் பாதுகாப்பாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:
சிங்கத்தை பிடிக்கும் வரை ஜேர்மனில் வசிக்கும் உறவுகள் பாதுகாப்பாக இருங்கள்.

ஜேர்மன் காட்டுக்குள் சிங்கம் வசிப்பதில்லை.
சிலவேளை....பிரான்சில் நடந்த கலவரத்தின் போது, சில சமூக விரோதிகள் 
ஒரு மிருகக் காட்சிச் சாலையை திறந்து விட்ட போது தப்பித்த சிங்கமாகவோ...
தனியார் சர்கஸ் கூடாரத்திலிருந்து தப்பிய சிங்கமாகவோ இருக்கலாம் என்பது எனது ஊகம்.

சில கிறுக்கர்கள்.... வீட்டில் முதலை, மலைப்பாம்பு போன்றவற்றை வளர்ப்பார்கள்.
அப்படி வளர்த்த மிருகங்களை... ஒரு கட்டத்தில் எங்காவது ஆற்றிலோ, 
குளத்திலோ விட்டு விடுவதும் நடந்துள்ளது.
அதைப்  போல் இந்தச் சிங்கத்தையும்... ஆபிரிக்க நாடுகளில் இருந்து  
குட்டியாக கடத்திக் கொண்டு வந்து  வளர்க்கத் தொடங்கி, பிடி பட்டால் பிரச்சினை என்று
ஒரு கட்டத்தில் திறந்து விட்டிருக்கலாம், அல்லது தப்பி ஓடி வந்திருக்கும்.

எதுக்கும்... வீட்டு கதவை, இறுக்கி பூட்டிப் போட்டு படுப்பம். 😂 animiertes-loewe-bild-0046.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ஒருத்தர் உசாராயிட்டார்!

usar.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

ஒருத்தர் உசாராயிட்டார்!

usar.jpg

இந்த சிங்கம் உலாவுற இடத்துக்கும், எனது இடத்துக்கும் 650 கிலோ மீற்றர் தூரம்.
@Kavi arunasalam, @Paanch தப்பி விட்டோம். 😁
@குமாரசாமி, @Kandiah57 அண்ணை ஆட்கள் தான், வெளியில் போகும் போது, சிங்கத்தை அடிக்க… பொல்லு கொட்டனுடன் போக வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பேர்லினின் புறநகர்ப் பகுதியில் உலாவும் சிங்கம் இதுதான்.
ஒரு லொறி சாரதியால், இந்தப்   படம் எடுக்கப் பட்டது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4266.jpg
யேர்மனியின் தலைநகரம்
பேர்லினில்  சிங்கம் ஒன்று பொதுவெளியில் நிற்பதாக நேற்று செய்தி ஒன்று வர, அது தலைப்புச் செய்தியாக உலகெங்கும் வந்திருந்தது.

இன்று அந்த சிங்க வேட்டை நிறுத்தப்பட்டிருக்கிறது என அறிவித்திருக்கிறார்கள்.தங்களால் தேடப்பட்டது சிங்கமாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக அது ஒரு காட்டுப் பன்றியாக இருக்க வேண்டும் என பேர்லின் மேயர் இப்பொழுது அறிவித்திருக்கிறார்.

தேடுதல் பணியில் 220 பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூடவே ட்ரோனன், உலங்கு வானூர்திகள், கவச வாகனம் என பல பயன்படுத்தப் பட்டிருந்தன. இவற்றுக்கான செலவுகள் மட்டும் 100,000 யூரோக்கள் வரும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் 100,000 ‘அம்போ’.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மன் காட்டுக்குள் சிங்கம் வசிப்பதில்லை.
சிலவேளை....பிரான்சில் நடந்த கலவரத்தின் போது, சில சமூக விரோதிகள் 
ஒரு மிருகக் காட்சிச் சாலையை திறந்து விட்ட போது தப்பித்த சிங்கமாகவோ...
தனியார் சர்கஸ் கூடாரத்திலிருந்து தப்பிய சிங்கமாகவோ இருக்கலாம் என்பது எனது ஊகம்.

சில கிறுக்கர்கள்.... வீட்டில் முதலை, மலைப்பாம்பு போன்றவற்றை வளர்ப்பார்கள்.
அப்படி வளர்த்த மிருகங்களை... ஒரு கட்டத்தில் எங்காவது ஆற்றிலோ, 
குளத்திலோ விட்டு விடுவதும் நடந்துள்ளது.
அதைப்  போல் இந்தச் சிங்கத்தையும்... ஆபிரிக்க நாடுகளில் இருந்து  
குட்டியாக கடத்திக் கொண்டு வந்து  வளர்க்கத் தொடங்கி, பிடி பட்டால் பிரச்சினை என்று
ஒரு கட்டத்தில் திறந்து விட்டிருக்கலாம், அல்லது தப்பி ஓடி வந்திருக்கும்.

எதுக்கும்... வீட்டு கதவை, இறுக்கி பூட்டிப் போட்டு படுப்பம். 😂 animiertes-loewe-bild-0046.gif

சிங்கமான சிங்கம் எல்லாம் வீட்டுக்குள் தானே?

அப்புறம் ஏன் பயம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பேர்லினின் புறநகர்ப் பகுதியில் உலாவும் சிங்கம் இதுதான்.
ஒரு லொறி சாரதியால், இந்தப்   படம் எடுக்கப் பட்டது. 

காட்டுப்பன்றிக்கும் சிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அசிங்கப்பட்டார்களே!
நல்ல கண் வைத்தியரிடம் போகச் சொல்லவேணும் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருந்த யேர்மனி இப்படி ஆகிட்டுதே.😄

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2023 at 18:47, ஏராளன் said:

காட்டுப்பன்றிக்கும் சிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அசிங்கப்பட்டார்களே!

ஒரு முக்கியமான மேற்குலக நேட்டோ நாட்டில் இப்படி நடந்தது எனக்கும் ஏமாற்றமாக இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி வந்ததும் நான் சந்தேகப்பட்டேன்.ஆனால்இப்படி அசிங்கமாயிட்டுதே.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2023 at 16:52, Kavi arunasalam said:

தேடுதல் பணியில் 220 பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூடவே ட்ரோனன், உலங்கு வானூர்திகள், கவச வாகனம் என பல பயன்படுத்தப் பட்டிருந்தன.

நல்ல காலம் உக்ரைனுக்குப் போன இராணுவத்தையும் லெப்பாட் டாங்கிகளையும் திருப்பிக் கூப்பிடவில்லை.

எப்படி இருந்த ஜேர்மனி.. அமெரிக்காவுக்கு வால்பிடிக்கப் போய் ஒரு சிங்கத்தின் அதுவும் பெண் சிங்கத்தின் பெயருக்கு அல்லாடும் நிலையில்.. 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2023 at 20:41, தமிழ் சிறி said:

இந்த சிங்கம் உலாவுற இடத்துக்கும், எனது இடத்துக்கும் 650 கிலோ மீற்றர் தூரம்.
@Kavi arunasalam, @Paanch தப்பி விட்டோம். 😁
@குமாரசாமி, @Kandiah57 அண்ணை ஆட்கள் தான், வெளியில் போகும் போது, சிங்கத்தை அடிக்க… பொல்லு கொட்டனுடன் போக வேண்டும். 🤣

நாங்களே’ சிங்கங்கள்.  🤣. எங்கள் நாட்டில் வாழ்பவர்கள்   சிங்கத்துக்குப் பிறந்தவர்கள்.  .....இதுல   உந்த  பெட்டை   சிங்கத்துக்குப்  பயந்து   கொண்டிருக்கவில்லை.  எல்லாம் வழமைபோல நடக்குறது.    

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் கதை சில சமயம் மிகைப்படுத்தலோ,என எண்ணத்தூண்டுகிறது

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

சிங்கத்தின் கதை சில சமயம் மிகைப்படுத்தலோ,என எண்ணத்தூண்டுகிறது

அக்கா,  இன்று அந்த சிங்க வேட்டை நிறுத்தப்பட்டிருக்கிறது என அறிவித்திருக்கிறார்கள்தங்களால் தேடப்பட்டது சிங்கமாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக அது ஒரு காட்டுப் பன்றியாக இருக்க வேண்டும் என பேர்லின் மேயர் இப்பொழுது அறிவித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிலாமதி said:

சிங்கத்தின் கதை சில சமயம் மிகைப்படுத்தலோ,என எண்ணத்தூண்டுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

சில மெத்தப் படித்த அறிவாளிகள்(தீர ஆராயாமல் ) Over active  இப்படி  நடப்பதுண்டு😀

On 22/7/2023 at 23:57, nedukkalapoovan said:

எப்படி இருந்த ஜேர்மனி.. அமெரிக்காவுக்கு வால்பிடிக்கப் போய் ஒரு சிங்கத்தின் அதுவும் பெண் சிங்கத்தின் பெயருக்கு அல்லாடும் நிலையில்.. 

உங்கள் ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து சிங்கத்தையும் தவறாக எடை போட்டுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு அவசர நடவடிக்கை. மக்கள் மேல் உள்ள அக்கறையில் இப்படி நடக்க வாய்ப்புண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2023 at 11:00, இணையவன் said:

உங்கள் ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து சிங்கத்தையும் தவறாக எடை போட்டுள்ளீர்கள்.

இதிலும் ஆணாதிக்கமா.. முடியல்ல.  பிடரியில்லாச் சிங்கமுன்னு சொல்ல வந்தோமுங்கோ. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.