Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நான் 2019 இல் வெளியீடு செய்த சிறுகதைகளில் "ரயில் பயணம்" என்னும் தலைப்பில் ஒரு கதை வருகிறது. நீங்கள் எல்லாம் வாசித்ததுதான்.  புரியாதவர்களுக்காக அதிலிருந்து சில வரிகளை மீண்டும் எழுதுகிறேன்.

எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்தத் திருப்பத்தில் திரும்ப எதுவோ என்னில் வேகமாக மோத ,கைப்பை ஒருபுறமும் காலனியில் ஒன்று ஒருபுறமும் போக, விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான்.

இதுவே அந்தப் பந்தி. எனது சிறுகதையில் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியது தவறு என்று சிலர் கடுமையாகத் தங்கள் கருத்தை முன்வைத்தனர். நாம் சாதாரணமாக எம்மவருடன் கதைக்கும்போது சப்பட்டை என்று சைனீஸ் இனத்தவரையும் காப்பிலி என்று ஆபிரிக்க இனத்தவரையும் அடையார் என்று பிரான்சில் வாழும் மொறோக்கோ இனத்தவரையும் குறிப்பிடுவது சாதாரண ஒன்றாகவே நான் பார்க்கிறேன். இது சாதியைச் சொல்லிக் கதைப்பது போன்றது என்றும் ஒருவர் குறிப்பிட்டார். சாதீயம் என்பது வேறு. ஒரு இனக்குழுமத்துக்கான சொல்லாடல்தான் இப்படியான சொற்கள் என்பதனால் காப்பிலி என்னும் சொல்லை நான் அதுவும் நேர்மறையான "காப்பிலி என்னை விழாது காப்பாற்றினான்" என்று குறிப்பிட்டது தவறல்ல என்கிறேன். அந்த இனத்தவரின் முகத்துக்கு நேரில் அல்லது அவர்கள் காதில் படும்படி நாம் அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதுதான் தவறு. 

நீங்கள் இக்கருத்துபற்றி என்ன எண்ணுகிறீர்களோ உங்கள்  கருத்தைத் தயங்காமல் கூறுங்கள்.

எனக்கு ஞாபக மறதி வந்துவிட்டதனால் முன்னரும் யாழ் களத்தில் இதுபற்றி எழுதினேனா தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தால் அந்த லிங்க்கை இதில் இணையுங்கள்.

  • Replies 84
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Justin

😂தவறேயில்லை! இப்படி நிறைய விடயங்கள் தவறில்லை. உதாரணமாக, உரிமையாளனுக்குத் தெரியாத வரையில் அவனிடமிருந்து எதையாவது "லவட்டி" விடுவதும் தவறல்ல, கண்டால் மட்டும் தான் தவறு! காவல் துறை அக்கப் பக்கம் இல்ல

நிழலி

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு.  காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள்,

goshan_che

நானறிந்த வரை: காப்பிலி என்பது அரபிச்சொல்லான காபிர் இன் திரிபு. ஆசியாவில் இருந்து வட ஆபிரிக்கா நோக்கி நகர்ந்த அரபிகள், நம்பிக்கையற்றவன் என்ற பொருளில் காபிர் என அப்போ முஸ்லிம் அல்லாதவர்களாக இர

Posted

வணக்கம் சுமே,

ஆம் இது மிகவும் தவறான அவச் சொல் தான். கருப்பின மக்களை தரம் தாழ்த்த எம்மவர்களால் பயப்படுத்தப்படும் நிறவெறி கொண்ட ஒரு சொல்.

யாழ் விதிகளின் படி, இச் சொல்லை யாழில் எங்கும் பயன்படுத்தவும் முடியாது - தலைப்பில் உட்பட.

நன்றி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

இந்தக் காப்பிலி என்ற சொல்லானது அவர்களது தலைமையிரை வைத்து குறிப்பிடும் ஒரு சொல் என்பது என்னுடைய கருத்து.

இச்சொல் இன்றளவும் என்னுடைய வீட்டில் எனது/ என் போன்ற இளையோர்/ஆண்கள் தலைமையிர் ஒழுங்கீனமாக இருந்தால் அதைக் குறிப்பிட என்னுடைய உறவினர்களால் பாவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காப்பிலி தமிழில் உரையாடுபவர்கள் பாவிப்பத்தால்.. அதன் தாக்கம் சரியாக அந்த நிறத்தவரால் விளங்கிக் கொள்ளப்படவில்லை.

ஆனால்.. நீக்குரோ என்பது எப்படி இனரீதியான அவமானச் சொல்லாகப் பார்க்கப்படுகிறதோ.. அதே காப்பிலிக்கும் இருக்கிறது எனலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை காப்பிலி அல்லது இலங்கை காபிர் அல்லது இலங்கை ஆப்பிரிக்கர் (Sri Lankan Kaffirs, போர்த்துக்கீச மொழி: cafrinhas, சிங்களம்: කාපිරි) எனப்படுவோர் 16ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போது, ஆப்பிரிக்க அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளூர் மக்களுடன் கலந்து ...

https://ta.wikipedia.org/wiki/இலங்கை_ஆப்பிரிக்கர்

https://sivamaalaa.blogspot.com/2020/03/blog-post_18.html

ஆவிற்கு இடம் கட்டிக்கொடுத்தவன் ஆவிலி > ஆவிலியன்.   இனி  ஆவிலாமல் வேட்டுவனாக வாழ்பவன் ஆவிலி யாவதும் காண்க. இடனும் வரலாறும் நோக்கிப் பொருள்கொள்ளுதல் வேண்டும். 

பாதுகாப்பிலாதவன் காப்பிலி எனலும் தனக்குக் காவல் இல்லம் அமைத்து வாழ்பவன் காப்பிலி ஆவதும் வரலாறு நோக்கியே தீர்மானிக்கத் தக்கவை என்பதுமறிக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  பாது காப்பு இல்லாதவன்    காப்பு +இலி (இல் )  காப்பிலி .

இப்படியும் சொல்லலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானறிந்த வரை:

காப்பிலி என்பது அரபிச்சொல்லான காபிர் இன் திரிபு.

ஆசியாவில் இருந்து வட ஆபிரிக்கா நோக்கி நகர்ந்த அரபிகள், நம்பிக்கையற்றவன் என்ற பொருளில் காபிர் என அப்போ முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்த கறுப்பின மக்களை அழைத்தனர்.

அதுவே பின்னர் திரிபடைந்து காப்பிரி, காபிரிஸ், தமிழில் காப்பிலி என வழங்கப்படுகிறது.

தமிழில் காப்பிலி என்பது நிகர், பக்கி, போன்ற ஒரு வசைபு சொல்லா? அல்லது பிளக், வையிட் போன்ற ஒரு அடையாளச்சொல்லா?

என்னை பொறுத்தவரை இது ஒரு அடையாளச்சொல் என்றே கருதுகிறேன். ஆனால் slang எனப்படும் வழக்குத்தொடர். Formal எழுத்தில் கறுப்பினத்தவர் என்பதை பாவிக்கலாம். ஆனால் கதைகளில் பேச்சு வழக்காக எழுதும் போது காப்பிலி என எழுதலாம் என்றே நினைக்கிறேன்.

தொட்டதை எல்லாம் தடை செய்யும் cancel culture இன் ஒரு நீட்சியாக இந்த சொல்லையும் தடை செய்வதாகவே எனக்குப்படுகிறது.

————

இது சம்பந்தமான கட்டுரை ஒன்று

———————

இலங்கைவாழ் காப்பிரி இனமும் பண்பாடும் - சிரம்பியடி பிரதேசம் பற்றிய ஒரு சமூகவியல் பார்வை

பரந்துவிரிந்து கிடக்கின்ற இவ்வுலகில் வாழ்க்கையோடு தினம் போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் தம் வாழ்வினை அர்த்தப்படுத்தும் ஒரு செயன்முறையாக கருதுவது தமது கலாசாரத்தினையும் பண்பாட்டு நடைமுறைகளையும் தான். தம்மை உலக அரங்கிற்கு பல்வேறு கோணங்களிலும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் ஓர் இனமே காப்பிரி இனமாகும். வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின் சிரம்பியடியில் இவர்களில் பெரும்பான்மையானவர்களும் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே சிலரும் வாழ்கிறார்கள்.

காப்பிரி என்ற சொல்லானது காப்பிரி சமூகத்தின் பூர்வீக கண்டமாகக் கருதப்படுகின்ற தென்னாபிரிக்க, மத்தியாபிரிக்க நிலப்பரப்பின் பழங்குடிகளான 'பண்டு' இனத்தை குறிக்கும் பழமையான சொல்லிலிருந்து வந்தது என்றும் இப்பூர்வீக இனமே போர்த்துக்கீசரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு காலனித்துவ இலங்கையின் பல வரலாற்றுப் பக்கங்களை நிரப்பியது என்றும், அவர்கள் இன்றைய இலங்கையின் சிறுபான்மைச் சமூகமாகக் காணப்படுகின்ற ஆபிரிக்கர்களாகவுள்ளனர்.

இக்காப்பிரி என்ற சொல்லுக்கு மற்றொரு விளக்கமும் உள்ளது. அதாவது ஆபிரிக்கா கண்டத்திற்குள் ஐரோப்பியரின் ஊடுருவல் ஆரம்பமாவதற்கு முன்பே ஆபிரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவியிருந்ததாகவும்,போர்த்துக்கீசரின் வசம் ஆபிரிக்கா சிக்கிக்கொள்ள அவர்களில் கணிசமானவர்கள் கத்தோலிக்க மதத்தை தழுவியிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இஸ்லாத்தை நிராகரித்தவர்களைக் குறிக்கும் 'கபிர்' என்ற அரபுச்சொல் 'மயக்கை' ஆகி அதுவே தமிழில் காப்பிரியாக வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர்.

கி.பி 5ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசரினால் ஆபிரிக்காவிலிருந்து சிப்பாய்களாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவர்களாக இக்காப்பிரி சமூகத்தவர்கள் காணப்படுகின்றனர். போர்த்துக்கீச மாலுமிகள் முதற் தொகுதிக் காப்பிரியர்களை அப்போதைய சிலோனுக்கு 1500ம் ஆண்டு கொண்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்களாவர். கி.பி 5ம் நூற்றாண்டில் எத்தியோப்பிய வணிகர்கள் மாதோட்டத் துறைமுகத்தில் வணிகம் செய்திருக்கின்றார்கள். அதன் பின்னர் முதன்முறையாக 1631.10.13இல் நூறு காப்பிரியர்கள் கோவா துறைமுகம் வழியாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்கள் என வரலாற்று சான்றுகள் எடுத்தியம்புகின்றன. காப்பிரி மக்கள் அங்கோலாவிலும், மொசாம்பிக்கிலும் ஆபிரிக்கக் கண்டத்தின் வேறு சில பகுதிகளிலிருந்தும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.
 
இவ்வாறு வேலைகளுக்காகக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆரம்பத்தில் கோட்டைகள் அமைத்தல், பாதுகாப்பு வழங்குதல், கடற்படையின் ஓர் அங்கமாக செயற்படல், வீட்டுவேலைகள் செய்தல் மற்றும் படைத் துறையிலும் வேலைக்காக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அத்தோடு போத்துக்கீசப் படைத்தளபதி 'Diego de Mello de Castro' 1638ஆம் ஆண்டு கண்டி மீது படையெடுத்த போது அதில் 300காப்பிரிகள் பங்கேற்றதாக இலங்கை வரலாறு கூறுகின்றது.இதைத் தொடர்ந்து இலங்கை போத்துக்கீசரிடம் இருந்து டச்சுக் காரர்களின் ஆட்சியில் சிக்க, காப்பிரிகளும் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் இணைக்கப்பட்டார்கள்.

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியும் மேலும் ஆபிரிக்க மக்களை இலங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்தது. 1675-1680 காலப்பகுதியில் டச்சுத்தளபதியாக பணியாற்றிய “Van Goens Jr”' இனுடைய காலத்தில் டச்சுப் படையில் இருந்த காப்பிரிகளின் எண்ணிக்கை 4000ஆகக் காணப்பட்டது.போர்த்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கும் அடிமைமோகம்
உருவாகியது. இக்காலத்தில் இலங்கை ஆயுதப் படையினருக்கு எதிராக காப்பிரிப்படைப் பிரிவுகளில் போரிடுவதற்காக பிரித்தானியக் குடியேற்ற வாசிகள் ஏனைய காப்பிரிகளை இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

பிரித்தானியாவின் முதலாவது ஆளுனர் “Frederick North” என்பவர் ஒருவருக்கு 125 ஸ்பானிய டொலர் என்ற விலைப்படி மொசாம்பிக் அடிமைச் சந்தையில் கறுவாவும்  பணமும் கொடுத்து ஒரு பண்டமாற்றுப் பொருள் போல ஆபிரிக்க மக்களை விலைபேசி வாங்கிக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து இலங்கை ஆளுனராகப் பதவியேற்ற “Bestowed” மேலும் பல காப்பிரியர்களை இலங்கைக்குக் கொண்டு வந்தார். அத்தோடு போர்த்துக்கீசரின் கோவா அடிமைச் சந்தையில் பணத்திற்கும், பண்டத்திற்கும் காப்பிரி மக்கள் விற்கப்பட்டதால் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு தேவையான போதெல்லாம் கோவாவிலிருந்து காப்பிரியர்களை திருகோணமலை வழியாக இலங்கைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1815இல் பிரித்தானிய படைத்தலைவராக இருந்த 'அல்விஸ் ஜெமாடர்' தென்னாபிரிக்கச் சந்தையில் இருந்து பெருந்தொகையில் காப்பிரிகளைக் கொண்டுவந்து சேர்த்தார். அதற்குப் பின்னரான காலத்தில் பிரித்தானியப் படையின் 3ம், 4ம் படைப்பிரிவுகள் முழுமையான கருநிறத்தோடு காப்பிரிகளை மட்டுமே கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தன. முன்னிருந்த
காலங்களைக் காட்டிலும் “Bertolacci” இனுடைய காலத்திலே 9000இற்கும் அதிகளவான காப்பிரிகள் கொண்டுவரப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1815-1817 காலப்பகுதியில் பிரித்தானியருக்கு ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறை காரணமாக காப்பிரிகள் இருந்த படையணிகள்
கலைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து இலங்கை நாடானது சுதந்திரம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட காப்பிரி மக்களை திருப்பிக் கொண்டுசெல்ல யாருக்கும் துணியவில்லை. அதனால் அவர்கள் இலங்கையிலேயே தங்கி தம் வாழ்க்கையினை நடாத்த வேண்டிய
கட்டாயத்திற்கு ஆளாகினர்.  இதனால் இம்மக்கள் எதற்காக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்களோ அதிலிருந்து கைவிடப்பட்டதனால் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்லாமலும் வேறு எந்தத் தொழிலும் செய்ய முடியாமலும் இவர்கள் தமது வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக
சிறுசிறு வேலைகளைச் செய்து இலங்கையிலேயே திருகோணமலை, புத்தளம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கண்டி உள்ளிட்ட பல இடங்களில் தமது வாழ்க்கையினை தொடர்ந்தார்கள்.

இலங்கையில் நீர்கொழும்பு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் வாழுகின்ற இம்மக்களது கலாசாரமும் பண்பாட்டு   செல்நெறியும் எவ்வாறாக காணப்படுகின்றது என்பதனை நோக்கினால், பல்லினக் கலாசாரத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலக நாடுகளின் சரித்திரங்களும், நியமங்களும் அந்தந்த நாட்டின் இனங்களுக்கிடையே தொன்று தொட்டுக் காணப்பட்டு வருகின்ற கலாசாரங்களினதும் பண்பாட்டு நடைமுறைகளினதும் வெளிப்பாடாகும்.

இவ்வாறான வெளிப்பாடு ஒவ்வொரு சமூகங்களுக்கிடையேயும் நிலவி வருகின்ற பழக்கவழக்கங்கள், கலை, கலாசாரம், பண்பாடுகள், விழுமியங்கள், வாழ்க்கை நடைமுறைகள், நம்பிக்கைகள், ஒழுக்கக் கோட்பாடுகள் என்பவற்றோடும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையின் சிந்தனையோடும் தொடர்புடையதாக காணப்படுகின்றது. ஆசியாவின் அதிசயம்  என்று இலங்கை  தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம்  உள்நாட்டிலும்  வெளிநாட்டிலும் பெரிதாக பேசப்படாமல் இருப்பது வியக்கத்தக்கது.

அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். இவர்களே இன்று பெருவாரியாகப் பேசப்படும் காப்பிரி இனத்தவராவர். இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூறக் கேட்டதாகக் கூறினாலும், அது முற்றிலும் சரியா, அப்படியென்றால் மொசாம்பிக் நாட்டின் எப்பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் அருந்தலாக காணப்படுகின்றமை கவலைக்குரியதே.

1505 ஆம் ஆண்டுகளுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டதாக கருதப்படும் இவர்களில் இன்று எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின் சிரம்பியடி பகுதியிலும் சிறு எண்ணிக்கையானோர் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ளனர்.

இவர்களின் கலாசார பண்பாட்டு கோலங்களை நோக்கும் போது மொழியானது காப்பிலி மொழி, சிங்களம், தமிழ், மற்றும் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழியினை பேசுபவர்களாகவும் சமயத்தினை பொறுத்தமட்டில் இஸ்லாம், உரோமன் கத்தோலிக்கம், பௌத்தம் ஆகிய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும்  பறங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர் ஆகிய
இனக்குழுக்களுடன் தொடர்புள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர்.
மக்களது வாழ்வியலை பிரதிபலிக்கின்ற பல்வேறு அம்சங்களில் பிரதானமாக காணப்படுவது மொழி ஆகும். இவர்களது மொழி போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆப்பிரிக்க) கிரியோல் மொழியாக இருந்தபோதிலும் தற்போது சிங்களமே இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது.

மேலும் போர்த்துகீச மொழியானது தற்போது மிக குறைந்தளவிலே காணப்படுகின்றது என்றும் ஆபிரிக்காவில் இருந்து இராணுவ நடவடிக்கைகளுக்காக அழைத்து வரப்பட்ட இம்மக்களது பழமையின் எச்சமாக எஞ்சி நிற்பது தமது போர்த்துக்கீச மொழியிலான பாடல்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் பண்பாட்டு மாற்றம், பண்பாட்டு பரவல், பண்பாட்டு நகர்வு என்பனவற்றின் ஊடுருவல் காரணமாகவும் பல்வேறு உலகமயமாக்கல் செயற்பாடுகளின் விளைவுகள் குறித்தும் வாழ்வியல் அம்சங்களில் ஏற்பட்ட மாற்றம் காப்பிரி இனத்தவரின் மொழியிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

ஆயினும் பழமையின் எண்ணமும் அவர்களது பண்பாட்டு விடயங்களும் அழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் இன்றும் தம் தனித்துவத்தை பேணி பாதுகாக்க முயற்சிக்கின்ற போக்கினை காணக்கூடியதாக இருந்தது. அதாவது போர்த்துக்கீச மொழியில் பரீட்சியமாக இருப்பது பாடல்கள் தான் என கூறிய
இவர்கள் அப்பாடல்களுக்கான அர்த்தத்தினையும் தாம் தற்போது கற்று வருவதாக கூறினர். மற்றும் சில போர்த்துக்கீச மொழியிலான சொற்களும் புழக்கத்தில் காணப்படுகின்றன எடுத்துக்காட்டாக (ஹாகு - தண்ணீர், பெபே-குடித்தல், குமே - சாப்பிடுதல், மாஞ்சா - பைலா பாட்டு, மம்மா - அம்மா, பப்பா - அப்பா) போன்ற சொற்களை
குறிப்பிடலாம்.

புத்தளத்தில் ஆபிரிக்க காப்பிரிய இன குடும்பங்கள் 50 அளவில் வாழ்கின்றன.
திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் ஆபிரிக்க காப்பிரி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலையில் வாழும் ஆபிரிக்க காப்பிரியர்களுடன் இவர்களுக்குத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால் மட்டக்களிப்பில் வாழும் ஆபிரிக்க காப்பிரியர்களுடனான தொடர்புகள் இவர்களுக்குக் குறைவு என்றே கூற வேண்டும். காரணம் மட்டக்களப்பில் வாழும்; இவ்வினத்தவர்கள் தமிழ் மொழியையே பேசுகின்றவர்களாக காணப்படுவதனால் திருகோணமலை மற்றும் புத்தளம் போன்ற பகுதிகளில் வாழும் ஆபிரிக்க காப்பிரியர்களுக்கும் மட்டக்களிப்பில் வாழும் ஆபிரிக்க காப்பிரியர்களுக்கும் இடையிலான சமூக இடையூடாட்டம் என்பது குறைவானதாகவே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காப்பிரி இனத்தவர்களது திருமண நடைமுறைகளை நோக்கும்போது ஆரம்ப காலங்களில் ஒருமண முறை மட்டுமே காணப்பட்டதாக கூறப்பட்டது. தற்காலத்தில் இவ்வினத்தவர்கள் சிங்களவர்களுடன் கலப்புத் திருமணங்களை  செய்து வருகின்றனர். மேலும் சிரம்பியடியில் வாழும் காப்பிரி இனத்தவர்களிடையே மறுமணம் என்பது மறுக்கப்பட்ட ஓர் விடயமாக காணப்படுகின்றமை வியக்கத்தக்க ஓர் உண்மையாக காணப்படுகின்றது. இம்முறை ஏனைய பிரதேசங்களில் வாழும் காப்பிரி
இனத்தவர்களிடம் இருந்து இப்பிரதேச மக்களது கலாசாரத்தின் தனித்துவத்தினை எடுத்தியம்புவதாக காணப்படுகின்றது.

மேலும் இவ்வாறான கலப்புத் திருமணங்களை செய்து கொள்வதனால் அவர்களது இளம் தலைமுறையினரின் முகத் தோற்றத்தில் வித்தியாசங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது. எனவே ஆபிரிக்க இனத்தவர் என்பதற்கான அடையாளங்கள் இளம் தலைமுறையினரில் படிப்படியாக குறைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. மற்றும் வேறு இனத்தவர்களை திருமணம் செய்த போதும் அதனால் எவ்வித பிரச்சினைகளோ பூசல்களோ காணப்படவில்லை எனவும் இந்த வாழ்க்கை முறையில் தாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பண்பாட்டு விடயங்களில் அதீத ஆர்வமும் அக்கறையும் கொண்ட இம்மக்களது மதமானது உரோமன் கத்தோலிக்க மதமாக காணப்படுகின்றது. மற்றும் மதம் இம்மக்களை சமூகத்தில் ஒற்றுமையாகவும் நல்ல இடைவினை புரியத் தூண்டும் ஊடகமாகவும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மதம் ஒரு முரண்பாட்டு காரணியாக காணப்படும் இவ்வுலகில் காப்பிரியர்களின் மதமானது சில கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட்ட போதும் அது வாழ்வை நெறிப்படுத்துவதற்கான ஒரு மார்க்கம்
தான் என்றும் மதமே தம்மை ஒற்றுமையாகவும் சமூகத்தில் நல்ல பிரஜையாகவும் வாழ வழிசெய்கின்றது என்றும் இவ்வினத்தவர்கள் கூறுகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.

காப்பிரி இனத்தவர்களின் உணவு பழக்கவழக்கங்களை எடுத்துக்கொண்டால் இலங்கையரின் பிரதான உணவான நெல் அரிசிச்சோறு தான் இவர்களதும் பிரதான உணவாக காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி சிரம்பியடியில் வாழும் காப்பிரி மக்கள் மாட்டிறைச்சியினை உண்பதை பாவச்செயலாக கருதுகின்றமையும் ஆதலால் தாம் அதனை உண்பது இல்லை எனவும் கூறுகின்றனர். இவ்வின மக்கள் இசை மற்றும் நடனத்தை மிகவும் நேசிப்பவர்களாகவும் அவர்களின் இசையின் அடிநாதத்தில் ஆப்பிரிக்க  இசை வடிவத்தின்  தாக்கம் இருந்தாலும் தற்போது உள்ளூர் இசையின் கலப்பும் உள்ளது. இசையும் நடனமும் இவர்கள் வாழ்வில் ஒரு அங்கம் என்றே கூறவேண்டும்.

அவர்களின் சமூக ஒன்றுகூடல்களில் இசையும் நடனமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் புகழ்பெற்ற 'பைலா' என்ற இசை ஆட்டத்திலிருந்து 'கப்ரிஞ்சா' மற்றும் 'மஞ்சா' என்னும் அவர்களது ஆடல் பண்பாட்டுத் தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. இசை எனும் போது தமக்கான இசை கருவிகளை தாமே தயாரித்துக் கொள்கின்ற தன்மையும் இசைக்கருவிகளாக டோல், றபான், சிரட்டைகள், கண்ணாடி போத்தல்கள், மற்றும் கரண்டிகள் போன்றவற்றினை பயன்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இம்மக்களும் அவர்தம் பண்பாட்டு கலாசார நடைமுறைகளும்; எந்தளவிற்கு இலங்கை சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து அறியப்பட வேண்டியது அவசியமாகும்.இலங்கையில் பல்லினக் கலாசாரத்தின் வருகை மிக வேகமாக இருந்துள்ளது என்பதற்கு எமது நாட்டில் காணப்பட்டு வருகின்ற இருபது வகை சமூகங்களை உதாரணமாகக் கூறலாம். இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களிலும் பல்லினக்கலாசாரம் வேரூன்றிக் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு வரலாற்றுப் பின்னணி எமது நாட்டில் தற்போதும் நிலவி வருகின்றது என்பதற்கு இங்கு வசிக்கின்ற முக்கியமான சமூகங்கள் ஆதாரமாக விளங்குகின்றன.
 
இக்காப்பிரிச் சமூகமானது பல ஆண்டுகளுக்கு முன் இலங்கை நாட்டுக்கு வந்தபோதிலும் அவர்கள் தம்முடைய கலாசார பண்பாடுகளைத் தாண்டி இலங்கையில் காணப்பட்ட பிரதான சமூகங்களுக்குள் ஊடுருவி தமது வாழ்வை மாற்றிக் கொண்டதால் இவர்களை வேறுபடுத்திப் பார்க்கின்ற நிலை தென்படவில்லை. அதாவது எமது நாட்டில் காணப்படுகின்ற தமிழ், சிங்களம், முஸ்லிம், பறங்கி என்ற சமூகத்திடையே தமது கலாசாரங்களை ஊடுருவ விடாவிட்டாலும் கலப்புத் திருமணம், சமூக ஒருமைப்பாடு என்ற ரீதியில் காப்பிரி சமூகம் இலங்கை மக்களின் சமூக சரித்திரங்களைப் பின்பற்றி இணைந்து வாழ்கின்றார்கள் என்பது எமது நாட்டு கலாசார வரலாறுகளில் காணப்படுகின்றஉண்மையாகும்.

மேலும் ஆரம்ப காலங்களில் எவராலும் அறியப்படாத இனமாக காணப்பட்ட இவ்வினக்குழுவிற்கென தனியான ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளமையும் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றாக இவ்வினமும் இணைத்துக் கொள்ளப்பட்டமையும் காத்திரமான சமூகக் கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக அமைகின்றதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.காப்பிரி என்ற ஓர் சமூகக்குழு இருப்பதே எம்மில் பலருக்கு தெரியாது. இன்று பல்கலைக்கழகம், பாடசாலை மாணவர்கள் அவர்களை கற்கச் சென்று பார்த்து வருகின்ற நிலைப்பாடு அவர்கள் மீதான தேடலையும், வெளிப்பார்வையையும் எமக்கு எடுத்துரைக்கின்றது.

காப்பிரியர் என்று வர்ணிக்கப்படும் இவர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகுந்த பிரயத்தனத்துடன் தமது வெளித்தோற்றங்களை மாற்றிக் கொள்கின்ற தன்மை இன்று பரவலாக காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளால் அச்சமூகத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாற்றப்பட்டு வருவது அவர்களின் எதிர்கால இருப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

ஈழத்துச் சூழலில் விபத்தாக கிடைத்த பெரும் சொத்தே காப்பிரியரகள். இவர்களின் பண்பாடும் கலாசார அடையாளங்களும் எமது நாட்டின் பண்பாடுகளுக்கு வளம் சேர்ப்பதாக இருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மீதான எமது கவனம் மிக முக்கியமானது. அவர்களின் பண்பாடுகளை பற்றியும் அடையாளங்களைப் பற்றியும் கலந்தரையாடுவதும் அதற்கான அவசியப்பாட்டையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதும்  அவசியம்.

அத்துடன் சொந்த  கலாசார பண்பாட்டு விடயங்களுக்கு  மதிப்பளிக்கின்ற அதேநேரம், பிறபண்பாட்டு விழுமியங்கள், கலாசாரம் மீதான அக்கறையும், நம்பிக்கையும்; மதிப்பும் பற்றிய எண்ணத்தை சிரத்தையில் கொண்டு நடப்பது பல்லின, மொழி, சமய,  கலாசார மக்களையுடைய ஒரு நல்ல இலங்கைத் திருநாட்டை கட்டியெழுப்ப துணைபுரியும் என்பது திண்ணம்.
 
இராமலிங்கம் தயாணி

சமூகவியல் விடுகை வருடம்

கிழக்குப்பல்கலைக்கழகம்

சமூக விஞ்ஞானங்கள் துறை

http://www.battinews.com/2016/01/blog-post_9.html?m=1

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் 2019 இல் வெளியீடு செய்த சிறுகதைகளில் "ரயில் பயணம்" என்னும் தலைப்பில் ஒரு கதை வருகிறது. நீங்கள் எல்லாம் வாசித்ததுதான்.  புரியாதவர்களுக்காக அதிலிருந்து சில வரிகளை மீண்டும் எழுதுகிறேன்.

எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்தத் திருப்பத்தில் திரும்ப எதுவோ என்னில் வேகமாக மோத ,கைப்பை ஒருபுறமும் காலனியில் ஒன்று ஒருபுறமும் போக, விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான்.

இதுவே அந்தப் பந்தி. எனது சிறுகதையில் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியது தவறு என்று சிலர் கடுமையாகத் தங்கள் கருத்தை முன்வைத்தனர். நாம் சாதாரணமாக எம்மவருடன் கதைக்கும்போது சப்பட்டை என்று சைனீஸ் இனத்தவரையும் காப்பிலி என்று ஆபிரிக்க இனத்தவரையும் அடையார் என்று பிரான்சில் வாழும் மொறோக்கோ இனத்தவரையும் குறிப்பிடுவது சாதாரண ஒன்றாகவே நான் பார்க்கிறேன். இது சாதியைச் சொல்லிக் கதைப்பது போன்றது என்றும் ஒருவர் குறிப்பிட்டார். சாதீயம் என்பது வேறு. ஒரு இனக்குழுமத்துக்கான சொல்லாடல்தான் இப்படியான சொற்கள் என்பதனால் காப்பிலி என்னும் சொல்லை நான் அதுவும் நேர்மறையான "காப்பிலி என்னை விழாது காப்பாற்றினான்" என்று குறிப்பிட்டது தவறல்ல என்கிறேன். அந்த இனத்தவரின் முகத்துக்கு நேரில் அல்லது அவர்கள் காதில் படும்படி நாம் அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதுதான் தவறு. 

நீங்கள் இக்கருத்துபற்றி என்ன எண்ணுகிறீர்களோ உங்கள்  கருத்தைத் தயங்காமல் கூறுங்கள்.

எனக்கு ஞாபக மறதி வந்துவிட்டதனால் முன்னரும் யாழ் களத்தில் இதுபற்றி எழுதினேனா தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தால் அந்த லிங்க்கை இதில் இணையுங்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பான கருத்துக்கள் கோஷான்-சே ...........எனக்குத் தெரிந்ததெல்லாம் முன்பு ஆச்சிமார் பிள்ளைகளை வெருட்ட அந்தச் சொல்லைப் பாவிப்பார்கள்.......!  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை இது ஒரு அடையாளச்சொல் என்றே கருதுகிறேன். ஆனால் slang எனப்படும் வழக்குத்தொடர். Formal எழுத்தில் கறுப்பினத்தவர் என்பதை பாவிக்கலாம். ஆனால் கதைகளில் பேச்சு வழக்காக எழுதும் போது காப்பிலி என எழுதலாம் என்றே நினைக்கிறேன்.

மேற்கு நாட்டவர் குறிப்பாக இங்கிலாந்தில் கறுப்பு இனத்தவர் என்று பொருள்படblack என்ற சொல்லைபாவிக்கிறார்கள் . ஆனால் நீக்கிரோ என்ற சொல்லைப் பாவிப்பதை இனத்துவேசத்தில் பார்க்கிறார்கள்.
தமிழில் ஆபிரிக்க இனத்தவர் என்ற பொருளில் காப்பிலி என்று பாவிக்கிறார்கள் இனத்துவேசத்துடன் அதைப்பாவிப்பதாகத் தெரியவில்லை.ஆனால்கறுப்பர்கள் என்று பாவிப்பதை இங்கு பிறந்த பிள்ளைகள் விருமபவில்லை என்று உணர முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏதிலிகள்: ஏதும் இல்லாதவர்கள்

காப்பிலிகள்: காப்பு (பாதுகாப்பு இல்லாதவர்கள்)

நாங்கள் காப்பிலிகள். 

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு ஞாபக மறதி வந்துவிட்டதனால் முன்னரும் யாழ் களத்தில் இதுபற்றி எழுதினேனா தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தால் அந்த லிங்க்கை இதில் இணையுங்கள்.

ஞாபக மறதி உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் போடலாமா? 😇

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிஞ்சால் வந்து இலங்கையில வம்பு இழுத்து பாருங்க பின்ன  தெரியும் எத்தனை சாதி எத்தனை வசை சொல் வந்து காதில் பாயுமென

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, suvy said:

சிறப்பான கருத்துக்கள் கோஷான்-சே ...........எனக்குத் தெரிந்ததெல்லாம் முன்பு ஆச்சிமார் பிள்ளைகளை வெருட்ட அந்தச் சொல்லைப் பாவிப்பார்கள்.......!  👍

இதில் நீங்கக்கள் எந்தக் கருத்தையும் வைக்கவில்லையே நான் எழுதியது தொடர்பாக????

11 hours ago, யாயினி said:

நான் எழுதியிருப்பது இதல்ல. நான் எழுதியது தொடர்பான உங்கள் கருத்தை முன்வையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, நிழலி said:

வணக்கம் சுமே,

ஆம் இது மிகவும் தவறான அவச் சொல் தான். கருப்பின மக்களை தரம் தாழ்த்த எம்மவர்களால் பயப்படுத்தப்படும் நிறவெறி கொண்ட ஒரு சொல்.

யாழ் விதிகளின் படி, இச் சொல்லை யாழில் எங்கும் பயன்படுத்தவும் முடியாது - தலைப்பில் உட்பட.

நன்றி

எம்மவர்கள் வாக்குக்கண், பல் மிதப்பு என்றும் வெள்ளைச்சி என்றும் பயன்படுத்துவதுதானே ??? அச்சொற்களை அந்த நபர்களுக்கு முண் அல்லது அவர்கள் காதுபடக் கூறுவதுதான் தவறு.

13 hours ago, நன்னிச் சோழன் said:

இந்தக் காப்பிலி என்ற சொல்லானது அவர்களது தலைமையிரை வைத்து குறிப்பிடும் ஒரு சொல் என்பது என்னுடைய கருத்து.

இச்சொல் இன்றளவும் என்னுடைய வீட்டில் எனது/ என் போன்ற இளையோர்/ஆண்கள் தலைமையிர் ஒழுங்கீனமாக இருந்தால் அதைக் குறிப்பிட என்னுடைய உறவினர்களால் பாவிக்கப்படுகிறது.

ஆபிரிக்க இனத்தவரின் தலைமுடியைக் குறிக்கும் சொல்தான் அது. உங்கள் கருத்தை நேரடியாகக் கூறவில்லை. அப்படி நான் குறிப்பிட்டது தவறா???

12 hours ago, நிலாமதி said:

  பாது காப்பு இல்லாதவன்    காப்பு +இலி (இல் )  காப்பிலி .

இப்படியும் சொல்லலாம்.   

அதுவல்ல என்  பதிவின் நோக்கம். நான் எழுதியது சரியா ??? தவறா /// என்பதுதான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, nedukkalapoovan said:

காப்பிலி தமிழில் உரையாடுபவர்கள் பாவிப்பத்தால்.. அதன் தாக்கம் சரியாக அந்த நிறத்தவரால் விளங்கிக் கொள்ளப்படவில்லை.

ஆனால்.. நீக்குரோ என்பது எப்படி இனரீதியான அவமானச் சொல்லாகப் பார்க்கப்படுகிறதோ.. அதே காப்பிலிக்கும் இருக்கிறது எனலாம். 

அந்த நிறத்தவர் முன்னாலோ அன்றி அவர் வாசிக்கக் கூடிய ஆங்கிலத்திலோ நான் இந்தக் கதையை எழுதவில்லை. அப்படியிருக்க எப்படி தவறாகும்???அப்படிப் பார்க்கப் போனால்  கருப்பு இனத்தவர்கள் எனறு பல இடங்களில் பயன்படுத்துகின்றனரே?

11 hours ago, goshan_che said:

நானறிந்த வரை:

காப்பிலி என்பது அரபிச்சொல்லான காபிர் இன் திரிபு.

ஆசியாவில் இருந்து வட ஆபிரிக்கா நோக்கி நகர்ந்த அரபிகள், நம்பிக்கையற்றவன் என்ற பொருளில் காபிர் என அப்போ முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்த கறுப்பின மக்களை அழைத்தனர்.

அதுவே பின்னர் திரிபடைந்து காப்பிரி, காபிரிஸ், தமிழில் காப்பிலி என வழங்கப்படுகிறது.

தமிழில் காப்பிலி என்பது நிகர், பக்கி, போன்ற ஒரு வசைபு சொல்லா? அல்லது பிளக், வையிட் போன்ற ஒரு அடையாளச்சொல்லா?

என்னை பொறுத்தவரை இது ஒரு அடையாளச்சொல் என்றே கருதுகிறேன். ஆனால் slang எனப்படும் வழக்குத்தொடர். Formal எழுத்தில் கறுப்பினத்தவர் என்பதை பாவிக்கலாம். ஆனால் கதைகளில் பேச்சு வழக்காக எழுதும் போது காப்பிலி என எழுதலாம் என்றே நினைக்கிறேன்.

தொட்டதை எல்லாம் தடை செய்யும் cancel culture இன் ஒரு நீட்சியாக இந்த சொல்லையும் தடை செய்வதாகவே எனக்குப்படுகிறது.

————

இது சம்பந்தமான கட்டுரை ஒன்று

———————

மிக்க நன்றி கோஷான் உங்கள் கருத்துக்கு. நீங்கள் போட்டுள்ள கட்டுரையை இன்று வாசிக்க நேரம் இல்லை. வாசித்தபின் கூறுகிறேன். 

10 hours ago, புலவர் said:

மேற்கு நாட்டவர் குறிப்பாக இங்கிலாந்தில் கறுப்பு இனத்தவர் என்று பொருள்படblack என்ற சொல்லைபாவிக்கிறார்கள் . ஆனால் நீக்கிரோ என்ற சொல்லைப் பாவிப்பதை இனத்துவேசத்தில் பார்க்கிறார்கள்.
தமிழில் ஆபிரிக்க இனத்தவர் என்ற பொருளில் காப்பிலி என்று பாவிக்கிறார்கள் இனத்துவேசத்துடன் அதைப்பாவிப்பதாகத் தெரியவில்லை.ஆனால்கறுப்பர்கள் என்று பாவிப்பதை இங்கு பிறந்த பிள்ளைகள் விருமபவில்லை என்று உணர முடிகிறது.

நான் எழுதியதற்கான பதில் உங்களிடம் இல்லையே ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஏதிலிகள்: ஏதும் இல்லாதவர்கள்

காப்பிலிகள்: காப்பு (பாதுகாப்பு இல்லாதவர்கள்)

நாங்கள் காப்பிலிகள். 

ஞாபக மறதி உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் போடலாமா? 😇

போட்டிருக்கிறேனே. ஆனால் நீங்கள்தான் நேரடியாகப் பதிலைக் கூறாமல் திசை திருப்புகிறீர்கள் 😀

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முடிஞ்சால் வந்து இலங்கையில வம்பு இழுத்து பாருங்க பின்ன  தெரியும் எத்தனை சாதி எத்தனை வசை சொல் வந்து காதில் பாயுமென

சாதியும் இதுவும் ஒன்றல்ல என்று கூறியும் நீங்கள் வாசிக்காது கருத்து வைக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, புலவர் said:

மேற்கு நாட்டவர் குறிப்பாக இங்கிலாந்தில் கறுப்பு இனத்தவர் என்று பொருள்படblack என்ற சொல்லைபாவிக்கிறார்கள் . ஆனால் நீக்கிரோ என்ற சொல்லைப் பாவிப்பதை இனத்துவேசத்தில் பார்க்கிறார்கள்.
தமிழில் ஆபிரிக்க இனத்தவர் என்ற பொருளில் காப்பிலி என்று பாவிக்கிறார்கள் இனத்துவேசத்துடன் அதைப்பாவிப்பதாகத் தெரியவில்லை.ஆனால்கறுப்பர்கள் என்று பாவிப்பதை இங்கு பிறந்த பிள்ளைகள் விருமபவில்லை என்று உணர முடிகிறது.

சில சொற்களுக்கு அந்த அந்த சமூகங்களில் விவகாரமான அர்த்தங்கள் வந்து ஒட்டி கொள்ளும். 

காலனிய காலத்தில், இப்போதும்  இலங்கையில் ஒருவரை black என சொல்லுவதிலும் பார்க்க coloured என சொல்லுவது ஏற்புடையது.

ஆனால் இங்கே coloured என சொல்வது தரக்குறைவானது. ஆனால் people of colour ஓக்கே.

இவை காலத்துக்கும், perception ற்கும் ஏற்ப மாறுவன. 

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் போட்டுள்ள கட்டுரையை இன்று வாசிக்க நேரம் இல்லை.

அந்த கட்டுரை கிறிஸ்தவ கறுப்பாபிரிக்கரை அரபிகள் காபிர் என கூறியதாக சொல்கிறது. அவர்களை மட்டும் அல்ல, சுதேச மதம் உட்பட, முஸ்லிம் அல்லாதோரை விளிக்கவே இப்பதம் இன்றும் பயன்படுகிறது.

நம்பிக்கையாளன் = முஸ்லிம் 

நம்பிக்கையற்றவன் = காபிர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எம்மவர்கள் வாக்குக்கண், பல் மிதப்பு என்றும் வெள்ளைச்சி என்றும் பயன்படுத்துவதுதானே ??? அச்சொற்களை அந்த நபர்களுக்கு முண் அல்லது அவர்கள் காதுபடக் கூறுவதுதான் தவறு.

😂தவறேயில்லை!

இப்படி நிறைய விடயங்கள் தவறில்லை. உதாரணமாக, உரிமையாளனுக்குத் தெரியாத வரையில் அவனிடமிருந்து எதையாவது "லவட்டி" விடுவதும் தவறல்ல, கண்டால் மட்டும் தான் தவறு! காவல் துறை அக்கப் பக்கம் இல்லாவிட்டால் போக்குவரத்து விதிகளை மீறுவது தவறேயில்லை, காவல்துறை கண்டால் தான் தவறு அல்லது குற்றம்!

இது போன்ற ஒரு உரையாடல் சில மாதங்கள் முன்பும் யாழில், நாற்சந்தியில் நடந்திருக்கிறது. இதே போல கறுப்பின மக்களைக் குறித்த ஒரு தமிழ் பதம் அவர்களுக்குத் தெரிந்தால் மட்டும் தான் தவறு, இல்லையேல் அது nothing என்று!

உங்களுக்கு ஊர் சொலவடையொன்று தெரிந்திருக்கும்: "கண்டால் கட்டாடி, காணாட்டி **** (சாதிப் பெயர் சுய தணிக்கை)". இதையெல்லாம் அபிப்பிராயம் கேட்டு தீர்மானிக்க வேண்டிய நிலையிலா இருக்கிறீர்கள் சுமே?

  • Like 3
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எழுதியிருப்பது இதல்ல. நான் எழுதியது தொடர்பான உங்கள் கருத்தை முன்வையுங்கள்

என்னைப் பொறுத்தவரையில் சில சொற்கனை இனிவரும் காலத்திலாவது தவிர்த்து கொள்ளலாம்.காரணம் நாங்கள் தான் கொண்டு காபுவர்களாகவே இருக்கிறோம்.சிறுவர்களைப் பார்த்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேணும்.

Posted
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் நீங்கக்கள் எந்தக் கருத்தையும் வைக்கவில்லையே நான் எழுதியது தொடர்பாக????

நான் எழுதியிருப்பது இதல்ல. நான் எழுதியது தொடர்பான உங்கள் கருத்தை முன்வையுங்கள்

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு. 

காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள், பெயர் வரக் காரணங்கள் என்று பல இருந்தாலும், எம்மவர்களால் இச் சொல் கறுப்பு இனத்தவரை நோக்கி சொல்லப்படுவதன் காரணம், தம்மை உயர்வாகவும் அவர்களை தமக்கு கீழாகவும் கருதும் 'உயர்சாதி' மன நிலையில் தான். 

மேலும் எம்மவர்கள் கறுப்பு இனத்தவர்களை 'கறுவல்' என்றும், சீனர்களை 'சப்பட்டைகள்' என்றும், அல்ஜீரியர்களை 'அடை' என்றும் அழைப்பது அவர்களை இழிவுபடுத்துவதற்காகவே அன்றி வேறு எந்தக் காரணங்களாலும் இல்லை. சொந்த இனத்துக்குள்ளேயே சாதி பார்க்கும் இழி மனநிலையின் தொடர்ச்சி தான் இந்த பழக்கம்.

ஏற்கனவே சொல்லியது போல, இந்தச் சொல் தவிர்க்கப்பட வேண்டியது. யாழில் கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டிய, விதி மீறலுக்குரிய சொல்.

நன்றி

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

மிக தெளிவான பார்வை. இதை விட தெளிவாக கூறமுடியாது. அருமையான கருத்து நிழலி. அண்மையில் திண்ணை உரையாடல்  ஒன்றில் கூட லண்டன் மேயரை குறிப்பிடும் போது ஒரு நகர முதல்வர் என்ற அடிப்படை நாகரீகம் கூட இன்றி  அவர்முஸ்லீம் என்பதால்  “காக்கா” என்ற வார்ததை பயன்படுத்தப்பட்டது.  நீங்கள் குறிப்பிட்டது போல சொந்த இனத்துக்குள்ளேயே மற்றயவர்களை தாழ்த்தும் இழி மனநிலையின் வெளிப்பாடு தான் இது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு எம்மை இந்தியோஸ் என்கிறார்கள்.

எம்மை லண்டனில் பாக்கி என்கிறார்கள்

அதே மாதிரி கறுப்பினத்தவரை காப்பிலி என்பதில் தப்பில்லை

ஆனால் கட்டுரை கதைகள் என்று வரும்போது இப்படி எழுதலாமோ என்று சிந்திக்க வேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு. 

காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள், பெயர் வரக் காரணங்கள் என்று பல இருந்தாலும், எம்மவர்களால் இச் சொல் கறுப்பு இனத்தவரை நோக்கி சொல்லப்படுவதன் காரணம், தம்மை உயர்வாகவும் அவர்களை தமக்கு கீழாகவும் கருதும் 'உயர்சாதி' மன நிலையில் தான். 

மேலும் எம்மவர்கள் கறுப்பு இனத்தவர்களை 'கறுவல்' என்றும், சீனர்களை 'சப்பட்டைகள்' என்றும், அல்ஜீரியர்களை 'அடை' என்றும் அழைப்பது அவர்களை இழிவுபடுத்துவதற்காகவே அன்றி வேறு எந்தக் காரணங்களாலும் இல்லை. சொந்த இனத்துக்குள்ளேயே சாதி பார்க்கும் இழி மனநிலையின் தொடர்ச்சி தான் இந்த பழக்கம்.

ஏற்கனவே சொல்லியது போல, இந்தச் சொல் தவிர்க்கப்பட வேண்டியது. யாழில் கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டிய, விதி மீறலுக்குரிய சொல்.

நன்றி

இதே போல் சோனகர் என்ற இனத்தை சோனி என்ற வசை கொண்டு அழைப்பதையும், மோட்டு சிங்களவன் என்ற அடை மொழியையும், யாழ் தடை செய்யுமா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

😂தவறேயில்லை!

இப்படி நிறைய விடயங்கள் தவறில்லை. உதாரணமாக, உரிமையாளனுக்குத் தெரியாத வரையில் அவனிடமிருந்து எதையாவது "லவட்டி" விடுவதும் தவறல்ல, கண்டால் மட்டும் தான் தவறு! காவல் துறை அக்கப் பக்கம் இல்லாவிட்டால் போக்குவரத்து விதிகளை மீறுவது தவறேயில்லை, காவல்துறை கண்டால் தான் தவறு அல்லது குற்றம்!

இது போன்ற ஒரு உரையாடல் சில மாதங்கள் முன்பும் யாழில், நாற்சந்தியில் நடந்திருக்கிறது. இதே போல கறுப்பின மக்களைக் குறித்த ஒரு தமிழ் பதம் அவர்களுக்குத் தெரிந்தால் மட்டும் தான் தவறு, இல்லையேல் அது nothing என்று!

உங்களுக்கு ஊர் சொலவடையொன்று தெரிந்திருக்கும்: "கண்டால் கட்டாடி, காணாட்டி **** (சாதிப் பெயர் சுய தணிக்கை)". இதையெல்லாம் அபிப்பிராயம் கேட்டு தீர்மானிக்க வேண்டிய நிலையிலா இருக்கிறீர்கள் சுமே?

அவர்களுக்கு தெரியாமல் எழுதினால் பரவாயில்லை என்ற கருத்தின் மூலம் - கருத்தாடலின் போக்கையே அன்ரி மாத்திப்போட்டா🤣.

ஆனால் ஒரு இலக்கிய படைப்பில் that black man helped me என்பதை ஒரு தமிழ் கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திடம் “அந்த கறுப்பின இளைஞன் எனக்கு உதவினான்” என்று சொல்வதாக எழுதினால் அது எவ்வளவு செயற்கைத்தனமாக இருக்கும்?

இதில் எனக்கு நிலைப்பாடு என்று இல்லை. கேள்விகள் மட்டுமே.

3 hours ago, நிழலி said:

காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள், பெயர் வரக் காரணங்கள் என்று பல இருந்தாலும், எம்மவர்களால் இச் சொல் கறுப்பு இனத்தவரை நோக்கி சொல்லப்படுவதன் காரணம், தம்மை உயர்வாகவும் அவர்களை தமக்கு கீழாகவும் கருதும் 'உயர்சாதி' மன நிலையில் தான். 

ஆதாரம்?

ஏன் கேட்கிறேன் என்றால் எனது யூகேயில் பிறந்த நண்பி ஒருவர் ஒரு முறை “that black bag” என்பதை “அந்த காப்பிலி பாக்” என சொல்லி - எல்லாரும் சிரித்தோம்.

உண்மையில் பெரும்பாலானா தமிழர்கள் இதை ஒரு இழிசொல்லாக கருதி பாவித்தால் - அது தவறான சொல்தான்.

ஆனால் இப்படி கருத ஆதாரம் ஏதும் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போட்டிருக்கிறேனே. ஆனால் நீங்கள்தான் நேரடியாகப் பதிலைக் கூறாமல் திசை திருப்புகிறீர்கள் 😀

நேரடியாக கூறுவது என்றால் ஒரு எழுத்தாளர், சமூகத்தில் அறியப்பட்டவர் எனும் வகையில் உங்களை நோக்கும்போது நீங்கள் இனிமேல் இப்படி காப்பிலி என எழுதுவதை, பேசுவதை தவிர்த்தால் நல்லது. ஏற்கனவே எழுதியது, பேசியதற்கு ஒன்றும் செய்யமுடியாது. 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
    • யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂
    • சபாநாயகர் திரு அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில்  அவர் பதவி விலகியுள்ளார்.  அதே போன்று மேலும் பல  சிரேஷ்ட ஜேவிபி    உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக  இருக்கின்றது.  அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.   51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடை விலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள்.  BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது.  அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.   ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.  அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது.  அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி  அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக  இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council. அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை  கலாநிதி என சில இடங்களில் அடையாளப் படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது.      பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது.  Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC). கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது. யாழ்ப்பாணம்.com
    • "சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது  மேற்படி கூற்று,.🤣 ஜிஹாதிக்கள் நல்லவர்கள் என்று சிரிய குர்திஸ் இன மக்களும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பாகப் பெண்களும் சொல்ல வேண்டும். குறிப்பு:  ஒவ்வொருவருடைய உண்மையான நிறங்கள் வெளிச்சத்திற்கு வருவது நன்மையானதே. 😁
    • நடிகர் அல்லு அர்ஜுன் கைது! புஷ்பா 2: தி ரூல் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் தற்சமயம், சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5 அன்று புஷ்பா 2 திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் வரவிருந்தது குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் நடிகரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியபோது இந்தச் சம்பவம் நடந்தது. நெரிசலில் சிக்கய 39 வயதான ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது எட்டு வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பொலிஸார் டிசம்பர் 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர். இதேவ‍ேளை, தனது புஷ்பா 2: தி ரூல் இன் ஹைதராபாத் திரையரங்களின் முதல் காட்சியின் போது ஒரு பெண் இறந்தது தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி, டிசம்பர் 12 அன்று அல்லு அர்ஜுன் தெலுங்கானா மேல் நீதிமன்றத்தை அணுகியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412153
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.