Jump to content

சுமனரத்தின தேரரின் "தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்" என்ற கருத்துக்கு தமிழ் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு, இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

மட்டக்களப்பு, இருதயபுரத்தில் சிலருடன்  வருகை தந்த சுமனரத்தின தேரர், 'மீண்டும் யுத்தம் வரும்; தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்' என்று கூறியுள்ளார். இவருடைய கருத்தை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று, மிகப்பெரும் அழிவுகளை சந்தித்த நாடு, தற்போது நிலையான அமைதியையும், இனப் பிரச்சினைக்கான நிலையான தீர்வையும் நோக்கி பயணிக்கின்ற வேளையில் இவருடைய மிக மோசமான இனவாத கருத்துக்கள் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அழிவுக்கே இட்டுச் செல்லும்.

இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் போதிக்கவேண்டிய மதத் தலைவர் ஒருவர்  நாட்டையும் மக்களையும் அழிவை நோக்கி இட்டுச்செல்லும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.  இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த நாட்டில் இவரை போன்ற மதத் தலைவர்களினாலேயே இன்று இனவாத, மதவாத பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. 

தமிழ் மக்கள் இன அழிப்புக்குட்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள நிலையில், அதற்கான சர்வதேச விசாரணை ஒன்றை கோரியுள்ள நிலையில் தேரரின் இந்தக் கருத்தினையும் எமது தரப்பு சாட்சியாக எடுக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சுமனரத்தின தேரரின் கருத்துக்கு தமிழ் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உடைக்கு பொருத்தமான கருத்ததைதான் கூறி  இருக்கிறார். அது அவரது தவறில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   27 OCT, 2023 | 10:35 AM

image

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்”  என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார். இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.

ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது. இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதியின் அரசு கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன். எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

இதுபற்றி தனது முகநூல், டுவிட்டர் எனும் எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,   

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில்,  மட்டக்களப்பு மாவட்ட எம்பிக்களுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் பொலிசில் புகார் செய்ய வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும்.  அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறை.

இதைவிடுத்து சண்டியன் மாதிரியும். மனநோயாளி மாதிரியும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன்” என்றி ஹிஸ்டீரியாகாரனாக கத்துவது எந்த வகையில் நியாயம்?  

ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னை தூற்றிய ராஜாங்கன தேரரை கைது செய்தார். இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என அங்கொடையில் அடைத்து விடுங்கள்.

சில காலம் முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது? பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுகளை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.

இன்று இந்த அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை ராணுவம் உதவுகிறது. நாட்டின் இராணுவம் இவருக்கு சோறாக்கி சாப்பாடு போடுகிறது. இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி துவேசமாக பேசி வருகிறார். பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் சட்டையை பிடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் தொப்பியை தட்டி விடுகிறார். மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார். அரச அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அப்படியானால், இவர் யார்? 

https://www.virakesari.lk/article/167847

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் துணைச் செயலாளருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

அனைத்து தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்ற அம்பிட்டிய தேரரின் கருத்து குறித்து சுமந்திரன்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

வன்முறை மற்றும் இன, மத வெறுப்புணர்வைத் தூண்டும் அவரது கருத்து தண்டனைக்குரிய குற்றம் என்பதால் ஏன் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனையும், தென்பகுதியில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து 2007 ஆம் ஆண்டின் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் 56 ஆம் பிரிவுன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1355951

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

அம்பிட்டிய சுமனரத்தின தேரரை ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட கொணொலிப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமனரத்தின தேரரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவருக்கு முதலில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிய வேண்டும். மனநோயாளி போல் தமிழர்களை வெட்டுவேன் என பகிரங்கமாகக் கூறுகின்றார்.

விசேடமாகப் பௌத்தர்கள் புனித போயா தினத்தினை அனுஷ்டிக்கும் இந்த வேளையில் அவர் அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக அவர் தெரிவிக்கும் அந்த மயான பூமி தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட துறையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ முறையிட்டு இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

நடைமுறையிலுள்ள ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் உடனடியாக அந்த தேரர் கைது செய்யப்பட வேண்டும். ஏனெனில் குறித்த சட்டத்தின் கீழ் ஏற்கனவே சில மதத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன.

அவ்வாறு அம்பிட்டிய சுமனரத்தின தேரரை கைது செய்யாவிட்டால் அவர் மீண்டும் மீண்டும் அவ்வாறு தான் நடந்து கொள்வார்.

இதற்கு உடனடியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1355918

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

அவரது இந்த கருத்து 2007 ஆம் ஆண்டின் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் 56 ஆம் பிரிவுன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்

இவ்வளவு சட்டத்தின் நுணுக்கம்  தெரிந்தவர் அதுவும் ஒரு சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர், இவரே தேரர்மீது வழக்கு தொடுக்க நீதிமன்றம் செல்லலாமே அது , ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தமது மக்கள்மீது கக்கப்படும் இனவாதம் தொடர்பாக நீதிமன்றம் சென்றார் என்ற சர்வதேச கவனிப்பை பெறுமே?

மாட்டார் ஏனென்றால் அரச அதிரடிப்படை பாதுகாப்பில் வலம்வந்த மனிதர் அரச இனத்திற்கு எதிராக எப்படிகடுமையாக போவது?

தமிழருக்கு சார்பா பேசினமாதிரியும் இருக்கவேண்டும், சிங்களவர்களுக்கும் நோககூடாது.

ஈயம் பூசினமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் கொள்கை .

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

அதுதானே.... ஆபிரஹாம் சுமந்திரன் தமிழர்களின் காதில் பூ சுத்துகிறார். animiertes-gefuehl-smilies-bild-0050.gif 😂

Link to comment
Share on other sites

32 minutes ago, valavan said:

இவரை பற்றி தமிழ் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதுதானே.... ஆபிரஹாம் சுமந்திரன் தமிழர்களின் காதில் பூ சுத்துகிறார். animiertes-gefuehl-smilies-bild-0050.gif 😂

என்னவாயிருந்தாலும், நம்ம கீரோ, எங்கண்ட தூசணப்பிக்கர் தான்.

என்ன, இண்டைக்கு காத்தாலவே, மெண்டிஸ் ஸ்பெசல் வாங்கனுப்பின ஆள் வர லேட்டாயிட்டுதெண்டு, ஆத்திரம் அவசரத்துக்கு வைச்சிருந்த கசிப்பில வாயை நணைச்சுப் போட்டார். கழுதை டபக்கெண்டு ஏத்தி விட்டுது! 🤣😂

அதுக் காண்டி, வழக்கு, கைது.... ரூ மச்.... அப்புறம் தூசண ரெயினிங் ஆர் தருவினமாம்?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

இவ்வளவு சட்டத்தின் நுணுக்கம்  தெரிந்தவர் அதுவும் ஒரு சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர், இவரே தேரர்மீது வழக்கு தொடுக்க நீதிமன்றம் செல்லலாமே அது , ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தமது மக்கள்மீது கக்கப்படும் இனவாதம் தொடர்பாக நீதிமன்றம் சென்றார் என்ற சர்வதேச கவனிப்பை பெறுமே?

மாட்டார் ஏனென்றால் அரச அதிரடிப்படை பாதுகாப்பில் வலம்வந்த மனிதர் அரச இனத்திற்கு எதிராக எப்படிகடுமையாக போவது?

தமிழருக்கு சார்பா பேசினமாதிரியும் இருக்கவேண்டும், சிங்களவர்களுக்கும் நோககூடாது.

ஈயம் பூசினமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் கொள்கை .

இலங்கையில் குற்றவியல் வழக்குகளை தனி நபர்கள் தொடரலாமா? (private criminal prosecution) ?

2 hours ago, தமிழ் சிறி said:

அதுதானே.... ஆபிரஹாம் சுமந்திரன் தமிழர்களின் காதில் பூ சுத்துகிறார். animiertes-gefuehl-smilies-bild-0050.gif 😂

1 hour ago, nunavilan said:

இவரை பற்றி தமிழ் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

2 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம் சுமந்திரன்

இப்ப ஒராள் பார்த்தியளே சுமந்திரனின் பெயரில் கூட ஆபிரகாம் எண்டு இருக்கு, ஆகவே ஆபிரஹாம் யூதர் அல்ல, தமிழர் எண்டு கொண்டு வரப்போறார்🤣.

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அவரது இந்த கருத்து 2007 ஆம் ஆண்டின் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் 56 ஆம் பிரிவுன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தண்டனைக்குரிய குற்றம் என்றால் வழக்கைப் போடவேண்டியது தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையில் குற்றவியல் வழக்குகளை தனி நபர்கள் தொடரலாமா? (private criminal prosecution) ?

22 minutes ago, ஈழப்பிரியன் said:

தண்டனைக்குரிய குற்றம் என்றால் வழக்கைப் போடவேண்டியது தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

முடியாது என்று தான் ஊகிக்கிறேன். 1. காவல் துறையிடம் முறையிட வேண்டும், 2. காவல் துறை விசாரிக்க வேண்டும், 3. பின்னர் சட்டமா அதிபர் அரசின் சார்பில் வழக்குப் போட வேண்டுமென நினைக்கிறேன்.

சரியா?

பி.கு: இதையெல்லாம் சுமந்திரன் எதிர்ப்பாளர்களிடம் ஏன் கேட்கிறீர்கள் மெனக்கெட்டு😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இப்ப ஒராள் பார்த்தியளே சுமந்திரனின் பெயரில் கூட ஆபிரகாம் எண்டு இருக்கு, ஆகவே ஆபிரஹாம் யூதர் அல்ல, தமிழர் எண்டு கொண்டு வரப்போறார்🤣.

ஆபிரஹாம் மற்றும் யூதர் எல்லோருமே லெமூரிய கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் பரம்பரை (தொப்பிள்கொடி உறவுகள்)தான். இதை கிருபன்  ஏற்கெனவே  இங்கே தெரிவித்திருக்கிறார்.  ஆபிரஹாம் சுமந்திரன் செந்தமிழனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

முடியாது என்று தான் ஊகிக்கிறேன். 1. காவல் துறையிடம் முறையிட வேண்டும், 2. காவல் துறை விசாரிக்க வேண்டும், 3. பின்னர் சட்டமா அதிபர் அரசின் சார்பில் வழக்குப் போட வேண்டுமென நினைக்கிறேன்.

சரியா?

பி.கு: இதையெல்லாம் சுமந்திரன் எதிர்ப்பாளர்களிடம் ஏன் கேட்கிறீர்கள் மெனக்கெட்டு😂?

சுமந்திரன்தான் சுயநலமாக செயட்படுகின்றார். தமிழ்மக்களுக்காக போராடும் ஜனாதிபதி சடடதரணி தவராசாவாவது வழக்கு போடலாமே? சுமந்திரன்தான் கூறினார் என்றால் அவர்தான் வழக்கு போடணும் என்று அவசியம் இல்லை.  

ஒரு பேச்சுக்கு சொன்னேன். சுமந்திரனின் ஆதரவாளர் என்று சொல்ல போகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

முடியாது என்று தான் ஊகிக்கிறேன். 1. காவல் துறையிடம் முறையிட வேண்டும், 2. காவல் துறை விசாரிக்க வேண்டும், 3. பின்னர் சட்டமா அதிபர் அரசின் சார்பில் வழக்குப் போட வேண்டுமென நினைக்கிறேன்.

சரியா?

பி.கு: இதையெல்லாம் சுமந்திரன் எதிர்ப்பாளர்களிடம் ஏன் கேட்கிறீர்கள் மெனக்கெட்டு😂?

உண்மையில் இலங்கை நிலவரம் எனக்கு தெரியாது. இப்படி ஒரு வழக்கை தனியார் போட இலங்கை சட்டம் அனுமதிக்கிறதா என தெரியவில்லை.

ஆனால் பொதுவாக கிரிமினல் வழக்கு போடும் வேலை முழுக்க முழுக்க பொலிஸ், அரச தரப்பு வக்கீல் குழாம் எடுக்கும் நடவடிக்கை.

இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளில் கூட, தனியார் கிரிமினல் வழக்கு போடுவது என்பது கிட்டதட்ட இல்லை என்ற நிலைதான்.

அதேபோல் தனியார் கிரிமினல் வழக்கு போட்டு, ஒருவரை குற்றவாளி என நிறுவுவதும் மிகவும் கடினமான ஒரு விடயம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் பொலிஸ் கொண்டுள்ள நடுநிலைமையோ, வல்லமையோ, நிபுணத்துவமோ, தரவு சேகரிக்கும் இயலுமையோ, குற்றாவாளிகளை பேட்டி எடுத்தல், சாட்சியங்களை நெறிப்படுத்தல் போன்ற மேலும் பல சிறப்பு தேர்ச்சிகளோ தனியார் குடிமக்களிடம், வக்கீல்களிடம் இல்லை.

சுமந்திரன் ஒரு வக்கீல். பொலிஸ் திணைக்களம் அல்ல.

ஆகவே இப்படி தனியாராக, ஒரு கிரிமினல் வழக்கை போட்டு வெல்லுவது (அதற்கு இலங்கை சட்டம் பெயரளவில் இடம் கொடுத்தாலும்) மிக, மிக முடியாத காரியம்.

ஒருவர் ஒரு கிரிமினல் குற்றதை செய்தார் என்பதை வழக்கு போடுபவர், சந்தேகத்துக்கு அப்பால் நிறுவ வேண்டும்.  உதாரணமாக இந்த வழக்கில் சுமணே இந்த வீடியோ பொய், deepfake என சொல்கிறார் என வைப்போம். இதை தக்க சான்றோடு அப்படி டீப்பேக் இல்லை என நிறுவ வேண்டும். இதை ஒரு அரச பகுப்பாய்வு நிறுவனம் செய்யும் (இலங்கையில் அரசுக்கே இந்த வல்லமை இருப்பது சந்தேகம்). சுமந்திரனால் முடியுமா?

அப்படி சுமந்திரன் ஒரு தனியார் அமைப்பின் மூலம் இந்த வீடியோவை பகுப்பாய்வு செய்தாலும், அந்த நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் - இது புலம்பெயர் தமிழரின் சதி என சுமணே சொன்னால், 100% சிங்களவர் உள்ள யூரி சபை யாருக்கு சார்பாக முடிவு எடுக்கும்? 

தவிரவும் double jeopardy என்ற ஒரு சட்ட நடைமுறை உண்டு (இது இங்கிலாந்தில் இப்போ கொஞ்சம் மறுமலர்சிக்கு உள்ளாகியுள்ளது, இலங்கை நிலவரம் தெரியவில்லை). இதன் படி ஒரு குற்றத்தை வழக்கு போட்டு அதை நீதிமன்று தள்ளுபடி செய்துவிட்டால் அதே குற்றத்தை மீளச் சுமத்தி வழக்கு போட முடியாது. இது தனியார் குற்றவியல் வழக்கு தொடுதலை high risk ஆக்குகிறது.

இப்படியான நிலையில் உண்மையில் இப்படி தனியார் வழக்கு போட இலங்கை சட்டம் அனுமதித்தாலும், அப்படி செய்வது தவறான முடிவாகவே இருக்கும்.

👆🏼 @valavan @nunavilan @ஈழப்பிரியன் @தமிழ் சிறி

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2023 at 07:40, goshan_che said:

இலங்கையில் குற்றவியல் வழக்குகளை தனி நபர்கள் தொடரலாமா? (private criminal prosecution) ?

நான் சட்ட நுணுக்கங்கள் அறிந்தவனல்ல, இருந்தாலும் தனிமனிதனால் விடுக்கப்படும் கொலை மிரட்டல்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க சட்டமா அதிபரோ அல்லது பொலிஸ்மா அதிபரின் அனுமதி தேவையா என்பதை நானறியேன்.

அப்படியென்றால் இளைஞன் கடத்தல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்காமீது தொடுக்கப்பட்ட வழக்கும், காணாமல்போன ஊடகவியலாளர் தொடர்பாக அவர் மனைவி ஞானசாரதேரர்மீது தொடுக்கப்பட்ட வழக்கும் எந்த பிரிவுக்குள் அடங்கும் என விபரம் அறிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் பிறருக்கு அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, valavan said:

இவை ஆள்கொணர்தல் மனுக்கள் Habeas Corpus என நினைக்கிறேன். காணாத ஒருவரை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு அவர் சார்ந்தோர் தொடுக்கும் விண்ணப்பம். வழக்கு அல்ல.

இங்கே சுமணே காணாமல் போகவில்லை. இங்கே குற்றச்சாட்டு தன் பேச்சின் மூலம் அவர் சட்ட கோவையை மீறியுள்ளார் என்பதே.

ஆகவே இப்போதைக்கு செய்ய கூடியது இதை விசாரிக்குமாறு அளுத்தம் கொடுப்பது, பாராளுமன்றில் பேசுவது போன்றனவே.

ஒரு எம்பியாக பொலிஸ்மா அதிபரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தலாம்.

இலங்கையின் சட்டத்தின் ஆளுமை இதுதான் என வெளிநாட்டு அரசுகள், அமைப்புகளுக்கு கடிதம் எழுதலாம்.

இதை வைத்து, வழக்கு போடவில்லை என்பதை வைத்து எவ்வளவோ செய்யலாம்.

ரணில் கெட்டிக்காரன் என்றால் விசாரித்து, வழக்கை போட்டு இழுத்தடியுங்கள், விடயத்தை மறக்கடியுங்கள் என இப்போதே பொலிசுக்கு உத்தரவிட்டிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:
On 27/10/2023 at 07:40, goshan_che said:

இப்ப ஒராள் பார்த்தியளே சுமந்திரனின் பெயரில் கூட ஆபிரகாம் எண்டு இருக்கு, ஆகவே ஆபிரஹாம் யூதர் அல்ல, தமிழர் எண்டு கொண்டு வரப்போறார்🤣.

ஆபிரஹாம் மற்றும் யூதர் எல்லோருமே லெமூரிய கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் பரம்பரை (தொப்பிள்கொடி உறவுகள்)தான். இதை கிருபன்  ஏற்கெனவே  இங்கே தெரிவித்திருக்கிறார்.  ஆபிரஹாம் சுமந்திரன் செந்தமிழனே

பத்த வைக்கிறீங்களே பரட்டைகளா.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

- - - ஒரு எம்பியாக பொலிஸ்மா அதிபரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தலாம்.

இலங்கையின் சட்டத்தின் ஆளுமை இதுதான் என வெளிநாட்டு அரசுகள், அமைப்புகளுக்கு கடிதம் எழுதலாம்.

ஆபிரஹாம்… இதையாவது செய்வார் என்று, நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

ஒரு எம்பியாக பொலிஸ்மா அதிபரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தலாம்.

3 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம்… இதையாவது செய்வார் என்று, நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? 😁

ஏற்கனவே பொலிஸ் மாஅதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளாரென எண்ணுகிறேன்.

On 27/10/2023 at 04:31, தமிழ் சிறி said:

அம்பிட்டிய சுமணரத்ன தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம்… இதையாவது செய்வார் என்று, நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? 😁

இல்லை🤓

47 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே பொலிஸ் மாஅதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளாரென எண்ணுகிறேன்.

ஓம் சும்மா கடிதத்தை தட்டி விடாமல் இதை நேரில் போய் கொடுத்து -அதற்கு பத்திரிகையாளரை அழைத்துப்போய், பேட்டி கொடுத்தால் - பரப்புரையாக இருக்கும் எல்லோ?

 சும்மை பலஸ்தீனுக்கு அனுப்பி ஹமாஸ் பரப்புரையாளரிடம் பயிற்ற்சி எடுக்க சொல்ல வேண்டும்🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இவை ஆள்கொணர்தல் மனுக்கள் Habeas Corpus என நினைக்கிறேன். காணாத ஒருவரை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு அவர் சார்ந்தோர் தொடுக்கும் விண்ணப்பம். வழக்கு அல்ல.

இல்லை கோசான் அது காணாமல் போன ஒருவரை முன்னிலை படுத்துமாறு ஞானசார தேரர்மீது தொடரப்பட்ட வழக்கல்ல, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சம்பந்தமான   விச்சரணையின்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளரின் மனவிக்கு கொலை மிரட்டல் விடுத்தமைக்காகவே ஞானசாரதேரர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

https://thinakkural.lk/article/12989

ஹிரோணிகா விஷயமும் அப்படியே.  தனிமனித அச்சுறுத்தல் விடுத்தமைக்காக வழக்கு தொடரப்பட்டவர்கள் என்ற ரீதியில் சுமணதேரரும் அந்த வகையறாவுக்குள்ளேயே அடங்குகிறார்.

இதற்கு சிறிது அப்பாற்பட்ட விஷயம் என்றாலும் மனிதாபிமான ரீதியான சுனாமி நிதியையே தமிழர் பகுதிக்கு கொடுக்கவிடாமல் ஒரு கட்சி வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற முடியும் என்றால், கட்சி ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அனைத்து தகுதிகளும் ஒருங்கே வாய்ந்த சுமந்திரனால்   ஒரு இனத்துக்கு கொலை மிரட்டல் விடும் ஒருவருக்கு எதிராக  ஏன் வழக்குபோடமுடியாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, valavan said:

இல்லை கோசான் அது காணாமல் போன ஒருவரை முன்னிலை படுத்துமாறு ஞானசார தேரர்மீது தொடரப்பட்ட வழக்கல்ல, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சம்பந்தமான   விச்சரணையின்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளரின் மனவிக்கு கொலை மிரட்டல் விடுத்தமைக்காகவே ஞானசாரதேரர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

வழக்கை தொடுத்தது பிரகீத்தின் மனைவியா?

இல்லை. அவர் மிரட்டபட்ட அடிப்படையில் பொலிஸ்தான் வழக்கை போட்டது என நினைக்கிறேன்.

30 minutes ago, valavan said:

ஹிரோணிகா விஷயமும் அப்படியே.  தனிமனித அச்சுறுத்தல் விடுத்தமைக்காக வழக்கு தொடரப்பட்டவர்கள் என்ற ரீதியில் சுமணதேரரும் அந்த வகையறாவுக்குள்ளேயே அடங்குகிறார்.

இங்கேயும் வழக்கு பொலிஸ்சால்தான் தொடுக்கப்பட்டது என நினைக்கிறேன்.

கிரிமினல் குற்றங்களுக்கு பாதிக்க பட்ட தரப்பு முறைப்பாடு செய்யும். வழக்கு அரச தரப்பால்தான் தாக்கல் செய்யப்படும்.

இங்கே உடான்ஸ் சாமி மீது ஒரு கிரிமிமினல் வழக்கு என்றால் அதை R v Udance Sami என பெயரிடுவர். 

இங்கே R என்பது Regina / Regis அதாவது அரசி அல்லது அரசன். இலங்கையில் R க்கு பதில் state என்பார்கள் என நினைக்கிறேன்.

34 minutes ago, valavan said:

இதற்கு சிறிது அப்பாற்பட்ட விஷயம் என்றாலும் மனிதாபிமான ரீதியான சுனாமி நிதியையே தமிழர் பகுதிக்கு கொடுக்கவிடாமல் ஒரு கட்சி வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற முடியும் என்றால், கட்சி ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அனைத்து தகுதிகளும் ஒருங்கே வாய்ந்த சுமந்திரனால்   ஒரு இனத்துக்கு கொலை மிரட்டல் விடும் ஒருவருக்கு எதிராக  ஏன் வழக்குபோடமுடியாது?

ஏன் என்றால் ஒன்று சிவில் சட்டம் அல்லது அரசியலமைப்பு சட்டம் பற்றியது - இதில் தனி நபருக்கு வழக்கு தொடுக்க முடியும்.

மற்றையது கிரிமினல் வழக்கு (மேலே சொன்ன விளக்கம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

சும்மை பலஸ்தீனுக்கு அனுப்பி ஹமாஸ் பரப்புரையாளரிடம் பயிற்ற்சி எடுக்க சொல்ல வேண்டும்🤣.

அப்படி சுமந்திரன் பலஸ்தீனத்திற்கு சென்று பொய் பரப்புரை நிபுணர்களான ஹமாஸ்சிடம் பொய்களை பரப்புரைகள் செய்வது எப்படி என்று பயிற்ற்சி எடுத்து வந்தால் ஏதாவது பயன் உண்டா ?    ஹமாஸ்சின் பொய் பரப்புரைகளுக்கு கதறி கண்ணீர் வடிப்பார்கள் சுமந்திரன் உண்மையாக செய்வதை நாடகம் என்பார்கள்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.