Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

முப்பதாண்டுகாலப் போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் நாம் அடிமைக்களாக்கப்பட்ட பின்னர் எம் சொத்துக்கள் சொந்தங்கள் அழித்தொழிக்கப்பட்டு நிலங்கள் சிறிது சிறிதாக அபகரிக்கப்பட்டு எம் இளஞ் சமுதாயம் போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டு மறைமுகமாக தமிழர்களின் கல்வி வளமும் அழிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

பொருளாதார வீழ்ச்சியின் பின் சாதாரண மக்கள் வாழ்வதற்குப் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்தான். ஆனாலும் புலம்பெயர் தேசங்களில் இருந்து அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தொகைப் பணம் பலரை முயற்சியற்றவர்கள் ஆக்கி ஆடம்பரமான வாழ்வுக்குள்ளும் தள்ளியுள்ளதை யாரும் மறுக்கவும் முடியாது.

நிலங்கள் இருந்தாலும் அதில் சிறு பயிர் தன்னும் வைத்துப் பிழைப்பு நடத்தவோ அன்றாதத் தேவைக்கான வருமானத்தைச் சிறுதொழில் மூலம் ஈட்டவோ பலருக்கும் விருப்பம் இல்லை. வெற்று நிலங்கள் பல கேட்பாரற்று இன்றும் தரிசாகிக் கிடக்கின்றன. சுய தொழில் ஆரம்பிக்கிறோம் என்று வெளிநாட்டவரிடம் இருந்து பணம் பெற்றுக்கொள் வோரும் பணம் கைக்கு வரும்வரைதான் தொழில் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தம் நாற்காலிகளைக் காப்பாற்றவே அவர்களுக்கு நேரம் போதாது.

பலர் முகநூல்களில் எல்லாரும் குடும்பங்குடும்பமாக வெளிநாடுகளுக்கு அதுவும் ஒன்றரைக் கோடி, இரண்டு கோடி கூடக் கொடுத்து வருகிறார்கள். அந்தப் பணத்தை அங்குள்ள வங்கிகளில் போட்டு வரும் வட்டியை எடுத்தே குடும்பத்தை நடத்தலாமே என்கின்றனர்.

நாம் போரினால் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோம். ஆனால் எத்தனைபேர் போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு வந்தோம்?? பலரும் போரைச் சாக்காக வைத்து பிழைப்புக்காகப் பஞ்சம் பிழைக்கத்தானே வந்தோம். வெளிநாடுகளுக்கு வந்ததில் உயிர்ப்பயம் அற்ற நிம்மதியான வாழ்வு, வசதியான வாழ்வு, பொருளாதார வளம், தரமான கல்வி இவை எல்லாவற்றுக்குமாகத்தானே ஓடி வந்தோம்.

வெளிநாடுகளில் கடுங்குளிர், கடின வேலை, வருமானம் குறைந்த வேலைகள், வசதிகள் குறைந்த வீடுகள், புதிய வாழ்கைச்சூழல், புதிய மொழி என எத்தனையோ நெருக்குவாரங்களுக்கும் முகங்கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழர்கள் பலரும் தம் திறமைகளை வெளிக்காட்டித் தமக்கென ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இங்கும் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகமும் உண்டுதான். வெளிநாடு வந்தும் நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ளாது வாழ்க்கையை வாழ முடியாமல், சரியான திட்டமிடல் இன்றி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்போரும் பலர் உள்ளனர்.

எண்பதுகளின் பின்னர் இடம்பெயர்ந்தோர் பலர் கடும் குளிர், மேலதிக வேலை, காற்றோட்டமற்ற வீடுகள், மன அழுத்தம் போன்றவற்றால் உடல், உளரீதியாக பாதிக்கப்பட்டு பாதி நோயாளிக்களாகவும் இருக்கிறார்கள்.

நாம் ஓடிவிளையாடியாதுபோல் விளையாட எமது பிள்ளைகளுக்கு இங்கு அயலோ நிலமோ இல்லை. கூடிக் கதைப்பதற்கு சுற்றமோ சொந்தமோ  அருகில் இல்லை. பெற்றோரின், உறவுகளின் மரணங்களுக்கோ போக வழியின்றி எத்தனைபேர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மனம் நொந்து அழுதிருப்பார்கள்.

இப்போது பலருக்கு அங்கு வீடு வாசலோ சொந்தங்கள் யாருமே எமது நாட்டில் இல்லை. ஆனாலும் எமது நாட்டில் கடைசி காலத்திலாவது சென்று வாழவேண்டும் என்னும் அவா இருப்பினும் பயம் ஒருபுறம், அங்கு சென்று சும்மா இருந்து வாழ்வதற்கான பொருதாரவளம் அற்றவர்களாகவும் இருப்பதுடன் நோயாளர்களும் அங்கு சென்று இருப்பதற்கு அஞ்சி ஆண்டுக்கு ஒருதடவை நாட்டுக்குச் சென்று தம் ஆசையில் சிறிதையாவது நிறைவேற்றிக் கொள்வதுடன் திருப்திப்பட்டும் கொள்கின்றனர்.  

இன்னும் சிலர் எமக்கு ஒரு நாடு இருப்பதையே மறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அது அவர்கள் தப்பு மட்டுமன்று.

எல்லோருக்கும் பாதுகாப்பான மகிழ்ச்சியான தன்நிறைவான வாழ்க்கை வாழவேண்டும் என்னும் ஆசை இருப்பது தவறல்லவே. ஆகவே எத்தனை கோடி கொடுத்தும் எம்மவர்கள் வெளிநாடு வரட்டும். நாம் அனுபவித்த இன்ப துன்பங்களை அவர்களும் அனுபவிக்கட்டும். அவர்களால் முடிந்த பொருளீட்டி அவர்களும் வளமாக வாழட்டும். வெளிநாட்டில் வசித்துக்கொண்டிருக்கும் நாம் வெளிநாடுகளுக்கு ஏன் வருகிறார்கள் என்று அவர்களைக் கேட்பதில் எந்த நியாயமுமில்லை. வேண்டுமானால் இங்கு வாழ்ந்து சலிப்படைந்து போனவர்கள் எல்லோரும் துணிந்து தாய்நாட்டில் சென்று மிகுதி நாட்களைக் கழிக்கப் பாருங்கள். அங்கு உங்கள் அறிவையும் திறமைகளையும் உழைப்பையும் போட்டு ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். எப்படியாவது எமது அடுத்த சந்ததி அங்கு நிலைத்து வாழ்வதற்கான வழிகளை உருவாக்க முடியுமா என்று பாருங்கள். அதை விட்டு எதை சொல்லியும் யாரையும் நிறுத்தமுடியாது.                

  • Like 9
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடைமுறையிலிருக்கும் பிரச்சனைக்கான நல்லதொரு  பகிர்வு.
யாம் பெற்ற இன்பம் (துன்பம்) யாவரும் பெறுக. நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி உங்கள் எண்ணப் பகிர்விற்கு அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரமாட்டம், போங்கோ!! 🥹

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் சிறிலங்கா போய் வாழப்போவதில்லை, எனவே அங்கே இருப்போர் வெளிநாடு வராதீர்கள் என்று சொல்லப் போவதில்லை. ஆனால்: சொந்தக் காசில்😎, குறைந்த பட்சம் உயிருக்குப் பாதுகாப்பான வழியில் வாருங்கள் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இருக்கிறது.

"வளமான வாழ்வு தேடி வரும்" பயணத்தில் உயிரை இழப்பது ஏற்புடையதல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது சரிதான்.....ஆனால்  இன்றைய சிறிலங்காவின் தமிழர்கள் மீதான அரசியல் நிலை  நம்மவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடுகின்றது. வீட்டுக்கு ஒருவர் வெளிநாடு வந்து உழைத்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லதென்பது என் அபிப்பிராயம்.

இருக்கும் காணி வீடு நிலங்களை விட்டு குடும்பமாக குடிபெயர்வது   ஆபத்திலேயே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வருவதில் தவறில்லை.

ஆனால்குறைந்தபட்சம் தம்மைத் தயாராக்கிக் கொண்டு வரவேண்டும்.

பிரான்ஸ் போவதாயிருந்தால், குறைந்த பட்சம் யூரியூபில் பிரெஞ்சு படித்து வரலாமே.

அட ஒன்னுமே இல்லையா, சாரி பிளவுஸ் தைக்கப்பழகியாவது வாங்கப்பா 🤓

யாழ் பல்கலைக்கழக பட்டம் வைத்திருப்பவர்கள் பலரை சுப்பர்மாக்கெற் பில்லிங் செய்பவர்களாக பார்த்திருக்கிறேன். தமக்கு ஆங்கிலம் வரவே வராது என்று தீவிரமாக நம்புபவர்கள்.

தமிழகத்தில் இருந்து வருபவர்கள். இங்குள்ள வேலைகளை ஆராய்ந்து, அதுக்கேற்ப தம்மை தயாராக்கி ஒழுங்காக விசாவும் எடுத்தல்லவா வருகிறார்கள்.

சும்மா ஊர் சுற்றியவர்களைப் பிடித்து, ஏத்தி அனுப்பிறம், அங்கவாவது பிழைச்சுப் போ என்பதிலும், முதலில் உதை படி, பிறகு அதற்கு தயாராகு. பின்னர் விசா எடுத்து ஒழுங்கா வா என்று அறிவுறுத்தலாமே.

கனடா இந்திரன் பத்மநாதன் ஒரு IT படிப்பிக்கும் நிறுவனத்தை, SLIT உடன் சேர்ந்து ஆரம்பித்துள்ளார். North Lanka University என்று நிணைக்கிறேன்.

ஏஜன்சிக்கு கொடுத்து துளைக்கும் பணத்தில் கொஞ்சத்தை கட்டி இதில சேர்த்து விடுங்க.

வரும் போது, நம்பிக்கையுடன், விசாவுடன் வரமுடியுமே.

தகுதி இல்லாமல் வந்து கஸ்டப்பட்டு ஐந்து வருடத்தில் உழைப்பதை (வந்த கடன் வேற) தகுதியுடன் வந்து ஒரே வருடத்தில் உழைக்கலாமே. (கடன் இல்லாமல்).

கடந்த வருட பிரச்சணையால் பல கொழும்பு IT காரர் இடம் பெயர, அந்த வேலைகளை நிரப்ப இந்தியாவில் இருந்து தமிழகத்தில் இருந்து எடுக்கிறார்கள்.

நம்மவர்கள்???

ஊர் சுற்றலும், ஏஜன்சியும் தான் தலை எழுத்து!!

Edited by Nathamuni
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Nathamuni said:

வருவதில் தவறில்லை.

ஆனால்குறைந்தபட்சம் தம்மைத் தயாராக்கிக் கொண்டு வரவேண்டும்.

ஈரான்,சிரியா,மற்றும் வேறு நாடுகளிலிருந்து வருபவர்கள் ஜேர்மனிக்கு வருவதாயின் முதலில் மொழியையும் நாட்டின் சட்டதிட்டங்களையும் படித்துக்கொண்டுதான் வருகின்றார்கள்.வந்த அடுத்த நாளே வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றார்கள்.இவர்களுடன் முதலாளிமார் கூட சுத்துமாத்து விட முடியாது. அந்தளவிற்கு சட்டங்களை ஊரில் இருந்தே படித்து விட்டுத்தான் வருகின்றார்கள்.

நம்மவர்களோ விமானநிலையத்தில் இறங்கி நின்று பெப்பே தான் 🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, குமாரசாமி said:

நம்மவர்களோ விமானநிலையத்தில் இறங்கி நின்று பெப்பே தான் 🤣

இப்பவும் பிளேனில் வருகின்றார்களா?🤫

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, கிருபன் said:

இப்பவும் பிளேனில் வருகின்றார்களா?🤫

என்ன கேள்வி 🥹?

உங்கட பாஸ்போட்டை தந்தியள் எண்டால், நீரூபிச்சு காட்டலாம். ரெடியா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

என்ன கேள்வி 🥹?

உங்கட பாஸ்போட்டை தந்தியள் எண்டால், நீரூபிச்சு காட்டலாம். ரெடியா?

நல்லா கேளுங்க எஜமான் நல்லா கேளுங்க......😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகக் கச்சிதமான கனதியான கட்டுரை..........!  👍

நன்றி சகோதரி........!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன், யேர்மனியில் புது வருட கொண்டாட்டத்தின் போது யேர்மனிய பெண்களிடம் அங்கே வசிக்கின்ற சிரியா மற்றும் முஸ்லிம் நாட்டவர்கள் முறைகேடாக நடந்து பாலியல் ரீதியில் துன்பம் கொடுத்ததாகவும், அடுத்த நாள் அந்த நகர மேயர் மன்னிப்பு கேட்டு பாதுகாப்பை பலப்படுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவித்தன. இலங்கை தமிழர்கள் முறைபடி விசாவிலோ, களவாக படகிலோ வெளிநாடுகளுக்கு செல்லும் போது சட்டதிட்டங்களையும் படித்துக்கொண்டு அங்கே செல்வதில்லை. ஆனால் அவர்கள் மாதிரி இவ்வளவு கேவலமாக தமிழர்கள் நடப்பதில்லை.
பெண்களிடம் முறைகேடாக நடக்க கூடாது என்பதற்கு சட்டம் படிக்க வேண்டுமா அவர்கள் சட்டம் படித்து கொண்டு வந்தும் பயன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நிலாமதி said:

நடைமுறையிலிருக்கும் பிரச்சனைக்கான நல்லதொரு  பகிர்வு.
யாம் பெற்ற இன்பம் (துன்பம்) யாவரும் பெறுக. நன்றி .

வேறு என்னதான் செய்வது?

10 hours ago, ஏராளன் said:

நன்றி உங்கள் எண்ணப் பகிர்விற்கு அக்கா.

வரவுக்கு நன்றி

8 hours ago, Nathamuni said:

வரமாட்டம், போங்கோ!! 🥹

வராட்டிப் போங்கோ 😃

8 hours ago, Justin said:

நான் சிறிலங்கா போய் வாழப்போவதில்லை, எனவே அங்கே இருப்போர் வெளிநாடு வராதீர்கள் என்று சொல்லப் போவதில்லை. ஆனால்: சொந்தக் காசில்😎, குறைந்த பட்சம் உயிருக்குப் பாதுகாப்பான வழியில் வாருங்கள் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இருக்கிறது.

"வளமான வாழ்வு தேடி வரும்" பயணத்தில் உயிரை இழப்பது ஏற்புடையதல்ல!

இப்போது விமானப் பயணம்தான்.

8 hours ago, ஈழப்பிரியன் said:

இது தான் உண்மை.

உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே நாம்

8 hours ago, குமாரசாமி said:

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது சரிதான்.....ஆனால்  இன்றைய சிறிலங்காவின் தமிழர்கள் மீதான அரசியல் நிலை  நம்மவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடுகின்றது. வீட்டுக்கு ஒருவர் வெளிநாடு வந்து உழைத்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லதென்பது என் அபிப்பிராயம்.

இருக்கும் காணி வீடு நிலங்களை விட்டு குடும்பமாக குடிபெயர்வது   ஆபத்திலேயே முடியும்.

அதை நாம் எப்படித் தடுக்க முடியும் சொல்லுங்கள் ???

8 hours ago, Nathamuni said:

வருவதில் தவறில்லை.

ஆனால்குறைந்தபட்சம் தம்மைத் தயாராக்கிக் கொண்டு வரவேண்டும்.

பிரான்ஸ் போவதாயிருந்தால், குறைந்த பட்சம் யூரியூபில் பிரெஞ்சு படித்து வரலாமே.

அட ஒன்னுமே இல்லையா, சாரி பிளவுஸ் தைக்கப்பழகியாவது வாங்கப்பா 🤓

யாழ் பல்கலைக்கழக பட்டம் வைத்திருப்பவர்கள் பலரை சுப்பர்மாக்கெற் பில்லிங் செய்பவர்களாக பார்த்திருக்கிறேன். தமக்கு ஆங்கிலம் வரவே வராது என்று தீவிரமாக நம்புபவர்கள்.

தமிழகத்தில் இருந்து வருபவர்கள். இங்குள்ள வேலைகளை ஆராய்ந்து, அதுக்கேற்ப தம்மை தயாராக்கி ஒழுங்காக விசாவும் எடுத்தல்லவா வருகிறார்கள்.

சும்மா ஊர் சுற்றியவர்களைப் பிடித்து, ஏத்தி அனுப்பிறம், அங்கவாவது பிழைச்சுப் போ என்பதிலும், முதலில் உதை படி, பிறகு அதற்கு தயாராகு. பின்னர் விசா எடுத்து ஒழுங்கா வா என்று அறிவுறுத்தலாமே.

கனடா இந்திரன் பத்மநாதன் ஒரு IT படிப்பிக்கும் நிறுவனத்தை, SLIT உடன் சேர்ந்து ஆரம்பித்துள்ளார். North Lanka University என்று நிணைக்கிறேன்.

ஏஜன்சிக்கு கொடுத்து துளைக்கும் பணத்தில் கொஞ்சத்தை கட்டி இதில சேர்த்து விடுங்க.

வரும் போது, நம்பிக்கையுடன், விசாவுடன் வரமுடியுமே.

தகுதி இல்லாமல் வந்து கஸ்டப்பட்டு ஐந்து வருடத்தில் உழைப்பதை (வந்த கடன் வேற) தகுதியுடன் வந்து ஒரே வருடத்தில் உழைக்கலாமே. (கடன் இல்லாமல்).

கடந்த வருட பிரச்சணையால் பல கொழும்பு IT காரர் இடம் பெயர, அந்த வேலைகளை நிரப்ப இந்தியாவில் இருந்து தமிழகத்தில் இருந்து எடுக்கிறார்கள்.

நம்மவர்கள்???

ஊர் சுற்றலும், ஏஜன்சியும் தான் தலை எழுத்து!!

பலர் லண்டனுக்கு படிக்க வரும் மனைவியுடன் சேர்ந்து வந்துள்ளனர்.

7 hours ago, குமாரசாமி said:

ஈரான்,சிரியா,மற்றும் வேறு நாடுகளிலிருந்து வருபவர்கள் ஜேர்மனிக்கு வருவதாயின் முதலில் மொழியையும் நாட்டின் சட்டதிட்டங்களையும் படித்துக்கொண்டுதான் வருகின்றார்கள்.வந்த அடுத்த நாளே வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றார்கள்.இவர்களுடன் முதலாளிமார் கூட சுத்துமாத்து விட முடியாது. அந்தளவிற்கு சட்டங்களை ஊரில் இருந்தே படித்து விட்டுத்தான் வருகின்றார்கள்.

நம்மவர்களோ விமானநிலையத்தில் இறங்கி நின்று பெப்பே தான் 🤣

இப்போ வருபவர்களில் சிலர் வந்ததும் பப்புக்கு கூடப் போகின்றனர். 😀

4 hours ago, suvy said:

மிகக் கச்சிதமான கனதியான கட்டுரை..........!  👍

நன்றி சகோதரி........!  

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன்னா வா வராங்காட்டி போ…

எனவனங் எண்ட, யனவனங் யண்ட….

கம் ஓ கோ, சிக்காகோ 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு ஆக்கம். 
பொதுவாக தமிழ‌ர்கள் போருக்கு முந்தியே ஏஜன்சி மூலம் போகும் பழ‌க்கம் இருக்கின்ரது. 1978/79 களில் நான் அக்கால இளைஞர்களை கண்டுளேன். ஜெர்மனி போக கொழும்பில் வந்து நிற்பார்கள். இது ஒவ்வொருவரின் சூழ்னிலைக்கு ஏற்ப வேறூபடும்

On 1/11/2023 at 00:40, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 எம் இளஞ் சமுதாயம் போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டு மறைமுகமாக தமிழர்களின் கல்வி வளமும் அழிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

தவறு. எம்மவர்களிலும் தவறுள்ளது. அதேபோல் பலர் படிக்கிறவர்கள் நன்கு உணர்ந்து படிக்கிறார்கள். இலங்கயில் இல்லாத வசதியா படிப்பதற்கு?

நாம் போரினால் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோம். ஆனால் எத்தனைபேர் போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு வந்தோம்?? பலரும் போரைச் சாக்காக வைத்து பிழைப்புக்காகப் பஞ்சம் பிழைக்கத்தானே வந்தோம். வெளிநாடுகளுக்கு வந்ததில் உயிர்ப்பயம் அற்ற நிம்மதியான வாழ்வு, வசதியான வாழ்வு, பொருளாதார வளம், தரமான கல்வி இவை எல்லாவற்றுக்குமாகத்தானே ஓடி வந்தோம்.

நிதர்சனமான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Nathamuni said:

வருவதில் தவறில்லை.

ஆனால்குறைந்தபட்சம் தம்மைத் தயாராக்கிக் கொண்டு வரவேண்டும்.

பிரான்ஸ் போவதாயிருந்தால், குறைந்த பட்சம் யூரியூபில் பிரெஞ்சு படித்து வரலாமே.

அட ஒன்னுமே இல்லையா, சாரி பிளவுஸ் தைக்கப்பழகியாவது வாங்கப்பா 🤓

யாழ் பல்கலைக்கழக பட்டம் வைத்திருப்பவர்கள் பலரை சுப்பர்மாக்கெற் பில்லிங் செய்பவர்களாக பார்த்திருக்கிறேன். தமக்கு ஆங்கிலம் வரவே வராது என்று தீவிரமாக நம்புபவர்கள்.

தமிழகத்தில் இருந்து வருபவர்கள். இங்குள்ள வேலைகளை ஆராய்ந்து, அதுக்கேற்ப தம்மை தயாராக்கி ஒழுங்காக விசாவும் எடுத்தல்லவா வருகிறார்கள்.

சும்மா ஊர் சுற்றியவர்களைப் பிடித்து, ஏத்தி அனுப்பிறம், அங்கவாவது பிழைச்சுப் போ என்பதிலும், முதலில் உதை படி, பிறகு அதற்கு தயாராகு. பின்னர் விசா எடுத்து ஒழுங்கா வா என்று அறிவுறுத்தலாமே.

கனடா இந்திரன் பத்மநாதன் ஒரு IT படிப்பிக்கும் நிறுவனத்தை, SLIT உடன் சேர்ந்து ஆரம்பித்துள்ளார். North Lanka University என்று நிணைக்கிறேன்.

ஏஜன்சிக்கு கொடுத்து துளைக்கும் பணத்தில் கொஞ்சத்தை கட்டி இதில சேர்த்து விடுங்க.

வரும் போது, நம்பிக்கையுடன், விசாவுடன் வரமுடியுமே.

தகுதி இல்லாமல் வந்து கஸ்டப்பட்டு ஐந்து வருடத்தில் உழைப்பதை (வந்த கடன் வேற) தகுதியுடன் வந்து ஒரே வருடத்தில் உழைக்கலாமே. (கடன் இல்லாமல்).

கடந்த வருட பிரச்சணையால் பல கொழும்பு IT காரர் இடம் பெயர, அந்த வேலைகளை நிரப்ப இந்தியாவில் இருந்து தமிழகத்தில் இருந்து எடுக்கிறார்கள்.

நம்மவர்கள்???

ஊர் சுற்றலும், ஏஜன்சியும் தான் தலை எழுத்து!!

அருமையான கருத்து. இதைத்தான் நானும் இளையோருக்கு கூறுகின்றேன், skill set ஐ சரியாக தயாரக்கி கொள்ள வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Nathamuni said:

என்ன கேள்வி 🥹?

உங்கட பாஸ்போட்டை தந்தியள் எண்டால், நீரூபிச்சு காட்டலாம். ரெடியா?

இப்படியா?

நிரூபிக்க வெளிக்கிட்டு உள்ளே போகவேண்டாம்🫣

இப்ப தலை மாத்தமுடியாது. அதோடு கேட்கிற கேள்விக்கு பதில் டக்கெண்டு சொல்லவேண்டும்!

போன வருஷம் பாஸ்போர்ட் புதுப்பித்தேன். மீசையும் இல்லாமல் கனவான் மாதிரி படம்!  ஆனால் மீசையை மீண்டும் மெக்ஸிக்கன் மீசையாக வளர்த்து சிறிலங்கா உட்பட மூன்று-நான்கு நாடுகளுக்குப் போய் காட்டான் மாதிரி வந்தேன். ஒவ்வொரு நாட்டிலும் கேள்விகேட்டுத்தான் விட்டார்கள்! இலண்டனில் e-gate என்பதால் கேள்வி இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, goshan_che said:

வன்னா வா வராங்காட்டி போ…

எனவனங் எண்ட, யனவனங் யண்ட….

கம் ஓ கோ, சிக்காகோ 🤣

உங்கட பாட்டில இரண்டாவது வரி விளங்கேல்லை 😂

16 hours ago, colomban said:

நல்லதொரு ஆக்கம். 
பொதுவாக தமிழ‌ர்கள் போருக்கு முந்தியே ஏஜன்சி மூலம் போகும் பழ‌க்கம் இருக்கின்ரது. 1978/79 களில் நான் அக்கால இளைஞர்களை கண்டுளேன். ஜெர்மனி போக கொழும்பில் வந்து நிற்பார்கள். இது ஒவ்வொருவரின் சூழ்னிலைக்கு ஏற்ப வேறூபடும்

வருகைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கட பாட்டில இரண்டாவது வரி விளங்கேல்லை

சிங்களம் நோ கம்? நோ பிராப்ளம். சேம் மீனிங்🤣

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.