Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

துவராகா கட்சி தொடங்கினால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கதி என்ன.? 

தோழர் நான் தெரிந்து கொண்டவரை  எந்த பாதிப்பும் கூட்டமைப்புக்கு வராதாம்.துவராகா தான் கூட்டணியில் வேட்பாளராகி பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு  அவர்கள் தயவை பெற வேண்டும். தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தான் துவராகா பரபரப்பு.

  • Replies 300
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வல்வை சகாறா

விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

பாலபத்ர ஓணாண்டி

"தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

Ahasthiyan

* Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எம் எஸ் என் காலத்துக் கிழடுகளின் அறுவல் தாங்க முடியவில்லை. ஏதோ ஆனையிறவு அடிச்சு விழுத்தின கணக்கா சிலரில் அலப்பறை ரெம்ப ஓவர். இத்தனைக்கும் களத்தில் ஒரு துரும்பைதானும் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக இவர்கள் நகர்த்தியதில்லை.

இந்த தலைப்புக்குரிய துவாரகாவை இங்கும் யாரும் நிஜம் என்றோ.. போலி என்றோ நிறுவ நிற்கவில்லை. அதேபோல்.. இங்குள்ளவர்களினதும்.. வெளியில் உள்ளவர்களினதும் சொல்லால் நிறுவச் சொல்லவில்லை.

எது நிஜம் எது நிழல் என்பது எல்லா பாமர ஈழத்தமிழனுக்கும் தெரிந்ததே.

இன்றைய தேவை எம் தேசத்தின் விடுதலையும் மாவீரர் கனவை நனவாக்க உழைப்பதுவே. அதற்கு தேவை ஒற்றுமை.. ஒத்துழைப்பு. அதையேன் நாசமாக்குகிறார்கள் இன்னும் இன்னும். 

பல இளையோர் அமைப்புக்கள்.. எவ்வளவோ காரியங்களை நாட்டுக்காக ஆற்றிக் கொண்டிருக்கினம்.. புலம்பெயர் நாடுகளிலும் சரி.. தாயகத்திலும் சரி.

அவர்கள் யாரும் இந்த சலசலப்புக்கு ஆடினதா தெரியவில்லை.

ஆனால்.. இங்கு சிலர்.. தங்களை தாங்கள் முதுகு சொறிய இதனைப் பயன்படுத்தி.. மாவீரர் நாளை இழிவுபடுத்தி விட்டுடிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை அவர்களே அறிவார்கள். மற்றவர்களும் அறிவார்கள்.

உலகில் உள்ள சாத்தியமான எல்லா வடிவங்களினூடும் எமது போராட்டம் முன்னெடுக்கப்படுவதில் இளையோரும் மற்றோரும் தொடர்ந்து இயங்குவது மிக முக்கியம். குறிப்பாக நவீனமயமாக்கலை உள்வாங்கி. எதிரிகளின் நவீனமயமாக்கலை முறியடிக்கக் கூடிய வகையிலும் எதிரியை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியதுமாகவும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை தரக்கூடியதுமாக இருந்தால்.. அதனை பரீட்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போலி துவாரகாவின் வரவிற்கு உறுதுணையாக நின்ற இன்னொரு கும்பல் CMR மற்றும் tvi என்பன. இவங்கட யூரியூப் தடத்தில இன்னமும் ஓட்டுறாங்கள்.

இவிங்களையும் இந்தக் களவாணி கும்பல் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்க.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பவுடர் டப்பாவுக்கு கட்டியம் கூறிய சிலரை பற்றி..

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, குமாரசாமி said:

Better luck next time 🤣

F__dpr0bAAAkcLg?format=jpg&name=small

சொன்னால் நம்ப மாட்டியள். நேற்று உதை பார்க்க தொடங்கி முதலாவது நிமிடத்தில் மனசில் வந்தது இந்த பரவை  முனியம்மா சீன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/11/2023 at 23:01, நிழலி said:

யாழ் களம் மே மாதத்தில் 17 , 18 திகதிகள் வரும் வாரத்தில் தான்  தலைவருக்கு படத்துடன் கூடிய அஞ்சலியை செலுத்துவது. 

இந்த வருடமும் அதனையே செய்தோம்.

நன்றி.

அப்ப தலைவர் இரண்டு நாள் இறந்தவரோ.. மேலும் தலைவர் மற்றும் அவர் குடும்பம் மாவீரர் இல்லையோ..??!

Posted
20 minutes ago, nedukkalapoovan said:

அப்ப தலைவர் இரண்டு நாள் இறந்தவரோ.. மேலும் தலைவர் மற்றும் அவர் குடும்பம் மாவீரர் இல்லையோ..??!

இப்படியான நக்கல் நளினத்துக்கு, அதுவும் தலைவரின், அவர் குடும்பத்தின் ஒப்பற்ற தியாகத்தை கொச்சைப்படுத்தும்  நக்கல் கேள்விகளுக்கு பதில் சொல்லி  என் தரத்தை உங்கள் அளவுக்கு கீழிறக்க விரும்பவில்லை.

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Prabhakaran’s Daughter Dwaraka is No more - Who is Fake Duwaraka? - Advocate Johnson Expose

திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப் 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இன்னும் பல படங்களை அடையாளம் கண்டுள்ளேன்

ஏதோ என்னாலை முடிஞ்சது!😥😭

 

 

(என்னிடம் இருக்கின்ற வித்துடல் படங்களின் விம்பகத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட நிர்வாகம் அனுமதி தந்தால் நன்றாக இருக்கும். )

 

  

On 27/11/2023 at 10:05, நன்னிச் சோழன் said:

மதி மாமியின் பூதவுடல் & மதிமகளின் வித்துடல்

 

(இவற்றை அந்த இந்திய யூரியூப் சனலில் வெளியிட்ட பின்னரே என்னிடத்தில் இருப்பில் இருந்த படிமங்களுக்குள் தேடி முழுப்படத்தையும் எடுத்தனான். அப்படி இருந்தும் என்னிடத்தில் மதி மாமியின் பூதவுடலின் முழுப் படம் இல்லை.)

 

 

 

மதி மாமி:

large....jpg.bc1f0707950bd63795c24250925

 

நீலத்துணியால் போர்த்தப்பட்டிருப்பவர் மதி மாமி:

large.1507677_1024901954187801_218402055

 

 

  • நடுவிலை மாலதி படையணியின்ர படையணிச் சீருடையோடு (காற்சட்டையால் கீழுடல் போர்த்தப்பட்டிருப்பவர்) வித்துடலாய் வளர்த்தப்பட்டிருப்பவர்: பி.ம. துவாரகா (இயக்கப்பெயர்: மதிமகள்)
  • அந்த மஞ்சள் பஞ்சாபி: மதிமாமியின் கால்கள்

large.154533_315088451898795_2008672032_

 

large.11071609_1001300379881292_27583937

 

large.11427002_1024902034187793_65182580

 

 

 

 

 

இந்தா, அவர் மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா நல்ல தெளிவா அக்காவின்ர வித்துடலை அடையாளம் காட்டுவதைக் காணுங்கள். கையால் சுட்டிக் காட்டுகிறான். சுட்டுவிரல் சுட்டும் இடத்தையும் மேலே உள்ள அக்காவின் வித்துடல் உள்ள இடத்தையும் உற்று நோக்குங்கள்.

large.369103484_001(1).jpg.63359c0b27d72

 

large.225067_201580343214184_1916175_n.j

 

இதில் கடும் பச்சை மேலாடை அணிந்திருப்பவரே மாவீரர் ரட்ணம் மாஸ்டர் அவர்கள் எனில், துவாரகா அக்கா ரட்ணம் மாஸ்டரின் வித்துடல் உள்ளிட்ட வித்துடல்களோடுதான் வளர்த்தப்பட்டுளார். 

large.556775_315089471898693_1885763271_

 

இவர்களினதோடு இவ்விடத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வித்துடல்கள்கள் வளர்த்தப்பட்டிருந்தன. அவை மே 17,18ம் திகதிகளில் பல இடங்களில் வீரச்சாவடைந்தவர்களினது ஆகும். எதை வைத்துக் " பல இடங்களில்" என்று கூறுகிறேன் எனில், என்னிடத்தில் சாள்ஸ் அண்ணாவின் வித்துடல் இருவேறு இடங்களில் இரு வேறு நிலைகளில் வளர்த்தப்பட்ட படியான படிமங்கள் இரண்டு உள்ளது. முதல் இடத்தில் கானான் கோனான் என்ட நிலையில் சில வித்துடல்கள் (இவரின் மெய்க்காவலர்களினதாக இருக்கலாம்) உள்ளன. அவற்றின் மேல் அன்னவர்களினுடைய சுடுகலன்கள் உள்ளன. பின்னர் அதே ஆட்களின் வித்துடல் இந்த வித்துடல் குவியலிலும் காணப்படுகின்றன. ஆகையால் தான் இவை பல்வேறு இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் என்று உறுதிபடக் கூறுகிறேன்.

சாள்ஸ் மற்றும் அன்னாரின் 8 மெய்க்காவலர்களின் வித்துடல்கள் வேறொரு இடத்தில்; ஒரு கருக்குமட்டை வேலிக்கு அருகில் வளர்த்தப்பட்டுள்ளன:

large.1805606901_294811_116422711895674_

 

வித்துடல் குவியல்கள் இர்நுத இடத்தில் வேறொரு தரப்பாளில் சாள்ஸ் மற்றும் பல புலிவீரர்களின் வித்துடல்கள் வளர்த்தப்பட்டுள்ளதைக் காண்க.

large.555452_315089571898683_571481837_n

 

துவாரகா (இ.பெ.: மதிமகள்) அவர்களின் வித்துடல் இருந்த இடத்தில் இன்னொரு பகுதியில் தான் தேசியத் தலைவரின் மூத்த புதல்வன் சாள்ஸ் அன்ரனி (இ.பெ.: சாள்ஸ்) அவர்களின் வித்துடலும் வளர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு வரலாற்றுத்தகவல். அதாவது தாயும் அவருடைய முதல் மகன் & மகள் ஆகியோரின் பூதவுடல் & வித்துடல்கள் ஒன்றாகவே நிலத்தில் தரப்பாளின் மேல் வளர்த்தப்பட்டிருக்கின்றன.

Edited by நன்னிச் சோழன்
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரியில் கருத்தெழுத நான் தகுதியற்றவன் ஆனால் மனதில் பட்டதை எழுதுகின்றேன்.

இறந்து போன துவாராகவை மீண்டும் அவர் உயிரோடு எழுந்து வந்து மக்கள் மத்தியில் வாழுகின்றார் என்று கூறி அதன் மூலம் தாங்கள் வியாபாரத்தை நடத்த முயல்வது கடைந்தெடுத்த அயோக்கியதனம். இது இறந்த ஆன்மாக்களை நினவு கூறும் இந்த நவம்பர் மாதத்தில் இப்படிபட்ட‌ ஈனசெயல் மிகவும் அருவருக்கத்தக்கது.

13 hours ago, நிழலி said:

துவாரகா வருவா என நம்பியவர்கள், நம்பி அதனை வெளியே காவித்திரிந்தவர்கள் அனைவரும் கபட நோக்கில்தான் செய்தனர் என்று கூற முடியாது. பலர், உண்மை என நம்பி இருந்தனர். விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் மீதும் கட்டமைக்கப்பட்டு இருக்கும் அதீத நம்பிக்கை அவர்கள் ஒரு போதும் இறந்து போக மாட்டார்கள் என்று நம்பும் அளவுக்கு சிலருக்கு இருந்ததை அவதானித்துள்ளேன். அந்த அதீத நம்பிக்கை, சரி பிழைகளை சீர் தூக்கிப் பார்க்கும் அறிவை மேவி இருந்தது.

 

நிழலி அவர்களின் இந்த கருத்துடன் நான் ஒத்துபபோகின்றேன். இது எனக்கும் பொருந்தும் 

இங்கு என் மனம் இன்னும் நம்ம மறுப்பது, பொட்டு அம்மான் இறந்து போனதைதான், ஒரு வசீகரமான முகவெட்டுடைய திரைப்பட கதாநாயன் போன்ற‌  இவர் எங்கோ இன்னும் இருக்கின்றார் என்றே என் மனம் சொல்கின்றது. இவருடய சடலம் இன்னும் கிடைக்கவில்லை. டீ என் ஏ அறிக்கையும் இல்லை. ஒரு சாதாரண வியாபாரியே பிளான் ‍ஏ இல்லா விட்டால் பிளான் பீ வைத்திருப்பார். இவ்வளவு திறமை வாய்ந்த இவர் கடைசி நேரத்தில் ஒரு எக்ஸிட் ப்ளான் வைத்திருந்திருப்பர் என்பது,   இவர் திறமை மீது நான் வைத்திருக்கும் அசைக்க முடியா நம்பிக்கைதான். 

13 hours ago, பையன்26 said:

எத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ள் உயிர் தியாக‌ம் செய்து..........

மாவீரர் என்பவர் யார்? வரைவிலக்கனம் என்ன? இவர்கள் புலிகளின் அமைப்பில் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்கள் மட்டுமா? அல்லது வேறு சகோதர இயக்கங்களிலும் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களும் உள்ளடங்குவார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 hour ago, colomban said:

மாவீரர் என்பவர் யார்? வரைவிலக்கனம் என்ன? இவர்கள் புலிகளின் அமைப்பில் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்கள் மட்டுமா? அல்லது வேறு சகோதர இயக்கங்களிலும் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களும் உள்ளடங்குவார்களா? 

இந்தத் திரிக்குள் ஏன் இதைக் கொண்டாறியள் என்பது தெரியவில்லை. இருப்பினும் நானும் மறுமொழியளிக்கிறேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களும் ஈரோஸ் அமைப்பில் இருந்து புலிகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களுமே மாவீரர்கள்.

******

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்தத் திரிக்குள் ஏன் இதைக் கொண்டாறியள் என்பது தெரியவில்லை. இருப்பினும் நானும் மறுமொழியளிக்கிறேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களும் ஈரோஸ் அமைப்பில் இருந்து புலிகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களுமே மாவீரர்கள்.

வேறெந்தக் காவாலிகளுக்கும் இது பொருந்தாது.

 

 

நன்றி நன்னி அவர்களே. உங்களுக்கும் சேர்த்துதான் இந்த கேள்வி அனால் எழுதும்போது விடுபட்டுவிட்டது. 


குறிப்பு
நான் இவ்வளவு காலமும் நினைத்தேன். நீங்கள் ஆண் என்று, இன்று தான் பர்த்தேன் நீங்கள் உங்கள் ப்ரொபைலில் பெண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னத்தை சொல்ல? 

துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள். 

(முகப் புத்தக தடைகள் வரலாம் எனும் நிலையில் பல விடயங்களை தவிர்க்கிறேன். பொறுத்தருள்க)

அதிலிருந்தே அனைவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் போல உள்ளது. அது இந்த வீடியோவை உருவாக்கியோருக்கு கிடைத்த வெற்றிதான்.

காரணம் வெளியாகியுள்ள வீடியோவில் உள்ள நபர் சுவிசில் வாழும் பெண் என்பது அநேகருக்கு தெரியும். அவர் குறித்த விபரங்கள் மற்றும் படங்கள் ஏற்கனவே வந்து விட்டன.  முக்காடு போட்டுக் கொண்டு போய் துவாரகா சிலரைச் சந்தித்தார் எனும் பேச்சு வந்த போதே அவர் குறித்த அனைத்து தகவல்களும் சமூக வலைத் தளங்களில் வெளியாகி , அவை இன்றும் உள்ளன.

எனவே உண்மையான துவாரகா போல ஒருவரை AI தொழில் நுட்பம் மூலம் உருவாக்க வேண்டிய தேவையில்லை. அது ஒரு புறத்தே பண விரயம். அடுத்து ஏற்கனவே   சுவிற்சர்லாந்தின் துர்காவ் (Thurgau)  மாநிலத்தில் வாழும் மித்துஜா என அவர் குறித்த விபரங்கள் பரவலாக தெரிய வந்து சில காலம் ஆகிவிட்டது. அவரது தொலைபேசி உரையாடல் குரல் கூட பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விட்டன. 

இந்த நிலையில் வேறொருவரையோ அல்லது வேறொருவரது குரலையோ பயன் படுத்தினால் , மித்துஜாவை , துவாரகா எனக் காட்டியவர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம்.

எனவே வெளியாகியுள்ள வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படவில்லை. ஆனால் Green Screen Background அல்லது Chromakey   தொழில் நுட்பத்தை பாவித்தே துவாரகா வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக அந்த வீடியோவை அவதானித்தால்  மித்துஜா நிறுத்தி , நிறுத்தி பேசுவதை அவதானிக்க முடியும். கமரா ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால் அநேகமுறைகள் Jump ஆவதோடு , ஒரே இடத்தில் நிற்காமல் சற்று விலகி விலகி நிற்கிறார். அந்த வீடியோவை பாருங்கள். அதை பார்த்து முடிவெடுங்கள். 

அதனால்தான் அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படவில்லை என முடிவு செய்ய இலகுவாகிறது. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கினால் இந்த தவறை அதை உருவாக்குவோர் விட மாட்டார்கள். 

செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என்றால் வீடியோவில் பேசும் சம்பந்தப்பட்டவரை தேட மாட்டார்கள். அவருக்கு பிரச்சனையும் வராது. இது சிலருக்கு பரப்பும் கதை! ஆனால் அவர்தான் பேசினார் என நம்புவோருக்கு சொல்ல நினைத்தது வேறு கதை. 

இன்னொன்று இலங்கையில் மாநிலங்கள் முறை இல்லை. மாகாண முறையே உள்ளது. ஆனால் அவரது பேச்சில் மாநிலங்கள் என அவர் சொல்கிறார்.  எனவே அவரது பேச்சை , தமிழகத்தில் அல்லது இந்தியாவில் உள்ள ஒருவரே எழுதிக் கொடுத்துள்ளார். அதை இந்த குழுவினர் கூட அவசரத்தில் அவதானிக்கமால் விட்டு விட்டார்கள். 

பொதுவாக அவரது பேச்சை , ஆரம்ப காலங்களில் அன்டன் பாலசிங்கம் அவர்களே எழுதிக் கொடுத்தார். அதன் பின் எழுதிய பேச்சு பாலக்குமார் அவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்டது. பாலசிங்கம் அவர்களது எழுத்துக்களில் இருந்த வீரியம் , பாலக்குமார் அவர்களது எழுத்தில் இருக்கவில்லை. 

புதிய வீடியோவில் இந்திய - தமிழக ஆதரவாளர்களது பேச்சிலும் , எழுத்திலும் வரும் வார்த்தை பிரயோகங்களே உள்ளன. அவர்களது பரப்புரை என்பதை யாரும் தவறு சொல்ல முடியாது. ஆனால் ஈழ தலைவர்களது பேச்சில் அவர்களது எண்ணக் கருத்துகள் வந்தால் , அங்கே உள்ள  இடைவெளியை அனைவரும் உணருவார்கள். அதை இங்கே உணர முடிகிறது. 

அடுத்து சிலர் டப் (யாரோ குரல் கொடுத்துள்ளார்கள்) பண்ணியது சரியில்லை என எழுதியிருந்தார்கள்.  குரல் வாயசைப்புக்கு ஏற்ற விதத்தில் சிங் ஆகவில்லை  (பொருந்தவில்லை) என்பது உண்மைதான்.  அதற்கு காரணமே பலமுறை நிறுத்தி நிறுத்தி மித்துஜா பேசியதால் , அதை எடிட்ங்கில் கோர்க்கும் அல்லது இணைக்கும் போது , ஒலியை சரியாக சிங் பண்ணாமல் அலட்சியமாக இருந்துள்ளார்கள். 

ஆனால் அதில் உள்ளது மித்துஜாவின் குரல்தானே தவிர வேறு யாரும் டபிங் கொடுக்கவில்லை. இப்படியான அநேக குளறுபடிகளால் , அநேகரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான காணோளி (விடியோ) நகைப்புக்கு இலக்காகிவிட்டது.

அடுத்த மேடையில் சந்திக்கலாம்.
Better Luck Next Time 
- ஜீவன்
 

📸 Look at this post on Facebook https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035Tm5SGWCepFit6VYNCnw5dtM2nQm9SfwPuHSxBpbbWT3a2gQXe4eUK3cjoZ9wCZGl&id=823993901&mibextid=WC7FNe

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10 ஆவது நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.. போனில் பேசுபவர் இது றோவின் செயலோ எந்த ஒரு அரச அமைப்புகளின் செயலோ அல்ல சுவிஸ் மற்றும் சில புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஒரு குழுவின் செயல் இந்த வீடியோ எடுத்த ஆக்கள் இடம் அனைத்தும் தெரியும் என்கிறார்..

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னுடைய சந்தேகம் இப்பொழுதும் இதை RAW செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தான். அதற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று முதல் இணையத்தில் மித்துஜா என்பவர் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார். அவரின் அடையாள அட்டை முதல், கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம் வரை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நான் இங்கே இணைக்க விரும்பவில்லை. அது மித்துஜா இல்லையென்றால் அவர் எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் :)

மித்துஜா சுவிசில் அகதி அந்தஸ்து நிலையில் தான் இருக்கிறார் என்பது அவருடைய அடையாள அட்டையில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சில மாதங்களிற்கு முன்னர் சுவிசில் துவராகவின் பெயரை வைத்து ஒரு பணவேட்டை நடந்தது அனைவரும் அறிந்ததே. அதுவும் மித்துஜாவின் திருவிளையாடலாக இருக்கலாம். இந்த சில்லறைத்தனமான வீடியோ கூட பணவேட்டை கும்பலின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. 

எது எப்படியோ மித்துஜா இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றால் வெளியில் வந்து பேசவேண்டும். சம்மந்தம் இல்லாத பட்சத்தில் இணையத்தில் வதந்தி பரப்பிய அனைவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெறட்டும். அவரின் மௌனம் மேலும் மேலும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, ஊர்க்காவலன் said:

என்னுடைய சந்தேகம் இப்பொழுதும் இதை RAW செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தான். அதற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று முதல் இணையத்தில் மித்துஜா என்பவர் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார். அவரின் அடையாள அட்டை முதல், கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம் வரை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நான் இங்கே இணைக்க விரும்பவில்லை. அது மித்துஜா இல்லையென்றால் அவர் எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் :)

மித்துஜா சுவிசில் அகதி அந்தஸ்து நிலையில் தான் இருக்கிறார் என்பது அவருடைய அடையாள அட்டையில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சில மாதங்களிற்கு முன்னர் சுவிசில் துவராகவின் பெயரை வைத்து ஒரு பணவேட்டை நடந்தது அனைவரும் அறிந்ததே. அதுவும் மித்துஜாவின் திருவிளையாடலாக இருக்கலாம். இந்த சில்லறைத்தனமான வீடியோ கூட பணவேட்டை கும்பலின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. 

எது எப்படியோ மித்துஜா இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றால் வெளியில் வந்து பேசவேண்டும். சம்மந்தம் இல்லாத பட்சத்தில் இணையத்தில் வதந்தி பரப்பிய அனைவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெறட்டும். அவரின் மௌனம் மேலும் மேலும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். 

மித்திஜா மீது ஏற்கனவே ஆழ் மாறாட்டவழக்கு மற்றும் பழ வழக்குகள் சுவிசில் போடப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நிழலி said:

இப்படியான நக்கல் நளினத்துக்கு, அதுவும் தலைவரின், அவர் குடும்பத்தின் ஒப்பற்ற தியாகத்தை கொச்சைப்படுத்தும்  நக்கல் கேள்விகளுக்கு பதில் சொல்லி  என் தரத்தை உங்கள் அளவுக்கு கீழிறக்க விரும்பவில்லை.

நன்றி 

உங்க‌ட‌ கேள்விக்கு இனி ப‌தில் அளிக்க‌ மாட்டார்..........ஒரு நாள் பொறுத்து இன்னொரு திரியில் வ‌ந்து  க‌ம்பு சுத்துவார் அது தான் நெடுங்கால‌ போவானின் ப‌ழ‌க்க‌ம்😏............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nedukkalapoovan said:

அப்ப தலைவர் இரண்டு நாள் இறந்தவரோ.. மேலும் தலைவர் மற்றும் அவர் குடும்பம் மாவீரர் இல்லையோ..??!

என்ன நெடுக்ஸ், முகப்பில் உள்ளதை வாசிக்கவில்லை போலிருக்கு? தாயக கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களை நினைவு கூர்வோம் என்றால் அதற்குள் தலைவரும் அவர் குடும்பமும் அடக்கம்தான். தனியே தலைவருக்கு மட்டும் மாவீரர் நாளில் அஞ்சலி செய்வது தலைவரையே அவமானப்படுத்துவது போலாகாதா??

மேக்கப் மாமியின் உருவ அலங்காரத்தை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இது யாரின் வேலை என்று! என்ன செய்வது இந்தியாவிற்கும், உண்டியல் குலுக்கும் கோஷ்டிக்கும் இப்படியான மட்டமான ஐடியாக்கள்தான் வரும்போல!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நிழலி said:

இப்படியான நக்கல் நளினத்துக்கு, அதுவும் தலைவரின், அவர் குடும்பத்தின் ஒப்பற்ற தியாகத்தை கொச்சைப்படுத்தும்  நக்கல் கேள்விகளுக்கு பதில் சொல்லி  என் தரத்தை உங்கள் அளவுக்கு கீழிறக்க விரும்பவில்லை.

நன்றி 

நல்ல பதில்👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Eppothum Thamizhan said:

என்ன நெடுக்ஸ், முகப்பில் உள்ளதை வாசிக்கவில்லை போலிருக்கு? தாயக கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களை நினைவு கூர்வோம் என்றால் அதற்குள் தலைவரும் அவர் குடும்பமும் அடக்கம்தான். தனியே தலைவருக்கு மட்டும் மாவீரர் நாளில் அஞ்சலி செய்வது தலைவரையே அவமானப்படுத்துவது போலாகாதா??

மேக்கப் மாமியின் உருவ அலங்காரத்தை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இது யாரின் வேலை என்று! என்ன செய்வது இந்தியாவிற்கும், உண்டியல் குலுக்கும் கோஷ்டிக்கும் இப்படியான மட்டமான ஐடியாக்கள்தான் வரும்போல!!

பொட்டு அம்மான் அருகில் நின்ற‌ போராளிகள் முள்ளிவாய்க்கால் இறுதி ச‌ண்டையில் ச‌ர‌ன் அடைந்து பின்பு புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ போராளிக‌ள் கூட‌ த‌ங்க‌ளை பெரிய‌ ஆட்க‌ள் போல் காட்டி கொண்ட‌து  கிடையாது ந‌ண்பா அவ‌ர்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் போல் சாதார‌ன‌ வாழ்க்கையை வாழுகின‌ம்............முக‌மூடி போட்டுக் கொண்டு யாழில் வ‌ந்து ட‌வுள் கேம் விளையாடும் ந‌ப‌ர‌ விட‌  .............எத்த‌னையோ வ‌ய‌தில் குறைந்த‌ பிள்ளைக‌ள் இது ச‌கோத‌ரி துவார‌க‌ இல்லை என்று உண்மையை எடுத்துச் சொல்லுதுக‌ள்.................புலிக‌ளால் த‌ன‌க்கு ஆவ‌த்து என்று சொல்லி த‌ஞ்ச‌ம் புகுந்த‌வ‌ர் கால‌ சூழ் நிலைக்கு ஏற்ற‌ போல் ந‌ல்லா ந‌டிப்பார் .............எங்க‌ட‌ த‌லைவ‌ர் குடும்ப‌ம் எம் இன‌த்துக்கு செய்த‌ தியாக‌ம் வார்த்தையால் சொல்ல‌ முடியாது.............ச‌கோத‌ரி துவார‌க‌ ப‌ற்றிய‌ வ‌த‌ந்தி ப‌ர‌ப்புவ‌து யார் என்று பார்த்தால்........... துரோகிய‌லும்  இறுதி க‌ட்ட‌ போரில் காசை கொள்ளை அடிச்ச‌ கொள்ளை கூட்ட‌மும் இந்திய‌ ரோவிவும் சேர்ந்து செய்யும் கேலி கூத்து தான் இந்த‌ மேக்க‌ப் மாமி ..............உண்மையும் நேர்மையுமாய் எங்க‌ட‌ போராட்ட‌த்தை நேசித்த‌வ‌ர்க‌ளுக்கு 2009க‌ளில் ந‌ட‌ந்த‌  உண்மை நில‌வ‌ர‌ம் ச‌ரியா தெரியாது அப்போது ச‌ரியான‌ ப‌த‌ட்டம்  ஒரு சில‌ வ‌ருட‌ம் க‌ழித்து அவ‌ர்க‌ளே உண்மைய‌ தெரிந்து கொண்டார்க‌ள்................எங்க‌ட‌ த‌லைவ‌ர் கோழை கிடையாது த‌ப்பி ஓட‌...........அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரிக்க‌ வேண்டாம் என்ப‌தே இந்த திரியில் எழுதும் ப‌ல‌ரின் விவாத‌ம்....................த‌லைவ‌ரின் குடும்ப‌த்தில் ஒருத‌ரும் உயிருட‌ன் இல்லை...........த‌லைவ‌ரின் குடும்ப‌த்தை ப‌ற்றி நாம் எங்க‌ட‌ அடுத்த‌ ச‌ந்த‌திக்கு அவ‌ர்க‌ளின் உண்மையான‌ தியாக‌த்தை எடுத்து சொல்ல‌ வேண்டிய‌து ஒவ்வொரு நேர்மையுள்ள‌ த‌மிழ‌னின் க‌ட‌மை..............இப்ப‌டி ஒரு த‌லைவ‌ர் இனி எங்க‌ளுக்கு கிடைக்க‌ போவ‌து கிடையாது...........

எதிரிக‌ளை விட‌ துரோகிய‌லே ஆபத்தான‌வ‌ர்க‌ள் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர்

 

யாழில் நெடுங்க‌லா போவானுக்கு கேள்விக‌ளால் அடிக்கு மேல் அடி விழுந்தால் சொல்லாம‌ல் கொள்ளாம‌ ஓடிடுவார்...........இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ ஒரு க‌ருத்தை எதிர் கொள்ள‌ துப்பில்லை துணிவில்லை...........த‌ன‌து பாதுக்காப்புக‌ருதி அதை செய்ய‌ வில்லை இதை செய்ய‌ வில்லை என்று யாழில் பெரிய‌ விம்ப‌த்தை கில‌ப்பி விடுவ‌து தான் இவ‌ர் செய்த‌ சாத‌னை...................கூக்கில் யூடுப் இருக்கும் வ‌ரை எதை தெரிந்து கொள்ள‌ விரும்புகிறோமோ அதை சில‌ நொடிக‌ளில் தெரிந்து கொள்ள‌லாம் ந‌ண்பா ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை பாதுகாப்பு படையினரது புலனாய்வு துறை , துவாரகா எனும் பெயரில் தோன்றிய ராஜரத்தினம் மிதுஜாவின் பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு)  மற்றும் ஏனைய குடும்ப விபரங்களை  கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்...

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
9 hours ago, colomban said:

குறிப்பு
நான் இவ்வளவு காலமும் நினைத்தேன். நீங்கள் ஆண் என்று, இன்று தான் பர்த்தேன் நீங்கள் உங்கள் ப்ரொபைலில் பெண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். 

காலநிலை மாறும் போது எனது பாலும் மாறிவிடுவதுண்டு. 😆 மறுபடியும் கோடை காலத்தில் ஆணாகி விடுவேன். கவலை வேண்டாம்🤣🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@பாலபத்ர ஓணாண்டி

ஓணாண்டி

க‌டுதாசி ஆண‌ந்த‌னின் பேச்சை கேட்டிங்க‌ளா.............என்னால‌ சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ல‌................இவ‌ன் எல்லாம் ஒரு ஆளு................இப்ப‌ தெரியுது த‌மிழ் நாட்டுக்கு போனா பிற‌க்கு இவ‌ர் ஏன் த‌மிழீழ‌த்துக்கு மீண்டும் வ‌ர‌ வில்லை

 

இவ‌ரை பின்னைய‌ கால‌ங்க‌ளில் த‌லைவ‌ர் முற்றிலுமாய் எங்க‌ட‌ போராட்ட‌த்தில் இருந்து ஒதுக்கி வைச்ச‌தாய்...........யாழ்க‌ள‌ ச‌கோத‌ரி ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் எழுதி இருந்தா............அப்ப‌ புரிய‌ல‌ க‌டுதாசி ஆன‌ந்த‌னை ப‌ற்றி இப்ப‌ ந‌ங்கு புரியுது...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, colomban said:

குறிப்பு
நான் இவ்வளவு காலமும் நினைத்தேன். நீங்கள் ஆண் என்று, இன்று தான் பர்த்தேன் நீங்கள் உங்கள் ப்ரொபைலில் பெண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். 

நன்றி கொழும்பான் .நீங்கள் சொன்ன பின்பு நான் இப்போ தான் பார்த்தேன்🙄




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.