Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

spacer.png

 

கக்ஸ் புலிகளுடன் பேசும். ஜெனிவாவிலும் பேசும். பிக்குவோடும் பேசும்.

  • Replies 131
  • Views 11.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எனது கருத்து, 1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை.  எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட

  • குமாரசாமி
    குமாரசாமி

    எழுதுங்கள். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் வந்தால் அது ஒட்டுமொத்த பிரச்சனையாகாது.   ஒரு சில பல இடங்களில்  நீங்களும் நானும் முரண்பட்டாலும் உங்கள் எழுத்தின் வாசகன் நான்.

  • ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இரு

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லாரும் வீடியோக்களை மட்டும் இணைக்கிறார்கள் இங்கே? என்ன தான் சொல்கிறார்கள் என்று ஒரு சுருக்கமாக எழுதி விடுங்கள்! 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

ஏன் எல்லாரும் வீடியோக்களை மட்டும் இணைக்கிறார்கள் இங்கே? என்ன தான் சொல்கிறார்கள் என்று ஒரு சுருக்கமாக எழுதி விடுங்கள்! 😂

நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாரும் தமிழ் எழுதுவது எப்படி என மறந்து விட்டார்கள் என.

இதற்குள் எழுதுபவர்கள் மீதும் நீங்கள் அதிகம் எழுதுகிறீர்கள் என குறை வேறு படுவார்கள்.

பேசாமல்…..

உலகத்தமிழருக்கு ஒரு வீடியோக்கடை என மாத்திவிடலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாரும் தமிழ் எழுதுவது எப்படி என மறந்து விட்டார்கள் என.

இதற்குள் எழுதுபவர்கள் மீதும் நீங்கள் அதிகம் எழுதுகிறீர்கள் என குறை வேறு படுவார்கள்.

பேசாமல்…..

உலகத்தமிழருக்கு ஒரு வீடியோக்கடை என மாத்திவிடலாம்🤣

இந்த வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை, நேரம் இருந்தாலும் "ஐம்பது பைசா கிளிக் பைற்" வியாபாரிகளுக்கு உழைப்புக் கொடுக்கவே கூடாதென்ற வன்மம் காரணமாகப் பார்ப்பதில்லை😂!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

ஏன் எல்லாரும் வீடியோக்களை மட்டும் இணைக்கிறார்கள் இங்கே? என்ன தான் சொல்கிறார்கள் என்று ஒரு சுருக்கமாக எழுதி விடுங்கள்! 😂

ஈயம்  பூசினமாதிரியும் இருக்க வேணும் பூசாத மாதிரியும் இருக்க வேண்டும். தமிழருக்கு நீதி  வேண்டும் என று பொங்கு எழுபவர்களாகவும் காட்டிக்   கொள்ள வேண்டும்.  யாராவது முயன்று சிறிதளவு நன்மை தமிழருக்கு கிடைத்து விடுமோ என்றும் பீதியாக உள்ளது  என்பதால் அப்படி ஏதும் நடந்து விடக் கூடாது என்பதை   நேரடியாக சொல்ல முடியாததால் கொஞ்சம் விக்கல் வருகிறது. அதனால் விக்கி விக்கி வீடியோக்களை இணைக்கின்றோம். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

இந்த வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை, நேரம் இருந்தாலும் "ஐம்பது பைசா கிளிக் பைற்" வியாபாரிகளுக்கு உழைப்புக் கொடுக்கவே கூடாதென்ற வன்மம் காரணமாகப் பார்ப்பதில்லை

அது 👍

29 minutes ago, island said:

ஈயம்  பூசினமாதிரியும் இருக்க வேணும் பூசாத மாதிரியும் இருக்க வேண்டும். தமிழருக்கு நீதி  வேண்டும் என று பொங்கு எழுபவர்களாகவும் காட்டிக்   கொள்ள வேண்டும்.  யாராவது முயன்று சிறிதளவு நன்மை தமிழருக்கு கிடைத்து விடுமோ என்றும. பீதியாக உள்ளது  என்பதால்  நேரடியாக சொல்ல கொஞ்சம் விக்கல் வருகிறது. 😂 

சிறப்பாக உள்ளதை சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஏன் எல்லாரும் வீடியோக்களை மட்டும் இணைக்கிறார்கள் இங்கே? என்ன தான் சொல்கிறார்கள் என்று ஒரு சுருக்கமாக எழுதி விடுங்கள்! 😂

என்னவோ நடக்குது

மர்மமா இருக்குது.

1 hour ago, goshan_che said:

நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாரும் தமிழ் எழுதுவது எப்படி என மறந்து விட்டார்கள் என.

இதற்குள் எழுதுபவர்கள் மீதும் நீங்கள் அதிகம் எழுதுகிறீர்கள் என குறை வேறு படுவார்கள்.

பேசாமல்…..

உலகத்தமிழருக்கு ஒரு வீடியோக்கடை என மாத்திவிடலாம்🤣

ஏன் கோசான்

உங்களுக்கு தமிழும் ஆங்கிலமும் நன்றாகத் தெரியுமே.என்ன தான் நடக்கிறதென்று விபரமாக எழுதலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

 

இதுவரை பார்த்த படங்கள் எல்லாவற்றிலும் பிக்குக்கள் இருக்க எமது ஆட் கள் காலில் விழுவதைதான் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக ஒரு தமிழன் இருக்க பிக்கு எழுந்து நின்று கொடுப்பதை / வாங்குவதை இப்பொழுது தான் பார்க்கிறேன். 😊

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

அத்தோடு குறித்த பிரகடனத்தின் உள்ளடகத்தில் காணப்படும் விடயங்களில் மூன்றில் இரண்டு பகுதியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதமான தடைகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அதேநேரம், ஒருசில விடயங்கள் சம்பந்தமாக இன்னமும் ஆழமான கலந்துரையாடல்கள் அவசியமாக இருப்பதாக கூறியதோடு, அதற்கான முன்னெடுப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியினர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்றும் கூறினார்.

இதேநேரம், அவரைப் பொறுத்தவரையில், அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதி செய்து அனைத்தின பிரஜைகளும் சமமானவர்கள் என்பதை நிலைநிறுத்துவதே இலக்காக உள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த வகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு என்பது புலம்பெயர் இலங்கையர் அமைப்பு என்ற அடையாளத்தினையே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று எம்மிடம் எதிர்பார்ப்பதாகவும், அதனை ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

சஜித் பீரேமதாசாவின் தேர்தல் விஞ்ஙாபனத்தில்  மூன்றில 2  பங்கு இமாலயப் பிரகடனமாம் என்றால் யோசித்துப் பாருங்கள் தீர்வுத்திட்டம் எவ்வளவு பலவீனமானதென்று. அதனால்தான் இந்தத்தீர்வுத்திட்டத்தை பிக்ககள் எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்க். அதுமட்டுமல்லாமல் தமிழர் அடையாளத்தை அழிக்கச் சொல்லி சஜித் சொல்கிறார் அது படிப்படியாக நடைபெறும் என்று சுரேன் சொல்கிறார். இது தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் இல்லை. தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் குள்ள நரி ரணிலின் தீர்வுத்திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஈயம்  பூசினமாதிரியும் இருக்க வேணும் பூசாத மாதிரியும் இருக்க வேண்டும். தமிழருக்கு நீதி  வேண்டும் என று பொங்கு எழுபவர்களாகவும் காட்டிக்   கொள்ள வேண்டும்.  யாராவது முயன்று சிறிதளவு நன்மை தமிழருக்கு கிடைத்து விடுமோ என்றும் பீதியாக உள்ளது  என்பதால் அப்படி ஏதும் நடந்து விடக் கூடாது என்பதை   நேரடியாக சொல்ல முடியாததால் கொஞ்சம் விக்கல் வருகிறது. அதனால் விக்கி விக்கி வீடியோக்களை இணைக்கின்றோம். 

நீங்கள் சிந்திப்பது போல் இங்கு தமிழர்கள் யாராவது இருந்தா சொல்லுங்கள்.

எனக்கு தெரிந்து அப்படி ஒரு கேவலம் கெட்ட தமிழனை காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் பேரவையின் சந்திப்பு -பிரித்தானிய தமிழர் பேரவை அதிர்ச்சி.


உலக தமிழர் பேரவை இலங்கையின் சிரேஸ்ட பௌத்த மதகுருமார்களை சந்தித்தமை இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் மக்கள் இழந்து கொண்டிருக்கின்ற அவர்களின் அபிலாசைகளை அடைவதற்காக நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு தீவிரமாக பாடுபடும் அமைப்புகளிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

 

பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலம் முதல் இலங்கையின் அரசியலில் பௌத்த மதகுருமார் ஆதிக்கம் செலுத்தியமையே தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒவ்வொரு உடன்படிக்கையும் கைவிடப்பட்டமைக்கான முக்கியமான காரணம் 

இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாற்றுரீதியான வன்முறைகளும் இனப்படுகொலைகளும் எவர் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை ஒற்றை இனமொழி மத நாடாக மாற்றுவதே சிங்கள அரசாங்கங்களின் நோக்கம் என்பதற்கான உறுதியான ஆதாரங்களாக காணப்படுகின்றன.

உலக தமிழர் பேரவையுடனான சந்திப்பில் பௌத்த மதகுருமார் பன்முகதன்மையை ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள முன்னொருபோதும் இல்லாத அறிவிப்பு தமிழ் மக்கள் மத்தியில் இது தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் நோக்கத்துடனான அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயற்பாடுகள் குறித்த பிரகடனம் எந்த கலந்தாலோசனைகளும் இன்றி இரகசியமாக வைக்கப்பட்டிருந்தமையும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாலய பிரகடனம் குறித்த ஆவணத்தை வெளியிடுவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசிப்பது மிக அவசியமானதாகும் இந்த சந்திப்பிற்கு முன்னரே அந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது இடம்பெறவில்லை.

உலக தமிழர் பேரவை 2015 இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவேளை இவ்வாறான முயற்சியொன்றை மேற்கொண்டு எதிர்பார்த்தது போல அது மோசமாக தோல்வியடைந்தது ,

அந்த முயற்சி ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகளை மேலும் நீடிப்பதற்கும், மீண்டும் வன்முறைகள் நிகழாமலிருப்பதை உறுதி செய்வதற்காக நாட்டை மீள்கட்டமைப்பிற்கு உட்படுத்துமாறு விடுக்கப்படும் வேண்டுகோள்களை கையாள்வதற்கும் மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுத்த தந்திரோபாயம் என்பதை உணருவதற்கு உலக தமிழர் பேரவைக்கு ஐந்து வருடங்கள் எடுத்தது.

சுதந்திரத்திற்கு பின்னரான அனைத்து இலங்கை அரசாங்கங்களினதும் தோல்வியடைந்த கொள்கைகள் மீண்டும் மீண்டும் வன்முறைகள் இடம்பெறுவதற்கும் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஊழலிற்கும் தண்டனையிலிருந்து விலக்களித்தல் பொருளாதார மந்தநிலை இராணுவமயமாக்கலிற்காக தொடர்ந்தும் நிதி வீணடிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.

இதன் காரணமாக தமிழ்மக்களின் பிரச்சினைகளை ஆழமாக அணுகாமல் சாதாரண விடயமாக கருதி கையாள்வது அரசியலமைப்பு ரீதியில் தீர்வை காணவேண்டும் என்ற தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றப்போவதில்லை- நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை பெறாமல் எந்த ஆதரவும் இல்லாமல் அரசமைப்பு மாற்றங்கள் சாத்தியமாகப் போவதில்லை.

விடயங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ரணில்விக்கிரமசிங்கவின் கடந்த காலத்தை அறிந்துள்ளதால் உலக தமிழர் பேரவையுடனான சந்திப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும் புலம்பெயர் தமிழர்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை உள்ளக ரீதியில் தீர்வை காண்பதற்கு உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஊக்குவித்தல் என்ற போர்வையில் தமிழர்களின் வேண்டுகோள்களை மூடிமறைப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும்.

https://seithy.com/listAllNews.php?newsID=310592&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழர் பேரவையை EPDP வரவேற்கிறது!

13ஆம் திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்!

adminDecember 12, 2023
gtf-2.jpg?fit=1170%2C658&ssl=1

அமைப்புகள் யாரும் வரலாம் அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போது வந்துள்ள உலக தமிழர் பேரவை இதே இமாலய திட்ட செயற்பாட்டை கடந்த காலங்களில் முயற்சித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நாம் வெளிப்படையாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும் அழிவு யுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இரு தரப்புக்கும் கோரிக்கை விடுத்திருந்தோம். அப்போது இந்த பேரவை என்ன செய்தார்கள் என்பதையும் இவர்கள் சுயவிமர்சனம் செய்ய வேண்டும்.

இன்று வந்தவர்கள் இதே செயற்பாட்டுடன் கடந்த காலங்களில் பங்காற்ற முயற்சித்திருந்தால் அழிவு யுத்தத்தை தடுத்திருக்க அழுத்தத்தையாவது கொடுத்திருக்கலாம்.

ஆனாலும் காலம் கடந்து தாயகத்துக்கு வந்து இவ்வாறு அக்கறை கொண்டதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். அது மட்டுமல்லாது அவர்கள் அரசியல் ரீதியாகவும் விரும்பினால் பங்காற்றலாம்.

உலக தமிழர் பேரவை போல ஏனைய பல அமைப்புகளும் முன்வர ஆர்வமாக இருக்கின்றார்கள். ஆயினும் அவ்வாறு வந்தால் தங்களை புலம்பெயர் தேச ஏனைய அமைப்புகள் துரோகிகள் என வர்ணிப்பார்கள் என்ற தயக்கமும் அவர்களிடம் இருக்கின்றது.

இதேநேரம் புலம்பெயர் அமைப்புகள் எமது நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபட வேண்டும். பொருளாதாரத்த கட்டியெழுப்ப வேண்டும். அதுமட்டுமல்லாது ஜனநாயக தேர்தல் அரசியல் நீரோட்டத்திலும் பங்காற்ற வேண்டும் என்பதே எமது கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் சில அமைப்புகள் விமர்சனங்களை வைத்தாலும் குறித்த பேரவையினுடைய வருகை ஒரு நாடு இருதேசம் என கோசமிடும் குழுவொன்று தமது இருப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் அவர்களின் வரவை விரும்பியிருக்கவில்லை என்பது ஊடகங்களில் வரும் அவர்களின் அறிக்கைகளூடாக தெரிந்துகொள்ள முடிகின்றது.

எமது இனப் பிரச்சினைக்கான தீர்வை தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகத்தான் அணுக வேண்டும் என்பதை உலக தமிழர் பேரவையின் நகர்வும் எடுத்தியம்புகின்றது.

எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பல்வேறு பிரச்சினைகளை சாதுரியமாக முன்னெடுத்து வருகின்றார். ஆனால் எம்மிடம் அரசியல் பிரதிநிதித்துவப் பலம் போதியளவில் இல்லை. அது மற்றவர்களிடம் உள்ளது.

ஆகவே தேசிய நல்லிணக்கம் உள்ளவர்களிடம் அரசியல் பலமும் இருந்தால் பல விடயங்களை சாதித்திருக்கலாம். எதிர்ப்பரசியலால் எதையும் சாதிக்க முடிந்ததா? என பின்னோக்கிப் பார்த்தால் அவ்வாறு குறிப்பிட்டெதனையும் கூறமுடியாது.

எனவேதான் தேசிய நல்லிணக்கமுள்ளவர்களிடம் அரசியல் பலம் வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

13ஆம் திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்!

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மக்களின் தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.தமிழரின் அரசியல் தீர்வுக்காக ஜே.வி.பி உட்பட தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளிடம் 13 ஆவது திருத்தத்திற்கு நாம் ஆதரவை கோரி இருக்கின்றோம்.

இதேநேரம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனவும் நாம் அவர்களிடம் நேசமாக கேட்கின்றோம்.

மாறி மாறி வருகின்ற ஆட்சிகளில் தென்னிலங்கையில் எதிர்ப்புகளும் காட்டப்படுகின்றன. தற்போது அரசு 13 ஆவது திருத்தம் தொடர்பாபக அவ்வப்போது தனது நிலைப்பாட்டை கூறிவருகின்றது.

எனவே இதில் ஜே.பி.வியின் நிலைப்பபடு என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 

https://globaltamilnews.net/2023/198485/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

கக்ஸ் புலிகளுடன் பேசும். ஜெனிவாவிலும் பேசும். பிக்குவோடும் பேசும்.

அவர் பேசாது விடில்  சில சமயம் தமிழருக்கு  தட்டி தவறி  உறுதியான தீர்வு கிடைத்து விடலாம்,....இதை தடுக்க வேண்டுமாயின்  எங்கு எல்லாம் பேச முடியுமே அங்கே எல்லாம் அவர் பேசுவார். இப்படியே காலம் போகும் போது  வடக்கு கிழக்கில் பூரணமாக முஸ்லிம்கள வாழ்வார்கள்  அவர்கள் தனிநாடு கேட்க வசதி. உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஆதரிக்கும்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏன் கோசான்

உங்களுக்கு தமிழும் ஆங்கிலமும் நன்றாகத் தெரியுமே.என்ன தான் நடக்கிறதென்று விபரமாக எழுதலாமே?

எழுதினால்….

எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒவ்வொரு திரியிலும் எழுதுறார்…..

சதா யாழில் கிடக்கிறார்…வேலைக்கு போறேல்லையோ….

சுய விலாசம் காட்ட எழுதுறார்….

இத்யாதி…இத்யாதி….

தேவையில்லை அண்ணை….

எதாவது புளிச்சல் ஜோக்கை கொப்பி பேஸ்ட் அடிப்பது, அல்லது கருத்தேதும் எழுதாமல் திரிக்கு திரி ஆட்களை குறிவைத்து தாக்குவது…

இப்படி நாட்களை ஜாலியாக கழிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

எழுதினால்….

எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒவ்வொரு திரியிலும் எழுதுறார்…..

சதா யாழில் கிடக்கிறார்…வேலைக்கு போறேல்லையோ….

சுய விலாசம் காட்ட எழுதுறார்….

இத்யாதி…இத்யாதி….

தேவையில்லை அண்ணை….

எதாவது புளிச்சல் ஜோக்கை கொப்பி பேஸ்ட் அடிப்பது, அல்லது கருத்தேதும் எழுதாமல் திரிக்கு திரி ஆட்களை குறிவைத்து தாக்குவது…

இப்படி நாட்களை ஜாலியாக கழிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.

எழுதுங்கள்.
ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் வந்தால் அது ஒட்டுமொத்த பிரச்சனையாகாது.
 

ஒரு சில பல இடங்களில்  நீங்களும் நானும் முரண்பட்டாலும் உங்கள் எழுத்தின் வாசகன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இத்யாதி…இத்யாதி….

தேவையில்லை அண்ணை….

இந்த திரி திடீரென்று வந்து ஏதோ பிரச்சனை தீர்வது போல பேசிக் கொள்கிறார்கள்.

ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

நீங்கள் இதற்குள் நல்லது கெட்டது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன்.

எமது பிரச்சனைக்காக தனிதிரி தொடங்கி விவாதித்த உங்களுக்கு இதற்குள் எழுதாமல் பின்னடிப்பது ஏனென்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

மனித உரிமை 75  ஆண்டுகள்

உலக தமிழர் பேரவை

என்பவற்றை அலசும் இலக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த திரி திடீரென்று வந்து ஏதோ பிரச்சனை தீர்வது போல பேசிக் கொள்கிறார்கள்.

ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

நீங்கள் இதற்குள் நல்லது கெட்டது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன்.

எமது பிரச்சனைக்காக தனிதிரி தொடங்கி விவாதித்த உங்களுக்கு இதற்குள் எழுதாமல் பின்னடிப்பது ஏனென்று தெரியவில்லை.

எனது கருத்து,

1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை.  எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட்டும் போட்டு விட்டு, மக்களை சம்பந்த படுத்தாமல் விட்ட ஜி ரி எப் வின் பிழையா?

பிழை சரிக்கு அப்பால் - இது வெளிப்படைத்தன்மை அதற்காக எனக்கு படுகிறது.

2. இலங்கையோடு நேரடியாக நாம் எழுதும் எதுவும் அது எழுதபட்ட காகிதத்தின் பெறுமதி கூட அற்றது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. டட்லி-செல்வா, பண்டா-செல்வா, திம்பு, ஒஸ்லோ….இப்போ இமாலயன்.

3. இதை வாசித்து பார்த்தால் இது ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் மிகவும் உயர் நிலை சாராம்சமாக இருக்கிறது. யாரும் இல்லை என மறுக்கமுடியாத விடயங்கள் - அது மட்டும் அல்ல ஏலவே இலங்கை சட்டத்தில் உள்ளவைதான் இதில் இருக்கிறன.

ஆகவே இதில் நான் எந்த முன்னேற்றத்தையுமோ, எமக்கான தீர்வுக்கான  blueprint ஐயோ காணவில்லை. இது எல்லோரும் இலங்கையர், இலங்கைக்குள் ஜனநாயகத்தை, மனித உரிமையை, பொருளாதார அசமச்சீரை சரி செய்தால், அதிகாரத்கை மாகாண, மாவட்ட மட்டத்தில் பகிர்ந்தால் இனப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற பழைய சிங்கள அணுகுமுறையின் புதிய வடிவாகவே எனக்கு படுகிறது. இது இனைப்பிரச்சினையின் அடிப்படையான தமிழர் அபிலாசைகள் பற்றி எதுவும் சொல்வதாக எனக்கு படவில்லை.

4. அடுத்து வசி சொன்ன விடயம். எமது அபிலாசைகள் நிறைவேறாவிட்டால் கூட பரவாயில்லை, இருக்கும் சட்டத்தையாவது அமல்படுத்த இது உதவினால் பரவாயில்லை. ஆனா தொடரும் நில அபகரிப்பு இதர விடயங்கள் - அது கூட சாத்தியமில்லை என்றே சொல்லி நிற்கிறன.

5. நல்லாட்சியில் சுமந்திரனை வைத்து ரணில் புதிய அரசியல் சட்ட நாடகம் ஆடி நேரம் கடத்தியது போல் இப்போ சுரேந்திரனை வைத்து ஆடுகிறார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

இலங்கையோடு நேரடியாக நாம் எழுதும் எதுவும் அது எழுதபட்ட காகிதத்தின் பெறுமதி கூட அற்றது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. டட்லி-செல்வா, பண்டா-செல்வா, திம்பு, ஒஸ்லோ….இப்போ இ

சரியாக சொன்னீர்கள்  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் எவ்வளவோ கஸ்ரப்பட்டு  ஓரு  தீர்வை கண்டு பிடித்து தந்தவர்    அது பெறுமதியற்றதா?? 🤣.  இலங்கையர்கள் என்பது தமிழர்கள்  சிங்களவர்கள்.  முஸ்லிம்கள்.  அனைவரையும் குறிக்கும்   100 %. தமிழர்கள் உள்ள அமைப்பை  ஏன் புலம்பெயர் இலங்கையர்  என அழைக்க வேண்டும்   அப்படி அழைத்து கொண்டு எப்படி எமது பிரச்சனைகள் பற்றி பேச முடியும்?? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எனது கருத்து,

1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை.  எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட்டும் போட்டு விட்டு, மக்களை சம்பந்த படுத்தாமல் விட்ட ஜி ரி எப் வின் பிழையா?

பிழை சரிக்கு அப்பால் - இது வெளிப்படைத்தன்மை அதற்காக எனக்கு படுகிறது.

2. இலங்கையோடு நேரடியாக நாம் எழுதும் எதுவும் அது எழுதபட்ட காகிதத்தின் பெறுமதி கூட அற்றது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. டட்லி-செல்வா, பண்டா-செல்வா, திம்பு, ஒஸ்லோ….இப்போ இமாலயன்.

3. இதை வாசித்து பார்த்தால் இது ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் மிகவும் உயர் நிலை சாராம்சமாக இருக்கிறது. யாரும் இல்லை என மறுக்கமுடியாத விடயங்கள் - அது மட்டும் அல்ல ஏலவே இலங்கை சட்டத்தில் உள்ளவைதான் இதில் இருக்கிறன.

ஆகவே இதில் நான் எந்த முன்னேற்றத்தையுமோ, எமக்கான தீர்வுக்கான  blueprint ஐயோ காணவில்லை. இது எல்லோரும் இலங்கையர், இலங்கைக்குள் ஜனநாயகத்தை, மனித உரிமையை, பொருளாதார அசமச்சீரை சரி செய்தால், அதிகாரத்கை மாகாண, மாவட்ட மட்டத்தில் பகிர்ந்தால் இனப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற பழைய சிங்கள அணுகுமுறையின் புதிய வடிவாகவே எனக்கு படுகிறது. இது இனைப்பிரச்சினையின் அடிப்படையான தமிழர் அபிலாசைகள் பற்றி எதுவும் சொல்வதாக எனக்கு படவில்லை.

4. அடுத்து வசி சொன்ன விடயம். எமது அபிலாசைகள் நிறைவேறாவிட்டால் கூட பரவாயில்லை, இருக்கும் சட்டத்தையாவது அமல்படுத்த இது உதவினால் பரவாயில்லை. ஆனா தொடரும் நில அபகரிப்பு இதர விடயங்கள் - அது கூட சாத்தியமில்லை என்றே சொல்லி நிற்கிறன.

5. நல்லாட்சியில் சுமந்திரனை வைத்து ரணில் புதிய அரசியல் சட்ட நாடகம் ஆடி நேரம் கடத்தியது போல் இப்போ சுரேந்திரனை வைத்து ஆடுகிறார்.

உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி கோசான்.

எவருக்கும் தெரியாமல் திடுதிப்பென வந்திறங்கியது தான் புதிராக இருந்தது.

இனிவரும் வாரங்களில் ஆய்வாளர்கள் பந்திபந்தியாக எழுதுவார்கள்.கவனிப்போம்.

1 hour ago, Kandiah57 said:

சரியாக சொன்னீர்கள்  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் எவ்வளவோ கஸ்ரப்பட்டு  ஓரு  தீர்வை கண்டு பிடித்து தந்தவர்    அது பெறுமதியற்றதா?? 🤣

கந்தையா மேலே உள்ள இலக்குவின் காணொளியைக் கேட்டீர்களானால் இதற்கான முழுவிடையும் கிடைக்கும்.

அதாவது இந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எதுவுமே இல்லை.

ஆனால் இலங்கையும் இந்தியாவும் இதன் பலனை அனுபவிப்பதாக சொல்கிறார்கள்.

1 hour ago, Kandiah57 said:

இலங்கையர்கள் என்பது தமிழர்கள்  சிங்களவர்கள்.  முஸ்லிம்கள்.  அனைவரையும் குறிக்கும்   100 %. தமிழர்கள் உள்ள அமைப்பை  ஏன் புலம்பெயர் இலங்கையர்  என அழைக்க வேண்டும்

மில்லியன் டாலர் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி கோசான்.

எவருக்கும் தெரியாமல் திடுதிப்பென வந்திறங்கியது தான் புதிராக இருந்தது.

இனிவரும் வாரங்களில் ஆய்வாளர்கள் பந்திபந்தியாக எழுதுவார்கள்.கவனிப்போம்.

இந்த குழுவில் உங்கள் நண்பரும் கலந்து கொண்டுள்ளார். அவரை கேட்டு எழுதுவீர்கள் என நம்புகிறேன்  

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார்

(நா.தனுஜா)

தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மையமாகக்கொண்டு உலகத்தமிழர் பேரவையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடாகவே தாம் கருதுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமலை' பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.

அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும், இவ்விடயத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் இன்று புதன்கிழமை (13) கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்:

பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் நேபாளத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஏப்ரல் 27 இல் கைச்சாத்திடப்பட்ட 6 அம்சங்களை உள்ளடக்கிய 'இமயமலை' பிரகடனத்தைக் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ள உலகத்தமிழர் பேரவை உறுப்பினர்கள், அதுகுறித்து இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து அப்பிரகடனத்துக்கு அங்கீகாரம் கோரியுள்ளனர்.

முதன்முதலாக உலகத்தமிழர் பேரவை உருவாக்கப்பட்டபோது, அது பல்வேறு அமைப்புக்களையும் உள்ளடக்கியதோர் குடை அமைப்பாகவே காணப்பட்டது. அதன்படி அவ்வமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அங்கம்வகித்த (பின்னர் அதிலிருந்து விலகிய) பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்பிரகடனத்தைக் கண்டித்தும், விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக உலகத்தமிழர் பேரவையானது புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தம்மைக் காண்பித்துக்கொள்வது தவறு எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் எம்மைச் சந்தித்து இதுகுறித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரியிருந்தார். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு அக்கோரிக்கையை அடியோடு நிராகரித்ததுடன், அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி அவருக்குரிய பதிலும் அனுப்பிவைக்கப்பட்டது.

மாவீரர் நாளில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு ஒன்றுகூடியவர்களுக்கு எதிராகத் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிக்கின்றது. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவழிப்பு அரங்கேற்றப்பட்டுவருகின்றது.

இவ்வாறு அடக்குமுறைகள் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை மையப்படுத்தி உலகத்தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியை அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அதுமாத்திரமன்றி முன்னைய காலங்களில் தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாக செயற்பட்டுவந்த உலகத்தமிழர் பேரவை, இன்னமும் அதிலிருந்து மாறவில்லை என்பதையும் இந்நகர்வு வெளிப்படுத்துகின்றது.

உலகத்தமிழர் பேரவையின் இந்த நடவடிக்கைகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர், குறிப்பாக இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அங்கீகரித்திருப்பதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களிலும் கூட்டமைப்பு உலகத்தமிழர் பேரவையுடன் மிகநெருங்கிய உறவைப் பேணிவந்திருப்பதுடன், கூட்டமைப்பிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாத அதன் தொடர்ச்சியாகவே பேரவை இயங்கிவருகின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படுவதாகக் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் விளைவாகவே கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குவங்கி வெகுவாகச் சரிவடைந்தது.

எனவே எதிர்வரும் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் கூட்டமைப்பு 'நல்ல பிள்ளையாக' செயற்பட முயற்சிக்கின்றது.

அதன்படி தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடுகின்றது.

'இமயமலை' பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 6 அம்சங்களும் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினருக்கோ அல்லது அண்மையில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தமைக்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கோ எவ்வகையிலும் பயனளிக்காது.

மாறாக அவை தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிட்ட விதத்தில் இடம்பெற்றுவரும் இனவழிப்பை மூடிமறைத்து, அதனை நேர்மறையான விதத்தில் காண்பிப்பதற்கும், தற்போதைய அரசியலமைப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதன் ஊடாக தமிழ்மக்களுக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுப்பதற்கும், பொறுப்புக்கூறலுக்கு முற்றுப்புள்ளிவைத்து போலியான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துவரும்  செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்குவதற்குமே பங்களிப்புச்செய்யும்.

எனவே இதனை முற்றாக நிராகரிக்கவேண்டுமெனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்கநேரும் என்ற பாடத்தை அவர்களுக்குப் புகட்டவேண்டும் எனவும் தமிழ்மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை - சரத்வீரசேகரவின் கேள்விக்கு சுரேன் சுரேந்திரன் பதில்

தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை என உலகதமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் தெரிவித்துள்ளார் என ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளிக்கின்றீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர கேள்வி எழுப்பியவேளை  சுரேன் சுரேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது சுரேன் சுரேந்தின் இதனை தெரிவித்துள்ளார் 

நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர  நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு எதிராக பௌத்த மதகுருமார்கள் அணிதிரண்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை 2500 வருடங்களாக பௌத்தமதகுருமார் காப்பாற்றியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த காலத்தில் 17 படையெடுப்புகள் இடம்பெற்றன விடுதலைப்புலிகள் பிரிவினைவாத போரில் ஈடுபட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களை அடைவதற்காக அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதே பயங்கரவாதம் ஆகவே பயங்கரவாதத்திற்கான காரணம் நியாயப்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது நாங்கள் முழுமையாக பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள போதிலும் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதற்கு மேற்குலக நாடுகள் அனுமதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்றீர்களா என்ற சரத்வீரசேகரவின்  கேள்விக்கு உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் நாங்கள் தனிநாட்டு கொள்கையை ஆதரிக்கவில்லை நாங்கள் அதற்கு ஆதரவளித்திருந்தால் நான் இங்கு வந்திருக்கமாட்டேன் என தெரிவித்தார் என ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை - சரத்வீரசேகரவின் கேள்விக்கு சுரேன் சுரேந்திரன் பதில் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

சரியாக சொன்னீர்கள்  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் எவ்வளவோ கஸ்ரப்பட்டு  ஓரு  தீர்வை கண்டு பிடித்து தந்தவர்    அது பெறுமதியற்றதா?? 🤣.   

மேலே சொன்ன பட்டியலில் 87 ஒப்பந்தத்தை வேண்டும் என்றே சேர்க்கவில்லை. 

அது சம்பந்தமாக என் பார்வை வேறுபட்டது. யாழில் முன்பே பலதடவை எழுதியதுதான்.

4 hours ago, Kandiah57 said:

இலங்கையர்கள் என்பது தமிழர்கள்  சிங்களவர்கள்.  முஸ்லிம்கள்.  அனைவரையும் குறிக்கும்   100 %. தமிழர்கள் உள்ள அமைப்பை  ஏன் புலம்பெயர் இலங்கையர்  என அழைக்க வேண்டும்   அப்படி அழைத்து கொண்டு எப்படி எமது பிரச்சனைகள் பற்றி பேச முடியும்?? 

எமக்கு சரியான பொறுப்புக்கூறல், தீர்வு அமைந்த பின் இந்த பொது அடையாளத்தை சுமக்கும் படி கொரோனா அது நியாயம்.

ஆனால் இவர்கள் அணுகுமுறையோ, பிரச்சனையே நாம் இந்த பொது அடையாளத்தை சுமக்க மறுப்பதுதான் என்பது போல இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.