Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆதவன்)

கனடாவில் குடியுரிமைபெற்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வயோதிபர், கனடாவிலிருந்து தாயகத்துக்குத் திரும்பியிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

கனடா, மொன்றியேலைச் சேர்ந்தவரும், தற்போது வல்வெட்டித்துறை ரேவடியில் வசித்து வந்தவருமான வேலுப்பிள்ளைநந்தகுமார் (வயது-60) என்பவரே உயிரிழந்தவராவார்.

வாய் மற்றும் மூக்கில் இருந்து நுரை வெளியேறிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 29ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட அவர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் (01) திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

வல்வெட்டித்துறையில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 40 வருடங்களாக அவர் கனடாவில் வசித்து வருகின்றார். கனடாவில் தற்போது குளிர்காலம் என்பதால், இலங்கைக்கு வந்து தங்கியிருந்துவிட்டுச் செல்வதற்காக வந்த வேளையிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

 இறப்பு விசாரணைகளை பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா மேற்கொண்டார்.

கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம். (newuthayan.com)

  • Replies 78
  • Views 6.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • இணையவன்
    இணையவன்

    முதியவர் = அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்தவர் வயோதிபர் = அதிக வயதில் வாழ்ந்துகொண்டிருப்பவர் பருவங்கள் மாறினாலும் ஒவ்வொரு நாள் விடியலையும் ஆவலோடு எதிர்பார்த்து வாழ்பவர்களுக்கு இறக்கும் வரை மனதள

  • 10 வயது கடந்துவிட்டால் ஓராம் வகுப்பில் சேர முடியாத வயோதிபர் 20 வயது கடந்துவிட்டால் குழந்தை பருவம் என்பதற்கு வயோதிபர் 30 வயசு கடந்துவிட்டால் மாணவ பருவத்திற்கு வயோதிபர் 40 வயசு கடந்துவிட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

60 வயது எண்டால் வயோதிபரா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

60 வயது எண்டால் வயோதிபரா?

சிறீலங்காவில்....40 வயது வந்தாலே வயோதிபர்தான்...பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியும்  சாமியர்😁

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

60 வயது எண்டால் வயோதிபரா?

IMG-5354.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

60 வயது எண்டால் வயோதிபரா?

துரோகி பட்டம் கொடுப்பது போன்றதுதான் இதுவும். சரி சரி டென்சன் ஆக வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் இப்படி தான். 

குளிருக்கு ஓரிடம்

மழைக்கு ஓரிடம்

பணத்துக்கு ஓரிடம் என்று மருத்துவத்துக்கு எந்த இடம் என்பதை தவறவிட்டு விடுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

தனது இருபதாவது வயதில் 1983 கலவரங்களுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

வாய், மூக்கினூடு நுரை தள்ளியதாக செய்தியில் உள்ளது. மாரடைப்போ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கனடா பிரஜா உரிமை பெற்றால் என்ன சாகா வரம் பெற்ற கணக்கா. இந்தக் கனடாக் குடியேறிகளின் அலப்பறை தாங்க முடியல்ல. 🙃

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

60 வயது எண்டால் வயோதிபரா?

வயோதிபர் என்றால் எத்தனை வயதுடையோர், என்று தாங்கள் சொன்னால் போச்சு, ஒவ்வொருத்தர் வெவ்வேறாக கருதுவர். மரணத்துக்கு: வயது வித்தியாசமில்லை, காரணம் தேவையுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, satan said:

வயோதிபர் என்றால் எத்தனை வயதுடையோர், என்று தாங்கள் சொன்னால் போச்சு, ஒவ்வொருத்தர் வெவ்வேறாக கருதுவர். மரணத்துக்கு: வயது வித்தியாசமில்லை, காரணம் தேவையுமில்லை.

80,85,90 😎

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

80,85,90 😎

நானும் இதனை ஆமோதிக்கிறேன்!!!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

வயோதிபர் என்றால் எத்தனை வயதுடையோர், என்று தாங்கள் சொன்னால் போச்சு, ஒவ்வொருத்தர் வெவ்வேறாக கருதுவர். மரணத்துக்கு: வயது வித்தியாசமில்லை, காரணம் தேவையுமில்லை.

பிரான்சில் 65 வயதை அடைந்தோர் அதாவது பென்சன் எடுக்கும் வயதுக்கு வந்தோர் வயோதிபர்.

ஆனால் எங்களிடம் கேட்கக்கூடாது. நாங்கள் 90 இலும் ஏற்கமாட்டோம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:
2 hours ago, குமாரசாமி said:

80,85,90 😎

நானும் இதனை ஆமோதிக்கிறேன்

நானும் ஆமோதிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சொறிலங்காவில் ஒழுங்கான மருத்துவசதியோ அல்லது ஒழுங்கான மருத்துவ பொருள்களோ இல்லை என்பதை நினைவில் கொள்ளனும் ஏன் மருந்துகள் கூட காலவதியானமருந்துகளே இறக்கபட்டு உள்ளன அதனால் அன்குள்ளவர்களுக்கே இங்கிருந்து போய் இடஞ்சல் குடுக்கிறோம் .இங்கு 4௦ வருடமாய்  கண்ட சாப்பாட்டையும் முழுங்கி விட்டு கண்ட வருத்தத்தையும் வாங்கி கொண்டு கடைசி காலத்தில் ஊர் போவம் என்று அங்கிருப்பவர்களுடன் நோயாளியாய் போட்டி போட போனால் நாங்கதான் முதலில்  மேலே போய் தொலைவம் .

இங்கு லண்டனில் 6௦ தாண்டினால் லோக்கல் போக்குவரத்து இலவசம் சாமியார் .

தமிழ் புலம்பெயர் பேபி பூமர்ஸ் அறுவடையை சொறிலங்கா நாக்கை தொங்க போட்டபடி காத்து கொண்டு இருக்குது .

முதியவர் = அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்தவர்

வயோதிபர் = அதிக வயதில் வாழ்ந்துகொண்டிருப்பவர்

பருவங்கள் மாறினாலும் ஒவ்வொரு நாள் விடியலையும் ஆவலோடு எதிர்பார்த்து வாழ்பவர்களுக்கு இறக்கும் வரை மனதளவில் 70, 80 எல்லாம் கடந்துவந்த ஆண்டு எண்ணிக்கைகள் மட்டுமே 🙂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

60 வயது எண்டால் வயோதிபரா?

இல்லை,.இல்லை,..பெடியன் ....அதாவது விடலை. 😂🤣, காலியாணம். செய்யும் வயது   ஆனால் சிக்கல் என்னவென்றால்  பெண்கள் அமைய வேண்டும்   😂😂🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

முதியவர் = அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்தவர்

அதனால் தான் அமெரிக்காவில் ஜனநாயக அதிபர் பைடன் தொடங்கி சீன சர்வாதிகாரி சீ ஜின்பிங் வரை முதியவர்களே நாடுகளை ஆண்டு வருகின்றார்கள்.இலங்கையில் இளைஞர்களே தலைதாங்க வேண்டும் என்று குரல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் இருந்து கேட்பதை காணலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/1/2024 at 16:31, alvayan said:

சிறீலங்காவில்....40 வயது வந்தாலே வயோதிபர்தான்...பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியும்  சாமியர்😁

 ஒரு விசயம் தெரியுமோ? அங்கை சில இடங்களிலை 40 வயதிலை தானே கலியாணம் கட்டி ஹனிமூன் அது இது எண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கினம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

முதலில் சொறிலங்காவில் ஒழுங்கான மருத்துவசதியோ அல்லது ஒழுங்கான மருத்துவ பொருள்களோ இல்லை என்பதை நினைவில் கொள்ளனும் ஏன் மருந்துகள் கூட காலவதியானமருந்துகளே இறக்கபட்டு உள்ளன அதனால் அன்குள்ளவர்களுக்கே இங்கிருந்து போய் இடஞ்சல் குடுக்கிறோம் .இங்கு 4௦ வருடமாய்  கண்ட சாப்பாட்டையும் முழுங்கி விட்டு கண்ட வருத்தத்தையும் வாங்கி கொண்டு கடைசி காலத்தில் ஊர் போவம் என்று அங்கிருப்பவர்களுடன் நோயாளியாய் போட்டி போட போனால் நாங்கதான் முதலில்  மேலே போய் தொலைவம் .

தீய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வருத்தத்தை எற்படுத்தி கொண்டு இலங்கைக்கு போகாமல் இங்கேயே வாழ்ந்தால் நீண்ட காலம் வாழலாம் என்கிறீர்கள். ஆனால் இங்கேயே மருத்துவம் பெறுகின்ற தமிழர்கள் மருத்துவ செயற்பாட்டில் தங்களுக்கு அநீதி  நடத்தபட்டதாக ஆயிரம் குறைகள் சொல்கின்றனரே.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தீய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வருத்தத்தை எற்படுத்தி கொண்டு இலங்கைக்கு போகாமல் இங்கேயே வாழ்ந்தால் நீண்ட காலம் வாழலாம் என்கிறீர்கள். ஆனால் இங்கேயே மருத்துவம் பெறுகின்ற தமிழர்கள் மருத்துவ செயற்பாட்டில் தங்களுக்கு அநீதி  நடத்தபட்டதாக ஆயிரம் குறைகள் சொல்கின்றனரே.

வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் வளர்ச்சி அடையாத நாடுகளிலும் உள்ள மருத்துவத்தின் வளர்ச்சி நிலை தெரியவில்லையா சகோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

முதலில் சொறிலங்காவில் ஒழுங்கான மருத்துவசதியோ அல்லது ஒழுங்கான மருத்துவ பொருள்களோ இல்லை என்பதை நினைவில் கொள்ளனும் ஏன் மருந்துகள் கூட காலவதியானமருந்துகளே இறக்கபட்டு உள்ளன அதனால் அன்குள்ளவர்களுக்கே இங்கிருந்து போய் இடஞ்சல் குடுக்கிறோம் .இங்கு 4௦ வருடமாய்  கண்ட சாப்பாட்டையும் முழுங்கி விட்டு கண்ட வருத்தத்தையும் வாங்கி கொண்டு கடைசி காலத்தில் ஊர் போவம் என்று அங்கிருப்பவர்களுடன் நோயாளியாய் போட்டி போட போனால் நாங்கதான் முதலில்  மேலே போய் தொலைவம் .

இங்கு லண்டனில் 6௦ தாண்டினால் லோக்கல் போக்குவரத்து இலவசம் சாமியார் .

தமிழ் புலம்பெயர் பேபி பூமர்ஸ் அறுவடையை சொறிலங்கா நாக்கை தொங்க போட்டபடி காத்து கொண்டு இருக்குது .

ஆமாங்க ஊரில் எப்படியான ஆரோக்கியமான உணவை உண்கின்றார்கள் என நாங்கள் நேரில் பார்க்கின்றோம். ஆரோக்கியம் என்பது அவரவரது ஊக்கம், முயற்சியிலும் தங்கி உள்ளது. அவரவர் வாழும் இடத்தை குறை சொல்ல வேண்டாம். அதற்குமேல் எங்களை மீறி நடைபெறுவதற்கு என்னதான் செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேளையும் விதியும்( காலமும் நேரமும்) வந்தால் மரணம்  எங்கும் நடக்கலாம். தாயகமா புகலிடமா என்று எல்லாம்   பார்க்காது  . 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 ஒரு விசயம் தெரியுமோ? அங்கை சில இடங்களிலை 40 வயதிலை தானே கலியாணம் கட்டி ஹனிமூன் அது இது எண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கினம். 😂

விதி விலக்கா சிலது இருக்கு...ஆனால்...பத்திரிகைச் செய்தியாகா எங்கேனும் மாட்டுப்பட்டால்...அந்த இடத்தில் வயோதிபர்தான்...

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

நாங்கள் 90 இலும் ஏற்கமாட்டோம்

எதை ஏற்க மாட்டீர்கள்? பென்ஷனையா, வயோதிபத்தையா?

15 hours ago, Kandiah57 said:

இல்லை,.இல்லை,..பெடியன் ....அதாவது விடலை. 😂🤣, காலியாணம். செய்யும் வயது   ஆனால் சிக்கல் என்னவென்றால்  பெண்கள் அமைய வேண்டும்   😂😂🙏

சாமியாருக்கு அமையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. 

களத்தில விடலையள் கூடிப்போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

வேளையும் விதியும்( காலமும் நேரமும்) வந்தால் மரணம்  எங்கும் நடக்கலாம். தாயகமா புகலிடமா என்று எல்லாம்   பார்க்காது  . 

தவறு பாட்டி. 😂

இந்தியாவில் 3 வீதமே வயோதிபர்கள். ஐரோப்பாவில் 25 வீதத்துக்கும் அதிகம். முக்கிய காரணம் மருத்துவம். 

Edited by விசுகு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.