Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி!
*****************************************

*இது
முள்ளிவாய்க்காலில் 
கஞ்சி  வாங்க நின்ற கூட்டமல்ல!,

*முத்த வெளியில்  
 கரிகரனைப் பார்க்க வந்த   கூட்டம்.!
 கரிசனையில்லாத கூட்டம்.!

*எங்கே போகிறது 
 எம் சமுதாயம்?  - இதிலே 
 யாருக்கு  இங்கு ஆதாயம்?

*எப்போ ஆறியது
 இன அழிப்பின்  காயங்கள்?
 இப்போ வெளுத்து விட்டது
 பலரின்… சாயங்கள்!

*தமிழனைப் பார்த்தால் 
  முப்பது  ரூபா கூடக்  கொடுக்காதவன்,
  தமண்ணாவைப் பார்க்க 
  முப்பதாயிரத்துடன்   நிற்கிறான்…..

*நட்புகளுக்குக் கூட  கை கொடுக்காதவன்,
 நடிகர்களுக்கு கை கொடுக்க 
 மேடை ஏறுகிறான்!

*ஆணும் பெண்ணும் என
 அத்தனை பேரும் கம்பத்தில்!
 அறுந்து விழுந்தால்…. 
 அனைவரும் இருப்பார் 
  நரகத்தில்..!

*அப்படி இதிலென்ன மோகம்?...
 ஆருக்கு இதில் உண்டு லாபம்...?

அங்கே,
*கஞ்சப்பயல் எல்லாம், 
 இலவசம் என்று வந்து,…..
 காசு கட்டியதுதான்….. 
 கண்றாவியின் உச்சம்!

*கஞ்சா அடித்தவனெல்லாம் 
 களியாட்டம் என்று வந்து
 கால் கடுக்க 
 நின்றதுதான் மிச்சம்.!

“பனங்காட்டான்” என்றாலும்
 படித்தவன்,
 பண்பாடு ஆனவன்
 என்ற பெயர் (எமக்கு)
 இருந்ததுண்டு!

 இன்று…. 
*படம் காட்டுபவர்கள் பின்
 ஓடிப் பெற்ற  பெயர்  
“பட்டிக்காட்டான்!” -வெறும் 
“வெட்டிக்” காட்டான்.!

*நடிப்பவர்களைச் சுமப்பது என்பது
 நமக்கெல்லாம் அவமானம்…!
 நாம் கேரளாவைப் பார்த்து
 அறிய வேண்டியது…. ஏராளம்…!

*வெளிநாட்டுக் காசு இங்கு
 வெகுவாக இருக்குதென்று- 
 பலருக்கு இங்கே கண்! ..  - இதனால்
 பாழாய்ப் போகுது எமது மண்…!

*இனியாவது,
 அனுப்புவதை நிறுத்துங்கள்!
 அலுப்பானவனை  
  உழைக்க விடுங்கள்!

*முடிவில்,
 அடிதடியில் முடிந்திருக்கிறது
 அரிதரனின் நிகழ்ச்சி..!
 அவமானப் பட்டதில் 
 அடமானம் போனது மகிழ்ச்சி?......

*கத்தலும், கதிரை எறிதலும்
 கலவரமும் என, 
 காணொளிகளில் பல காட்சி!

 *நல்ல தலைவன் இல்லாததற்கு
  இவை எல்லாம் சாட்சி!

*வடக்கிலும் சரி,
 கிழக்கிலும் சரி
 வலிகள் சுமந்த மக்களுக்கு
 வாழ்வு தருவது
 வேலை வாய்ப்புகள்தான்!
  
*இவர்கள் செய்யும்
 வேலையெல்லாம் 
 வெறும் ஏய்ப்புக்கள்தான்.!

*கல்வி 
 எம்நாட்டில் முக்கியம்தான்..
 மறுப்பவரும்  இல்லை!
 வெறுப்பவரும்  இல்லை!

*கட்டிக் கொடுங்கள் கல்லூரிகளை!
 கண்டிப்பவர்கூட  
 எவரும் இல்லை..!

*அதைவிட, முதலில் 
 கற்பவனைத் தயார்படுத்துங்கள்!
 காலித் தனத்தைக் 
 கட்டுப்படுத்துங்கள்!

*கஞ்சா அடிப்பவன் 
 கற்றுத் தெளிவானா?
 கஞ்சிக்கு வழியிலாதவன் 
 கல்லூரிக்கு வருவானா?

*கடைசியில்
 கிடைத்த நீதி…….,

*மக்களுக்குச் செய்ய ஆயிரம் உண்டு!
 மனம் வைத்தால் திருத்த 
 வழிகளும் உண்டு!

*காயப்பட்டவனுக்கு
 நாட்டில், 
 கலைநிகழ்ச்சிகள் தேவையில்லை!
 வீட்டில்,
 உலை எரிந்தாலே போதும்…!

 February 9, 2024 -

எனது நீண்டகால நண்பரும் அயலவரும் எழுதிய கவிதை.

மிகவும் தெளிவாக உள்ளத்தை தொட்டும் எழுதியுள்ளார்.

  • Like 6
  • Thanks 6
  • Replies 148
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில்  கஞ்சி  வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில்    கரிகரனைப் பார்க்க வந்த   கூட்டம்.!

nedukkalapoovan

இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு. இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட

புலவர்

இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய்  தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

MGR Remembered – Part 32

Tackling Upstart ‘Producers of a Kind’

by Sachi Sri Kantha, December 24, 2015

Part 31

First and Only Visit to Ceylon in late 1965

Last October marked the 50th anniversary of MGR’s first and only visit to his land of birth. I don’t have much primary materials with me now, about this visit. The blame lies on my mother. This is how, I had described the agony I faced in an autobiographical essay I wrote 20 years ago.

“One day, after I have tested my mother’s patience by coming home unusually late (after enjoying a matinee show), she had grabbed my suitcase of collectibles and disposed into garbage-can all my worthy collections related to MGR. She added insult to injury by asking me, ‘Will your MGR come and feed you in the future, if you are starving?’ This unwarranted invasion of my privacy hurt my sentiments badly. I vouched secretly that she had underestimated the loyalty of a true MGR fan. Not to be outsmarted, I made it my goal to see as much as MGR movies as I can…This caused unpleasant feelings between my mother and me. She really felt that my educational potential is being cheated by MGR, and she tried hard to ‘divorce’ me from my MGR craze. But for better or worse, she failed to succeed in it.”

MGR and Sarojadevi arriving at Palali, Jaffna airport

MGR and Sarojadevi arriving at Palali, Jaffna airport

As an aside, I should record that, in hindsight (after 50 years!), with my 79 year old mom still living and in declining health, I now realize that moms are always correct. If only, my MGR craze was a degree or two lower than what I had then, my professional career would have changed a lot. This is what MGR also had preached in his numerous ‘Thai’ (Mother)-titled movies. Thus, I did betray the trust my mother had then, and disobeyed MGR’s ‘teachings’. Why I write this extended MGR biography now after 50 years, is a sort of symbolic ‘penance ritual’ of my guilt-ridden soul! [Note to readers: In Part 31, I had exposed a plagiarism act by an MGR fan. One method of tackling this sort of rampant plagiarism in internet of my writing, is to insert personal tags and descriptions about my life within my story of MGR’s life, so that the plagiarist(s) have to take extra-pain to delete these sort of asides. Hope, readers will bear this with me.]

Now, let me return to MGR’s visit to Ceylon in October 1965. I was then a 12 year old boy, studying at Colombo Hindu College, Ratmalana. I provide excerpts from my remembrance of this visit of MGR with his then co-star B. Saroja Devi, as I had recorded in my 2004 autobiography, ‘Tears and Cheers’.

“Our school being located adjacent to the Colombo (Ratmalana) airport provided good opportunities for us to welcome the visiting dignitaries from other countries. When the dignitary was a political giant [like India’s primeminister Jawaharlal Nehru or China’s prime minister Chou-en Lai] we ‘semi-officially received ‘half a day holiday’ to go to the airport. In 1965, there happed a humorous extension to this accepted routine. In October of that year, the then Tamil move idol M.G. Ramachandran [MGR] visited Ceylon with his co-star B. Saroja Devi. Though he was a celebrity, he had not entered (active) politics at that time. Thus, he was not on par with the prime ministers of India or China. The day prior to his arrival in Ratmalana airport, senior batch students had approached our dear ‘suruttu Kanagar’ – the indefatigable eccentric teacher T. Kanagaratnam – and had expressed their wish to welcome MGR the following day after servicing the teacher with his daily quota of arrack liquor.

MGR greeted by C. Rajadurai at Batticaloa

MGR greeted by C. Rajadurai at Batticaloa

https://sangam.org/mgr-remembered-part-32/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

அப்படியானால் எதுக்காக புலம்பெயர் தமிழர்கள் ஒன்றாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்??

இது வரைக்கும் சாத்தியம் இல்லைதானே  அதைதான் சொல்ல வந்தேன்  ஒரு சில நாட்டுக்காரர் ( புலத்து தமிழர்கள்) போய் அரச குழுவினரை சந்தித்தால் அவர்களை விமச்சிப்பது இன்னொரு குழு இப்படி குழுவாக இருக்கிறோம் 

இந்த நிகழ்வை எடுத்துக்குக்கொண்டால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் சிலருக்கு இந்த நிகழ்வு  அதுவும் யாழ்ப்பாணத்தில் நடப்பது பிடிக்கவில்லை  அவர்களின் விமர்ச்னங்கள் நேரடியாக முகநூலில் இருந்தது  மாறாக ஒரு குழு நடக்க வேண்டும் எனவும் இருந்தது ஆக மொத்தத்தில் தமிழன் குழுக்களாகவே 

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எதிர்கட்சி இருப்பது நல்லது தானே சகோ. ஆனால் அவை சரியான பாதையை செப்பனிட உதவவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, island said:

அப்படியானால் 1980 ல் ஜேசுதாசின் நிகழ்வில் கவர்சசி இல்லையே. அங்கும் இதை போல  காவாலித்தனம் நடைபெற்றது ஏன்?  

1980 களில் நிகழ்ச்சி நடை பெற்ற ஞாபகம் எனக்கு இல்லை...இளைஞர்கள் ஒன்று கூடினால் குரங்கு சேட்டை விடுவது சகஜம்....இப்படியானவர்கள் செய்யும்  சமுக விரோத செயல்களை தடுப்பதற்காக தான் "சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட காவல் துறை " இருக்கின்றது 

யாழ் நகரில் 10 பேர் கலந்து கொள்ளும் ஊர்வலத்திற்கு  எத்தனை பொலிசார் ,இராணுவம் ,மற்றும் அதிரடி படைகள் எல்லாம் வந்து காவல் புரிகின்றனர் ..... இவ்வளவு மக்கள் கூட்டம் வந்த பொழுது சரியான பாதுகாப்பு வழங்க ஏன் தவறி விட்டனர்...மேலும்  மதுபானம்,கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களை பாவித்த இளைஞர்கள் உள்ளே செல்லும்  பொழுது காவல் துறையினருக்கு நன்றாக விளங்கியிருக்கும் இவர்கள் சமுக விரோத செயல்களில் ஈடுபட போகின்றனர் என ...
யாழ் நகர இளைஞர்கள்  100% தங்க கம்பிகளாக இருக்க வேணும் என நெட்டிசன்மார் நம்பினால் அது அவர்கள் தப்பு....

ஏன் இப்படி அசம்பாவிதம் நடந்தது என பொலிசாரிடம் அவர்களின் மேலதிகாரிகள் விசாரித்து அடுத்த முறை இப்படியான அசம்பாவிதங்கள் நடை பெறாமல் தடுக்க முயற்சி எடுக்க வேணும் ...
ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்ப முனையும் அரசாங்கங்கம் இதுகளை கவனத்தில் எடுக்க வேண்டும் ...

யாழ்ப்பாணத்து இளைஞர்கள் 1980 களிலும் அப்படி,2024 இலும் அப்படி அவர்களை திருத்தமுடியாது ...கவாலிகள் என‌ முத்திரை குத்தி கடந்து செல்லாமல் 
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த நிகழ்வை எடுத்துக்குக்கொண்டால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் சிலருக்கு இந்த நிகழ்வு  அதுவும் யாழ்ப்பாணத்தில் நடப்பது பிடிக்கவில்லை  அவர்களின் விமர்ச்னங்கள் நேரடியாக முகநூலில் இருந்தது  மாறாக ஒரு குழு நடக்க வேண்டும் எனவும் இருந்தது ஆக மொத்தத்தில் தமிழன் குழுக்களாகவே 

ஜனநாயகத்தின் உச்சம் பல கட்சிகள் இருப்பது .... ஏக பிரநிதிகளாக புலிகள் இருந்த காரணத்தால் தான் எமக்கு சரியான தீர்வு கிடைக்க வில்லை என பலர் சொன்னார்கள் இப்ப பல குழுக்கள் உண்டு இலகுவாக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்... எங்கே ?

அன்று ஏக பிரநிதிகள் ,மாற்று கருத்துக்களை உள்வாங்குவதில்லை என குற்றசாட்டு...
இன்று பல குழுக்களாக இருக்கின்றீர்கள் ...ஒரு தலமைத்துவதின் கீழ் வாங்கோ...பேசிக்கலாம் என்று சொல்லுறீயள்...

ஒரு காலத்தில் எது நடந்தாலும் புலிகள் என கூறுபவர்கள் ....இன்று எது நடந்தாலும் புலம் பெயர் தமிழர்கள் மீது குற்றசாட்டு...

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, putthan said:

தமிழர் அரசியலை முள்ளி வாய்காலுக்கு கொண்டு சென்று அடித்து துவைத்து  உயிருக்கு ஆபத்தான ICU நோயாளர் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்படி தினாவெட்டாக கேள்வி கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?  அந்த நோயாளியை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவரவே இன்னும் இரண்டு தலைமுறை ஆகும். அதுவரை ( நீங்களும் நானும் வாழும்வரை) இப்படி புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.  

அது சரி  காவாலிகளுக்கு வக்காலத்து வாங்க புறப்பட்ட  நீங்கள் அதை மடை மாற்ற அரசியல். 

Edited by island
  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழ்பாணத்தில் எதிர்காலத்தில்  இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக பாடுபவர்கள் மற்றும் நடிகைகளை  நெருங்கி இருந்து பார்ப்பதற்கு வசதியாக கனம் பொருந்திய காவாலிகள் எல்லோருக்கும்  முதல் வரிசையில் இலவசமாக இருக்கை வசதிகள் ஒதுக்கபட வேண்டும் என்று வலவன், புத்தன் அண்ணா தலைமையிலான புலம்பெயர் ஈழதமிழர் குழு ஒன்று முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் கசிய தொடங்கி உள்ளது.

Edited by விளங்க நினைப்பவன்
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசை நிகழ்ச்சிகளில் குழப்பம் வருவது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடக்கிற விடயம் அல்ல. மேற்கத்தைய நாடுகளிலில் நடந்த இசை நிகழ்ச்சிகயிலும் குழப்பங்கள் நடந்திருக்கின்றன. அத்தி பீத்தாற் பொல் அரிதாக நடக்கும் நிகழ்வு ஆகையால் மக்கள் ஆர்வத்துடன் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாகக் கையாளவில்லை.மக்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழிக்கத்தான் வந்திருந்தார்கள். அவர்களில் முகங்களில் அது தெரிகிறது. இன்று தமன்னாலவப் பார்க்க வந்த கூட்டம் நாளை தமிழர் உரிமை விடயத்தை மறந்து விடும் என்று நம்புவது பேதமை. தமிழகத்தில் ஏஆர் ரஹ்மான் நிகழ்சியிலும் குழப்பம் ஏற்பட்டது . அதற்கு ர1;மான் கற்றம் சொல்லப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நடந்த குழப்பத்திற்கு யாழ்ப்பாண மக்களை காவாலிகள் என்று சொல்லி அந்த மக்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறதுஇ அது சரி அண்மைக்காலமாக அடிக்கடி இந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு என்ன காரணம். அந்த மக்களின் தமிழுணர்வை விடுதலை உணர்வை கொஞ்சமாக மழுங்கடிக்கும் முயற்சியா?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு நடந்த விடயத்திற்கு பின்னால் உள்ள அரசியலை ஒருவரும் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை.

முன்னுக்கு நின்று குழப்பம் விளைவித்தவர்கள் யாழ் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள். சிறீலங்கா பொலிசாருக்கும் அது தெரியும். ஆனால் இடையில் புகுந்து காதைப் பொத்தி அடித்தது இந்திய பாதுகாப்பு ஊழியர். அதனை தொடர்ந்தே விடயம் பெரிதாகியது.

எல்லாம் இந்திரன் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக் கூடாது என்ற நல்ல எண்ணம் தான்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடுமுழுவதிலும் இருந்து வந்துதான் இவ்வளவு இலட்ஷக்கணக்கான மக்கள் வருகை புரிந்துள்ளார்கள்......நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடந்ததால் யாழ்ப்பாண மக்கள் என்று குறிப்பிட்டு சொல்வது அபத்தமானது........எதோ நடந்து விட்டது .......சும்மா ஒரு பத்து, நூறுபேர் போதையில்  குழப்பம் செய்தாலே மேற்கொண்டு நிகழ்ச்சி நடத்துவது சிரமமாகிவிடும்......அதுதான் நடந்திருக்கின்றது...... இதுபோன்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை மிகவும் பலமான உயரமான மேடைகள் அமைத்துத்தான் இங்கெல்லாம் நடத்துகிறார்கள்......அப்போதுதான் சனம் முண்டியடிக்காமல் எட்டத்தில் நின்று பார்க்கும்......!

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, MEERA said:

இங்கு நடந்த விடயத்திற்கு பின்னால் உள்ள அரசியலை ஒருவரும் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை.

முன்னுக்கு நின்று குழப்பம் விளைவித்தவர்கள் யாழ் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள். சிறீலங்கா பொலிசாருக்கும் அது தெரியும். ஆனால் இடையில் புகுந்து காதைப் பொத்தி அடித்தது இந்திய பாதுகாப்பு ஊழியர். அதனை தொடர்ந்தே விடயம் பெரிதாகியது.

எல்லாம் இந்திரன் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக் கூடாது என்ற நல்ல எண்ணம் தான்.

இந்தச் சந்தேகம் தொடக்கத்திலிருந்தே எனக்கு இருந்தது. ஆனால் அதற்கு போதிய ஆதாரம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. எனது சந்தேகம் IBC மீதே இருந்தது. 

தெளிவூட்டலுக்கு நன்றி. 

Posted

யாழில் மயிரிழையில் தப்பிய அக்குட்டி பிச்சுமணி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

90 களில் முற்றவெளியில் நடந்த இசை நிகழ்ச்சி.

யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி:- 

யாழ் முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது,  இசையினையும்  நிகழ்ச்சிகளையும் காணக் கூடிய மக்களின் எண்ணிக்கை அளவிட முடியாதது.  அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த வீரகேசரி  கூடிய மக்களின் தொகை 'ஐந்து இலட்சம் ' எனச் செய்தி வெளியிட்டது ( நிகழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தவன் என்ற முறையில் அரை மில்லியன் என்ற தொகை சற்று அதிகம் தான், பாதியளவு இருக்கலாம் என எண்ணுகின்றேன்).  இலங்கைப் படையினர் நிகழ்வினை அச்சுறுத்திக் குழப்ப முயன்ற போது சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தனவே தவிர மற்றும் படி, நிகழ்வு இறுதி வரை அமைதியாகவே இடம் பெற்றது.  நிகழ்வினை ஒழுங்குபடுத்திய மாணவர்களில் நானும் ஒருவன் என்பதால் மேடை உட்படப் பல இடங்களுக்கும் சென்று வந்ததில் மது போதையில் ஒருவரைக் கூடக் காணவில்லை.  எந்தவொரு கெட்ட சொல்லும் எங்குமே ஒலிக்கவில்லை.  நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்த போதும்,  நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் உட்பட யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை.  தடுப்பரண்கள் எதுவுமில்லை.  வெறும் கயிறு மட்டுமே மேடைக்கு முன் கட்டப்பட்டிருந்தது.  கூடியிருந்த இலக்கக் கணக்கான ( இலட்சக் கணக்கான) இளைஞர்களில் யாருமே கயிற்றினைத் தாண்டி வர முயலவில்லை.  அப்படிக் கட்டுக்கோப்பாக இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது 23.04.1990 இல் ஒரு திங்கள் கிழமையன்று.  இசை நிகழ்ச்சியினை நடாத்தியது தேனிசைச் செல்லப்பா.  

    இந்தியப் படை வெளியேறிய பின்பு, இலங்கைப் படையுடனான சண்டை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வு அது. புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. புலிகளின் மாணவர் ( SOLT) அமைப்பிடமே நிகழ்வினை ஒழுங்குபடுத்தி,  மக்களை அமர வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.  போராளிகள் மேடைப் பாதுகாப்பினையும்,  வெளிப் பாதுகாப்பினையும் மட்டுமே முதலில் பார்த்துக் கொண்டனர்.  அப்போது முற்றவெளிக்கு அருகே கோட்டையில் குடியிருந்த இலங்கைப் படையினரின் கண் முன்னமே நிகழ்வு நடந்தது,  அதனால் முதலில் சீருடை அணிந்த/ ஆயுதம் தரித்த புலிகள் தமது இருப்பினை மறைத்து,  ஊர்திகளுக்குள்ளேயும்,  மறைவிடங்களிலும் மட்டுமே இருந்தனர்.  படையினரும் முதலில் ஆயுதம் எதுவுமின்றி கோட்டை மதில் மீது வந்து அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.  மக்கள் கூடக் கூட,  படையினருக்குப் பொறாமை வந்திருக்க வேண்டும். சிறிது சிறிதாக ஆயுதங்களை மக்கள் கூட்டம் முன் காட்டிக் கொண்டு வந்தனர்.  அதன் பின்னரே புலிகளும் ஆயுதங்களுடன் சுற்றி வர வெளிப் பாதுகாப்பினைப் பார்த்துக் கொண்டனர்.  இரு தரப்பினரும் சில மீற்றர் இடைவெளியில் ஆயுதங்களுடன் நேருக்கு நேர் நீட்டியபடி இருந்தனர்.  இசை நிகழ்ச்சி தொடங்கியது.  மக்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை,  இசையில் மூழ்கிக் கிடந்தனர்.  இதே யாழ் மக்கள் தான். நிகழ்வின் நோக்கமும்,  கருப்பொருளும் அப்படிப்பட்டவை. நம்புங்கள் இதே முற்றவெளிதான்.  முற்றவெளியில் அன்று ஒலித்த தேனிசைச் செல்லப்பாவின் குரல் இன்றும் காதில் ஒலிக்கின்றது- " நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்,  நாட்டின் அடிமை விலங்கு உடைக்கும் " .

ஆம் அன்று அங்கு கூடிய மக்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது,  அதனால் ஒழுங்கும் இருந்தது,  நேற்று முற்றவெளியில் அடிதடி செய்தோருக்கு பொதுவான இலக்கும் இல்லை, தனிப்பட்ட இலக்குகளுமில்லை.  இலக்கில்லாத பயணங்கள் தறி கெட்டே போகும்.🙏🙏🙏

வாட்சப்பில் வந்தது

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய்  தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில் இலவல நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு விஐபிக்களுக்கென்று கட்டணம் வ~லித்தார்கள். இலவச பார்வையாளர்களுக்கும் கட்டணப்பார்வையாளர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி விட்டு தடுப்புச் சுவர் அமைத்து அதற்கப் அப்பால் இலவச பார்வையாளர்களை நிறுத்து வைத்தார்கள்.அகன்ற தொலைக்காட்சித்திரைகளை ஏமாற்றுவதற்காக வைத்து விட்டு தரம் குறைந்த முசறயில் ஒளிபரப்பியதத மட்டுமன்றி தரமற்ற ஒலிபரப்பையும் வேண்டுமென்றே செய்தார்கள். அப்படி செய்தால்தான் பின்பு விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வியாபாரம் களைகட்டும். அல்லது அதற்கு அனுசரணையாளர்கள் ஆதரவுகொடுக்க மாட்டார்கள். மக்களும் பார்க்க மாட்டார்கள்.தொலைக்காட்சியின் ரிஆர்பி ரேட்டும் ஏறாது.ஆனால் சிறந்த ஒலிஒளித்தொகுப்புடன் முற்றிலும் இலவசமாக நடந்த சந்தோஷ்நாரயணனின் இசை நிகழi;ச்சி எந்தக் குழப்பமும் இல்லாமல் இதே நடத்தில் நடந்து முடிந்திருக்கிறது. மக்களும் எந்தப் பிரச்சினையம் இல்லாமல்கண்டு களித்திருந்தார்கள்.மக்களை ஏமாற்ற ஏற்பாட்டாளர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. பழியாழ்ப்பாண மக்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.

  • Like 3
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

90 களில் முற்றவெளியில் நடந்த இசை நிகழ்ச்சி.

யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி:- 

யாழ் முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது,  இசையினையும்  நிகழ்ச்சிகளையும் காணக் கூடிய மக்களின் எண்ணிக்கை அளவிட முடியாதது.  அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த வீரகேசரி  கூடிய மக்களின் தொகை 'ஐந்து இலட்சம் ' எனச் செய்தி வெளியிட்டது ( நிகழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தவன் என்ற முறையில் அரை மில்லியன் என்ற தொகை சற்று அதிகம் தான், பாதியளவு இருக்கலாம் என எண்ணுகின்றேன்).  இலங்கைப் படையினர் நிகழ்வினை அச்சுறுத்திக் குழப்ப முயன்ற போது சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தனவே தவிர மற்றும் படி, நிகழ்வு இறுதி வரை அமைதியாகவே இடம் பெற்றது.  நிகழ்வினை ஒழுங்குபடுத்திய மாணவர்களில் நானும் ஒருவன் என்பதால் மேடை உட்படப் பல இடங்களுக்கும் சென்று வந்ததில் மது போதையில் ஒருவரைக் கூடக் காணவில்லை.  எந்தவொரு கெட்ட சொல்லும் எங்குமே ஒலிக்கவில்லை.  நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்த போதும்,  நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் உட்பட யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை.  தடுப்பரண்கள் எதுவுமில்லை.  வெறும் கயிறு மட்டுமே மேடைக்கு முன் கட்டப்பட்டிருந்தது.  கூடியிருந்த இலக்கக் கணக்கான ( இலட்சக் கணக்கான) இளைஞர்களில் யாருமே கயிற்றினைத் தாண்டி வர முயலவில்லை.  அப்படிக் கட்டுக்கோப்பாக இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது 23.04.1990 இல் ஒரு திங்கள் கிழமையன்று.  இசை நிகழ்ச்சியினை நடாத்தியது தேனிசைச் செல்லப்பா.  

    இந்தியப் படை வெளியேறிய பின்பு, இலங்கைப் படையுடனான சண்டை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வு அது. புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. புலிகளின் மாணவர் ( SOLT) அமைப்பிடமே நிகழ்வினை ஒழுங்குபடுத்தி,  மக்களை அமர வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.  போராளிகள் மேடைப் பாதுகாப்பினையும்,  வெளிப் பாதுகாப்பினையும் மட்டுமே முதலில் பார்த்துக் கொண்டனர்.  அப்போது முற்றவெளிக்கு அருகே கோட்டையில் குடியிருந்த இலங்கைப் படையினரின் கண் முன்னமே நிகழ்வு நடந்தது,  அதனால் முதலில் சீருடை அணிந்த/ ஆயுதம் தரித்த புலிகள் தமது இருப்பினை மறைத்து,  ஊர்திகளுக்குள்ளேயும்,  மறைவிடங்களிலும் மட்டுமே இருந்தனர்.  படையினரும் முதலில் ஆயுதம் எதுவுமின்றி கோட்டை மதில் மீது வந்து அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.  மக்கள் கூடக் கூட,  படையினருக்குப் பொறாமை வந்திருக்க வேண்டும். சிறிது சிறிதாக ஆயுதங்களை மக்கள் கூட்டம் முன் காட்டிக் கொண்டு வந்தனர்.  அதன் பின்னரே புலிகளும் ஆயுதங்களுடன் சுற்றி வர வெளிப் பாதுகாப்பினைப் பார்த்துக் கொண்டனர்.  இரு தரப்பினரும் சில மீற்றர் இடைவெளியில் ஆயுதங்களுடன் நேருக்கு நேர் நீட்டியபடி இருந்தனர்.  இசை நிகழ்ச்சி தொடங்கியது.  மக்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை,  இசையில் மூழ்கிக் கிடந்தனர்.  இதே யாழ் மக்கள் தான். நிகழ்வின் நோக்கமும்,  கருப்பொருளும் அப்படிப்பட்டவை. நம்புங்கள் இதே முற்றவெளிதான்.  முற்றவெளியில் அன்று ஒலித்த தேனிசைச் செல்லப்பாவின் குரல் இன்றும் காதில் ஒலிக்கின்றது- " நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்,  நாட்டின் அடிமை விலங்கு உடைக்கும் " .

ஆம் அன்று அங்கு கூடிய மக்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது,  அதனால் ஒழுங்கும் இருந்தது,  நேற்று முற்றவெளியில் அடிதடி செய்தோருக்கு பொதுவான இலக்கும் இல்லை, தனிப்பட்ட இலக்குகளுமில்லை.  இலக்கில்லாத பயணங்கள் தறி கெட்டே போகும்.🙏🙏🙏

வாட்சப்பில் வந்தது

Group mentality

குழு நடத்தை

குழு நடத்தை(Group Behavior) என்பது சமூகவியலில், பெரிய அல்லது சிறிய மக்கள் குழுக்களாக சேர்ந்து செயல்படும் சுழலைக் குறிப்பதாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஏராளமான மக்கள் குழுக்கள் ஒருமித்து இலக்கைஅடைய விழைவதற்கும், தனிநபர்கள் தனியாக விழைவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஒருபெரிய குழு (ஒரு கூட்டம் அல்லது கும்பல்) இதே போன்ற ஒன்று சேரும்போது குழு நடத்தை உதயமாகிறது. உதாரணத்திற்கு:- பேரணி அல்லது போராட்டங்களில் பங்கெடுப்பது, கிளர்ச்சி அல்லது யுத்தத்தில் பங்கெடுப்பது.

பெரிய குழு நடத்தை சிறப்பு வடிவங்கள் உள்ளன: 

  • கூட்டம்- ஒரு குறிக்கோளுடன்(வெறி) சேர்ந்து கொண்ட குழு.
  • பார்வையாளர்கள் - போது சினிமா, நாடகம்,சினிமா திரைப்படம், கால்பந்து போட்டி, ஒரு கச்சேரி, போன்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ககும் மக்கள் குழு.
  • பொது - இந்த வகைக்குழுக்கள் ஒரே பூகோள இடத்தை ஆக்கிரமிக்கவேண்டும் என்றில்லை. இவர்கள் உலகம் முழுவதும் பரவி இதை செய்து கொண்டிருக்கலாம் உதாரணமாக- தொலைக்காட்சி முன் அமர்ந்து அதே அலைவரிசையைப் பார்த்துகொண்டிருக்கும் மக்கள் குழு.

எந்தவொரு ஒருங்கிணைப்பின்றி ஒரே விசயத்தை பலர் செய்வது வெகுஜன நடவடிக்கையாகும். இதை குழு நடத்தை என்று கொள்ளமுடியாது. அதுவே ஒருங்கிணைப்புடன் பலர் செய்தால் அது குழு நடவடிக்கையாகும்.

குழு நடத்தையில் உள்ள ஒரு சிறப்பு மந்தை புத்தி. அதாவது தன்னிடமில்லாத விசயங்களை குழுவிலுள்ள மற்றவர் மூலம் பெற்று விரும்பியதை செய்து முடிப்பதாகும்.

https://ta.m.wikipedia.org/wiki/குழு_நடத்தை

மந்தை புத்தி

Learn more
 
Learn more
 
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடுஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பிலும் பல வருடங்களுக்கு முன் சிங்கள பகுதியில் ஷாருகான் போன்ற பொலிவூட் நடிகர்களை கொண்டு ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது அதில் ஒரு குண்டு வெடித்து தலை தப்பினால் போதும் என அவர்கள் ஒட்டி போய்விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/2/2024 at 01:11, putthan said:

ஜனநாயகத்தின் உச்சம் பல கட்சிகள் இருப்பது .... ஏக பிரநிதிகளாக புலிகள் இருந்த காரணத்தால் தான் எமக்கு சரியான தீர்வு கிடைக்க வில்லை என பலர் சொன்னார்கள் இப்ப பல குழுக்கள் உண்டு இலகுவாக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்... எங்கே ?

அன்று ஏக பிரநிதிகள் ,மாற்று கருத்துக்களை உள்வாங்குவதில்லை என குற்றசாட்டு...
இன்று பல குழுக்களாக இருக்கின்றீர்கள் ...ஒரு தலமைத்துவதின் கீழ் வாங்கோ...பேசிக்கலாம் என்று சொல்லுறீயள்...

ஒரு காலத்தில் எது நடந்தாலும் புலிகள் என கூறுபவர்கள் ....இன்று எது நடந்தாலும் புலம் பெயர் தமிழர்கள் மீது குற்றசாட்டு...

நான் குற்றம் சாட்ட வில்லை கலாச்சார காவலர்களை சொன்னேன் தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு எண்ணுமாம் அதுபோலதான் 
நன்றி  

On 11/2/2024 at 00:29, விசுகு said:

எதிர்கட்சி இருப்பது நல்லது தானே சகோ. ஆனால் அவை சரியான பாதையை செப்பனிட உதவவேண்டும். 

எதிர்கட்சி இருக்க வேண்டும் ஆனால் முடிவுகளை மட்டும் சரியாக எடுக்கத்தெரியாதவர்கள் போலவே இருக்க்கிறார்கள் அதாவது ஓடினால் ஓடுவம் நின்றால் நிற்போம் கொடி பிடிக்க சொன்னால் கொடி பிடிப்பம் இதுதான் இன்றைய எல்லா எதிர்கட்சிகளின் நிலை இது எல்லாவற்றுக்கும் பொருந்தும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் இளம் தலைமுறையினர், சினிமா நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம் ; மனோ கணேஷன்

யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இப்படியான பிரமாண்டமான கலை நிகழ்வுகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான  விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும். தமிழக சினிமா ஒரு பிரமாண்டமான பணம் கொழிக்கும் வியாபாரம். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. 

அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. அதனால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். அதேவேளை, வடக்கில், “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்ற ஒரு சிந்தனை நிலைப்பாடும் இருக்கிறது. 

இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து, யாழ் மாவட்ட எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும். சினிமா கலைஞர்கள் அழைத்தால் வருவார்கள். வேண்டாம் என்றால், வர மாட்டார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று முதல்நாள்  யாழ்ப்பாண முற்றவெளியில்  நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும்.

இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக்கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம்.

அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள-பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.

சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள்.

இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு.  

இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம்.

இன்று, கொழும்பில் இந்நிகழ்வுகள் நடக்கின்றன. தொடர்ந்தும் நடக்கும். யாரும் வந்து முறைப்படி பார்க்கலாம். அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. கொழும்பை போன்று, யாழில் உள்ளக, வெளியக அரங்க கட்டமைப்புகள் இல்லை. கொழும்பிலும், சுகததாச உள்ளக அரங்கில் அதிகபட்சம் ஐயாயிரம் பேர் கூடலாம். இலட்சக்கணக்கில் கூட உள்ளக அரங்கு சரிவராது. வெளியக விளையாட்டரங்குதான் சரி.

யாழில் கலாச்சார மண்டபத்தை ரூ. 200 கோடி அளவில் முதலிட்டு கட்டிக்கொடுத்த இந்திய அரசுக்கு அப்போது, இந்த முற்றவெளியை, கொழும்பு சுகததாச அரங்கம் மாதிரி கட்டிக்கொடுங்கள் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யோசனை முன்வைத்து கூறி இருக்கலாம். இனியாவது, வெளிநாட்டு அரசுகளோ, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோ, இதை செய்யலாம். உள்நாட்டில் அடுத்த பல வருடங்களுக்கு பணம் இல்லை.

அடுத்து,  “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று கூறும் கருத்தும் சமாந்திரமாக இழையோடுகிறது. இது ஒரு தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு. இதை மறைக்க முடியாது. அப்படி இல்லை என்று கூறவும் முடியாது.

ஆகவே, இது தொடர்பிலும், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இடையே கலந்துரையாடல் நடக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்குமானால், விடை சுலபமானது. யாழ்ப்பாணத்தில் இனிமேல் தமிழக சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம்.

https://www.madawalaenews.com/2024/02/i_22.html

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/2/2024 at 17:15, island said:

தமிழர் அரசியலை முள்ளி வாய்காலுக்கு கொண்டு சென்று அடித்து துவைத்து  உயிருக்கு ஆபத்தான ICU நோயாளர் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்படி தினாவெட்டாக கேள்வி கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?  அந்த நோயாளியை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவரவே இன்னும் இரண்டு தலைமுறை ஆகும். அதுவரை ( நீங்களும் நானும் வாழும்வரை) இப்படி புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.  

அது சரி  காவாலிகளுக்கு வக்காலத்து வாங்க புறப்பட்ட  நீங்கள் அதை மடை மாற்ற அரசியல். 

இங்கு தினாவெட்டாக கேள்வி கேட்கவில்லை ...போராளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்...அந்நிய  படையெடுப்பு நடை பெறும் காலங்களில் மக்கள் கிளர்த்தெழுவது இயற்கை ..ஒரு சிலர் சகித்து கொண்டு செல்வார்கள்,பந்தம் பிடித்து தப்பி பிழைப்பார்கள் ..வேறு சிலர் போராடுவார்கள்....முள்ளிவாய்காலில் நடந்த துயர சமபவம் போல் ஒன்று நடைபெற வேணும் என மகிழ்ச்சியடைந்த உத்தமர்களும் உண்டு...

முள்ளிவாய்க்கால் நடந்த சம்பவத்தை தினாவெட்டாக கூறி அரசியல் கருத்து எழுத வேண்டிய வங்குரோத்து நிலையில் நான் இல்லை....தொடர்ந்து ஆக்க பூர்வமான கருத்துக்களை வைத்து அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய உத்தமர்கள் எல்லாம் இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும் இதே பல்லவி தான்...

தமிழன் ஒற்றுமை இல்லை
துரோகி பட்டம் சொல்லுவான் 
முள்ளிவாய்க்கால் அவலம் 
பிரதேசவாதம் பேசுகிறான்
தமிழன் காவாலி 
சிங்களவன் தமிழனை விட நூறு மடங்கு நல்லவன் 

நீங்கள் சிங்கள் காவாலிகள் செய்த இன அழிப்பை மறைக்க குத்தி முறியும் பொழுது நான் தமிழ் காவலிகள் செய்த செயலை மறைக்க கருத்து எழுதினால் என்ன தப்பு....

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, putthan said:

யார் என்று தெரிகிறதா? 😅

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.