Jump to content

Recommended Posts

பதியப்பட்டது (edited)

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி, நிலக்கீழ் அறையில் வாடகைக்கு இருந்த சிங்கள இளைஞனால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அறிய முடிகின்றது. சுட்டவரை காவல்துறை கைது செய்துள்ளதாம்.

----

By Alex Black, Kaitlin Lee

Posted March 7, 2024 4:11 am.

 

Last Updated March 7, 2024 12:27 pm.

The homicide unit is investigating after six people were found dead in Barrhaven, a suburb of Ottawa.

The Ottawa Police Service (OPS) responded to a home in the 300 block of Berrigan Drive around 11 p.m. on Wednesday, March 6 where the bodies of two adults and four children were located.

A seventh person was taken to hospital with serious, non-life-threatening injuries.

The identities of the victims have not been released, but Sri Lanka’s high commission in Ottawa confirms the family were Sri Lankan nationals.

The commission says a man survived, but his wife and children were killed in the tragedy, and it is in touch with family members in the country’s capital of Colombo.

Police chief Eric Stubbs referred to the case as a “mass shooting” earlier today, but OPS tells CityNews Ottawa he misspoke.

One person has been taken into custody and police say there is no further threat to the public.

Police are still working to identify the relationship between the suspects and victims, but said this does not appear to be a case of domestic or intimate partner violence.    

The OPS homicide unit is taking over the investigation and you can expect an increased police presence in the area today.

“This is a tragic and complex investigation, and investigative teams remain on Berrigan Drive,” said the OPS in a social media post.

Ottawa Mayor Mark Sutcliffe has issued the following statement:

“I was devastated to learn of the multiple homicide in Barrhaven, one of the most shocking incidents of violence in our city’s history. We are proud to live in a safe community but this news is distressing to all Ottawa residents. Ginny and I are thinking of the family members and neighbours of the victims. Thank you to our emergency responders who are investigating and supporting those who are affected by this terrible event.”

Ontario Premier Doug Ford is also expressing condolences.

Prime Minister Justin Trudeau also commented on the tragedy, during a news conference Thursday.

“Obviously our first reactions are all ones of shock and horror at this terrible violence. We are expecting that the community reaches out to support family and friends as Canadians always do, and we expect the police of jurisdiction to be doing the work and keeping us all informed of this terrible tragedy.”

Ottawa Catholic District School Board is encouraging anyone in need of support to reach out.

Ottawa Public Health says anyone who needs support can access resources for help on its website.

Anyone with information on the tragedy is asked to contact the Ottawa Police Service Homicide Unit at 613-236-1222 ext. 5493. Anonymous tips can be submitted by calling Crime Stoppers toll-free at 1-800-222-8477 or crimestoppers.ca.

Ottawa police are expected to provide an update on the investigation at 1:30 p.m. Thursday. You will be able to watch it here live.

https://toronto.citynews.ca/2024/03/07/multiple-victims-found-dead-in-barrhaven-homicide-unit-investigating/

Edited by நிழலி
தலைப்பு திருத்தம்
  • நிழலி changed the title to ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

பெருமாள், யாழில் வந்த செய்தி இது:   அத்துடன், மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியுடனான திருமணத்துக்கு புறம்பான உறவை தொடர்வதற்காக மனைவியையும், அவரது தாயாரையும் கூலிப்படை வைத்து கொல்ல முயன்று, மனைவி

Justin

இந்த செய்தி இங்கு இணைக்கப் படும் போதே பெருமாளுடையதைப் போன்ற கருத்துக்கள் வருமென எதிர்பார்த்தேன், அப்படியே நடந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் கொல்லப் பட்ட குழந்தைகளின் பால் கவனத்தைக் காட்டியிருப்பத

நிழலி

கபிதன்,  இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்கள

Posted

இவர்கள் கூரான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

//

Officers say an edged weapon was used in the crime.

The victims have been identified as Darshani Banbaranayake Hama Walwwe Darshani Dilanthika Ekanyake, 35, her son, Inuka Wickramasinghe, her daughter, Ashwini Wickramasinghe, 4, her daughter, Rinyana Wickramasinghe, 2, and her two-month-old daughter, Kelly Wickramasinghe. Police say a family friend, Ge Gamini Amarakoon, 40, was also killed.

//

https://toronto.citynews.ca/2024/03/07/multiple-victims-found-dead-in-barrhaven-homicide-unit-investigating/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இவர்களை விட மேலும் 7 பேர் காயப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..😒

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் பிஞ்சுக் குழந்தைகள். என்ன ஒரு மிருகத் தனமோ தெரியவில்லை!

என்ன தான் நண்பர் வட்டத்தில் இருப்பவராக இருந்தாலும் வீட்டுக்குள் வசிக்க விடும் போது மிக அவதானம் தேவை எனக் காட்டும் ஒரு சோக உதாரணம் இது!

Posted
48 minutes ago, Justin said:

எல்லாம் பிஞ்சுக் குழந்தைகள். என்ன ஒரு மிருகத் தனமோ தெரியவில்லை!

என்ன தான் நண்பர் வட்டத்தில் இருப்பவராக இருந்தாலும் வீட்டுக்குள் வசிக்க விடும் போது மிக அவதானம் தேவை எனக் காட்டும் ஒரு சோக உதாரணம் இது!

கொலை செய்ததாக கைதானவர் இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர்...! 

இந்த இளம் வயதில் மிகக் கொடூரமாக சிறுவர்களை கூட கொன்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, நிழலி said:

கொலை செய்ததாக கைதானவர் இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர்...! 

இந்த இளம் வயதில் மிகக் கொடூரமாக சிறுவர்களை கூட கொன்றுள்ளார்.

போதைப் பழக்கம்? 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

போதைப் பழக்கம்?

புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்பு: பொதுமக்கள் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு

இதற்கு காரணமும் கஞ்சா போதை பாவிப்பு  ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லபட்டுவிட்டார்  குற்றவாளிக்கு வயது 19 ஒரு 50 வயது குற்றவாளியுடன் சேர்ந்து இருவரும் கொலை செய்துள்ளனராம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா: இலங்கைப் பெண், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் கொடூரக் கொலை - உடன் வசித்த மாணவரே கொன்றதாகக் குற்றச்சாட்டு - ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி

கனடாவில் கத்திக் குத்து

பட மூலாதாரம்,REUTERS

26 நிமிடங்களுக்கு முன்னர்

கனடா தலைநகர் ஒட்டாவா பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு சிறார்கள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கனடாவிற்கு புதிதாக வருகைத் தந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்களில் மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதை கொண்ட சிசுவொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த குடும்பத்துடன் வசித்த வந்ததாக கூறப்படும் 19 வயதான இளைஞன் ஒருவனே இந்த கொலையை செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

''இது முழுமையாக அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அர்த்தமற்ற வன்முறைச் செயல்" என ஒட்டாவாவின் உயர் போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

இரண்டு மாத குழந்தையும் கொலை

ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவன் பகுதியிலிருந்து அந்த நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு 22:52க்கு அவசர அழைப்பொன்று போலீஸாருக்கு கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சந்தேக நபரை விரைவாக கைது செய்துள்ளதாக ஒட்டாவா போலீஸ் தலைமை அதிகாரியான எரிக் ஸ்டப்ஸ் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் கொல்லப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.

உயிரிழந்த நிலையில், தாய், நான்கு குழந்தைகள் மற்றும் அந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

35 வயதான தர்ஷினி திலந்திகா ஏக்கநாயக்க, அவரது 7 வயதான குழந்தை இனுக்கா விக்ரமசிங்க, 4 வயதான அஸ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரியானா விக்ரமசிங்க மற்றும் 2 மாத குழந்தை கேலி விக்ரமசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த 40 வயதான காமினி அமரகோன் என்ற நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

 

19 வயது மாணவர் மீது குற்றச்சாட்டு

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 19 வயதான மாணவர் பெப்ரியோ டி சொய்சா என போலீஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மீது 6 கொலை குற்றச்சாட்டுக்கள் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி இந்த கொலைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தலைமை போலீஸ் அதிகாரி ஸ்டப்ஸ் கூறுகின்றார்.

ஒட்டாவாவில் அண்மை காலத்தில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான கொலை சம்பவமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''உண்மையில் சோகமான சம்பவம். இது நாட்டின் தலைநகரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்" எனவும் அவர் கூறியுள்ளார். “இப்பகுதியினர் மீதும் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சம்பவம் நடந்த இடத்திலிருந்து இப்பகுதியினர் விலகியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்தார்.

 
கனடாவில் கத்திக் குத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி

இந்த சம்பவமானது முதலில் துப்பாக்கி சூடு என கூறப்பட்ட போதிலும், பின்னர் அது கூரிய ஆயுதத்தால் நடத்தப்பட்ட கொலை என கண்டறியப்பட்டதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவத்தைக் “கொடூரமான வன்முறை” என்று குறிப்பிட்ட கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஒட்டாவா நகரின் மேயர் மார்க் சட்க்லிஃப் “நகரின் வரலாற்றில் நிகழ்ந்த மிக அதிர்ச்சிகரமான வன்முறை சம்பவம்” என்று தெரிவித்தார். “பாதுகாப்பான சமூகத்தில் வாழ்வது குறித்து பெருமை கொள்கிறோன். ஆனால் இந்த சம்பவம் ஒட்டாவா நகர மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

“இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து, விசாரணையை நடத்தி வரும் அவசர கால ஊழியர்களுக்கு நன்றி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c3gm1zpeymjo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ottawa-police-mass-shooting-berrigan-dri

கனடாவில் இலங்கையர்கள் படுகொலை விவகாரம் : வெளியான முழுமையான தகவல்கள்! 

 

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவனும் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின், தெற்கு ஒட்டாவாவிலுள்ள பார்ஹேவன் புறநகரில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த பயங்கரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைச் சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்துவந்த தாய் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்தவகையில், 35 வயதுடைய தர்ஷினி பண்டாரநாயக்க எனும் தாய், அவரது 7 வயது பிள்ளையான இனுக விக்ரமசிங்க, 4 வயது பிள்ளையான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயது பிள்ளையான ரியானா விக்ரமசிங்க, 2 மாதக் குழந்தையான கெல்லி விக்ரமசிங்க, மற்றும் குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சலாகே காமினி அமரகோன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்றையதினம் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா (Febrio De-Zoysa) எனும் சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர், தனது 19 ஆவது பிறந்த தினத்தை படுகொலை செய்யப்பட்ட குறித்த குடுப்பத்தாருடன் இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடியிருந்தாகவும் இவரும் இலங்கையிலிருந்து கனடாவுக்கு மாணவர் விசாவில் வருகை தந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பார்ஹேவன் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2024/1372680

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா தலைநகர் ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை.

UPDATED:

உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

  • 35-year-old Darshani Banbaranayake Gama Walwwe Darshani Dilanthika Ekanyake.
  • Seven-year-old Inuka Wickramasinghe.
  • Four-year-old daughter Ashwini Wickramasinghe.
  • Two-year-old Rinyana Wickramasinghe.
  • Two-month-old Kelly Wickramasinghe.
  • தர்ஷனி பண்டாரநாயக்கா / ஏகநாயக்க (மனைவி – 35 வயது)
  • இனுக்கா விக்கிரமசிங்க (மகன் 7 வயது)
  • அஷ்வினி விக்கிரமசிங்க (மகள் 4 வயது)
  • றினாயனா விக்கிரமசிங்க (மகள் 2 வயது)
  • கெலி விக்கிரமசிங்க (மகள் 2 மாதம்)

கணவன் தனுஷ்கா விக்கிரமசிங்க (மதுரங்கா) உயிர் தப்பியிருந்தும் கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது.  குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரக்கூன் முபியயான்செல (40-year-old Amarakoonmubiayansela Ge Gamini Amarakoon) (காமினி) என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார்.

19 வயதான ஃபெப்ரியோ டி-சோய்சா (Febrio De-Soyza), முதல் தரத்தில் கொலை செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளார். அவர் கனடாவில் மாணவராக இருந்ததாக நம்பப்படும் இலங்கைப் பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கைதுசெய்யப்பட்டார்.

நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் புதன்கிழமை இரவு பார்ஹேவனில் (Barrhaven, Ottawa) உள்ள பெரிகன் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்ததை ஒட்டாவா காவல்துறை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

புதன் இரவு 11 மணிக்கு (March 06, 2024) 911 அழைப்புகளுக்கு பதிலளித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

spacer.png

இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்குடும்பம் வெவ்வேறு காலங்களில் கனடாவுக்கு வந்தவர்கள் எனவும் கடைக் குழந்தை கனடாவில் பிறந்தவரெனவும் தெரியவருகிறது. சம்பவம் நடைபெற்ற வீடு இக்குடும்பத்திற்குச் சொந்தமானதெனவும் 2013 இலிருந்து இவ்வீடு அவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறதெனவும் வீட்டு பதிவுகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

mass-shooting-ottawa-sinhala-family.webp

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று போலீசார் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் இலங்கை பிரஜைகளின் குடும்பம் என்று ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வீட்டு பேஸ்ட்மென்டில் (Basement) வாடகைக்கு குடியிருந்த சிங்கள இளையராலேயே இந்த கொலை நடந்ததாகவும் தெரியவருகின்றது.

கனடாவின் அல்கோனிகின் கல்லூரியின் (Algonquin College) மாணவரே இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டில் இவர் கல்லூரிக்கு சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

https://www.torontotamil.com/sinhala-srilankan-family-six-people-dead-including-four-children-ottawa-canada/#google_vignette

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இறுதி  45 செக்கன்களை கவனியுங்கள். 

துன்பத்திலுள்ளவர்களை கேள்விக்குள்ளாக்குவது மனித நேயம் அற்ற செயல். ஆனாலும் காயமடைந்த தந்தையின் செயல் இயல்பானதாகத் தோன்றவில்லை. 

எங்கோ பிழைக்கிறது 🥺

Edited by Kapithan
Posted

மேற்படி நபர் 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லையாம். இதனால் (காயமடைந்த) வீட்டுக்காரர் வீட்டை விட்டு வெளியேறுமாறு  கூறியுள்ளார். கொலை செய்த இளைஞர் பகுதி நேர வேலையும் எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமைடைந்த நபர் பிள்ளைகளையும் தாயையும் தடுக்க வந்த மற்றுமொரு வாடகைக்கு இருந்தவரையும் கொன்றுள்ளார். ஓட்டவா நண்பர் தான் கேள்விப்பட்டதை என்னிடம் கூறினார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை – இன்று அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு!

new-01-300x200.jpg

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த நாட்டு நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டாவா நகர முதல்வரினால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் அந்த நாட்டு அரசியல் தரப்பினர் மற்றும் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரட்ன வேறதுவ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த 6 இலங்கையர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக கனடாவின் பால்மேடியா பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்கள் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர்.

35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயும் அவரது ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மாதங்களேயான குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளும் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் என்ற அவர்களது நண்பர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

கத்தி அல்லது அது போன்ற கூரிய ஆயுதத்தினால் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையாகுவதற்காக சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்வதற்காக வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/295037

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

கனவில் சவப்பெட்டிகளை கண்டேன் – கனடாவில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கம்.

ஏதோ நடக்கப் போகிறது என உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன் என கனடாவில்; படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயாரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனடாவின் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர் இலங்கையில் பொல்கஹவெல பிரதேசத்தில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில், கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணியளவில் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமன்று 35 வயதுடைய இளம் தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.

இவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே அவரைத் யாரோ தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்த நிலையில், அவரை தாக்கிய தாக்கிய நபரை அவரால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

எவ்வாறாயினும், தம்மைத் தாக்கியவர் இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதையும் உணர்ந்தார்.

இதனையடுத்து, தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இந்நிலையில், 911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை குறித்து அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து சாந்தி ரமேஷ் (அயல் வீட்டுப் பெண்) என்பவர் தெரிவிக்கையில்,

வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை இரு பொலிஸார் அழைத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது இப்படியொரு சோகம் நடந்ததாகத் தெரியவில்லை. இது மிகவும் சோகமானதும், துயரமானதும் சம்பவம் என தெரிவித்துள்ளார்.

கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் பிரதானி – எரிக் ஸ்டப்ஸ் கூறுகையில்,

எங்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். இதன்போதே இந்த சம்பவத்தில் இறந்த நிலையில் 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த குடும்பங்கள் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள். அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலைக்குக் கொண்டுச்செல்லும் போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.

1709914274-600x400.jpg

Capture-464x600.jpg

https://athavannews.com/2024/1372810

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nunavilan said:

மேற்படி நபர் 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லையாம். இதனால் (காயமடைந்த) வீட்டுக்காரர் வீட்டை விட்டு வெளியேறுமாறு  கூறியுள்ளார். கொலை செய்த இளைஞர் பகுதி நேர வேலையும் எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமைடைந்த நபர் பிள்ளைகளையும் தாயையும் தடுக்க வந்த மற்றுமொரு வாடகைக்கு இருந்தவரையும் கொன்றுள்ளார். ஓட்டவா நண்பர் தான் கேள்விப்பட்டதை என்னிடம் கூறினார். 

கொலை செய்வதற்கு இதெல்லாம் ஒரு காரணமா? 

Posted
8 minutes ago, Kapithan said:

கொலை செய்வதற்கு இதெல்லாம் ஒரு காரணமா? 

இருக்க இடமில்லை. வேலை இல்லை.  frustration ஆக இருக்கலாம்.

கொலை செய்ய மில்லியன் காரணங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, nunavilan said:

இருக்க இடமில்லை. வேலை இல்லை.  frustration ஆக இருக்கலாம்.

கொலை செய்ய மில்லியன் காரணங்கள் உண்டு.

சொந்த நாட்டில் அமைதியாக வாழ தெரியாத இனம் உலகில் எங்கு சென்றாலும் நாய் வாலை  நிமித்த முடியுமா ?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டு மோகம் அது சார்ந்த கனவுகள் நிஜத்தை தரித்த சோகம் எதிர்பார்த்தது கிடைக்காத விரக்தி.......? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, nunavilan said:

மேற்படி நபர் 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லையாம். இதனால் (காயமடைந்த) வீட்டுக்காரர் வீட்டை விட்டு வெளியேறுமாறு  கூறியுள்ளார். கொலை செய்த இளைஞர் பகுதி நேர வேலையும் எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமைடைந்த நபர் பிள்ளைகளையும் தாயையும் தடுக்க வந்த மற்றுமொரு வாடகைக்கு இருந்தவரையும் கொன்றுள்ளார். ஓட்டவா நண்பர் தான் கேள்விப்பட்டதை என்னிடம் கூறினார். 

வீட்டு வாட‌கை க‌ட்ட‌ வில்லை 
வெளிய‌ போங்க‌ என்று சொன்ன‌ குடும்ப‌த்தை சுட்டு கொல்வ‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்..................இனி வீடு வாட‌கைக்கு விடுவோர் விழிப்புண்ர்வுட‌ன் இருக்க‌னும்

பிஞ்சுக் குழ‌ந்தைக‌ளை பார்க்க‌ க‌வ‌லையா இருக்கு😥...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதெல்லாம் இலங்கையில் சிறுபான்மையினத்தவருக்கெதிராக காலகாலமாய் சர்வசாதாரணமாக நடந்த சம்பவங்கள் தான், கனடாவில் இது அதிர்ச்சியாக இருக்கலாம். அதாவது, உயிர் பிழைத்தவர் காருண்யமானவர், அன்பானவர், சம்பந்தப்பட்டவருக்கு உதவும் நோக்கிலேயே அவரை அழைத்து வந்து தங்க வைத்ததாக செய்திகள் கூறுகின்றன, அதே நேரம் அவரின் மனோநிலையை அங்கிருந்த விக்கிராதிபதிக்கும் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் ஏன் அதற்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவரை ஆற்றுப்படுத்த முன்வரவில்லை? இங்கு பௌத்த மதத்தின் பெயரால் இரத்த ஆறு ஓடவைக்க முனையும் அவர்களால் வேறு எதை சாதிக்க முடியும்? இருந்தாலும் ஒரு ஆறுதல், வழமையாக தமிழர்தான் முன்னுக்கு ஓடிச்சென்று உதவி செய்து தாக்குபடுபவர்கள், இந்த முறை தப்பிக்கொண்டனர். அந்தப்பையன் இங்கிருந்திருந்தால் நம்மினத்துக்கு ஒரு சவாலாக இருந்திருக்க கூடும்.     

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... இந்த செயலை நமது இன பொடியன் செய்திருந்தால்...கனடாவில் நமது நிலை எப்படியிருக்கும்

3 hours ago, satan said:

இதெல்லாம் இலங்கையில் சிறுபான்மையினத்தவருக்கெதிராக காலகாலமாய் சர்வசாதாரணமாக நடந்த சம்பவங்கள் தான், கனடாவில் இது அதிர்ச்சியாக இருக்கலாம். அதாவது, உயிர் பிழைத்தவர் காருண்யமானவர், அன்பானவர், சம்பந்தப்பட்டவருக்கு உதவும் நோக்கிலேயே அவரை அழைத்து வந்து தங்க வைத்ததாக செய்திகள் கூறுகின்றன, அதே நேரம் அவரின் மனோநிலையை அங்கிருந்த விக்கிராதிபதிக்கும் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் ஏன் அதற்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவரை ஆற்றுப்படுத்த முன்வரவில்லை? இங்கு பௌத்த மதத்தின் பெயரால் இரத்த ஆறு ஓடவைக்க முனையும் அவர்களால் வேறு எதை சாதிக்க முடியும்? இருந்தாலும் ஒரு ஆறுதல், வழமையாக தமிழர்தான் முன்னுக்கு ஓடிச்சென்று உதவி செய்து தாக்குபடுபவர்கள், இந்த முறை தப்பிக்கொண்டனர். அந்தப்பையன் இங்கிருந்திருந்தால் நம்மினத்துக்கு ஒரு சவாலாக இருந்திருக்க கூடும்.     

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, alvayan said:

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... இந்த செயலை நமது இன பொடியன் செய்திருந்தால்...கனடாவில் நமது நிலை எப்படியிருக்கும்

ரொம்ப தலை குனிவாக இருந்திருக்கும், அது நமது  தாயகத்தையும் பாதித்திருக்கும்.     தமிழர் மிகவும் ஜாக்கிரதையாக  தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதும் நண்பர்களைப்போல் உரையாடுவதும்  கண்காணிப்பதுவும் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.

கனடாவிலேயே இடம்பெறும் இறுதிக்கிரியைகள்

உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகளும் அந்நாட்டிலேயே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டடிருப்பதாக கனடாவிலுள்ள பௌத்த காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் விகாராதிபதியுமான நுகேகலயாகே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் விகாரை நன்கொடையாளர் சபையின் ஆதரவுடன் குறித்த ஆறு பேரின் இறுதிக்கிரியைகளையும் இடம்பெறும்.

இதற்கு அவர்களது குடும்பத்தாரும் விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் நுகேகலயாகே ஜினாநந்த தேரர் மேலும் தெரிவித்தார்.

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர பெருந்தொகை பணம் செலவாகும்

உயிரிழந்த ஆறு பேரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெருந்தொகை பணம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலதிக விசாரணைகள் காரணமாக இதுவரையில் சடலங்களை கனேடிய பொலிஸார் உரிய தரப்பினரிடம் கையளிக்வில்லை.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/கனடாவில்-படுகொலை-செய்யப்/
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, alvayan said:

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... இந்த செயலை நமது இன பொடியன் செய்திருந்தால்...கனடாவில் நமது நிலை எப்படியிருக்கும்

 

நியாயமான கேள்வி. 

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • AN ANOTHER SAMARITAN OF OUR SOIL! “பிழை ஒன்றும் செய்யாத அப்பாவி மக்கள்” கொன்று குவிக்கப்பட்ட கொடிய நாட்களில் உயிர்காக்கும் உன்னதமான பணியாம் மருத்துவப்பணி வார்த்தைகளால் வடிக்கமுடியாத துயர்களையும், சவால்களையும் சுமந்திருந்தது. 





சர்வதேச ஒழுங்கையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிக மோசமான மருத்துத்தடை, பொருளாதாரத்தடைகள் மூலம் தமிழர்களை பணிய வைக்க சிங்கள அரசு மூர்க்கத்துடன் செயற்பட்டது. விண்ணும் மண்ணும் அதிரும் வெடிச்சத்தங்களும், இரசாயனக் குண்டுகளின் மூக்கை அரிக்கும் மணமும் , பசியால் துடித்தழும் பாலகர்களின் அழுகுரல்களும் எங்களின் தேசிய ஆன்மாவை உலுக்கிச் சோர்வடையச் செய்து கொண்டிருந்த பொழுதுகளிலெல்லாம்…  அஞ்சாத  நெஞ்சுரத்துடன் துஞ்சாத துயில் கொள்ளாத தேவர்களாய் செயலாற்றிய  மனிதர்களைப் பற்றி அடியேன் சொல்லியே ஆகவேண்டும். அந்த உன்னத மானுடப் பிறவிகளில் மிகவும் முக்கியமானவன் வைத்திய கலாநிதி காந்தன் குணரத்தினம். பஞ்சமும், பட்டினியும் எம்மை பாதித்த வேளைகளில் பல மாதங்களாக தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி செயற்பட்ட காலங்கள் எழுத்தில் வடிக்க முடியாத 

வேதனை மிக்கவை. அந்த நேரங்களில் ஓர் விளக்கேந்திய பெருமகனாக 

துன்பத்தில் துவண்ட மக்களுக்கு உற்ற துணையானவன் எங்கள் மருத்துவர் காந்தன். 






Dr காந்தன் தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திரசிகிச்சைமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) கற்கை நெறியினை நிறைவு செய்தவர். இங்கே தமிழீழ மருத்துவக் கல்லூரி பற்றி சொல்ல வெண்டும். முதல் மாவீரன் சத்தியநாதன் சங்கர் காயம் பட்டு அதிக குருதிப் பெருக்கால் வீரச்சாவு அடைந்த காலத்தில் இருந்தே தேசப்பற்று மிக்க ஓர் வைத்தியர் குழாமை உருவாக்கும் தேசியத் தலைவர் அவர்களின்ஓர் கனவுதான் தமிழீழ மருத்துவக் கல்லூரி ஆகும். 


யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் அழகய்யா துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி யாழ்ப்பாணத்தின்
நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. 








பல நூறு இன்னுயிர் காத்த 

 ஓர் உன்னத வைத்தியர் காந்தன் மன்னார் சிலாவத்துறை அரசினர் வைத்தியசாலையில் பணி புரிந்தவர். வசதி வாய்ப்புகள் குறைந்த பிர்தேசமென பல வைத்தியர்கள் செல்ல விரும்பாத நேரத்தில் காந்தன் ஆற்றிய சேவையை சிலாவத்துறை பிரதேச மக்கள் பெருமனதுடன் நினைவு கூருவர். 









மாங்கனித்தீவின் கிழக்கு மாகாணத்தில் அல்லது தென் தமிழீழத்தின் கதிரவெளி, வாகரை வைத்தியசாலைகள் தொடக்கம் வடக்கின் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் வரை வைத்தியசாலைகள் குறிவைத்துத் தாக்கப்பட்ட போது அங்கெல்லாம் நின்று சேவையாற்றியவர் லெப் கேணல் காந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. சுருங்கக் கூறின் தமிழர்தாய் நிலத்தில் எங்கெல்லாம் கூக்குரல் கேட்டதோ அங்கெல்லாம் துன்பம் போக்கிய பெருமகனார் காந்தன். தமிழீழ மருத்துவர் மருத்துவர் காந்தன் 2009ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 5 ஆம் தேதி 

முல்லைத்தீவு சாலை எனும் இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் 

காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிக்கும் போது குண்டுபட்டு படுகாயமடைந்து 

வீரச்சாவு அடைந்தார். 


தாம் நேசித்த மக்களுக்காக தம் இன்னுயிர்களையே ஈந்தவர்கள் வழிபாட்டுக்குரியவர்கர்ளே!🙏 நன்றி – வயவையூர் அறத்தலைவன் –   https://vayavan.com/?p=8655
    • சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை. வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)! அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள். 

இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், 
தங்கள் பொற்தடம் பதித்து அளப்பரிய சேவை செய்தவர்கள் தாம் நேசித்த மக்களுக்காக ஈகத்துக்கு தயாராக இருந்தவர்கள். இந்த திலீபன் மருத்துவமனையின் உதவி மருத்துவர்கள் (AMPs-Assistant Medical Practitioners) அனைவரும் தமை அப்பணிக்கத் தயாரான போராளிகள் என்பது அதன் தனிச்சிற்ப்பு ஆகும் !🗝 வனத்தாய்மடியில் தாலாட்டப்படும் ஐயங்குளம் கிராமத்தில் உள்ள தியாக தீபம் திலீபன் மருத்துவமனையை படத்தில் காண்கிறீர்கள்! நோர்வேயின் ‘பேச்சு வார்த்தை நாடக அரங்கேற்றம்’ நடைபெற்ற காலத்தில் அமெரிக்காவில் வாழும் தமிழ் வைத்திய நிபுணர் ஒருவரால் இந்த அழகிய மருத்துவமனைக் கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. போர்ச்சுமை நடுவிலும் தமிழர் நிழல் அரசு நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் ஏராளம்! எமது மக்களுக்கான அரும்பெரும் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து வந்த இந்த திலீபன் வைத்தியசாலைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தவர் Dr பத்மலோஜினி கரிகாலன் அவர்கள். 1956 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் இடைக்காட்டில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் Dr பத்மலோஜினி அவதரித்தார். உயர்தரக் கல்வியை அந்நாட்களில் புகழ்பூத்து விளங்கிய யா/புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் கற்றார். பெற்றாரும் உறவுகளும் பெருமை கொள்ளத்தக்க வகையிலே க/பொ/த உயர்தரச் சோதனையில் சாதனை படைத்தது பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பீடத்துக்கு தெரிவானார். 1985ஆம் ஆண்டு MBBS பட்டம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு பரிபூரண வைத்தியராக வெளியேறினார். வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக இருந்தவர். அக்காலகட்டத்தில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச வன்முறையைக் கண்டு கொதித்து அரச உத்தியோகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு விடுதலைப் போரில் குதித்தவர். மிக நீண்ட காலம் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஓர் வைத்தியராக இருந்த இந்த வைத்தியரும் கணவரான திரு. கரிகாலன் அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர். பின்னிணைப்பு – தற்கொலைகளைத் தடுத்தல் (Prevention of suicidal attempts), சட்டவிரோத கருக்கலைப்புகளைத் தடுத்தல்(Illegal abortion/miscarriage) குடும்பநல ஆலோசனைகள்(Family Planning plans)என பல் வேறுபட்ட இன்னோரன்ன விடையங்களில் கவனம் செலுத்தி கிராமப்புற மக்களின் நலவாழ்வுக்கு தமிழர் நிழலரசு வித்திட்டது. இவற்றுடன் மேலதிகமாக, “குழந்தை உளவியலும் கல்வியும்” என “சிறார் உளவியலும் கல்வியும்” என நிறைய விடையங்களில் திலீபன் ஞாபகார்த்த வைத்தியசாலைகள் சமூகம் கவனமெடுத்தது. உங்களின் அனுபவங்களையும் தகவல்களையும் இங்கே பதிவு செய்யுங்கள் எனதருமை நண்பர்களே! நன்றி – வயவையூர் அறத்தலைவன் –   https://vayavan.com/?p=8597
    • (01)விவேகம், (02)வேகம், (03)சுறுசுறுப்பு, (04)நகைச்சுவை உணர்வு ஆகிய நற்பண்புகள் நிரம்பவே பெற்ற எங்கள் நண்பன் யாழ்வேள் உதவி மருத்துவர் கற்கை நெறிக்காக (Assistsnt Medical Practitioner) முதன் முதலில் தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டான். யாழ் இடப்பெயர்வு நடைபெற்று தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட அல்லது தமிழ்மக்கள் மருத்துவ சுகாதார வசதியீனங்களால் அல்லலுற்ற நேரத்தில் தன்னையும் ஓர் விடுதலைப்புலி உறுப்பினராக இணைத்துக்கொண்டு முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பயிற்சிப் பாசறையில் அரசியல், ஆயுதப் பயிற்சி பெற்று ஓர் உன்னதமான புலிவீரனாக வெளியேறினான்! அதன் பின்னரான காலப்பகுதியில் இவனது திறமைகளைக் கண்ட அன்றிருந்த மூத்த மருத்துவர்கள் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்வேளை தமிழீழ மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் அணியில் MBBS கற்கையைத் தொடருவதற்காக அனுப்பிவைத்தார். தாண்டிக்குளப் படைத்தளம் மீதான வலிந்து தாக்குதலில் அன்புத் தோழன் யாழ்வேள் மேற்புயத்தில் விழுப்புண் தாங்கி (Injured on the upper arm) ஒருகட்டத்தில் அதிக குருதியிழப்பால் சோர்வடைந்த போது மேஜர் சந்திரன்/சின்னக்குட்டி (கனகநாதன் பிரகாஷ்) தனது தோளில் தூக்கி வந்து காப்பாற்றினான்! பின் பிறிதொரு சமரில் சந்திரனும் உயிர்காக்கும் உன்னத பணியில் வவுனியா சேமமடுபகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான்!…   https://vayavan.com/?p=11112&
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.