Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2024 at 02:20, Justin said:

மல்லியப்பூ சந்தியில் இருக்கும் உணவகத்தில் பெரும்பாலும் பஸ்கள் உணவுக்கு நிறுத்துவர். அந்த சந்தியில் இருந்து மலையழகை ரசித்தவாறே சுவையான உணவை அனுபவிக்கலாம்.

இதே போல் ரம்போட நீர்வீழ்ச்சி அருகிலும் உணவகங்கள் உள்ளன.

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2024 at 02:20, Justin said:

அனுராதபுரம் கொஞ்சம் காய்ந்த இடம் தான் என்றாலும், அங்கே பெலிமல்  என்ற ஒரு தேனீர் போன்ற பானம் விற்பார்கள். சூடான அந்தப் பானம் குடிக்கும்  போது வயிறு குளிர்வதை உணரலாம்

இதை குடித்தால் ரத்த சர்க்கரை குறையும் என்றார்கள். எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் டயபா டீ என ஒன்றை 2010 இல் சில தடவைகள் குடித்த போது ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. ஆனால் என்னதை கலக்கிறார்களோ என தெரியாதபடியால் தொடரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2024 at 23:50, goshan_che said:

கந்தர்மடமும் போனேன் - ஆஸ்பத்திரிகள், ஷோரூம்கள் என லக..லக…என்று இருக்கிறது உங்கள் ஊர். யாழ்ப்பாணத்தில் பச்சை குத்த (டட்டூ) இப்போ உங்கள் ஊர் கடை ஒன்றுதானாம் பேமஸ்.

கொழும்பு புதுக்கடையில் சாப்பிட்ட போது, உங்களையும் நீங்கள் சிலாகிக்கும், நான் அனுபவித்திராத மொக்கன் கடையையும் நினைத்துக்கொண்டேன்.

maxresdefault.jpg

கோசான்...  நீங்கள் கந்தர்மடம் போவது என்று தெரிந்திருந்தால்,
ஐந்து கிலோ இடித்த மிளகாய்த்தூளும், மூன்று கிலோ வறுத்த  சிவப்பு அரிசிமாவும்,
இரண்டு கிலோ பாரை கருவாடும் குடுத்து விட சொல்லியிருப்பேனே...
ச்சாய்.... அருமந்த சந்தர்ப்பம் தவறிப் போச்சுது.  அடுத்தமுறை பாப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, goshan_che said:

இதை குடித்தால் ரத்த சர்க்கரை குறையும் என்றார்கள். எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் டயபா டீ என ஒன்றை 2010 இல் சில தடவைகள் குடித்த போது ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. ஆனால் என்னதை கலக்கிறார்களோ என தெரியாதபடியால் தொடரவில்லை.

ஆகா இவருக்கு சுகர் வருத்தம் ....சுகர் வருத்தம்.....சுகர் வருத்தம்
எனக்கு இண்டையான் பொழுது ஆகா ஓகோ 🤣🤣

உங்களது ஒரு நாள் வருமானம் எவ்வளவு? - Quora

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, island said:

இதுவும் அடுத்த விடுமுறைக்கு தேர தெடுக்க வேண்டிய இடம்

வந்த களை ஆறவில்லை அதற்குள் மறுபடியும் ஆவலை தூண்டுகிறீர்களே ஐலண்ட் ஐயா.

அடுத்த முறை கட்டாயம் போய் பாருங்கள்.

வீடியோ இன்னமும் பார்க்கவில்லை. நான் எப்போபோனாலும் போய் பார்க்கும் இடம்.

அருகே சர்வதேச மைதானமும் உண்டு. கோட்டை சுவரில் நின்று போட்டிகளை காணலாம்.

திருகோணமலை, காலி இவை இரெண்டும்தான் கோட்டைக்குள் குடியிருப்புகள், ஒரு சின்ன ஊரே இருக்கும் வகையில் அமைந்த கோட்டைகள் என நினைக்கிறேன்.

2010 இல் டச்சு அரச உதவியுடன் பல கட்டிடங்கள், ஒட்டு மொத்தமான வீதிகள், புராதனம் கெடாமல் பெரும் செலவில் புனரமைக்கப்பட்டன.

Rampart Hotel இல் கடலோர அறையில் நின்றால், அறையில் இருந்தபடியே சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம்.

கொழும்புக்கு சவால் விடும் பல high end மேற்கத்திய உணவங்கள் உள்ளன. Peddlers Inn பரிந்துரைக்க கூடியது. Indian Hut உம் நல்லது.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி போகும் நாளின் கடைசி ரயிலை எடுத்து, கடற்கரை பக்க சீட்டில் அல்லது புட்போர்ட்டில் இடம் பிடித்துக்கொண்டால், மாலை மங்கும் வேளை - தென்மேற்கு இலங்கையின் வனப்பை பருகியபடியே பயணிக்கலாம்.

போகும் போது விரைவுச்சாலை வழி போனால் - சர்வீஸ் செண்டரில் நிறுத்தி ஒரு கட்டு கட்டலாம். சொதி, சம்பல், கிரிபத், அம்பரல்ல தொக்கு, KFC, pizza, burger என வகை வகையாக கிடைக்கும்.

போகும் போது தகவல் தேவைப்படின் கேட்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஆகா இவருக்கு சுகர் வருத்தம் ....சுகர் வருத்தம்.....சுகர் வருத்தம்
எனக்கு இண்டையான் பொழுது ஆகா ஓகோ 🤣🤣

உங்களது ஒரு நாள் வருமானம் எவ்வளவு? - Quora

🤣🤣🤣 இதென்ன…நான் பத்து வருசம் முதல் தனி திரி திறந்து சொன்னதை இப்ப கேட்டு ஷாக் ஆகிறியள்🤣.

#இந்திராகாந்தி செத்துட்டாவா😝

31 minutes ago, தமிழ் சிறி said:

maxresdefault.jpg

கோசான்...  நீங்கள் கந்தர்மடம் போவது என்று தெரிந்திருந்தால்,
ஐந்து கிலோ இடித்த மிளகாய்த்தூளும், மூன்று கிலோ வறுத்த  சிவப்பு அரிசிமாவும்,
இரண்டு கிலோ பாரை கருவாடும் குடுத்து விட சொல்லியிருப்பேனே...
ச்சாய்.... அருமந்த சந்தர்ப்பம் தவறிப் போச்சுது.  அடுத்தமுறை பாப்பம்.

ஓமா…ஓமா…

அடுத்த முறையும் போட்டு வந்துதான் சொல்லுவன்🤣.

இப்பவே புளுகொடியல், கோப்பி, இறால் கருவாடு, மிக்சர், சித்தாலேப, மா, பனங்கட்டி, எள்ளுருண்டை, நைஸ், லெமன்பப், கண்டோஸ் எண்டு ஒரு சரக்கு லொறி மாரித்தான் திரும்பி வந்தது😝.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

வந்த களை ஆறவில்லை அதற்குள் மறுபடியும் ஆவலை தூண்டுகிறீர்களே ஐலண்ட் ஐயா.

அடுத்த முறை கட்டாயம் போய் பாருங்கள்.

வீடியோ இன்னமும் பார்க்கவில்லை. நான் எப்போபோனாலும் போய் பார்க்கும் இடம்.

அருகே சர்வதேச மைதானமும் உண்டு. கோட்டை சுவரில் நின்று போட்டிகளை காணலாம்.

திருகோணமலை, காலி இவை இரெண்டும்தான் கோட்டைக்குள் குடியிருப்புகள், ஒரு சின்ன ஊரே இருக்கும் வகையில் அமைந்த கோட்டைகள் என நினைக்கிறேன்.

2010 இல் டச்சு அரச உதவியுடன் பல கட்டிடங்கள், ஒட்டு மொத்தமான வீதிகள், புராதனம் கெடாமல் பெரும் செலவில் புனரமைக்கப்பட்டன.

Rampart Hotel இல் கடலோர அறையில் நின்றால், அறையில் இருந்தபடியே சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம்.

கொழும்புக்கு சவால் விடும் பல high end மேற்கத்திய உணவங்கள் உள்ளன. Peddlers Inn பரிந்துரைக்க கூடியது. Indian Hut உம் நல்லது.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி போகும் நாளின் கடைசி ரயிலை எடுத்து, கடற்கரை பக்க சீட்டில் அல்லது புட்போர்ட்டில் இடம் பிடித்துக்கொண்டால், மாலை மங்கும் வேளை - தென்மேற்கு இலங்கையின் வனப்பை பருகியபடியே பயணிக்கலாம்.

போகும் போது விரைவுச்சாலை வழி போனால் - சர்வீஸ் செண்டரில் நிறுத்தி ஒரு கட்டு கட்டலாம். சொதி, சம்பல், கிரிபத், அம்பரல்ல தொக்கு, KFC, pizza, burger என வகை வகையாக கிடைக்கும்.

போகும் போது தகவல் தேவைப்படின் கேட்கவும்.

காலி போனால் உனவட்டுன கடற்கரை கட்டாயம்.

ஏஞ்சல் பீச் (விலை கூட), விஜய பீச் (ஒப்பீட்டளவில் குறைய) போன்ற ரிசார்ட்டுகளில் நாள் வாடிக்கையாளராக தங்கி கடற்கரையில் புரளலாம். ரூம் போட தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

maxresdefault.jpg

கோசான்...  நீங்கள் கந்தர்மடம் போவது என்று தெரிந்திருந்தால்,
ஐந்து கிலோ இடித்த மிளகாய்த்தூளும், மூன்று கிலோ வறுத்த  சிவப்பு அரிசிமாவும்,
இரண்டு கிலோ பாரை கருவாடும் குடுத்து விட சொல்லியிருப்பேனே...
ச்சாய்.... அருமந்த சந்தர்ப்பம் தவறிப் போச்சுது.  அடுத்தமுறை பாப்பம்.

5 கிலோகிராம்     என்ன? தனிய மிளகாய்தூள் தான் சாப்பிடுகிறனீர்கள். ?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

5 கிலோகிராம்     என்ன? தனிய மிளகாய்தூள் தான் சாப்பிடுகிறனீர்கள். ?? 🤣

கந்தையா அண்ணை...  ஐந்து  கிலோ  மிளகாய்த்தூளும்  எனக்குத் தனிய இல்லை.
பக்கத்து வீட்டு ஜேர்மன்காரிக்கும், முன்னாலை  வீட்டு துருக்கிக்காரிக்கும் குடுக்கத்தான். 😋
எங்கள் மிளாகாய்த்தூள் வாசம் அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக அடிக்கடி சொல்வார்கள்.  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

5 கிலோகிராம்     என்ன? தனிய மிளகாய்தூள் தான் சாப்பிடுகிறனீர்கள். ?? 🤣

இப்ப விளங்குதே ஆள் ஏன் கொதியன்(ர்) எண்டு🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

வந்த களை ஆறவில்லை அதற்குள் மறுபடியும் ஆவலை தூண்டுகிறீர்களே ஐலண்ட் ஐயா.

அடுத்த முறை கட்டாயம் போய் பாருங்கள்.

வீடியோ இன்னமும் பார்க்கவில்லை. நான் எப்போபோனாலும் போய் பார்க்கும் இடம்.

அருகே சர்வதேச மைதானமும் உண்டு. கோட்டை சுவரில் நின்று போட்டிகளை காணலாம்.

திருகோணமலை, காலி இவை இரெண்டும்தான் கோட்டைக்குள் குடியிருப்புகள், ஒரு சின்ன ஊரே இருக்கும் வகையில் அமைந்த கோட்டைகள் என நினைக்கிறேன்.

2010 இல் டச்சு அரச உதவியுடன் பல கட்டிடங்கள், ஒட்டு மொத்தமான வீதிகள், புராதனம் கெடாமல் பெரும் செலவில் புனரமைக்கப்பட்டன.

Rampart Hotel இல் கடலோர அறையில் நின்றால், அறையில் இருந்தபடியே சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம்.

கொழும்புக்கு சவால் விடும் பல high end மேற்கத்திய உணவங்கள் உள்ளன. Peddlers Inn பரிந்துரைக்க கூடியது. Indian Hut உம் நல்லது.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி போகும் நாளின் கடைசி ரயிலை எடுத்து, கடற்கரை பக்க சீட்டில் அல்லது புட்போர்ட்டில் இடம் பிடித்துக்கொண்டால், மாலை மங்கும் வேளை - தென்மேற்கு இலங்கையின் வனப்பை பருகியபடியே பயணிக்கலாம்.

போகும் போது விரைவுச்சாலை வழி போனால் - சர்வீஸ் செண்டரில் நிறுத்தி ஒரு கட்டு கட்டலாம். சொதி, சம்பல், கிரிபத், அம்பரல்ல தொக்கு, KFC, pizza, burger என வகை வகையாக கிடைக்கும்.

போகும் போது தகவல் தேவைப்படின் கேட்கவும்.

பதிலுக்கு நன்றி கோஷான். நீங்கள் இலங்கையின் பல இடங்களுக்கு ஏற்கனவே சுற்றுலா சென்றிருப்பதால் மேலும் பல தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். 

இது போன்ற பயண வீடியோக்களை இணைத்து உங்கள் பயணக்கட்டுரையின் முக்கியத்துவத்தை குறைக்கின்றேனோ என்று தயங்கி தயங்கியே இதனை  இணைத்தேன். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளூவீர்களோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால்,   உங்கள் நேர்மறையான  பதில் கண்டு திருப்தியடைந்தேன். நன்றி கோஷான். 

இலங்கை முழுவதற்குமான  பயண தகவல்கள் அடங்கிய பல வீடியோக்கள் இந்த இளம் தம்பதியினரின் யூருயூப் தளத்தில் உள்ளன.  நான் அறிந்த வரை இலங்கையில் இயங்கும் யூருயூப் தளங்களில் மிக தரமான தளம் இவருடையது.  சுற்றுலா பிரதேசங்களின் தகவல்களை துல்லியமாக முன்பே திரட்டி தேவையற்ற அலட்டல்களை தவிர்தது சிறந்த மொழி நடையில் இவர்கள் தரும் பாணி மிகச் சிறப்பானது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

இது போன்ற பயண வீடியோக்களை இணைத்து உங்கள் பயணக்கட்டுரையின் முக்கியத்துவத்தை குறைக்கின்றேனோ என்று தயங்கி தயங்கியே இதனை  இணைத்தேன். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளூவீர்களோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால்,   உங்கள் நேர்மறையான  பதில் கண்டு திருப்தியடைந்தேன். நன்றி கோஷான். 

உங்கள் இணைப்புக்கள் திரியை சுவாரசியமாக்குவதோடு இல்லாமல் - நான் எழுதாமல் விட்ட அனுபவங்கள் சிலதை எழுதவும் ஊக்கியாக அமைகிறது.

ஆகவே நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அதே போல்தான் ஏனையோர் வைத்த கருத்துக்கள், கேட்ட குறுக்கு கேள்விகள், சவால்கள், நக்கல்கள் கூட.

யாழுக்கு மீள, மீள வருவதும், எழுதுவதும் இந்த உறவுக்காகவே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் I

காங்கேசந்துறை கடற்கரை, கலங்கரை விளக்கு

படம் 1 - நுழைவு வாயில்.

2- நடைபயிலும் பாதை (இராணுவ பயிற்ச்சியும் நடக்கும் அடையாளங்களுடன்).

3 - முழுக் கடற்கரையின் தோற்றம். தொலைவில் மக்கள் காணியில் நேவி நடத்தும் தல செவன ரிசார்ட்.

4 - இன்னும் அடைப்புக்குள் இருக்கும் காங்கேசந்துறை கலங்கரைவிளக்கு.

5 - பாவனையில் இல்லாத, உடைந்த நிலையில் உள்ள காங்கேசந்துறை இறங்குதுறை (ஜெட்டி).  

large.IMG_5904.jpeg.e7f5fb6bb28803e4506bd0664c9be7db.jpeglarge.IMG_5941.jpeg.e86ef127e3e66918d311016c6ca54bc4.jpeglarge.IMG_5943.jpeg.9e10ab13a19b4c879318df0a4ad75309.jpeglarge.IMG_5951.jpeg.0a6e2f02a7e0d774d42dadfada87a782.jpeglarge.IMG_5923.jpeg.43abf3ffd3156783ceed8081cfbfa0fd.jpeg

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

maxresdefault.jpg

கோசான்...  நீங்கள் கந்தர்மடம் போவது என்று தெரிந்திருந்தால்,
ஐந்து கிலோ இடித்த மிளகாய்த்தூளும், மூன்று கிலோ வறுத்த  சிவப்பு அரிசிமாவும்,
இரண்டு கிலோ பாரை கருவாடும் குடுத்து விட சொல்லியிருப்பேனே...
ச்சாய்.... அருமந்த சந்தர்ப்பம் தவறிப் போச்சுது.  அடுத்தமுறை பாப்பம்.

போது மா சிறியண்ண..😆இவ்வளவுக்குமே ஒரு லக்கேஜ் வேணுமே..என்ன பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டு நோமாக்களுக்களுக்கும் குடுத்து சாப்பிடப்போறீங்களா....✍️😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

போது மா சிறியண்ண..😆இவ்வளவுக்குமே ஒரு லக்கேஜ் வேணுமே..என்ன பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டு நோமாக்களுக்களுக்கும் குடுத்து சாப்பிடப்போறீங்களா....✍️😀

யாழினி….  கோசான் தானே லக்கேஜை தூக்கிக் கொண்டு வாறது. 😂
அதாலை எனக்கு பிரச்சினை இல்லை. பக்கத்து வீட்டுக்காரியிடமும் நல்ல பெயர் எடுக்கலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

யாழினி….  கோசான் தானே லக்கேஜை தூக்கிக் கொண்டு வாறது. 😂
அதாலை எனக்கு பிரச்சினை இல்லை. பக்கத்து வீட்டுக்காரியிடமும் நல்ல பெயர் எடுக்கலாம். 🤣

இன்னும் யாழுக்குள் இப்படி ஒருவரும் வரவில்லை என்று நினைக்கிறன்....ஆ..ஆ.😆

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

யாழினி….  கோசான் தானே லக்கேஜை தூக்கிக் கொண்டு வாறது. 😂
அதாலை எனக்கு பிரச்சினை இல்லை. பக்கத்து வீட்டுக்காரியிடமும் நல்ல பெயர் எடுக்கலாம். 🤣

நாங்க வீட்டுக்காறியை  தவிர  எல்லா 

பக்கத்து வீட்டுக்காரியிடமும்  நல்ல  பெயர் எடுப்பது  தானே  இலட்சியமே...

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

நாங்க வீட்டுக்காறியை  தவிர  எல்லா 

பக்கத்து வீட்டுக்காரியிடமும்  நல்ல  பெயர் எடுப்பது  தானே  இலட்சியமே...

ஹ…. ஹா…. ஹா…. சரியாய் சொன்னியள். 😁 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

 வீட்டுக்காறியை 

பக்கத்து வீட்டுக்காரியிடமும்  

ற…ர..

றா…ரா….

லக்கலக்கலக்கலக்கலக்கலக்கலக்க
தாம்-தரிகிட தீம்-தரிகிட
தோம்-தரிகிட நம்-தரிகிட…🤣
ஏ.. பந்தமோ..
இதி ஏ.. பந்தமோ..
ஏ.. ஜன்ம
பந்தால
சும கந்தமோ..
🤣🤣🤣

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் பார் பாடம் படி

நான் கண்டு வந்து சொன்னதை கோஷான் முதலைகளோடு கும்மாளம் அடித்து விட்டு, பாண் இல்லாவிட்டில் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொல்கிறார் என கூறியவர்கள் கவனத்துக்கு.

மேலே நீர்கொழும்பு, மாத்தறை பகுதிகளில், சிஙக்ளவர்களால் நடத்தப்படும் துணிக்கடைகளில் இன்று பொருட்கள் வாங்கி விட்டு, காசு கட்ட காத்து நின்ற கூட்டம்.

இவர்கள் வெளிநாட்டு காசில் வாழும் தமிழர்கள் அல்ல, பெருநாளுக்கு உடுப்பு எடுக்கும் முஸ்லிம்களும் அல்ல. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு உடுப்பு எடுக்கும் சராசரி, சிறு நகர்ப்புற சிங்கள மக்கள்.

மாத்தறையில் காசு கட்டி முடிக்க ஒரு மணத்தியாலம் ஆகியது என ஒருவர் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கோஷான் முதலைகளோடு கும்மாளம் அடித்து விட்டு, பாண் இல்லாவிட்டில் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொல்கிறார் என கூறியவர்கள் கவனத்துக்கு.

9 hours ago, goshan_che said:

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு உடுப்பு எடுக்கும் சராசரி, சிறு நகர்ப்புற சிங்கள மக்கள்.

வருடத்தில் ஒருநாள் உடுப்பு எடுப்பவர்களை உங்களுடன் ஒப்பிட்டு நீங்கள் எங்கோ போய் விடடீர்கள் தலைவா! உங்களுக்கு ஒவ்வொருநாளும் புத்தாண்டு, கொண்டாட்டம். அவர்களுக்கு வருடத்தில் ஒருநாள்... புத்தாண்டு! அதற்காக வருடம் முழுவதும் காத்திருந்து, வந்து கால் கடுக்க நிக்கிறார்கள். அதை படம் பிடித்து போட்டு உங்களை நிஞாயப்படுத்துகிறீங்களோ எண்டொரு சந்தேகம் எனக்குண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

 ஐந்து  கிலோ  மிளகாய்த்தூளும்  எனக்குத் தனிய இல்லை.
பக்கத்து வீட்டு ஜேர்மன்காரிக்கும், முன்னாலை  வீட்டு துருக்கிக்காரிக்கும் குடுக்கத்தான். 😋

 இது, வீட்டுக்காரிக்கு தெரியுமோ? இல்ல..... வீட்டுக்கும் இல்லாம, பக்கத்துக்கு வீட்டுக்கும் இல்லாம மிளகாய்த்தூள் குப்பையிலே போய் விழுந்திடுமோ என பயமாய் இருக்கு. பிறகு, சுமந்து கொண்டு வந்து கொடுக்கிறவைக்கும் மிளகாய்த்தூளால் அர்ச்சனை நடக்கலாம். சீ சீ ...... சிறியர் மருத்துவமையிலேயே ரொம்ப நல்ல பிள்ளையாய் கண்ணை மூடிக்கொண்டு இருந்த ஆளாச்சே!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

படம் பார் பாடம் படி

நான் கண்டு வந்து சொன்னதை கோஷான் முதலைகளோடு கும்மாளம் அடித்து விட்டு, பாண் இல்லாவிட்டில் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொல்கிறார் என கூறியவர்கள் கவனத்துக்கு.

மேலே நீர்கொழும்பு, மாத்தறை பகுதிகளில், சிஙக்ளவர்களால் நடத்தப்படும் துணிக்கடைகளில் இன்று பொருட்கள் வாங்கி விட்டு, காசு கட்ட காத்து நின்ற கூட்டம்.

இவர்கள் வெளிநாட்டு காசில் வாழும் தமிழர்கள் அல்ல, பெருநாளுக்கு உடுப்பு எடுக்கும் முஸ்லிம்களும் அல்ல. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு உடுப்பு எடுக்கும் சராசரி, சிறு நகர்ப்புற சிங்கள மக்கள்.

மாத்தறையில் காசு கட்டி முடிக்க ஒரு மணத்தியாலம் ஆகியது என ஒருவர் கூறியுள்ளார்.

இந்த திரியினை குறைந்தது 10 பக்கங்களாவது கொண்டு செல்லவேண்டும் எனும் உங்கள் முயற்சி புரிகிறது😁, ஆனால் வாய்ப்பில்லை !

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர்! இந்த தலைப்பை பார்த்ததும் ஒன்று ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது.முந்தா நாள் ஒரு செய்தி வந்தது. இந்த வார்த்தையை முன்பு சொல்லி அனுப்பிய புள்ளி ஒன்று அடுத்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்தி ஒன்று வந்தது. தான் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாராம் ஆனால் மக்கள் ஆணை கொடுக்க வில்லையாம், அதனால் விலக இருக்கிறாராம். விலக இருப்பவர் ஏன் தேர்தல் வரை  காத்திருக்க வேண்டும்? சட்டுப்புட்டென்று விலக வேண்டியானே. என்னடா.... எனக்கு வாக்களித்தால் தமிழருக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பேன் என்று கண்ட இடமெல்லாம்  புலம்புகிறவர் என்று  யோசித்தேன், கருணாநிதி மாதிரி நான் தேர்தலில் பங்கெடுப்பது இதுதான் கடைசி முறை என்று கூறி மக்களிடம் அனுதாப வாக்கு சேகரிக்கிற தந்திரம் என்று   பிறகு வந்து பாத்தா விளங்கிச்சு. அந்த செய்தி வாபசோ தெரியவில்லை, செய்தியை காண முடியவில்லை. 

2 hours ago, vasee said:

இந்த திரியினை குறைந்தது 10 பக்கங்களாவது கொண்டு செல்லவேண்டும் எனும் உங்கள் முயற்சி புரிகிறது😁, ஆனால் வாய்ப்பில்லை !

நீங்களெல்லாம் வாசிக்க காத்திருக்கும்  போது அதுக்கு மேல போனாலும் பரவாயில்லை. உங்களை ஏமாற்ற வேண்டாமேயென்று நீண்டு கொண்டே செல்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

சிறியர்! இந்த தலைப்பை பார்த்ததும் ஒன்று ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது.முந்தா நாள் ஒரு செய்தி வந்தது. இந்த வார்த்தையை முன்பு சொல்லி அனுப்பிய புள்ளி ஒன்று அடுத்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்தி ஒன்று வந்தது. தான் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாராம் ஆனால் மக்கள் ஆணை கொடுக்க வில்லையாம், அதனால் விலக இருக்கிறாராம். விலக இருப்பவர் ஏன் தேர்தல் வரை  காத்திருக்க வேண்டும்? சட்டுப்புட்டென்று விலக வேண்டியானே. என்னடா.... எனக்கு வாக்களித்தால் தமிழருக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பேன் என்று கண்ட இடமெல்லாம்  புலம்புகிறவர் என்று  யோசித்தேன், கருணாநிதி மாதிரி நான் தேர்தலில் பங்கெடுப்பது இதுதான் கடைசி முறை என்று கூறி மக்களிடம் அனுதாப வாக்கு சேகரிக்கிற தந்திரம் என்று   பிறகு வந்து பாத்தா விளங்கிச்சு. அந்த செய்தி வாபசோ தெரியவில்லை, செய்தியை காண முடியவில்லை. 

நீங்களெல்லாம் வாசிக்க காத்திருக்கும்  போது அதுக்கு மேல போனாலும் பரவாயில்லை. உங்களை ஏமாற்ற வேண்டாமேயென்று நீண்டு கொண்டே செல்கிறது. 

சாத்தான்... நீங்கள் டக்ளஸ் தேவானந்தாவை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன்.
எல்லா அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை இளித்தவாயர்கள் என நினைத்து 
சகட்டு மேனிக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர் சொன்ன காரணத்தில் ஒன்று... தனக்கு வயது போய் கொண்டிருப்பதால்,
அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகின்றாராம்.

இளமையாக இருந்தால்... இன்னும் அறுத்து தள்ளியிருப்பார் போலை இருக்கு. 😂

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.