Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
JAFFNA-NEWS.jpg

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது.

இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார்.

https://thinakkural.lk/article/299654

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

மத்திய கல்லூரிப் பழைய மாணவர். இறுதிக் காலத்தில் இணக்க அரசியல் செய்யும் ஒரு அணியில் இருந்தார் எனவும் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அஞ்சலிகள்.

மத்திய கல்லூரிப் பழைய மாணவர். இறுதிக் காலத்தில் இணக்க அரசியல் செய்யும் ஒரு அணியில் இருந்தார் எனவும் அறிந்தேன்.

ஆம், நீண்ட காலமாக தமிழ் ஆதரவு அமைப்புகளுடன் சேர்த்து இயங்கிக்கொண்டு இருந்தார், இங்கு 2009 இல் நடந்த ஊர்வலங்ககளிலும் முன்னணியில் நின்று நடாத்தியவர். 2014-15 களில் என்று நினைக்கிறேன், மனம் மாறி, இப்படியே இருக்க முடியாது , இறப்பதுக்கு முன் அங்கு ஏதாவது செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு, அங்கு போய்விட்டார். சுவாசப்பையில் கேன்சர் என்று கேள்விப்பட்டேன் 

 

உயரம் பாய்தலில் ஆசிய அளவிலான இவரது சாதனை,  எமது ஏதோவொரு பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது ஞாபகம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?.

அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்

இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 

தமிழ் மொழி மூலமான இலத்திரணியல் கல்வியின் தந்தையும் , 

தாயகத்தில் இன்றைய பல்வேறு இலத்திரணவியல் கல்வி முறைக்கும் வித்திட்ட கல்வி களஞ்சியம் 
Dr. எதிர் என எல்லோராலும் மிக அன்பாக அழைக்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் எதிர் வீரசிங்கம் அவர்கள்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா.

அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஏதோ ஒரு பாடப்புத்தகத்தில் இவரின் பெயரும், டங்கன் வைற்றின் பயரும் ஒலிம்பிக்வீரர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6378.jpeg.229aac001412f60b9907

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2024 at 01:30, goshan_che said:

ஆழ்ந்த அஞ்சலிகள்.

மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா.

அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும். 

 

அப்படியே உன்காப்பா#

 யார் என்று சொன்னால் நல்லது ஏனென்றால் ரெம்ப பெண்ணையன் ஆகுவது எனக்கு பிடிக்காது .0

நீங்கள் உண்மையான ஆன் என்றால் நேரில் படம் போட்டு வர முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

அப்படியே உன்காப்பா#

 யார் என்று சொன்னால் நல்லது ஏனென்றால் ரெம்ப பெண்ணையன் ஆகுவது எனக்கு பிடிக்காது .0

 

இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை.

நான் யாரையும் எதுவும் ஆக்குவதுமில்லை. என்னை யாரும் எதுவும் ஆக்க முடியும் என நம்பவும் இல்லை.

19 minutes ago, பெருமாள் said:

நீங்கள் உண்மையான ஆன் என்றால் நேரில் படம் போட்டு வர முடியுமா ?

நான் பலமுறை சொல்லிவிட்டேன். நான் நீங்கள் நினைக்கும் நபர் இல்லை.

எனக்கு நீங்கள் வைத்துள்ள உத்தேச வயது கூட மிகவும் அதிகம்.

ஆனால் என்னை அடையாளத்தை வெளிகொணர்வதில் இப்போதைக்கு எனக்கு உடன்பாடில்லை.

நான் யார் என சொல்லி விட்டால் பிறகு நினைத்ததை எழுத முடியாது.

அது தேவையும் இல்லாதது. 

அதேபோல் என் தந்தை யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர், ஹாஸ்டலில் தங்கி படித்தார். அவருக்கும் ஏனையோருக்கும் முள்ளு கரண்டியால் சாப்பிடும் முறை, எந்த கரண்டியை எப்படி, எந்த நேரத்தில் பாவிக்க வேண்டும் என்பதை, டைகட்டும் விதத்தை, சூ பாலிஷ் அடிப்பது, நேரம் தவறாமை இப்படி பலதை அதிபர் ஸ்மித் சொல்லி கொடுத்தார் என்பது பற்றி எல்லாம் முன்பே யாழில் எழுதியுமுள்ளேன் என நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.