Jump to content

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு

20 May, 2024 | 10:52 AM
image

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

441064051_1560368327856441_2518658397608

441010377_763001795649237_57627958426549

440904631_1125192872085382_6502087550577

https://www.virakesari.lk/article/184010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடும் துருக்கி – தெரிவித்துள்ள முக்கிய தகவல் என்ன?

20 MAY, 2024 | 06:42 AM
image
 
விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரின் சிதைவு என கருதப்படுவதிலிருந்து வெளிவரும் வெப்பத்தை தனது ஆளில்லா விமானங்கள் கண்டுபிடித்துள்ளன என துருக்கி தெரிவித்துள்ளது.

ஈரானில் மீட்பு பணிகளிற்கு துருக்கி பயன்படுத்தி வரும் அகின்சி ஆளில்லா விமானம் விபத்தில் சிக்கிய ஹெலிக்கொப்டரின் சிதைவிலிருந்து வெளியாகும் வெப்பத்தை கண்டுபிடித்துள்ளது என கருதுவதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இந்த விபரங்களை துருக்கி ஈரானுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. துருக்கியின் ஆளில்லா விமானங்கள்  ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் காணப்படுவதாக தெரிவித்துள்ள பகுதிக்கு ஈரான் தனது மீட்பு பணியாளர்களை அனுப்பியுள்ளது.

https://www.virakesari.lk/article/183998

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2269047-mohammadmokhber.webp?resize=750,

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் தெரிவு!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்  உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் துணை ஜனாதிபதியான மொஹமட் முக்பர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1383096

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிகொப்டர் விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதியின் சடலம் மீட்பு!

Ebrahim Raisi Death: First Visuals Emerge From Crash Site, Rescuers  Retrieve Bodies From Charred Helicopter - News18

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரின் மலைப்பகுதியில் இருந்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஈரானின் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் ஒப்புதலின் அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தெரிவு செய்ய வேண்டும்.

அதன்படி எதிர்வரும் 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/302067

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தாக இருக்கலாம். அப்படியில்லா விட்டாலும் கூட ஈரான் வெளிப்படுத்தப் போவதில்லை- கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு என்பதால்!

ஆனால், சில ஆச்சரியம் தரும் விடயங்கள் இருக்கின்றன.

ஈரானிடம் ஆயுதங்களும், நிதியும் பெறும் ஹௌதிகள் பளபளக்கும்  உலங்கு வானூர்திகள் வைத்திருக்கிறார்கள், ஒரு வீடியோவில் கொமாண்டோக்கள் போல வந்து ஒரு கப்பலைக் கைப்பற்றுகிறார்கள். ஆனால், ஈரான் 50 வருடப் பழைய உலங்குவானூர்தியை அதன் இரண்டாம் நிலைத் தலைவர் பயணம் செய்யப் பாவிக்கிறது.

இன்னொரு பக்கம், ஈரானின் உள்ளூர் தொழில்நுட்பத்தில் உருவான சாஹிட் ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவுக்கு தானமாக வழங்கப் படுகிறது. அந்த தொழில் நுட்பத்தின் ஒரு துளியை எடுத்து பழைய பெல் வானூர்தியை retrofit செய்ய ஈரானால் முடியவில்லை.

அதிசயமான விடயங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

ஆனால், ஈரான் 50 வருடப் பழைய உலங்குவானூர்தியை அதன் இரண்டாம் நிலைத் தலைவர் பயணம் செய்யப் பாவிக்கிறது.

Old is gold.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

விபத்தாக இருக்கலாம். அப்படியில்லா விட்டாலும் கூட ஈரான் வெளிப்படுத்தப் போவதில்லை- கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு என்பதால்!

ஆனால், சில ஆச்சரியம் தரும் விடயங்கள் இருக்கின்றன.

ஈரானிடம் ஆயுதங்களும், நிதியும் பெறும் ஹௌதிகள் பளபளக்கும்  உலங்கு வானூர்திகள் வைத்திருக்கிறார்கள், ஒரு வீடியோவில் கொமாண்டோக்கள் போல வந்து ஒரு கப்பலைக் கைப்பற்றுகிறார்கள். ஆனால், ஈரான் 50 வருடப் பழைய உலங்குவானூர்தியை அதன் இரண்டாம் நிலைத் தலைவர் பயணம் செய்யப் பாவிக்கிறது.

இன்னொரு பக்கம், ஈரானின் உள்ளூர் தொழில்நுட்பத்தில் உருவான சாஹிட் ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவுக்கு தானமாக வழங்கப் படுகிறது. அந்த தொழில் நுட்பத்தின் ஒரு துளியை எடுத்து பழைய பெல் வானூர்தியை retrofit செய்ய ஈரானால் முடியவில்லை.

அதிசயமான விடயங்கள்!

அமெரிக்கா ஈரானின் மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடையே இந்த பெல் ரக ஹெலிகாப்டர்களை சரியாக புதுப்பிக்க முடியாமைக்கு காரணம் என்றும் சொல்கின்றனர்.

சென்ற மூன்று ஹெலிகாப்டர்களில் இரண்டு பாதுக்காப்பாக திரும்பி வந்திருக்கின்றன. ஆனால் அவைக்கு முன்னால் போன முக்கியமான இந்த ஹெலிகாப்டர் இடையில் காணாமல் போனது தெரியவில்லை. தொடர்பாடல்களிலும் ஒரு தொழில்நுட்ப பிரச்சனை அங்கிருக்கின்றது போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஈரானில்..முதல்தர தலைவரின் கொள்கையில்தான் ஆட்சி நடக்கும்...இரண்டாமவர் பிறழ்வு ஏற்படுத்தின்...அவர் பிணமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது..

Edited by alvayan
Link to comment
Share on other sites

28 minutes ago, ரசோதரன் said:

சென்ற மூன்று ஹெலிகாப்டர்களில் இரண்டு பாதுக்காப்பாக திரும்பி வந்திருக்கின்றன. ஆனால் அவைக்கு முன்னால் போன முக்கியமான இந்த ஹெலிகாப்டர் இடையில் காணாமல் போனது தெரியவில்லை. தொடர்பாடல்களிலும் ஒரு தொழில்நுட்ப பிரச்சனை அங்கிருக்கின்றது போல. 

தொடர்பாடல் சாதனங்களை / தொழினுட்ப த்தை இஸ்ரேல் அல்லது CIA போன்ற உளவு அமைப்புகள் Hack செய்து ஆபத்தான வழிமுறைகளை வழங்கி இருக்கலாம்.

எதிர்காலத்தில் சாரதி இல்லாமல் தானியஙகும் கார்களிற்கு கூட இப்படியான ஆபத்துகள் ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

தொடர்பாடல் சாதனங்களை / தொழினுட்ப த்தை இஸ்ரேல் அல்லது CIA போன்ற உளவு அமைப்புகள் Hack செய்து ஆபத்தான வழிமுறைகளை வழங்கி இருக்கலாம்.

எதிர்காலத்தில் சாரதி இல்லாமல் தானியஙகும் கார்களிற்கு கூட இப்படியான ஆபத்துகள் ஏற்படும்.

அப்படியும் நடந்தும் இருக்கலாம்.......👍

இவர் தான் அடுத்த 'சுப்ரீம் லீடர்' என்று கருதப்பட்டவர் என்றும், மிகவும் தீவிரமானவர், இரக்கமற்றவர் என்றும் சில ஆங்கில ஊடகங்களில் இருக்கின்றது.  

Link to comment
Share on other sites

5 minutes ago, ரசோதரன் said:

.....👍வர் தான் அடுத்த 'சுப்ரீம் லீடர்' என்று கருதப்பட்டவர் என்றும், மிகவும் தீவிரமானவர், இரக்கமற்றவர் என்றும் சில ஆங்கில ஊடகங்களில் இருக்கின்றது.  

Butcher of Tehran என்று அழைக்கபட்டவர். 98 இல் 5000 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை  கொன்று குவித்தமையால் இப் பெயர் வந்தது.

ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளில் இருந்து கொடூரச் சிறை வரைக்கும் தண்டனையாக கொடுக்கும் நடைமுறையை உருவாக்கியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிவரை அமெரிக்காவிண்ட 60 வருசம் பழமையான உலங்கு வானூர்தியைத் தான் நம்பியிருந்தவையெண்டால் பாருங்கோவன் இவையண்டையும் இவையிண்ட கூட்டுக்களினதும் தொழிநுட்பங்களின் திறைமையை. 

வாழ்த்துக்கள் இஸ்ரேல், இஸ்ரேலை தொட்டால் மரண அடிதான் கிடைக்கும். இதைப் பார்த்தாவது புட்டின் திருந்தவேணும். இல்லாட்டி ரைசியிண்ட 72 கன்னிகைகளோட கெதியில பங்குபோடவேண்டியிருக்கும்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தொடர்பாடல் சாதனங்களை / தொழினுட்ப த்தை இஸ்ரேல் அல்லது CIA போன்ற உளவு அமைப்புகள் Hack செய்து ஆபத்தான வழிமுறைகளை வழங்கி இருக்கலாம்.

எதிர்காலத்தில் சாரதி இல்லாமல் தானியஙகும் கார்களிற்கு கூட இப்படியான ஆபத்துகள் ஏற்படும்.

துருக்கி தற்போது வெளியிட்டுள்ள தகவலின் படி, உலங்கு வானூர்தியைக் கண்டு பிடிக்க உதவும் signaling கருவி (transponder?) செயலில்லாமல் இருந்திருக்கிறது அல்லது அந்த ஏற்பாடே இல்லாமல் இருந்திருக்கிறது. ஆனால், ஈரான் துருக்கியைத் தொடர்பு கொண்டு "உலங்கு வானூர்தியின் சிக்னலைத் தேடித் தருமாறு" கேட்டிருக்கிறது.

இதைப் பார்க்கையில், ஏதோ கோல்மால் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது😎!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாலி said:

கடைசிவரை அமெரிக்காவிண்ட 60 வருசம் பழமையான உலங்கு வானூர்தியைத் தான் நம்பியிருந்தவையெண்டால் பாருங்கோவன் இவையண்டையும் இவையிண்ட கூட்டுக்களினதும் தொழிநுட்பங்களின் திறைமையை. 

வாழ்த்துக்கள் இஸ்ரேல், இஸ்ரேலை தொட்டால் மரண அடிதான் கிடைக்கும். இதைப் பார்த்தாவது புட்டின் திருந்தவேணும். இல்லாட்டி ரைசியிண்ட 72 கன்னிகைகளோட கெதியில பங்குபோடவேண்டியிருக்கும்!😂

நீங்க‌ள் நேற்று சொன்ன‌து போல் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு மொசாட் தான் கார‌ண‌ம் என்று ஈரான் ஊட‌க‌ங்க‌ள் தொட்டு இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளில் செய்தி க‌சியுது😒............................................

Link to comment
Share on other sites

இவர் அண்மையில் இலங்கைத்திருநாட்டுக்கும் சென்று, பத்திரமாக நாடு திரும்பி இருந்தவர்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தி said:

இவர் அண்மையில் இலங்கைத்திருநாட்டுக்கும் சென்று, பத்திரமாக நாடு திரும்பி இருந்தவர்தானே. 

இந்த  நேரத்தில் இப்படியும் ஒரு செய்தி வந்தது...ரைசியின் பிளேன் கட்டுநாயக்காவில் இறங்க 10 நிமிடம் முன் ..இஸ்ரேலின் பிளேன் ஒன்று இறங்கி உடன் புறப்பட்டுச் சென்றதாம்...எவ்வளவுகாலமாக பின் தொடர்ந்தார்களோ தெரியாது..இறுதியில் இஸ்ரேலின் பெரியண்ணன் கெலியில் புறப்பட்டது..வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்ததுபோல் ...வாய்ப்பாகிவிட்டது...இஸ்ரேலுக்கு..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நந்தி said:

இவர் அண்மையில் இலங்கைத்திருநாட்டுக்கும் சென்று, பத்திரமாக நாடு திரும்பி இருந்தவர்தானே. 

13 minutes ago, alvayan said:

இந்த  நேரத்தில் இப்படியும் ஒரு செய்தி வந்தது...ரைசியின் பிளேன் கட்டுநாயக்காவில் இறங்க 10 நிமிடம் முன் ..இஸ்ரேலின் பிளேன் ஒன்று இறங்கி உடன் புறப்பட்டுச் சென்றதாம்...எவ்வளவுகாலமாக பின் தொடர்ந்தார்களோ தெரியாது..இறுதியில் இஸ்ரேலின் பெரியண்ணன் கெலியில் புறப்பட்டது..வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்ததுபோல் ...வாய்ப்பாகிவிட்டது...இஸ்ரேலுக்கு..

ஓம் அங்கு சென்று ப‌த்திர‌மாய் நாடு திரும்பினார் இல‌ங்கையில் வைச்சு இவ‌ருக்கு ஏதும் ந‌ட‌ந்து இருந்தால் பழி இஸ்ரேல் மீது போட‌ ப‌ட்டு இருக்கும் அத‌னால் அங்கு பாதுகாப்பாய் போய் வ‌ந்தார்.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரயோடு தொடர்புடைய செய்தியானதால் இணைத்துள்ளேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nochchi said:

திரயோடு தொடர்புடைய செய்தியானதால் இணைத்துள்ளேன்.

நன்றி

யார் விட்டாலும் இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் விட்ட‌ பாடில்லை...................இவ‌ர் மோடிக்கு ம‌ற்றும் புட்டினுக்கு மிக‌வும் பிடிச்ச‌ அதிப‌ர் ம‌றைமுக‌மாய் இவ‌ர்க‌ளுக்குள் இருக்கும் ந‌ல்ல‌ ந‌ட்பை ரிவிட்ட‌ர் மூல‌ம் புட்டினின் அறிக்கை மூல‌ம் தெரிந்து கொள்ள‌ முடியுது...............................

Link to comment
Share on other sites

2 hours ago, alvayan said:
2 hours ago, நந்தி said:

இந்த  நேரத்தில் இப்படியும் ஒரு செய்தி வந்தது...ரைசியின் பிளேன் கட்டுநாயக்காவில் இறங்க 10 நிமிடம் முன் ..இஸ்ரேலின் பிளேன் ஒன்று இறங்கி உடன் புறப்பட்டுச் சென்றதாம்...எவ்வளவுகாலமாக பின் தொடர்ந்தார்களோ தெரியாது..இறுதியில் இஸ்ரேலின் பெரியண்ணன் கெலியில் புறப்பட்டது..வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்ததுபோல் ...வாய்ப்பாகிவிட்டது...இஸ்ரேலுக்கு..

2 hours ago, வீரப் பையன்26 said:

ஓம் அங்கு சென்று ப‌த்திர‌மாய் நாடு திரும்பினார் இல‌ங்கையில் வைச்சு இவ‌ருக்கு ஏதும் ந‌ட‌ந்து இருந்தால் பழி இஸ்ரேல் மீது போட‌ ப‌ட்டு இருக்கும் அத‌னால் அங்கு பாதுகாப்பாய் போய் வ‌ந்தார்.........................................

அணில் ஒரு நரி என்று அப்போதே சொன்னவர்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெதர் பிழை ..கடும் குளிர்.. பனி என்று கதைவிடுகினம்.. உள்ளிருந்த இமாம் ஒரு மணித்தியாலம் சனாதிபதி செயலக அதிகாரியுடன் கதைத்ததாகவும் கரடி விடுகினம்...இங்கை என்னடாவென்றால்..சமர் ஜக்கட்டும் ..வேலை கிளவுசும் போட்டு கூலா நிக்கினம்....என்னப்ப நடக்குது ஈரானிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, நந்தி said:

அணில் ஒரு நரி என்று அப்போதே சொன்னவர்கள். 

ஆம் ர‌னிலுட‌ன் கைகுலுக்கின‌ ஆட்க‌ள் இந்த‌ உல‌கில் நீண்ட‌ கால‌ம் வாழ்ந்ததாய் ச‌ரித்திர‌ம் கிடையாது அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா

அத‌ற்க்கு பிற‌க்கு த‌மிழ் செல்வ‌ன் அண்ணா இப்ப‌டி ப‌ட்டிய‌ல் நீலம்

இப்ப‌போது ஈரான் அதிபர்..........................இனி யாரும் குள்ள‌ ந‌ரி ர‌னிலுக்கு கை கொடுத்தால் அவையின்   கைக்கு அவையே மூன்று த‌ர‌ம் துப்ப‌னும்...............................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தி said:

இவர் அண்மையில் இலங்கைத்திருநாட்டுக்கும் சென்று, பத்திரமாக நாடு திரும்பி இருந்தவர்தானே. 

இலங்கை முஸ்லிம்கள், புலம் பெயர்ந்த  ஈழதமிழர்கள் . சிங்கலவர்களின் போராதரவு அவரை பத்திரமாக காத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மகளே மாஷா அமீனி,

பெண்களின் பிறப்புறுப்பில் தன் கெளரவத்தை மறைத்து வைத்த இன்னொரு பேடி இறந்து விட்டான்.

உன் குரல்வளையை நெரித்த ஆணாதிக்க கரம் ஒன்று, இன்று ஏதோ ஒரு மலை இடுக்கில் அநாதையாய் தொங்கி கொண்டிருக்கிறதாம்.

உன் முடியை மொக்காடு போட்டு மறைக்க துடித்த மிருகம் ஒன்று, தன் அடித் துணியும் அகன்று அம்மணமாய் கிடந்ததாம் அதே மலை சரிவில்.

உன் உடலை வைத்து அரசியல் செய்தவரை, இன்று உரப் பையில் கூட்டி அள்ளுகிறார்களாம்.

சாவின் விளிம்பில் நீ சந்தித்த கொடுமைகளை, வானூர்தி வட்டம் கிறுக்கிய கணத்தில் அவர்கள் நினைத்திருப்பார்கள்.

இருபத்தினான்கு மணிதாண்டி, ஈ ஊர்ந்து நாறிப்போன உடல்கள், துண்டமாய் சிதறி தூவப்பட்ட சதைகள்….

தீர்ப்பு நாள் அன்று நீ அப்படியே மீள்வாய் மகளே!

ஆனால் இவர்கள்?

தெய்வம் அன்றே கொல்லும்.

Edited by goshan_che
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லாக்கள் அகற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் அது யாராலும் முடியாத காரியம். ஏனென்றால் அமெரிக்கா  அவர்களுக்கு செய்த கலாச்சார கொடுமை சொல்லிலடங்காதவை.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.