Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதே காரணத்துக்காக காஸா தலைவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இஸ்ரேல் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பிரெஞ்சுச் செய்தி மூலம் . https://www.lefigaro.fr/international/la-cour-penale-internationale-emet-un-mandat-d-arret-contre-netanyahu-pour-crimes-contre-l-humanite-20240520

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் காசா மீதான யுத்தம் நிறுத்தப்படுமா?!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

இதனால் காசா மீதான யுத்தம் நிறுத்தப்படுமா?!

இவர்களது பருப்பை சிறிலங்காவிலேயே அவிக்கமுடியவில்லை. பிறகெப்படி இஸ்ரேலில் சாத்தியம். அதேவேளை தாங்கள் கமாசை மட்டுமல்ல இஸ்ரேலரசையும் தண்டிக்கிறோம் என்று காட்டி, கமாசுக்கு ஒரு கிடுக்குப்பிடி போடுவதே நோக்கம். 

  • தொடங்கியவர்
9 minutes ago, ஏராளன் said:

இதனால் காசா மீதான யுத்தம் நிறுத்தப்படுமா?!

போரின் வீச்சு குறையலாம்.

ரஸ்ய அதிபர் புதின் மீதும் இதேபோன்று பிடியாணை உள்ளது. அதனால் போர் நின்றுவிடவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் வசிக்கும் நாடுகளுக்கு இவர் சென்றால் அந்த நாடு இவரைக் கைது செய்ய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய பிரதமர் ஹமாஸ் தலைவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

Published By: RAJEEBAN

20 MAY, 2024 | 05:57 PM
image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

யுத்த குற்றங்களிற்கா பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/184071

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறப்பான நடவடிக்கை.

நெரன்யாஹுவின் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு, தனிமைப் படுத்தப் படும் நிலை வர வேண்டும். உள்நாட்டு அரசியலில் , கோத்தாவிற்குக் கொடுத்தது போல, "பதவி விலகினால், பேசாமல் இருக்க விடுகிறோம்" என்ற டீலை தீவிர வலதுசாரிகள் அல்லாத எதிர் தரப்பினர் கொடுத்து, ஆட்சியை மாற்றி, இராணுவ நடவடிக்கையை நிறுத்த வைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

யாவும் கற்பனை....

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

யாவும் கற்பனை....

கற்பனை என்பதை விட நப்பாசை என்று சொல்லலாம்😂.

இதைச் சுற்றி நடக்கும் சில விடயங்களைக் கவனியுங்கள் - போன வருடம் இருந்ததை விட தற்போது நிலை இஸ்ரேலுக்கு பாதகமாக மாறி விட்டது புலப் படும்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த ICC நீதி மன்றுக்குக் கட்டுப் படாதவை, எனவே நெரன்யாஹு அமெரிக்காவிற்கு வந்து போகலாம். ஆனால், ஏனைய 120 வரையான நாடுகள் - இவற்றுள் டசின் கணக்கான ஐரோப்பிய நாடுகள் - நெரன்யாகு இனி சாதாரணமாக வந்து போக முடியாத நிலை இருக்கும். அந்த நாட்டிற்கு  வருகிறார் என்று அறிவித்தல் வந்தாலே, ஏதாவது அமைப்பு உள்ளூர் கோர்ட்டில் இந்த ஆணையைக் காட்டி வழக்குப் போடும் நிலை இருக்கிறது. அந்த நாட்டு அரசு, "ராஜதந்திர பாதுகாப்பு -diplomatic immunity இருக்கிறது" என குத்தி முறிய வேண்டிய நிலை ஏற்படும்.

இதை விட, இந்த நகர்வில் "நெரன்யாஹுவின் குழுவும் ஹமாஸ் தலைவர்களும்" ஒன்றே என்ற செய்தியையும் இஸ்ரேலுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு அவமான முத்திரை இஸ்ரேலுக்கு.

அமெரிக்காவின் இதற்கான எதிர்வினை தீவிரமாக இல்லை. ஏன்? தேர்தல் வருகிறது. பைடன் நிர்வாகம் இதனை தீவிரமாக எதிர்த்தால், தற்போது சவர அலகு மெல்லிதாக இருக்கும் வெற்றி வாய்ப்பும் இஸ்ரேல் எதிர்ப்பு வாக்காளர்களினால் இல்லாமல் போய் விடும் ஆபத்து இருக்கிறது. இந்த இஸ்ரேல் எதிர்ப்பு வாக்காளர்கள் ட்ரம்புக்கு வாக்களிக்க மாட்டார்கள், ஆனால் வாக்களிக்கப் போகாமல் இருந்து விடுவர், அதுவே போதும் பைடன் தோற்க. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

இதுக்காகத்தான் அதை எழுதினேன். நெதன்யாகுவுக்கே இந்த நிலை என்றால் என்றாவது நம்ம ஊரில் வைத்திருக்கும் பொதியை திறக்க மாட்டார்களா என்ற அதே நப்பாசை தான் எனக்கும். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

போரின் வீச்சு குறையலாம்.

ரஸ்ய அதிபர் புதின் மீதும் இதேபோன்று பிடியாணை உள்ளது. அதனால் போர் நின்றுவிடவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் வசிக்கும் நாடுகளுக்கு இவர் சென்றால் அந்த நாடு இவரைக் கைது செய்ய வேண்டும். 

அமெரிக்கா போகலாம்தானே...அப்ப அவருக்கு என்ன பயம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இதை விட, இந்த நகர்வில் "நெரன்யாஹுவின் குழுவும் ஹமாஸ் தலைவர்களும்" ஒன்றே என்ற செய்தியையும் இஸ்ரேலுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு அவமான முத்திரை இஸ்ரேலுக்கு.

உண்மை, ஏதோ தாம் புனிதர்கள்போலவும், தாமே பலஸ்தீனர்களுக்குத் தீர்ப்பெழுதுபவர்போல் கொன்றொழித்தவாறு தம்மை அசைக்கமுடியாது என்ற சியோனிசவாதிகளுக்கு இந்தத் தீர்ப்பு சம்மட்டி அடிதான். அதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு அரண் இருக்கும்வரை இஸ்ரேலின் ஆட்டம் ஓயாது.  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

 அமெரிக்க பாதுகாப்பு அரண் இருக்கும்வரை இஸ்ரேலின் ஆட்டம் ஓயாது.  

ச‌ரியா சொன்னீங்க‌ள்...............................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, இணையவன் said:

காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

எல்லாம் ஒருவித நாடகம்.

மேற்குலகின் நாடகங்கள் தெரியாதவன் வாயில் என்றுமே மண்.😂

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் தலைவருக்கு எதிராக பிடியாணை - ஐசிசியின் வழக்குரைஞர் வேண்டுகோள்

Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 06:16 AM

image
 
2023 ஒக்டோபர் ஏழாம்; திகதிக்கு பின்னர் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக இஸ்ரேலிய பிரதமருக்கும் ஹமாஸ் தலைவருக்கும் எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிஎன்என்னிற்கு வழங்கிய பேட்டியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் கரிம்கான் இதனை தெரிவித்துள்ளார்.

பெஞ்சமின் நெட்டன்யாகு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட், ஹமாசின் தலைவர்கள் யஹ்யா சின்வர், முகமட் டெய்வ், இஸ்மாயில் ஹனியா ஆகியவர்களிற்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவிற்கு ஆதரவான அரசியல்வாதியொருவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல்முறை இலக்கு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் உக்ரைன் யுத்தத்திற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களின் பட்டியலில் பெஞ்சமின்நெட்டன்யாகு இணைந்துகொண்டுள்ளார்.

இந்த பிடியாணை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆராயவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/184071

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை - வரவேற்கின்றது பிரான்ஸ்

Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 10:20 AM

image
 
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என ஐசிசியின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளதை பிரான்ஸ் வரவேற்றுள்ளது.

ஐசிசியின் வழக்குரைஞர் தனது வேண்டுகோளிற்கு ஆதரவாக சமர்ப்பிக்கும்  ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் விசாரணைக்கு முந்தைய நீதிமன்றம் இஸ்ரேல் தொடர்பில் தனது முடிவை எடுக்கலாம் என பிரான்சின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் சுதந்திரம் தண்டனையிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை பிரான்ஸ் ஆதரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இறுக்கமாக பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ், காசா பள்ளத்தாக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதையும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோள் தொடர்பில் மேற்குலகின் ஏனைய நாடுகளின் நிலைப்பாட்டிற்கும்  பிரான்ஸ் நிலைப்பாட்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184108

  • கருத்துக்கள உறவுகள்

443716146_847613597403614_32376842551536

443699015_847582410740066_56778856152036

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளுக்கு முன்னர் புட்டினுக்கு ICC பிடியாணை பிறப்பித்தபோது,.ஆகா,..ஓகோ,..அப்பிடிப் போடு,...இப்படிப் போடு என்று பாடிய மேற்கு, பெஞ்சமின் நத்தன்யாகு என்று வந்தவுடன் முகாரி ராகம் பாடுகிறது. 

😁

ஆனாலும் ICC யைப் பலப்படுத்தினால் நல்லது போலத் தோன்றுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் , இஸ்ரேலால் நடாத்தப்படுவது இனப்படுகொலை இல்லையாம். அதனை அவர் நிராகரிக்கிறாம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒன்று, icc சிலவற்றை வெளிப்படுத்துவது இல்லை.

குறிப்பாக, அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் குற்றசாட்டு, பிரதான குற்றச்சாட்டில் பங்கு போன்றவை.

எனவே, இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் icc என்ன அவர்களை பற்றி வைத்து இருக்கிறது, செய்யும்  என்ற நிச்சயம் அற்ற தன்மை.

அனால், icc  அரசியல் இல்லாமல் இதை நடத்துமா என்று பாரிய கேள்வி இருக்கிறது?

ஆயினும், மேற்கு என்ன செய்யும் என்றதை பிரான்ஸ் சொல்லி இருக்கிறது.

அதாவது, சந்தர்ப்பம் வந்தால், icc இன் பிடிவிறாந்தை மறுக்க இடம் இருக்கிறது என்பதை மறைமுகமாக சொல்லப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, அரசிய தொடங்கிவிட்டது.
  
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

 அதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு அரண் இருக்கும்வரை இஸ்ரேலின் ஆட்டம் ஓயாது.  

தவறு 

இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தவறு 

இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமே. 

தங்களின் கூற்றுப்படி இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமேயென்றால் ஏன் துணிந்து பலஸ்தீனத்தை ஒருதேசமாக ஏற்றுச் சிங்கப்பூர்-மலேசியா போன்றோ அல்லது செக்-சிலவாக்கியா போன்றோ ஏன் வாழமுடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

தங்களின் கூற்றுப்படி இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமேயென்றால் ஏன் துணிந்து பலஸ்தீனத்தை ஒருதேசமாக ஏற்றுச் சிங்கப்பூர்-மலேசியா போன்றோ அல்லது செக்-சிலவாக்கியா போன்றோ ஏன் வாழமுடியவில்லை. 

மண்ணாசை தான் ....

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

மண்ணாசை தான் ....

உலகப்பரப்பிலே மண்ணாசை கரணியமாகப் போரும் ஆக்கிமிப்பும் உயிர் உடமை அழிவுகளும் பெரும் பொருண்மிய நெருக்கடியுமாகச் சீனா-இந்தியா, இந்தியா-காஸ்மீர்-பாக்கிஸ்தான், ரஸ்யா-உக்ரேன், ஈராக்,துருக்கி,சிரியா-குர்திஸ்தான்,கதலோனியா-ஸ்பெயின்,பிரித்தானியா-வட-அயர்லாந்து, இஸ்ரவேல்-பலஸ்தீனம் மற்றும் சிறிலங்கா-தமிழீழம்.... எனச் சீரழிவும் பேரழிவும் தொடர்கிறது. ஏன் இந்த உலகு அமைதியைக்காண விரும்பாது வெற்று வீம்புப் போர்களை நடாத்தி எலும்புக்கூட்டு மேடுகளை உருவாக்குகின்றன. 

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, nochchi said:

உலகப்பரப்பிலே மண்ணாசை கரணியமாகப் போரும் ஆக்கிமிப்பும் உயிர் உடமை அழிவுகளும் பெரும் பொருண்மிய நெருக்கடியுமாகச் சீனா-இந்தியா, இந்தியா-காஸ்மீர்-பாக்கிஸ்தான், ரஸ்யா-உக்ரேன், ஈராக்,துருக்கி,சிரியா-குர்திஸ்தான்,கதலோனியா-ஸ்பெயின்,பிரித்தானியா-வட-அயர்லாந்து, இஸ்ரவேல்-பலஸ்தீனம் மற்றும் சிறிலங்கா-தமிழீழம்.... எனச் சீரழிவும் பேரழிவும் தொடர்கிறது. ஏன் இந்த உலகு அமைதியைக்காண விரும்பாது வெற்று வீம்புப் போர்களை நடாத்தி எலும்புக்கூட்டு மேடுகளை உருவாக்குகின்றன. 

நன்றி!

மண்ணாசை இல்லை. எல்லாம் அரசியல் பயம் மற்றும் பலம் மட்டுமே.

42 minutes ago, விசுகு said:

மண்ணாசை தான் ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.