Jump to content

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

05 JUN, 2024 | 09:54 AM
image

இந்தியமக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேறி  8.9 வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக  நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்  காங்கிரஸ் திமுக சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்திய கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது .  இந்திய கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில்  தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து 40 தொகுதிகளிலும் களம் கண்டது.  2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.9 சதவீதம் வாக்குகளை பெற்றது.  தமிழ்நாட்டில் நடைபெற்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில் 6.89 சதவீத வாக்குகளை பெற்றது.

இந்த முறை தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர் கட்சி  மேலும் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது.  விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னேறியது.  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ள நாம் தமிழர் கட்சி 2024 மக்களவை தேர்தலில் 8.19 வீத  வாக்குகளை பெற்றுள்ளது.  இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுகிறது.

அதேபோல 2 மக்களவைத் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியது.

https://www.virakesari.lk/article/185348

Edited by நிழலி
தனித் திரியாக மாற்ற
Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
  • Replies 99
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழக அரசியலை மிரட்டும் சீமானின் நாம் தமிழர்! 2019-ல் 3.90%; 2024-ல் அடேங்கப்பா 8.10% வாக்குகள்!

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாஜக பெரிய கட்சியா? நாம் தமிழர் பெரிய கட்சியா? என்பதுதான் முதன்மையான விவாதம்.


லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் மத்தியில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உள்ளது.

தமிழ்நாடு, புதுவையைப் பொறுத்தவரை திமுக கூட்டணியே 40 இடங்களையும் கைப்பற்றிவிட்டது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை எந்த ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை. அதேநேரத்தில் இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் தமிழகத்தில் புதிய அரசியல் பாதை உருவாகிறதா? என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் போட்டியிட்ட இடங்களும் வென்ற வாக்குகளும்

திமுக (21) 26.93%

அதிமுக (32) 20.46%

பாஜக (23) 11.24%

காங்கிரஸ் (9) 10.67%

நாம் தமிழர் (39) 8.10%

பாமக (10) 4.2%

இதர கட்சிகள் அனைத்தும் குறைவான வாக்கு சதவீதம்தான் பெற்றுள்ளன.

2019-ம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்தது?

திமுக (24) 32.76%

அதிமுக (20) 25.53%

பாஜக (5) 3.62%

காங்கிரஸ் (9) 12.72%

நாம் தமிழர் (37) 3.90%

பாமக (7) 5.36%

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தலில் வென்றாலும் இடங்களையே கைப்பற்றாமல் இருந்தாலும் அதன் வாக்கு சதவீதம் நிலையானதாகவே இருந்து வருகிறது என்பதை 2 தேர்தல்களின் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

காங்கிரஸ் கட்சி இம்முறை அனைத்து இடங்களிலும் வென்ற போது 2% வாக்குகளை இழந்திருப்பது அக்கட்சிக்கான எச்சரிக்கை அலாரம்தான். பாமகவைப் பொறுத்தவரையில் போன முறை 7 தொகுதிகளில் போட்டியிட்டு 5.36% ஓட்டுகளைப் பெற்றது; இம்முறை 10 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4.2% ஓட்டுகளைத்தான் பெற்றிருப்பது அந்த கட்சிக்கும் 'எச்சரிக்கை' மணி அடிக்கப்படுகிறது என்பதுதான்.

5 தொகுதிகளில் நாம் தமிழர் 3-ம் இடம்! 12 இடங்களில் 1 லட்சத்துக்கும் மேல் ஓட்டுகள்- தொகுதி வாரியாக!

இதற்கு அப்பால் பாஜக, நாம் தமிழர் கட்சிகளைப் பார்ப்போம். பாஜகவைப் பொறுத்தவரையில் 2019-ல் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 3.62% வாக்குகளைப் பெற்றது. இம்முறை 4 மடங்கு அதிகமாக 23 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்படியானால் வாக்கு சதவீதம் 4 மடங்கு அதிகமாகத்தானே இருக்கும். ஆம் அப்படித்தான் 11.24% வாக்குகளைப் பாஜக பெற்றுள்ளது.

நாம் தமிழர் வளர்ச்சி: அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளைத்தான் பெற்றது. இந்த முறை அதைப் போல இரு மடங்கு வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. அதாவது 8.10% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது வளர்ச்சியைத்தான் குறிக்கிறது.

அடுத்து வரும் தேர்தல்களில் இந்த வாக்கு சதவீதம் நிலைக்குமா? குறையுமா? என்பதற்கு அப்பால் இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சிதான் தமக்கான பெரும் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதையே புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilars-8-10-vote-share-threats-to-main-political-parties-611647.html

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை கண்டு பல அரசியல்வாதிகளும்  மிரண்டு போய் இருக்கிறார்கள் 

அதுவும் இளையவர்களின் ஆதரவு வளர்ச்சி அடைவது என்பது மற்றைய கட்சிகளுக்கு ஆபத்தானது என்று செல்வப்பெருந்தகை  கருத்துக் கூறியுள்ளார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை கண்டு பல அரசியல்வாதிகளும்  மிரண்டு போய் இருக்கிறார்கள் 

அதுவும் இளையவர்களின் ஆதரவு வளர்ச்சி அடைவது என்பது மற்றைய கட்சிகளுக்கு ஆபத்தானது என்று செல்வப்பெருந்தகை  கருத்துக் கூறியுள்ளார் 

ஏன் நேற்று யாழ் களத்தில் பதியப்பட்டவை இன்று??

உதாரணமாக நிழலி.??

அவரே இன்று இந்த செய்தியை இங்கே பதிகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாத்தியார் said:

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை கண்டு பல அரசியல்வாதிகளும்  மிரண்டு போய் இருக்கிறார்கள் 

அதுவும் இளையவர்களின் ஆதரவு வளர்ச்சி அடைவது என்பது மற்றைய கட்சிகளுக்கு ஆபத்தானது என்று செல்வப்பெருந்தகை  கருத்துக் கூறியுள்ளார் 

காங்கிர‌ஸ் திமுக்காவுக்கு ஓட்டு போடுப‌வ‌ர்க‌ள் கூட‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அது தான் செல்வப்பெருந்தகைகு இப்ப‌வே வ‌யித்தை க‌ல‌க்குது

 

கூட்ட‌னி வைக்காட்டி இவ‌ர்க‌ளுக்கும் த‌மிழ் நாட்டில் பீஜேப்பியின் நிலை தான்........................................................................

Link to comment
Share on other sites

23 minutes ago, விசுகு said:

ஏன் நேற்று யாழ் களத்தில் பதியப்பட்டவை இன்று??

உதாரணமாக நிழலி.??

அவரே இன்று இந்த செய்தியை இங்கே பதிகிறார்.

நான் பதியவில்லையே? பதிந்தது பிழம்பு 😄

நம்பத்தகுந்த மற்றும் உறுதியான தகவல் (அதாவது பிரச்சாரத் தளங்கள் மற்றும் யூரியூப் Channels களில் இருந்து பெறப்படாதவை) என்பதால் தான் இங்கு தான் பதிந்ததாக பிழம்பு சொல்கின்றார்.

செய்திகள் தகவல்கள் பதியும் போது, விருப்பு வெறுப்புகள் எல்லாம் அவர் பார்ப்பதில்லையாம்.🙂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளரட்டும் தாராளமாக!

 "பச்சைத் தமிழ்" , "தமிழ் ஜீன்" என்று முட்டாள் தனமான கருத்துக்களை தமிழ் நாட்டோடு மட்டும் மட்டுப் படுத்திக் கொண்டு தன் அரசியலைச் செய்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால், இன்று ஈழத்தமிழர்களிடையேயும் இந்த முட்டாள் கருத்துக்களைப் பரப்பி அவர்களை அறிவலட்சியம் கொண்ட மடையர்களாக மாற்றும் வேலையில் நா.த.க வெற்றி பெற்றிருக்கிறது. நா.த.க ஆளும் கட்சியாக வந்தால் கூட இந்த அறிவலட்சியம் பரப்பும் வேலையை எதிர்க்க வேண்டியிருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

வளரட்டும் தாராளமாக!

 "பச்சைத் தமிழ்" , "தமிழ் ஜீன்" என்று முட்டாள் தனமான கருத்துக்களை தமிழ் நாட்டோடு மட்டும் மட்டுப் படுத்திக் கொண்டு தன் அரசியலைச் செய்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால், இன்று ஈழத்தமிழர்களிடையேயும் இந்த முட்டாள் கருத்துக்களைப் பரப்பி அவர்களை அறிவலட்சியம் கொண்ட மடையர்களாக மாற்றும் வேலையில் நா.த.க வெற்றி பெற்றிருக்கிறது. நா.த.க ஆளும் கட்சியாக வந்தால் கூட இந்த அறிவலட்சியம் பரப்பும் வேலையை எதிர்க்க வேண்டியிருக்கும்.

நிச்சயமாக உண்மை   வளரும் ஒவ்வொரு கட்சியும் வரவேற்கப்படுகின்றன… நாம் தமிழர் கட்சி வளர்ச்சி கண்டு உள்ளது  மகிழ்ச்சி  ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும். தமிழர் பகுதிகள் உண்டு”  அங்கே தமிழர்கள் வாழ்கிறார்கள்    அப்படி இருக்க  தமிழ்நாட்டில்  தெலுங்கார்  வெளியேறு.  மலையாளிகள் வெளியேறு. .........வடக்கன். வெளியேறு,.......இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசினால்   இந்த வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்கள் நிலைமை என்ன மாதிரி  ??    1977. ......1984.  ஆண்டுகளில்  தமிழர் விடுதலை கூட்டணி   பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிய உணர்ச்சியை துண்டும். பேச்சுகளை விட மோசமானது   இதனால்  எந்தவொரு பிரயோஜனம் இல்லை   தமிழ் இளைஞர்கள் அருமையான வாழ்க்கையை  வெட்டி பேச்சுகளில் மயங்கி இழக்க முடியாது    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

திமுக (21) 26.93%

அதிமுக (32) 20.46%

பாஜக (23) 11.24%

காங்கிரஸ் (9) 10.67%

நாம் தமிழர் (39) 8.10%

பாமக (10) 4.2%

நான் கணக்கில் ரொம்பவே வீக்.

ஆனாலும் ஒரு சின்ன சமன்பாடு.

ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த சதவீதத்தை அது போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்தால் - கட்சிகளின் உண்மையான ஆதரவு நிலை பற்றி ஓரளவுக்கு ஊகிக்க முடியுமா?

கணக்கில் புலியாக இருப்போர் சொல்லவும்.

இதன்படி:

திமுக - 26.93/21 = 1.28

அதிமுக - 20.46/32 = 0.63

பாஜக - 11.24/23 = 0.48

காங்கிரஸ் - 10.67/9 =1.18

நாதக -8.10/39 =0.20

பாமக - 4.2/10 = 0.42

* இந்த வகுப்பு கூட்டணி கட்சிகளுக்க்காக கிடைத்த வாக்கை, போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு என்று கருதுகிறது என்பதை கவனிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 இடங்களில் ஒரு லட்சம் வாக்கு - சின்னம் மாறினாலும் மாநிலக் கட்சி அந்தஸ்தை எட்டும் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி, சீமான்

பட மூலாதாரம்,X/ நாம் தமிழர் கட்சி

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 ஜூன் 2024, 14:12 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்

"நீதிமன்றம் சென்றும் கிடைக்காத சின்னத்தை மக்கள் மன்றம் தந்த தீர்ப்பின் மூலம் பெறப் போகிறோம்" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி.

ஆம். தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே வரும் நாம் தமிழர் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதைச் சாதித்துக் காட்டியுள்ளது.

இதன் மூலம் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை பெறும் அளவுக்கான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள், தமிழ்நாட்டில் வேரூன்ற சகல வழிகளிலும் முயலும் பாஜக ஆகியவற்றின் சவால்களைத் தாண்டி நாம் தமிழர் கட்சி தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து அதிகரித்தது எப்படி? நாம் தமிழர் கட்சி இந்த மைல்கல்லை எப்படி எட்டியது?

நாம் தமிழர் கட்சி, சீமான்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி 2010இல் தொடங்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியது. நாம் தமிழர் கட்சி அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி தொகுதிகளை ஒதுக்கியது. அதாவது, அக்கட்சி சார்பில் 20 தொகுதிகளில் ஆண்களும், 20 தொகுதிகளில் பெண்களும் வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3.9 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அந்தத் தேர்தலில் முதன் முறையாகக் களமிறங்கிய டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 5.5 சதவிகித வாக்குகளையும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளையும் பெற்றன.

அடுத்து வந்த 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 170க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றனர். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் உருவெடுத்தது.

 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி, சீமான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் நாம் தமிழர் கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையிலேயே அமைந்துள்ளன.

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 32 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
  • திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
  • திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
  • மற்ற 35 தொகுதிகளிலும் அக்கட்சி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய மற்றும் டெல்டா பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
  • நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை, சிவகங்கை தொகுதியில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சி வேட்பாளர் எழிலரசி 1,63,412 வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி குறைந்த அளவாக 52,721 வாக்குகள் பெற்றுள்ளது. ஆனாலும்கூட, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி அக்கட்சி வேட்பாளர் மரியா ஜெனிபர் கிளாரா மைக்கேல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரிசையில் நாம் தமிழர் கட்சி சந்தித்த நான்காவது பொதுத் தேர்தல் இது. மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வாக்கு சதவீதமான 8%-ஐ இந்தத் தேர்தலில் எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது.

மாநிலக் கட்சி அங்கீகாரம் - தேர்தல் ஆணைய விதிகள் என்ன?

நாடாளுமன்ற தேர்தல், நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கிறது. அதன்படி, மாநிலக் கட்சி, தேசியக் கட்சி என இரண்டு வகையாக கட்சிகளை தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கிறது. அரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேன்டும். ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தைப் பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

  • மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
  • மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  • மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
  • அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  • நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 25 இடங்களுக்கு ஒன்று வீதம் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும்.

மேற்கூறிய விதிகளில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்துள்ளது.

 

சின்னம் ஒதுக்குவதில் சர்ச்சை

நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,NAAM TAMILZHAR

நாம் தமிழர் கட்சி முந்தைய தேர்தல்களில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கிவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால், “தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் என்ன தவறு இருக்கிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற ஆணையத்தின் நடைமுறையை எந்தக் கட்சிக்காகவும் மாற்ற முடியாது. நாம் தமிழர் கட்சி இன்னும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படியிருக்கும்போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும்?" எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

நீதிமன்றத்தை நாடியும் விரும்பியது கிடைக்காததால் வேறுவழியின்றி மைக் (ஒலி வாங்கி) சின்னத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அப்போது பிபிசி தமிழிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, "கரும்பு விவசாயி சின்னத்தைக் கொடுத்தால் அதிக வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாவதைத் தடுக்கவே, இப்படி சதி செய்துள்ளார்கள்,” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

'நீதிமன்றம் தராததை மக்கள் மன்றத்தின் மூலம் பெறுகிறோம்'

நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,IDUMBAVANAM KARTHIK/X

தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பின்னர் பிபிசி தமிழிடம் பேசிய இடும்பாவனம் கார்த்தி, "நாடாளுமன்றத் தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கீட்டில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது," என்றார்.

"நாங்கள் தேர்தலில் சின்னங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்க்கிறோம். அதற்குப் பதிலாக, மேற்கத்திய நாடுகளைப் போல் ஒவ்வொரு வேட்பாளருக்கு ஒரு எண்ணை ஒதுக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சிகளின் சின்னத்தை மாற்ற வேண்டும். அதுதான் தேர்தல் களத்தில் சரிசமமான போட்டிக்கு வழிவகுக்கும்."

சின்னங்கள் வேட்பாளர்களுக்கு சில சாதகங்களை அளிக்கின்றன என்பதை மறுக்க முடியாது என்கிறார் அவர். "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது வெற்றி எளிதாகக் கிடைக்கும். அதேநேரத்தில், பானை சின்னத்தில் களம் காணும் போது வெற்றி கடினமாவதைப் பார்க்க முடிகிறது."

இது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கும் பொருந்துவதாகக் கூறும் அவர், சின்னங்கள் பயன்பாட்டிற்கு எதிரானவர்கள் என்ற போதிலும் நம் நாட்டு நடைமுறையைப் பின்பற்றி தங்கள் கொள்கைக்கு கரும்பு விவசாயி சின்னமே பொருத்தமானது என்று தீர்மானித்தே அதைத் தேர்வு செய்ததாகக் கூறினார்.

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் களம் எப்படி இருந்தது?

நாடாளுமன்ற தேர்தல், நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,YOUTUBE/NAAM THAMIZHAR KATCHI

நாடாளுமன்றத் தேர்தல் களம் நாம் தமிழர் கட்சிக்கு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, "இது நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பதால் சற்று சவாலானதாகவே இருக்கும் என்று கருதினோம். ஏனெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரே பிரதானம். நாங்களோ பாஜகவையோ, காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியையோ ஆதரிக்கவில்லை. ஆகவே, மோதி, ராகுல் போன்ற யாரையும் எங்களால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடியாது."

ஆனால், "எங்கள் எண்ணத்திற்கு மாறாக தேர்தல் களம் எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக அமைந்திருந்தது. முன்பெல்லாம் இளைஞர் மத்தியில் எங்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். இப்போது குடும்பம் குடும்பமாகப் பலரும் தாமாகவே விரும்பி வந்து கட்சியில் சேர்கின்றனர்."

"அவர்கள் அனைவரும் தேர்தலில் எங்களை ஆதரித்தனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளைப் போல் எங்களிடம் இல்லாத ஒன்று பணம் மட்டும்தான். ஒவ்வொரு தொகுதியிலும் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் சர்வசாதாரணமாக கோடிகளில் பணத்தைச் செலவழிக்கும்போது எங்களால் லட்சங்களில்கூடச் செலவழிக்க முடியாது," என்றார்.

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி சாத்தியமானது எப்படி?

நாம் தமிழர் கட்சி சந்தித்த 4 பொதுத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாகத் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி வந்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் கேட்டபோது, "மதவாதம் போல் இனவாதமும் உணர்ச்சி ரீதியாக மக்களை ஈர்க்கக் கூடியது. வளர்ந்த நாடுகளில்கூட இந்தப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் டிரம்பை கூட நீங்கள் இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அது போலவே தமிழ்நாட்டிலும் இனவாதம் பேசும் நாம் தமிழர் கட்சி மக்களை ஈர்க்கிறது," என்றார்.

மேலும், சுய பெருமை பேசுவது ஒன்றும் குற்றம் இல்லை. ஆனால், பிற மாநிலத்தவர் குறிப்பாக வட மாநிலத்தவர் மீது வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் பேசுவது தவறு என்றும் அதைத்தான் இனவாதம் எனக் கூறுவதாகவும் குறிப்பிடுகிறார் சிகாமணி.

அதேபோல், "எதிலும் தூய்மைவாதம் பேசும் மக்களின் தேர்வாகவும் நாம் தமிழர் கட்சி இருக்கிறது. அதீத தூய்மைவாதம் பேசும் இவர்கள் கற்பனை உலகில் வாழ்பவர்கள், நிகழ்காலத்தில் எதிலுமே திருப்தி கொள்ளாதவர்கள்."

"இனவாதம், தூய்மைவாதம் தாண்டி, இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று தேடும் மக்களில் ஒரு பிரிவினரும் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கின்றனர். வைகோ, விஜயகாந்த் வரிசையில் இன்று நாம் தமிழர் கட்சியும் அந்த வாக்குகளை அறுவடை செய்கிறது," என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக உள்ள தமிழ்நாட்டால் சீமான் பேசுவது போல மத்திய அரசைப் புறக்கணித்துவிட்டு எதையும் கண்டுகொள்ளாமல் தனித்து இயங்க முடியாது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் வலிமை மிக்க கட்சியாக இருந்தாலும் திமுகவால் கூட மத்திய அரசுக்குப் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில், சீமான் மேடைகளில் பேசுவதையெல்லாம் நாம் தமிழர் கட்சியால் செயல்படுத்திவிட முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பினார்.

நாம் தமிழர் கட்சியின் நிரந்தர சின்னமாக எது இருக்கும்?

நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,SEEMAN/X

கரும்பு விவசாயிக்குப் பதிலாக புதிதாகப் பெற்ற மைக் சின்னத்தை மக்களிடையே சென்று சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, "எங்கள் கட்சியில் சேர்பவர்கள் நல்ல அரசியல் புரிதலுடன், விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். அவர்கள் நாம் தமிழர் கட்சி எங்கே என்றுதான் தேடுகின்றனர். இதுபோன்ற அரசியல் விழிப்புணர்வுள்ள தொண்டர்களுக்கு சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் எங்களுக்குப் பெரிய சிரமம் இருக்கவில்லை," என்று கூறினார் இடும்பாவனம் கார்த்தி.

அப்படியென்றால், நாம் தமிழர் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் உங்கள் கட்சியின் சின்னமாக எதைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு, "வேளாண் அடிப்படையிலான தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைக்கு கரும்பு விவசாயி சின்னமே பொருத்தமானது என்பதால் அதையே தேர்வு செய்வோம்" என்று பதிலளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி தொடருமா என்று கேட்டபோது,"நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி கவனிக்கத்தக்க ஒன்றுதான் என்றாலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பெரிய கட்சியாக வளரும் என்று சொல்ல முடியாதுஎனச் சொல்ல முடியாது" என்கிறார் பத்திரிகையாளர் சிகாமணி.

"இதுவொரு இடைக்கால வளர்ச்சிதான். வைகோ, விஜயகாந்த் போல மாற்று தேடும் மக்களுக்கும், இனவாத பேச்சுகளால் கவரப்படும் இளைஞர்களுக்கும் வடிகாலாக நாம் தமிழர் கட்சி இருக்கும்."

அடுத்த கட்டத்திற்கு வளர்வது என்பது நாம் தமிழர் கட்சிக்கு சிரமமான விஷயமாகவே இருக்கும் என்று தெரிவித்தார் சிகாமணி.

https://www.bbc.com/tamil/articles/c3ggk39979xo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

 

ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த சதவீதத்தை அது போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்தால் - கட்சிகளின் உண்மையான ஆதரவு நிலை பற்றி ஓரளவுக்கு ஊகிக்க முடியுமா?

 

இல்லை, 10 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி  100% ஓட்டுக்களையும் எடுத்திருந்தால், 100/10=10,

இது எதை சொல்லுகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

திமுக - 26.93/21 = 1.28

அதிமுக - 20.46/32 = 0.63

பாஜக - 11.24/23 = 0.48

காங்கிரஸ் - 10.67/9 =1.18

நாதக -8.10/39 =0.20

பாமக - 4.2/10 = 0.42

👍.........

இதை மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையால் பெருக்கி விட்டால், வரும் எண் ஓரளவு சரியான நிலவரத்தை காட்டக்கூடும்.

உதாரணம்:

திமுக = 1.28 * 40 = 51.2%

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vaasi said:

இல்லை, 10 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி  100% ஓட்டுக்களையும் எடுத்திருந்தால், 100/10=10,

இது எதை சொல்லுகிறது?

இது  பிழை   பத்து  தொகுதியில் போட்டி இட்டவர். அந்த பத்து தொகுதி வாக்குகளை மட்டுமே பெற முடியும்   அதுவும் 100% என்றால்    10 ஆல். வகுக்க வேண்டிய தேவையில்லை    மேலே  கொடுக்கப்பட்ட வீதம்  தமிழ்நாட்டில் உள்ள. மொத்த வாக்காளருடையது   நீங்கள் சொல்லும் 100%  பத்து தொகுதியுடையது  மட்டுமே  பிறகு ஏன் பத்தால். வகுக்க வேண்டும் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

நான் கணக்கில் ரொம்பவே வீக்.

ஆனாலும் ஒரு சின்ன சமன்பாடு.

ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த சதவீதத்தை அது போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்தால் - கட்சிகளின் உண்மையான ஆதரவு நிலை பற்றி ஓரளவுக்கு ஊகிக்க முடியுமா?

கணக்கில் புலியாக இருப்போர் சொல்லவும்.

இதன்படி:

திமுக - 26.93/21 = 1.28

அதிமுக - 20.46/32 = 0.63

பாஜக - 11.24/23 = 0.48

காங்கிரஸ் - 10.67/9 =1.18

நாதக -8.10/39 =0.20

பாமக - 4.2/10 = 0.42

* இந்த வகுப்பு கூட்டணி கட்சிகளுக்க்காக கிடைத்த வாக்கை, போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு என்று கருதுகிறது என்பதை கவனிக்கவும்

இங்கே  26.93. என்பது  40 அல்லது 39. தொகுதி வாக்காளர்களின். வீதம்.  அதாவது  40 அல்லது 39. தொகுதி வாக்காளர்களை. 100%  ஆக கொண்டு கணிக்கப்பட்டது  21 தொகுதி வாக்காளராக  இருந்தபோதிலும். 26.93 % என்பது  40 தொகுதிக்குமானது ஆகும்  ஆகவே  இது  40. வகுக்கப்பட்டு     அதன் பின். வரும் பெறுமதியை  21 ஆல். பெருக்க வேண்டும்    அது தான்  21 தொகுதிகளிலும்  திமுக க்கு  வாக்களித்த மக்களின். வீதம்  ஆகும் மேலும் முக்கியமாக எத்தனை தொகுதியில் போட்டி இட்டாலும்  முழு தமிழ்நாட்டுக்கும்  வீதம் பார்ப்பது தான் சரியாகும்  காரணம் மொத்த வாக்காளர் தொகை மாறிலி   ஆகும்  

21 தொகுதியில் மொத்த வாக்காளர் தொகை   A என்போம்

32 தொகுதியில் வாக்காளர் தொகை B என்போம்  இரண்டும் வெவ்வேறு எண்ணிக்கை ஆகும்   எனவேதான் ஒப்பிட முடியாது   ஒப்பிடுவதற்க்கு மொத்த வாக்காளர் தொகை மாறாமல் இருக்க வேண்டும்   🙏 உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 5/6/2024 at 16:49, Justin said:

வளரட்டும் தாராளமாக!

 "பச்சைத் தமிழ்" , "தமிழ் ஜீன்" என்று முட்டாள் தனமான கருத்துக்களை தமிழ் நாட்டோடு மட்டும் மட்டுப் படுத்திக் கொண்டு தன் அரசியலைச் செய்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால், இன்று ஈழத்தமிழர்களிடையேயும் இந்த முட்டாள் கருத்துக்களைப் பரப்பி அவர்களை அறிவலட்சியம் கொண்ட மடையர்களாக மாற்றும் வேலையில் நா.த.க வெற்றி பெற்றிருக்கிறது. நா.த.க ஆளும் கட்சியாக வந்தால் கூட இந்த அறிவலட்சியம் பரப்பும் வேலையை எதிர்க்க வேண்டியிருக்கும்.

வணக்கம் சகோ

இந்த கருத்தை பார்த்தபோது சிலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன்.

 

சிறீலங்கா சிங்களத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பௌத்த மதமே சிறீலங்கா என்று சொல்லி எம்மை அடித்து துரத்தும் எதிரியுடன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று நாம் இன்னும் எத்தனை நாள் எத்தனை முறை மண்டியிட்டு அழமுடியும்?

உலகெங்கும் இல்லாததையா நாம் தமிழர் சொல்கிறது?

பிரெஞ்சுக் காரர்களுக்கே பிரான்சு தேசம் சொந்தமானது என்று சொல்லி நூற்றிற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளமை தானே நிஜம் களம்.

அந்தந்த பிரதேசத்தை அந்தந்த க்கள் கூட்டம் ஆள்வது தானே நடைமுறையில் உள்ளது.

உங்கள் எழுத்து நாம் மற்றவர் போல் இல்லை பண்பானவர்கள் அறிவார்ந்தவர்கள் என்பதற்கு மட்டுமே உதவும். ஆனால் இந்த போக்கு எம்மை இதுவரை காப்பாற்றாது கச்சையுடன் விட்டிருப்பது மட்டுமே வரலாறு.

தமிழர்கள் தமிழராக ஒன்று திரள்தால் அன்றி விடிவில்லை எமக்கு. நாம் தமிழர். நாம் சீமான் அல்ல. நன்றி. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இங்கே  26.93. என்பது  40 அல்லது 39. தொகுதி வாக்காளர்களின். வீதம்.  அதாவது  40 அல்லது 39. தொகுதி வாக்காளர்களை. 100%  ஆக கொண்டு கணிக்கப்பட்டது  21 தொகுதி வாக்காளராக  இருந்தபோதிலும். 26.93 % என்பது  40 தொகுதிக்குமானது ஆகும்  ஆகவே  இது  40. வகுக்கப்பட்டு     அதன் பின். வரும் பெறுமதியை  21 ஆல். பெருக்க வேண்டும்    அது தான்  21 தொகுதிகளிலும்  திமுக க்கு  வாக்களித்த மக்களின்.

மிக தெளிவான விளக்கம். நன்றி அண்ணை. இப்படி ஒருக்கா முயன்று பார்க்கிறேன்.

2 hours ago, Kandiah57 said:

21 தொகுதியில் மொத்த வாக்காளர் தொகை   A என்போம்

32 தொகுதியில் வாக்காளர் தொகை B என்போம்  இரண்டும் வெவ்வேறு எண்ணிக்கை ஆகும்   எனவேதான் ஒப்பிட முடியாது   ஒப்பிடுவதற்க்கு மொத்த வாக்காளர் தொகை மாறாமல் இருக்க வேண்டும்   🙏 உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

இதுவும் சரிதான். 

ஆனால் நீங்கள் மேலே சொன்ன வழிதான் உள்ளதில் ஓரளவு யதார்த்தத்தை நெருங்கி வரும் முடிவை தரும் என நினைக்கிறேன்.

4 hours ago, ரசோதரன் said:

👍.........

இதை மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையால் பெருக்கி விட்டால், வரும் எண் ஓரளவு சரியான நிலவரத்தை காட்டக்கூடும்.

உதாரணம்:

திமுக = 1.28 * 40 = 51.2%

நன்றி ரசோ. நீங்களும் அதே முறையைத்தான் பரிந்துரைத்துள்ளீர்கள்.

5 hours ago, vaasi said:

இல்லை, 10 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி  100% ஓட்டுக்களையும் எடுத்திருந்தால், 100/10=10,

இது எதை சொல்லுகிறது?

நன்றி. உங்கள் கேள்வியின் அர்த்தம் புரிகிறது. ஆனால் பதில் தெரியவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

வணக்கம் சகோ

இந்த கருத்தை பார்த்தபோது சிலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன்.

 

சிறீலங்கா சிங்களத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பௌத்த மதமே சிறீலங்கா என்று சொல்லி எம்மை அடித்து துரத்தும் எதிரியுடன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று நாம் இன்னும் எத்தனை நாள் எத்தனை முறை மண்டியிட்டு அழமுடியும்?

உலகெங்கும் இல்லாததையா நாம் தமிழர் சொல்கிறது?

பிரெஞ்சுக் காரர்களுக்கே பிரான்சு தேசம் சொந்தமானது என்று சொல்லி நூற்றிற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளமை தானே நிஜம் களம்.

அந்தந்த பிரதேசத்தை அந்தந்த க்கள் கூட்டம் ஆள்வது தானே நடைமுறையில் உள்ளது.

உங்கள் எழுத்து நாம் மற்றவர் போல் இல்லை பண்பானவர்கள் அறிவார்ந்தவர்கள் என்பதற்கு மட்டுமே உதவும். ஆனால் இந்த போக்கு எம்மை இதுவரை காப்பாற்றாது கச்சையுடன் விட்டிருப்பது மட்டுமே வரலாறு.

தமிழர்கள் தமிழராக ஒன்று திரள்தால் அன்றி விடிவில்லை எமக்கு. நாம் தமிழர். நாம் சீமான் அல்ல. நன்றி. 

விசுகு வணக்கம்   எங்கள் நாட்டை பொறுத்தவரை நாங்கள் சொன்னது மிகவும் சரியாது  ஆனால்  இந்தியாவை பொறுத்தவரை பிழை ஆகும்  ஏனெனில் அவர்கள்  உரிமைக்காகவும் போராடவில்லை  மாநில ஆட்சி பிடிக்கத் தான் போராடுகிறார்கள். ...மேலும்  இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும். தமிழர்கள் பகுதிகளுண்டு   அங்கே தமிழர்கள் மன மகிழ்வுடன் வாழ்கிறார்கள்  அப்படி இருக்கையில்  வடக்கன் போ. மலையாளம் போ. தெலுங்கு போ. ........என்று எப்படி  யார் என்றாலும் சொல்லலாம்?? பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கதி என்ன?? சீமான் அரசியல் செய்யலாம் ....நாம் தமிழர் அரசியல் செய்யலாம்   ஆனால் இலங்கை தமிழருடன் ஒப்பிட்டுக்கொண்டு செய்யக் கூடாது   🙏

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

விசுகு வணக்கம்   எங்கள் நாட்டை பொறுத்தவரை நாங்கள் சொன்னது மிகவும் சரியாது  ஆனால்  இந்தியாவை பொறுத்தவரை பிழை ஆகும்  ஏனெனில் அவர்கள்  உரிமைக்காகவும் போராடவில்லை  மாநில ஆட்சி பிடிக்கத் தான் போராடுகிறார்கள். ...மேலும்  இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும். தமிழர்கள் பகுதிகளுண்டு   அங்கே தமிழர்கள் மன மகிழ்வுடன் வாழ்கிறார்கள்  அப்படி இருக்கையில்  வடக்கன் போ. மலையாளம் போ. தெலுங்கு போ. ........என்று எப்படி  யார் என்றாலும் சொல்லலாம்?? பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கதி என்ன?? சீமான் அரசியல் செய்யலாம் ....நாம் தமிழர் அரசியல் செய்யலாம்   ஆனால் இலங்கை தமிழருடன் ஒப்பிட்டுக்கொண்டு செய்யக் கூடாது   🙏

கந்தையர் எப்போதுமே குறுக்காலதான் ஓடுவார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

விசுகு வணக்கம்   எங்கள் நாட்டை பொறுத்தவரை நாங்கள் சொன்னது மிகவும் சரியாது  ஆனால்  இந்தியாவை பொறுத்தவரை பிழை ஆகும்  ஏனெனில் அவர்கள்  உரிமைக்காகவும் போராடவில்லை  மாநில ஆட்சி பிடிக்கத் தான் போராடுகிறார்கள். ...மேலும்  இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும். தமிழர்கள் பகுதிகளுண்டு   அங்கே தமிழர்கள் மன மகிழ்வுடன் வாழ்கிறார்கள்  அப்படி இருக்கையில்  வடக்கன் போ. மலையாளம் போ. தெலுங்கு போ. ........என்று எப்படி  யார் என்றாலும் சொல்லலாம்?? பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கதி என்ன?? சீமான் அரசியல் செய்யலாம் ....நாம் தமிழர் அரசியல் செய்யலாம்   ஆனால் இலங்கை தமிழருடன் ஒப்பிட்டுக்கொண்டு செய்யக் கூடாது   🙏

இன்றைய இலங்கையில் அங்கே என்ன பிரச்சனை இருக்கின்றது?
வயல் விளையவில்லையா?
வெங்காயம் விளையவில்லையா?
பள்ளிக்கூடங்கள் நடக்கவில்லையா?
ரயில் ஓடவில்லையா?
பஸ் ஓடவில்லையா?
மழை பெய்யவில்லையா?
வெய்யில் எறிக்கவில்லையா?
மக்கள் பட்டினியால் சாகின்றார்களா?
அது மட்டுமா?
தியேட்டர்களில் சினிமா படங்கள் ஓடவில்லையா?
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இன்றைய இலங்கையில் அங்கே என்ன பிரச்சனை இருக்கின்றது?
வயல் விளையவில்லையா?
வெங்காயம் விளையவில்லையா?
பள்ளிக்கூடங்கள் நடக்கவில்லையா?
ரயில் ஓடவில்லையா?
பஸ் ஓடவில்லையா?
மழை பெய்யவில்லையா?
வெய்யில் எறிக்கவில்லையா?
மக்கள் பட்டினியால் சாகின்றார்களா?
அது மட்டுமா?
தியேட்டர்களில் சினிமா படங்கள் ஓடவில்லையா?
 

உங்கள் பாணியில் சொன்னால் எது வந்தபோதும் கச்சையை எப்பொழுதும் மறப்பதில்லையே அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

விசுகு வணக்கம்   எங்கள் நாட்டை பொறுத்தவரை நாங்கள் சொன்னது மிகவும் சரியாது  ஆனால்  இந்தியாவை பொறுத்தவரை பிழை ஆகும்  ஏனெனில் அவர்கள்  உரிமைக்காகவும் போராடவில்லை  மாநில ஆட்சி பிடிக்கத் தான் போராடுகிறார்கள். ...மேலும்  இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும். தமிழர்கள் பகுதிகளுண்டு   அங்கே தமிழர்கள் மன மகிழ்வுடன் வாழ்கிறார்கள்  அப்படி இருக்கையில்  வடக்கன் போ. மலையாளம் போ. தெலுங்கு போ. ........என்று எப்படி  யார் என்றாலும் சொல்லலாம்?? பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கதி என்ன?? சீமான் அரசியல் செய்யலாம் ....நாம் தமிழர் அரசியல் செய்யலாம்   ஆனால் இலங்கை தமிழருடன் ஒப்பிட்டுக்கொண்டு செய்யக் கூடாது   🙏

இல்லை அண்ணா 

அப்படியானால் கன்னடத்தை கன்னடர்களும் கேரளத்தை மலையாளிகளும் தெலுங்கு தேசத்தை தெலுங்கர்களும் பஞ்சாப்பை பஞ்சாபியர்களும் ஆள்வதும் எப்படி தமிழகத்தில் வாழும் அமைதியை ஏற்படுத்தும்???

வேறு மாநிலங்களில் தமிழர்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்பது எவ்வளவு பொய்யான வாதம்.

இங்கேயும் எல்லோரும் சேர்ந்து வாழலாம். ஆனால் மற்ற மாநிலங்களை போல நாம் தான் ஆழ்வோம் என்பது எப்படி அமைதிக்கு பங்கமாகும். தமிழன் இளிச்சவாயன் என்பதை தவிர.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இல்லை அண்ணா 

அப்படியானால் கன்னடத்தை கன்னடர்களும் கேரளத்தை மலையாளிகளும் தெலுங்கு தேசத்தை தெலுங்கர்களும் பஞ்சாப்பை பஞ்சாபியர்களும் ஆள்வதும் எப்படி தமிழகத்தில் வாழும் அமைதியை ஏற்படுத்தும்???

வேறு மாநிலங்களில் தமிழர்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்பது எவ்வளவு பொய்யான வாதம்.

இங்கேயும் எல்லோரும் சேர்ந்து வாழலாம். ஆனால் மற்ற மாநிலங்களை போல நாம் தான் ஆழ்வோம் என்பது எப்படி அமைதிக்கு பங்கமாகும். தமிழன் இளிச்சவாயன் என்பதை தவிர.

 

இது பல மரமண்டைகளுக்கு விளங்குதில்லை விசுகர்! தமிழக வாக்காளர்கள் உட்பட!!

  • Thanks 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, Eppothum Thamizhan said:

இது பல மரமண்டைகளுக்கு விளங்குதில்லை விசுகர்! தமிழக வாக்காளர்கள் உட்பட!!

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் சகோ 

இது நீண்ட பயணம்.

மற்ற கட்சிகளின் வாக்குகள் காவோலை வாக்குகள். நாம் தமிழர் வாக்குகள் குருத்தோலை வாக்குகள்.

இனி நாம் தமிழருக்கு மட்டுமே வளர்ச்சி. நன்றி. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, விசுகு said:

வேறு மாநிலங்களில் தமிழர்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்பது எவ்வளவு பொய்யான வாதம்.

தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீரென்று கலகம்

தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீரென்று கலகம்
தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீரென்று கலகம்
 
 
 
webteam
 
 
Published on: 
18 Jan 2018, 9:41 am
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீர் கலகம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு வீதிகளில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்து சம்பந்தமான பதாகைகளை கன்னட மொழி சார்ந்த அமைப்பினர் கிழித்தெறிந்து ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ட்ரினிட்டி ரோட்டில் வசிக்கும் தமிழர்கள், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி வாழ்த்து பதாகைகள் வைத்திருந்தனர். அதற்கு எதிராக பலர் திடீர் கலகத்தில் ஈடுப்பட்டனர். சாலைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அடித்து கிழித்தெறிந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதைபோன்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதமும் நடைபெற்றுள்ளது. தமிழ் பதாகைகளை பார்த்த சில கன்னட அமைப்பினர் அதனை அடித்து நொறுக்கி இருந்தனர். இதை போல சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்கதையாகியுள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்பிகளிடம் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதற்கு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லை என அப்பகுதி வாசிகள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் கன்னட மொழி வெறியர்களின் இந்த வெறிச் செயல் சார்ந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன.

https://www.puthiyathalaimurai.com/india/there-has-been-a-sudden-rebellion-against-tamils-------in-karnataka-

பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கதை - 1970களில் மும்பையில் என்ன நடந்தது?

1970களில் மும்பையில் வேலைக்காகக் குடிபெயர்ந்த தமிழர்களை விரட்டியடிக்க சிவசேனா முன்வைத்த முழக்கங்கள் இவை. இந்த மராட்டிய வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தால் அவை மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும்.

பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம், சமீபத்தில் பரப்பப்பட்ட வதந்தியால் பேசுபொருளாகியுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து கடந்த சில காலமாக தமிழகத்தில் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளைப் போலவே, மகாராஷ்டிராவில் 1970களில் தமிழர்களுக்கு எதிராகவு போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றன.

அந்த வன்முறைகளைத் தொடர்ந்து தமிழகத்திற்குத் திரும்பி வந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மகிழ்நன் " இப்போது நடந்துகொண்டிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் சர்ச்சைகள் மிகவும் தவறானது," என்று பிபிசியிடம் கூறினார்.

'மராட்டி மானோஸ்'

பால் தாக்கரே, சிவசேனா கட்சியை உருவாக்கியபோது அவர் முன்வைத்த முதன்மை முழக்கம் 'மராட்டி மானோஸ்' (Marathi Manoos) தான். இதன் பொருள் 'மண்ணின் மைந்தர்கள்'.

வேலைவாய்ப்புகளில், தென்னிந்தியர்களைவிட மகாராஷ்டிரா மாநிலத்தின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசியல் களத்தில் இறங்கிய பால் தாக்கரே இதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார். இதையொட்டி சில வன்முறைகளும் நடந்தன.

சிவசேனா என்ற அமைப்பின் அடிநாதமாக இந்த 'மராட்டி மானோஸ்' என்ற முழக்கம் இருந்தது. 1966ஆம் ஆண்டு அந்தக் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து, இன்று வரை பல்வேறு கட்டங்களில் இந்த முழக்கம் மும்பையிலும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் ஒலிக்கிறது.

மராட்டிய மக்களுக்காக அரசியல் களம் கண்ட பால் தாக்கரேவின் அரசியல் பயணம் அவரது தந்தையின் பயணத்தின் ஒரு நீட்சியாகவே இருந்தது.

சம்யுக்த மகாராஷ்டிரா

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு வந்த காலம். 1950களில் மும்பை(அன்றைய பம்பாய்) தங்களுக்கு வேண்டும் என்று குஜராத்தும் மகாராஷ்டிராவும் போட்டியிட்டன.

அப்போது இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்த 'சம்யுக்த மகாராஷ்டிரா' (ஒருங்கிணைந்த மகாராஷ்டிரா) இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் கேஷவ் தாக்கரேவும் ஒருவர். இவர் பிரபோதன்கர் தாக்கரே என்ற பெயரால் பிரபலமாக அடையாளம் காணப்பட்டார்.

இவரது மகன்தான் சிவசேனா அமைப்பின் நிறுவனரான பால் தாக்கரே.

இது மட்டுமின்றி பிராமணர் அல்லாதோர் சங்கத்தின் நிர்வாகியாக ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் உள்ளிட்டோருடன் பால் தாக்கரேவின் தந்தை பிரபோதன்கர் பணியாற்றியுள்ளார்.

இந்த அமைப்பு மூடநம்பிக்கை, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

வரதட்சணை வாங்கும் நபரின் வீட்டுக்கு முன்பாகச் சென்று கழுதையைக் கட்டி வைத்து போராடுவது எனப் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் பால் தாக்கரேவின் தந்தை.

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது மும்பையில் உள்ள பிராமணர்கள் தாக்கப்பட்டனர். பிரபோதன்கர் தங்கியிருந்த பகுதிக்கு போராட்டகாரார்கள் வந்தபோது அவர்களிடம், "நான் இருக்கும் இடத்தில் எப்படி பிராமணர்கள் இருக்க முடியும்? நான் அவர்களை ஏற்கெனவே விரட்டி அடித்துவிட்டேன்," என்று தெரிவித்தார்.

ஒரு கூட்டத்தில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய பால் தாக்கரே, அன்று எனது தந்தை பொய் சொல்லி பிராமணர்களைக் காப்பாற்றினார். என் தந்தை பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் போராடினார். தனிப்பட்ட பிராமணர்களுக்கு அவர் விரோதி அல்ல," என்று குறிப்பிட்டார்.

இதுபோன்ற அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்தான் பால் தாக்கரே.

மர்மிக் இதழின் பிறப்பு

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம்,SHIVSENA.ORG

படக்குறிப்பு,1965ஆம் ஆண்டு மர்மிக் இதழில் வெளி வந்த கேலிச் சித்திரம்

அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டான (கேலிச் சித்திரம் வரையும் ஓவியக் கலைஞர்) பால் தாக்கரே, Free Press Journal என்ற ஆங்கில நாளிதழில் அரசியல் கேலிச் சித்திரம் வரையும் வேலையில் இருக்கிறார். புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லட்சுமணன் உடன் இந்தப் பத்திரிகையில் வேலை பார்த்து வந்தார் தாக்கரே.

1950களின் பிற்பகுதியில், தனது பத்திரிகை ஆசிரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது வேலையை உதறி விடுகிறார் அவர்.

மும்பையை மகாராஷ்டிராவின் ஓர் அங்கமாக ஆக்காமல், யூனியன் பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற தனது நாளிதழிலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வேலையைவிட்டு வெளியேறினார்.

பிறகு சொந்தமாக வார இதழ் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு, தனது சகோதரருடன் சேர்ந்து 'மர்மிக்' (marmik) என்ற வார இதழை 1960ஆம் ஆண்டில் தாக்கரே தொடங்கினார்.

மகாராஷ்டிராவின் பிரச்னைகளை கேலிச் சித்திரமாக வரைந்து அந்த இதழில் வெளியிட்டு வந்தார். தொடக்கத்தில் அந்த இதழுக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

மர்மிக் இதழின் 'வெளிநபர்கள்' பரப்புரை

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம்,SHIVSENA.ORG

படக்குறிப்பு,தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை 'வெளிநபர்கள்' என்று விமர்சித்து மர்மிக் இதழில் வந்த கேலிச் சித்திரம்

1961ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மர்மிக் இதழின் கோணத்தை மாற்றியமைக்க உந்துதலாக இருந்தது.

அந்த கணக்கெடுப்பில் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில், மராட்டியர்கள் 41% பேரும், பிற மாநிலத்தவர்கள் 59% பேரும் இருப்பது தெரிய வந்தது.

அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுமார் 8% இருப்பது தெரிய வந்தது.

அப்போது தனது வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் மூலம் கிடைத்த பட்டியலை பால் தாக்கரே தனது மர்மிக் இதழில் வெளியிடுகிறார்.

அந்தப் பட்டியலில், மும்பை நகரத்தில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களில் மராட்டியர்கள் எவ்வளவு பேர், பிற மாநிலத்தவர் எவ்வளவு பேர் என்ற விவரம் இருந்தது.

மத்திய தர வர்க்கம்(Working Class) அதிகமுள்ள மும்பையின் பல அலுவலகங்கள், ஆலைகளில் 70% பணிகளில் தென்னிந்திய மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் இருப்பதாக மர்மிக் கட்டுரை எழுதியது.

மும்பை மண்ணின் மைந்தர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை 'வெளிநபர்கள்' (outsiders) எடுத்துக் கொள்வதாக பால் தாக்கரே குற்றம் சுமத்தி கேலிச் சித்திரங்களை வரைந்தார்.

தலைவலியான கம்யூனிஸ்ட் கட்சி

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

1970களின் பிற்பகுதிகளில் இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. இந்த நிலைமை மும்பையிலும் எதிரொலித்தது.

ஆனால் அதேநேரத்தில் கூலி உயர்வு உள்ளிட்ட தொழிலாளர் நலன் சார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது.

மும்பையைச் சுற்றி ஏராளமாக இருந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை முன்னெடுத்தது.

"தொழிலாளர் நலன் சார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருவது ஆலை முதலாளிகளுக்கு தலைவலியாக இருந்தது. இதை மடைமாற்ற பால் தாக்கரேவை ஆலை முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

மராட்டியர்களுக்கு மும்பையில் வேலை கிடைக்கவில்லை என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வந்த பால் தாக்கரே இதை கையில் எடுத்துக் கொண்டு மராட்டி மானோஸ் என்ற முழக்கத்தை முன்வைத்தார்" என்று மும்பையில் வளர்ந்தவரும், பத்திரிகையாளருமான மகிழ்நன் தெரிவித்தார்.

வேலையில் சேரும் தென்னிந்தியர்களின் பட்டியலை பால் தாக்கரே தனது இதழில் தொடர்ந்து வெளியிட்டு, "உனக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு மதராஸி தான் காரணம்" என்று மராட்டியர்களை நோக்கி எழுதுகிறார்.

"லாபத்திற்காக குறைந்த கூலிக்கு வருபவர்களை முதலாளிகள் வேலைக்கு அமர்த்துகின்றனர். அனைவருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்," என்று கம்யூனிஸ்ட்கள் எதிர் பிரசாரம் செய்தனர்.

கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களுக்கு சென்று தாக்கரேவும் கூட்டம் நடத்தினார்.

அந்த கூட்டங்களில், "மராட்டியர்கள் உணர்வுடன் இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட்கள் தொழிலாளர்கள் என்று கூறி உங்களை சுரண்டுகின்றனர். நீ மராட்டி என்ற உணர்வே இல்லாமல் போக செய்கின்றனர்.

ஆலைகளில் முக்கிய பொறுப்புகளில் மராட்டியர்கள் இல்லாதவர்கள் பணியில் இருக்கிறார்கள். கீழ் மட்ட பணிகளில் மராட்டியர்களை பணியமர்த்துகின்றனர்" என்று தாக்கரே பரப்புரைகளை மேற்கொண்டதாக மகிழ்நன் கூறினார்.

ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வீரியத்தை குறைக்க அவருக்கு இது போதுமானதாக இல்லை.

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம்,COMMUNISTPARTYOFINDIA.COM

படக்குறிப்பு,கொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண தேசாயின் இறுதி ஊர்வலம்

மதராஸிகளை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் சிவசேனா இயங்கி வந்தாலும், ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் விஷயத்தில் அவர்களுக்கு கம்யூனிஸ்ட்கள் எதிரிகளாக இருந்தனர்.

1967ஆம் ஆண்டு தனது மர்மிக் இதழில் கம்யூனிஸ்ட்களை ஒழிப்பது தான் தனது லட்சியம் என்று வெளிப்படையாக தாக்கரே அறிவித்தார்.

சிவசேனா ஆதரவாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அவ்வபோது மோதலில் ஈடுபட்டு, அவர்களின் கட்சி அலுவலகங்களை உடைத்து நொறுக்கினர்.

இந்த வன்முறையின் நீட்சியாக 1970ஆம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தொழிற்சங்க தலைவருமான கிருஷ்ணா தேசாய் என்பவர் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிவசேனாவின் ஆதரவாளர்கள். பால் தாக்கரே தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டார் என்று குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட்கள் முன்வைத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பால் தாக்கரே, “தேசாய் எனது போட்டியாளர், எதிரி அல்ல. அவரின் மரணத்தின் மூலம் எங்களுக்கு இடையே இருந்த போட்டி முடிவுக்கு வந்துள்ளது,” என்று தெரிவித்தார்.

மராட்டியர்களை நோக்கி தீவிர பரப்புரை

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேலையில்லாமல் இருக்கும் மராட்டியர்களை ஒன்று திரட்ட பல கட்டுரைகளையும், கேலிச் சித்திரங்களையும் பால் தாக்கரே வரைந்தார்.

அதில் மிக முக்கியமான ஒன்று, ‘வாச்சா அனி தண்டா பஸா‘. ‘வாச்சா‘ என்றால் வாசி, ‘பஸா‘ என்றால் அமைதியாக அமரு என்று பொருள்.

"உனது வேலையை மதராஸி பறிக்கிறான். நீ வாசித்து விட்டு அமைதியாக இரு, உனக்கு தான் ரோஷம் இல்லையே என்ற பொருளில் இந்த தலைப்பின் கீழ் கேலிச் சித்திரங்களையும், மும்பையில் உய பதவிகளில் சேரும் பிற மாநிலத்தவர்களின் பட்டியலையும் பால் தாக்கரே தொடர்ச்சியாக வெளியிட்டார்" என்று மகிழ்நன் குறிப்பிட்டார்.

இதற்கு மும்பையில் வாழ்ந்த மராட்டி மக்கள் மத்தியில் ஆதரவு ஆலை எழுந்தது.

அதனால் 'வாச்சா அனி உட்டா' என்ற பரப்புரையை தொடங்கினார். இதன் பொருள் 'வாசித்து, விழித்துக்கொள்' என்பதாகும்.

அது மட்டுமின்றி, வேலையில்லாமல் தவித்த சில மராட்டியர்களுக்கு ஆலைகளில் பியூன், உதவியாளர் உள்ளிட்ட பணிகளை தனது நட்பு வட்டாரம் மூலம் பெற்றுத் தருகிறார் பால் தாக்கரே.

இதன்மூலம் மராட்டி மக்களின் கவனத்தையும், நம்பிக்கையையும் தாக்கரே பெறுகிறார்.

சிவசேனா உதயம்

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தனது வார இதழில் வெளியான ஒரு தலைப்பு, மும்பையில் உள்ள மத்திய தர வர்க்க மராட்டியர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது.

'கல்ச்சா மதராஸி தோடயாச் டிவ்சாத் துபாசி' (Kaalcha Madrashi, thodyach divsat tupashi) என்பது அந்த தலைப்பு. நேற்று வந்த மதராஸி சீக்கிரமாக பணக்காரன் ஆகிறான் என்பது இதன் பொருள்.

இது போன்ற தென்னிந்தியர்களுக்கு எதிரான கட்டுரைகளால் அவரது இதழுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மர்மிக் இதழின் மூலம் கிடைத்த ஆதரவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நினைத்தார் பால் தாக்கரே.

1966ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியான அவரது மர்மிக் இதழில் ஒரு முக்கிய செய்தியை பால் தாக்கரே அறிவித்தார்.

அதில், "நாங்கள் விரைவில் சிவசேனா தொடங்கி, யண்டு குண்டுவை தாக்குவோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

'யண்டு குண்டு' என்பது தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் பேசும் தென்னிந்திய மக்களின் மொழியின் ஒலி, யண்டு குண்டு(yandu-gundus) என்பதை ஒத்து ஒலிக்கிறது என்று மராட்டிய மக்கள் குறிப்பிடுவர்.

மர்மிக் இதழில் அறிவித்தது போலவே, 1966ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி சிவசேனாவை தொடங்கினார் பால் தாக்கரே.

வன்முறைக்குள்ளான உடுப்பி உணவகம்

சிவசேனா தொடங்கப்பட்ட பிறகு, 1966ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி மும்பையின் தாதர் சிவாஜி பூங்காவில் அந்த அமைப்பின் முதல் பேரணிக்கு தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார்.

"சொந்த ஊரில் 'வெளிநபர்களால்' அவமானப்படும் சுயமரியாதைமிக்க ஒவ்வொரு மராட்டியனும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்" என்று தாக்கரே தனது பத்திரிகையின் மூலம் அறைகூவல் விடுத்திருந்தார்.

அந்தப் பேரணிக்கு எதிர்பாராத எண்ணிக்கையில் மும்பையின் நடுத்தர வர்க்கத்தினர் திரண்டு வந்திருந்தனர்.

"மும்பையின் தண்ணீர், மின்சாரம், நிலத்தை பயன்படுத்தும் ஆலைகளும், அலுவலகங்களும் மதராஸிகளுக்கு வேலையை கொடுக்கிறது. மராட்டிய மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப்படுகிறார். நமது மண்ணில் நமக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை மதராஸிகள் தட்டி பறிக்கிறார்கள்," என்று அந்த கூட்டத்தில் வீரியமிக்க உரையை பால் தாக்கரே நிகழ்த்தினார்.

அந்த கூட்டம் முடிந்து திரும்பும் வழியில், மும்பையில் இருந்த உடுப்பி ஹோட்டலை சிவசேனாவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.

அது முதல் அடிக்கடி தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் தாக்கப்படுவது நடந்தது. பல இடங்களில் தென்னிந்தியர்களின் உணவகங்கள், நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

"லுங்கி அணிந்து கருப்பு தோலுடன் இருக்கும் நபர்களை அடித்து விரட்டுங்கள்" என்று பல இடங்களில் சிவசேனாவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

'ஐயர்', 'கணபதி','ஷெட்டி' என்ற பெயர் கொண்ட நபர்கள் தென்னிந்தியர்களாகக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

மும்பையின் பல இடங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள், பாதுகாப்பு கருதி ஒரே பகுதிக்கு குடிபெயர்ந்து அருகருகே குழுக்களாக வாழத் தொடங்கினர்.

மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவியும், பால் தாக்கரே வசித்த பாந்த்ரா பகுதியும் அருகருகே இருப்பதால் அடிக்கடி இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும்.

தென்னிந்திய மக்கள் மீது தாக்குதல் அதிகமாக நடக்கத் தொடங்கியதையடுத்து தமிழக மக்கள் தரப்பிலும் எதிர்த் தாக்குதலும் அரங்கேறியது.

1970களின் முற்பகுதியில், பிற்பகுதியில் இப்படி சிறியதும் பெரியதுமாக பல வன்முறைகள் நடந்தன.

தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்குச் சென்ற வரதா பாய் என்ற வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான், திரவியம் நாடார் ஆகியோர் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதலை நடத்தியதாக மகிழ்நன் தெரிவித்தார்.

"சிவசேனை அமைப்பின் ஆதரவாளர்களுடன் வரதராஜ முதலியாரின் ஆதரவாளர்களுக்கு அடிக்கடி கைகலப்பு ஏற்படும். இது தொடர்பாக மும்பையில் அப்போது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதுகளும் அரங்கேறின.

ஓரிரு முறை இந்த கைகலப்பு இரண்டு தரப்பினரும் ஆயுதங்கள் கொண்டு மோதும் சண்டையாகவும் மாறியதுண்டு."

இதில் பலர் கொல்லப்பட்டனர். பிழைப்பு தேடி மும்பைக்கு குடிபெயர்ந்த பல தமிழர்கள் இந்த வன்முறைக்குப் பயந்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இதுமட்டுமின்றி வரதா பாய், திரவியம் நாடார் ஆகியோர், மும்பையில் தமிழ் மக்களுக்காக தமிழர் பேரவை ஒன்றைத் தொடங்கினர்.

இந்த அமைப்பு மூலமாக தமிழர்கள் நலன் சார்ந்து பள்ளி, கோயில் திருவிழா, மருத்துவ உதவி எனப் பல உதவிகள் மேற்கொள்ளப்பட்டது.

புலம் பெயர் தமிழர்களின் நிலை

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மகாராஷ்டிரா மட்டுமல்லாது, பல இடங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தொழில் முடக்கப்படுவதும் வரலாறு நெடுகிலும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

காவிரி நதி நீர் பிரச்னையில் கன்னட சலுவாலியா என்ற அமைப்பினரால் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். கர்நாடகத்திற்குள் நுழையும் தமிழ்நாட்டு வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

இதேபோல மியான்மர்(அன்றைய பர்மா), இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பிழைப்புத் தேடித் தமிழர்கள் சென்ற போது ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமாக அவர்கள் அங்கிருந்து ஒரு நாளில் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

 

Edited by பெருமாள்
  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.