Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0

தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகள் / கூட்டணிகள் 10% முதல் 18% வாக்குகளைப் பெற்றுவந்திருப்பதை மக்களவைத் தேர்தல்கள் உணர்த்தி வந்திருக்கின்றன. அந்த வாக்கு விகிதம் 20% தாண்டிச் சென்றதில்லை. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு விகிதம் 25%ஐத் தாண்டிச் சென்றிருக்கிறது.

பாஜக தலைமையிலான கூட்டணி 18.28% வாக்குகளையும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (நா.த.க.) 8.11% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. அதேநேரம், மாநிலத்தில் திமுகவின் மூன்று ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் இது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

அதிமுகவோடு இணைந்து பணியாற்ற வேண்டும் அல்லது அதிமுக தங்கள் கைகளுக்கு வர வேண்டும் என்று எண்ணும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுகவின் டிடிவி தினகரன் ஆகிய திராவிடக் கட்சிகளின் வழிவந்தவர்களையும் உள்ளடக்கிய அணிதான் பாஜக கூட்டணி. ஆனால், திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்கும் மாற்றாக நா.த.க. தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது. தேர்தல் களமிறங்கிய 2016 முதல் தனித்துப் போட்டியிட்டு வருகிறது.

உயரும் வாக்கு விகிதம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.07% வாக்குகள், 2019 மக்களவைத் தேர்தலில் 3.90% வாக்குகள், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.58% வாக்குகள் என வாக்கு வங்கியைச் சிறிது சிறிதாக உயர்த்திவந்தது நா.த.க. 2024 மக்களவைத் தேர்தலில் 8.11% வாக்குகளைப் பெற்று, தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உயரும் அளவுக்கு வாக்கு விகிதத்தை உயர்த்திக்கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்சியின் ‘பி’ அணி என்று நா.த.க. விமர்சிக்கப்பட்டாலும், மற்றொருபுறம் வாக்கு விகிதம் உயர்ந்துவருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்குகளை நா.த.க. பெற்றிருக்கிறது, இதில் திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் மூன்றாவது இடம். தேர்தல் வெற்றி, தோல்விக்கு அப்பால் 50% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவதை ஓர் உத்தியாக நா.த.க. பின்பற்றிவருகிறது. சிவகங்கை தொகுதியில் எழிலரசி 1.62 லட்சத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இவரைப் போலவே பல தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களைவிட பெண் வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, கன்னியாகுமரியில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

இளையோர் வாக்குகள்: சீமான் பின்பற்றும் தமிழ்த் தேசிய, இனவாத, தூய்மைவாத அரசியல் தமிழ்நாட்டில் பிற கட்சியினரால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அதே நேரம், சீமான் பேசும் பேச்சை ரசிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் நா.த.க.வை ஆதரிப்பதன் வெளிப்பாடே மெதுவாக உயர்ந்துவரும் வாக்கு விகிதம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றைத் தேடும் நோக்கில் நா.த.க.வை இளைய தலைமுறையினர் ஆதரிக்கிறார்கள் என்று கூறப்படுவது உண்டு. அது சரி எனில், அவர்களின் வாக்குகளைக் கவர்வதில் திராவிடக் கட்சிகள் எந்தப் புள்ளியில் தடுமாறுகின்றன அல்லது தவறவிடுகின்றன என்கிற கேள்வி எழுகிறது.

இரண்டு பொதுத் தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நா.த.க.வுக்கு இந்த முறை அந்தச் சின்னம் கிடைக்கவில்லை. 15 நாள் இடைவெளியில் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தைப் பிரபலப்படுத்தி, 8.11% வாக்குகளைப் பெற முடிகிறது என்றால், நா.த.க.வையும் சீமானையும் வாக்காளர்கள் கவனிக்கிறார்கள் என்பதை இனிமேலும் யாரும் மறுத்துக்கொண்டிருக்க முடியாது.

இதுவரையில், கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்டு வரும் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி’ என்கிற முழக்கத்துக்கு மாறாக, தேர்தலில் பெறும் வாக்குகளைவிட வெற்றியின் முக்கியத்துவத்தை சீமான் உணரத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது.
 
https://akkinikkunchu.com/?p=279646

  • Replies 64
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kavi arunasalam

ஈழ விடுதலைப் போராட்டம்  என்பது சினிமாப் படம் இல்லை. எத்தனை உயிர் இழப்புகள், எவ்வளவு தியாகங்கள்,எவ்வளவு அழிவுகள், எத்தனை இடம்பெயர்வுகள்,  பாரிய அனர்த்தங்கள் எனப் பலதைக் கண்ட ஒரு விடுதலைப் போராட்டம். இன

ஈழப்பிரியன்

முன்னரே சீமான் சொல்லும் போது  எனக்கான வாக்கு இப்ப பாடசாலைகளுக்கு போய் கொண்டிருக்கிறார்கள். அது இப்போ தான் வெளிய வருது. பெற்றோர் சொல்லி பிள்ளைகள் திராவிடத்துக்கு வாக்கு போட்டார்கள்.

Eppothum Thamizhan

இதில் பிரபாகரனை என் இழுக்கிறீர்கள். இரட்டை இலை MGR உடையது. ஆனால் மைக் சின்னம்? எழுத்தில் வறட்சி  தெரிகிறது. படம்வரைவதோடு மட்டும் நிறுத்திகொண்டால் இருக்கிற மரியாதையையாவது காப்பாற்றி கொள்ளலாம்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆம் 

இனி இரட்டை இலையை பார்த்தேன் MGR தெரிந்தார் குத்தினேன் என்பதெல்லாம் நடக்காது 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமானை பொறுத்தவரை அவரின் அரசியல் முதிர்ச்சி இல்லாத தன்மையால் வாக்குளை இழந்து வருகின்றார். காங்கிரசை எதிர்ப்பது நியாயம் , ஆனால் பி ஜே பி இணை வெளிப்படையாக எதிர்ப்பதால் இவர் அடையும் நன்மை என்ன . மக்கள் ஒன்றும் அதை வைத்து இவருக்கு வாக்கு போடமாட்டார்கள். சில நேரங்களில் அமைதியாக நகர்வதே நல்லம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, விசுகு said:

ஆம் 

இனி இரட்டை இலையை பார்த்தேன் MGR தெரிந்தார் குத்தினேன் என்பதெல்லாம் நடக்காது 

அதோடை....  "தாத்தா காலத்திலை இருந்தே, தி.மு.க.வுக்குத்தான் ஒட்டுப் போடுகின்றோம்" என்ற வசனத்தையும் இனி கேட்க முடியாது.

😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் இந்த மாற்றம் நிகழத்தொடங்கி இருக்கிறது..

கட்டற்ற குடியேற்ற கொள்கைகளால் பலநாடுகளின் கலாச்சாரம் பண்பாடு மொழி அடையாளங்கள் அவர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்கள் என்று எல்லாமே மாறி அவர்கள் வாழ்நாளில் பார்த்தறியாத வேறு ஒரு நாட்டின் சமய கலாச்சார பண்பாட்டு விழுமிய கொண்டாட்டங்கள் தமது நாட்டின் அடையாளமாக மெல்ல மெல்ல மாறுவதை பார்க்கும்போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் தமது இன்னும் ஒரு தலை முறையிலேயே தாம் தம் சொந்த மண்ணில் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.. ஆம் அவர்களின் அந்த அச்சம் நியாயமானது.. கரிசனைகொள்ளவேண்டியது..

பூர்வக்குடிகளாக வாழ்ந்த ஒரு மண்ணில் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் எப்படி நாம் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டோம் அதன் பின் அதற்கு 50 வருடங்களுக்கு மேலாக நாம் இழந்தவற்றை மீளப்பெற நாம் இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் விலைகள்.. இத்தனை விலை கொடுத்தும் நம்மால் இழந்தவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியாத நிலை.. என்று எல்லாவற்றையும் கண்முன்னே சாட்சியாக பார்த்துக்கொண்டும் அனுபவித்துக்கொண்டும் இருக்கும் ஒரு இனத்தை சேர்ந்த நாம் எப்படி பாலஸ்த்தீனத்துக்கு ஆதரவு கொடுக்கிறோமோ அப்படி நியாயமான இந்த மக்களின் கோரிக்கைக்கு இனசுத்திகரிப்பு சாயம் பூசாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. அதுதான் தார்மீகம்..

அண்மையில் ரிசிசுனக் அரசு ருவாண்டா பில் அமுலாக்கியபோது அதிலிருந்து தப்ப சாரை சாரையாக அயர்லாந்து வந்து இறங்கியவர்களை பார்த்து அயர்லாந்தே மிரண்டு போய் இருந்தது..அவர்கள் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நின்று பேசியும் பொழுதுபோக்கியும் நேரத்தை செலவழித்துக்கொண்டிருந்த போது ஜரிஸ்காரர் ஆகிய தாம் வீதிக்கு வர பயத்தில் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததாக எழுதுகிறார்கள்.. விடுமுறை நாட்களில் பார்க் முழுவதும் வேறு மொழி பேசும் வேறு கலாச்சார உடைகளை அணிந்திருந்த முஸ்லிம் ஆண் பெண்களால் நிரம்பி வழிந்த போது தாங்கள் யாரும் பயத்தில் வழமையாக உடற்பயிற்சி செய்யும் பார்க்கிற்க்கு கூட செல்கவில்லை என்று எழுதுகிறார்கள்..

உங்கள் ஊரில் உங்கள் மொழிபேசாத இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் பியர்குடித்துக்கொண்டும் புகைத்துக்கொண்டும் இருந்தால் இயல்பிலேயே உங்களிற்கு பயம் வரத்தானே செய்யும் என்கிறார்கள்.. என்னைக்கேட்டால் கண்டிப்பாக என் பெண் ஆண் பிள்ளைகளைக்கூட புதியவர்கள் நிற்குமிடத்தால் தனிய வெளிய அனுப்பமாட்டேன்..

இதே தங்கள் நாட்டு இளைஞர்கள் தம்மொழி பேசுபவர்கள் கூட்டமாக நிற்கும்போது நம்பிக்கையோடு ஒரு முகமன் கூறிவிட்டு கடந்து செல்ல முடிகிறது என்கிறார்கள்.. ஏனெனில் அவர்கள் ஊரவர்கள் தெரிந்தவர்கள் ஒரே மொழி பேசுபவர்கள்.. அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளமுடிகிறது..

ஒருவர் எழுதுகிறார் மெதுவாக தள்ளாடி தள்ளாடி நடந்துபோய் வெள்ளிக்கிழமைகளில் தபாலகங்களில் பென்சன் எடுக்கும் முதியவர்கள் கூட பயத்தில் தங்கள் ஊரில் பென்சன் எடுக்க வீட்டை விட்டு போகவில்லை ஏன் என்றால் அன்று பென்சன் எடுக்கும் நாள் என்பதால் பல முதியவர்களிடம் அடித்து தள்ளிவிழுத்தி பணத்தை பறித்திருக்கின்றனர்.. எந்த காலத்திலும் தம் ஊரில் இது நிகழ்ந்ததில்லை என்கின்றனர்.. யாராவது முதியவர் எடுத்த பணத்தை மறந்துபோய் விட்டுவிட்டாலும் அதை தேடிக்கொண்டுபோய் குடுக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த மக்கள்..

இத்தனைக்கும் ஜரோப்பாவிலேயே இனவெறி குறைவான நட்புடன் புன்னகைக்கும் குணமுள்ளவர்கள் ஜரிஸ் மக்கள்.. இன்று அவர்களாலேயே மூச்சுவிட முடியவில்லை குடியேற்ற தொல்லையால்..

ஏன் இந்த மக்கள் இப்படி மாறி இருக்கின்றனர் என்றால் ஏன் நாங்கள் இப்படி எல்லாவற்றையும்  இழந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்தால் விடைகிடைக்கும்..

ஒரே விடை உங்கள் சொந்த நாட்டிலேயே நீங்கள் சிறுபான்மையினர் ஆனால் அப்புறம் கதை முடிந்தது.. சிறிராம ஜெயம் சொல்லு என்று ஜரிஸ் வீதியில் ஒரு இந்திய சங்கி ஜரிஸ்காரனை போட்டு அடிப்பதை கூட நாம் கண்ணால் காணலாம்..

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழன்பன் said:

சீமானை பொறுத்தவரை அவரின் அரசியல் முதிர்ச்சி இல்லாத தன்மையால் வாக்குளை இழந்து வருகின்றார். காங்கிரசை எதிர்ப்பது நியாயம் , ஆனால் பி ஜே பி இணை வெளிப்படையாக எதிர்ப்பதால் இவர் அடையும் நன்மை என்ன . மக்கள் ஒன்றும் அதை வைத்து இவருக்கு வாக்கு போடமாட்டார்கள். சில நேரங்களில் அமைதியாக நகர்வதே நல்லம் .

சீமான் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எந்த கட்சியுமே கூட்டணி வைக்ககூடாது.. பாஜக ஒரு தீண்டதகாத கட்சியாக உருவாகவேண்டும்.. பாஜகவை கண்டதுமே கூட்டணி வேண்டாம் இந்த சனியுடன் சேர்ந்தால் இருக்கும் நமது நாலுவாக்கும் இல்லாமல் போய்விடும் என்று அலறி அடித்துக்கொண்டு ஆளைவிடுடா சாமி என்று அலறிஅடித்துக்கொண்டு ஓடும் நிலை வரவேண்டும்.. 

மதவாதிகள் அடிப்படை முட்டாள்கள்..அவர்களால் பரந்து சிந்திக்கமுடியாது.. நாட்டை மூட நம்பிக்கைகளாலும் முட்டால்தனங்களாலும்நிரப்பி ஜந்தாறு நூற்றாண்டு பின்னோக்கி கொண்டு சென்று விடுவார்கள்.. மதவாதிகள் ஆளும் தாலிபான் போன்ற அரபுநாடுகள் எல்லாம் எத்தனை நூற்றாண்டு பின்னோக்கி இருக்கின்றன என்று பார்த்தாலே தெரியும்.. மதவாதிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இனி இரட்டை இலையை பார்த்தேன் MGR தெரிந்தார் குத்தினேன் என்பதெல்லாம் நடக்காது 

சைமன் கட்சியைப் பார்த்தேன். பிரபாகரன் தெரிந்தார் குத்தினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kavi arunasalam said:

சைமன் கட்சியைப் பார்த்தேன். பிரபாகரன் தெரிந்தார் குத்தினேன்.

உங்களது மதவாதத்தை கண்டிக்கிறேன்.😪

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொராவிடக் கட்சிகள் தங்கள் தங்களை புனர்நிர்மாணம் செய்துகொள்ளாவிட்டால்,  புதுப்பித்துக்கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு மாற்றீடாக BJP யும் நாகதவும்,.......... வருவது தவிர்க்க முடியாதது. 

எனக்கென்னமோ ஸ்ராலினுக்குப் பின்னர் திமுக வின் கதை கந்தல்தான் எனத் தோன்றுகிறது. அவர்களுக்கு ஊழல் செய்யவே நேரம் போதவில்லை. தங்களை எப்படி சுயபரிசோதனை செய்துகொள்ளப் போகிறார்கள்? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kavi arunasalam said:

சைமன் கட்சியைப் பார்த்தேன். பிரபாகரன் தெரிந்தார் குத்தினேன்.

இது சரியானதாகும்  அப்படி குத்த வேண்டும் என்பதற்காகத்தானே  சீமான் பிரபாகரன் படத்தை வைத்துள்ளார்  மற்றும்படி  இலங்கையில்  இலங்கையை  இவர்கள் எதுவுமே செய்து விட முடியாது என்பது தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

இது சரியானதாகும்  அப்படி குத்த வேண்டும் என்பதற்காகத்தானே  சீமான் பிரபாகரன் படத்தை வைத்துள்ளார்  மற்றும்படி  இலங்கையில்  இலங்கையை  இவர்கள் எதுவுமே செய்து விட முடியாது என்பது தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் 

பிரபாகரன் படத்தை  வாக்குச் சீட்டில் போடவா போகிறார்கள் அதைப் பார்த்து அதன்மேல் புள்ளடியிடுவதற்கு?  சுத்த கேனைத்தனமான கருத்து. 

நாதக  பிரபாகரன் பெயரை உச்சரிப்பதுதான் பலருக்கு நாதக மீது கடுப்பை ஏற்படுத்துகிறது. 

 ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிரபாகரன் என்கிற பெயரைக் கேட்டாலே  பலருக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.

😁

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னரே சீமான் சொல்லும் போது 

எனக்கான வாக்கு இப்ப பாடசாலைகளுக்கு போய் கொண்டிருக்கிறார்கள்.

அது இப்போ தான் வெளிய வருது.

பெற்றோர் சொல்லி பிள்ளைகள் திராவிடத்துக்கு வாக்கு போட்டார்கள்.

இனி பிள்ளைகள் சொல்ல பெற்றோர்கள் வாக்கு போடுவார்கள்.

திராவிடம் தான் வளர்வதற்கு பதிலாக

நாம் தமிழரை எவ்வாறு வீழ்த்தலாம் 

என்று இப்பவிருந்தே சூழ்ச்சியில் ஈடுபடும்.

திராவிடக் கட்சிகள் சூழ்ச்சியாலேயே வளர்ந்து பழக்கப்பட்டவர்கள்.

அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

வாழ்க நாம் தமிழர்.

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

பிரபாகரன் படத்தை  வாக்குச் சீட்டில் போடவா போகிறார்கள் அதைப் பார்த்து அதன்மேல் புள்ளடியிடுவதற்கு?  சுத்த கேனைத்தனமான கருத்து. 

நாதக  பிரபாகரன் பெயரை உச்சரிப்பதுதான் பலருக்கு நாதக மீது கடுப்பை ஏற்படுத்துகிறது. 

 ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிரபாகரன் என்கிற பெயரைக் கேட்டாலே  பலருக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.

😁

தமிழ் வாசித்து விளக்கும் ஆற்றல் இல்லையா??   யார் சொன்னது வாக்கு சீட்டில் பிரபாகரன் படமுண்டு என்று   எவருமில்லை  நானும் சொல்லவில்லை   புரிந்துதா??   2009 ஆண்டு இனவழிப்புக்கு பின். தமிழ்நாட்டிலுள்ள  அரசியல் கட்சிகள்  பிரபாகரன் பற்றி அல்லது எந்தவொரு இயக்கம் பற்றி அல்லது இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி அரசியல்மேடைகளில் பேசி அரசியல் செய்யக்கூடாது   காரணம் 2009   தங்களால் ஒன்றும்  இலங்கையை செய்ய முடியாது என்று நிறுவியுள்ளார்கள் .  தேவை என்றால் இலங்கைக்கு கனிமொழி தலமையில் சுற்றுலா சென்றவர்கள்  மகிந்தவுக்கு  கை கொடுத்த மாதிரி   கை கொடுக்கலாம்.  இவர்களால் செய்ய கூடியது அது மட்டுமே     இலங்கையை இலங்கையில் சரி  சர்வதேசத்தில். சரி  இந்த தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அல்லது தமிழ்நாடு மக்கள்  என்ன செய்ய முடியும்   ???  எதுவுமில்லை என்பதை 2009  நிருபித்து,..நிறுவி விட்டார்கள்    எனவேதான் இனி தேவையற்று கதைக்கப்படாது    சரியா?? அல்லது பிழையா ??? 

  • Haha 1
Posted
5 hours ago, Kandiah57 said:

இது சரியானதாகும்  அப்படி குத்த வேண்டும் என்பதற்காகத்தானே  சீமான் பிரபாகரன் படத்தை வைத்துள்ளார்  மற்றும்படி  இலங்கையில்  இலங்கையை  இவர்கள் எதுவுமே செய்து விட முடியாது என்பது தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் 

ராஜீவ் காந்தி கொலைக்கு பின் புலிகளை தமிழ் நாட்டில் என்ன இந்தியாவுக்கே பிடிக்காத போது பிரபாகரனின் படத்துக்கு வாக்கு போடுவார்கள் என எப்படி சொல்கிறீர்கள்?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமானை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் மட்டம்தட்டிப் பேசுவது அழகல்ல. நான் சீமான் அண்ணாவின் தம்பி அல்ல.  எனக்கும் நிறைய விமர்சனங்கள் உண்டு.  திருட்டுக் கட்சிகளை விட தேவலை என நினைக்கிறேன். ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்க்கலாமே. 

எப்ப விஜி அண்ணி கிளம்பி வாராங்களோ தெரியல!👀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபாகரன் படத்தை பார்த்து இள வட்டம் வாக்கு (எந்த கட்சி என்றாலும்) போடும் என்பது - இளவட்டத்தின் இப்பொது  இருக்கும் தகவல், சிந்தனை  ஆழத்தையும் பரிகாசிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, nunavilan said:

ராஜீவ் காந்தி கொலைக்கு பின் புலிகளை தமிழ் நாட்டில் என்ன இந்தியாவுக்கே பிடிக்காத போது பிரபாகரனின் படத்துக்கு வாக்கு போடுவார்கள் என எப்படி சொல்கிறீர்கள்?

இது நல்ல கேள்வி  சீமான் ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும்  பிரபாகரன் தனது அண்ணன் என்றும் மெடல் என்றும்.2009  இருந்து   பிரசாரம் செயது வருகிறார்      இன்று சீமானின். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வீதம்  8,1 ஆகும்  பிரபாகரனை வைத்து பிரசாரம் செய்தபடியால். தான்  இவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்று நம்புகிறேன்   இந்தியாவுக்கு பிரபாகரனை பிடிக்காது என்பது உண்மை  ஆனால் தமிழ்நாட்டில் 100% தமிழருக்கும் பிரபாகரனை பிடிக்காது என்று சொல்லி விட முடியாது  மேலும் பிரபாகரனை  பிடிக்காதவர்களுக்கும்.  அவரது போராட்டம்,.போராட்ட முறை,.. .கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு   உயிர் உள்ளவரை  போராடியது  ......இப்படி பல காரணங்கள்  பிடித்து உள்ளது     எனது நம்பிக்கை பிழையானது என்று நான் நிறுவ முடியாது   சீமானால். தான் அது முடியும்,.......அவர் பிரபாகரன் பற்றி பிரசாரம் செய்வதை தவிர்த்து அடுத்த தேர்தலை சந்திக்கட்டும்   அமோக வெற்றி பெற்றால்   எனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக்கொள்ளலாம்  🙏

25 minutes ago, Kadancha said:

பிரபாகரன் படத்தை பார்த்து இள வட்டம் வாக்கு (எந்த கட்சி என்றாலும்) போடும் என்பது - இளவட்டத்தின் இப்பொது  இருக்கும் தகவல், சிந்தனை  ஆழத்தையும் பரிகாசிப்பது.

அப்படி எனறால்  ஏன் படம் வைக்க வேண்டும்  ?? அவரது  போராட்டம் பற்றி ஏன் கதைக்க வேண்டும்??  தவிர்த்து விடுவது தானே !!!  எனது கருத்துகள் பிழையாகவுமிருக்கலாம்  ஆனால் அது  நிறுவ வேண்டும்   ..செயல்முறையுடன் நிறுவ வேண்டும்    உங்களால் முடியுமா?? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

உங்களது மதவாதத்தை கண்டிக்கிறேன்.😪

தவறான கருத்தானால் கண்டியுங்கள் விசுகு. ஏற்றுக் கொள்கிறேன்.

நான் எழுதியதில் எங்கே ‘மதவாதம்’ இருக்கிறது? என்று இங்கே நான் குழம்பிப் போய் இருக்கிறேன்.

5 hours ago, Kapithan said:

பிரபாகரன் படத்தை  வாக்குச் சீட்டில் போடவா போகிறார்கள் அதைப் பார்த்து அதன்மேல் புள்ளடியிடுவதற்கு?  சுத்த கேனைத்தனமான கருத்து. 

Kapithan, நான் ‘சைமன் கட்சி’ என்றுதானே எழுதினேன். இதில் என்ன ‘கேனைத்தனம் ‘ இருக்கிறது என்பது புரியவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kavi arunasalam said:

தவறான கருத்தானால் கண்டியுங்கள் விசுகு. ஏற்றுக் கொள்கிறேன்.

நான் எழுதியதில் எங்கே ‘மதவாதம்’ இருக்கிறது? என்று இங்கே நான் குழம்பிப் போய் இருக்கிறேன்.

சைமன் என்று நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சக்தி கிருஸ்ணசாமி எழுதிய வசனங்கள் பிரபல்யம். அதை இங்கே ‘உல்டா’செய்திருக்கிறேன்

எங்களோடு களத்துக்கு வந்தாயா?
தாயகம் மீட்கப் போர்க்களம் கண்டாயா?

துப்பாக்கியைத்  தோளிலாவது தாங்கினாயா?

அல்லது
களம் கண்ட   எங்கள் வீரர்களின் துப்பாக்கிகளை

துடைத்துத்தான் வைத்தாயா?

மாமனா? மச்சானா?
………..
உனக்கெதற்கு  தேசியத் தலைவர் படம்

2 minutes ago, விசுகு said:

சைமன் என்று நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?

சைமன் அருளானந்தம் என்றுதான் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். உண்மையில்லையா?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Kavi arunasalam said:

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சக்தி கிருஸ்ணசாமி எழுதிய வசனங்கள் பிரபல்யம். அதை இங்கே ‘உல்டா’செய்திருக்கிறேன்

எங்களோடு களத்துக்கு வந்தாயா?
தாயகம் மீட்கப் போர்க்களம் கண்டாயா?

துப்பாக்கியைத்  தோளிலாவது தாங்கினாயா?

அல்லது
களம் கண்ட   எங்கள் வீரர்களின் துப்பாக்கிகளை

துடைத்துத்தான் வைத்தாயா?

மாமனா? மச்சானா?
………..
உனக்கெதற்கு  தேசியத் தலைவர் படம்

சைமன் அருளானந்தம் என்றுதான் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். உண்மையில்லையா?

கிளற வெளிக்கிட்டால் எல்லாம் தான் நாறும். 

மேலே கட்டப்பொம்மன் வசனத்தை நாம் ஒவ்வொருவரும் முதலில் எம்மிடம் கேட்கணும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் இந்த மாற்றம் நிகழத்தொடங்கி இருக்கிறது..

கட்டற்ற குடியேற்ற கொள்கைகளால் பலநாடுகளின் கலாச்சாரம் பண்பாடு மொழி அடையாளங்கள் அவர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்கள் என்று எல்லாமே மாறி அவர்கள் வாழ்நாளில் பார்த்தறியாத வேறு ஒரு நாட்டின் சமய கலாச்சார பண்பாட்டு விழுமிய கொண்டாட்டங்கள் தமது நாட்டின் அடையாளமாக மெல்ல மெல்ல மாறுவதை பார்க்கும்போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் தமது இன்னும் ஒரு தலை முறையிலேயே தாம் தம் சொந்த மண்ணில் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.. ஆம் அவர்களின் அந்த அச்சம் நியாயமானது.. கரிசனைகொள்ளவேண்டியது..

பூர்வக்குடிகளாக வாழ்ந்த ஒரு மண்ணில் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் எப்படி நாம் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டோம் அதன் பின் அதற்கு 50 வருடங்களுக்கு மேலாக நாம் இழந்தவற்றை மீளப்பெற நாம் இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் விலைகள்.. இத்தனை விலை கொடுத்தும் நம்மால் இழந்தவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியாத நிலை.. என்று எல்லாவற்றையும் கண்முன்னே சாட்சியாக பார்த்துக்கொண்டும் அனுபவித்துக்கொண்டும் இருக்கும் ஒரு இனத்தை சேர்ந்த நாம் எப்படி பாலஸ்த்தீனத்துக்கு ஆதரவு கொடுக்கிறோமோ அப்படி நியாயமான இந்த மக்களின் கோரிக்கைக்கு இனசுத்திகரிப்பு சாயம் பூசாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. அதுதான் தார்மீகம்..

அண்மையில் ரிசிசுனக் அரசு ருவாண்டா பில் அமுலாக்கியபோது அதிலிருந்து தப்ப சாரை சாரையாக அயர்லாந்து வந்து இறங்கியவர்களை பார்த்து அயர்லாந்தே மிரண்டு போய் இருந்தது..அவர்கள் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நின்று பேசியும் பொழுதுபோக்கியும் நேரத்தை செலவழித்துக்கொண்டிருந்த போது ஜரிஸ்காரர் ஆகிய தாம் வீதிக்கு வர பயத்தில் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததாக எழுதுகிறார்கள்.. விடுமுறை நாட்களில் பார்க் முழுவதும் வேறு மொழி பேசும் வேறு கலாச்சார உடைகளை அணிந்திருந்த முஸ்லிம் ஆண் பெண்களால் நிரம்பி வழிந்த போது தாங்கள் யாரும் பயத்தில் வழமையாக உடற்பயிற்சி செய்யும் பார்க்கிற்க்கு கூட செல்கவில்லை என்று எழுதுகிறார்கள்..

உங்கள் ஊரில் உங்கள் மொழிபேசாத இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் பியர்குடித்துக்கொண்டும் புகைத்துக்கொண்டும் இருந்தால் இயல்பிலேயே உங்களிற்கு பயம் வரத்தானே செய்யும் என்கிறார்கள்.. என்னைக்கேட்டால் கண்டிப்பாக என் பெண் ஆண் பிள்ளைகளைக்கூட புதியவர்கள் நிற்குமிடத்தால் தனிய வெளிய அனுப்பமாட்டேன்..

இதே தங்கள் நாட்டு இளைஞர்கள் தம்மொழி பேசுபவர்கள் கூட்டமாக நிற்கும்போது நம்பிக்கையோடு ஒரு முகமன் கூறிவிட்டு கடந்து செல்ல முடிகிறது என்கிறார்கள்.. ஏனெனில் அவர்கள் ஊரவர்கள் தெரிந்தவர்கள் ஒரே மொழி பேசுபவர்கள்.. அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளமுடிகிறது..

ஒருவர் எழுதுகிறார் மெதுவாக தள்ளாடி தள்ளாடி நடந்துபோய் வெள்ளிக்கிழமைகளில் தபாலகங்களில் பென்சன் எடுக்கும் முதியவர்கள் கூட பயத்தில் தங்கள் ஊரில் பென்சன் எடுக்க வீட்டை விட்டு போகவில்லை ஏன் என்றால் அன்று பென்சன் எடுக்கும் நாள் என்பதால் பல முதியவர்களிடம் அடித்து தள்ளிவிழுத்தி பணத்தை பறித்திருக்கின்றனர்.. எந்த காலத்திலும் தம் ஊரில் இது நிகழ்ந்ததில்லை என்கின்றனர்.. யாராவது முதியவர் எடுத்த பணத்தை மறந்துபோய் விட்டுவிட்டாலும் அதை தேடிக்கொண்டுபோய் குடுக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த மக்கள்..

இத்தனைக்கும் ஜரோப்பாவிலேயே இனவெறி குறைவான நட்புடன் புன்னகைக்கும் குணமுள்ளவர்கள் ஜரிஸ் மக்கள்.. இன்று அவர்களாலேயே மூச்சுவிட முடியவில்லை குடியேற்ற தொல்லையால்..

ஏன் இந்த மக்கள் இப்படி மாறி இருக்கின்றனர் என்றால் ஏன் நாங்கள் இப்படி எல்லாவற்றையும்  இழந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்தால் விடைகிடைக்கும்..

ஒரே விடை உங்கள் சொந்த நாட்டிலேயே நீங்கள் சிறுபான்மையினர் ஆனால் அப்புறம் கதை முடிந்தது.. சிறிராம ஜெயம் சொல்லு என்று ஜரிஸ் வீதியில் ஒரு இந்திய சங்கி ஜரிஸ்காரனை போட்டு அடிப்பதை கூட நாம் கண்ணால் காணலாம்..

பிரித்தானிய வலதுசாரி ஊடகங்களில், டெயிலி மெயில் போன்ற, பீதியைக் கிளப்ப வரும் செய்திகள், கட்டுரைகளுக்கும் இந்தக் கருத்துக்கும் ஒரு வித்தியாசமில்லை.

தமிழர்கள் எல்லோரும் ஒழுக்கமானவர்கள், கடின உழைப்பாளிகள், பாரம்பரியத்தில் ஊறியவர்கள் (ஆசாரவாதிகள்) என்று என்னதான் வலதுசாரித்தனமான சிந்தனை இருந்தாலும், இனவாதம் நிறைந்த வலதுசாரிகளுக்கு இன்னுமோர் கூலிதான். தங்கள் நாட்டையும், கலாச்சாரத்தையும் சிதைக்க வந்த அந்நியர்தான்.

2009 இல் பாரிஸ் லாசப்பலுக்குப் போன பிற்பாடு இப்படி முகநூலில் எழுதியிருந்தேன்!

“ I walked 24 km in 5 hours to see all the landmarks in Paris, and managed to get two blisters in each sole!
Before flying back I went to Paris Nord to see how Tamils live there.. All my good feelings about Paris evaporated in few seconds when I came outside at Paris Nord!!”

2009க்குப் பின்னர் பலதடவை பிரான்ஸ், பாரிஸ் புறநகர் பகுதிகளுக்குப் போயிருந்தாலும், லாசப்பல் பக்கம் இன்னமும் போகவில்லை!  இடப்பக்கம் சரியும் எனக்கே குடியேற்றவாசிகள் மீது இப்படியான வலதுசாரிச் சிந்தனை இருக்கின்றதென்றால், வலதுசாரிகளுக்கு இன்னும் பத்துமடங்கு இருக்கும்!

இப்போது வலதுசாரிகளின் ஆதரவு பெருகிவருவதால், பிரெஞ்சுப் பூர்வீக மக்கள் பாரிஸுக்கு விரும்பி வருவார்களா அல்லது எல்லோரையும் துரத்த வருவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நிஜமாகவே சாதி அரசியல் தாண்டி வருமா தமிழ்நாடு? விசிகவிற்கு வாக்களிக்கும் இளைஞர்கள் என்றாவது நாதகவிற்கு வாக்களிப்பார்களா?

ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுடன் வேலை மற்றும் விளையாட்டு என்று பல வருடங்களாக பழகியதில், இதுவரை நாதகவிற்கு வாக்குப் போடும் ஒருவரை கூட நான் கண்டதில்லை. வெகு சிலரைத் தவிர, மற்றயோர் எல்லாம், வயது வேறுபாடின்றி, 'அவர்களின் ஆள் பார்த்தே' வாக்களிக்கின்றனர். பெரிய கட்சிகளும் அதற்கேற்பவே வேட்பாளர்களை நிற்பாட்டுகின்றன. விதிவிலக்கு ஓரிரு நட்சத்திர வேட்பாளர்கள் மட்டுமே.

ஒரு இளைஞன் சிறிது வித்தியாசமாக இருக்கின்றான். இனத் தலைவர், குலத் தலைவர் என்று இரண்டு தலைவர்களை ஆராதிக்கின்றான். இனத் தலைவராக சீமானை வரிந்து உதவிகளும் செய்கின்றான். ஆனால் அவனுடைய மற்றும் அவனின் குடும்ப வாக்குகள் என்றும் குலத் தலைமைக்கே. எப்போதும் அவன் மாம்பழத்திற்கே வாக்குப் போடுவான். சீமானின் வீடியோக்களை அடிக்கடி அனுப்புவான். ஆனால், தேர்தலில் வாக்களிக்கும் சமயங்களில், 'இது வேற - அது வேற' என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றான். 

கமலுக்கும் இதே போன்ற ஒரு பிரபலம் தான் இளைஞர்களிடையே இருக்கின்றது.

இதன் பின்னர் சீமான் அவர்கள் இன்னும் பெரிதாக மேலே போவார் என்று எதிர்பார்க்க முடியாது. அரசியலில், தேர்தலில் வரும் மாற்றங்கள் படிப்படியானவை அல்ல, அவை குறுகிய காலத்தில், சில தேர்தல்களிலேயே நாலு கால் பாய்ச்சலில் நடக்கவேண்டும். 

Edited by ரசோதரன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kandiah57 said:

இலங்கையை இலங்கையில் சரி  சர்வதேசத்தில். சரி  இந்த தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அல்லது தமிழ்நாடு மக்கள்  என்ன செய்ய முடியும்   ???  எதுவுமில்லை

Bild

இதெல்லாம் பொய்யா கோபால்🤣....கூவ கூவ இன்னும் வரும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

Bild

இதெல்லாம் பொய்யா கோபால்🤣....கூவ கூவ இன்னும் வரும். 😎

வரட்டும வரட்டும்.  கூவாக்,..கூவாக்,..

இஸ்ரேலினை  உலகின் பல நாடுகள் எதிர்கிறார்கள்.  ....இலங்கையை தான்  உலகில் ஒரு நாடும் எதிர்கவில்லை   ....மேலே படத்தில் உள்ள  பெரியவார்  எதிர்ப்பாரா  இல்லை ஏதாவது ஆர்ப்பாட்டம்  ..???

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விபத்து நடந்த அன்று என் தந்தை ஹட்டனில் இருந்தாராம். மீட்புப் பணியின் இரெண்டாம் அடுக்கில் தாம் இணைந்து கொண்டதாக சொல்லியுள்ளார். பின்னர் ஒரு பயணத்தின் போது வாகனத்தை இந்த வழியாக விட்டு, இடங்களையும் காட்டினார். அந்த காலத்தில் இலங்கையின் ரெக்கோர்ர்ட்டில் அதிக அளவான மக்கள் இறந்த நிகழ்வுகளில் ஒன்று இதுவென சொன்னார். 
    • புலிகளை மட்டும் அல்ல, ஆதரவாளர் குடும்பங்களை தேடி, தேடி வேட்டையாடிய பிரேமச்சந்திரனை கூட்டமைப்பில் சேர்த்து, எம்பியாக்கி, அருகில் நின்று போட்டோவும் எடுத்தார் தலைவர்!  ஏன்….இன ஒற்றுமைக்காக இந்த கயவர்களையும் மூக்கை பிடித்த படி அணைக்க வேண்டி இருந்தது. சாணாக்ஸ்சினை பற்றிய எமது மக்களின் நிலைப்பாடும் இதுவே. ஆனால் சீமானுக்கு இனத்தின் ஒற்றுமைக்காக இப்படி இளங்கோவனை அணைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை.   🤣
    • நுணலையும் தன் வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் நல்ல உதாரணம்.  இனிமேல் சிலவேளை அடக்கி வாசிக்கலாம்.  🤣 வீரத் தமிழன் பெருமாள் என்கிற உளவியலாளர்  Sigmund Freud கூறினால் சரியாகத்தான் இருக்கும்,.....🤣
    • ஏன்….புலிகள் கூட அமிர்தலிங்க்கத்தை சுட்டு விட்டு அதன் போது அதிஸ்டவசமாக தப்பிய சிவசிதம்பரத்தை புனர்வாழ்வுக்கு பின் புலிக்கொடி போட்டு இறுதியாத்திரை அனுப்பி வைத்தனர் இல்லையா? நீங்கள் மேலே சொன்னவை எல்லாம் - உள்ளதில் நல்ல கெட்ட தெரிவு எது என்பதை கையறு நிலையில் இருந்த மக்கள் எடுத்த முடிவு. சீமானுக்கு அப்படி அல்ல. அவர் இளங்கோவன் மரணத்தை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் கட்சிக்கோ, கொள்கைக்கோ, மக்களுக்கோ எந்த சேதாரமும் வந்திராது.    
    • சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சிரிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அதேவேளை, அந்நாட்டில் மூடியிருந்த பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உலகத்தலைவர்கள் பலர் சிரியாவிற்கு உதவ முன்வரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிரியாவிற்கு உணவு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   மேலும், புதிய நிர்வாகம் உடன்படுமாயின் சிரியாவிற்கு தேவையான இராணுவ பயிற்சிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி அரசாங்கமும் தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/britian-s-contact-with-a-syrin-rebel-group-1734294048
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.