Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவர்களுடைய காலம் வரைக்கும் வெளிநாட்டில் இருந்து இதை தான் செய்து கொண்டிருக்க போகிறார்கள்.

வேற என்ன செய்ய முடியும். ஊருக்கு போனால் ஊரில் உள்ள சொந்த காணியையே காபாத்த முடியவில்லை. கள்ள உறுதி போட்டு காணி களவு போகப்போகிது யாருக்காவது வித்துவிடு என்று அறிவுரை கூறப்படுகிறது. நாங்கள் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி அதற்குள் வாழ்ந்துவிட்டு சாக வேண்டியதுதான். பேச்சு பல்லக்கு தம்பி காநடை என்பது போலத்தான் நமது சீவியம். அக்கம் பக்கத்து நமது ஆட்களிடம் இருந்து காணியை காப்பாற்றுவதே ஒரு போராட்டம். சிங்களவனிடம் இருந்து மண்ணை மீட்க முடியுமா என்பது…?

  • Sad 1
  • Replies 328
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

ஈழப்பிரியன்

கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

இராணுவத்தினர் தங்கள் கிராமத்திற்குள் நுழைகிறார்கள் என்கிற செய்தி அறிந்தவுடன் உடுத்த உடையுடன் மாற்றுத்துணி கூட எடுக்காமல் மக்கள் ஏன் தப்பி ஓடினார்கள்? அவர்கள் கையில் தாம் அகப்பட்டு விடக்கூடாதே என்கிற பயத்தில். அவ்வாறு ஓடாமல் இருந்தவர்களுக்கும் தமது வீட்டை பார்ப்பதற்கு, பாத்திரங்களை எடுத்து வருவதற்கு சென்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், கடலில் மீன் பிடிக்க சென்ற வீட்டு தலைவனை சுட்டுக்கொன்ற சம்பவங்களும் ஏராளம். வன்னியில் இத்தனை லட்ஷம் மக்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? ஒவ்வொரு இடமாக சுற்றி வளைத்து, மனித குலத்திற்கு எதிரான போர் ஆயுதங்களை பயன்படுத்தி      குண்டுபோட்டு  தாக்கியழித்ததால் மக்கள் அவர்கள் முன்னேறும் பிரதேசங்களை  விட்டு  வெளியேறினர், அவர்களை புலிகள்  அழைத்துச் செல்லவில்லை. தலைநகருக்கு கிளாலிவழியாக சென்ற மக்களை கடலில் அழித்தது யார்? நவாலி தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் மேல் எதற்காக குண்டு போட்டார்கள்? புலிகள் தடுத்ததாலா? தமது மரணத்தை  கழுத்திலே சுமந்தவர்கள் அவர்கள். மக்களை பலிகொடுத்து அவர்கள் வாழவில்லை. சரணடைந்த புலிகளும் மக்களும் கொல்லப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் கூட்டிச்சேர்த்த மக்கள், போராளிகள் எல்லோரையும் கொன்று குவித்து, மக்களை புலிகள் கொன்று விட்டார்கள் நாங்கள் புலிகளை அழித்தோம் என்று அறிக்கை விட்டு எல்லோரிடமும் பாராட்டு பெறவே சிங்களம் விரும்பியது, அதற்காகவே தொண்டு நிறுவங்களை பலாத்காரமாக வெளியேற்றியது உண்மை வெளியே வராமல் இருப்பதற்காக, அங்கிருந்த மக்களின் தொகையை குறைத்துக்கூறியது, மக்களை மீட்கப் போர் செய்தவர்கள் அந்த மக்களுக்கான எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை, இறுதி நேரத்தில் தொண்டு நிறுவனங்களை செல்ல அனுமதியளித்து நல்ல பிள்ளை ஆகிக்கொண்டது. பெற்றோரால் கையளிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, விசாரணை செய்து போட்டு விடுகிறோம் என்று அழைத்துச் சென்ற புலிகளுக்கு, கூடச்சென்ற பாதிரியாருக்கு என்ன நடந்தது? சொல்லும் பதில்: அவர்களை புலிகள் கொன்று விட்டார்கள், வெளிநாட்டுக்கு சென்று விட்டார்கள். ஆதாரம் இருக்கிறதா அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றதற்கு? முள்ளிவாய்க்காலில் எல்லாமே மௌனிக்கப்பட்டபின்பு உலங்கு வானூர்தியில் அந்த பிரதேசத்தை பார்வையிட்டமுன்னாள் ஐ. நா. செயலாளர் பான் கி மூன் தெரிவித்தது. பல அடி உயரத்திற்கு புகை மூட்டமாக இருந்ததை அவதானித்ததாக. அதை யார் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்?  இதுதான் சிங்களம்! கடைசியில் அரசு, சர்வதேசம் சொல்வதை இந்தியா உட்பட காது கொடுத்து கேட்கவுமில்லை, மதிப்பளிக்கவுமில்லை. அதை அவர்கள் பலதடவை வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள். புலிகள் ஆற்றியது   தங்களின் தார்மீக கடமையையும், நம்பியது சர்வதேசத்தின் நடுவுநிலையையும், தங்கள் போராட்டத்தின் நிஞாயத்தை சர்வதேசம் புரிந்து உதவி செய்யுமென்றும். எல்லாம் முடிந்து அவர்களும் மடிந்து விட்டார்கள். அவர்களாலேயே இலங்கையில் நடந்த அடக்கு முறைகள் வெளிவந்திருக்கிறது. அவர்கள் போராடாமல் இருந்திருந்தாலும் எம் இனம் மௌனமாக அழிந்திருக்கும். இவர்களின் போராட்டத்தினால் காலம் தாழ்த்தியிருக்கிறது, வெளிஉலகிற்கு தெரிந்திருக்கிறது. எய்தவன் இருக்க அம்பை நோகும் உங்களை சொல்லிப்பயனில்லை, உங்களுக்கு எங்கள் வலியும் இழப்பும் தெரியப்போவதுமில்லை. யூட், கற்பகம் உட்பட. நீங்கள் விரும்பியபடி எழுதி மகிழுங்கள்.

சம்பந்தரின் இழப்பை விட, கில்மிசாவின் இசையும் காளியாட்டமுமே மக்களுக்கு முக்கியம் என்பதே இங்கு ஒப்பீடு.

உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்ல முடியவில்லை. ஏனெனில் அத்தனையும் வீண். 😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Justin said:

😂 இந்தா அடுத்த இலக்கு றெடி! உண்மையில், சும்மிற்குப் பிறகு போட்டு மொங்கவும் ஆள் றெடி: "சிங்களக் காதலி" வைத்திருக்கும் சாணக்கியன். இனி அடுத்த 20 வருடத்திற்கு மொத்தல் பைக்கு (punch bag) பஞ்சமில்லை. தமிழர்களுக்கு புதிய தலைவர்களும் தேவையில்லை எனலாம்😎.

நான் சிலவேளை உங்களைவிட வயது முதிர்ந்தவனாக இருக்கலாம் தவிர சுமந்திரன் உங்களைவிட வயது முதிர்ந்தவராக இருக்கலாம், அப்படி இருப்பதே எனது விருப்பமும்கூட, எனக்கு நன்றாகத் தெரியும் சுமந்திரனது சாவுச்செய்திய நான் அறியப்போவதில்லை ஆனால் நீங்கள் அவர் முதுமையுற்று இருக்கும்போது பின்பு அவர் மறையும்போது இருக்கக்கூடும் அப்போது பார்த்துக்கொள்ளுங்கள் நான் குறியதில் ஏதாவது நடந்தால்.

தவிர சிலவேளை நீங்களும் காலப்போக்கில் இதை உணர்வீர்கள். அபோது யாழ் கருத்துக்களம் உங்கள் நினைவில்வரும். 

மற்றப்படி ஒன்றுமில்லை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி ரணில் பேசும்போது ஆக்ரோசமாக எதிர்ப்பவர்கள் கூட சம்பந்தன் ஐயா பேசியபோது அமைதியாக செவிமடுத்தார்கள் - முன்னாள் எம்.பி. கோடீஸ்வரன் 

06 JUL, 2024 | 06:38 PM
image
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசும்போது ஆக்ரோஷமாக எதிர்ப்பவர்கள்கூட சம்பந்தன் ஐயாவின் பேச்சுக்களை அமைதியாக செவிமடுத்தார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளையால் கடந்த வியாழக்கிழமை (4) இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கண்ணீர் அஞ்சலி நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது.

தமிழ் அரசு கட்சியின் காரைதீவு கிளை செயலாளர் கதிர்காமத்தம்பி செல்வபிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது :

சம்பந்தன் ஐயா தந்தை செல்வநாயகத்தின் பாசறையில் வளர்ந்து 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முதன்முதல் அலங்கரித்தார். அன்று முதல் இன்று வரை கொள்கையிலும் இலட்சியத்திலும் மாறாத தலைவராக விளங்கினார். 

தமிழ் மக்களுக்காக முழு வாழ்வையும் அர்ப்பணித்தார். தமிழ் மக்களுக்கான தீர்வினை அவருடைய காலத்திலேயே அடைய வேண்டும் என்பதற்காக பற்றுறுதியுடன் செயற்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சம்பந்தன் ஐயா நியமிக்கப்பட்டார். 

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் அகிம்சை வழியில் தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுத்தார். 

உள்நாட்டு மற்றும் உலக தலைவர்கள் அடங்கலாக அனைத்து தரப்பினர்களுடனும் இராஜதந்திர பேச்சுக்களை நடத்தி தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர இறுதி மூச்சு வரை பகீரத பிரயத்தனங்கள் மேற்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நன்மதிப்பு மிக்க பெருந்தலைவராகவும் விளங்கினார். பக்குவமாகவும் ஆணித்தரமாகவும் உரையாற்றுவார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகின்றபோது ஆக்ரோஷமாக எதிர்ப்பவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றுகின்றபோது அவதூறாக ஏசுபவர்கள் உள்ளனர். ஆனால், இனவாதிகள் அடங்கலாக அனைத்து தரப்பினரும் சம்பந்தன் ஐயாவின் உரைகளை நிதானமாகவும் அமைதியாகவும் செவிமடுப்பது வழக்கம் என்றார். 

https://www.virakesari.lk/article/187836

  • கருத்துக்கள உறவுகள்
Posted

f6b0bb3c-r.-sambanthan-1_850x460_acf_cro

சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன்.

யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது கட்சியின் முதுபெரும் தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக் கணக்கானவர்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் ஏற்பாட்டாளர்கள் சிந்திக்கவில்லை? உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த கட்சிக்காரர்களும் உட்பட ஒரு தொகுதி கட்சித் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலே அங்கே ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு வந்திருக்கலாம்.

அஞ்சலி நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு அருகே யாழ் மத்திய கல்லூரி வழமை போல இயங்கியது.மண்டபத்தில் ஒலித்த சோக கீதத்தைத் தாண்டி பள்ளிக்கூடப் பிள்ளைகளின் இரைச்சல் கேட்டது.யாழ் நகரம் வழமை போல இயங்கியது.கடைகள் பூட்டப்படவில்லை; நகரத்தின் விளம்பர ஒலிபெருக்கிகளில் வளமை போல சினிமா பாடல்கள் ஒலித்தன.சோக கீதம் ஒலிக்கவில்லை. நகரத்தில் துக்கத்தின் சாயலைக் காண முடியவில்லை. சம்பந்தரின் பூத உடல் பலாலி விமான நிலையத்திலிருந்து தந்தை செல்வா கலையரங்கை நோக்கி வந்த வழி நெடுக மக்கள் திரண்டு நின்று துக்கத்தை வெளிப்படுத்தவில்லை. அப் பூதவுடலை யாழ்ப்பாணத்திலிருந்து வழியனுப்பி வைத்த பொழுதும் மக்கள் திரண்டு நின்று வணக்கம் செய்யவில்லை.

ஆனால் தந்தை செல்வாவின் பூதவுடல் தெல்லிப்பளையிலிருந்து முற்ற வெளியை நோக்கி வந்த பொழுது வழிநெடுக மக்கள் திரண்டு நின்றார்கள். சில இடங்களில் சில கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலம் நீண்டு சென்றதாகத் தகவல். அது ஒரு தேசிய துக்க நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டது. மக்கள் தன்னியல்பாக செல்வாவை தந்தை என்று அழைத்தார்கள்.தன்னியல்பாக ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதி ஊர்வலத்தில் திரண்டார்கள். ஆனால் சம்பந்தருக்கு அது நடக்கவில்லை. ஏன் ?

ஈழத் தமிழர்களின் நவீன அரசியலில் மிக நீண்ட காலம், இறக்கும்வரை பதவியில் இருந்த ஒரு தலைவர் அவர். தமிழ் மக்களின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற திருக்கோணமலையின் பிரதிநிதி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டம், ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய மிதவாத அரசியல் ஆகிய மூன்று கட்டங்களையும் தொடுக்கும் மூத்த அரசியல்வாதி. எல்லாவற்றையும் விட முக்கியமாக கிழக்கில் இருந்து எழுச்சி பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதிக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அஞ்சலி செய்யாதது ஏன்?

ஏனென்றால், சம்பந்தர் இறக்கும்பொழுது ஏறக்குறைய தோல்வியுற்ற ஒரு தலைவராகவே இறந்தார்.

சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு முன்னப்பொழுதையும் விட அதிகம் விட்டுக்கொடுப்பதன் மூலம் ஒரு தீர்வைப் பெறலாம் என்று அவர் கற்பனை செய்தார். அதில் தோல்வியடைந்தார். எனவே அவரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புத்தான்.

ஆயுத மோதல்களுக்கு பின்வந்த மிதவாத அரசியலின் தலைவரான அவர் நீட்டிய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கத் தயாராக இருந்திருந்தால். சம்பந்தரின் வழி வெற்றி பெற்றிருக்கும்.ஆனால் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு ராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. அதைவிட முக்கியமாக அது அரசியல் வெற்றியாக மாற்றப்பட முடியாத ஓர் இனப்படுகொலை.ராஜபக்சக்கள் அந்த வெற்றியை ஒரு கட்சியின் அடித்தளமாக மாற்றினார்கள்.அதன் மூலம் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கினார்கள்.

யுத்த வெற்றிவாதம் எனப்படுவது சம்பந்தருடைய விட்டுக் கொடுக்கும் அரசியலுக்கு எதிரானது.யுத்த வெற்றிவாதமானது தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது சம்பந்தர் மட்டும் தனிக்குரலில் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்; பிரிக்கப்படாத இலங்கைக்குள் ; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆயுத மோதல்களுக்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த அப்படிப்பட்ட ஒரு தலைவரை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு உரிய முக்கியத்துவம் கொடுத்து பொருத்தமான விதத்தில் கையாளத் தவறியது. அவருடைய விட்டுக் கொடுப்புகளுக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் வீடு அவர் இறக்கும்வரை வழங்கப்பட்டது. அந்த வீட்டை ஏற்றுக்கொண்டதன் மூலமும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஸ்தானத்தை இழந்த பின்னரும் அந்த வீட்டை விடாது வைத்துக் கொண்டிருந்ததன் மூலமும் சம்பந்தர் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் குறைத்துக் கொண்டார்.

இப்படிப் பார்த்தால் சம்பந்தரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புதான்.

இந்த விடயத்தில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நம்புமளவுக்கு சம்பந்தர் ஏமாளியாக இருந்தாரா என்ற கேள்வி எழும். அல்லது அவர் தன் சொந்த மக்களின் போருக்கு பின்னரான கூட்டு உளவியலை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு தலைவராக இருந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது விளங்கிக் கொண்ட போதிலும் அதற்கு விரோதமாக செயல்பட்டவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? அதனால்தான் அவருடைய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்த பொழுது மக்கள் அதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வரவில்லையா ?

இரண்டாவதாக, அவரை தோற்கடித்தது, அவருடைய அரசியல் வாரிசுகள். யாரை தன்னுடைய பட்டத்து இளவரசர்போல வளர்த்தாரோ, அவரே சம்பந்தரைக் குறித்து பொதுவெளியில் விமர்சிக்க தொடங்கினார். அவர் மற்றொரு வாரிசாக இறக்கிய விக்னேஸ்வரன் அவருக்கு எதிராகத் திரும்பினார்.தனது சொந்த தேர்தல் தொகுதியில், திருக்கோணமலையில் தன்னுடைய வாரிசாக அவர் யாரை இறக்கினாரோ, அவர் தனக்குத் தெரியாமல் நியமனங்களைச் செய்கிறார் என்று புலம்பும் ஒரு நிலைமை ஏற்பட்டது. அதாவது தன் மிக நீண்ட அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பந்தர் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே மதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின் பின் கட்சி இரண்டாக உடைந்தது. கட்சிக்காரர்களே கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். தனது தாய்க் கட்சி உடைந்த போதும், அந்தக் கட்சியை கட்சிக்காரர்களே நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்திய பொழுதும், அதைத் தடுக்கும் சக்தியற்றவராக, கையாலாகாத ஒரு தலைவராக, சம்மந்தர் காட்சியளித்தார். அதாவது அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய கண் முன்னாலேயே அவருடைய தாய்க் கட்சி உடைக்கப்படுவதையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதையும் கையாலாகாதவராக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

சம்பந்தரை அவருடைய வாரிசுகளே தோற்கடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் அவருடைய அஞ்சலி நிகழ்விலும் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை தோற்கடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒர் அரசியல் தலைவரின் அஞ்சலி நிகழ்வு என்பதும் ஓர் அரசியல் நிகழ்வுதான். அதை அதற்குரிய கால முக்கியத்துவத்தோடு விளங்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கட்சிக்காரர்கள் செய்யத் தவறினார்கள்.அவரைப் பெருந்தலைவர் என்று அழைத்த கட்சிக்காரர்களே அந்த அஞ்சலி நிகழ்வை பிரம்மாண்டமானதாக ஒழுங்குபடுத்தத் தவறினார்கள். அல்லது அவர்களால் அவ்வாறு ஒழுங்குபடுத்த முடியாத அளவுக்கு மக்களின் கூட்டு மனோநிலை இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதனால் யாழ்ப்பாணத்தில் அந்த சாவீடு சோர்ந்து போன ஒரு சா வீடாகக் காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தில்,சம்பந்தரின் அஞ்சலி நிகழ்விலும் அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய வாரிசுகளும் அவருடைய விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்களும் அவர் இறந்த பின்னரும் அவரைத் தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்லலாமா?

https://athavannews.com/2024/1391210

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/7/2024 at 00:52, குமாரசாமி said:

சம்பந்தனின் மரண நிகழ்வுகள் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவர் தம் ஆதரவாளர்களுக்கும் ஒரு  பாடமாக அமையட்டும்.
சம்பந்தனின் மரண  நிகழ்ச்சிக்கு பின்னரும் சம்பந்தனின் அரசியல் வாழ்வை யாராவது மெச்சுகின்றனர் என்றால்.....!!!!
மேலதிக விபரம் இல்லாமல் அவர்களின் சுயரூபத்தை சுலபமாகவே கணக்கிடலாம்.

இந்த திரியை இணைத்து நான் அதற்கு கொடுத்த தலைப்பு: சம்பந்தர் காலமானார் என்பது தான். அவரது வயதை கணக்கில் எடுத்து சம்பந்தர் என்று மட்டுமே மரியாதை கொடுத்தேன். 

அவரை மாபெரும் தலைவர் என்றோ தமிழர்களின் சொத்து என்றோ ஈடு செய்ய முடியாத இழப்பு என்றோ ஏன் ஆழ்ந்த அஞ்சலிகள் என்று கூட நான் போடவில்லை.

எனது இதே கருத்தும் நிலைப்பாடும் தமிழர்கள் மத்தியில் அவ்வாறே உள்ளன என்பது அவரது இறுதி அஞ்சலி களிலும் அதை தொடர்ந்த இன்றைய ஆய்வுக் கட்டுரைகளிலும் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

24-668910913c312.webp

சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்.

உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்ற படி ஏறியபோதே இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது வாராந்த அரசியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 

"2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் தமிழரசியலுக்கு தலைமை தாங்கி வழி நடாத்திய சம்பந்தன் காலமாகிவிட்டார்.

சம்பந்தனைப் போல பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ்த்தலைவர் வேறு எவரும் இல்லை என்று கூறலாம். மரபு வழி தமிழ் அரசியலை விடுத்து இன்னோர் அரசியலை நகர்த்த முனைந்தமையே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகும்.

 அரசியல் போராட்டங்கள் 

தமிழர் அரசியலின் செல்நெறியை தீர்மானிப்பதற்கு இவரது தலைமைத்துவ காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சம்பந்தன் ஒருபோதும் தன்னை தமிழ்த்தேசியவாதியாக இனங்காட்டியதில்லை.

போராட்ட அரசியல்வாதியாகவும் அவர் இருக்கவில்லை. தமிழ்த்தேசிய அரசியலிலோ அல்லது போராட்ட அரசியலிலோ நம்பிக்கை கொண்டவர் என்றும் அவரை கூறி விட முடியாது.

தமிழ் மக்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களிலும் இவர் கலந்து கொண்ட வரலாறு கிடையாது. 1961ஆம் ஆண்டு கச்சேரிகளுக்கு முன்னால் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுத்தது. சம்பந்தன் அப்போது ஓர் இளம் சட்டத்தரணியாக கலந்துகொண்டார்.

போராட்டத்தின் ஒரு கட்டத்தில் படையினர் போராட்டத்தை நசுக்கி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தனர். சம்பந்தனும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே “தனக்கும் இப் போராட்டத்திற்கும் ஒரு தொடர்புமில்லை” என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

எனினும், சம்பந்தனிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சூழலுடன் இசைந்து செல்லும் போக்கை அவர் கடைப்பிடிப்பார்.

 தலைமை பொறுப்பு 

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1977 தேர்தலை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரகடனப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது.

24-66891091c3083.webp

சம்பந்தன் தமிழீழத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர் அல்ல. அதை அவர் நேரடியாகவே பலரிடம் கூறியிருந்தார். குறிப்பாக கிழக்கின் சூழ்நிலைக்கு தமிழீழத் தீர்மானம் பொருத்தமற்றது என்பது அவரது கருத்தாக இருந்தது.

எனினும், சூழலுடன் இசைவுற்று 1977ஆம் ஆண்டு தேர்தலில் அவர் முதன் முதலாக திருகோணமலையில் போட்டியிட்டார். வெற்றியும் அடைந்தார். புலிகள் இயக்கத்தையோ, ஆயுதப் போராட்டத்தையோ சம்பந்தன் ஏற்றுக்கொண்டவர் அல்ல.

இருந்தபோதும் புலிகளுடன் இணைந்தும் அரசியல் செய்ய தயாரானார். சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார். புலிகள் இயக்கம் சம்பந்தனை விரும்பி இருந்தது என்றும் கூறி விட முடியாது.

இயக்கம் ஜோசப்பரராசசிங்கத்தையே தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி வேண்டியது. ஜோசப்பரராசசிங்கம் சம்பந்தனை நியமியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே சம்பந்தன் தலைவராக்கப்பட்டார்.

இங்கு தான் ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. ஆனந்தசங்கரி சூழலுடன் இசைந்து போகின்ற ஒருவர் அல்லர். புலிகள் இயக்கத்தோடு அவரால் ஒத்துப் போக முடியவில்லை.

ஆனந்தசங்கரி  

இதனால் தூக்கி வீசப்பட்டார். உண்மையில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரத்திற்கு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை ஆனந்தசங்கரியிடமே சென்றது.

24-6689109238c46.webp

அடுத்த மூத்த தலைவர் அவராகத்தான் இருந்தார். 1970ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஒத்துப்போகாததன் காரணமாகவே சம்பந்தனிடம் தலைமை பாத்திரம் சென்றது.

இதனால் தான் ஆனந்தசங்கரி அதிஸ்டம் இல்லாத மனிதர் என்று கூறுவதுண்டு. தன்னிடமிருந்த தலைமை பாத்திரத்தை பறித்தவர் சம்பந்தன் என்ற கோபம் ஆனந்தசங்கரியிடம் இன்று வரை உண்டு.

சம்பந்தன் 1977ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் செயற்பாட்டாலும் சுமார் 32 வருடங்கள் துணை பாத்திரத்தையே ஆற்ற முடிந்தது. தலைமை பாத்திரத்தை ஆற்ற முடியவில்லை.

அதற்கான வாய்ப்பு 2009ஆம் ஆண்டே அவருக்கு கிடைத்தது. தலைமை பாத்திரம் தனக்கு கிடைத்தவுடன் தனக்கேயுரிய அரசியலை அவர் முன்னெடுக்க தொடங்கினார்.

சுதந்திர தினம்

அந்த அரசியல் என்பது இணக்க அரசியலே. இந்த அரசியல் தமிழ் அரசியலின் மரபு வழி பாரம்பரியத்திற்கு முரணானது. ஆனாலும், சந்தர்ப்பம் அறிந்து துணிந்து அதனை முன்னெடுத்தார். அவரது இணக்க அரசியலும் கட்டம் கட்டமாக இடம்பெற்றது.

24-668913249261f.webp

முதலில் தான் இணக்க அரசியலுக்கு தயார் என்பதை சைகைகள் மூலம் வெளிப்படுத்தினார். தமிழ் அரசியல் பாரம்பரியத்திற்கு முரணாக யாழ்ப்பாணத்தில் வைத்தே சிங்கக் கொடியை அசைத்துக் காட்டினார்.

சிங்கக் கொடி தொடர்பான தமிழரசு கட்சியின் நிராகரிப்பு சிங்கக் கொடி உருவான காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து புறக்கணித்த கொடி என்பது இதற்கு காரணமாக அமைந்தது.

தமிழ் தேசியவாதம் முனைப்படைந்த 70களில் தமிழ் பிரதேசங்களில் சிங்கக் கொடி ஏற்றுவதே துரோகமாக கருதப்பட்டது. சுதந்திர தினத்தை பொறுத்தவரையிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட்டது.

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசிற்கு கிடைத்த லைசன்சே சுதந்திரம் என கருதப்பட்டது. இதனால் சுதந்திர தினம் வருடம் தோறும் கரிநாளாகவே அனுஸ்டிக்கப்பட்டது.

1956ஆம் ஆண்டு சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலையில் சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி கட்ட முற்பட்டமையினாலேயே திருமலை நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மைத்திரிக்கு ஆதரவு  

தமிழ் அரசியல் மரபுக்கு மாறாக சம்பந்தன் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதுவும் இணக்க அரசியலுக்கான ஒரு சைகை தான்.

24-668913253127e.webp

பிரிக்கப்பட முடியாத இலங்கை என்ற கோசத்தையும் முன்வைத்து பிரிவினைக்கு எதிரானவன் என்ற தோற்றத்தையும் வெளிப்படுத்தினார்.

நல்லாட்சி காலத்தில் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்க முனைந்தார். இது விடயத்தில் குறைந்த பிசாசுடன் கூட்டுச் சேருதல் என்பது அவரது கொள்கையாக இருந்தது.

மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். இதன்போது ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட சந்திரிகா முன்வந்த போதும் அதனை நிராகரித்தார். “மனரீதியான ஒப்பந்தமாக இருக்கட்டும்” என கூறினார்.

சந்திரிகா “இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டபடியால் தான் ஒப்பந்தத்தை நிராகரிக்கின்றீர்களா?” என கேட்டபோது “மனரீதியாக இசைவு தான் முக்கியம” என குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் இவரது ஒத்துழைப்புக்கு பிரதி உபகாரமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்கியது. அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் 

ஆளும் கட்சியின் தலைவராகவே இருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வலிந்து தோள் கொடுத்து அரசாங்கத்தை பாதுகாத்தார். பொறுப்பு கூறல் விடயத்திலும் அரசாங்கத்தை பிணையெடுக்க முற்பட்டார்.

24-66891325adc34.webp

ஜெனிவாவில் அரசை பாதுகாக்கும் செயற்பாட்டையே அன்றைய காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது. “சர்வதேச விசாரணை முடிந்து விட்டது” என்கின்ற சுமந்திரனின் புகழ்பெற்ற வாசகமும் இக்காலத்திலேயே வெளிவந்தது.

அரசியல் யாப்பு மூலமாக தீர்வு என்பதிலும் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். நல்லாட்சி கால புதிய யாப்பு முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சிக்குட்பட்ட தீர்வு யோசனைக்கும் இணக்கம் தெரிவித்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும். பொங்கலுக்கு தீர்வு வந்துவிடும் எனவும் கூறிக் கொண்டிருந்தார்.

நல்லிணக்க அரசியலின் இரண்டாம் கட்டத்தில் கட்சியை அதற்கேற்ற வகையில் மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த முதலாவது அம்பு தான் புலி நீக்க அரசியல்.

இணக்க அரசியல் 

புலி நீக்க அரசியலை செய்யாமல் தென்னிலங்கை தரப்பை திருப்திபடுத்த முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதன் அடிப்படையில் புலிசார்பு அரசியல்வாதிகள் என கருதப்பட்ட புலிகளினால் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்ட கஜேந்திரனையும், பத்மினி சிதம்பரநாதனையும் கூட்டமைப்பிலிருந்து நீக்கினார்.

24-66891326285d7.webp

இது விடயத்தில் கஜேந்திரகுமாரை நீக்குவது சம்பந்தனின் நோக்கமாக இருக்கவில்லை. சர்வதேச விவகாரங்களை கையாள்வதற்கு கஜேந்திரகுமார் பொருத்தமாக இருப்பார் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியை ஒதுக்குவது தன்னை பலவீனமாக்கும் எனவும் அவர் கருதி இருக்கலாம். ஆனால் சம்பந்தனின் இணக்க அரசியலோடு கஜேந்திரகுமாருக்கு உடன்பாடு இருக்காததினால் அவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார்.

சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலுக்கான முதல் அடி கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்தினாலேயே நிகழ்ந்தது. இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்பிற்கு ஒரு தலைமை கிடைத்தது.

எனினும், அத்தலைமை தனக்குரிய இடத்தை பிடிக்க 10 வருடங்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது என்பது வேறு கதை. கஜேந்திரகுமார் இல்லாததினால் அவ்விடத்திற்கு சுமந்திரன் இறக்குமதி செய்யப்பட்டார்.

உண்மையில் சம்பந்தனின் அசல்வாரிசு சுமந்திரன் தான். விக்னேஸ்வரனும் இதன் அடிப்படையிலேயே இறக்கப்பட்டார். எனினும், அவர் சம்பந்தனோடு ஒத்துழைக்கவில்லை. சுமந்திரன் சம்பந்தனின் இணக்க அரசியலில் ஒரு படி மேலானவர் என கூறலாம்.

தென்னிலங்கை அரசியல் 

சம்பந்தன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் அதற்கு மேலாக தென்னிலங்கை அரசியலை முன்னெடுக்க முனையவில்லை. சுமந்திரன் தென்னிலங்கை அரசியலை முன்னெடுப்பதையே தனது பிரதான அரசியல் செயற்பாடாக வரித்துக் கொண்டார்.

24-66891326947a8.webp

இதனால், சம்பந்தன் பெருந்தேசியவாதத்தின் முதுகு தடவும் அரசியலை தேர்ந்தெடுத்தார் என கூறிவிட முடியாது. அதேவேளை, மலையக அரசியல், முஸ்லிம் அரசியல் போல பெருந்தேசியவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலை கரைக்கவும் முற்படவில்லை. ஒருவகையில் சம்பந்தன் பின்பற்றிய இணக்க அரசியலை கனவான் இணக்க அரசியல் என கூறலாம்.

சம்பந்தன் தனது அரசியலில் மிகவும் உறுதியாக இருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியினதும் ஜனநாயக கட்டமைப்புகள் தனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதியமையால் அதையெல்லாம் மீறினார். எல்லாவற்றிலும் தனி ஓட்டத்தையே மேற்கொண்டார்.

கூட்டமைப்பாகவோ, தமிழரசு கட்சியாகவோ ஓட முன் வரவில்லை. பல சந்தர்ப்பங்களில் கூட்டு முடிவுகளை நிராகரித்து தனித்தே முடிவுகளை எடுத்தார்.

மூத்த தலைவர் என்ற வகையில் அவருக்கு பெரிய எதிர்ப்புகள் ஆரம்பத்தில் வராதது அவரது தனி ஓட்டத்திற்கு சாதகமாக அமைந்தது. பிற்காலத்தில் சுமந்திரன் தனி ஓட்டம் ஓடுவதற்கு இவரே வழிகளை திறந்து விட்டார் என கூறலாம்.

மோடியின் அழைப்பு 

இணக்க அரசியலின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் தமிழ் தேசிய நீக்க அரசியல். சிங்கக் கொடி அசைப்பு, சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளல், எதிர்ப்பு அரசியலை கைவிடல், தாயகம் , தேசியம் , சுய நிர்ணயம் என்கின்ற அடிப்படை கோசங்களை கைவிடல் என்பன இதன் அடிப்படையிலேயே எழுச்சி அடைந்தன.

24-66891327133b6.webp

மொத்தத்தில் தமிழ் அரசியலில் பாரம்பரியத்தையே மாற்றி அமைக்க முற்பட்டார் எனலாம். இதன் ஒரு வெளிப்பாடாக இந்தியாவுடனான உறவுகளையும் கைவிட்டார்.

இந்திய பிரதமர் மோடி அழைத்தும் இந்தியாவிற்கு செல்ல அவர் முன் வரவில்லை. இந்திய சார்பு நிலை பெருந்தேசியவாதத்தை சினப்படுத்தும் என அவர் கருதி இருக்கலாம்.

பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு , தமிழின எதிர்ப்பு என்கின்ற தூண்களில் கட்டமைக்கப்பட்டது என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக இந்தியா எதுவும் செய்யும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை. இந்தியாவில் தங்கி இருப்பதை முழுமையாகவே தவிர்த்துக் கொண்டார்.

13ஆவது திருத்தம் 

தனது வசிப்பிடத்தையும் முழுமையாகவே இலங்கைக்கு மாற்றினார். இணக்க அரசியல் என்பது பரஸ்பரம் இரு பக்கம் சார்ந்த அரசியல். அது பரஸ்பரம் வெற்றி என்ற கோட்பாட்டை கொண்டது.

24-668915ba34a05.webp

பரஸ்பர முயற்சிகளையும் விட்டுக் கொடுப்புகளையும் வேண்டி நிற்பது. இங்குதான் சம்பந்தனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. தென்னிலங்கை தரப்பு அவரது முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை. அது தொடர்பான ஆத்மார்த்தமான அரசியல் விருப்பம் தென்னிலங்கையிடம் இருக்கவில்லை.

குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விருப்பு கூட அதனிடம் இருக்கவில்லை. மறுபக்கத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. தனது சொந்த மாவட்டத்திலேயே ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த சம்பந்தனால் முடியவில்லை.

கன்னியா வெந்நீரூற்றில் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்ததை தவிர வேறு எவற்றையும் செய்ய அவரால் முடியவில்லை. இறுதியில் விளைவுகள் அகமட்டத்தில் பாரதூரமாக இருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது கண்ணுக்கு முன்னாலேயே சிதைவடைந்தது. இந்த சோகம் காய்வதற்கு முன்னர் சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியும் சிதைவுற்றது.

பெருந்தலைவராக இருந்தும் சொந்த கட்சி நீதிமன்ற படி ஏறுவதை இவரால் தடுக்க முடியவில்லை. அவர் பல தடவை மன்றாடிக் கேட்ட போதும் அவரால் வளர்க்கப்பட்ட சுமந்திரன் அவரது மார்பிலேயே குத்தினார்.

உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை. தனது சொந்த கட்சி நீதிமன்றப் படி ஏறியபோதே இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம்” என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/yodhilingam-spoke-about-sampanthan-1720254684?itm_source=article

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

449313247_10168895714305075_192210070911

சம்பந்தர் : “பேசுவம்” - நிலாந்தன்.

சம்பந்தரின் மரணம் ஈழத்தமிழ்ச் சூழலில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியலின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும். அவருடைய பூதவுடல் யாழ்.நகரப் பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நகரம் வழமைபோல இயங்கியது. அதன் ஒலிபெருக்கிகளில் சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. நகரம்   ஏன் துக்கிக்கவில்லை?

சமூகவலைத்தளங்களில் ஒருபகுதி அவரை கௌரவமாக அஞ்சலித்தது. இன்னொருபகுதி கேவலமாக நிந்தித்தது. அது தமிழ் அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சியையும் காட்டியது. நவீன தமிழ் அரசியலில் குறிப்பாக சமூக வலைத்தளங்களின் காலத்தில்; மீம்ஸ்களின் காலத்தில், அதிகம் கீழ்த்தரமாக நிந்திக்கப்பட்ட ஒரு தலைவராக சம்மந்தரைக் கூறலாம். அவருடைய இறப்பின் பின் அவரைப்பற்றி வரும் குறிப்புக்கள் பெரும்பாலும் அதைத்தான் காட்டுகின்றன

2009க்கு பின்னரான கொந்தளிப்பான ஒரு மனோநிலையின் விளைவுகளே அவை. இக்கொந்தளிப்பான கூட்டுஉளவியலுக்குத் தலைமைதாங்கி ஈழத்தமிழரசியலை ஒரு புதிய பண்புருமாற்றத்தை நோக்கிச் செலுத்த வேண்டிய தவிர்க்கப்படவியலாத ஒரு பொறுப்பை காலம் அவருடைய கைகளில் கொடுத்தது. ஆனால் அதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை இப்பொழுது அவரை அஞ்சலித்தும் நிந்தித்தும் வரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஈழத் தமிழர்களின் நவீனவரலாற்றில் நீண்டகாலங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர். மற்றவர் சம்பந்தர். இருவருமே ஒப்பீட்டளவில் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை நிர்ணயித்தார்கள். குறிப்பாக சம்பந்தர் 2009க்குப்பின்னிருந்து கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் அரசியலின் தவிர்க்கப்படமுடியாத முதிய தலைவராகக் காணப்பட்டார்.

449746428_8293497937351007_3556431345054

அவருக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அவர் ஒரு மூத்த தலைவர். இரண்டாவதாக அவர் கிழக்கை மையமாகக்கொண்டு எழுச்சிபெற்ற தலைவர். மூன்றாவதாக,அவர் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை தீர்மானித்தவர்களில் ஒருவர்.

அவருடைய நம்பிக்கைகளை பொறுத்தவரை சம்பந்தர் ஆயுதப் போராட்டத்தில் முழுஅளவு ஆதரவாளர் அல்ல. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார். தன்னை சுகாகரித்துக்கொண்டார். ஆனால் அதற்காக அவர் ஆயுதப் போராட்ட வழிமுறையை ஏற்றுக்கொண்டார் என்று பொருள் அல்ல. அதனை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் அவருடைய வழி எதுவென்று தொகுத்துப் பார்த்தால் தெரியவரும்.

சம்பந்தரின் வழி எது?

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று சிந்தித்தால் அதாவது பிரிவினை அல்லாத வேறு எந்த ஒரு தீர்வைப்பற்றிச்  சிந்தித்தாலும் அதற்கு சிங்களமக்களின் சம்மதம் அவசியம் என்று சம்பந்தர் நம்பினார். எனவே சிங்களமக்களை எப்படி அரவணைப்பது?அவர்கள் மனதில் இருக்கும் பகையுணர்வை,அச்சங்களை முற்கற்பிதங்களை எப்படி நீக்குவது?என்றும் அவர் சிந்தித்தார். ஆயுதப் போராட்டம் சிங்களமக்களை பகை நிலைக்குத் தள்ளிவிட்டது என்றும் அவர் நம்பினார். எனவே சிங்கள மக்களை பகை நிலைக்குத் தள்ளாத ஒர் அரசியல் வழியை அவர் கடைப்பிடித்தார். சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது என்று அவர் தீர்மானித்தார். அதை நோக்கியே கட்சியைச் செலுத்தினார்.

அதனால்தான் முதலில் கஜேந்திரகுமார் அணியை வெளியேவிட்டார். அதனால்தான் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். அதனால்தான் விக்னேஸ்வரனையும் உள்ளே கொண்டுவந்தார்.

2015ல்நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தில் சம்பந்தரின் பங்களிப்பு இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட ரணில்-மைத்திரி அரசாங்கம் ஐநாவின் 30/1தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதிக்கான அத்தீர்மானத்தின் பிரகாரம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதன்படி நாடாளுமன்றம் ஒரு சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மந்தர் அதில் முழுமையாக ஒத்துழைத்தார். அதுவரையிலும் இருந்த எல்லா யாப்புகளும் தமிழ்மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை என்பதனால், தமிழ்மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கனவு கண்டார்.அதை நம்பித்தான் தமிழ்மக்களுக்கு ஒவ்வொரு பெருநாளின் போதும் வாக்குறுதிகளை வழங்கினார்.

அதுமட்டுமல்ல, மன்னாரில் நடந்த “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற ஒரு கருத்தரங்கில், ஆயர்களின் முன்னிலையில்,அவர் அந்த நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதில் உரையாற்றிய நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினேன். மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பு இன்றி,மூன்றாவது தரப்பு ஒன்றின் நெருக்குதல் இன்றி சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பானது, இனப்பிரச்சினையைத் தீர்க்க முன்வராது என்று நான் அந்த உரையில் சுட்டிக்காட்டினேன். ஆனால் சம்பந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தலையை சாய்த்து மண்டைக் கண்ணால் என்னைப் பார்த்தபடி சொன்னார்… “சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்; ஒரு வறட்டு வாதம்” என்று

யாப்புருவாக்க முயற்சிகள் ஓர் இடைக்கால வரைபுவரை முன்னேறின. அந்த இடைக்கால வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்தபொழுது அதில் டிலான் பெரேரா ஆற்றிய உரையை இங்கு சுட்டிக்காட்டலாம். அது சம்பந்தரின் அரசியல் வழியை மிகக்கூர்மையாக வெளிப்படுத்தும் ஓர் உரை. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காணவேண்டும். அவரைப்போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் உரையாற்றினார். அதுதான் உண்மை. ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக சம்பந்தர் அடியொட்ட வளைந்து கொடுத்தார். விளைவு என்ன?

யாப்புருவாக்க முயற்சிகளை அதன் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே 2018ல் காட்டிக்கொடுத்தார். சம்பந்தரின் கனவு கலைந்தது. அவர் தமிழ் மக்களுக்கு வழங்கிய எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துப்போயின. சிங்கள மக்களுக்கு நம்பிக்கை வரும் வரையிலும் விட்டுக் கொடுப்பதன் மூலம், ஒரு தீர்வைப் பெறலாம் என்ற அவருடைய நம்பிக்கை தோற்கடிக்கப்பட்டது. அந்த நம்பிக்கை மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. அதன் விளைவாக கட்சி அதுவரையிலும் வகித்து வந்த ஏகபோகத்தை இழந்தது. அடுத்த தேர்தலில் கட்சியின் வாக்குகள் சிதறின. அதுமட்டுமல்ல, கட்சியே இப்பொழுது சிதறிவிட்டது.

அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் சிதறவில்லை. தமிழரசுக் கட்சியே இரண்டாக உடைந்துவிட்டது. எனவே இப்பொழுது தொகுத்துப்பார்க்கலாம். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் கடந்த 15 ஆண்டுகளிலும் எதைச் சாதித்தார் என்று பட்டியலிடலாம்…

முதலாவதாக,சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முற்பட்டு அதில் தோல்விகண்டார். அதாவது வரலாறு அவருக்கு வழங்கிய பெறுமதியான ஆண்டுகளை அவர் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான தமிழரசியலில் பண்புரு மாற்றத்துக்கு தலைமை தாங்க அவரால் முடியவில்லை. இரண்டாவதாக,சிங்கள மக்களுக்கு அதிகம் விட்டுக் கொடுத்ததன்மூலம் அவர் எதையுமே பெற முடியவில்லை. மாறாக, தான் தலைமை தாங்கிய கூட்டின் சிதைவுக்கும் அதனால் காரணமாக அமைந்தார்.

ஈழத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் அதிக ஆசனங்களை கொண்டிருந்த ஒரு காலத்தில் அந்தக் கூட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் கூட்டு உடைந்துடைந்து சிறுத்துக்கொண்டு வந்து இப்பொழுது தமிழரசுக்கட்சியாக சிறுத்து விட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாக உடைந்துவிட்டது.தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவம் 22 ஆசனங்களில் இருந்து 13ஆசனங்கள் வரையிலும் உடைந்துபோனமை மகா தோல்வி.

அதுபோலவே தன்னுடைய சொந்தத் தொகுதியிலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்றுவந்த வாக்குகளை பட்டியலிட்டுப்பார்த்தால் அதில் படிப்படியாக வீழ்ச்சியைக் காணலாம். இப்பொழுதிருக்கும் நிலையில் திருக்கோணமலையில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சி களமிறங்கினால் இம்முறை சம்பந்தர் பெற்ற ஆசனம் அடுத்த முறை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிலசமயம் சம்பந்தரின் அனுதாப வாக்குகள் கிடைக்கக்கூடும்.

இவ்வாறு,தான் தலைமை தாங்கிய கூட்டுக்குள்ளும் ஒரு தலைவராக தோல்வியடைந்து,தனது சொந்த தேர்தல் தொகுதியில்,தனது தாய்ப்பட்டினத்தில்,தன்னுடைய ஆதரவுத் தளத்தை படிப்படியாகத் தேய விட்டதில் தோல்வியுற்று,தான் அங்கம் வகிக்கும் மூத்த கட்சிக்குள்ளும் ஒரு தலைவராக அவர் தோல்வியடைந்து விட்டார்.

ஒரு தலைவர் தன் வாரிசுகளாகக் களமிறக்கும் அரசியல்வாதிகள் அந்த தலைவரின் பெயரை வரலாற்றில் ஸ்தாபிப்பவர்களாக அமையவேண்டும். ஆனால் சம்பந்தர் கொண்டு வந்த சுமந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ அவ்வாறு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் சம்பந்தரின் வழி தவறு என்று கூறி அவரிடமிருந்து விலகிச் சென்றார். சுமந்திரன் சம்பந்தரின் பட்டத்து இளவரசர் போல காணப்பட்டார்.ஆனால் கட்சிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பொழுது அவர் சம்பந்தரை பொதுவெளியில் அவமதித்தார். தன்னுடைய வாரிசினாலேயே அவமதிக்கப்படும் ஒரு தலைவராக சம்மந்தர் அவருடைய இறுதிக் காலத்தில் காணப்பட்டார்.

அவருடைய தாய்க் கட்சி நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டபொழுது அதைத் தடுக்கும் சக்தியற்றவராக அவர் இருந்தார். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பிணக்கு என்று வரும்பொழுது மூத்தவர்கள் அதைத் தீர்த்து வைப்பார்கள். கட்சிக்குள்ளும் அப்படித்தான். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முது தலைவர்கள் பிணக்குகளைத் தீர்த்துவைப்பார்கள். ஆனால் மிக மூத்த தலைவராக அவருடைய சொல்லை  அவருடைய வாரிசே கேட்கவில்லை. விளைவாக கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல அவருடைய சொந்த தேர்தல் தொகுதியில் தன்னை மதியாமல் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற பொருள்பட அவர் ஒரு முறைப்பாட்டைச்  செய்யுமளவுக்கு பலவீனமாக காணப்பட்டார்.  சம்பந்தரின் சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை மதிப்பிட இது ஒன்றே போதும்.அவர் தன்னுடைய  தாய்க் கட்சியைச்  சிதைய விட்ட ஒரு தலைவர். அவரால் எப்படித் தேசத்தைத் திரட்டியிருக்க முடியும்?

எனவே சம்பந்தரின் கடந்த சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன? திருகோணமலையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மதகுரு,அவர் ஒரு முக்கியமான சமூக அரசியல் செயற்பாட்டாளர்,சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார், “சம்பந்தர் இறந்தால் அவருடைய கல்லறையில் என்ன வார்தையைப் பொறிக்க வேண்டும்?” என்று. “என்ன வார்த்தை” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார் “பேசுவம்” என்று போடலாம்.
 
https://www.nillanthan.com/6813/

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம்

ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்ட்டுள்ளது.

சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிழக்கு மாகாண அளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை, கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதுடன், தமது இரங்கல்களையும் தெரிவித்தனர். 

இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம் | Security To Be Strengthened In Trincomalee

இரண்டாம் இணைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டுள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி அவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும், இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெறவுள்ளது.

இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம் | Security To Be Strengthened In Trincomalee

முதலாம் இணைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் திருகோணமலையில் பலத்த பாதுகாப்பு முன்னனெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திருகோணமலை நகர் முழுதும் குறித்த பாதுகாப்பு பணியை முன்னெடுத்துள்ளனர்.

 சம்பந்தன் அவர்களின் இறுதி கிரியைகளுக்கு மக்களை ஏற்றுவதற்காக கிழக்கு மாகாண பேருந்து சாலைகளில் இருந்து பேருந்துகளை கிழக்கு மாகாண சபை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெறவுள்ளது.

இறுதி கிரியை

குறித்த இறுதி கிரியை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலித்தியும் வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம் | Security To Be Strengthened In Trincomalee

இறுதி கிரியைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரங்கல் பதாகை

மேலும், திருகோணமலை நகர் முழுதும் இரங்கல் தெரிவித்து  இரா. சம்மந்தனின் உருவப்படம் பொறித்த பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம் | Security To Be Strengthened In Trincomalee

இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மேலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமரர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Gallery

GalleryGallery

Gallery

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 4/7/2024 at 09:37, Justin said:

சும்மா அலட்டி நேரத்தை விரயமாக்காதீர்கள். முள்ளிவாய்க்காலுக்காக சம்பந்தனை திட்ட முதல் (அல்லது வேறெவரையும் திட்ட முதல்) ஆயுத முனையில் மக்களை தடுத்து வைத்தவர்களையும், அவர்கள் மீது குண்டு போட்டவர்களையும் தான் திட்ட வேண்டும். அதைச் செய்ய பக்தி முத்தி தடுத்தால் அது உங்கள் பிரச்சினை. அவ்வளவு தான் மேட்டர்.

 இதையெல்லாம் 2017 வரை இங்கே பேசியிருக்கிறோம். அந்த நேரம் "இனிப் பேசாதேயுங்கோ, முன்னகர்வோம்" என்று யாழ் நிர்வாகமும் பகிரங்கமாக அறிவித்து, (உங்களுக்குப் பச்சை போட்டவர்களில் இருவரும்😎) கை கூப்பிய பின்னர் நான் புலிகள் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தே வருகிறேன். ஆனால், உங்கள் போன்ற "மூடனுக்கு பீ அப்பினால் மூன்று இடத்தில் அப்பும்" என்ற மாதிரி நடந்து கொள்ளும் ஆட்களால், மீள நினைவூட்ட வேண்டியிருக்கிறது. 

அது சரி, இப்ப சம்பந்தரும் போய் விட்டார். சுமந்திரன் அடுத்த தேர்தலில் வெல்லாமல் தாயக மக்கள் வாக்களிக்கிறார்கள் (விரட்டியடிக்கிறார்கள்😂) என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓணாண், ஒட்டுண்ணி எல்லாம் கிளியர். யார் உங்கள் அடுத்த தலைவர் என நினைக்கிறீர்கள்?   

ஆயுத முனையில் தடுத்தவர்கள் என்று உங்கள் இஷ்டத்திக்கு கதை சொல்ல உங்கள் மனம் அவ்வளவா ? 
இப்படி சொல்ல கொஞ்சம் கூட அருகதை இல்லை? , களத்தில் தலைவரோடு தோளோடு தோளாக போராடியவர்களை தவிர  இப்படி கதை விட என்ன தைரியம் வேண்டும். 

-----------------------------------------------------------------

Edited by நிழலி
கள விதிகளை மதிக்காது எழுதிய பந்தி நீக்கம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, தமிழ் சிறி said:

449313247_10168895714305075_192210070911

சம்பந்தர் : “பேசுவம்” - நிலாந்தன்.

சம்பந்தரின் மரணம் ஈழத்தமிழ்ச் சூழலில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியலின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும். அவருடைய பூதவுடல் யாழ்.நகரப் பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நகரம் வழமைபோல இயங்கியது. அதன் ஒலிபெருக்கிகளில் சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. நகரம்   ஏன் துக்கிக்கவில்லை?

சமூகவலைத்தளங்களில் ஒருபகுதி அவரை கௌரவமாக அஞ்சலித்தது. இன்னொருபகுதி கேவலமாக நிந்தித்தது. அது தமிழ் அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சியையும் காட்டியது. நவீன தமிழ் அரசியலில் குறிப்பாக சமூக வலைத்தளங்களின் காலத்தில்; மீம்ஸ்களின் காலத்தில், அதிகம் கீழ்த்தரமாக நிந்திக்கப்பட்ட ஒரு தலைவராக சம்மந்தரைக் கூறலாம். அவருடைய இறப்பின் பின் அவரைப்பற்றி வரும் குறிப்புக்கள் பெரும்பாலும் அதைத்தான் காட்டுகின்றன

2009க்கு பின்னரான கொந்தளிப்பான ஒரு மனோநிலையின் விளைவுகளே அவை. இக்கொந்தளிப்பான கூட்டுஉளவியலுக்குத் தலைமைதாங்கி ஈழத்தமிழரசியலை ஒரு புதிய பண்புருமாற்றத்தை நோக்கிச் செலுத்த வேண்டிய தவிர்க்கப்படவியலாத ஒரு பொறுப்பை காலம் அவருடைய கைகளில் கொடுத்தது. ஆனால் அதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை இப்பொழுது அவரை அஞ்சலித்தும் நிந்தித்தும் வரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஈழத் தமிழர்களின் நவீனவரலாற்றில் நீண்டகாலங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர். மற்றவர் சம்பந்தர். இருவருமே ஒப்பீட்டளவில் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை நிர்ணயித்தார்கள். குறிப்பாக சம்பந்தர் 2009க்குப்பின்னிருந்து கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் அரசியலின் தவிர்க்கப்படமுடியாத முதிய தலைவராகக் காணப்பட்டார்.

449746428_8293497937351007_3556431345054

அவருக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அவர் ஒரு மூத்த தலைவர். இரண்டாவதாக அவர் கிழக்கை மையமாகக்கொண்டு எழுச்சிபெற்ற தலைவர். மூன்றாவதாக,அவர் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை தீர்மானித்தவர்களில் ஒருவர்.

அவருடைய நம்பிக்கைகளை பொறுத்தவரை சம்பந்தர் ஆயுதப் போராட்டத்தில் முழுஅளவு ஆதரவாளர் அல்ல. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார். தன்னை சுகாகரித்துக்கொண்டார். ஆனால் அதற்காக அவர் ஆயுதப் போராட்ட வழிமுறையை ஏற்றுக்கொண்டார் என்று பொருள் அல்ல. அதனை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் அவருடைய வழி எதுவென்று தொகுத்துப் பார்த்தால் தெரியவரும்.

சம்பந்தரின் வழி எது?

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று சிந்தித்தால் அதாவது பிரிவினை அல்லாத வேறு எந்த ஒரு தீர்வைப்பற்றிச்  சிந்தித்தாலும் அதற்கு சிங்களமக்களின் சம்மதம் அவசியம் என்று சம்பந்தர் நம்பினார். எனவே சிங்களமக்களை எப்படி அரவணைப்பது?அவர்கள் மனதில் இருக்கும் பகையுணர்வை,அச்சங்களை முற்கற்பிதங்களை எப்படி நீக்குவது?என்றும் அவர் சிந்தித்தார். ஆயுதப் போராட்டம் சிங்களமக்களை பகை நிலைக்குத் தள்ளிவிட்டது என்றும் அவர் நம்பினார். எனவே சிங்கள மக்களை பகை நிலைக்குத் தள்ளாத ஒர் அரசியல் வழியை அவர் கடைப்பிடித்தார். சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது என்று அவர் தீர்மானித்தார். அதை நோக்கியே கட்சியைச் செலுத்தினார்.

அதனால்தான் முதலில் கஜேந்திரகுமார் அணியை வெளியேவிட்டார். அதனால்தான் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். அதனால்தான் விக்னேஸ்வரனையும் உள்ளே கொண்டுவந்தார்.

2015ல்நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தில் சம்பந்தரின் பங்களிப்பு இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட ரணில்-மைத்திரி அரசாங்கம் ஐநாவின் 30/1தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதிக்கான அத்தீர்மானத்தின் பிரகாரம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதன்படி நாடாளுமன்றம் ஒரு சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மந்தர் அதில் முழுமையாக ஒத்துழைத்தார். அதுவரையிலும் இருந்த எல்லா யாப்புகளும் தமிழ்மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை என்பதனால், தமிழ்மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கனவு கண்டார்.அதை நம்பித்தான் தமிழ்மக்களுக்கு ஒவ்வொரு பெருநாளின் போதும் வாக்குறுதிகளை வழங்கினார்.

அதுமட்டுமல்ல, மன்னாரில் நடந்த “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற ஒரு கருத்தரங்கில், ஆயர்களின் முன்னிலையில்,அவர் அந்த நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதில் உரையாற்றிய நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினேன். மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பு இன்றி,மூன்றாவது தரப்பு ஒன்றின் நெருக்குதல் இன்றி சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பானது, இனப்பிரச்சினையைத் தீர்க்க முன்வராது என்று நான் அந்த உரையில் சுட்டிக்காட்டினேன். ஆனால் சம்பந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தலையை சாய்த்து மண்டைக் கண்ணால் என்னைப் பார்த்தபடி சொன்னார்… “சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்; ஒரு வறட்டு வாதம்” என்று

யாப்புருவாக்க முயற்சிகள் ஓர் இடைக்கால வரைபுவரை முன்னேறின. அந்த இடைக்கால வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்தபொழுது அதில் டிலான் பெரேரா ஆற்றிய உரையை இங்கு சுட்டிக்காட்டலாம். அது சம்பந்தரின் அரசியல் வழியை மிகக்கூர்மையாக வெளிப்படுத்தும் ஓர் உரை. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காணவேண்டும். அவரைப்போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் உரையாற்றினார். அதுதான் உண்மை. ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக சம்பந்தர் அடியொட்ட வளைந்து கொடுத்தார். விளைவு என்ன?

யாப்புருவாக்க முயற்சிகளை அதன் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே 2018ல் காட்டிக்கொடுத்தார். சம்பந்தரின் கனவு கலைந்தது. அவர் தமிழ் மக்களுக்கு வழங்கிய எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துப்போயின. சிங்கள மக்களுக்கு நம்பிக்கை வரும் வரையிலும் விட்டுக் கொடுப்பதன் மூலம், ஒரு தீர்வைப் பெறலாம் என்ற அவருடைய நம்பிக்கை தோற்கடிக்கப்பட்டது. அந்த நம்பிக்கை மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. அதன் விளைவாக கட்சி அதுவரையிலும் வகித்து வந்த ஏகபோகத்தை இழந்தது. அடுத்த தேர்தலில் கட்சியின் வாக்குகள் சிதறின. அதுமட்டுமல்ல, கட்சியே இப்பொழுது சிதறிவிட்டது.

அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் சிதறவில்லை. தமிழரசுக் கட்சியே இரண்டாக உடைந்துவிட்டது. எனவே இப்பொழுது தொகுத்துப்பார்க்கலாம். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் கடந்த 15 ஆண்டுகளிலும் எதைச் சாதித்தார் என்று பட்டியலிடலாம்…

முதலாவதாக,சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முற்பட்டு அதில் தோல்விகண்டார். அதாவது வரலாறு அவருக்கு வழங்கிய பெறுமதியான ஆண்டுகளை அவர் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான தமிழரசியலில் பண்புரு மாற்றத்துக்கு தலைமை தாங்க அவரால் முடியவில்லை. இரண்டாவதாக,சிங்கள மக்களுக்கு அதிகம் விட்டுக் கொடுத்ததன்மூலம் அவர் எதையுமே பெற முடியவில்லை. மாறாக, தான் தலைமை தாங்கிய கூட்டின் சிதைவுக்கும் அதனால் காரணமாக அமைந்தார்.

ஈழத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் அதிக ஆசனங்களை கொண்டிருந்த ஒரு காலத்தில் அந்தக் கூட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் கூட்டு உடைந்துடைந்து சிறுத்துக்கொண்டு வந்து இப்பொழுது தமிழரசுக்கட்சியாக சிறுத்து விட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாக உடைந்துவிட்டது.தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவம் 22 ஆசனங்களில் இருந்து 13ஆசனங்கள் வரையிலும் உடைந்துபோனமை மகா தோல்வி.

அதுபோலவே தன்னுடைய சொந்தத் தொகுதியிலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்றுவந்த வாக்குகளை பட்டியலிட்டுப்பார்த்தால் அதில் படிப்படியாக வீழ்ச்சியைக் காணலாம். இப்பொழுதிருக்கும் நிலையில் திருக்கோணமலையில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சி களமிறங்கினால் இம்முறை சம்பந்தர் பெற்ற ஆசனம் அடுத்த முறை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிலசமயம் சம்பந்தரின் அனுதாப வாக்குகள் கிடைக்கக்கூடும்.

இவ்வாறு,தான் தலைமை தாங்கிய கூட்டுக்குள்ளும் ஒரு தலைவராக தோல்வியடைந்து,தனது சொந்த தேர்தல் தொகுதியில்,தனது தாய்ப்பட்டினத்தில்,தன்னுடைய ஆதரவுத் தளத்தை படிப்படியாகத் தேய விட்டதில் தோல்வியுற்று,தான் அங்கம் வகிக்கும் மூத்த கட்சிக்குள்ளும் ஒரு தலைவராக அவர் தோல்வியடைந்து விட்டார்.

ஒரு தலைவர் தன் வாரிசுகளாகக் களமிறக்கும் அரசியல்வாதிகள் அந்த தலைவரின் பெயரை வரலாற்றில் ஸ்தாபிப்பவர்களாக அமையவேண்டும். ஆனால் சம்பந்தர் கொண்டு வந்த சுமந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ அவ்வாறு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் சம்பந்தரின் வழி தவறு என்று கூறி அவரிடமிருந்து விலகிச் சென்றார். சுமந்திரன் சம்பந்தரின் பட்டத்து இளவரசர் போல காணப்பட்டார்.ஆனால் கட்சிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பொழுது அவர் சம்பந்தரை பொதுவெளியில் அவமதித்தார். தன்னுடைய வாரிசினாலேயே அவமதிக்கப்படும் ஒரு தலைவராக சம்மந்தர் அவருடைய இறுதிக் காலத்தில் காணப்பட்டார்.

அவருடைய தாய்க் கட்சி நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டபொழுது அதைத் தடுக்கும் சக்தியற்றவராக அவர் இருந்தார். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பிணக்கு என்று வரும்பொழுது மூத்தவர்கள் அதைத் தீர்த்து வைப்பார்கள். கட்சிக்குள்ளும் அப்படித்தான். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முது தலைவர்கள் பிணக்குகளைத் தீர்த்துவைப்பார்கள். ஆனால் மிக மூத்த தலைவராக அவருடைய சொல்லை  அவருடைய வாரிசே கேட்கவில்லை. விளைவாக கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல அவருடைய சொந்த தேர்தல் தொகுதியில் தன்னை மதியாமல் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற பொருள்பட அவர் ஒரு முறைப்பாட்டைச்  செய்யுமளவுக்கு பலவீனமாக காணப்பட்டார்.  சம்பந்தரின் சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை மதிப்பிட இது ஒன்றே போதும்.அவர் தன்னுடைய  தாய்க் கட்சியைச்  சிதைய விட்ட ஒரு தலைவர். அவரால் எப்படித் தேசத்தைத் திரட்டியிருக்க முடியும்?

எனவே சம்பந்தரின் கடந்த சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன? திருகோணமலையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மதகுரு,அவர் ஒரு முக்கியமான சமூக அரசியல் செயற்பாட்டாளர்,சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார், “சம்பந்தர் இறந்தால் அவருடைய கல்லறையில் என்ன வார்தையைப் பொறிக்க வேண்டும்?” என்று. “என்ன வார்த்தை” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார் “பேசுவம்” என்று போடலாம்.
 
https://www.nillanthan.com/6813/

இதனை விட சம்பந்தனின் நரித்தனத்தை சொல்ல வேறு ஆதாரம் தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது சுயநிர்ணய உரிமையினையும், தனிநாட்டையும் வலியுறுத்தியே உருவாக்கப்பட்டது. இலங்கையரசாங்கத்திற்கும், புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையினை வெகுவாக வரவேற்ற கூட்டமைப்பு, புலிகளைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றும் ஏற்றுக்கொண்டது. இன்னொருவகையில் சொல்லப்போனால் புலிகளின் ஆயுதபோராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயப்படுத்தல்களை செய்யும் அமைப்பாகவும் இயங்கியது. இதனாலேயே 2001 மார்கழி மற்றும் 2004 சித்திரை ஆகிய காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னரை விடவும் அதிகமான வாக்குகளை அக்கட்சியினால் பெற முடிந்தது. அதாவது புலிகளின் ஆசீர்வாதத்துடன் அரசியலில் ஈடுபட்டமையினால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவினையும் இக்கட்சியினால் பெற்றுக்கொள்ள முடிந்தது. 

சம்பந்தரை ஆறு தடவைகள் தமிழ் மக்கள் தவறாது பாராளுமன்றம் அனுப்பி அழகுபார்த்தார்கள் என்று அகமகிழும் அவரின் ஆதரவாளர்கள் அவர் உண்மையிலேயே 8 - 9 தடவைகள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்குபற்றியிருந்தார் என்பதையும், அவர் 2-3  தடவைகள் தோல்வியடைந்தார் என்பதனையும் சொல்லப்போவதில்லை. இதுகூட "Cherry Picking" என்று கடந்து சென்றுவிடலாம். அவ்வாறு அவர் தோற்ற மூன்று வருடங்களாவன 1989, 1994 மற்றும் 2000 ஆகும். இதில் விசேஷம் என்னவென்றால் 1989 தேர்தல் இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆயுதமுனையில் அதன் கூலிகளான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய ஆயுத அமைப்புக்களுடன் இணைந்து சம்பந்தரின் கூட்டணியும் போட்டியிட்டிருந்தது. சம்பந்தர் இதுவரையில் போட்டியிட்ட தேர்தல்களில் பெற்ற வாக்குகளைப் பார்த்தால் 1977 இல் 15,144 வாக்குகள்(வெற்றி). 1989 இல் 6,048 வாக்குகள்(தோல்வி). 1994 இல் 19,525 வாக்குகள் (தோல்வி). 2000 தேர்தலில்  தெரிவுசெய்யப்படவில்லை. 2001 தேர்தலில் 40,110 வாக்குகள் (வெற்றி). 2004 தேர்தலில் 47,735 வாக்குகள் (வெற்றி). 2010 தேர்தலில் 24,488 வாக்குகள் (வெற்றி). 2015 தேர்தலில் 33,834 வாக்குகள் (வெற்றி). 2020 தேர்தலில் 21,422 வாக்குகள் (வெற்றி). 

இவற்றுள் குறிப்பிடப்படவேண்டிய விடயம் யாதெனில் புலிகளுக்கு அனுசரணை வழங்கியும், அவர்களை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டும் சம்பந்தர் அரசியல் நடத்திய 2001 (40,110) மற்றும் 2004(47,735) ஆகிய வருடங்களிலேயே அவரது அரசியல் சரித்திரத்தில் அதிகமான வாக்குகளைத் தமிழர்கள் அளித்தார்கள் என்பது. ஆக, பெருந்தலைவர் சம்பந்தனுக்கு புலிகளின் ஆசீர்வாதத்தினாலேயே இந்த அதிகரித்த வாக்குகள் கிடைத்தன. இதனை இல்லையென்றும், சம்பந்தனின் மேல் தமிழ் மக்கள் கொண்ட ஒப்பற்ற அன்பினாலேயே அவ்வருடங்களில் அவ்வாறு வாக்களித்தார்கள் என்றும் அவரது புகழ்பாடிகள் சொல்லக்கூடும். அவர்களைத் தவறென்று நிறுவுவதில் எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அப்படிப் புகழ்பாடி இன்புறுவது அவர்களின் விருப்பம். 

புலிகளின் அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்த சம்பந்தன், போர் முடிவுற்று பல வருடங்களுக்குப் பின்னர் வழங்கிய அறிக்கையொன்றில் "புலிகளை அழித்துவிட்டு தீர்வு தருவோம் என்று எமக்கு வாக்குறுதியளித்தார்கள். அதனாலேயே அது நடக்கும்வரை பேசாதிருந்தோம்" என்று கூறியிருந்தார். புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு , அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயத்தன்மையினை அதுவரை வழங்கிவந்த சம்பந்தன் இறுதிப்போரின்போது பேசாமல் இருந்தது ஏன்? தமிழ் அரசியல்த் தலைவர்களில் மிகவும் அனுபவமும், முதிர்ச்சியும் வாய்ந்தவராக அன்று காணப்பட்ட அவர், மக்களை இணைத்துக்கொண்டு யுத்தத்தினை நிறுத்து என்று இலங்கையரசையும், இந்தியாவையும், சர்வதேசத்தையும் நோக்கிக் கூக்குரல் இட்டிருக்க வேண்டுமா இல்லையா? அவரும் அவரது கட்சியும் செய்யும் அரசியல் மக்களுக்கானதென்றால் 2009 இல் மக்களை இலங்கையரசு பலியிட்டு வருகையில் அதுகுறித்துப் பேசவேண்டியது அம்மக்களின் அரசியல்த் தலைவரின் கடமையல்லவா?  தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய மூத்த அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தமிழரின் ஆரம்ப கால அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டவரான சம்பந்தனுக்கு இலங்கையரசும், இந்திய அரசும் ஈழத்தமிழர் நலன் தொடர்பாக எவ்வாறான கொள்கைகளைக் கொண்டிருந்தன என்பது தெரியாமல் இருந்திருக்கும் என்பது நம்பக்கூடியதா? அப்படியானால், புலிகளை முற்றாக அழித்துவிட்டு அரசியல்த் தீர்வினை தங்கத் தட்டில் வைத்துத் தருவோம் என்று அவர்கள் கூறியபோது எப்படி நம்பினார்? இறுதிநாட்களில் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது அம்மக்களினதும், போராளிகளினதும் அரசியல் முகமாக இருந்த கூட்டமைப்பு செய்தது என்ன? தொலைபேசிகளை அணைத்துவைத்துவிட்டு தமிழ்நாட்டில் சென்று தஞ்சம் புகவேண்டிய தேவையென்ன சம்பந்தனுக்கு? 1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தில் நரவேட்டையாடிக்கொண்டிருந்தவேளை அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துகொண்டு இந்திய ஆக்கிரமிப்பை ஆதரித்தமையினை விடவும் சம்பந்தனும் அவரது கட்சியினரும் செய்தது கோழைத்தனமானதா இல்லையா? தனது மக்கள் கொல்லப்பட்டிருக்கும்போது, சாகட்டும், புலிகள் அழிந்தால்ச் சரி, மீதமிருப்போருக்குத் தீர்வை வாங்கிக் கொடுக்கலாம் என்று சம்பந்தர் இருந்தமை சரியானதா?
2001 இல் சுயநிர்ணய உரிமை, தனிநாடு, ஏகபிரதிநிதித்துவம் என்று கர்ஜித்த சம்பந்தன் 2009 களில் புலிகள் அழியட்டும், மீதியைப் பின்னர் பார்க்கலாம் என்றும், 2009 இற்குப் பின்னர் ஒன்றுபட்ட இலங்கை, பிரிக்கப்பட முடியாத இலங்கை, இலங்கையர்களாக அடையாளம் காணுவோம், எமக்குள் தமிழர் சிங்களவர் என்று பிரிவு வேண்டாம் என்றும் கூறத் தலைப்பட்டது எங்கணம்? ஆக, தமிழரின் நலன்கள் தொடர்பான சம்பந்தரின் அக்கறையென்பது தன்னெழுச்சியானால் வந்தது அல்லவென்பதும், புலிகளின் இருப்பினாலேயே அவர் செயற்கையாக அதனை வரிந்துகொண்டிருந்தார் என்பதும் நிரூபணமாகிறது அல்லவா? சமத்துவம், சம பங்கு, ஐம்பதிற்கு ஐம்பது என்று ஆரம்பித்து பின்னர் சமரச அரசியலாகவும், இறுதியில் சரணாகதி அரசியலாகவும் சம்பந்தனின் அரசியல் ஆனதேன்? 

இவர்தான் தமிழர்களின் பெருந்தலைவரா???  நம்பீட்டம்!!!

நேரத்திற்கொருமுறை வேஷம் கலைக்கும் சிலருக்கு ஆரம்பத்தில் புலிகள் தமிழர்களின் காவலர்களாகவும், பின்னர் தமிழர்களை அழித்தவர்களில் அவர்களே முதன்மையானவர்களாகவும் தெரிவதில் வியப்பில்லை. அவர்கள் அப்படிச் செய்யாதுவிட்டால்த்தான் வியக்கவேண்டும், ஆகவே கடந்து சென்றுவிடலாம். 

Edited by ரஞ்சித்
  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, தமிழ் சிறி said:

“சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்; ஒரு வறட்டு வாதம்”

இப்படியான நம்பிக்கையினை, கோட்பாட்டினைக் கொண்டவரா உங்களின் பெருந்தலைவர்? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, தமிழன்பன் said:

ஆயுத முனையில் தடுத்தவர்கள் என்று உங்கள் இஷ்டத்திக்கு கதை சொல்ல உங்கள் மனம் அவ்வளவா ? 
இப்படி சொல்ல கொஞ்சம் கூட அருகதை இல்லை? , களத்தில் தலைவரோடு தோளோடு தோளாக போராடியவர்களை தவிர  இப்படி கதை விட என்ன தைரியம் வேண்டும். 

-----------------------------------------------------

3 hours ago, ரஞ்சித் said:

நேரத்திற்கொருமுறை வேஷம் கலைக்கும் சிலருக்கு ஆரம்பத்தில் புலிகள் தமிழர்களின் காவலர்களாகவும், பின்னர் தமிழர்களை அழித்தவர்களில் அவர்களே முதன்மையானவர்களாகவும் தெரிவதில் வியப்பில்லை. அவர்கள் அப்படிச் செய்யாதுவிட்டால்த்தான் வியக்கவேண்டும், ஆகவே கடந்து சென்றுவிடலாம். 

உங்கள் இருவரதும் கருத்துக்களைப் பார்த்தேன். இது வரை நான் எழுதிய எதையும் "ஜஸ்ரின் எழுதியிருக்கிறார்" என்று தான் பார்த்திருக்கிறீர்கள், என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கவில்லை என்று புரிகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில், என் கருத்துகளின் பயனின்மை - futility புரிகிறது, மேலும் எழுத வேண்டியதன் அவசியமின்மையும் புரிகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் எனக்கு ஐம்பது தாண்டுகிறது (@பெருமாள் நோட் பண்ணிக் கொள்ளுங்கள்😎). ஐம்பது தாண்டினால், பெரும்பாலும் ஆண்கள், ஒரு "நேரக்கணிப்பு குண்டு" போல எந்த நேரமும் return ticket இல் போகலாம். நான் இப்படியே எழுதிக் கொண்டிருந்தால் இப்ப சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் கிடைக்கும் eulogy போல எனக்கும் சின்ன ஸ்கேலில் கிடைக்கும் என நம்புகிறேன்.

எனவே, "எனக்கேன் வம்பு" என்கிற மன நிலை கொஞ்சம் என்னிலும் ஏற்பட்டு விட்டது. இன்னொரு பக்கம் "எக்கேடாவது கெட்டுப் போங்கள்" என்ற மனநிலையும் உருவாகி விட்டது. இந்தக் காரணங்களால், தமிழர் அரசியல் திரிகளில்  இனி மௌனமாக இருக்க முடிவு செய்திருக்கிறேன்.

நமக்கு அடைக்கலமாக இருப்பது முடிவில்லாத விஞ்ஞானமும், அறிவியல் தொழில் நுட்பமும்😂.  

Edited by நிழலி
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து மட்டுறுத்தப்பட்டமை
  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 6/7/2024 at 00:52, குமாரசாமி said:

சம்பந்தனின் மரண நிகழ்வுகள் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவர் தம் ஆதரவாளர்களுக்கும் ஒரு  பாடமாக அமையட்டும்.
சம்பந்தனின் மரண  நிகழ்ச்சிக்கு பின்னரும் சம்பந்தனின் அரசியல் வாழ்வை யாராவது மெச்சுகின்றனர் என்றால்.....!!!!
மேலதிக விபரம் இல்லாமல் அவர்களின் சுயரூபத்தை சுலபமாகவே கணக்கிடலாம்.

இந்த திரியில் கருத்தெழுதும் 3, 4 அப்பிரண்டிஸ்களின் அம்புலிமாமா கதைகளை கேட்டு நீங்கள் அதற்கு பதில் எழுத வெளிக்கிட்டால் உங்களுக்குத்தான் நேரவிரயம். மற்றும்படி அவர்களின் நதிமூலம்,ரிஷிமூலம் எல்லாம் யாழ் களத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்ததுதானே!!

Edited by Eppothum Thamizhan
  • Thanks 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/7/2024 at 15:43, தமிழ் சிறி said:

தலையை சாய்த்து மண்டைக் கண்ணால் என்னைப் பார்த்தபடி சொன்னார்… “சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்; ஒரு வறட்டு வாதம்” 

5 hours ago, ரஞ்சித் said:

இப்படியான நம்பிக்கையினை, கோட்பாட்டினைக் கொண்டவரா உங்களின் பெருந்தலைவர்? 

சம்பந்தரை... எனது  பெருந் தலைவர் என்று  சொன்னதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். 😎
அப்படி சொல்லும் அளவுக்கு அவர் எள்ளளவும் தகுதியான ஆள் அல்ல.
மிகவும் ஏமாந்த, தோல்வி உற்ற அரசியல்வாதி தான்... இரா. சம்பந்தன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தான் கொண்ட கொள்கையில் உறுதியில்லாதவரை, நேரம் ஒரு பேச்சு பேசுபவரை யார் மதிப்பார்? சம்பந்தரால் எதுவும் சாதிக்க முடியாமைக்கும்  சிங்களமே விமர்சிப்பதற்க்கும் இதுவே காரணம். தீர்வைப்பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்து பாராளுமன்றம் போய் சிங்களமக்கள் விரும்பாத, அவர்களை கோபப்படுத்தும் தீர்வை ஏற்கமாட்டோம் எனும் சபதம் செய்தால் தீர்வை யார் கொடுப்பார்? அவர் ஏமாற்றியது அவரை நம்பி வழியனுப்பிவிட்டு தமக்கு தீர்வு வரும் என்று காத்திருந்த மக்களை. அதனாலேயே மக்களை அவர் சந்திப்பதில்லை, கேள்வி கேட்போரை அதட்டினார். பத்திரிகையாளர் மேல் சீறி விழுந்தார், எச்சரித்தார். யாருக்கும் இடம் விடவில்லை, நடுவுநிலையாக நடந்து நடந்து கொண்டவருமில்லை, மக்களுக்காக மக்களோடு   நின்றவருமில்லை,  மக்களையும் அவர் கனவுகளையும் ஏமாற்றி அவர்களுக்கு துரோகமிழைத்தார். அதன் வலியை தானே  உணர்ந்திருப்பார் தன் இறுதி நாட்களில். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முட்டாள் கூட்டத்திற்குப் பயந்து தனது சொந்தக் கருத்தை கூறத் தவறுவது நல்ல அறிகுறி அல்ல. 

அண்மையில் ஒருவருடன் கதைக்கும்போது அவர் பாசிசம் என்றால் என்னவென்று மிகச் சுருக்கமாக கூறினார். 

அதாவது "சமூகத்தில் உள்ள நல்ல, ஆரோக்கியமான, பயன்தரக்கூடிய, வளர்ச்சிக்கு உதவக் கூடிய எல்ல அழகான அம்சங்களையும் சமூகத்தில் இருந்து அகற்றுதல்" என்றார். 

இன்றைய எமது யாழ் மையவாத, வறண்ட சமூகத்திற்கு மெத்தவே பொருந்தும். 

இது யாழ் களத்திலுள்ள பலருக்குப் புரியாது என்பது வெட்கக்கேடு. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, Kapithan said:

எப்படி???

ஒரு பக்கம் தேசியத் தலைவர் என்றபடி 

வயலுக்கு காவல் காத்தது, பன்றி கலத்தது தான் அவர் செய்தது என்பது தானே??

சொல்ல வார்த்தைகள் இல்லை. தொடருங்கள்.....

கனகாலத்திற்கு முகத்தை மூடிக் கொண்டு இருக்கமுடியாது தானே....?

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தன் ஈழத்தமிழினத்தின் மூத்த  பழம்பெரும் அரசியல்வாதி. பல அரசியல்களம் கண்டவர்.வெளிநாட்டு அரசியல் ராஜதந்திரிகளுடன் நேரடியாக பேசும் வல்லமை கொண்டிருந்தவர்.சிங்கள அரசியல்வாதிகளுடனும் இவரின் தொடர்புகளை குறைத்து மதிப்பிட முடியாது. 
கிட்டத்தட்ட  பலம் மிக்க அரசியல்வாதியாக இருந்தவர்.

அது ஒரு புறம் இருக்க....

சம்பந்தனால் தமிழினத்தின் பிரச்சனைகளைத்தான் தீர்க்க முடியவில்லை. ஆனால்  இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளையும் பலமாக ஒன்றிணைக்கும் வழிவகைகளையாவது செய்திருக்கலாம்.கட்சிகளை ஒருங்கிணைத்து பல இறுக்கமான கட்சி யாப்புகளை உருவாக்கி  கட்டுக்கோப்புடன்  வைத்திருந்திருக்கலாம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

எப்படி???

ஒரு பக்கம் தேசியத் தலைவர் என்றபடி 

வயலுக்கு காவல் காத்தது, பன்றி கலத்தது தான் அவர் செய்தது என்பது தானே??

சொல்ல வார்த்தைகள் இல்லை. தொடருங்கள்.....

கனகாலத்திற்கு முகத்தை மூடிக் கொண்டு இருக்கமுடியாது தானே....?

உங்கள் கொள்ளளவு அவ்வளவுதான் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்? 

🥶

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

உங்கள் கொள்ளளவு அவ்வளவுதான் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்? 

🥶

மற்றவரது கொள்ளளவு பற்றி கணக்கெடுப்பவர்கள் வெறும் மரமண்டைகள் என்று தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, குமாரசாமி said:

சம்பந்தன் ஈழத்தமிழினத்தின் மூத்த  பழம்பெரும் அரசியல்வாதி. பல அரசியல்களம் கண்டவர்.வெளிநாட்டு அரசியல் ராஜதந்திரிகளுடன் நேரடியாக பேசும் வல்லமை கொண்டிருந்தவர்.சிங்கள அரசியல்வாதிகளுடனும் இவரின் தொடர்புகளை குறைத்து மதிப்பிட முடியாது. 
கிட்டத்தட்ட  பலம் மிக்க அரசியல்வாதியாக இருந்தவர்.

அது ஒரு புறம் இருக்க....

சம்பந்தனால் தமிழினத்தின் பிரச்சனைகளைத்தான் தீர்க்க முடியவில்லை. ஆனால்  இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளையும் பலமாக ஒன்றிணைக்கும் வழிவகைகளையாவது செய்திருக்கலாம்.கட்சிகளை ஒருங்கிணைத்து பல இறுக்கமான கட்சி யாப்புகளை உருவாக்கி  கட்டுக்கோப்புடன்  வைத்திருந்திருக்கலாம்.

அது ச‌ரி தாத்தா

இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ரால் இந்த‌ 15வ‌ருட‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் அடைஞ்ச‌ ந‌ன்மைக‌ள் என்ன‌.....................மேல‌ த‌மிழ்சிறி அண்ணா இணைச்ச‌ செய்தியை பாருங்கோ நீங்க‌ள் பிற‌ப்ப‌துக்கு முத‌ல் ஏதோ ஆர்பாட்ட‌த்தில் கைதாகி த‌ன‌க்கும் இந்த‌ ஆர்பாட்ட‌த்துக்கும் தொட‌ர்பில்லை என்று த‌ப்பித்த‌வ‌ர் தான் இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ர் .......................இவ‌ர் ர‌னில‌ மிஞ்சின‌ குள்ள‌ ந‌ரி..........................1980க‌ளில் இருந்த்ய் 1990 வ‌ரை பிற‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ந்த‌ர‌ தேசிய‌த‌லைவ‌ர் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ ப‌டியால் தான் இவ‌ரை தெரியும்......................

சிங்க‌ள‌வ‌னுக்கு ச‌ம்ப‌ந்த‌ரின் பிற‌விக் குன‌ம் தெரிந்த‌ ப‌டியால் தான் எலும்பு துண்டை போட்டு வ‌ள‌த்த‌வ‌ங்க‌ள்.......................கோழைத் த‌ன‌மாய் அர‌சிய‌ல் செய்து ம‌க்க‌ளை ஏமாற்றி அர‌சிய‌ல் என்ற‌ பெய‌ரில் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் போல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு ம‌றைந்து விட்டார் ச‌ம்ப்ந்த‌ர்......................

15வ‌ருட‌த்தை வீன் அடித்த‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ள்................ம‌கிந்தா கும்ப‌லை போர் குற்ற‌வாளி என்று நிறுவிக்க‌ எவ‌ள‌வோ ஆதார‌ம் இருந்தும் எல்லாத்தையும் இவ‌ர்க‌ள் வேனும் என்று கோட்ட‌ விட்ட‌ மாதிரி இருக்கு....................

அமெரிக்காவில் ஒருத‌ர் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீ அர‌சாங்க‌ம் என்று ப‌ல‌ வருட‌மாய் வாயால் வ‌டை சுட்டு கால‌த்தை ஓட்டி விட்டார்..............இப்போது அவ‌ர்க‌ள் கெட்ட‌ கேட்டுக்கு 

நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌ பிர‌த‌ம‌ர்  வேட்பாள‌ர் தேர்த‌ல் ந‌ட‌த்தின‌மாம் உவைக்கெல்லாம் க‌க்கூஸ் க‌ழுவின‌ விளக்குமாறு மூல‌ம் ப‌தில் சொல்ல‌னும் ....................இதை விட‌ இந்த‌ நூற்றாண்டில் பெரிய‌ அவ‌மான‌த்தை நான் பார்த்த‌து இல்லை.......................த‌லைவ‌ர் இவ‌ர்க‌ளை எங்கு தான் பிடிச்சார்.......................எம் இன‌த்துக்கு துணிந்து செய‌ல் ப‌ட‌ நேர்மையான‌ துணிவான‌ த‌லைவ‌ர்ள் இல்லை இப்போது 

மீதிக் கால‌த்தையும் இந்த 15வ‌ருட‌த்தை வீன் அடிச்ச‌ மாதிரி தொட‌ர்ந்து வீன் அடிப்பார்க‌ள்🫤☹️.............................

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.