Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

HAMAS அரசியல் பிரிவுத் தலைவரின் படுகொலைகளை பல நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. 

அவ்வாறு கண்டனம் தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்று ChatGPT ஐக் கேட்டபொழுது அது தந்த பதில்கள்  👇

அரசாட்சி மீறல் Sovereignty violation: இரானிய நிலத்தில் நடந்த கொலைச்செயல், இரானின் அரசாட்சியை மீறுவதாகக் கருதப்படுகிறது, இதனால் சர்வதேச கடும் கண்டனம் எழுகிறது.
 
அரசியல் விளைவுகள் Political ramafication: ஒரு அரசியல் தலைவரின் கொலை, பிராந்திய அரசியலைப் பாதிக்கக்கூடியது, இது அதிகப்படியான பதட்டம் மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும்.
மனித உரிமை கவலைகள் Human rights concern: நீதியற்ற கொலைச்செயல்கள், சர்வதேச மனித உரிமை நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறுவதாகக் கருதப்படுகின்றன.
 
தூதரக உறவுகள் Diplomatic relations: இரானுடன் தூதரக உறவுகளை கொண்ட நாடுகள் அல்லது பிராந்திய நிலைத்தன்மையை நிலைநிறுத்த விரும்பும் நாடுகள், மோதலை அதிகரிக்கவிடாமல் தடுக்க இவ்வாறான செயல்களை கண்டிக்கலாம்.
 
பாலஸ்தீன causeஐ ஆதரித்தல் Support for PalestinianCause: பாலஸ்தீன causeஐ ஆதரிக்கும் நாடுகள் அல்லது பாலஸ்தீனத் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிரான நாடுகள், இக் கொலைச்செயலை கண்டிக்கலாம், ஒன்றுபட்ட தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் செய்யலாம்.
  • Replies 111
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அ

  • யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்ற

  • nunavilan
    nunavilan

    பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள். அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? ப

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

அதிக பிரச்சனைகள் பலஸ்தீனத்தை அடிப்படையாக கொண்டது என்று மட்டும் தான் சொன்னேன். எல்லா பிரச்சனைகளும் என சொல்லவில்லை.மற்றும் படி  அவைகள் மதத்துக்குள் நடக்கும் குழுச்சண்டைகள். பலஸ்தின பிரச்சனை போன்று சர்வதேச பிரச்சனை அல்ல.அதை விட தங்களுக்குள் அடிபட்டாலும் பலஸ்தீன பிரச்சனையில் ஒரு கோட்டில் தான் நிற்கின்றார்கள்.

அரபு வசந்தத்தை சிரியா எதிர்த்து நின்றது.அதுதான் மேற்குகிற்கு பிரச்சனை.அது சரி சிரியாவிலும் லிபியாவிலும் நேட்டோவிற்கு என்ன வேலை? உலகில் எத்தனையோ போர் அகதிகள் இருக்கும் போது மேற்குலகு சிரிய அகதிகளுக்கு மட்டும் ரோசாப்பூ கொடுத்து வரவேற்க என்ன காரணம்?

அவர்களின் போக்கும் குணங்களும் சரியென நான் எங்கும் வாதாடியதில்லை.

ஆனால் சதாம் ஹுசைனும் கடாபியும் அசாத்தும் மேற்குலகிற்கு என்ன செய்தார்கள்? ஏதாவது கேடுகள் விளைவித்தார்களா? அவர்கள் நாடுகளில் அகதிகள் உருவாக யார் காரணம்?

வினை விதைத்தவர்கள் வினைதான் அறுக்க முடியும் தினை அறுக்க முடியாது.

அதெப்படி உங்களால்  இப்படியொரு தீர்க்கதரிசனமான முடிவை சொல்ல முடிகின்றது. தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்துவிட்டால் தமிழ்நாடும் பிரிந்துவிடும்,சிங்களவர்களும் கடலுக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்பது மாதிரி......

அமெரிக்கா, யூதம், மேற்குலகு உட்பட முஸ்லீம் நாடுகளுக்கு எவ்வித தீங்கும் செய்யவில்லை என சொல்ல வருகின்றீர்கள்??

நான் முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை. ஆனாலும் மேற்குலகத்தினர் சாதுக்கள் அல்ல.

நீங்க‌ள் ச‌தாம் க‌டாபி ப‌ற்றி எழுதி இருக்கிறீங்க‌ள் நேட்டோவில் இருக்கும் நாட்ட‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டால் எங்க‌ட‌ வாய்க்கை வாழைப் ப‌ழ‌ம் வைப்பின‌ம் தாத்தா......................2003க‌ளில் என‌க்கு அர‌சிய‌லில் பெரிய‌ ஈடுபாடு இல்லை...................ச‌தாம் அணுகுண்டு வைத்து இருக்கிறார் என்று ஆர‌ம்ப‌த்தில் சொன்னார்க‌ள்

ச‌தாம‌ பிடிச்ச‌ பிற‌க்கு தோசைய‌ ம‌று ப‌க்க‌ம் பிர‌ட்டி போட்டின‌ம் சதாம் அணுகுண்டு செய்ய‌ வெளிக்கிட்ட‌வ‌ராம் 

இதை அறிவிஜீவி உள்ள‌ யாராவ‌து ந‌ம்புவின‌மா

ஏதோ அமெரிக்கான்ட‌ ட‌வுள் கேம்முக்கு நேட்டோ நாடுக‌ள் ந‌ல்லா ஜிங்சாங் போடுகின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

இங்கே யாரும் NATO வுக்கு வெள்ளையடிக்க முடியாது. குறிப்பாக USA யின்  செயல்களுக்கு. 

சித்த சுவாதீனமற்றவர்க்ள் மட்டுமே வெள்ளையடிக முண்டியடிப்பர். (Trum கொலை செய்யப்பட வேண்டும் என  முன்னணி US பிரமுகர்கள் கூறும்ப்போது கண்ணை மூடிக்கொண்டு இருப்பர்)

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nunavilan said:

கடந்த 70 வருடங்களாக இஸ்ரேல் பலஸ்தீன மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்தது கமாஸ் , PLO போன்றவர்கள் தான் வேண்டாம் என்று சொல்லி உள்ளார்கள்.🙂

உரிமைகளை இஸ்ரேல் தானாகக் கொடுக்காது, கொடுக்காமல் நிலைக்கக் கூடிய ஆதரவும், இராணுவ பலமும் இருக்கும் போது ஏன் தான் கொடுப்பார்கள்? 

ஆனால் வெளிநாட்டுத் தலையீடுகள், நோர்வேயின் சமரசம் (இப்ப சிலபேருக்கு அலர்ஜி ஆரம்பிக்கும் நோர்வே என்றதும்😂) போன்றவற்றால் 1993 ஒஸ்லோ ஒப்பந்தம் உருவானது. சில குறைபாடுகள் (நிவர்த்தி செய்யக் கூடியவை) இருந்தாலும், அது தான் இஸ்ரேலின் இருப்பை PLO ஏற்றுக் கொண்ட, பலஸ்தீனம் உருவாக வேண்டுமென்று இஸ்ரேலும் ஒப்புக் கொண்ட முதல் ஒப்பந்தம்.

இதை வேண்டாமென்று எதிர்த்தது ..வெயிற் போர் இற்..இந்த ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்புகள் சேர்ந்த தீவிரவாதிகள் தான். இஸ்ரேல் தரப்பில் யிற்ஷாக் ராபினும் ஒரு வலதுசாரி யூதரால் கொல்லப் பட, பலஸ்தீன தரப்பில் ஹமாஸ் PLO வினை அடித்துத் துரத்தி விட்டு காசாவை எடுத்துக் கொண்டார்கள்.

எனவே, நீங்கள் சொல்வது பகுதியளவில் உண்மை (ஆனால், அது உங்களுக்கே எழுதும் போது தெரியாதென நம்புகிறேன்😎!)

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

@valavan

சிறந்த விளங்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள். பலருக்கு தெளிவை ஏற்படுத்தி இருக்கும். நன்றி.

எனக்கு பிடித்த தமிழ்நாட்டு காணொளி ஒன்று  "கதற கதற அடித்த ஹமாஸ் நொந்து போன இஸ்ரேல்" 🤣

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, nunavilan said:

கடந்த 70 வருடங்களாக இஸ்ரேல் பலஸ்தீன மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்தது கமாஸ் , PLO போன்றவர்கள் தான் வேண்டாம் என்று சொல்லி உள்ளார்கள்.🙂

இஸ்ரேல் பயங்கரவாதிகள் அன்று தொடக்கம் இன்றுவரை தம் மண்ணுக்காக போராடியவர்களை கொன்றொழித்ததை தவிர வேறென்ன செய்தார்கள். இன்று கூட யசீர் அரபாத்தின் நோய்களும் மரணமும் இயற்கையானது இல்லை என்ற இல்லை என்ற செய்திகள் உண்டு. கூட்டிக்கழித்து பார்த்தால் அது சரியெனவே வரும். இது சம்பந்தமாக குரல் கொடுத்த அவரது மனைவியை கூட வாயடைத்து வைத்து விட்டார்கள். அவர் மனைவி பிரான்ஸ் நாட்டவர் என்பது வேறு விடயம்.

சர்வதேசத்தால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட யசீர் அரபாத் அரசியல் பேச்சுவார்த்தைக்கு வந்த பின்னரும் என்ன சுத்துமாத்துக்களை எல்லாம் செய்தார்கள். பேச்சுவார்ததை ஒப்பந்தங்கள் செய்யும் போது கூட பல ஜில்மா வேலை செய்து பேச்சுவார்தைகளை குழப்பியவர்கள் இஸ்ரேலியர்கள்.

 இஸ்ரேலியர்கள்! தமக்கு எதிராக போராடுபவர்களை கொன்று குவிப்பதை தவிர வேறு என்ன செய்தார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

எந்தக் குமாரசாமியை சொல்லுகிறீர்கள்.?????? அந்த பலகாரங்கள் . கடத்தியவரையா??🤣

 தாங்கள் எங்கு வந்து எதை எழுத வேண்டும் என்ற விவஷ்தை இல்லாதவர். 🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 தாங்கள் எங்கு வந்து எதை எழுத வேண்டும் என்ற விவஷ்தை இல்லாதவர். 🤪

உங்களை பார்த்து பழகி விட்டேன்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இஸ்ரேல் பலஸ்தீனிய பொதுமக்களை பாரிய அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பட்டினி போடுவதும், கேவலமாக நடத்துவதும் மிலேச்சத்தனமான செயல்கள். இவற்றை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ ஒருவரும் இல்லை!

முஸலிம்கள் எங்கள் போராட்டத்திற்கு எதிராக நின்றார்கள் என்ற காரனத்திற்காக இஸ்ரேல்   பாலஸ்தீனியர்கள் மீது செய்யும் கொடுரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.அப்படிப்பார்த்தால் எமது போராட்டத்திற்கெதிராக முஸ்லிம்நாடுகளை விட இஸ்ரேல் >அமெரிக்கா>இந்தியா உக்ரைன்உட்பட போன்ற நாடுகள் நேரடியாகவே பங்களித்தார்கள். எமது விடுதலை இயக்கத்திற்கு எதிரான தடைகளைப் போட்டு மேற்குலகமும் ஆதரவைக் கொடுத்தது.பாலஸ்தீனியர்களுக்கு அவர்களது மண்ணில் உரிமையுடன் வாழ மறுப்பது அநீதி.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

1993ம் ஆண்டு வ‌ங்க‌க் க‌ட‌லில் கிட்டு அண்ணா கூட‌ வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ளில் ஒருவ‌ர் முஸ்லிம் ம‌த‌ம் அந்த‌ போராளி பெய‌ர் ரோஷான்...............எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ஆர‌ம்ப‌ கால‌த்தில் முஸ்லிம் ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் இருந்த‌வை

த‌லைவ‌ர் ஒரு ப‌டைய‌ணிய‌ உருவாக்கின‌வ‌ர் அந்த‌ ப‌டைய‌னிக்கு முஸ்லிம் ம‌த‌ போராளியின் பெய‌ரை தான் வைச்ச‌வ‌ர் பெய‌ர் லையிட்டா ம‌ற‌ந்து போனேன்.....................

என‌க்கு யாழ்பாண‌த்தில் இருந்து முஸ்லிம்க‌ள் அடிச்சு விர‌ட்ட‌ ப‌ட்ட‌து தெரியாது ஊரில் சின்ன‌னில் இதை ப‌ற்றி பெரிய‌வ‌ர்க‌ள் எங்க‌ளுக்கு சொல்லித் த‌ர‌வும் இல்லை............................

அந்த‌ முஸ்லிம் ப‌டைய‌னி பெய‌ர் உங்க‌ளுக்கு தெரிந்தால் எழுதுங்கோ புல‌வ‌ர் அண்ணா............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவைகள் மதத்துக்குள் நடக்கும் குழுச்சண்டைகள். பலஸ்தின பிரச்சனை போன்று சர்வதேச பிரச்சனை அல்ல

ஈரான் - ஈராக் பெரும் யுத்தம் ஷியா சுன்னி என்ற மதபிரிவுகளுக்கு இடையிலான மோதல்தான் மிக பெரும் சர்வதேச பிரச்சனையானது

1 hour ago, குமாரசாமி said:

வினை விதைத்தவர்கள் வினைதான் அறுக்க முடியும் தினை அறுக்க முடியாது.

குமாரசாமியண்ணா,

அவனோட நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்வுபெற்றுவிட்டு அவன் குடிமக்களையே கொன்று குவிப்பதை வினைவிதத்தவர்கள் வினை அறுக்கமுடியுமென்றால். நமது பிரச்சனையிலும் சர்வதேசம் ஓரவஞ்சகம் செய்து வினைவிதைத்தது ,

அதற்காக இஸ்லாமியர்கள்போல் நாமும் அரசுகள் செய்த தவறுகளுக்காக அவன் குடிமக்களை கொல்லலாமா அல்லது அப்படி செய்தால் நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா?

அவர்கள் செய்ய முடியுமென்றால் நாங்களும் ஏன் செய்யகூடாது?  இப்படி கேள்வி எழுப்புவதுகூட எனக்கு கொடூரமாகவே உள்ளது ஆனாலும் ஒரு கருத்து பகிர்வை நிறுவுவதற்காக பேச்சுக்கு கேட்கிறேன்

1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்கா, யூதம், மேற்குலகு உட்பட முஸ்லீம் நாடுகளுக்கு எவ்வித தீங்கும் செய்யவில்லை என சொல்ல வருகின்றீர்கள்??

அமெரிக்கா இஸ்ரேல் மேற்குலகம் மட்டுமல்ல, உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள ஆதிக்க சக்தி பெற்ற நாடுகள் அனைத்தும் பிறநாடுகள்/இனங்கள்/சமூகங்களுக்கெதிராக தீங்கிழைத்திருக்கின்றன ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன அப்படி நடந்து கொள்ளவில்லை என்று உலகில் எந்த ஒரு வல்லமை கொண்ட நாட்டையும் நீங்கள் விரல் நீட்டி காண்பிக்க முடியாது.

ஆனால் இஸ்லாமியநாடுகள் உள்நாட்டிலும் அண்டைநாடுகளுடனும் கொண்ட மோதல் போக்க்கினால்தான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்குலகமும் அமெரிக்காவும் இடையில் புகுந்து தமது ஆயுத வியாபாரம் பொருளாதார நலன்கள் அரசியல் தலையீடுகள் என்று மூக்கை நுழைத்தன. இப்போது தவறு எங்கிருந்து ஆரம்பித்தது என்கிறீர்கள்?

2 hours ago, குமாரசாமி said:

அவர்களின் போக்கும் குணங்களும் சரியென நான் எங்கும் வாதாடியதில்லை.

ஆனால் சதாம் ஹுசைனும் கடாபியும் அசாத்தும் மேற்குலகிற்கு என்ன செய்தார்கள்? ஏதாவது கேடுகள் விளைவித்தார்களா? அவர்கள் நாடுகளில் அகதிகள் உருவாக யார் காரணம்?

கடாபியும் சதாமும் எப்படியான மேற்குலகுக்கு எதிரான கடும்போக்கை கொண்டிருந்தார்கள் என்பது  யாரும் சொல்லி யாரும் அறியவேண்டிய ஒரு விஷயம் அல்ல,  கடாபி மேற்குலத்தை எதிர்ப்பதே கொள்கையாக வைத்திருந்தார் ,அமெரிக்க பயணிகள் விமானத்தையே தகர்த்து நூற்றுக்கணக்கான பயணிகளை கொன்று அமெரிக்காவுடன் தீரா பகை வளர்த்தார்,

சதாம் அமெரிக்காவுடன் கூடி குலவிவிட்டு பின்னர்  சோவியத் பக்கம் சாய்ந்தார், குர்து இனமக்களை விஷவாயு செலுத்தி ஆயிரக்கணக்கில் கொன்றார்,  அண்டைநாடான குவைத்மீது படை எடுத்து மேற்குலகத்தை அந்த பிராந்தியத்தில் இழுத்து அவர்கள் கையினாலேயே தனக்கான தூக்கு கயிறை கேட்டு பெற்றார்.

ஆசாத் சதாம் போலவே சொந்த நாட்டின் மக்கள்மீது ரசாயன தாக்குதல் நடத்தி அட்டூளியம் பண்ணி ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி தனக்கெதிரானவர்களுக்கெதிராக மிக பெரும் போர் தொடுத்து மேற்குலகுடன் போர் செய்தார்,

ஆம் சிரிய அதிபருக்கெதிரான போராளிக்குழுக்களுக்கு ஆதரவாக மேற்கின் அனைத்து நாடுகளும் உதவி செய்தன, அதேபோல சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா S-400 வான்பாகுகாப்பு கட்டமைப்பு, சுக்கோய் ரக விமானங்களுட்பட தனது ராணுவபடையையே கொண்டு சென்று இறக்கியது, ஆக அங்கே மோதியது அமெரிக்கவும் அதன் நேச படைகளும் எதிர் ஆசாத்தும் ரஷ்யாவும்.

அப்படியிருக்க ஆசாத் அவர்களுக்கு என்ன செய்தார் என்கிறீர்கள்.

2 hours ago, குமாரசாமி said:

உலகில் எத்தனையோ போர் அகதிகள் இருக்கும் போது மேற்குலகு சிரிய அகதிகளுக்கு மட்டும் ரோசாப்பூ கொடுத்து வரவேற்க என்ன காரணம்?

சிரியாவின் மோதல்களில் எதிரும்புதிருமாக நின்ற ரஷ்யா மேற்குலபோரில் தமது ஆதரவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்த சிரிய அகதிகளை அழைத்து வந்தார்கள் அதனால் பூ கொடுத்து வரவேறார்கள், ஆதரவு வழங்கிய மேற்குலகத்திற்கு இவர்கள் நன்றிக்கடன் எப்படி மீள செலுத்தினார்கள் என்பதே இங்கேயுள்ல விவாத பொருள்.

2 hours ago, குமாரசாமி said:

நான் முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை. ஆனாலும் மேற்குலகத்தினர் சாதுக்கள் அல்ல.

முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை ஆனால் மேற்குலகத்தினர் சாதுக்கள் இல்லை என்கிறீர்கள், அப்போ முஸ்லீம்கள் சாதுக்களா இல்லையா?

என்னைபொறுத்தவரை பிராந்திய கொள்ககள் என்று மேற்குலகம் வெவ்வேறு நிலைகளை கொண்டிருந்தாலும், தனது நாட்டில் பாதுகாப்பில்லையென்று தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு வதிவிட உரிமை கொடுத்து வசதிகள் கொடுத்து அவர்கள் சந்ததி சந்ததியாக வாழ் இடமும் கொடுத்து  வாழவைத்த மேற்குலகம் சாதுக்கள்தான்.

இல்லையென்றால் அவன்நாட்டில் வாழ்ந்துகொண்டு அவனது மக்களையே கொன்று குவித்து அவனதுநாட்டை இஸ்லாமியநாடு ஆக்குவோம் என்று அறைகூவல் விட்டு எவ்வளவோ அநியாயம் பண்னினாலும் இன்னும் அவர்களை அகதியா தனது நாட்டுக்குள் அனுமதித்துக்கொண்டேயிருக்கிறான்.

இதையே ஒரு பேச்சுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய நாடு ஒன்றில் லட்சக்கணக்கில் வாழ்விட உரிமைபெற்றுவிட்டு வாராவாரம் அவனோட மக்களை கொன்று குவித்தால் உங்களை சும்மா விட்டிருப்பானா? அவன் நாட்டிற்குள் அகதிகள் என்று யாரையும் நுழைய அனுமதித்திருப்பானா? 

அவன்நாட்டினரை கொன்றவர்களையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் பொதுவெளியில் கழுத்தில் கயிறுமாட்டி கிரேனில் தொங்கவிட்டு கொலை செய்திருப்பான்.

எத்தனையோ உலகபணக்கார இஸ்லாமியநாடுகள் இருந்தும் எந்தநாடும் சக இஸ்லாமியர்களை தனதுநாட்டுக்குள் அகதியாக அனுமதிப்பதேயில்லை, அவர்களுக்கு தெரியும் அதன் பின் விளைவுகளும் தாக்கமும்.

மேற்குலகமும் அதன் அரசுகளும் சாதுக்கள் இல்லையென்றால் என்றோ அவனது பாஸ்போட்டுக்களை தூக்கி எறிந்துவிட்டு சாரை சாரையாக ஊர் திரும்பியிருப்போம்.

அப்படி திரும்பும் நிலையில் யாரேனும் உள்ளார்களா புறநடையாக  ஓரிருவர் தவிர? அவர்கள் சாதுக்களா இல்லையா  என்ற பந்து உங்கள் பக்கம் அதை உதைப்பதும் அணைப்பதும் உங்கள் செளகரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தலைவர்களை,போராட்ட தலைவர்களை,பயங்கரவாத தலிவர்களை வாழ,வளர விடுவார்கள் .....உலக ஆதிக்க சக்திகள்..

எப்பொழுது இந்த தலைவர்கள் தங்களுக்கு எதிராக தங்களது சொல் கேளாமல் இயங்க தொடங்கிறார்களோ அன்று போட்டு தள்ளிவிடுவார்கள்.மார்டின் லூதர்கிங்,கென்னடி,காந்தி,ராஜீவ் காந்தி,

சதாம்,கடாபி,பின்லாடன், நம்ம தலைவர்,ஈரான் ஜனாதிபதி,.....இது தொடரும்...

தலைவர்களை போட்டு தள்ளினால் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல் சில காலங்களின் பின்பு அழிந்து போகும் என்பது கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை
போல தெரிகிறது...

தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட  அரசியல் தலைவர்களை ஆட்சி கவிழ்ப்பின் ஊடாக ஓரம் கட்டுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kandiah57 said:

உங்களை பார்த்து பழகி விட்டேன்   🤣

உங்க‌ளுக்கு எப்ப‌ பார்த்தாலும் ஆட்டுக்கை மாட்டை க‌ல‌ப்ப‌தே வேலையா போச்சு😁😛

விளையாட்டு திரியில் ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம‌ சீமானின் பெய‌ரை எழுதுவீங்க‌ள்.................அதுக்கு விள‌க்க‌ம் த‌ந்தா அந்த‌ திரி ப‌க்க‌மே வ‌ர‌மாட்டிங்க‌ள்😒

ஏன் பெரிய‌வ‌ரே குழ‌ந்தை பிள்ளைக‌ள் போல் யாழில் விளையாடுறீங்க‌ள்

யாழில் எழுதும் முழு சுத‌ந்திர‌ம் உங்க‌ளுக்கு உண்டு ப‌ய‌ன் உள்ள‌தாய் எழுதுங்கோ

16 , 17 வ‌ய‌தில் என‌க்கு அர‌சிய‌ல் சுத்த‌மாய் பிடிக்காது யாழில் வ‌ந்து ப‌ல‌தை தெரிந்து கொண்டேன்

உங்க‌ளிட‌ம் இருந்தும் சில‌ உண்மை ச‌ம்ப‌ங்க‌ள் கேட்டு தெரிந்து கொண்டேன் 

ந‌ல்ல‌துக‌ளை எழுதுங்கோ தெரிந்து கொள்ள‌ ஆர்வ‌மாய் இருக்கு 🙏

ந‌ன்றி பெரிய‌வ‌ரே............................

13 minutes ago, putthan said:

அரசியல் தலைவர்களை,போராட்ட தலைவர்களை,பயங்கரவாத தலிவர்களை வாழ,வளர விடுவார்கள் .....உலக ஆதிக்க சக்திகள்..

எப்பொழுது இந்த தலைவர்கள் தங்களுக்கு எதிராக தங்களது சொல் கேளாமல் இயங்க தொடங்கிறார்களோ அன்று போட்டு தள்ளிவிடுவார்கள்.மார்டின் லூதர்கிங்,கென்னடி,காந்தி,ராஜீவ் காந்தி,

சதாம்,கடாபி,பின்லாடன், நம்ம தலைவர்,ஈரான் ஜனாதிபதி,.....இது தொடரும்...

தலைவர்களை போட்டு தள்ளினால் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல் சில காலங்களின் பின்பு அழிந்து போகும் என்பது கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை
போல தெரிகிறது...

தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட  அரசியல் தலைவர்களை ஆட்சி கவிழ்ப்பின் ஊடாக ஓரம் கட்டுவார்கள் 

நித‌ர்ச‌ன‌ உண்மை புத்த‌ன் மாமா........................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, valavan said:

ஈரான் - ஈராக் பெரும் யுத்தம் ஷியா சுன்னி என்ற மதபிரிவுகளுக்கு இடையிலான மோதல்தான் மிக பெரும் சர்வதேச பிரச்சனையானது

குமாரசாமியண்ணா,

அவனோட நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்வுபெற்றுவிட்டு அவன் குடிமக்களையே கொன்று குவிப்பதை வினைவிதத்தவர்கள் வினை அறுக்கமுடியுமென்றால். நமது பிரச்சனையிலும் சர்வதேசம் ஓரவஞ்சகம் செய்து வினைவிதைத்தது ,

அதற்காக இஸ்லாமியர்கள்போல் நாமும் அரசுகள் செய்த தவறுகளுக்காக அவன் குடிமக்களை கொல்லலாமா அல்லது அப்படி செய்தால் நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா?

அவர்கள் செய்ய முடியுமென்றால் நாங்களும் ஏன் செய்யகூடாது?  இப்படி கேள்வி எழுப்புவதுகூட எனக்கு கொடூரமாகவே உள்ளது ஆனாலும் ஒரு கருத்து பகிர்வை நிறுவுவதற்காக பேச்சுக்கு கேட்கிறேன்

அமெரிக்கா இஸ்ரேல் மேற்குலகம் மட்டுமல்ல, உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள ஆதிக்க சக்தி பெற்ற நாடுகள் அனைத்தும் பிறநாடுகள்/இனங்கள்/சமூகங்களுக்கெதிராக தீங்கிழைத்திருக்கின்றன ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன அப்படி நடந்து கொள்ளவில்லை என்று உலகில் எந்த ஒரு வல்லமை கொண்ட நாட்டையும் நீங்கள் விரல் நீட்டி காண்பிக்க முடியாது.

ஆனால் இஸ்லாமியநாடுகள் உள்நாட்டிலும் அண்டைநாடுகளுடனும் கொண்ட மோதல் போக்க்கினால்தான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்குலகமும் அமெரிக்காவும் இடையில் புகுந்து தமது ஆயுத வியாபாரம் பொருளாதார நலன்கள் அரசியல் தலையீடுகள் என்று மூக்கை நுழைத்தன. இப்போது தவறு எங்கிருந்து ஆரம்பித்தது என்கிறீர்கள்?

கடாபியும் சதாமும் எப்படியான மேற்குலகுக்கு எதிரான கடும்போக்கை கொண்டிருந்தார்கள் என்பது  யாரும் சொல்லி யாரும் அறியவேண்டிய ஒரு விஷயம் அல்ல,  கடாபி மேற்குலத்தை எதிர்ப்பதே கொள்கையாக வைத்திருந்தார் ,அமெரிக்க பயணிகள் விமானத்தையே தகர்த்து நூற்றுக்கணக்கான பயணிகளை கொன்று அமெரிக்காவுடன் தீரா பகை வளர்த்தார்,

சதாம் அமெரிக்காவுடன் கூடி குலவிவிட்டு பின்னர்  சோவியத் பக்கம் சாய்ந்தார், குர்து இனமக்களை விஷவாயு செலுத்தி ஆயிரக்கணக்கில் கொன்றார்,  அண்டைநாடான குவைத்மீது படை எடுத்து மேற்குலகத்தை அந்த பிராந்தியத்தில் இழுத்து அவர்கள் கையினாலேயே தனக்கான தூக்கு கயிறை கேட்டு பெற்றார்.

ஆசாத் சதாம் போலவே சொந்த நாட்டின் மக்கள்மீது ரசாயன தாக்குதல் நடத்தி அட்டூளியம் பண்ணி ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி தனக்கெதிரானவர்களுக்கெதிராக மிக பெரும் போர் தொடுத்து மேற்குலகுடன் போர் செய்தார்,

ஆம் சிரிய அதிபருக்கெதிரான போராளிக்குழுக்களுக்கு ஆதரவாக மேற்கின் அனைத்து நாடுகளும் உதவி செய்தன, அதேபோல சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா S-400 வான்பாகுகாப்பு கட்டமைப்பு, சுக்கோய் ரக விமானங்களுட்பட தனது ராணுவபடையையே கொண்டு சென்று இறக்கியது, ஆக அங்கே மோதியது அமெரிக்கவும் அதன் நேச படைகளும் எதிர் ஆசாத்தும் ரஷ்யாவும்.

அப்படியிருக்க ஆசாத் அவர்களுக்கு என்ன செய்தார் என்கிறீர்கள்.

சிரியாவின் மோதல்களில் எதிரும்புதிருமாக நின்ற ரஷ்யா மேற்குலபோரில் தமது ஆதரவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்த சிரிய அகதிகளை அழைத்து வந்தார்கள் அதனால் பூ கொடுத்து வரவேறார்கள், ஆதரவு வழங்கிய மேற்குலகத்திற்கு இவர்கள் நன்றிக்கடன் எப்படி மீள செலுத்தினார்கள் என்பதே இங்கேயுள்ல விவாத பொருள்.

முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை ஆனால் மேற்குலகத்தினர் சாதுக்கள் இல்லை என்கிறீர்கள், அப்போ முஸ்லீம்கள் சாதுக்களா இல்லையா?

என்னைபொறுத்தவரை பிராந்திய கொள்ககள் என்று மேற்குலகம் வெவ்வேறு நிலைகளை கொண்டிருந்தாலும், தனது நாட்டில் பாதுகாப்பில்லையென்று தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு வதிவிட உரிமை கொடுத்து வசதிகள் கொடுத்து அவர்கள் சந்ததி சந்ததியாக வாழ் இடமும் கொடுத்து  வாழவைத்த மேற்குலகம் சாதுக்கள்தான்.

இல்லையென்றால் அவன்நாட்டில் வாழ்ந்துகொண்டு அவனது மக்களையே கொன்று குவித்து அவனதுநாட்டை இஸ்லாமியநாடு ஆக்குவோம் என்று அறைகூவல் விட்டு எவ்வளவோ அநியாயம் பண்னினாலும் இன்னும் அவர்களை அகதியா தனது நாட்டுக்குள் அனுமதித்துக்கொண்டேயிருக்கிறான்.

இதையே ஒரு பேச்சுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய நாடு ஒன்றில் லட்சக்கணக்கில் வாழ்விட உரிமைபெற்றுவிட்டு வாராவாரம் அவனோட மக்களை கொன்று குவித்தால் உங்களை சும்மா விட்டிருப்பானா? அவன் நாட்டிற்குள் அகதிகள் என்று யாரையும் நுழைய அனுமதித்திருப்பானா? 

அவன்நாட்டினரை கொன்றவர்களையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் பொதுவெளியில் கழுத்தில் கயிறுமாட்டி கிரேனில் தொங்கவிட்டு கொலை செய்திருப்பான்.

எத்தனையோ உலகபணக்கார இஸ்லாமியநாடுகள் இருந்தும் எந்தநாடும் சக இஸ்லாமியர்களை தனதுநாட்டுக்குள் அகதியாக அனுமதிப்பதேயில்லை, அவர்களுக்கு தெரியும் அதன் பின் விளைவுகளும் தாக்கமும்.

மேற்குலகமும் அதன் அரசுகளும் சாதுக்கள் இல்லையென்றால் என்றோ அவனது பாஸ்போட்டுக்களை தூக்கி எறிந்துவிட்டு சாரை சாரையாக ஊர் திரும்பியிருப்போம்.

அப்படி திரும்பும் நிலையில் யாரேனும் உள்ளார்களா புறநடையாக  ஓரிருவர் தவிர? அவர்கள் சாதுக்களா இல்லையா  என்ற பந்து உங்கள் பக்கம் அதை உதைப்பதும் அணைப்பதும் உங்கள் செளகரியம்.

அமெரிக்காவுக்கு ப‌ல‌ முக‌ம் இருக்கு

த‌ங்க‌ளின் அன்டை நாடு வாழை தோட்ட‌ம் ப‌ல‌ ஏக்க‌ர் க‌ண‌க்கில் செய்து ப‌ல‌ நாடுக‌ளுக்கு ஏற்றும‌தி செய்தவை.................. அமெரிக்கா சிறு பிள்ளை த‌ன‌மாய் அந்த‌ அக‌ன்ட‌ வாழைத் தோட்ட‌த்தை த‌ங்க‌ளுக்கு குத்த‌கைக்கு த‌ர‌ சொல்லி கேட்க்க‌ அந்த‌ நாடு ம‌றுத்து விட்ட‌து................த‌ங்க‌ளுக்கு வாழை தோட்ட‌ம் த‌ர‌ வில்லை என்ற‌ கோவ‌த்தில் வானால் போய் அக‌ன்ட‌ வாழை தோட்ட‌த்துக்கு அசீட் ஊத்தி அழிச்ச‌வை இது க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு இது ந‌ட‌ந்து 87 வ‌ருட‌ம் இருக்கும் 

இணைய‌த்தில் தேடி பாருங்கோ முழு ஆதார‌த்தோட‌ இந்த‌ த‌க‌வ‌ல் இருக்கும்......................

அடுத்த‌வ‌ர்க‌ளின் நாட்டை சுர‌ண்டி கொழுத்த‌ பூத‌ம் தான் அமெரிக்கா

ச‌தாம் க‌டாபி ம‌ற்ற‌ நாடுக‌ளின் இயற்கை வளங்கள் மீது கை வைத்ததில்லை.........................

இதுக்கை தொட‌ர்ந்து எழுதினால் மென்ட‌ல் ஆக்கி விடும்

இந்த‌ திரியில் இனி எழுத‌ விரும்ப‌ல‌😉..............................

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர்

புல‌வ‌ர் அண்ணாஅந்த‌ ப‌டைய‌னின் பெய‌ர்( இம்ரான் பாண்டியன் படையணி ) இது முஸ்லிம் போராளியின் பெய‌ரில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌டைய‌ணி..........................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

@புலவர்

புல‌வ‌ர் அண்ணாஅந்த‌ ப‌டைய‌னின் பெய‌ர்( இம்ரான் பாண்டியன் படையணி ) இது முஸ்லிம் போராளியின் பெய‌ரில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌டைய‌ணி..........................

கிழிஞ்சுது இது எப்ப

லெப்.கேணல் இம்ரான்

சங்கரப்பிள்ளை சதானந்தன்

கொக்குவில் யாழ்ப்பாணம் 

லெப்.கேணல் பாண்டியன்

செல்லத்துரை சிறிதரன்

பிரம்படி கொக்குவில் யாழ்ப்பாணம்

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

@புலவர்

புல‌வ‌ர் அண்ணாஅந்த‌ ப‌டைய‌னின் பெய‌ர்( இம்ரான் பாண்டியன் படையணி ) இது முஸ்லிம் போராளியின் பெய‌ரில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌டைய‌ணி..........................

வீரப்பையன், தெரியாத்தனமா ஏன் பொல்லைக்குடுத்து அடிவாங்குகிறீர்கள்?

லெப். கேணல் இம்ரானும் லெப். கேணல் பாண்டியனும் கொக்குவிலைச் சேர்ந்த இணைபிரியா நண்பர்கள். இருவருமே இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் யாழ் மாவட்டத் தளபதிகளாக இருந்தவர்கள். இவர்கள் பெயரிலேயே தலைவர் இம்ரான்-பாண்டியன் படையணியை உருவாக்கினார்.

https://news.tamilmurasam.com/லெப்-கேணல்-இம்ரான்-உட்பட/

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நந்தன் said:

கிழிஞ்சுது இது எப்ப

லெப்.கேணல் இம்ரான்

சங்கரப்பிள்ளை சதானந்தன்

கொக்குவில் யாழ்ப்பாணம் 

லெப்.கேணல் பாண்டியன்

செல்லத்துரை சிறிதரன்

பிரம்படி கொக்குவில் யாழ்ப்பாணம்

3 minutes ago, வாலி said:

வீரப்பையன், தெரியாத்தனமா ஏன் பொல்லைக்குடுத்து அடிவாங்குகிறீர்கள்?

லெப். கேணல் இம்ரானும் லெப். கேணல் பாண்டியனும் கொக்குவிலைச் சேர்ந்த இணைபிரியா நண்பர்கள். இருவருமே இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் யாழ் மாவட்டத் தளபதிகளாக இருந்தவர்கள். இவர்கள் பெயரிலேயே தலைவர் இம்ரான்-பாண்டியன் படையணியை உருவாக்கினார்.

https://news.tamilmurasam.com/லெப்-கேணல்-இம்ரான்-உட்பட/

இம்ரான் பாண்டியன் படையணி தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையணி

1983 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு திறமையான படையணி தேவைப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் தலைவருக்கு தமிழ்நாட்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இம்ரானைத் தெரிந்தெடுத்து நியமித்திருந்தார். பின்னர் இம்ரான் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற பின் தலைவர் தனது பாதுகாப்புப் படையணியின் தலைவராக இம்ரானின் நெருங்கிய நண்பனாகிய பாண்டியனையே தெரிந்தெடுத்தார். தலைவரின் பாதுகாப்புக்கான படையணியினரை இம்ரானும் பாண்டியனுமே தேர்ந்தெடுத்து படையணியில் சேர்த்து வந்தனர். அந்த அளவுக்கு தலைவருக்கு மிக விசுவாசமுள்ள பாதுகாப்பாளர்களாக இம்ரானும் பாண்டியனும் இருந்து வந்தனர்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவுக்குள்ளானது. அப்போது யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படையணித் தலைவராக பாண்டியன் இருந்தார். இந்திய இராணுவத்தினரால் பாண்டியன் இருந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டபோது கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு பாண்டியன் வீரச்சாவை தழுவிக்கொண்டார். பாண்டியன் வீரச்சாவு அடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படைத்தலைவராக இம்ரான் நியமிக்கப்பட்டார். இவரும் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

5 minutes ago, வாலி said:

வீரப்பையன், தெரியாத்தனமா ஏன் பொல்லைக்குடுத்து அடிவாங்குகிறீர்கள்?

லெப். கேணல் இம்ரானும் லெப். கேணல் பாண்டியனும் கொக்குவிலைச் சேர்ந்த இணைபிரியா நண்பர்கள். இருவருமே இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் யாழ் மாவட்டத் தளபதிகளாக இருந்தவர்கள். இவர்கள் பெயரிலேயே தலைவர் இம்ரான்-பாண்டியன் படையணியை உருவாக்கினார்.

https://news.tamilmurasam.com/லெப்-கேணல்-இம்ரான்-உட்பட/

நான் பொல்லை கொடுத்து அடி வாங்க‌ வில்லை அண்ணா

த‌லைவ‌ர் இவ‌ர்க‌ளின் நினைவாக‌ ப‌டைய‌ணிய‌ உருவாக்கினார் என்று தான் என்னை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் ஊட‌க‌ம் முன்னாள் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்னார்...............................

  • கருத்துக்கள உறவுகள்+

வாழ்த்துக்கள், இஸ்ரேலிய வீரர்களுக்கு.🤗

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே கிட்டண்ணாவுடன் வீரச்சாவடைஞ்ச போராளியின் விபரம் ப்ளீஸ் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

அப்பிடியே கிட்டண்ணாவுடன் வீரச்சாவடைஞ்ச போராளியின் விபரம் ப்ளீஸ் 

இந்த‌ திரியில் மேல‌ கிட்டு அண்ணா கூட‌ வீர‌ச்சாவு அடைந்த‌ போராளியின் பெய‌ரை எழுதி இருக்கிறேன்..................திருப்ப‌ எழுத‌ தேவை இல்லை................1993ம் ஆண்டு ஊரில் சின்ன‌ப் பெடிய‌னாய் இருந்த‌ போது இந்த‌ செய்தி காட்டு தீ போல் ப‌ர‌விய‌து..............நீங்க‌ள் முன்னாள் போராளி என்று சொல்லுறீங்க‌ள் 1993க‌ளில் ஈழ‌ ம‌ண்ணில் இருந்திங்க‌ளா அல்ல‌து புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்தாச்சா😉....................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

பதில் இது அல்லவே

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நந்தன் said:

பதில் இது அல்லவே

புல‌‌வ‌ர் அண்ணாக்கு இந்த‌ திரியில் எழுதி இருந்தேன்

அந்த‌ போராளியின் பெய‌ர் க‌ப்ட‌ன் றொசான் 🙏🙏🙏..................

கிட்டு அண்ணாக்கு 1994ம் ஆண்டு ந‌ல்லுரில் பெரிய‌ விளையாட்டு பூங்கா திற‌ந்த‌வை அதாவ‌து தெரியுமா அதுக்கான‌ விள‌க்க‌மும் தேவையா😁😛..............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது எப்படி?

இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றிய சில தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவர் தங்கியிருந்த வீட்டின் மீது ராக்கெட் தாக்கியதில் அவரும் அவரது பாதுகாவலரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பொதுவாக வெளிநாட்டில் அதன் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும், ஏப்ரல் 19 அன்று இரானில் அணுசக்தி நிலையத்தை சுற்றி வான் பாதுகாப்பை குறிவைத்து நடத்தப்பட்ட அதே முறையை இந்த தாக்குதலிலும் பின்பற்றியிருக்கலாம் எனத் தெரியவருகிறது.

அந்த நடவடிக்கையில், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இரானிய வான்வெளிக்கு வெளியில் இருந்து ராக்கெட்டுகளை வீசியதாக நம்பப்படுகிறது.

சௌதி அரேபியாவின் அல் ஹதாத் செய்தி நிறுவனமும் இதேபோன்ற தகவலைத் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியேவின் இல்லம், வழிகாட்டப்பட்ட ஏவுகணையால் (Guided Missile) தாக்கப்பட்டதாக சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானின் அரசு ஊடகமும் இதையே கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cx92w88gd74o

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அன்றும் இன்றும் குமாரசாமிக்கு தெரிந்தது நேர்மை,கண்ணியம்,நியாயம்,வெளிப்படை இது என்றும் இருக்கும். 

 ரசிய ஜனாதிபதியை புகழ்ந்தும் உக்ரைன் ஜனாதிபதியை கேலி செய்தும் பல பதிவுகளை நீங்கள் இட்டபோது மேற்குலகால் அரவணைப்பு செய்யப்பட்ட எங்கள் குமாரசாமி அண்ணா காணாமல் போய் விட்டார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.