Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் கோரிக்கையாக தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்கிறார் ஸ்ரீநேசன்

கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளதாக

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது இந்த தேர்தல் ஆனது கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலை விடவும் முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகின்றது காரணம் இந்த தேர்தலில் மாத்திரமே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்கின்றார்கள்.

இந்த பொது வேட்பாளரை 83 சமூக கட்டமைப்புகளும் 10 தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து இவரை நிறுத்தி இருக்கின்றது என்றால் இந்த பொது வேட்பாளர் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் சார்பாக இவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

தமிழர்கள் ஒற்றுமையாக இந்த இடத்தில் பயணிக்க வேண்டும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் ஒரே குரலில் தங்களது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் உள்நாட்டிற்கும் செல்ல வேண்டும் எங்களுடைய தீர்வுகளையும் சொல்ல வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த தமிழ் பொது வேட்பாளர் சங்கு சின்னத்தில் அரியநேந்திரன் அவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.

இந்த விடயத்தை கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும் எனவே நாங்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுடைய அருள் வாக்கு கூறுகின்ற அருட்தந்தை யோசப் மேரி அடிகளார் அவர்கள் அருமையாக கூறினார் தந்தை செல்வா அவர்களின் காலத்தில் இருந்து பயணித்தவர் தளராத வயதிலும் கூட தமிழ் தேசியப் பற்றோடு தமிழ் உணர்வோடு இந்த தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினால் நாங்கள் கேட்டு தான் ஆக வேண்டும் ஏனென்றால் அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் தடம் புரளாமல் ஆன்மீகப் பணிகளும் சரி அரசியல் பணியிலும் சரி மிகவும் அருமையாக பணியாற்றியவர்.

அவர் கூறுகின்றார் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களை அவர்களது பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என அவர் எடுத்துரைக்கின்றார்.

எனவே ஒரு மூத்த அருட்தந்தை அவர்களுடைய அருள்வாக்கு நாங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் திட சந்தர்ப்பம் எடுத்து இருக்கின்றோம் எனவே நடைபெறுகின்ற 21 ஆம் தேதி நடைபெறுகின்ற இந்த தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் தமிழ் சமூகம் ஒற்றுமையாக இருக்கின்றோம் ஒரே குரலில் எங்களுடைய பிரச்சனைகளை கூறப்போகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டோம் உள்நாட்டு பொறிமுறை ஊடாக இந்த பிரச்சினைகளை தீர்க்கிறோம் எனக் கூறினார்கள் ஒன்றுமே நடைபெறவில்லை 15 ஆண்டுகளாக.

அடுத்ததாக தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்துகின்றோம் எனக் கூறிக்கொண்டு எங்களுடைய கலாசார நிலையங்கள் அளிக்கப்படுகின்றது அந்த இடங்களில் விகாரங்கள் கட்டப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றது அந்த இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் இருந்தது என்று கூறிவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமிக்கின்ற செயல்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

இன்றும் கூட பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமல் தமிழ் மக்களை யுத்தத்தின் பின்னரும் ஒடுக்குகின்ற அந்த சட்டத்தை அவர்கள் வைத்திருக்கின்றார்கள் எங்களுடைய தமிழ் கைதிகள் முழுமையாக இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை இது மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கில் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு என்பது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மயிலத்தமடு மாதவனை இந்த மேச்சல் தரை இப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள் 365 நாட்களுக்கும் மேலாக அகிம்சை ரீதியாக வீதியில் இருந்து போராடிய அந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எந்த ஒரு தீர்வும் இந்த ஜனாதிபதியால் கொடுக்கப்படவில்லை.

100 நாட்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாகி தரவேண்டும் என போராடினார்கள் அதுவும் கேட்கப்படவில்லை.

எட்டு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கு வாக்களித்து இருந்தும் கூட அவர்கள் எங்களை தாராளமாக ஏமாற்றி இருக்கின்றார்கள் இந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலும் கூட சில வேளைகளில் பொது வேட்பாளர் திறக்கப்படாமல் இருந்திருந்தால் நாங்கள் யாரோ ஒரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்து இருப்போம் ஆனால் முதல் தடவையாக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கின்ற போது அதே போன்று தமிழர்களின் பிரச்சினைகளை கோரிக்கைகளை வைத்து இறக்கப்பட்டிருக்கின்றார் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாங்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கின்றது அதனை விடுத்து மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் வழி கூறக்கூடாது.

கேட்கின்றார்கள் இந்த வேட்பாளர் வெல்லப் போகின்றாரா என்று இவருக்கு வாக்களிப்பதால் என்ன கிடைக்கப் போகின்றது எனக்கு கேட்கின்றார்கள் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன் எட்டு ஜனாதிபதிகளுக்கு நாங்கள் வாக்களித்தோம் எதைப் பெற்றிருக்கின்றோம் ஒன்றையுமே அவர்கள் தரவில்லை அவர்களை வெற்றி பெற செய்திருக்கின்றோம் கடந்த நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்களை வெற்றி பெறச் செய்தோம் மஹிந்த ராஜபக்சே அவர்களை தோற்கடித்தோம் பின்னர் மைத்திரிபாலு என்ன செய்தார் 2018 ஆம் ஆண்டு நாங்கள் யாரை தோற்கடிக்க வேண்டும் என்று மைத்திரிக்கு வாக்களித்தோமோ அவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதம மந்திரியாக வைத்துக்கொண்டு அவர் அழகு பார்க்கின்றார் பேச்சுவார்த்தை இடம்பெற்றது அரசியல் யாப்பு தருவோம் என கூறினார்கள் ஏமாற்றி விட்டார்கள்.

சந்திரிகா அம்மையார் சமாதான தேவதையாக வந்தார் என்ன செய்தார் கடைசியாக அவரும் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார்.

எனவே எங்களுடைய அரசியல் வரலாறு என்பது ஏமாற்றப்படுகின்ற வரலாறாக இருக்கின்றது அவர்கள் ஏமாற்றுகின்ற வரலாறாக காணப்படுகின்றது எனவே தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் சமூகங்களுக்கும் நாங்கள் கூறக்கூடிய விடயம் என்னவென்றால் வடக்கு கிழக்கு மாத்திரம் அல்ல அனைத்து மக்களும் எமக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் கூறுகின்றார்கள் நாங்களும் இவருக்கு ஆதரவு வழங்குவதற்கு சித்தமாக இருக்கின்றோம் என்று.

எனவே நியாயத்தின் பேரில் உரிமையின் பேரில் நாங்கள் பதிக்கப்பட்ட சமூகம் என்பதன் பெயரில் நாங்கள் நீதியை நிலை நிறுத்துவதற்காக ஏமாற்றப்பட மாட்டோம் என்பதை எடுத்துக் கூறுவதற்காக எமக்கு ராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியது போன்று இறுதி யுத்தத்தின் போது ஒரு லட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற செய்தியை கூறி இருக்கின்றார் அவர் கூட அந்த இழப்புக்குரிய நீதியை பெற வேண்டும் என முயற்சித்தார் அவரும் கண்ணை மூடிவிட்டார் ஆனால் நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அழகாக கூறியது உண்மையை கண்டறிய வேண்டும் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அடுத்ததாக மீண்டும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாமல் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வை பெற வேண்டும் என கூறுகின்றார்கள் எதுவுமே இடம்பெறவில்லை 15 வருடங்களாக யுத்தத்தின் பின்னர் எங்களை ஏமாற்றி இருக்கின்றார்கள்.

மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை இப்போது ஒரு கதை பேசப்படுகின்றது மீளபெற முடியாத அதிகாரத்தை தந்திருக்கின்றார் என்கின்ற ஒரு கதை அழகாக கூறப்படுகின்றது.

மீளப்பெற முடியாத அதிகாரம் என்றால் எந்த விடயத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரம் தரப்பட்டு இருக்கின்றது என கூற வேண்டும் சமஸ்டி ஆட்சி முறையில் மீளப்பெற முடியாத இந்த இந்த அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றது என கூற வேண்டும் இது மொட்டை கடிதம் எழுதுவது போன்று மீளப்பெற முடியாத அதிகாரம் தந்ததனால் அதற்குள் சமஷ்டி இருக்கின்றது என்று எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கு எம்மவர்கள் பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309416

  • Like 1
  • Replies 62
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் அணி திரள்வோம் - யாழ் பல்கலை சமூகம் அழைப்பு

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என யாழ் பல்கலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம்.

தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும்

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன.

தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது.

அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம்.

எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்!

சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக?

தமிழர் தேசமாய்த் திரள்வோம்!

தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது.

தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர்!

தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர்.

இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம்.

நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/309418

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

இந்த பொது வேட்பாளரை 83 சமூக கட்டமைப்புகளும் 10 தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து இவரை நிறுத்தி இருக்கின்றது என்றால் இந்த பொது வேட்பாளர் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் சார்பாக இவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

 

c0114414.jpg

 

பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால்.... சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு💪

போடுங்க புள்ளடி... சங்குக்கு நேரே🙂 😂

நமது வெற்றியை, நாளை சரித்திரம் சொல்லும்.... 💪

இப்படை தோற்கின், எப்படை வெல்லும்😍 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சங்குக்கு வாக்களித்து தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம்; நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக நெல்லியடி வாணிபர் கழகத்தின் ஆதரவுடன் நெல்லியடி மத்திய சந்தைக்கு அருகாமையில் இன்று (14) காலை 10.00 மணிக்கு இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற ‘நமக்காக நாம்’ பரப்புரை கூட்டத்தின் போது இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி நகர் பகுதி வர்த்தகர்கள், அயல் பகுதி மக்களிடையே தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரணியேஸ் மரியாம்பிள்ளை, புலம்பெயர் செயற்பாட்டாளர் பீற்றர், நெல்லியடி வாணபர் கழக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நெல்லியடி வாணிபர் கழகம் சார்பி ஆதரவு தெரிவித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழர்களுக்காக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பது தமிழர்களாகிய எமது கட்டாய கடமையாகும். சிதறுண்டு போயுள்ள நாம் ஓரணியல் ஒன்று சேர்ந்து எமது ஒற்றுமையை உலகிற்கு காட்டுவதற்கு இந்த சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு நெல்லியடி வாணிபர் கழகமாக எமது பூரண ஆதரவினை வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/309421

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து திருகோணமலையில் பொதுக்கூட்டம்

15 SEP, 2024 | 12:17 PM
image
 

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் சனிக்கிழமை (14) பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர்  அரியநேத்திரனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பெருமளவு பொது மக்கள் கலந்துகொண்டார்கள்.

0.jpg

https://www.virakesari.lk/article/193734

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்: தமிழ் பொது வேட்பாளருக்கு காவல்துறையால் அனுப்பட்ட கடிதம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) பிரதி காவல்துறை மா அதிபரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

மேலும், பொதுமக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது அந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்: தமிழ் பொது வேட்பாளருக்கு காவல்துறையால் அனுப்பட்ட கடிதம் | Presidential Election Threats Ariyanethran Polcie

இதன்படி, கீழ் குறிப்பிட்ட பொது விடயங்களின் கீழ் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது..

  1. பிரதான வீதிகளுக்கு மிக நெருக்கமாக மேடைகளை அமைத்தல்/ மக்கள் கூட்டங்களை நடத்துதல்.
  2. பிரமுகர் மற்றும் பிரமுகர் வாகனங்களில் மக்களை நெருங்கி செல்லல், பேசுவது, புகைப்படம் எடுத்தல்.
  3. பொது இடங்களை கூட்டங்களுக்காக பயன்படுத்துதலால் எந்தவொரு நபருக்கும் சோதனை இன்றி உள்நுழைதல் மற்றும் வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் (உதாரணம்: வாரச் சந்தை)
  4. பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகள் மற்றும் வேறு தேவைகளுக்காக செல்லும் போது பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாது இருத்தல். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ள பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமை தேவையான பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றல்.
  5. பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள். கடும்போக்குவாதத்தில் இருப்பவர்கள், தன்னூக்க செயற்பாட்டாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஏதேனும் திடீர் Placement தாக்குதல்கள் நடத்தக்கூடிய வாய்ப்புகள். 

https://ibctamil.com/article/presidential-election-threats-ariyanethran-polcie-1726387024

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
47 minutes ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்: தமிழ் பொது வேட்பாளருக்கு காவல்துறையால் அனுப்பட்ட கடிதம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) பிரதி காவல்துறை மா அதிபரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

மேலும், பொதுமக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது அந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்: தமிழ் பொது வேட்பாளருக்கு காவல்துறையால் அனுப்பட்ட கடிதம் | Presidential Election Threats Ariyanethran Polcie

இதன்படி, கீழ் குறிப்பிட்ட பொது விடயங்களின் கீழ் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது..

  1. பிரதான வீதிகளுக்கு மிக நெருக்கமாக மேடைகளை அமைத்தல்/ மக்கள் கூட்டங்களை நடத்துதல்.
  2. பிரமுகர் மற்றும் பிரமுகர் வாகனங்களில் மக்களை நெருங்கி செல்லல், பேசுவது, புகைப்படம் எடுத்தல்.
  3. பொது இடங்களை கூட்டங்களுக்காக பயன்படுத்துதலால் எந்தவொரு நபருக்கும் சோதனை இன்றி உள்நுழைதல் மற்றும் வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் (உதாரணம்: வாரச் சந்தை)
  4. பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகள் மற்றும் வேறு தேவைகளுக்காக செல்லும் போது பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாது இருத்தல். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ள பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமை தேவையான பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றல்.
  5. பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள். கடும்போக்குவாதத்தில் இருப்பவர்கள், தன்னூக்க செயற்பாட்டாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஏதேனும் திடீர் Placement தாக்குதல்கள் நடத்தக்கூடிய வாய்ப்புகள். 

https://ibctamil.com/article/presidential-election-threats-ariyanethran-polcie-1726387024

சிங்களவனுக்கும், சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும்….
வயிறு எரியத் தொடங்கி விட்டது என்றால்,
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு பெருகி விட்டது என்று அர்த்தம். 😂
வாழ்க தமிழ். வளர்க  பொது வேட்பாளர் அரியநேத்திரன்.
தமிழ்ப் பிரதேசம் எங்கும்… சங்கு, ஓங்கி ஒலிக்கட்டும். 👍🏽 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

இந்த பொது வேட்பாளரை 83 சமூக கட்டமைப்புகளும் 10 தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து இவரை நிறுத்தி இருக்கின்றது என்றால் இந்த பொது வேட்பாளர் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் சார்பாக இவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

தமிழர்கள் ஒற்றுமையே இல்லை என்று முதலைக் கண்ணீர் விடுபவர்கள் அதிலும் யாழ் இணையத்திலும் மூக்கால் அழுபவர்கள் இன்றைக்கு 

எத்தனையோ அமைப்புகள் கட்சிகள் கூட்டாக வந்திருப்பதே ஒரு வெற்றி தான்.

தமிழர்கள் என்றுமில்லாமல் பலயீனமாக இருக்கும்  இந்த நேரத்தில் 

ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்னெப்போதையும் விட தமிழ் மண்ணில் நாளாந்தம் போய் நின்று ஆளாளுக்கு ஒவ்வொரு வாக்குறுதியைக் கொடுக்கிறார்கள்.

சட்டத்திலுள்ளதை அமுல்படுத்த முடியாதவர்கள் அதற்கு மேலும் பேச தயாராக இருப்பதாக கூவித் திரிகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் காரணம் பொது வேட்பாளரை இறக்கிவிட்டதே.

1 hour ago, ஏராளன் said:

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

 

இதை முன்னுதாரணமாக கொண்டு மற்றைய தமிழ் அமைப்புகளும்

பொது வேட்பாளருக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி மக்களை 

பொது வேட்பாளருக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

26 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவனுக்கும், சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும்….
வயிறு எரியத் தொடங்கி விட்டது என்றால்,
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு பெருகி விட்டது என்று அர்த்தம்.
வாழ்க தமிழ். வளர்க அரியநேத்திரன்.
தமிழ்ப் பிரதேசம் எங்கும்… சங்கு, ஓங்கி ஒலிக்கட்டும். 

போடு புள்ளடி சங்கிற்கு நேரே.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) பிரதி காவல்துறை மா அதிபரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டம் யாரிடமோ கையளித்து விட்டார்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ariyanethran.jpg?resize=600,375

தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் ஏனைய வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களைப் போல பகட்டாக, அட்டகாசமாக இருக்கவில்லை. அங்கே பிரம்மாண்டமான போஸ்டர்கள், பதாகைகள் எவையும் இருக்கவில்லை. பொது வேட்பாளரின் ஒரே ஒரு சுவரொட்டி மட்டும் இருந்தது. அதுவும் வீட்டுக்குள்ளே ஒரு குளிரூட்டியில் ஒட்டப்பட்டிருந்தது. அந்தச் சுவரொட்டி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஒட்டப்படுகின்ற எல்லாச் சுவரொட்டிகளை விடவும் எளிமையானது. சிறியது... கவர்ச்சி குறைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தம்மைச் சந்தித்த மக்கள் அமைப்பினரிடம் கேட்டார்கள், “உங்களுடைய பொது வேட்பாளரைப் பற்றிக் கதைக்கும் பொழுது உங்களுடைய அரசியல்வாதிகளும் கட்சித் தலைவர்களும் பொது நிலைப்பாடு, பொதுக் கொள்கை என்றுதான் உரையாடுகிறார்கள். ஒரு நபராக அவரைப்பற்றி உரையாடுவது குறைவாக இருக்கிறதே, ஏன்?” என்று

அக்கேள்வி சரியானது. தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூர்மையாக அவதானித்துள்ளனர். பொது வேட்பாளர் ஒரு குறியீடு. அவர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. இங்கு தமிழ்ப் பொது நிலைப்பாடுதான் முக்கியம். அதை முன்னிறுத்தும் நபர் அல்ல. ஏற்கனவே தமிழ் அரசியலில் அப்படி ஒரு பாரம்பரியம் இருந்து. கொள்கைக்காக நபர்களை முன்னிறுத்தாத ஒரு பாரம்பரியம். கொள்கைக்காக நபர்கள் தங்களைத் திரை மறைவில் வைத்துக்கொண்ட ஒரு பாரம்பரியம். கொள்கைக்காக தனிப்பட்ட சுகங்களையும் தனிப்பட்ட புகழையும் தியாகம் செய்யும் ஓர் அரசியல் பாரம்பரியம். அரியநேத்திரன் அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில், தன்னை முன்நிறுத்தாமல் தான் முன்னிறுத்தும் கொள்கையை முன் நிறுத்துகின்றார்.

தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய பிரச்சார செலவுகளை பற்றியும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கேட்டிருக்கிறார்கள். பெருமளவுக்குத் தன்னியல்பாக, தன் எழுச்சியாக மக்கள் செலவு செய்வதைக் குறித்து அங்கே கூறப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடையம் பல்வேறு பரிமாணங்களில் புதுமையானது வித்தியாசமானது.

முதலாவதாக,பொது வேட்பாளர் என்ற நபரை முன்னுறுத்தி பிரச்சாரங்கள் செய்யப்படுவது குறைவு. ஒரு பொது நிலைப்பாடு ஆகிய “தேசமாகத் திரள்வது” என்றுதான் பெரும்பாலான பிரச்சாரங்களில் கூறப்படுகின்றது. தன் முனைப்போடு வேட்பாளர்கள் தங்களை முன்னுறுத்தி, தங்களுடைய முகத்தை முன்னிறுத்தி, தங்களுடைய புகழை முன்னிறுத்தி, வாக்குக் கேட்கும் ஒரு பாரம்பரியத்தில் தன்னை முன்னிறுத்தாத அதாவது ஒரு ஆளை முன்னுறுத்தாத, அதேசமயம் கொள்கையை முன்னிறுத்தும்,ஒரு தெரிவுதான் பொது வேட்பாளர்.

இரண்டாவது, ஏனைய வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவு பணம் செலவழிக்கப்படும் பிரச்சார நடவடிக்கை பொது வேட்பாளருடையதுதான். பொது வேட்பாளருக்காக பிரசுரிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் போன்றவை ஒப்பீட்டளவில் மலிவானவை, செலவு குறைந்தவை.இடதுசாரி மரபில் வந்த ஜேவிபி அட்டகாசமான சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றது.அந்தச் சுவரொட்டிகள் விலை கூடியவை,அளவால் பெரியவை.பொது வேட்பாளரின் சுவரொட்டிகள் அதற்குக் கிட்ட வர முடியாத அளவுக்கு சிறியவை, மலிவானவை.

யாழ்ப்பாணத்தில் ஒரு பல வர்ணச் சுவரொட்டி, ஆனால் மலிவான விலையில் அடித்தால், குறைந்தது 12 ரூபாய்கள் தேவை. ஆனால் அதை ஒட்டுவதற்கு கொடுக்கப்படும் செலவு அதைவிட அதிகம் என்று கட்சிகள் கூறுகின்றன. ஒரு சுவரொட்டி ஒட்டுவதற்கு சில சமயம் ஆகக்கூடியது 15 ரூபாய் தேவைப்படுகிறது.என்று ஒரு கட்சித் தொண்டர் சொன்னார்.ஒட்டும் ஆட்களுக்கு சாப்பாடு, பயணச் செலவு போன்ற எல்லாச் செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், சுவரொட்டியை விட அதை ஒட்டும் செலவு அதிகமாக இருக்கும் ஒரு தேர்தல் களம் இது.

மூன்றாவது,வேறுபாடு, எனைய பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான அலுவலகங்கள் உண்டு. ஆனால் தமிழ் பொது வேட்பாளருக்கு மிகச்சில அலுவலகங்கள்தான் உண்டு.தென் இலங்கையில் இருந்து வந்த ஒரு ஊடக முதலாளி சொன்னார், “கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த போது, சாலை நெடுக ஜேவிபியின் அலுவலகங்களை அல்லது விளம்பரத் தட்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது” என்று. “அவர்கள் மூடப்பட்ட ஒரு கடையின் முகப்பில் தங்களுடைய கட்சிக் கொடியை பறக்க விடுகிறார்கள்.அல்லது கட்சிப் பதாதையைத் தொங்க விடுகிறார்கள். தாங்கள் எங்கும் நிறைந்து இருக்கிறோம் என்ற ஒரு தோற்றத்தை, உணர்வை ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றார்கள்”. அதற்கு வேண்டிய வளம் அவர்களிடம் உண்டு. ஆளணி, நிதி போன்ற அனைத்தும் அவர்களுக்கு உண்டு.

சஜித் பிரேமதாசவும் அப்படித்தான். நிறையக் காசு செலவழிக்கிறார். ரணில் ஜனாதிபதியாக இருப்பவர்.சொல்லவா வேண்டும்? எல்லாருமே கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகிறார்கள். வெற்றிக்காக எத்தனை கோடியை செலவிடவும் அவர்கள் தயார்.ஆனால் பொது வேட்பாளர் அப்படியல்ல.அவரிடம் அந்த அளவுக்குக் காசு கிடையாது. தன்னார்வமாக, தன்னெழுச்சியாக தமிழ் மக்கள் அவருக்காக பிரச்சாரம் செய்கின்றார்கள். கூட்டங்களை ஒழுங்கமைக்கின்றார்கள். உள்ளூர் வர்த்தகர்கள் கூட்டங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் உதவிகளை செய்கின்றார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இத்தேர்தல் ஒப்பீட்டளவில் அதிகம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.புலம் பெயர்ந்த தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் அதிகளவு ஒருங்கிணைந்த ஒரு புள்ளியாகவும் அது மாறியிருக்கிறது. பலர் தன்னார்வமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள். தமது ஊர் சங்கங்களுக்கு உதவிகளைச் செய்கின்றார்கள்.பொது வேட்பாளர் தாயகத்தையும் டயஸ்போராவையும் ஒப்பீட்டளவில் ஒன்றாக்கியிருக்கிறார்.

தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரதான பிரச்சாரக் கோஷம் “நாமே நமக்காக” என்பதாகும். அதாவது தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே பிரச்சாரம் செய்து கொள்வது. பொது வேட்பாளருக்காக ஒவ்வொரு தமிழரும் பிரச்சாரம் செய்வது. ஏனென்றால் அது தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டி எழுப்பும் ஒரு பிரச்சாரக் களம்.

நாலாவது பிரதான வேறுபாடு, தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக போட்டியிடவில்லை. அவர் ஜனாதிபதியாக வர முடியாது. ஏனென்றால் ஒரு தமிழ் குடிமகன் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக வருமளவுக்கு ஸ்ரீலங்காவின் ஜனநாயகம் செழிப்பானது அல்ல. அரிய நேத்திரன் ஜனாதிபதியாக வரும் கனவோடு தேர்தலில் குதிக்கவில்லை. மாறாக தேசத்தைக் கட்டி எழுப்பும் கனவோடுதான் அவர் ஒரு குறியீடாக தேர்தலில் நிற்கின்றார். எனவே ஏனைய எல்லா வேட்பாளர்களை விடவும் தமிழ்ப் பொது வேட்பாளர் வேறுபடும் முக்கியமான இடம் இது. அவர் ஒரு குறியீடு என்பது.

தமிழ்ப் பொது வேட்பாளரைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வித்தியாசமானது. முன்னுதாரணம் இல்லாதது. தான் வெல்ல முடியாத ஒரு தேர்தலில் ஒரு குறியீடாக நிற்பது என்பது முன்னப்பொழுதும் இல்லாதது. ஒரு பொது நலனுக்காக தன்னை ஒரு குறியீடாக்கி தேர்தலை நிற்பது என்பது முன்னப்பொழுதும் நிகழாதது.

மேற்கண்ட பிரதான வேறுபாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அதிகம் படைப்புத்திறன் மிக்கதாகவும், அரசியலில் செயலூக்கம் மிக்க ஒரு தெரிவாகவும், இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய முன்னுதாரணம் ஆகவும் காணப்படுகின்றது.

https://athavannews.com/2024/1399505

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம்

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து கிளிநொச்சியில் (Kilinochchi) மாபெறும் பொதுக்கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கூட்டமானது நாளையதினம் (16) மாலை மூன்று மணிக்கு கிளிநொச்சி பசுமை பூங்கா டிப்போச்சந்தியில் இடம்பெறவுள்ளது.

மேற்படி, கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு தமிழ் பொது வேட்பாளருக்கு தங்களது ஆதரவை அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் 

அத்தோடு, நேற்றையதினம் (14) திருகோணமலை (Trincomalee) வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியிலும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெறும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் | Public Rallykilinochchi Tamil General Candidate

மேலும், இந்த கூட்டமானது அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா (Yathindra) தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/public-rallykilinochchi-tamil-general-candidate-1726392797

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரிய நேந்திரனுக்கு வாக்குப்போடாதவன் தமிழன் இல்லையாம் சிங்களவனுக்கு பிறந்தவனாம்.. இப்ப புதிசா ஆரம்பிச்சிருக்கிறாங்கள்.. 

இதை சங்கே முழங்கு என்டு கொஞ்சம் செயார் பண்ணீட்டு திரியுதுகள்..

வெளிநாட்டு துரோகிப்பட்ட நீட்சிதான் இது.. தீவிர தமிழ் இனவாதம் இது.. எதிர்காலத்தில் நாமல் தரப்பு ஆட்சிக்கு வரணும் என்று உள்ளூர மனசுக்குள் ஆசைப்படுபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்..

ஞானதாசதேரர்  ,உதயன்கம்மன்பல, விஜயசேகர போன்றவர்களின் தமிழ் வெர்சன் இவர்கள்..

மோடையனுகளை ஒன்றுதிரட்ட சிங்கலே அப்டீனு வரணும் இல்ல தமிழண்டானு வரணும்...

மாஸ் மோடையன்ஸுக்கான தெரிவுகள்…

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-2634.jpg

இது எப்படி இருக்கு?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, MEERA said:

இது எப்படி இருக்கு?

சுப்பர்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, MEERA said:

IMG-2634.jpg

இது எப்படி இருக்கு?

1725759825-Ranil_Mavai%20.jpg

மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்..! | President Ranil Suddenly Met Maavi

போன கிழமை தானே... மாவை, ரணிலுக்கு  ஆதரவு தெரிவித்து இருந்தார்.

அதற்குள் மனம் மாறி... தமிழ் பொது வேட்பாளர் அறியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பது வரவேற்கக் கூடிய விடயம்💪

ஆக... இப்போ, சுமந்திரன் தனியத் தான் ... சஜித்துடன் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் போலுள்ளது😂

தமிழரசுட்சியில் இருந்து.... வேறு ஒருவரும் சுமந்திரனுடன், சஜித்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யப் போகாமல் இருப்பதை பார்க்க... இது சுமந்திரனின் தான்தோன்றித்தனமான முட்டாள் தனமான செயலாக உள்ளதை மக்களே அறிந்து கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் பொது வேட்பாளரை சந்தித்த மாவைசேனாதிராசா!

16 SEP, 2024 | 10:29 AM
image

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், அவரது மகனான வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கலையமுதனும் பொது வேட்பாளரை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.   

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.    

அதேவேளை, யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டத்தில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் பிரச்சார மேடையில் ஏறி தமது ஆதரவை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

https://www.virakesari.lk/article/193816

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக திட்டம் தீட்டும் தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் : அம்பலமாகியுள்ள பல விடயங்கள்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் பொது வேட்பாளர் பதவியிலிருந்து நான் விலகி விட்டேன் மற்றும் வேறொரு வேட்பாளரை ஆதரிப்பதற்கு ஒப்புக்கொண்டேன் என்று வெளிவரும் தகவல்ளை நம்ப வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan) ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அதிருப்தியாக இருப்பதனால் என்னை அவதானமாக இருக்குமாறு பிரதி காவல்துறை மா அதிபர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு பலத்த ஆதரவு கிடைக்கவுள்ளது என்பதை குழப்புவதற்காக பலர் செயற்பட்டு வருகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இம்முறை 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ள நிலையில் எனக்கு மட்டும் இவ்வாறான அச்சுறுத்தல் வந்துள்ளமை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். இதற்கான பதிலை மக்களே வாக்களிப்பு மூலமாக காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

நேற்று (15) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் தெரிவிக்கையில்.....

https://ibctamil.com/article/hreat-to-tamil-general-candidate-itak-mps-in-back-1726470223#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@வாலி @Kapithan @நிழலி

மற்றும் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்போர்,

கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக

2010 இல் சரத் பொன்சேகா

2015 இல் மைத்திரி

2019 இல் சஜித்

என வாக்களித்தார்கள். இதனால் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

 

பிகு: நான் தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, MEERA said:

@வாலி @Kapithan @நிழலி

மற்றும் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்போர்,

கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக

2010 இல் சரத் பொன்சேகா

2015 இல் மைத்திரி

2019 இல் சஜித்

என வாக்களித்தார்கள். இதனால் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

 

பிகு: நான் தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை.

அதைச் சொல்லமாட்டோம்.

ஆனால் ஒற்றுமை ஒற்றுமை என்போம்

ஒற்றுமையாக வரும்நேரம் எதிராக நிற்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, MEERA said:

@வாலி @Kapithan @நிழலி

மற்றும் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்போர்,

கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக

2010 இல் சரத் பொன்சேகா

2015 இல் மைத்திரி

2019 இல் சஜித்

என வாக்களித்தார்கள். இதனால் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

 

பிகு: நான் தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை.

நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாதது டமில் அரசியல்வாதிகளின் தவறு. 

இந்தியாவின் காலில் விழுந்தால் எல்லாம் சரியாகிவிடாது. 

  • Downvote 1
Posted
1 hour ago, MEERA said:

@வாலி @Kapithan @நிழலி

மற்றும் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்போர்,

கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக

2010 இல் சரத் பொன்சேகா

2015 இல் மைத்திரி

2019 இல் சஜித்

என வாக்களித்தார்கள். இதனால் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

 

பிகு: நான் தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை.

முதலாவது மைத்திரியை ஆதரித்தமை பிழையான முடிவு அல்ல. மகிந்தவின் தமிழர்களுக்கு எதிரான மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விலகி தமிழர்கள் மூச்சு விடக்கூடிய சூழ் நிலையை உருவாக்குவதற்காக எடுத்த முடிவு அது. மைத்திரி வந்த பின் அதுதான் நடந்ததும். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவ பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் மைத்திரியின் ஆட்சியில் தான்.

ஊர் பக்கம் தலைவைத்தும் பார்க்க முடியாத சூழ்நிலையில் இருந்த என்னைப் போன்றவர்கள் மீண்டும் தாயகம் பக்கம் போகக் கூடிய நிலைவந்ததும் மைத்திரி காலத்தில் இருந்து தான். இன்று என்ன பயன் என்று கேட்பவர்கள் பலர், அங்கு தொடர்ந்து அச்சமின்றி போகத் தொடங்கியதும் மைத்திரி காலத்தில் தான்.

ஆனால் அரசியல் தீர்வு?

சிங்களம் அழுத்தங்கள் இல்லாத, தமிழர்களின் இராணுவ பலம் மட்டுமல்ல, பொருளாதார பலமும் சிதைக்கப்பட்ட சூழ்நிலையில் ஒரு போதும் தீர்வு தராது. தமிழ் மக்கள் மகிந்த அல்லாத கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு வாக்களிப்பதும் இதை புரிந்து கொண்டு தான்.

 

இதன் அடிப்படையில் தான் சரத்துக்கும் பின்னர், சஜித்துக்கும் வாக்களித்தனர்.

மூன்று வருடங்களுக்குள் தமிழர்கள் போல் கோத்தாவுக்கு வாக்களிக்காமல் விட்டிருக்கலாம் என 69 இலட்சம் சிங்கள மக்களும் எண்ணும் அளவுக்கு காலம் மாறியதும், அதன் பின் இன்று இனவாதத்தால் வெல்ல முடியாது என்று முன்னனி 3 வேட்பாளர்களும் உணர்ந்ததும் இதன் பக்க விளைவுகள்.

  • Like 2
Posted

பொது வேட்பாளர் தெரிவு என்பது தமிழ் மக்களின் ஒற்றுமையை அல்ல, பிளவுகளை உலகுக்கு வெளிப்படையாக தெரிவுக்கும் ஒரு முறை என்பதால் தான், இதுபற்றி ஊடகங்களில் வர ஆரம்பித்த நாளில் இருந்து நான் எதிர்க்கின்றேன்.

இன்றிருக்கும் சூழ்நிலையில், முக்கியமாக வடக்கு கிழக்கு என்பது ஒன்றிணைந்து முடிவெடுக்கும் சூழ்நிலை இல்லாத போது, தமிழ் பேசும் மக்களுக்கிடையில் அடிப்படை புரிந்துணர்வு கூட கட்டமைக்கப்படாத சூழ் நிலையில், இது ஒரு விசப் பரீட்சை.

பொது வேட்பாளருக்கு 100 வீதம் தமிழ் மக்கள் வாக்களிப்பினும் கூட, அதன் விளைவுகள் பூச்சியம். வென்ற சனாதிபதியின் ஆட்சி தான் நிலவும். சர்வதேசமும் அவருடன் தான் கைகுலுக்கி தன் அலுவல்களைப் பார்க்கும்.

ஆனால் 50 வீதம் கூட பொது வேட்பாளருக்கு வடக்கு கிழக்கில் இருந்து கிடைக்கப் போவதில்லை. அதனால் அதன்  விளைவு தமிழ் தேசிய அரசியலில் கடும் செல்வாக்கு செலுத்தும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் எனும் அடிப்படையை தமிழ் பேசும் மக்களே நிராகரித்தனர் எனும் விதத்தில் இந்த விளைவு மற்றவர்களால் எடுக்கப்படும். 
தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களில் 50 வீதத்தினர் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை  வாக்களிப்பின் மூலம் உலகுக்கு அறிவித்த பின், அங்கு எந்த அரசியல் மிச்சமிருக்க போகின்றது?

தமிழ் தேசிய அரசியல் வடக்கு கிழக்கு என்று இருந்து, பின் வடக்குக்கு மட்டும் என்று ஆகி, ஈற்றில் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே என்று குறுகப் போகின்றது. 

 

  • Like 2
Posted
50 minutes ago, ஈழப்பிரியன் said:

அதைச் சொல்லமாட்டோம்.

ஆனால் ஒற்றுமை ஒற்றுமை என்போம்

ஒற்றுமையாக வரும்நேரம் எதிராக நிற்போம்.

உங்களுக்கு தமிழை வாசித்து புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கின்றது என நான் அறிந்திருக்கவில்லை.

பொது வேட்பாளர் தெரிவு என்பது, வென்றாலும் (தமிழ் மக்கள் 100 வீதம் அவருக்கு வாக்களிப்பினும்) பூச்சிய விளைவை தருகின்ற, அதே நேரம் தோற்றால் பாதகமான சூழ் நிலையை தோற்றுவிக்கின்ற ஒன்று என இங்கு பல தடவை எழுதியுள்ளேன்.

இப்படியான சாத்தியம் தெளிவாக உள்ள ஒரு விடயத்தை மக்கள் முன் கொண்டு செல்வது அந்த மக்களை ஏமாற்றும் ஒரு விடயம் என தொடர்ந்து எழுதியுள்ளேன்.

அப்படி நான் எழுதியவற்றை உங்கள் கண்கள் வாசித்தாலும், அதை உடனடியாக மறந்து விட்டு "இவர்கள் சொல்ல மாட்டினம் " என்று மீண்டும் எழுதுகின்றீர்கள் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ariya-neththiran.jpg?resize=750,375

மட்டக்களப்பில் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சாரக் கூட்டம்!

மட்டக்களப்பு கல்லடியில் நாளை நடைபெறவுள்ள,பொது வேட்பாளர் அரியநேத்திரனின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்  கோ. கருணாகரன் தலைமையில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்  கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உட்பட குழுவினர் இன்று  பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து துண்டுபிரசுரம் விநியோகித்து பிரச்சார நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

https://athavannews.com/2024/1399664

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.