Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kavi arunasalam said:

ஈழப்பிரியன், நடந்தவைகளை நினைவூட்டுவதில் தவறில்லை. அதற்காக ‘இனவெறியன்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவறு. நாங்கள் கூட சிங்களவர்களின் பார்வையில் தமிழ் இனவெறியர்களாக இருக்கலாம்.

அதேநேரம் இப்பொழுதுதான் அவர் ஜனாதிபதியாகி ஒரு வாரம் ஆகியிருக்கிறது.  என்ன செய்யப் போகிறார் என காத்திருப்போம். அதற்கு கால அவகாசம் வேண்டும். அதற்குப்பின் பார்க்கலாம். இப்பொழுது அவசரமாக ஓடி வந்து வெறுப்பை அள்ளித் தெளிப்பதற்கான தேவை என்ன? அனுராவின் அலை வடக்கு கிழக்கிலும் பெரிதாக எழுந்து தமிழ் தேசியம் பேசுவோரை அழித்து விடும் என்ற பயமா? நீங்கள் குறிப்பிட்டுளதுபோல், ‘மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’ என்றால் எதற்காக குழப்ப வேண்டும்?

நாட்டில் எனக்கான வாக்குகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழன் என்ற நிலையில்  உங்களைப் போல எனக்கும்  தேவை இருக்கிறது.

இந்த  உலகம்  எமக்காகக் காத்துக்கொண்டு இருக்காது என்பது பலருக்குப் புரிவதில்லை. 

  • Replies 237
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • கருத்துக்கள உறவுகள்

1) அனுரா ஒன்றும் அரசியல்ப் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.. அதனால் அதை பேசுவதில் பலன் இல்லை.. நடந்தால் சந்தோசமே..

ஆனால்

2) மகிந்த யுகம் முடிந்து மைத்திரி யுகம் வந்தபோது அவுஸ்திரேலியாவில் கனடாவில் இருப்பதுபோல் இல்லாவிட்டாலும் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பயம் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து அவுஸ்த்திரேலியா கனடா ஜரோப்பாவில் இருப்பது போல் இல்லாமல் பிள்ளைகளை தமிழ்மொழியில் படிப்பத்து தமிழை பேசி பேரக்குழந்தைகளுக்கும் தமிழை கற்றுக்கொடுத்து தமிழையும் வளர்த்து தமிழ் இனத்தையும் சிறிது சிறுதாக பெருக்கினோம்..

2) இப்பொழுதும் அப்படி அனுராவின் கீழ் ஏதோ சாவுப்பயம் இல்லாமல் எங்கள் மண்ணில் வாழ்ந்திட்டு போறம்.. அதில் கொள்ளிக்கட்டையை செருகாதீர்கள்..

மொழிதான் இப்பொழுது இங்கு பெரிய பிரச்சினை.. தமிழர்கள் இரண்டாவது மொழியாக சிங்களத்தையும் கற்றுக்கொண்டால் அரசியல்ப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் விளங்காப்பிரச்சினைகளால் வரும் பாதிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்..

நீங்கள் ஜேர்மனி பிரான்ஸ் அவுஸ்த்திரேலியா என்று போய் அந்த நாட்டு மொழியை கற்று இரண்டு தலைமுறைக்குள் தமிழை மறந்து இன அடையாளத்தையும் இழந்து ஒரு தலைமுறையை புலம்பெயர்ந்து இன அழிப்பு செய்யும் புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பிடும்போது ஊரில் இருந்து தமிழையும் கற்று வளர்த்து தாய்நிலத்தில் வாழ்ந்து தமிழ்பேசும் சந்தத்திகளையும் உருவாக்கிக்கொண்டு சிங்களத்தை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்பவர்களின் காலில் வீழ்ந்து கும்பிடலாம்..

உங்களால் பிரஞ்சையும் டொச்சையும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு இனவெறி பேசினாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து வெள்ளைகளோடு சந்தோசமாக வாழமுடியும் என்றால் ஊரில் இருப்பவர்கள் ஏன் சிங்களம் கற்று முஸ்லீம்கள் போல் உங்களைப்போல் சந்தர்ப்பவாதிகளாய் வாழமுடியாது..? வாழ்ந்தால்தான் என்ன தப்பு..? இனம் இருந்தால்தானே இடமே இருக்கும்..

ஆக நீங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உங்கள் பாடுகளை பார்ப்பதுபோல் ஊரில் இருப்பவர்களையும் அவர்கள பாடுகளை பார்க்கவிடுங்கள்.. 

ஊதி ஊதி அணைந்து போய் இருக்கும் நெருப்பை எரித்து தமிழர்களுக்கு என்று இருக்கும் ரெண்டு சின்ன மாகாணங்களை எப்பொழுதும் சுடுகாடாக வைத்திருக்க விரும்பாதீர்கள்..

அப்படி நினைப்பவர்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்.. நாசாமாப்போவீர்கள்.. 

வாழு வாழ விடு…

பாலைவனம் கடந்து வந்தோம்.. பாதங்களை ஆற விடு..🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிழலி said:

நுணா,

ஐலண்ட் முட்டுக்கட்டை போடவில்லை. தன் எதிர்க்கருத்தை பதிகின்றார். இது தான் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு அவசியம்.

எதிர்கருத்துகளே இல்லாத, அவற்றுக்கு சந்தர்ப்பம் கொடுக்காத அரசியல் எம்மை சூனியத்துக்குள் தள்ளிய வரலாறும் எம்மிடம் உண்டு.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தியுள்ளேன்.

//பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள்  அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்//

இந்த கருத்து இத்திரிக்குள் ஏன் வர வேண்டும்???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இனவாதமற்ற ஆட்சி  எப்படிப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றீர்கள் island? அதன் அம்சங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

இனவாதமற்ற நாடு என்பது ஒவ்வொரு பிரஜைக்கும் சமநிலை, சம உரிமைகள் மற்றும் சமப்பாடு வழங்கப்படும் ஒரு சமூகமாக இருக்க வேண்டும். அத்தகைய நாடு மக்கள் மக்களின் இன, மத, மொழி, தோற்றம், கலாசாரம் அல்லது பிற தனிப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் வேறுபாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இனவாதமற்ற நாடு என்பது ஒற்றுமை, பன்மை, சமநிலை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட நாட்டு அமைப்பாக இருக்கும்.

இதை அடைவதற்கு அநுர என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்ன  அரசியலமைப்பு மாற்றங்களை செய்யப் போகிறார் என்பது எனக்கு தெரியாது.  காலங்காலமாக புரையோடிப்போயிருக்கும் இனவாதத்தை ஒழிப்பது நிச்சயம் சவாலான விடயம்.  “நான்  மந்திரவாதியல்ல ஆனால் இதை ஒழிக்க நான் எனது பதவிக்காலத்தில் என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இனவாதத்தின் தீமைகள் பற்றி சிங்கள பிரதேசங்களிலும்  அவர்கள் மத்தியில் அதிகமாக உரையாடி உள்ளார். 

அவர் தனது ஆட்சியை ஆரம்பிக்க முதலே அவரை இனவெறியர் என்று கட்டமைத்த பிரச்சாரத்தை  ஆரம்பித்தது நிச்சயமாக  தீய நோக்கிலேயே!  

இனவாதம் என்பது,  தமிழர் மத்தியில் புரையோடிப்போயிருக்கும் சாதிவாதத்தையும் உள்ளடக்கியது.  சிங்கள இனவாதம் குறைந்தாலும் அது குறையுமா என்பது சந்தேகமே.  தமிழ் தேசியப் பரப்பில் தலைவர்களாக   இவ்வாறான பல இனவெறியர்கள் இருந்தும் அவர்களை “இனவெறியர்” என்று அழைப்பார்களா?  அதுவும் இனவாதம் தான் என்பதை,  வரலாற்றில் எமது தவறுகளை மறைத்து  எழுதும் அது பற்றி பேசுபவர்கள் மீது அவதூறுகளை பதிலாக தெரிவிக்கும் எம்மவர்  இங்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை  என்பதோடு   அதை ஜஸ்ரின் கூறியபடி  சத்தமின்றி மொள்ள  கடந்து செல்லவே பலரும் இங்கு விரும்புவர். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாழு வாழ விடு…

பாலைவனம் கடந்து வந்தோம்.. பாதங்களை ஆற விடு..🙏

❤️..........

மிகவும் தேவையான ஒரு கருத்தை தாயகத்திலிருந்து பதிந்திருக்கின்றீர்கள், ஓணான்டியார்..........👍.

நான் இந்த அவருடம் ஊருக்கு போயிருந்த போது வவுனியாவில் ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். அவர்களை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். இப்பொழுது மிகச் சாதாரண ஒரு வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கணவன், மனைவி, சில பிள்ளைகள். 

அந்த அக்கா சொன்னார், 'தம்பி, எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்றும் நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.............'. அவர்களிடம் எதுவுமே இல்லை. ஒரு கூட்டில் 50 கோழிக் குஞ்சுகள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனுடனேயே இவ்வளவு திருப்தியா......... நான் கண் கலங்கி விடக் கூடாதென்பதில் மிக உறுதியாக இருந்தேன். அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை.

இந்தச் சனங்களை அப்படியே வாழ விடுங்கள் என்று தான் நானும் கேட்கின்றேன். அவர்கள் கடந்து வந்த பாதை போதும்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள்  அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்.  

புலிகளின் நடவடிக்கைகளை  விமர்சனத்துக்கு உட்படுத்த வேணும் என்று சொல்லி புலிகளை வசைபாடுவது உங்க ஸ்டைல் இங்கு அனுரா வின் கடந்த கால நடவடிக்கைககள் அவர் கட்சி சார்ந்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைககள் போன்றவற்றை ரஞ்சித் எமது பார்வைக்கு நினைவு படுத்துகிறார் உங்களால் அவர் எழுதிய விடயங்களில் பிழை கண்டு பிடிக்க முடியவில்லை ஏனென்றால் அவர் எழுதுவது அனைத்தும் நடந்த விடயங்களே .பொது வேட்பாளர் அவர் உண்மையிலே யார் என்று தெரியாத போதிலும் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டுவதுதான் யாழில் உங்களின் 24 மணி நேர சேவை .

நல்ல கருத்துக்கள் வரவேணும் அதற்காக எப்ப பார்த்தாலும் பழம் சீல கிழிந்தது போல் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டிக்கொண்டு புலம்பெயர் தமிழரையும் திட்டிக்கொண்டு எழுதுவதை எல்லாம் நீங்கள் கருத்து என்று எடுத்து கொண்டது உங்கள் சிறுமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்குது .

அநேகமா இனி அனுரா திருந்தியும் இருக்கலாம் இரு இனமும் ஒன்று பட்டால் தான் அந்த தீவில் நல் வாழ்வு என்று அதற்கு முதல் ....................அறுத்து ஆடுகிரியல் உங்க வழக்கமான விளயாட்ட ?

  • கருத்துக்கள உறவுகள்

2009க்கு முன்னர் இப்படி தான் புலிகளை அழித்தால் அல்லது புலிகள் இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் மற்ற அனைத்தும் சரியாகும் என்று ஒருசிலர் ஊரிலும் இங்கும் கூவித்திரிந்தார்கள்.  அதேபோல் தான் இன்று தமிழ்த்தேசியம் அழிந்தால் அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் அனைத்தும் சரியாகும் என்று அதே நபர்கள் கூவித் திரிகிறார்கள். 

என்ன விலை கொடுத்தும் புலிகளை அழிக்க துணை போனவர்களுக்கு தமிழர்களுக்கான தீர்வு என்பது இரண்டாம் பட்சமாக கூட இருக்கவில்லை. அதுவே இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது. தமிழ்த் தேசிய அழிப்பும் அப்படித்தான். 

Edited by விசுகு

14 minutes ago, விசுகு said:

தாயகத்தில் தமிழ் தேசியத்தை அழிக்க முனைவது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் உள்ள நாட்டாமைகளும் அவர்களின் எடுபிடிகளாக உள்ள வயது போயும் ஓய்வெடுக்க விரும்பாத கிழட்டு அரசியல்வாதிகளும் தான். 

புலிகள் அழிக்கப்பட்ட பின் அதை அழித்த மகிந்தவின் ஆட்சியை அகற்ற தாயக மக்கள் சரத் பொன்சேக்கா, மைத்திரி, சஜித் என்று மாறி மாறி வாக்களித்தனர்.

ஆனால் புலிகள் அழியப் போகிறார்கள் என தெளிவாக புரிந்த பின் இறுதி யுத்ததிற்கென காசு சேர்த்து அதை ஆட்டையை போட்ட புலம்பெயர் அமைப்புகள் பல, புலிகள் அழிந்த பின் மகிந்தவுடன் டீல் பேசி அவருடன் கைகுலுக்கினர்.

எனவே தாயக மக்களின் நோக்கத்திற்கு எதிராகவே எப்பவும் இந்த புலம்பெயர் புண்ணாக்கு கோஷ்டிகள் இயங்கி வருகின்றனர் என்பது கண்கூடு.

நீங்கள் மேலே குறிப்பிட்டது அப்படியானவர்களைத் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

தாயகத்தில் தமிழ் தேசியத்தை அழிக்க முனைவது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் உள்ள நாட்டாமைகளும் அவர்களின் எடுபிடிகளாக உள்ள வயது போயும் ஓய்வெடுக்க விரும்பாத கிழட்டு அரசியல்வாதிகளும் தான். 

புலிகள் அழிக்கப்பட்ட பின் அதை அழித்த மகிந்தவின் ஆட்சியை அகற்ற தாயக மக்கள் சரத் பொன்சேக்கா, மைத்திரி, சஜித் என்று மாறி மாறி வாக்களித்தனர்.

அதே நேரத்தில், புலிகள் அழியப் போகிறார்கள் என தெளிவாக புரிந்த பின் இறுதி யுத்ததிற்கென காசு சேர்த்து அதை ஆட்டையை போட்ட புலம்பெயர் அமைப்புகள் பல, புலிகள் அழிந்த பின் மகிந்தவுடன் டீல் பேசி அவருடன் கைகுலுக்கினர்.

தாயக மக்களின் நோக்கத்திற்கு எதிராகவே எப்பவும் இந்த புலம்பெயர் புண்ணாக்கு கோஷ்டிகள் இயங்கி வருகின்றனர்.

நீங்கள் மேலே குறிப்பிட்டது அப்படியானவர்களைத் தானே!

ஆம் 

தமிழ்த் தேசியத்தை அழிக்க வேண்டும் என்று எவர் செயற்பட்டாலும் பேசினாலும் எழுதினாலும் அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன். அவர்கள் என்னை பெத்தவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பேன். மரியாதை தரமாட்டேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா?

ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம்.  இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது  கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது.

இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி  கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த  நியாயமில்லை.

அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே!

குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝

ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....?

இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? 
எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும்.

விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

இந்த  உலகம்  எமக்காகக் காத்துக்கொண்டு இருக்காது என்பது பலருக்குப் புரிவதில்லை. 

சும்மா எதற்கெடுத்தாலும் பழசையே கிளறிக்கொண்டிருந்தால் ஒரு அடி கூட நகர முடியாது. சேர்ந்து கைகோர்த்து நடந்து போவோம். உதறினால் அதை  உலக சாட்சியாக்குவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. 

எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள்.

எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். 

யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன.

எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம்,  கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்.

என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை.

எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம்.

எல்லோருக்கும் நன்றி.

இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.

Edited by ரஞ்சித்
Spelling

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

தொடர்ந்து எழுதுங்கள், (வசை மொழிகள் எனக்கில்லை என்பதாலல்ல) உங்களுக்கு சரியாக தெரிந்த ஒரு விடயத்தினை செய்யாமல் விட்டால்தான், அது தவறாகும்(உங்களை போல விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரே இவ்வாறான முழுமையான ஆராய்ச்சி தகவல்களை திரட்டி அதனை தொகுத்து கருத்திட கூடியவர்கள் உள்ளார்கள்) .

இவ்வாறான பதிவுகளால் கூட எதிர்மறையான விளம்பரம் மூலம் NPP ஆட்சியினை பிடிக்கப்போவதில்லை, ஜனாதிபதி தேர்தல் வேறு, பாராளுமன்ற தேர்தல் வேறு என கருதுகிறேன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பை போல அல்லது அதற்கும் குறைவான வாக்கு பெற்றகட்சி 3 ஆசனங்களை கைப்பற்றிய கட்சி எவ்வாறு பெரும்பான்மை எடுக்க முடியும்?

இந்த பதிவினால் இலங்கை அரசியலில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை, ஆனால் தேவையற்ற எதிர்பார்ப்பினை தவிர்ப்பதற்காக பதியப்படுகிறது, இந்த கட்சி இந்த தடவை 35 ஆசனங்கள் அதிகபட்சமாக எடுக்க முடியும் என கருதுகிறேன் (அதுவும் சாத்தியமா எனத்தெரியவில்லை).

மொத்தம் 225 ஆசனக்கள் உள்ள தேர்தலில் 3 ஆசனக்கள் பெற்ற கட்சி 20 ஆசனங்கள் பெறுவதே சாதனைதான்.

சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், சிறுபான்மையினரது கருத்துக்கள் வலுப்பெறக்கூடும்.

இந்த் கட்சி தனிப்பெரும்பான்மை எடுத்து வென்றால் வரலாறு மீண்டும் நிகழும்! (அது இந்த பாராளுமன்ற தேர்தலில் நிகழாது என்பதே ஒரு ஆறுதலான விடயமாக இருக்கிறது).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

உங்களின் ஆதரவிற்கு நன்றி வசி!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா?

ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம்.  இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது  கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது.

இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி  கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த  நியாயமில்லை.

அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே!

குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝

ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....?

இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? 
எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும்.

விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.

அண்ணா 

நீங்கள் சொல்வது கேட்க பார்க்க பரவசமாகத்தான் இருக்கிறது.

பல்லக்கில் தூக்கப்பட்டவன் தூக்கியவனிடம் கையேந்தி நிற்கும் போது இனவாதம் எங்கேயிருந்து தொடங்கியது என்று நாங்கள் சொல்லித் தான் உங்களுக்கோ அல்லது இங்குள்ளோருக்கோ புரியணும் என்று இல்லை.

ஆனால் இங்கே பேரினவாத சிங்களத்தில் ஒருவர் நல்லவர் அவரால் அனைத்தும் மாறும் என்கிற விசத்தை விதைக்கும் போது அவரது கட்சி மற்றும் அவரது தோழர்கள் தான் கிடைக்க இருந்த ஆகக் குறைந்த பாதுகாப்பை கூட அறுத்து எறிந்தனர் என்கிற வரலாற்று எச்சரிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது. அதைக் கூட பதியக்கூடாது பார்க்கக்கூடாது என்பது தான் இனவாத உச்சம்.  இது தான் அநுர செய்ய விரும்புவதும். 

இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான். 

இரத்திணச் சுருக்கம் அண்ணை, மிக்க நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

இரத்திணச் சுருக்கம் அண்ணை, மிக்க நன்றி !

ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட  தமிழ் இளைஞர்கள்

அவர்களின் இனவாத வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்

தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சாடல்

------------------------------------------------------

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் NPP (JVP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றிருந்த நிலையில் வடக்கில் உள்ள அரசியல் புரிதலற்ற இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை  குறித்து கவலை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் ஜே.வி.பி  யின் கடந்த கால கசப்பான இனவாத வரலாற்றைக் கற்றறிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

2022 ஆம் ஆண்டு சிறீலங்காவின் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் தவறான கொள்கைகயைால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட குழப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிய ஜே.வி.பி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றோம் எனும் கோசத்தோடு தனது கட்சிப் பெயரை தேசிய மக்கள் சக்தி என உருமாற்றம் செய்து மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்ததோடு 2024 செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாாரளுமன்றத்தில் வெறும் மூன்று உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த ஜே.வி.பி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றியடைந்து அனுரகுமார திசாயநாயக்க ஜனாதிபதியாகிய ஒரு சில தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலிற்கு திகதியிடப்பட்டது. 

இந்நிலையில் தான் வடக்கு இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் பிழையான வழி நோக்கிச் சென்று விட்டதாகவும் அனுரகுமார திசாநாயக்கவே தங்களது மீட்பர் என கூறும் அளவிற்கு 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களின் மூளையில் ஜே.வி.பி காய்ச்சல் கடுமையாக தொற்றியிருக்கிறது. 

இந்த ஜே.வி.பி காய்ச்சலில் இருந்து 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் விடுபடவேண்டும் எனில் ஜே.வி.பியின் கடந்த கால வராலற்றைப் படிப்பதன் மூலமே அதிலிருந்து அவர்கள் விடுபட முடியும். 

2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்தின் அப்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் போர்நிறுத்த இணக்கப்பாடு ஏற்பட்டு 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்போது போர்நிறுத்தத்தையும் போர் நிறுத்த உடன்படிக்கையையும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்துவிட்டு போரைத் தொடங்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தென்னிலங்கையில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்தியது. அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வடக்கு இளைஞர்களுக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றக் காரணமாக இருந்த அனுரகுமார திசாநாயக்கதான் தலைமை தாங்கியிருந்தார் என்பது 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தன்னை இடதுசாரித்துவக் கட்சியாகக் காட்டிக்கொண்ட ஜே.வி.பி 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஆயுதங்களை மறைத்துவைக்கும் இடங்களாக பௌத்த பிக்குகளில் மடாலயங்களைத் தெரிவுசெய்ததோடு பௌத்த தேசியத்தை வளர்ப்பதன் மூலம் பௌத்த பீடங்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முனைந்தது. அத்தோடு சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக இனவாத அரசியலை வளர்த்ததன் மூலம் சிங்கள இனவாத பௌத்த துறவிகளினது ஆதரவினையும் பெறவும் முனைந்தது. 

சர்வதேச நிதி நிறுவனங்களையும், நோர்வேயின் மத்தியஸ்த பாங்கினையும் கடுமையாக விமர்சித்ததோடு சமாதானக் கொள்கைக்கு எதிராக யுத்தத்தினை நடாத்துவதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கியதோடு  2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட தாக்கத்தினை வைத்தது அரசியல இலாபங்களைப் பெறமுனைந்தது. சுனாமி மீள் கட்டமைப்பிற்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து இடைக்காலக் கட்டமைப்பு ஒன்றினை மேற்கொள்ள அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டிய நிலையில் அதனைக் கடுமையாக எதிர்த்து அந்தக் கட்டமைப்பை இல்லாது ஒழித்தது. 

கொழும்பில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக்கலவரத்திற்கு ஜே.வி.பியினரே காரணமெனக் கூறி சிறீலங்கா அரசால் இரண்டாவது தடவையாக ஜே.வி.பி தடைசெய்யப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினுடைய அரசியற் கொள்கை ஏனைய இடதுசாரிக் கட்சிகளின் அரசியற் கொள்கைகளோடு  ஒத்திருக்கவில்லை.  அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏனைய இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்த சமஷ்டிக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஷ்டிக் கொள்கை நாட்டின் பிரிவினைக்கே வழிவகுக்கும் எனக்  குறிப்பிட்டனர்.  தமது கொள்கையான சோசலிச அரசு என்பது நடைமுறைக்கு வரும் போது எல்லா இன மக்களும் சமத்துவமாக மதிக்கப்படுவதால் இனப்பிரச்சினை என்பதே இல்லாமல் போய்விடும் என இவர்கள் குறிப்பிட்டனர். இதன் அடிப்படையில் ஆட்சிக்குவந்த ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளை  அவர்கள் எதிர்த்து வந்தனர். 

இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வைக்கூட ஏற்க மாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைப் பிரச்சினையை தன்னுடைய இனவாத ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில்தான் எல்லாக் கட்சிகளைப் போலவும் ஜே.வி.பி நோக்குகிறது என்பதையும் இன்னும் அந்த
நிலைப்பாட்டில்தான் அக்கட்சி இருக்கிறது என்பதையும் இந்தக் கருத்து
தெளிவுபடுத்துகிறது.

தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரசைகளாக நடாத்தி அவர்களுக்கான சம உரிமையை மறுக்கும் சிறீலங்கா ஆட்சி முறையைப் பாதுகாக்கும் ஜே.வி.பி தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான சிறு முயற்சிகளையையே ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்க முயல்வது புதிய விடயமல்ல.

“13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா கோரி வருவது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டல்ல. இந்தியாவின் பொருளாதார நலன்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கிலாகும் எனக் கூறிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 2006 ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தையும் அதன்பால் இணைக்கப்பட்ட வடகிழக்கையும்
நீதிமன்றத்தை நாடி பிரித்தது.

அண்மைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களின் பிரச்சினை, தீர்வு உள்ளிட்ட விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது அக்கட்சி தமது அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகுகிறது என்பதையும் தொடர்ந்தும் அக்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுகிறது என்பதையும் புலப்படுத்துகிறது. 

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும்  ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே நாங்கள் அச்சப்படத் தேவையில்லை ” என தற்போதைய ஜனாதிபதியான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 24 அக்டோபர் 2015 நாடாளுமன்றில் நடைபெற்ற ஜெனீவா பிரேணை விவாத்தில் கூறினார்.

இவ்வாறான நிலைப்பாடுடைய இனவாதம் கக்கும் ஜே.வி.பியைத்தான் மாற்றத்தின் நாயகர்கள் எனக் கொண்டாட முயல்வதோடு தமிழ்த் தேசிய அரசியலில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு ஜே.வி.பி தான் மாற்றுத் தீர்வு என சிந்திக்க முற்படுவது கோமாளித்தனம் மட்டுமல்ல கோளைத்தனம் என்றும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் தனது வாராந்த அறிகையில் கடுமையாகச் சாடியுள்ளது.

நன்றி - உரிமை மின்னிதழ்

இந்த திரி யுடன் தொடர்புடையது என்பதால் இங்கே பதிகிறேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா?

ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம்.  இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது  கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது.

இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி  கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த  நியாயமில்லை.

அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே!

குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝

ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....?

இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? 
எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும்.

விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.

வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ ப‌திவு தாத்தா

உண்மை தான் எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ஜாதி இருந்த‌தில்லை அதோட த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஜாதி மெது மெதுவாய் ஈழ‌ ம‌ண்ணில் அழிந்து கொண்டு வ‌ந்த‌து 2009க்கு பிற‌க்கு ஜாதி வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது

த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்

சொகுசு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌கின‌வை அவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளின் நிலை தான் ப‌ரிதாவ‌ நிலை.......................

எல்லாம் போலிக‌ள் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் நேர்மையா செய‌ல் ப‌ட்ட‌வை பின்னைய‌ கால‌ங்க‌ளில் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டை ந‌க்கி கொண்டு வேச‌ம் போட்ட‌வை

என‌க்கு தெரிந்து  த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்  எங்க‌ளுக்கு  இதை க‌ட்டி த‌ந்தவ‌ர்க‌ள்  எங்க‌ட‌ வாழ்வாதாரத்துக்கு இதை செய்து த‌ந்த‌வை என்று பொது ம‌க்க‌ள் சொல்லி  நான் கேள்வி ப‌ட‌ வில்லை

ஈழ‌ ம‌ண்ணில் வறுமையின் கீழ் வாழும் மக்களை தூக்கி விட்ட‌தே புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் தான்.................த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் வீடுக‌ள் வாக‌ன‌ங்க‌ள் என்று அவை ந‌ல்ல‌ வ‌ச‌தியாக‌ வாழுகின‌ம்

அனுரா இப்ப‌ தானே ஆட்சிக்கு வ‌ந்து இருக்கிறார் ஊழ‌லை இல்லாம‌ செய்து அவ‌ர் சொன்ன‌ ப‌டியே செய்தால் அவ‌ருக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் ஆத‌ர‌வு கூடும்..................நான் சோச‌ல் மீடியாவை அவ‌தானித்த‌ ம‌ட்டில் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அனுரா பின்னால் போவ‌த‌ பார்க‌ முடியுது........................

த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளையும் ந‌ம்ப‌ முடியாது............ஈழ‌த்து அர‌சிய‌ல் வாதிக‌ளையும் ந‌ம்ம‌ முடியாது.............. எல்லாம் ஒட்டையில் ஊறிய மட்டையல்😁😛..........................கிழ‌டு க‌ட்டைய‌ல‌ வீட்டுக்கு அனுப்பி விட்டு😡 இளைஞ‌ர்க‌ளை ஈழ‌ ம‌ண்ணில் அர‌சிய‌லில் செய்ய‌ விட‌னும் அப்ப‌ தான் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏதேனும் விடிவு கால‌ம் பிற‌க்கும் தாத்தா🙏...............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிங்கள இனவாதிகளுக்கு இனப்பிரச்சினை என்பது பிச்சைக்காரனின் புண் போன்றது, தாம் செல்லும் கருத்துக்களுக்கு ஓசன்னா சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது பாசிசம் ஆகும்.

1989 இல் ரோஹன விஜேவீராவை சுட்டு, குறை உயிராக போறணையில் போட்டு எரித்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய இராணுவ அதிகாரி கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மேடைகளில் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்திருந்தார். கடந்த காலங்களில் வாழ்பவர்களை நிகழ் காலம் நிராகரிக்கும் என்பது வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

இடது சாரி அரசினால் உண்மையாக இலங்கையில் மாற்றம் ஏற்படுத்த முடியும், ஆனால் இந்த அரசிற்குள்ள சவால்கள்
1. அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் சிறுபான்மை இன மக்கள் எதிர் கொண்ட பிரச்சினை சமூக நீதியின்மை, அதனடிப்படையான அடக்குமுறை உதாரணமாக ஒரு இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்டால் அதனை சட்ட ரீதியாகக்கூட எதிர்கொள்ள முடியாது, அதனை உறுதிப்படுத்டுவதற்காகவே சிறுபான்மையினர் அதிகார பரவலாக்கம்  மூலம் அதனை பெற முனைகிறார்கள் (அதாவது  நிலையான உறுதித்தன்மை) ஆனால் இப்போதுள்ள ஜனாதிபதி அதற்கு எதிரானவராக உள்ளார் ஆனால் பேச்சளவில் உறுதி மொழியினை வழங்குகிறார், இதனை ஏற்று சிறுபான்மையினர் தமது ஆகக்குறைந்த உறுதித்தன்மை எதிர்பார்ப்பை கைவிட வேண்டும்.

2.கடந்த கால தவறுகளை களைய நடவடிக்கை.

கடந்த கால தவறுகளை களைய நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்கால தவறுகளை தவிக்க முடியும் எனும் நடைமுறையான அடிப்படையில் ஊழல்களுக்கு எதிராக நடத்தப்படும் விசாரனை போல ஒரு உண்மையான ஜனநாயக நாட்டில் நிகழ்த்தப்பட்ட தவறுகளுக்கு (பல சிங்கள் இளையோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்) விசாரணை செய்ய வேண்டும்

3. அரசியலைமைப்பு சட்டம் சீர்திருத்தப்படுவதன் மூலம் எதிர்கால தவறுகளை களைய நடவடிக்கை எடுத்தல்.

இந்த விடயத்திற்கு அதிகார பரவலாக்கம் இன்றியமையாதது ஆனால் வெறும் பேச்சினால் அனைவரும் சமம் என பேச்சளவில் கூறி மறுபுறம் அதற்கெதிரான நிலைப்பாட்டினை எடுத்தால் மக்கள் நம்பிக்கையின இழப்பார்கள்.

அடிப்படையில் இலங்கை முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டுமாயின் தேர்தல் மேடையில் பேசும் பேச்சினை விட அதன் செயற்படுத்தும் செயற்பாட்டிற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், செய்ல் ரீதியான உறுதிப்பாட்டை வழ்ங்க முடியாது (அதிகார பரவலாக்கம் இல்லை) முடியாது என தெளிவாக கூறியதன் மூலம் மீண்டும் ஒரு தீவிர ஒரு பக்க சார்பான நிலைப்பாட்டை எடுக்கின்ற நிலை காணப்படுகிறது.

இங்கு சிறுபான்மையினர் தமக்கு இன்னொரு ஜூலை கலவரம் போல்வோ அல்லது 2019 நிகழ்வு போலவோ நிகழ கூடாது என்பதற்கான உறுதி மொழியாக அரசியல், சட்ட சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறார்கள், அதனை இனவாதமாக பார்க்கும் மனிதனை என்ன சொல்வது?

என்னை பொறுத்தவரை இலங்கையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.😪

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

அநேகமாக வரும் மாவீரர்கள் நாள் இதற்கான முதல்ப்படியை (நல்லது , கெட்டது) காட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

அநேகமாக வரும் மாவீரர்கள் நாள் இதற்கான முதல்ப்படியை (நல்லது , கெட்டது) காட்டும். 

இது ஒரு ஆபத்தான பேரம் இரு தரப்பில் ஒரு தரப்பு அனைத்தையும் எடுக்க மற்ற தரப்பு அனைத்தையும் இழக்க வேண்டும் என எதிர்பார்ப்பதால் இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசுகள் உண்மையான  சமூக மாறத்தினை ஏற்படுத்த ஏனோ விரும்பாமல் இருக்கின்றன இதனால் மொத்த நாட்டிற்கும் நன்மையான விடயத்தினை ஏன் செய்ய தயங்குகிறார்கள், சிறுபான்மையினர் தமது உயிர், உடமைகளுக்கு உத்தரவாதம் கேட்பதனை இனவாதமாக்க  முற்படுகிறார்கள், அதற்கு காரணியாக இருப்பவர்கள் நான் வாளுடந்தான் நிற்பேன் நீ கேடயத்தினை தூக்க கூடாது என்பதற்கு ஒப்பானது.

சட்ட ரீதியான பாதுகாப்பினை கோருவது எப்படி இனவாதமாகும்? அதனை மறுப்பதனை எந்த வகையில் சேர்க்கலாம்?

இலங்கயிலுள்ள 4 சமுக்கங்களுக்கும் இந்த சட்ட பாதுகாப்பு அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vasee said:

ஆரம்ப காலங்களில் இன முரண்பாடு என்பது ஒரு சந்தேகமாக மட்டுமே இருந்தது. பின்னர் அது ஆழமான வடுக்கள் காயங்கள் நம்பிக்கை துரோகங்கள் ஏமாற்றங்களால் மாற்றுவழி அற்ற நிரந்தரமான பகையாக பல தலைமுறைகளாக தொடரும் ஓர் நாட்டில் ஒரே ஒருவர் ஒருயொரு தேர்தல் வெற்றியை அதுவும் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற ஒருவர் செய்வார் என்று சிந்திப்பதே அதி உயர் சுயநலம். 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் சமாதான முயற்சிகளை தோற்கடிக்க சந்திரிக்காவும், மக்கள் விடுதலை முன்னணியும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக்கும், சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இலங்கையில் சமாதானத்திற்கு பெரும் அச்சுருத்தலாக மாறியிருக்கிறது ‍- விடுதலைப் புலிகள் 

 11, புரட்டாதி 2001

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6311

anton-balasingham-colombo-telegraph.jpg?ssl=1

சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக் கட்சிக்கும், தீவிர இனவாத இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடயே செய்யப்பட்டிருக்கும் நன்னடத்தைக் கால அரசு எனும் ஒப்பந்தம் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு அச்சுருத்தலாக அமைந்திருக்கிறதென்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து தமிழ் கார்டியன் பத்திரிக்கை புலிகளின் அரசியல் ஆலோசகரும், பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானியுமான திரு அன்டன் பாலசிங்கத்திடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது சந்திரிக்காவிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள சரத்துக்கள், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக பரிந்துரைகள் முன்வைக்கப்படுவதை முற்றாகவே தடுக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது என்று கூறினார்.

திரு பாலசிங்கம் அவர்களின் கருத்துக்கள் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து வெளிவரும் நாளேடான தமிழ் கார்டியனின் செவ்வாயன்று வெளிவந்த இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

புலிகளுடனான பேச்சுக்களுக்கு தமது அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியுடன் செய்துகொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்விதத்தில் தடையாக இருக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி சந்திரிக்காவும், வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக் கூறியிருப்பது பற்றி பாலசிங்கத்திடம் தமிழ் கார்டியன் வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

"இது மிகவும் முட்டாள்த்தனமான கருத்தாகும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 20 ஆவது சரத்தில், நன்னடத்தைக் காலமான முதல் 12 மாதங்களுக்குள் தமிழரின் பிரச்சினையினை அரசியல் ரீதியாகத் தீர்ப்பது குறித்த எந்த பேச்சுவார்த்தைகளிலும் அரசாங்கம் ஈடுபடலாகாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நாம் அரசாங்கத்துடன் இதுகுறித்து இணக்கப்பாடு ஒன்றிற்கு வருவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா?" என்று பாலசிங்கம் வினவினார்.

"உண்மையென்னவென்றால், சமாதானப் பேச்சுக்களைச் சாத்தியமற்றதாக்குவதற்காகவே சந்திரிக்காவின் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன. சந்திரிக்காவும், கதிர்காமரும் உளரும் வியாக்கியானங்கள் சர்வதேச அரசாங்கங்களில் இருப்பவர்களுக்காகப் புனையப்பட்டவையே அன்றி வேறில்லை. ஒரு பலவீனமான, ஊழலால் மூழகடிக்கப்பட்டிருக்கின்ற சந்திரிக்காவின் அரசிற்கும், சமாதானத்தையும், சர்வதேச மத்தியஸ்த்தத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் அதிதீவிரவாத மாக்ஸிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் செயற்கைத்தனமான அருவருக்கும் இந்த இணைப்பின் ஊடாக சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று இவர்கள் இருவரும் கூறுவதை கண்களை மூடிக்கொண்டு இந்த சர்வதேச அரசாங்கங்கள் நம்புகின்றன" என்று அவர் மேலும் கூறினார்.

"இந்த நாட்டினை சிதைத்துக்கொண்டிருக்கும் இனவாதப் போரினை நிறுத்தி, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான உண்மையான தீர்வினை வழங்கக் கூடிய ஒத்திசைவான நோக்கு சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக்கோ அல்லது சிங்கள தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணிக்கோ எள்ளவும் கிடையாது. ஒருவருக்கொருவர் நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட இவ்விரு கட்சிகளும் செய்துகொண்டிருக்கும் நன்னடத்தைக்கால அரசாங்கமானது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வெவ்வேறுவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சந்திரிக்காவின் மக்கள் கூட்டணி தமிழருக்கு "மிகவும் பலவீனமான" அதிகாரங்களைப் பகிரலாம் என்று கூறிவரும் அதேவேளை அவரது அரசாங்கத்தின் இன்னொரு பகுதியான மக்கள் விடுதலை முன்னணியோ, "தமிழருக்கென்று தனியாகப் பிரச்சினைகள் இல்லை, எல்லா இன மக்களும் சமம்" என்று கூறி வருகிறது. ஆனால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழர்களால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க இவர்கள் எவருமே தயராக இல்லை" என்று பாலசிங்கம் கூறினார்.

"முடிவில் தமிழ் மக்கள் தமது தலைவிதியையும், அரசியல் தகமையினையும் தாமே முடிவெடுப்பார்களே ஒழிய கொழும்பில் இருந்து ஆட்சி செய்யும் சிங்கள அரசியல் கட்சிகள் அதனை முடிவு செய்ய முடியாது என்பதை நாம் மீண்டும் மீண்டு கூறி வருகிறோம். திம்புப் பேச்சுக்களின் அடிப்படையில் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை சிங்களவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறுமிடத்து, தமிழர்கள் தம்வழியில்ச் சென்று தமக்கான விடுதலையினை அடைவதைத்தவிர வேறு தெரிவுகள் அவர்களுக்கு இருக்கப்போவதில்லை" என்றும் பாலசிங்கம் தெரிவித்தார்.

சமாதானப் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க நோர்வே அழைக்கப்பட்டிருப்பது குறித்து பாலசிங்கத்திடம் தமிழ் கார்டியன் வினவியபோது, "நோர்வே அரசின் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டிருக்கும் சொல்கெயிமின் முயற்சிகளை தொடர்ச்சியாக விமர்சித்துவருவதன் ஊடாக சந்திரிக்காவும், லக்க்ஷ்மன் கதிர்காமரும் பேச்சுக்களைத் தேக்க நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். நோர்வேயின் சமாதானத் தூதுவர் புலிகளுக்குச் சார்பாக இயங்கிவருகிறார் எனும் தீவிர மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சந்திரிக்காவும், கதிர்காமரும் நோர்வேயின் தலைமையில் நடைபெற்றுவந்த முயற்சிகளைக் கொன்று புதைத்துவிட்டார்கள். இது மிகப்பெரிய இராஜதந்திரத் தவறு. மூன்று தரப்புக்கள் கூடி நடத்தும் பேச்சுக்களில் ஒரு தரப்பு தாந்தோன்றித்தனமாக இவ்வகையான குழிபறிக்கும் காரியங்களில் ஈடுபடுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சொல்கெயிமை மீளவும் பிரதான சமாதானத் தூதுவராக பதவியில் அமர்த்துவதன் ஊடாக மாத்திரமே பேச்சுக்களுக்கு நாம் மீளவும் உயிர்கொடுக்க முடியும்" என்று புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான பாலசிங்கம் தெரிவித்தார்.

பாலசிங்கம் மேலும் கூறும்போது "நிலவிவரும் பொருளாதார அரசியல் சீர்கேட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் ஒற்றை நோக்கிலேயே சந்திரிக்கா அரசு பேச்சுக்களில் ஈடுபட விரும்புவதாக காட்டிக்கொள்கிறது. தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு நேர்மையான அரசியல்த் தீர்வைக் காண்பதில் சந்திரிக்காவின் அரசிற்கு உண்மையான அக்கறை எதுவும் கிடையாது. தனது இக்கட்டான நிலையில், வேறு வழியின்றி தன்னிச்சையான யுத்தநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கலாமா என்று அது சிந்தித்து வருகிறது. ஆனால் இந்த சிந்தனைகள் எல்லாம் நன் நம்பிக்கையின் பால் உருவானவை அல்ல‌, மாறாக புலிகளை போரை விரும்பும் அரக்கர்கள் என்றும், சமாதானத்தின் எதிரிகள் என்றும் சர்வதேசத்தில் காண்பிக்க சந்திரிக்கா ‍- மக்கள் விடுதலை முன்னணி அரசால் புனையப்பட்டவை" என்றும் தெரிவித்தார். 

"உண்மையாகவே இந்த அரசு புலிகளுடன் நேர்மையான பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழரின் தேசியப் பிரச்சினையினை தீர்க்க விரும்பினால், முதலாவதாக அது செய்ய வேண்டியது சந்திரிக்கா - ஜே வி பி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் 20 ஆவது சரத்தினை முற்றாக நீக்கி, தமிழர் தாயகத்தின் மீது போடப்பட்டிருக்கும் பொருளதாரத் தடையினை விலக்கி, தமிழர் தாயகத்தில் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு சுமூகமான சூழ்நிலையினைக் கொண்டுவருவதுதான்.  மேலும் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு எம்மீது போடப்பட்டிருக்கும் தடையினை அரசாங்கம் நீக்குவதும் அவசியமாகும்" என்றும் அவர் கூறினார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதைத் தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி சந்திரிக்கா அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது.  17 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட விவாதத்திலிருந்து தமிழ்க் கட்சிகள் வெளிநடப்பு.

திங்கள், 24, புரட்டாதி 2001

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6337

டெலோ மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தபோது கூட்டாக வெளிநடப்புச் செய்தனர். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதைத் தடுக்கும் முகமாக தீவிர இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் கட்டாயத்தால் உருவாக்கப்பட்ட 17 ஆவது அரசியமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

"50 வருடங்களுக்கு மேலாக தமிழர் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான இதயசுத்தியான எந்த முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை. நீங்கள் இப்படியே காலத்தைக் கடத்தி வருவீர்களாக இருந்தால் ஒன்றுபட்ட இலங்கை எனும் கூப்பாடு இறந்தகாலத்திற்குள் சென்றுவிடும்" என்று டெலோ அமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தைவிட்டு ஏனைய தமிழ் உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளியேறும்போது கூறினார்.

"இந்த நாட்டில் இருக்கும் அதி முக்கிய பிரச்சினை தமிழர்களின் தேசியப் பிரச்சினையாகும். அதனை நீங்கள் முதலில் தீர்க்கவேண்டும். ஆனால் உங்களை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் தாளத்திற்கு நீங்கள் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்" என்றும் அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் கண்டனம் செய்யும் விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உறுப்பினர்களை பிரதமர் அழைத்தபோது, "அமெரிக்கா மீது நடத்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதல்தான். அதனை நாங்களும் கண்டிக்கிறோம். ஆனால் இதனைச் சாட்டாகப் பயன்படுத்தி எமது போராட்டத்தையும் நீங்கள் பயங்கரவாதம் என்று சித்திரிக்க முயல்வதை நாம் மறுக்கிறோம். இந்த நாட்டில் தம்மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச அடக்குமுறைக்கும், தம்மீதான இனப்பாகுபாட்டிற்கும் எதிரான தமிழ் மக்களின் போராட்டமே இங்கு நடந்து வருவது. அரச பயங்கரவாதத்திற்கெதிராகவே எமது மக்கள் போராடி வருகிறார்கள். யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்து, தமிழர் தாயகம் மீதான பொருளாதாரத் தடையினை நீக்கி புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டால் ஒழியஉங்களின் 17 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு எமது ஆதரவு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை" என்றும் செல்வம் கூறினார்.

 "அரசியலமைப்புச் சபையினை உருவாக்குவதற்கு நாம் எதிர்ப்புக் காட்டப்போவதில்லை. ஆனால், நாட்டின் முக்கியமான இனப்பிரச்சினைக்கு தீர்வெதையும் காணாது அரசியலமைப்பு விடயத்தில் மாற்றங்களை செய்ய எத்தனிப்பதையே நாம் எதிர்க்கிறோம்.   அதனாலேயே பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தோம்" என்று தமிழ் உறுப்பினர்கள் பின்னர் தெரிவித்தனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.