Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

ஆரம்ப காலங்களில் இன முரண்பாடு என்பது ஒரு சந்தேகமாக மட்டுமே இருந்தது. பின்னர் அது ஆழமான வடுக்கள் காயங்கள் நம்பிக்கை துரோகங்கள் ஏமாற்றங்களால் மாற்றுவழி அற்ற நிரந்தரமான பகையாக பல தலைமுறைகளாக தொடரும் ஓர் நாட்டில் ஒரே ஒருவர் ஒருயொரு தேர்தல் வெற்றியை அதுவும் ம். சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற ஒருவர் செய்வார் என்று சிந்திப்பதே அதி உயர் சுயநல

இது சுய நலம் என்றால் பரவாயில்லை, புரியாமை என  எடுத்துக்கொள்ளலாம், தமிழருக்கென பிரச்சினை இல்லை என கூறுபவர்கள்தான் தமிழர்களுக்கான பிரச்சினைகளை உருவாக்கினர், இவர்கள் தொடர்ந்தும் அதே பாதையிலேயே பயணிக்க போகிறார்கள்! அன்றும் இன்றும் கூறிவருவதே தமிழருக்கென பிரச்சினை தனியாக இல்லைஅனைவரும் சமம் என கூறுபவர்கள் அதற்கான சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுப்போம் என இன்று வரை கூறவில்லை.

கட்சிகளையோ, அல்லது மத பீடங்களையோ குறை கூறி உண்மையான பிரசினையினை மடை திருப்புவதால், இதே பிரச்சினை மீண்டும் மீண்டும் நிகழுவதை தவிர்க்க முடியாது.

ஆனால் இந்த உறுதித்தன்மையற்ற சூழ் நிலையில், இலங்கை சிறுபான்மை மக்கள் வெற்று வாக்குறுதியினை நம்ப வேண்டிய பரிதாபகரமான புரிந்துணர்வற்ற நிலைக்கு எதனால் மக்கள் தள்ளப்படுகிறார்கள்?

இந்த புதிய ஜனாதிபதி பிரச்சார மேடையில் இனவாதம் பேசவில்லை என கூறுவதாலா? ஆனால் மறைமுகமாக தனது நிலைப்பாட்டினை இந்த கட்சி தொடருகிறது, இதனை புரிந்து கொள்ள முடியாதளவிற்கு மக்கள் உள்ளார்களா?

சிறுபானமை மக்கள் மீண்டும் மீண்டும் ஆரபத்திலேயிருந்து ஒவ்வொரு தடவையும் தொடங்கும் நிலையிலேயே உள்ளார்கள், இந்த முறை மக்கள் மற்ற கட்சிகளை விட வித்தியாசமான கட்சியாக இந்த கட்சியினை பார்க்கிறார்கள் ஆனால் இவர்களிம் அதே பழைய பாதையிலேயே பயணிக்க கூடாது என்பதே அனைவரது விருப்பம்.

  • Replies 237
  • Views 13.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

சிறுபானமை மக்கள் மீண்டும் மீண்டும் ஆரபத்திலேயிருந்து ஒவ்வொரு தடவையும் தொடங்கும் நிலையிலேயே உள்ளார்கள், 

காரணம் இயலாமை 

ஒரு சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த அளவுக்கும் மேலாக அனைத்து வழிகளிலும் முயன்றும் தோல்வி அடைந்த நிலையில் வேறு வழியின்றி.....???

எவனையாவது கடவுள் அனுப்ப மாட்டாரா என்பது போன்ற நிலையில்????

இந்த நிலையில் தான் தவறானவர்களை எம்மவர் பின் தொடர்ந்து விடக்கூடாது என்று இவ்வளவும் எழுதுகிறோம்

1 hour ago, ரஞ்சித் said:

நோர்வேயின் சமாதான முயற்சிகளை தோற்கடிக்க சந்திரிக்காவும், மக்கள் விடுதலை முன்னணியும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக்கும், சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இலங்கையில் சமாதானத்திற்கு பெரும் அச்சுருத்தலாக மாறியிருக்கிறது ‍- விடுதலைப் புலிகள் 

 11, புரட்டாதி 2001

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6311

ஒரு மூலையில் நின்று கொண்டு தனக்கான நேரம் வருமா எனக் காத்திருந்த மகிந்தவை இந்த உடன்படிக்கையின் பின் தான் முன் வரிசைக்கு கொண்டு வந்திருந்தனர். புலிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு கொண்டு இருந்த ரணில் அரசை பதவி நீக்கம் செய்து, மகிந்தவை சந்திரிக்கா கொண்டு வந்தார்.

சில காலங்கள் செல்ல, தன் அரசியல் வாழ்வில் தான் செய்த மிகப் பெரிய பிழை, தன் கணவரைக் கொன்ற ஜேவியின் சொல்லைக் கேட்டு மகிந்தவை பிரதமராக்கியது என்று சந்திரிக்கா சொல்லி இருந்தார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், எந்த ரணில் பிரதமராக தொடரக் கூடாது என்று ஜேவிபி காரியமாற்றியதோ, அதே ரணிலை தோற்கடிப்பதற்காக புலிகளும் தேர்தலை புறக்கணிக்க சொல்லியது தான்.

புலிகளும் ஜேவிபியும் வெவ்வேறு நோக்கங்களுக்காக ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்ட விடயம் இது.

மிச்சம் நடந்ததும் வரலாறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:
1 hour ago, vasee said:

சிறுபானமை மக்கள் மீண்டும் மீண்டும் ஆரபத்திலேயிருந்து ஒவ்வொரு தடவையும் தொடங்கும் நிலையிலேயே உள்ளார்கள், 

காரணம் இயலாமை 

ஒரு சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த அளவுக்கும் மேலாக அனைத்து வழிகளிலும் முயன்றும் தோல்வி அடைந்த நிலையில் வேறு வழியின்றி.....???

எவனையாவது கடவுள் அனுப்ப மாட்டாரா என்பது போன்ற நிலையில்????

இந்த நிலையில் தான் தவறானவர்களை எம்மவர் பின் தொடர்ந்து விடக்கூடாது என்று இவ்வளவும் எழுதுகிறோம்

அண்மையில் டாக்ரர் அர்ச்சுனா ராமநாதனையே ஒரு மீட்டபராக பார்த்தோம்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்மவர்கள் சிறிய தடி தென்பட்டாலும் பற்றிப் பிடிக்கவே செய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள்

ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண மனித இயல்புதான்.

யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன் என்கிறீர்கள். உங்கள் கருத்திலும், அவை சொல்லப்படும் தன்மையிலும், கண்ணியம் காப்பதிலும் நீங்கள் கவனம் வைத்தால்,அவர்கள் ஏன் உங்களைத் தடை செய்யப் போகிறார்கள்? நீங்கள் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று புரியவில்லை.

இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள் என்கிறீர்கள்.

இனவாதியை இனவாதி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களுக்கு அது தெரியாததால்  சொல்லியிருக்கிறோம். தமிழில் சொல்வார்களே,‘அவனவன் வியர்வை நாற்றம் அவனவனுக்குத் தெரியாதுஎன்று. அதே நிலைதான் இங்கும்.

சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம்

சரித்திரத்தில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட அந்தப் புரிதலில்தான் நாங்கள் வித்தியாசப் படுகின்றோம்.

சுதந்திரம் பெற்றதன் பின்னர் எல்லாத்துறையிலும் நாங்கள்தான் கோலோச்சிக் கொண்டு இருந்தோம். ‘மாத்தையாஎன்ற தகுதியோடு வாழ்ந்தோம். பண்டா, சில்வாக்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டோம். ஒரு கட்டத்தில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்களது அந்தச் சிந்தனை, எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. அப்பொழுதுதான் நாங்கள் சிறுபான்மையினர் என்பது எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது.

பிறகு சுதாகரித்துக் கொண்டு, சகோதரர்களாக இருப்போம் என்று முயற்சி செய்தோம். அவர்கள் நம்பத் தயாரக இல்லை. பேசிப் பார்த்தோம் எதுவுமே நடக்கவில்லை. சாத்வீகத்தில் நின்றோம், ஆயுதங்களைக் கையில் எடுத்தோம். எல்லாவற்றிலும் எங்களால் அவர்களை வெல்ல முடியவில்லை.

எங்களின் போராட்டம் 75 வருடங்களாகத் தொடர்கிறது என்று சொல்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் வடிவங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. அத்தனை வடிவங்களையும் உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள்தான். மக்கள் அல்ல. அந்த அரசியல்வாதிகள் சொல்வதை ஏற்று மக்களும் அந்த வழியில் நின்றார்கள். ஆங்காங்கே சில அரசியல்வாதிகள் கொல்லப்பட்டாலும், மக்கள்தான் பெரும் இழப்புகளுக்கு எப்பொழுதும் ஆளானார்கள். இறுதியான போராட்ட வடிவத்தில் பலர் நாட்டை விட்டே ஓடி விட்டார்கள். பாதி இளைஞர்கள் போரில் இறந்து விட்டார்கள். பலர் ஊனமாகிப் போனார்கள். இன்னும் சிலர் காணாமல் போய்விட்டார்கள். இன்றும் தாய்மார்கள் அவர்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக கடந்த 75 வருடங்களாக பல இழப்புகளைக் கண்ட மக்களுக்கு ஆசுவாசமாக மூச்சை விடுவதற்கு இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை விடுத்து அவர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது சிறிது மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும். அதற்கான வழி வகைகள் என்ன என்பதுதான் இன்றைய கேள்வி.

நாங்கள் மீண்டும் ஏமாறப் போகிறோம். அவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், நாங்கள் யாரிடம் இருந்து எங்களுக்கான தீர்வைப் பெறப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது. சர்வதேசம் தீர்க்கப் போகிறதா? இல்லை இந்தியாதான் உதவுமா? ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தில் ஒரு ஆளுனர்தான் இருக்கிறார். எங்களுக்கு மாகாணத்துக்கான அதிகாரம் வந்தாலும் கூட அப்பொழுது ஒரு ஆளுனர் மட்டுமல்ல ஏற்கனவே வந்து பாய் போட்டு படுத்திருக்கும்  இந்தியத் துணைத் தூதுவரும் ஆளுனர் போலவே நடந்துகொள்வார்.

ஜேவிபியின் போராட்டத்திலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்தால் மகிழ்ச்சி.

பொருளாதாரப் பிரச்சினையில் இலங்கை அமிழ்ந்து போய் இருக்கிறது. பாதிக்கப் படுவது ஓட்டு மொத்தமான மக்களும்தான். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன் படுத்துவதும் சாதுரியமாகச் செயல்படுவதும்தான் சிறப்பு. பதறிய காரியங்கள் எல்லாம் சிதறிப் போகும். பிரபாகரன் கூடச் சொன்னார்போராடுவதற்கு முதலில் ஒரு தளம் இருக்க வேண்டும்என்று பேசுவதற்கும் அது பொருந்தும். இப்பொழுது அது கிடைத்திருக்கிறது. அதைக் குழப்பாமல் பயன்படுத்துவோம்.

மேற்கு நாடுகள் கூட, ‘இலங்கையில் முதன் முதலாக இடதுசாரி ஆட்சிஎன்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது, ஆட்சியின் அணுகுமுறை எப்படி இருக்கப் போகிறது என்று அமைதியாக இருந்து அவதானிக்கிறார்கள். ‘ஒருநாளிலேயே மாற்றம் கொண்டுவர நானொன்றும் மந்திரவாதி இல்லைஎன்று அனுராவே சொல்லியும் இருக்கிறார். நாங்களும் அமைதி காப்போம்.

எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. என்று எழுதியிருந்தீர்கள்

கோயிலில் பக்தர்கள் பக்தியில் மூழ்கி இருக்கிறார்கள். அந்த இடத்தில் போய் நின்று கொண்டு, “கோயில் பிழை. கடவுள் இல்லை. கோயிலை இடிஎன்று நான் கத்தினால், இடி கோயிலுக்கு விழாது. எனக்குத்தான் விழும். அதுதானே உண்மை.

இறுதியாக, புதிய ஜனாதிபதிக்கு மேல்இனவாதிஎன்று  உமிழ்ந்து விடாமல் அவருக்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாம். எதற்குமே சந்தர்ப்பம் கொடுக்காமல் பழசையே கிண்டிக் கொண்டிருப்பதால் எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை.

நீங்கள் இப்பொழுது அவசரமாக ஓடிவந்து, அனுராவை கரித்துக் கொட்டுவதெல்லாம் பலரது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகத்தானோ என்ற எண்ணம் கூட எனக்கு வருகிறது.

கஜினி பலமுறை (17) தோற்றும்  இறுதியில் வென்றான் என்பதும் சரித்திரத்தில் இருந்து கற்றதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

புலிகளின் நடவடிக்கைகளை  விமர்சனத்துக்கு உட்படுத்த வேணும் என்று சொல்லி புலிகளை வசைபாடுவது உங்க ஸ்டைல்

விமர்சனம், வசைபாடல் இரண்டுக்கும் நிறைந வேறுபாடுகள் உள்ளன.   ஒரு இனத்தின் அல்லது நாட்டின் அரசியலில் பாரிய தாக்கத்ககதை ஏற்படுத்தும் எந்த அரசியல் செயற்பாடுகளையும் விமர்சிக்கும் உரிமை  மக்களுக்கு உண்டு. எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.  அரசியல் செயற்பாடுகளின் மீது விமர்சனம் வைத்ததை தவிர  

நான் புலிகளை தனிப்பட்ட ரீதியில்  வசைபாடிய ஒரு இடத்தையேனும் இங்கு காட்ட முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

சரித்திரத்தில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட அந்தப் புரிதலில்தான் நாங்கள் வித்தியாசப் படுகின்றோம்.

சுதந்திரம் பெற்றதன் பின்னர் எல்லாத்துறையிலும் நாங்கள்தான் கோலோச்சிக் கொண்டு இருந்தோம். ‘மாத்தையாஎன்ற தகுதியோடு வாழ்ந்தோம். பண்டா, சில்வாக்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டோம். ஒரு கட்டத்தில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்களது அந்தச் சிந்தனை, எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. அப்பொழுதுதான் நாங்கள் சிறுபான்மையினர் என்பது எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது.

பிறகு சுதாகரித்துக் கொண்டு, சகோதரர்களாக இருப்போம் என்று முயற்சி செய்தோம். அவர்கள் நம்பத் தயாரக இல்லை. 

இது தான் வரலாற்று திணிப்பு. திரிப்பு. அடிமையாக வாழ முடிவெடுத்து விட்டால் இப்படித் தான் முடிக்கணும். 1958, 1977, 1983 என்று அனைத்து சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அராஜகங்களுக்கும் தமிழரே காரணம். முற்றும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

காரணம் இயலாமை 

ஒரு சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த அளவுக்கும் மேலாக அனைத்து வழிகளிலும் முயன்றும் தோல்வி அடைந்த நிலையில் வேறு வழியின்றி.....???

எவனையாவது கடவுள் அனுப்ப மாட்டாரா என்பது போன்ற நிலையில்????

இந்த நிலையில் தான் தவறானவர்களை எம்மவர் பின் தொடர்ந்து விடக்கூடாது என்று இவ்வளவும் எழுதுகிறோம்

உங்களிடம் ஒரு கேள்வி, இப்போதிருக்கும் நிலையில், அங்கிருப்பவர்கள் என்ன செய்யலாம், அல்லது என்ன செய்ய வேண்டும் என  நினைக்கிறீர்கள்?  கொஞ்ச நாட்களுக்கு முன்பும் அங்கு போயிருந்தேன், மக்களின் சிந்தனைகள், தேவைகள் மாறிக்கொண்டு இருக்கின்றது. காலம் அதுபாட்டுக்கு மாற்றங்களுடன் போய்க்கொண்டிடுகிறது நாங்கள் சிலர் இங்கே கடந்த காலத்தில் தங்கிவிடுகிறோம், 
இவர்கள் இனப்பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் கப்பம், ரவுடித்தனம், அரசியல் தலையீடுகள், இராணுவத்தலையீடுகள்,மதத்தலையீடுகள், குடியேற்றங்கள் கொஞ்சம் குறையலாம், மக்கள் மூச்சுவிடுவதுக்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். கொஞ்ச நாளில் இவர்கள் எப்பிடி என்று எல்லாம் தெரிந்துவிடப்போகிறது. தமிழர் தரப்பில் இருந்து வீசும் ஆதரவுஅலை, இதுவரை இருந்த சிங்கள தேசியக்கட்சிகள், தமிழ் கட்சிகளிலும் பார்க்க இவர்கள் பரவாயில்லை என்று தற்போது நினைப்பதால் வந்தது. பழைய முறையிலேயே எல்லாம் நடந்தால், இந்த அலையில் தற்போது உள்வாங்கப்படுபவர்கள் வெளியே வந்துவிடப்போகிறார்கள், எதுவுமே நிரந்தரமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நீர்வேலியான் said:

எத்த‌னையோ சிறு பிள்ளைக‌ள் ப‌டிச்சு வாழ்க்கையில் முன்னுக்கு வ‌ர‌ விரும்புகின‌ம் அவையிட‌ம் போதிய‌ ப‌ண‌ம் இல்லை

இப்போது எம் ம‌க்க‌ளுக்கு தேவை மூன்று நேர‌ உண‌வு நின்ம‌தியான‌ வாழ்க்கை . பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம்

எம்ம‌வ‌ர்க‌ளே க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் போதைய‌ இள‌ம் பெடிய‌ங்க‌ளுக்கு ஊத்தி கொடுத்து அதுக‌ளின் எதிர் கால‌த்தை சீர் அழித்த‌வை................அப்ப‌டியான‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை எம் ம‌க்க‌ள் புர‌க்க‌னிக்க‌னும்...................அனுரா ஊழ‌லை இல்லாம‌ செய்வேன் என்று சொல்லி இருக்கிறார் 

ப‌ல‌ ந‌ல்ல‌ திட்ட‌ங்க‌ளை வ‌குத்து இருக்கிறார் 

சிறு கால‌ம் அனுரா என்ன‌ செய்கிறார் என்ப‌தை பொறுத்து இருந்து பாப்போம் அண்ணா................ர‌னில‌ போல‌ குள்ள‌ ந‌ரி செய‌லில் அனுரா இற‌ங்க‌ மாட்டார் என்று நான் ந‌ம்புகிறேன்...........................

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா என்றவுடன் மட்டும் அவர் கட்சியின் பழய செயல்களை  உண்மைகளை எல்லாம் கிளறி கொண்டிருக்க கூடாது 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

இறுதியாக, புதிய ஜனாதிபதிக்கு மேல்இனவாதிஎன்று  உமிழ்ந்து விடாமல் அவருக்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாம். எதற்குமே சந்தர்ப்பம் கொடுக்காமல் பழசையே கிண்டிக் கொண்டிருப்பதால் எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை.

உண்மை தான்    தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை   இந்த வாக்கு போடுவது தான்   கடந்த 75 ஆண்டுகளாக   தமிழ் தலைவர்களுக்கு போட்டோம்  ...அவர்களால் தீர்வு தர முடியாது,..சிங்களத்தலைவர்களிடம். தான் கேட்ப்பார்கள்.  

எந்தவொரு பலனும்  தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை ஏமாற்றம் தான் மிச்சம்  இன்றும் தமிழ் தலைவர்களுக்கு வாக்கு போட்டால் ஏமாற்றம். தான் கிடைக்கும்    இந்த முறை நேரடியாக அனுரக்கு போடுவோம்.   சிலசமயம்.   வெற்றி அடைவோம்    🙏👍

புலிகளின்.  போராட்டம் தான் அனுரவை வெற்றி பெறச் செய்துள்ளது எப்படியெனில். ....

போராட்டம் செய்ய இலங்கை கடனை பெற்றது   அதனால் தான்  பொருளாதார பிச்சனை.  எற்பட்டு   போராட்ட நாயகன் கோத்தாவை   அடித்து தூரரத்தினார்கள்.   

ரணில் ஐனதிபதி. ஆனார்    இன்று அனுரவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது   கடன் இல்லையென்றால் பொருளாதாரப் பிரச்சனை இல்லையென்றால்   அனுர ஐனதிபதி ஆகி இருக்க  முடியாது   

புலிகள் போராட்டத்தால் தமிழ் ஈழம் கிடையாது விட்டாலும்  இலங்கையை  மிகவும் பிச்சைகார நாடு ஆக மாற்றி விட்டது    எனவே… போராட்டம் தோற்க்கவில்லை   😂🤣

  அனுரவை ஆதரிப்போம். தமிழ் மக்களின் வாக்கு பெறுமதியை பெறக்கூடிய  ஒரே வழி   அனுரக்கு வாக்களிப்பது மட்டுமே   இதன் மூலம். அவரை  மாற்ற முடியும்   தமிழ் தலைவர்களுக்கு வாக்களித்து   ஏதாவது பிரயோஜனம் உண்டா??? 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

தோற்க்கவில்லை  

  அனுரவை ஆதரிப்போம். தமிழ் மக்களின் வாக்கு பெறுமதியை பெறக்கூடிய  ஒரே வழி   அனுரக்கு வாக்களிப்பது மட்டுமே   இதன் மூலம். அவரை  மாற்ற முடியும்   தமிழ் தலைவர்களுக்கு வாக்களித்து   ஏதாவது பிரயோஜனம் உண்டா??? 

த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு எம் ம‌க்க‌ள் ஓட்டு போட‌ அவ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளின் குடும்ப‌ங்க‌ளும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்க‌ள்

ம‌ற்ற‌ம் ப‌டி த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ன்மை எதுவும் இல்லை

நான் அறிந்த‌ வ‌ரை....................இவ‌ர்க‌ளை த‌மிழ் ம‌க்க‌ள் கூப்பில் உக்கார‌ வைக்கும் கால‌ம் வ‌ரும்

ஒரு கால‌த்தில் சிறித‌ர‌ன் எம்பிய‌ ந‌ம்பினேன் அவ‌ர் க‌ருணாநிதி போல் சொத்து சேர்ப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர் என்று பின்னைய‌ கால‌ங்க‌ளில் தான் தெரிந்து கொண்டேன்.......................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண மனித இயல்புதான்.

யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன் என்கிறீர்கள். உங்கள் கருத்திலும், அவை சொல்லப்படும் தன்மையிலும், கண்ணியம் காப்பதிலும் நீங்கள் கவனம் வைத்தால்,அவர்கள் ஏன் உங்களைத் தடை செய்யப் போகிறார்கள்? நீங்கள் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று புரியவில்லை.

இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள் என்கிறீர்கள்.

இனவாதியை இனவாதி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களுக்கு அது தெரியாததால்  சொல்லியிருக்கிறோம். தமிழில் சொல்வார்களே,‘அவனவன் வியர்வை நாற்றம் அவனவனுக்குத் தெரியாதுஎன்று. அதே நிலைதான் இங்கும்.

சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம்

சரித்திரத்தில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட அந்தப் புரிதலில்தான் நாங்கள் வித்தியாசப் படுகின்றோம்.

சுதந்திரம் பெற்றதன் பின்னர் எல்லாத்துறையிலும் நாங்கள்தான் கோலோச்சிக் கொண்டு இருந்தோம். ‘மாத்தையாஎன்ற தகுதியோடு வாழ்ந்தோம். பண்டா, சில்வாக்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டோம். ஒரு கட்டத்தில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்களது அந்தச் சிந்தனை, எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. அப்பொழுதுதான் நாங்கள் சிறுபான்மையினர் என்பது எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது.

பிறகு சுதாகரித்துக் கொண்டு, சகோதரர்களாக இருப்போம் என்று முயற்சி செய்தோம். அவர்கள் நம்பத் தயாரக இல்லை. பேசிப் பார்த்தோம் எதுவுமே நடக்கவில்லை. சாத்வீகத்தில் நின்றோம், ஆயுதங்களைக் கையில் எடுத்தோம். எல்லாவற்றிலும் எங்களால் அவர்களை வெல்ல முடியவில்லை.

எங்களின் போராட்டம் 75 வருடங்களாகத் தொடர்கிறது என்று சொல்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் வடிவங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. அத்தனை வடிவங்களையும் உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள்தான். மக்கள் அல்ல. அந்த அரசியல்வாதிகள் சொல்வதை ஏற்று மக்களும் அந்த வழியில் நின்றார்கள். ஆங்காங்கே சில அரசியல்வாதிகள் கொல்லப்பட்டாலும், மக்கள்தான் பெரும் இழப்புகளுக்கு எப்பொழுதும் ஆளானார்கள். இறுதியான போராட்ட வடிவத்தில் பலர் நாட்டை விட்டே ஓடி விட்டார்கள். பாதி இளைஞர்கள் போரில் இறந்து விட்டார்கள். பலர் ஊனமாகிப் போனார்கள். இன்னும் சிலர் காணாமல் போய்விட்டார்கள். இன்றும் தாய்மார்கள் அவர்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக கடந்த 75 வருடங்களாக பல இழப்புகளைக் கண்ட மக்களுக்கு ஆசுவாசமாக மூச்சை விடுவதற்கு இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை விடுத்து அவர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது சிறிது மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும். அதற்கான வழி வகைகள் என்ன என்பதுதான் இன்றைய கேள்வி.

நாங்கள் மீண்டும் ஏமாறப் போகிறோம். அவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், நாங்கள் யாரிடம் இருந்து எங்களுக்கான தீர்வைப் பெறப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது. சர்வதேசம் தீர்க்கப் போகிறதா? இல்லை இந்தியாதான் உதவுமா? ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தில் ஒரு ஆளுனர்தான் இருக்கிறார். எங்களுக்கு மாகாணத்துக்கான அதிகாரம் வந்தாலும் கூட அப்பொழுது ஒரு ஆளுனர் மட்டுமல்ல ஏற்கனவே வந்து பாய் போட்டு படுத்திருக்கும்  இந்தியத் துணைத் தூதுவரும் ஆளுனர் போலவே நடந்துகொள்வார்.

ஜேவிபியின் போராட்டத்திலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்தால் மகிழ்ச்சி.

பொருளாதாரப் பிரச்சினையில் இலங்கை அமிழ்ந்து போய் இருக்கிறது. பாதிக்கப் படுவது ஓட்டு மொத்தமான மக்களும்தான். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன் படுத்துவதும் சாதுரியமாகச் செயல்படுவதும்தான் சிறப்பு. பதறிய காரியங்கள் எல்லாம் சிதறிப் போகும். பிரபாகரன் கூடச் சொன்னார்போராடுவதற்கு முதலில் ஒரு தளம் இருக்க வேண்டும்என்று பேசுவதற்கும் அது பொருந்தும். இப்பொழுது அது கிடைத்திருக்கிறது. அதைக் குழப்பாமல் பயன்படுத்துவோம்.

மேற்கு நாடுகள் கூட, ‘இலங்கையில் முதன் முதலாக இடதுசாரி ஆட்சிஎன்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது, ஆட்சியின் அணுகுமுறை எப்படி இருக்கப் போகிறது என்று அமைதியாக இருந்து அவதானிக்கிறார்கள். ‘ஒருநாளிலேயே மாற்றம் கொண்டுவர நானொன்றும் மந்திரவாதி இல்லைஎன்று அனுராவே சொல்லியும் இருக்கிறார். நாங்களும் அமைதி காப்போம்.

எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. என்று எழுதியிருந்தீர்கள்

கோயிலில் பக்தர்கள் பக்தியில் மூழ்கி இருக்கிறார்கள். அந்த இடத்தில் போய் நின்று கொண்டு, “கோயில் பிழை. கடவுள் இல்லை. கோயிலை இடிஎன்று நான் கத்தினால், இடி கோயிலுக்கு விழாது. எனக்குத்தான் விழும். அதுதானே உண்மை.

இறுதியாக, புதிய ஜனாதிபதிக்கு மேல்இனவாதிஎன்று  உமிழ்ந்து விடாமல் அவருக்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாம். எதற்குமே சந்தர்ப்பம் கொடுக்காமல் பழசையே கிண்டிக் கொண்டிருப்பதால் எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை.

நீங்கள் இப்பொழுது அவசரமாக ஓடிவந்து, அனுராவை கரித்துக் கொட்டுவதெல்லாம் பலரது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகத்தானோ என்ற எண்ணம் கூட எனக்கு வருகிறது.

கஜினி பலமுறை (17) தோற்றும்  இறுதியில் வென்றான் என்பதும் சரித்திரத்தில் இருந்து கற்றதுதான்.

கவி அருணாசலம் அவர்களின் எழுத்தின் ஓட்டத்தை மெச்சுகிறேன். தாங்கள் சொல்ல விரும்பிய விடயத்தை மிகத்  தெளிவாக ஒரு தெளிந்த  நீரோட்டம் போலக் கூறியிருக்கிறீர்கள். 

வாழ்த்துக்கள்  👍

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

நான் புலிகளை தனிப்பட்ட ரீதியில்  வசைபாடிய ஒரு இடத்தையேனும் இங்கு காட்ட முடியுமா? 

ஏற்கனவே நிறைய இருக்கு அதற்காக என் நேரம் வீணாக தேடி போடும் அளவுக்கு நீங்க பெரிய ஆள் கிடையாது முகமூடிக்குள் இருந்து காரி துப்பும் ஒருத்தர் இனியும் யாழில் புலிகளை வசை பாடுங்க அப்ப தெரியும் நா.... என்று .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2024 at 13:12, ரஞ்சித் said:

அநுரவின் இனவன்மம் தொடரும்.....

ரஞ்சித் அவர்களே நன்றி,  வேலை-உணவு- செமிபாட்டு நடை என்று புலத்திலே நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டு தட்டிக்கொண்டிருக்க, பொருத்தமான காலத்தில்  நீங்கள் யே.வி.பியினதும், அதன் கூட்டுகளதும் இனவாத முகத்தை நினைவூட்டுகிறீர்கள். சிறிலங்காத் தேசியர்களுக்கு உவப்பாக இராதபோதும், தமிழருக்கு இருக்கும் மறதிக்குணத்தில், போன கிழமை ரணிலோடை சும் நிண்டதே மறந்துபோச்சு, அவற்றை ஒத்துமை அறிக்கையோடை.... அப்ப 20 ஆண்டகளுக்கு முற்பட்டது நினைவிருக்குமோ. யே.ஆரால் வளர்கபபட்ட ரணிலும், றோகனவின் பாசறையில் வளர்ந்த அனுரவும் வேறுபட்ட நிறங்களைக் காட்டினாலும் முகங்களின் வார்த்தை ஒன்றேதான். அவை சிங்கள பௌத்த தேசியவாத முகங்கள். 
நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, விசுகு said:

இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான். 

நீங்கள் சொல்லும் அந்த கருத்தை சர்வதேசம் இனிவரும் காலங்களில் ஈழத்தமிழரை நோக்கி சொல்லாது என்பதற்கு உங்களிடம் உத்தரவாதம் உள்ளதா விசுகர்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் அந்த கருத்தை சர்வதேசம் இனிவரும் காலங்களில் ஈழத்தமிழரை நோக்கி சொல்லாது என்பதற்கு உங்களிடம் உத்தரவாதம் உள்ளதா விசுகர்?

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையருடனான உரையாடலெனும் கோதாவில், தெற்கு யேர்மனியில் முன்னாள் சமாதானத் தூதுவரான எ.சொல்கைம் ஏற்பாடு செய்த நிகழ்வின் இலங்கையராக வாழ்வதே சிறப்பென்று போதித்தாராம். அவர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.  
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளியில் இனப்பிரச்சினைக்குத்தீர்வாக புதிய பிரதமரினால் வெளியிடப்பட்ட அறிக்கை என காணொளியில் கூறப்பட்டுள்ளது, பிரதமரின் அறிக்கையினை பார்க்கவில்லை.

காணொளியில் கூறப்பட்ட விடயத்தினடிப்படையில்.

இனப்பிரச்சினைக்கு அரசியலைமைப்பு, சட்ட சீர்திருத்தம் தீர்வல்ல என ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது ஆனால் மாற்று வழி மூலமான தீர்வாக அரசநிர்வாக  ரீதியான தீர்வாக மொழி உரிமை, அரச கரும மொழியாக ஏற்றல் (இவை ஏற்கனவே உள்ள  ஆனால் நடைமுறைப்படுத்தப்படாத), மற்றாது சமூக பிரச்சினையாக மருத்துவம், கல்வி, அரசியல், சமூக பிரச்சினை (சமூக பிரச்சினை என கூறப்படுகின்ற விடயம் வறுமை சம்பந்தமானதாக இருக்க வேண்டும் என கருதுகிறேன்)

ஆனால் ஆரம்பத்தில் அரசியலைமப்பு மாற்றம் இல்லை என கூறினாலும் பின்னர் அரசியலைமைப்பு மாற்றம் என கூறப்பட்டுள்ளது அது எவ்வாறான மாறம் என தெரியவில்லை.

இனப்பிரச்சினை தீர்வாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது .

பிரமரது அறிக்கையின் மூலம் ( காணொளியில் கூறப்பட்டதனடிப்படையில்) இனப்பிரச்சினைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட தரப்புகளினூடனான பேச்சு எனும் நிலைப்பாடு இந்த அரசிடம் துளியும் இல்லை, ஆனால் ஒரு பொதுவான நிர்வாக முறைமையினை வழங்குதல் எனும் உறுதிப்பாடு தொணிக்கிறது.

ஆனால் சிறுபான்மையினர் எதிர்பார்க்கும் பாதுகாப்பிற்கான எந்த ஒரு விடயமும் கருத்தில் எடுக்கப்படவில்லை என்பதுடன், அதனை எட்டுவதற்கு நடைமுறையான பேச்சுக்கள் என்பதற்கு இங்க் இடமில்லை என்பதனை ஆரம்பத்திலேயே தெளிவாக கூறியுள்ளார் போலுள்ளது.

இந்த கட்சி மற்ற கட்சிகளை விட ஒரு வகையில் சிறந்த நிலையில் உள்ளது, அது மற்ற கட்சிகளை போல பேச்சுவார்த்தை என கூறி ஏமாற்றாமல் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தெளிவாக ஆரம்பத்திலேயே கூறியமைதான்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, nochchi said:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையருடனான உரையாடலெனும் கோதாவில், தெற்கு யேர்மனியில் முன்னாள் சமாதானத் தூதுவரான எ.சொல்கைம் ஏற்பாடு செய்த நிகழ்வின் இலங்கையராக வாழ்வதே சிறப்பென்று போதித்தாராம். அவர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.  
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

எமக்காக பேச யாரும் தயாரில்லாத நிலையில் ஈழத்தமிழருக்கு ஊன்றுகோல் வாழ்க்கைதான். 
இதற்கெல்லாம் காரணம் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமேயன்றி வேறு யாருமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

இந்த கட்சி மற்ற கட்சிகளை விட ஒரு வகையில் சிறந்த நிலையில் உள்ளது, அது மற்ற கட்சிகளை போல பேச்சுவார்த்தை என கூறி ஏமாற்றாமல் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தெளிவாக ஆரம்பத்திலேயே கூறியமைதான்.  

ஆம்  ஆனால் அவர்கள் என்ன செயவேம். என்று வெளிப்படையாக செல்ல முடியாது காரணம்  

பாராளுமன்ற தேர்தலில் தோற்க்கலாம் 

இதனை எதிர் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்ய பயன்படுத்தும் 

 ஏன் பேச வேண்டும்?? 

இன்றைய நிலையில்   யாருடன். பேசுவது  ??   

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, vasee said:

பிரமரது அறிக்கையின் மூலம் ( காணொளியில் கூறப்பட்டதனடிப்படையில்) இனப்பிரச்சினைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட தரப்புகளினூடனான பேச்சு எனும் நிலைப்பாடு இந்த அரசிடம் துளியும் இல்லை,

சம்பந்தப்பட்ட தரப்புகளினால் ஏற்கொள்ளபட்ட  அனுரகுமார திசாநாயக்காவே இப்போது  அவர்கள் தலைவராக ஆகிவிட்டார்  அவர்களின் தலைவரே  அங்கே இருக்கின்ற போது யாருடனும் பேச வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஆம்  ஆனால் அவர்கள் என்ன செயவேம். என்று வெளிப்படையாக செல்ல முடியாது காரணம்  

பாராளுமன்ற தேர்தலில் தோற்க்கலாம் 

இதனை எதிர் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்ய பயன்படுத்தும் 

 ஏன் பேச வேண்டும்?? 

இன்றைய நிலையில்   யாருடன். பேசுவது  ??   

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சம்பந்தப்பட்ட தரப்புகளினால் ஏற்கொள்ளபட்ட  அனுரகுமார திசாநாயக்காவே இப்போது  அவர்கள் தலைவராக ஆகிவிட்டார்  அவர்களின் தலைவரே  அங்கே இருக்கின்ற போது யாருடனும் பேச வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

இந்த கட்சி ஆரம்பத்தில் கூறிய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை, தமிழருக்கென தனியான பிரச்சினை இல்லை ( தமிழர் மட்டுமல்ல அனைத்து சிறுபான்மையினருக்கும் இதில் சிங்கள மக்களில் உள்ள சிறுபான்மையினரையும் உள்ளடக்கலாக) கட்சியின் நிலைப்பாடு அனைவரும் சமம், ஆனால் அனுரவே கூறியுள்ளார் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை கட்சிகள் இனவாதத்தினை தூண்டி அரசியல் இலாபம் பெறுகின்றன என , தமது ஆட்சியில் அது நிகழாது என அதே நேரம் பிரதமர் கூறுகிறார் தமிழருக்கு பிரச்சினை உள்லதென அது சமூக ( பொருளாதார, மொழி, கல்வி, மருத்டுவ பிரச்சினை இது அனைத்து மக்களுக்கும் உள்ள பிரச்சினைதான்).

ஆனால் மக்கள் எதிர்பார்ப்பது சட்ட ரீதியான பாதுகாப்பினை ஆனால் அதனை வழங்க முடியாது என்பதனை சட்ட சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாது என்பதன் மூலமாக.

தேர்தலுக்கு முன் கூறிய விடயத்தினை பிரதமர் அவர்கள் நல்ல விதமாக அதே நேரம் புத்திசாலித்தனமாக கூறியுள்ளார்.

நான் இதனை மேற்குறிப்பிட்ட கருத்தில் குறிப்பிடவில்லை, இதனை பார்க்கும் போது அனைவருக்கும் புரியும் என்பதாலும் அத்துடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதற்காகவுமே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இனப்பிரச்சினை தீர்வாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது .

ஆரம்பத்தில் இந்தத் தேர்தலும் தேவையில்லை என்றார்கள்.மற்றைய சிங்கள கட்சிகள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்றதும் இவர்களும் சரி என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் பொலிஸ் காணி அதிகாரம் பற்றி மூச்சில்லை.

இவ்வளவு காலமும் காணாமல் போனோர் விடயத்தில் பிரதமர் அதிக அக்கறை கொண்டிருந்தார்.

இனிமேல் இந்த விடயத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

நீதியாக முடிவெடுத்தால் சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் நிலை என்ன?

இது ஒரு பெரிய சவால் நிறைந்த விடயம்.பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த கட்சியினர் சிறுபான்மையினரை மட்டும் ஏமாற்றவில்லை, பெரும்பான்மையினரையும் ஏமாற்றுகிறார்கள் போல இருக்கின்றது, ஆனால் மக்களின் மனங்களை கவரத்தெரிந்துள்ளது, இது ஆட்சி பீடம் ஏறும் வரைதான், அப்படி ஆட்சி பீடம் ஏறினால்(?) அவர்கள் எதிர் நோக்கும் நடைமுறைப்பிரச்சினைகள் இப்போது கூறிய தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்ற முடியாமல் போகும் போது அதன் யதார்த்தத்தினை புரிந்து கொள்ளும் நிலையில் மக்கள் இருக்க மாட்டார்கள்.

எவ்வாறு அரசிற்கு  அரச செலவுள்ளதோ அதே போல் மக்களுக்கும் அவர்களது அன்றாட வாழ்க்கை பிரச்சினை உள்ளது, இருந்தாலும் இந்த அரசின் பாதீட்டினை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

ஏற்கனவே நிறைய இருக்கு அதற்காக என் நேரம் வீணாக தேடி போடும் அளவுக்கு நீங்க பெரிய ஆள் கிடையாது முகமூடிக்குள் இருந்து காரி துப்பும் ஒருத்தர் இனியும் யாழில் புலிகளை வசை பாடுங்க அப்ப தெரியும் நா.... என்று .

எப்படி தேடினாலும் கிடைக்காது. சல்லடை போட்டு தேடிப்பாருங்க அப்பவும் கிடைக்காது.

வசை பாடுதல் என்பதன் அர்ததமாவது தெரியுமா? அட உங்களிடம் போய் இப்படியான தர்ககரீதியான கேள்விகளை கேட்கலாமா? 

அது என்ன முக மூடியா? எனது Island என்ற Profile ஐ தானே கூறுகிறீர்கள் அப்ப  பெருமாள்  என்பது உங்க ஆத்தா வைச்ச பெயரா? 😂 birth certificate, passport எல்லாம் ஐயா இந்த பெயரில் தானே  வைச்சிருகிறார். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.