Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்

Vhg அக்டோபர் 02, 2024
1000345687.webp.webp

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளராக கருணா அம்மான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
https://www.battinatham.com/2024/10/blog-post_87.html

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட்டு அனுராவோடு கூட்டுச்சேர்ந்து பதவியை பெற்றுவிட்டால்; தப்பித்து விடலாமென பழைய பாணியில் கனவு காண்கிறார் போலும். அப்படி நடந்தால்; அனுராவும் துரத்தியடிக்கப்படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

தேர்தலில் போட்டியிட்டு அனுராவோடு கூட்டுச்சேர்ந்து பதவியை பெற்றுவிட்டால்; தப்பித்து விடலாமென பழைய பாணியில் கனவு காண்கிறார் போலும். அப்படி நடந்தால்; அனுராவும் துரத்தியடிக்கப்படுவார்.

டக்ளஸ், கருணா, பிள்ளையானையெல்லாம் சேர்க்க சந்தர்ப்பம் இல்லை பாப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வாதவூரான் said:

டக்ளஸ், கருணா, பிள்ளையானையெல்லாம் சேர்க்க சந்தர்ப்பம் இல்லை பாப்பம்

அப்படி சேர்க்காவிடில் அனுராவுக்கு இரண்டு புள்ளிகள் அதிகமாக கொடுக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சார்ந்த ஊடகங்கள் கருணா அம்மான் என்று விழிப்பதை தவிர்க்கணும்.

 ஒருகாலத்தில் இயக்கத்தில் போற்றுதலுக்குரியவர்களை சகபோராளிகளால் அம்மான் என்று அழைப்பது வழமை.

அதனால் அம்மான் என்ற அடைமொழி அவருக்கு சொந்தமானதல்ல ,

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

அப்படி சேர்க்காவிடில் அனுராவுக்கு இரண்டு புள்ளிகள் அதிகமாக கொடுக்கலாம்

ஏற்கெனவே தமிழர்கள் கண்ணை மூடிக் கொண்டுஅநுர குமார திசாநாயகவுக்கு புள்ளிகளை அள்ளி வழங்கி ஜனாதிபதி மாளிகை புள்ளிகளால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றது. மேலதிகமாக இரண்டு புள்ளிகள் வைப்பதற்கு  அங்கே இடமே இல்லை😳

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

தமிழர் சார்ந்த ஊடகங்கள் கருணா அம்மான் என்று விழிப்பதை தவிர்க்கணும்.

 ஒருகாலத்தில் இயக்கத்தில் போற்றுதலுக்குரியவர்களை சகபோராளிகளால் அம்மான் என்று அழைப்பது வழமை.

அதனால் அம்மான் என்ற அடைமொழி அவருக்கு சொந்தமானதல்ல ,

உண்மை. ஆனால், ஊடகங்கள் தங்களது பிழைப்புக்காக  எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மதிப்பு மிக்க உறவுமுறைப் பெயரான 'அம்மான்'  இப்படிப்போய்விட்டது.  

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, வாதவூரான் said:

டக்ளஸ், கருணா, பிள்ளையானையெல்லாம் சேர்க்க சந்தர்ப்பம் இல்லை பாப்பம்

22 hours ago, satan said:

தேர்தலில் போட்டியிட்டு அனுராவோடு கூட்டுச்சேர்ந்து பதவியை பெற்றுவிட்டால்; தப்பித்து விடலாமென பழைய பாணியில் கனவு காண்கிறார் போலும். அப்படி நடந்தால்; அனுராவும் துரத்தியடிக்கப்படுவார்.

ஏனப்பா அவசரப்படுறியள்? ஒரு இரண்டு மூண்டு மாசம் பொறுங்கோவன்.
 😀

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஏற்கெனவே தமிழர்கள் கண்ணை மூடிக் கொண்டுஅநுர குமார திசாநாயகவுக்கு புள்ளிகளை அள்ளி வழங்கி ஜனாதிபதி மாளிகை புள்ளிகளால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றது. மேலதிகமாக இரண்டு புள்ளிகள் வைப்பதற்கு  அங்கே இடமே இல்லை😳

டக்லஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றோர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது எப்படிப்பட்ட மக்கள் ஆணையாக தமிழ்த்தேசிய தூண்களால் பார்க்கப்படும்? அவர்களின் வெற்றி சர்வதேசத்துக்கு ஏதாவது செய்தியை சொல்லி வந்துள்ளதா?

இவர்களை துரோகிகளாக இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் நினைக்கின்றார்களா? அப்படி நினைத்தால் எவ்வாறு இவர்களால் வெற்றி பெறமுடிகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேவலமான ஆளை 'அம்மான் ' என்று சொல்ல என்ன தகுதி இருக்கு . பொம்பிளை பொறுக்கி ...

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

தமிழர் சார்ந்த ஊடகங்கள் கருணா அம்மான் என்று விழிப்பதை தவிர்க்கணும்.

 ஒருகாலத்தில் இயக்கத்தில் போற்றுதலுக்குரியவர்களை சகபோராளிகளால் அம்மான் என்று அழைப்பது வழமை.

அதனால் அம்மான் என்ற அடைமொழி அவருக்கு சொந்தமானதல்ல ,

மிக‌ ச‌ரி

அவ‌ர் எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போது தான் அவ‌ருக்கு அந்த‌ பெரிய‌ர் 

பின்னைய‌ கால‌ங்க‌ளில் அவ‌ர் துரோகி லிஸ்ரில்.........................க‌ருணா அல்ல‌து அவ‌ரின் முழு பெய‌ரை ஊட‌க‌ங்க‌ள் போட‌னும் ..................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

டக்லஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றோர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது எப்படிப்பட்ட மக்கள் ஆணையாக தமிழ்த்தேசிய தூண்களால் பார்க்கப்படும்? அவர்களின் வெற்றி சர்வதேசத்துக்கு ஏதாவது செய்தியை சொல்லி வந்துள்ளதா?

இவர்களை துரோகிகளாக இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் நினைக்கின்றார்களா? அப்படி நினைத்தால் எவ்வாறு இவர்களால் வெற்றி பெறமுடிகின்றது?

டக்ளசின் கட்சி ஏற்கனவே பலமுறை தீவு பகுதிகளில் வென்றிருக்கிறது, கருணாவும் ஏற்கனவே மஹிந்த ஆட்சியில் ராஜாங்க அமைச்சர் ரேஞ்சுக்கு இருந்திருக்கிறார்.

இவர்கள் இருவரையுமே தமிழர்கள் பிரதிநிதிகளாக எண்ணி தமிழர்களும் பார்த்ததில்லை சர்வதேசமும் அணுகியதில்லை.

எந்த நாட்டிலும் 100% ஒரே கட்சியே வென்றதில்லை தம்மால் சலுகைகளை பெற்றவர்கள் ஆதரவில் ஒரு சில இடங்களில் அவர்களும் ஆளுமை செலுத்ததான் செய்வார்கள், அதனால் அவர்களே தேசியத்தின் தூண்கள் என்று எவரும் சொல்வதில்லை.

பணபலம் அதிகார பலம் அரசியல் செல்வாக்குபலம் இவற்றைக்கொண்டு தேர்தலில் வெல்பவர்களை துரோகிகளா பார்க்கிறார்களோ இல்லையோ அவர்களை ஒரு இனதேசியத்தின் காவலர்கள் என்று எவரும் சொல்வதில்லை.

தமிழர்தொகுதிகளில் அதிக இடங்களை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்கூட தமது கடமையை சரியாக ஆற்றாவிட்டால் சொந்த இனத்தினால் அவர்களும் தூக்கி எறியபடுவார்கள், அதற்கான வாய்ப்பு வரும் பொது தேர்தலில் நிறையவே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, valavan said:

ச‌ரியான‌ பார்வை

அருமையா சொன்னீங்க‌ள்.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

தமிழர்தொகுதிகளில் அதிக இடங்களை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்கூட தமது கடமையை சரியாக ஆற்றாவிட்டால் சொந்த இனத்தினால் அவர்களும் தூக்கி எறியபடுவார்கள், அதற்கான வாய்ப்பு வரும் பொது தேர்தலில் நிறையவே உண்டு.

100 % வீதம் சரி.   முக்கியமாக அந்த லோயர். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

பின்னைய‌ கால‌ங்க‌ளில் அவ‌ர் துரோகி லிஸ்ரில்.........................க‌ருணா அல்ல‌து அவ‌ரின் முழு பெய‌ரை ஊட‌க‌ங்க‌ள் போட‌னும்

தன் தலைவனையும் இனத்தையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தவன் துரோகி. என்று, அந்த போராட்டத்தில் இருந்து சலுகைகளுக்காக விலகினானோ அன்றே, அந்த போராட்டத்தில் இருந்து பெற்ற புகழ், பெயர் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான். ஆகவே இயக்கம் அளித்த பெயர் "கருணா அம்மான்." என்கிற பெயருக்கு தகுதியற்றவனாகிறான். ஆகவே இயற்பெயரால் அழைப்பதே பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

டக்லஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றோர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது எப்படிப்பட்ட மக்கள் ஆணையாக தமிழ்த்தேசிய தூண்களால் பார்க்கப்படும்? அவர்களின் வெற்றி சர்வதேசத்துக்கு ஏதாவது செய்தியை சொல்லி வந்துள்ளதா?

இவர்களை துரோகிகளாக இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் நினைக்கின்றார்களா? அப்படி நினைத்தால் எவ்வாறு இவர்களால் வெற்றி பெறமுடிகின்றது?

தமிழ் தேசிய தூண்கள் பொரும்பான்மை சிங்கல மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்கி ஏற்பவர்கள். அதனால் அநுரகுமார திசாநாயகவை இலங்கையின் தலைவனாக ஏற்றுகொண்டுள்ளனர் தமிழ் படத்தில் வரும் கதாநாயகனாம் அநுரகுமார திசாநாயக .ஆனால் தமிழ் மக்களை  தமிழ் தேசிய தூண்கள்  ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தங்களுக்கு வாக்களிக்காத தமிழர்களை துரோகிகள் என்பார்கள்.

சர்வதேசத்துக்கு செய்தி சொல்வது  என்பது  தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் குழு கண்டுபிடித்த ஏமாற்று
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த செய்தியை பிரசுரம் செய்த தளம் மட்டக்களப்பை மையப்படுத்தியது என நினைக்கின்றேன். நான் அறிந்தவரை மட்டக்களப்பு மக்களிடையே கருணாவிற்கு மதிப்பு உள்ளது. அதேசமயம் யாழ்ப்பாணத்தாருக்கு ஒரு துரோகி.

5 hours ago, valavan said:

டக்ளசின் கட்சி ஏற்கனவே பலமுறை தீவு பகுதிகளில் வென்றிருக்கிறது, கருணாவும் ஏற்கனவே மஹிந்த ஆட்சியில் ராஜாங்க அமைச்சர் ரேஞ்சுக்கு இருந்திருக்கிறார்.

இவர்கள் இருவரையுமே தமிழர்கள் பிரதிநிதிகளாக எண்ணி தமிழர்களும் பார்த்ததில்லை சர்வதேசமும் அணுகியதில்லை.

எந்த நாட்டிலும் 100% ஒரே கட்சியே வென்றதில்லை தம்மால் சலுகைகளை பெற்றவர்கள் ஆதரவில் ஒரு சில இடங்களில் அவர்களும் ஆளுமை செலுத்ததான் செய்வார்கள், அதனால் அவர்களே தேசியத்தின் தூண்கள் என்று எவரும் சொல்வதில்லை.

பணபலம் அதிகார பலம் அரசியல் செல்வாக்குபலம் இவற்றைக்கொண்டு தேர்தலில் வெல்பவர்களை துரோகிகளா பார்க்கிறார்களோ இல்லையோ அவர்களை ஒரு இனதேசியத்தின் காவலர்கள் என்று எவரும் சொல்வதில்லை.

தமிழர்தொகுதிகளில் அதிக இடங்களை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்கூட தமது கடமையை சரியாக ஆற்றாவிட்டால் சொந்த இனத்தினால் அவர்களும் தூக்கி எறியபடுவார்கள், அதற்கான வாய்ப்பு வரும் பொது தேர்தலில் நிறையவே உண்டு.

பிரேமானந்தம் விக்கினேஸ்வரன் தனது நண்பனின் மகளுக்கு போத்தல் அனுமதிபத்திரம் வாங்கிகொடுத்தது பற்றி பம்முகின்ற காணொளி பார்த்தீர்களா? வேலியே பயிரை மேய்கின்றது. சும்மா ஜோக் அடிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நியாயம் said:

பிரேமானந்தம் விக்கினேஸ்வரன் தனது நண்பனின் மகளுக்கு போத்தல் அனுமதிபத்திரம் வாங்கிகொடுத்தது பற்றி பம்முகின்ற காணொளி பார்த்தீர்களா? வேலியே பயிரை மேய்கின்றது. சும்மா ஜோக் அடிக்காதீர்கள்.

மக்கள் பிரதிநிதி என்று தமிழர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஒரு முதலைமச்சராக இருந்தவர் அவரே தவறணைக்கு அனுமதிப்பத்திரத்திற்கு சிபாரிசு கடிதம் என்ற பெயரில் தரகர் வேலை பார்த்திருக்கிறார் என்றால் என்றால் அந்த கீழ்தரமான வேலையை  சரியென்று நீங்களோ நானோ வாதிடபோவதில்லைம் 

தவறென்று தெரிந்த ஒன்றை வைத்து நீங்களோ நானோ அவருக்கு வாக்களித்த   வட புலமக்களோ ஜோக்கடிக்க போவதில்லை,

நீங்கள் உங்கள் கருத்தையிட்டு தவறென்று உணர்ந்தால்  வருந்திக்கொள்ளலாம்.

புத்திசாலிதனமாக இந்த தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று ஒதுங்கிவிட்டார்,  இல்லையென்றால் நிச்சயமாக விக்னேஷ்வரன் பொதுதேர்தலில் மக்களால் தூக்கியெறியப்பட்டிருப்பார்.

அத்தனை ஆவேசமாக விக்னேஷ்வரன் சமூக ஊடகங்களிலும் அங்குள்ள பெரும்பாலான மக்களாலும் காறி துப்பப்பட்டுக்கொண்டிருக்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2024 at 12:45, valavan said:

தமிழர் சார்ந்த ஊடகங்கள் கருணா அம்மான் என்று விழிப்பதை தவிர்க்கணும்.

நீங்களும் தடுமாறலாமா??

6 hours ago, valavan said:

டக்ளசின் கட்சி ஏற்கனவே பலமுறை தீவு பகுதிகளில் வென்றிருக்கிறது, கருணாவும் ஏற்கனவே மஹிந்த ஆட்சியில் ராஜாங்க அமைச்சர் ரேஞ்சுக்கு இருந்திருக்கிறார்.

எப்பொழுது இயக்கம் அவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்ததோ அன்றிலிருந்து முரளிதரன் என்று மட்டுமே எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

தன் தலைவனையும் இனத்தையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தவன் துரோகி. என்று, அந்த போராட்டத்தில் இருந்து சலுகைகளுக்காக விலகினானோ அன்றே, அந்த போராட்டத்தில் இருந்து பெற்ற புகழ், பெயர் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான். ஆகவே இயக்கம் அளித்த பெயர் "கருணா அம்மான்." என்கிற பெயருக்கு தகுதியற்றவனாகிறான். ஆகவே இயற்பெயரால் அழைப்பதே பொருந்தும்.

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி .....................

இவ‌னின் துரோக‌த்தால் நாம் இழ‌ந்த‌வை ப‌ல‌😡.........................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

இவ‌னின் துரோக‌த்தால் நாம் இழ‌ந்த‌வை ப‌ல‌😡.........................

இழந்தவை மட்டுமல்ல, இவன் மட்டுமல்ல,  இவன் போன்றவர்கள் அரசியலில், போராட்டத்தில்  எப்போதும்  நமது இனத்துக்கு ஒரு தடைக்கல். கோழைகள்! வீர வசனம் பேசி தம்மை உயர்த்துவது. 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவேட்பாளர் எண்டு பப்பாவிலை ஏத்தி அரியத்தின்ட அரசியல் வாழ்க்கையை காடாத்திப் போட்டானுகள்! அதுசரி அரியம் யாருக்கு ஆதரவாம் கருணா அம்மானுக்கோ?!😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.