Jump to content

வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்கிற்கு செல்வதில்லை.

யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர். இங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

இந்த மக்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். தெற்கில் இருந்து வடக்கிற்கு செல்லும் பாதை அழகாக உள்ளது. பாதையின் இருபுறங்களிலும் கடைகள் உள்ளன.

ஆனால், பாதையை தாண்டி உள்ளே சென்றால் வீடுகள் இல்லை, மக்கள் வறுமையாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதும் வாழ்கின்றனர். உள்பாதைகள் மிகவும் மோசமான முறையில் புனரமைக்கப்படாது புழுதிகளுடன் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சிலர் வெளிநாடுகளில் இருப்பதால் ஓரளவு பொருளாதாரம் உள்ளது. ஆனால், வவுனியா அல்லது கிளிநொச்சி சென்றால் அங்கு பொருளாதார இல்லை. முல்லைத்தீவில் வாழும் மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்களையும், மரக்கறிகளையும் விற்பனை செய்துக்கொள்ள உரிய சந்தை வாய்ப்புகள் இல்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

தெற்கில் இருந்து அங்கு சென்று சுற்றுலாவில் நாம் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது.

பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது. காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. யுத்தக்காலத்தில் தமது காணியை கைவிட்டு வெளியேறி மக்கள் யுத்தம் நிறைவடைந்து சென்ற போது அந்த காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர். அரசாங்கம் தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

பிரச்சினைகள் அவ்வாறுள்ளன. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற வசனங்களை பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன.

எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது. கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன. இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும் போது மக்களின் பிரச்சினைகள் தீரும்.

குறிப்பாக எமது நாட்டில் உற்பத்தி பொருளாதார முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொருளாதாரத்தின் பங்காளிகளாக அனைத்து பிரதேச மக்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

உற்பத்தி பொருளாதார்ததின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.” என்றும் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/310789

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இவர்களது ஒரு சிறிய கூட்டம் எமது பகுதியில் ஒரு வீட்டில் கூடியபோது எனது நண்பரும் கலந்து கொண்டிருந்தார். நீங்கள் வாக்கு கேட்கத் தேவையில்லை!, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினாலே போதும் என தான் கூறியதாகக் கூறினார். அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டாத பலர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

போறபோக்கைப் பார்த்தால் தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லைப் போல தான் இருக்கு!

  • Confused 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

போறபோக்கைப் பார்த்தால் தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லைப் போல தான் இருக்கு!

இங்கேயும் பலர் இதைத்தானே வலியுறுத்துகிறார்கள்.

மிகிந்த போய் மைத்திரி வந்ததே பெரிய சந்தோசம்.

இப்போ அதைவிட இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் என்றால் சந்தோசம் தானே.

எதுவானாலும் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.வரவேற்போம்.

மக்கள் பாவம் ரொம்ப களைத்து விட்டார்கள்.

உங்களுக்கும் ஊருக்குள் ஓரளவு செல்வாக்குகள் இருக்கும்.

இனிவரும் தேர்தல்களில் களமிறங்குங்கள்.

தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்யுங்கள் ஏராளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவே செய்தாச்சு. வடக்கு மட்டும் என்று. யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கேயும் பலர் இதைத்தானே வலியுறுத்துகிறார்கள்.

மிகிந்த போய் மைத்திரி வந்ததே பெரிய சந்தோசம்.

இப்போ அதைவிட இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் என்றால் சந்தோசம் தானே.

எதுவானாலும் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.வரவேற்போம்.

மக்கள் பாவம் ரொம்ப களைத்து விட்டார்கள்.

உங்களுக்கும் ஊருக்குள் ஓரளவு செல்வாக்குகள் இருக்கும்.

இனிவரும் தேர்தல்களில் களமிறங்குங்கள்.

எனக்கு தேர்தலில் நிற்கும் எண்ணம் எப்போதும் இல்லை அண்ணை. நம்மட ஊருக்குள்ளயே என்னை எல்லோருக்கும் தெரியாது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலிருக்கும் சில உறவினர்களான இளையோருடன் தொடர்பிருக்கிறது. ஒருவர், தற்போது தேர்வுப் புள்ளிகள் வெளிவந்த பின்னர் பல்கலை அனுமதி கிடைக்காது எனத் தெரிந்த பின்னர் அடுத்த வாழ்வாதார முயற்சிகளில் கவலைகளுக்கு மத்தியிலும் ஈடுபட்டிருக்கிறார். இரவு 11 மணி வரை வேலை செய்து பெறும் ஊதியத்தை, அடுத்த வேலைக்கு நேர்முகம், பரீட்சை என்று செல்லப் பயன்படுத்துகிறார்.

இன்னொருவர், சில வருடங்களாக வங்கியில் வேலை. பொருளாதாரச் சரிவின் போது செலவுகள் சமாளிக்க இயலாத நிலையில், ரியூசனும் கொடுத்து உழைத்து பெற்றோரின் மருத்துவச் செலவு, படிப்புக் கடன் என்பவற்றை அடைத்து வருகிறார். இதனால் திருமணப் பேச்சையும் 2 வருடம் தள்ளிப் போட்டு விட்டு உழைக்கிறார்.

ஓரளவு படித்த, இளவயதினருக்கே இவ்வளவு சுமைகள் இலங்கையில் இருக்கும் போது , ஏனைய தற்காலிக தொழில்கள் செய்யும் குடும்ப காரர்களின் நிலையை ஊகிக்க முடிகிறது. இவர்களிடம் போய் "தமிழ் தேசியத்திற்காக கொஞ்சம் பொறுத்துக் கொள், அதற்கேற்ப வாக்குப் போடு" என்று யாரும் கேட்க முடியுமென நினைக்கவில்லை.

பொருளாதாரம், அடிப்படை வசதிகள் இவை இந்த தேர்தலில் முக்கியமான காரணிகள். இவற்றை தமிழ் அரசியல் தலைமைகள் கவனிக்காமல் இருந்தது பாரிய தவறு, விளைவுகள் இருக்கும். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

எனக்கு தேர்தலில் நிற்கும் எண்ணம் எப்போதும் இல்லை அண்ணை. நம்மட ஊருக்குள்ளயே என்னை எல்லோருக்கும் தெரியாது!

உங்கள் தம்பியை இறக்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் தம்பியை இறக்குங்கள்.

அவர் முதலே உள்ளூராட்சி சபை உறுப்பினராக இருந்தவர் தானே அண்ணை. அப்பவே வீட்டில சொல்லித்தான் விட்டது, தொடர்ந்து இருக்கக் கூடாது, மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேணும்.

தன்னுடைய சம்பளப்பணம் 15000*60 மாதம் முழுவதும் பல்ப் போடவும் 2 இலட்சம் ரூபா பெறுமதியில் கற்றல் செயற்பாடுகளுக்கு கொட்டகை போடவும் பயன்படுத்தினவர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

தாயகத்திலிருக்கும் சில உறவினர்களான இளையோருடன் தொடர்பிருக்கிறது. ஒருவர், தற்போது தேர்வுப் புள்ளிகள் வெளிவந்த பின்னர் பல்கலை அனுமதி கிடைக்காது எனத் தெரிந்த பின்னர் அடுத்த வாழ்வாதார முயற்சிகளில் கவலைகளுக்கு மத்தியிலும் ஈடுபட்டிருக்கிறார். இரவு 11 மணி வரை வேலை செய்து பெறும் ஊதியத்தை, அடுத்த வேலைக்கு நேர்முகம், பரீட்சை என்று செல்லப் பயன்படுத்துகிறார்.

இன்னொருவர், சில வருடங்களாக வங்கியில் வேலை. பொருளாதாரச் சரிவின் போது செலவுகள் சமாளிக்க இயலாத நிலையில், ரியூசனும் கொடுத்து உழைத்து பெற்றோரின் மருத்துவச் செலவு, படிப்புக் கடன் என்பவற்றை அடைத்து வருகிறார். இதனால் திருமணப் பேச்சையும் 2 வருடம் தள்ளிப் போட்டு விட்டு உழைக்கிறார்.

ஓரளவு படித்த, இளவயதினருக்கே இவ்வளவு சுமைகள் இலங்கையில் இருக்கும் போது , ஏனைய தற்காலிக தொழில்கள் செய்யும் குடும்ப காரர்களின் நிலையை ஊகிக்க முடிகிறது. இவர்களிடம் போய் "தமிழ் தேசியத்திற்காக கொஞ்சம் பொறுத்துக் கொள், அதற்கேற்ப வாக்குப் போடு" என்று யாரும் கேட்க முடியுமென நினைக்கவில்லை.

பொருளாதாரம், அடிப்படை வசதிகள் இவை இந்த தேர்தலில் முக்கியமான காரணிகள். இவற்றை தமிழ் அரசியல் தலைமைகள் கவனிக்காமல் இருந்தது பாரிய தவறு, விளைவுகள் இருக்கும். 

இல்லை உண்மையா கேட்கிறேன் மாகாணசபைக்கு சில் அதிகாரங்களை கொடுத்து அதை இயங்க வைத்தால் அதிகாரம் பகிரப்படுமல்லவா....பிறகு ஏன் பயப்படுகிறார்கள்...

மகிந்தா ,விமல் வீரவம்ச போன்றவர்கள் இந்த தேர்தலில் அமைதியாக இருப்பதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடாமல் இருப்பதும் பொதுதேர்தலின் பின் ஏதாவது அரச கவிழ்ப்புக்கே ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா/அப்படி என்றால் அரகலய போராட்டத்தில் ஏன் தமிழ்மக்கள் பங்குபற்றவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பயப்படக் காரணம், இங்கே கொஞ்ச அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் அதை வைத்து கிடைக்கும் சுதந்திரத்தில் இந்தியாவின் உதவியுடன் மீண்டும் இங்கே ஒரு தமிழ் கிளர்ச்சிக் குழு உருவாகும் என்ற பயம் தான். 

நாம் தமிழர்களாக இருக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு செம்படிக்காத நல்ல இலங்கையர்களாகவும் இருப்பதை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு உறுதிப் படுத்த வேண்டும். அப்பொழுது பெரும்பான்மை மக்களுக்கு எமக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க விருப்பம் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அப்படியா/அப்படி என்றால் அரகலய போராட்டத்தில் ஏன் தமிழ்மக்கள் பங்குபற்றவில்லை.

அவர்கள், தாங்கள் தெரிந்தெடுத்து அழகு பாத்த தங்கள்  தலைவனை விரட்ட எடுத்த முயற்சியது. அதில் நமக்கு பங்குமில்லை பாகமுமில்லை. தமிழீழ போராட்டம் நடக்கும்போது அவர்கள் பங்குபற்றவில்லையே. 

Link to comment
Share on other sites

18 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர். இங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

இந்த மக்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். தெற்கில் இருந்து வடக்கிற்கு செல்லும் பாதை அழகாக உள்ளது. பாதையின் இருபுறங்களிலும் கடைகள் உள்ளன.

ஆனால், பாதையை தாண்டி உள்ளே சென்றால் வீடுகள் இல்லை, மக்கள் வறுமையாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதும் வாழ்கின்றனர். உள்பாதைகள் மிகவும் மோசமான முறையில் புனரமைக்கப்படாது புழுதிகளுடன் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சிலர் வெளிநாடுகளில் இருப்பதால் ஓரளவு பொருளாதாரம் உள்ளது. ஆனால், வவுனியா அல்லது கிளிநொச்சி சென்றால் அங்கு பொருளாதார இல்லை. முல்லைத்தீவில் வாழும் மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்களையும், மரக்கறிகளையும் விற்பனை செய்துக்கொள்ள உரிய சந்தை வாய்ப்புகள் இல்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

https://thinakkural.lk/article/310789

ரில்வினின் கட்சி, தமிழர்களுக்கு அரசியல் தீர்வாக எதையும் தருவோம் என்று ஒரு போதும் சொன்னது இல்லை. அத்துடன் அது அதிகாரபரவலாக்கத்துக்கு என்றுமே எதிர்ப்பை காட்டிக் கொள்ளும் கட்சி, எனவே ரில்வினின் இந்த பேச்சு ஒன்றும் அதிசயமும் இல்லை,  அதிர்ச்சிக்குரியதும் இல்லை.

ஆனால் ரில்வின் கூறிய வடக்கைப் பற்றிய விடயங்கள் முற்றிலும் உண்மையானவை.  இங்கு எவராலும் அவற்றை மறுக்க முடியாது.

ஏ9 வீதியின் ஒரு பக்கங்களையும் கடந்து உள்ளே சென்றால் பார்க்க முடியும் வடக்கின் வறுமையை. அதே போன்று யாழ்பாணத்தில் நாகர்கோவில் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் கரும்பலகைகள் கூட இல்லாத பாடசாலைகளை காண முடியும்.

இந்த 15 வருடங்களில் தமிழ் கட்சிகள் இந்த பிரதேசங்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்திருக்கவில்லை. வெறுமனே தமிழ் தேசியம், சுய நிர்ணயம், தாயகம் என்று தேர்தல் வேளைகளிலும், பத்திரிகை பேட்டிகளிலும் வாய் உளைய உரக்க பேசி மக்களை முட்டாள்களாக ஆக்கியதை தவிர வேறு எதையும் இவர்கள் செய்ய எத்தனித்ததும் இல்லை.

புலம்பெயர் தமிழ் தேசிய அமைப்புகளுக்கும் இது பற்றிய எந்த அக்கறையும் இல்லை. தம்மை பிரமுகர்களாக காட்டிக் கொள்வதற்கும், தம்மை முன்னிலைப்படுத்துவதற்கும் மட்டுமே இவ் அமைப்புகள் உள்ளன.

ரில்வினும் அவர் கட்சியும், ஆட்சியும் அவர் குறிப்பிட்ட பிரதேசங்களின், சமூகங்களின் பொருளாதார நிலையை மாற்ற ஏதேனும் முயற்சிகள் செய்து இப் பகுதி மக்களை முன்னேறினால் மிக்க மகிழ்ச்சி.

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எழுத நினைத்தேன் எழுதிவிட்டீர்கள்,

சிங்களவர்களுக்குள் கொள்கைகள் கட்சிகளுக்குள்  பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் தமிழர் விவகாரம் என்று வந்துவிட்டால் அத்தனைபேரும் ஒன்றாகவே நிப்பார்கள், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இனிவரும் காலங்களிலும்.

தமிழர்களுக்குள்ளும் கொள்கைகள் கட்சிகளுக்குள்  பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் சிங்களவர்களுக்கெதிரான அரசியலில் என்றைக்காவது எல்லோரும் ஒன்றாக நின்றிருக்கோமா? 

இந்த லட்சணத்தில் சிங்களவன்  சரியில்லை என்கிறோம், உணர்ச்சிவசபடாது உற்று நோக்கினால் சிங்களவன் எப்போதும் தமிழர் விவகாரத்தில் தன் பக்க வாதத்தில்  சரியாகத்தான் இருக்கிறான், நாம்தான் ஆளுக்காள் ,கட்சிக்கு கட்சி, மாகாணத்துக்கு மாகாணம், தமிழர் விவகாரத்தில் தரமற்று நிக்கிறோம்.

ஏற்கனவே குறிப்பிட்டதுதான் இருந்தாலும் சொல்ல நினைக்கிறான், அடிப்படை பொருளாதார வசதிகள் அங்கேயே உழைத்து அங்கேயே செலவு செய்யும் அளவிற்கு பொக்கRறில் வங்கி அட்டைகளும் உயர்தர வாகனங்களும் எல்லோருக்கும் வந்து பார்ட்டி கொண்டாட்டம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா எனும் நிலை வந்தால் நிச்சயமாக இளைய சமுதாயம் சிங்களவனுடன் முட்டி மோதுவதை தவிர்த்து, இந்த சிங்கள தலைவன் சொன்ன திசைக்கே செல்லும்.

அந்த பெருமையெல்லாம்  எம் பிரச்சனைகளை வைத்து தமது பிரச்சனையை மட்டும் கவனித்துக்கொண்ட  தமிழ்கட்சிகளையே சாரும். நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என்பதை முதலில் கவனிப்போம், 

மீனை மூடி வைப்பதுதான் நம் முதல் கடமை பூனைக்கு புத்திமதி சொல்வதல்ல.

வெறுமனே புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் கூவி தற்கால இலங்கை அரசியலில் பொழுது ஒருபோதும் விடியாது.

Edited by valavan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அவர்கள், தாங்கள் தெரிந்தெடுத்து அழகு பாத்த தங்கள்  தலைவனை விரட்ட எடுத்த முயற்சியது. அதில் நமக்கு பங்குமில்லை பாகமுமில்லை. தமிழீழ போராட்டம் நடக்கும்போது அவர்கள் பங்குபற்றவில்லையே.

சிங்களவர்கள் பாணுக்காககவும் எரபொருளுக்காகவும் போராடினார்கள். ஆனால் தமிழர்கள்  இது போன்ற தடைகளைத்தாண்டி வந்தவர்கள் அவர்கள் தமிழத் தேசியத்திற்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடினார்கள். ரில்வின் சில்வா அதை வசதியாக மறைைத்து விட்டார். எந்தச் சிங்கள மீடபராலும் தமழர் பிரச்சினைக்குத் தீர்வு தரமுடியாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகிடி said:

பயப்படக் காரணம், இங்கே கொஞ்ச அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் அதை வைத்து கிடைக்கும் சுதந்திரத்தில் இந்தியாவின் உதவியுடன் மீண்டும் இங்கே ஒரு தமிழ் கிளர்ச்சிக் குழு உருவாகும் என்ற பயம் தான். 

நாம் தமிழர்களாக இருக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு செம்படிக்காத நல்ல இலங்கையர்களாகவும் இருப்பதை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு உறுதிப் படுத்த வேண்டும். அப்பொழுது பெரும்பான்மை மக்களுக்கு எமக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க விருப்பம் வரலாம்.

ஐயா இங்கு மட்டுமல்ல உலகம் பூராவும் செம்பு தூக்குபவர்கள்  இருக்கின்றனர்...எந்த இனம் என்றாலும் அது இருக்கும் இருக்க தான் செய்யும் ...ஈரானுக்கே இஸ்ரேலுக்காக செம்பு தூக்கும்  ஈரானியர்கள் இருக்கும் பொழுது நாம் எம்மாத்திரம்...
மாபெரும் எமது போராட்டத்தை அழிக்க ,சிங்கள அரசுக்கு எம்மவ‌ர்களும் சர்வதேசமும் துணை நின்றார்கள் அல்லவா....சரி அதை தான் விடுங்கள் இன்று அனுராவுவுக்கு பலர் ஆதரவு( (உங்கள் பாசையில் சொல்வது என்றால் செம்பு தூக்குபவரகள் )கொடுக்கின்றனர் அல்லவா பிறகும் ஏன் ஐயா இந்த சிங்கள் இனவாதிகளுக்கு பயம்....

பிரித்தானியா ....போட்ட பிச்சை சிறிலங்கா.... அந்த பிச்சை பாத்திரத்தை  ஒழுங்காக பயன் படுத்தவில்லை என நான் நினைக்கிறேன் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இந்த 15 வருடங்களில் தமிழ் கட்சிகள் இந்த பிரதேசங்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்திருக்கவில்லை

இதை பூரணமாக எற்க முடியும் எற்கவேண்டும்.  அப்படியென்றால் வருட வருடம்  இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மில்லியன் கணக்கான பணம்   எங்கே??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

சிங்களவர்கள் பாணுக்காககவும் எரபொருளுக்காகவும் போராடினார்கள். ஆனால் தமிழர்கள்  இது போன்ற தடைகளைத்தாண்டி வந்தவர்கள் அவர்கள் தமிழத் தேசியத்திற்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடினார்கள். ரில்வின் சில்வா அதை வசதியாக மறைைத்து விட்டார். எந்தச் சிங்கள மீடபராலும் தமழர் பிரச்சினைக்குத் தீர்வு தரமுடியாது.

நாங்கள் புலவர் ,பித்தன் ,புத்தன் என்ற புமரங்க் கோஸ்டிகள் என தற்போதைய ஜென்சி கோஸ்டிகள் நினைக்கினம்😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா அவர்களுக்கு பொருளாதரா பிரச்சனையும் இல்லை .....யூ டியுப் பிரச்சனை தான் இருக்கு ...ஒரு டிரோன் மட்டும் இருந்தால் போதும் ...பிரிச்சு மேய்ந்து கொண்டு திரிவாங்கள் .

Edited by putthan
  • Haha 1
Link to comment
Share on other sites

6 hours ago, புலவர் said:

சிங்களவர்கள் பாணுக்காககவும் எரபொருளுக்காகவும் போராடினார்கள். ஆனால் தமிழர்கள்  இது போன்ற தடைகளைத்தாண்டி வந்தவர்கள் அவர்கள் தமிழத் தேசியத்திற்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடினார்கள். ரில்வின் சில்வா அதை வசதியாக மறைைத்து விட்டார். எந்தச் சிங்கள மீடபராலும் தமழர் பிரச்சினைக்குத் தீர்வு தரமுடியாது.

இவ்வாறு நாம் அவர்களை தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டு சுய திருப்தி அடைய வேண்டியது தான்.

சிங்களவர்கள் வெறுமனே பாணுக்காகவும் எரிபொருட்களுக்காகவும் மட்டும் போராடவில்லை. உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பெரும் இயக்கத்துக்கு எதிராக, தம் நாட்டை பிரித்துக் கேட்கின்றனர் என்பதற்காக அதை எதிர்த்து போராடி, அதில் வெற்றியும் பெற்றார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டீர்கள்.

அவர்களின் வெற்றி கொடூரமானதாகவும், அறத்துக்கு எதிரானதாகவும், தடை செய்யப்பட்ட போர் முறைகளை பாவித்தும் பெற்றதாக இருப்பினும், அவர்கள் வெற்றி பெற்றவர்களாகவும், தம் அநீதியான வழிகளுக்கு எதிரான சர்வதேச எதிர்ப்பை இன்று வரைக்கும் சமாளித்து உலக நாடுகளின் கடனுதவியை தொடர்ந்து பெறுகின்றவர்களாகவும் உள்ளனர். 

அத்துடன் எம் பலவீனமான அரசியல்வாதிகள் மூலமாகவும், சுயநலம் பிடித்த புலம்பெயர் தமிழ் தேசிக்காய் அமைப்புகள் மூலமாகவும் மேலும் மேலும் எம் பலத்தை ஒடுக்கி, ஈற்றில் அவர்களின் கரங்களை பற்றி முன்னேற வேண்டிய நிலைக்கும் எம்மை தள்ளி விட்டுள்ளனர்.

ஆனால் நாம் சிங்களவர்களை தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டு இருப்போம். அப்படி செய்தால் தான் எம்மை நாம் திருப்திப் படுத்திக் கொண்டு இருக்க முடியும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

சிங்களவர்கள் வெறுமனே பாணுக்காகவும் எரிபொருட்களுக்காகவும் மட்டும் போராடவில்லை. உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பெரும் இயக்கத்துக்கு எதிராக, தம் நாட்டை பிரித்துக் கேட்கின்றனர் என்பதற்காக அதை எதிர்த்து போராடி, அதில் வெற்றியும் பெற்றார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டீர்கள்.

அவர்கள் எப்படி வென்றார்கள் என்பது ஊங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இந்தியா என்ற நயவஞசக நாட்டின் உதவி இல்லாமல் அவர்களால் ஒன்றும் புடுங்கியிருக்க முடியாது. அதுவும் போர் அறத்தை மீறிய வெற்றி. ஆனால் இப்போது படு தொல்வியடைந்த உலகில் உள்ளார்கள். வெற்றி என்பது போர்வெற்றியை பொருளாதார வெற்றியாக மாற்றுவது என் அவர்களால் முடியவில்லை. அவர்களுக்கு உதவி செய்தவர்கள் எல்லாம் இப்போது அவர்களையே பொருளாதார அடிமைநாடாக ஆக்கி விட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

ரில்வினின் கட்சி, தமிழர்களுக்கு அரசியல் தீர்வாக எதையும் தருவோம் என்று ஒரு போதும் சொன்னது இல்லை. அத்துடன் அது அதிகாரபரவலாக்கத்துக்கு என்றுமே எதிர்ப்பை காட்டிக் கொள்ளும் கட்சி, எனவே ரில்வினின் இந்த பேச்சு ஒன்றும் அதிசயமும் இல்லை,  அதிர்ச்சிக்குரியதும் இல்லை.

ஆனால் ரில்வின் கூறிய வடக்கைப் பற்றிய விடயங்கள் முற்றிலும் உண்மையானவை.  இங்கு எவராலும் அவற்றை மறுக்க முடியாது.

ஏ9 வீதியின் ஒரு பக்கங்களையும் கடந்து உள்ளே சென்றால் பார்க்க முடியும் வடக்கின் வறுமையை. அதே போன்று யாழ்பாணத்தில் நாகர்கோவில் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் கரும்பலகைகள் கூட இல்லாத பாடசாலைகளை காண முடியும்.

இந்த 15 வருடங்களில் தமிழ் கட்சிகள் இந்த பிரதேசங்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்திருக்கவில்லை. வெறுமனே தமிழ் தேசியம், சுய நிர்ணயம், தாயகம் என்று தேர்தல் வேளைகளிலும், பத்திரிகை பேட்டிகளிலும் வாய் உளைய உரக்க பேசி மக்களை முட்டாள்களாக ஆக்கியதை தவிர வேறு எதையும் இவர்கள் செய்ய எத்தனித்ததும் இல்லை.

புலம்பெயர் தமிழ் தேசிய அமைப்புகளுக்கும் இது பற்றிய எந்த அக்கறையும் இல்லை. தம்மை பிரமுகர்களாக காட்டிக் கொள்வதற்கும், தம்மை முன்னிலைப்படுத்துவதற்கும் மட்டுமே இவ் அமைப்புகள் உள்ளன.

ரில்வினும் அவர் கட்சியும், ஆட்சியும் அவர் குறிப்பிட்ட பிரதேசங்களின், சமூகங்களின் பொருளாதார நிலையை மாற்ற ஏதேனும் முயற்சிகள் செய்து இப் பகுதி மக்களை முன்னேறினால் மிக்க மகிழ்ச்சி.

இலங்கை பொருளாதார பிரச்சினையும், சிறுபான்மைஇனரின் பிரச்சினையும் இரண்டும் வேறு வேறாக இருந்தாலும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளது.

இலங்கை பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல எந்த நாட்டிலும் ஒரு நாட்டில் பொருளாதாரத்தில் தளம்பல் ஏற்படும் போது அது உடனடியாக நேரிடையாக அடித்தட்டு மக்க்ளையே பாதிப்பிற்குள்ளாக்குகிறது.

ஆனால் சிறுபான்மையினரின் பிரச்சினைக்குக்காரணம் பொருளாதார பிரச்சினைதான் என கூறுவதும் வடக்கினை மட்டும் நிலவுவதாக கூறுவதும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக தெரிகிறது.

இலங்கை பொருளாதார பிரச்சினைக்கு சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையின் நேரடி பிரதி விளைவாகவும் ஊழல் அரசியல்வாதிகளாலும் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆனால் இடது சாரிகளின் கோட்பாடான் சமூக சமத்துவம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் ஆனால் இவர்கள் தற்போது கூறிவரும் அரசியல் சீர்திருத்தம் இல்லை எனும் கருதுகோளினூடாக வழமையான இலங்கை பேரினவாத அரசியலைமைப்பினூடாக சிறுபான்மையினரின் உயிட் உடமைக்கு உத்தரவாதமற்ற அதே இலங்கை ஆட்சிமுறைமையினையே நடாத்த விளைகின்றனர்.

அரசுகளால் அடிப்படைக்கட்டுமான மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நிலையினை மாற்ற முற்படலாம், ஊழல் அரசியல்வாதிகள், அரச திணைக்களங்களில் நடவடிக்கை எடுத்தல் என்பவற்றினூடாக மாற்றங்களை ஏற்படுத்தலாம் ஆனால் அரசு அடிப்படை கட்டுமான மாற்றங்கள் தொடர்பாக எந்த மாற்றமும் ஏற்படுத்த உள்ளது என்பதனை கூட கூறாத நிலையில் வெறும் திறமையற்ற ஊழல்நிறைந்த தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதனூடாக எமது மக்களின் வறுமையை காரணம் காட்டி அதனை தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகிற நிலையே காணப்படுகிறது.

பொருளாதார ரீதியாக ஒவ்வொரு அரசும் சிறுபான்மையினரை இரண்டாம் பட்சமாகவே அணுகிறார்கள், இந்த அரசு எந்த விதத்தில் இதிலிருந்து வித்தியாசமாக உள்ளது, அவ்வாறாயின் அது என்ன என்பதாவது யாருக்காவது தெரியுமா? (அத்துடன் தமிழர்களின் பொருளாதார நிலையினை பாதிக்க செய்வதில் கடந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு அரசிற்கும் பங்கிருந்தது)

23 hours ago, பகிடி said:

பயப்படக் காரணம், இங்கே கொஞ்ச அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் அதை வைத்து கிடைக்கும் சுதந்திரத்தில் இந்தியாவின் உதவியுடன் மீண்டும் இங்கே ஒரு தமிழ் கிளர்ச்சிக் குழு உருவாகும் என்ற பயம் தான். 

நாம் தமிழர்களாக இருக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு செம்படிக்காத நல்ல இலங்கையர்களாகவும் இருப்பதை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு உறுதிப் படுத்த வேண்டும். அப்பொழுது பெரும்பான்மை மக்களுக்கு எமக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க விருப்பம் வரலாம்.

எதற்காக சிங்களவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்?  (விடயத்தினை உணர்பூர்வமாக அணுகுகிறீர்கள் என கருதுகிறேன்)

சிறுபான்மையினர் உரிமைகளை மறுப்பதாலேயே கிளர்ச்சிகள் உருவானது, ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சமம் எனவே சட்ட ரீதியாக கூறப்படுகிறது, நீங்கள் கூறுவது இந்தியா போன்ற நாடுகளில் சிலவேளை சரியாக இருக்கலாம், அங்கே தான் திருமண உறவில் இருக்கும் துணையினை வல்லுறவில் ஈடுபடுவது சட்ட அங்கீகாரம் உள்ள விடயம், இவ்வாறான சட்டத்தினை இயற்றுபவர்கள் படித்தவர்களாக இருப்பது இன்னும் ஆச்சரியமழிக்கிறது.

உங்களது பார்வை உங்களுக்கு சரியாக இருக்கும், பெரும்பாலானோருக்கு சரியாக இருக்கலாம் அதில் தவறில்லை ஆனால் மற்றவர்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம்.

உரிமைகளை மறுப்பவர்கள் தாமாக உரிமைகளை கொடுக்க மாட்டார்கள், இப்படி ஏதாவது செய்துதான் பிடுங்கி எடுக்க வேண்டும்.

உங்களது கருத்திற்கு எதிராக கருத்து வைக்கவேண்டும் என்பதற்காக எழுதவில்லை, ஆனால் உங்கள் அடிப்படை நிலையினை என்னால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது, சிலவேளை எமது புரிதல்கள் வித்தியாசமாக இருக்கலாம்.

 நாலைந்து வருடங்களுக்கு முன்னர் எனது உறவினர் ஒருவரின் திருமண பந்தத்தில் சிக்கல் உருவானது, மணமகனில் பெரும்பாலும் தவறு இருந்தது, மணமகன்  எனக்கு நெருங்கிய உறவு சிறிய வயதில் நல்ல தொடர்பிருந்தது பின்னர் தொடர்பில்லை, அந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என கூறினாலும் வலுக்கட்டாயமாக என்னை இணைத்து விட்டார்கள் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது அதில்  தலையிடாமல் எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன், மணமகள் கேட்டது மணமகன் மன்னிப்பு கோரவேண்டும் என இதற்கு ஏன் பெரிதாக மணமகனின் சகோதரர்கள் கொல்லுப்படுகிறார்கள் என மணமகனின்  சகோதரனிடம் தனிமையில் கேட்டேன் அதற்கு அவர் கூறினார் " யாராவது தவறே செய்திருந்தாலும் பொம்பிளையளிட்ட மன்னிப்பு கேட்பார்களா?" என கேட்டார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் மன்னிப்பு கோருவது சரியென நான் நினைப்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கடற்படை ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறது.

அது சரியாக முடிந்தால் அனுராவுக்கு இலங்கைக்கு சுபீட்சம் வரலாம்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.