Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

570109650.jpeg

பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையின் சாராம்சமாவது:

பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும். ரேனியஸ் செல்வின் மிகவும் அர்ப்பணிப்பான, ஊழலற்ற, வினைத்திறனான, துறைசார் அறிவுடைய அதிகாரி. அவர் நியமிக்கப்பட்டமைக்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.
ஆனால், ஊடகங்கள் சிலவற்றில், பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டமைக்கு அதன் பணியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி முழுவதும் பொய்யானதும் புனையப்பட்டதுமான செய்தியாகும்.

இந்த நியமனத்தால் அதிகாரிகள் சிலர் தங்களின் ஊழல் மோசடிகள் வெளிவருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். அவர்களுக்கு இந்த நியமனம் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனினும் பணியாளர்களுக்கு அவ்வாறல்ல -என்றுள்ளது.  (ப)

https://newuthayan.com/article/பனை_அபிவிருத்திச்_சபைக்கு__புதிய_தலைவர்!

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ பனை அபிவிருத்தியடைந்து ஓங்கி வளர்ந்தால் போதும் . .........!  👍

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்பு!

image

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் இன்று புதன்கிழமை (30)  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.   

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், பனை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

IMG-20241030-WA0105.jpg  

IMG-20241030-WA0102__1_.jpg

https://www.virakesari.lk/article/197527

  • கருத்துக்கள உறவுகள்

பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார்
 
பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் 
 
???????

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2024 at 13:15, ஏராளன் said:

570109650.jpeg

பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையின் சாராம்சமாவது:

பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும். ரேனியஸ் செல்வின் மிகவும் அர்ப்பணிப்பான, ஊழலற்ற, வினைத்திறனான, துறைசார் அறிவுடைய அதிகாரி. அவர் நியமிக்கப்பட்டமைக்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.
ஆனால், ஊடகங்கள் சிலவற்றில், பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டமைக்கு அதன் பணியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி முழுவதும் பொய்யானதும் புனையப்பட்டதுமான செய்தியாகும்.

இந்த நியமனத்தால் அதிகாரிகள் சிலர் தங்களின் ஊழல் மோசடிகள் வெளிவருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். அவர்களுக்கு இந்த நியமனம் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனினும் பணியாளர்களுக்கு அவ்வாறல்ல -என்றுள்ளது.  (ப)

https://newuthayan.com/article/பனை_அபிவிருத்திச்_சபைக்கு__புதிய_தலைவர்!

பனை அபிவிருத்தி சபையின் பெயர் பலகையை கூட, மரத்திலே ஆணி அறைந்து வைத்திருக்கும் தலைமை காரியாலயம் நல்லாவே அபிவிருத்தி செய்வாய்ங்க!!! 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...ஏ,கே .டி யின் கனவில் மிதப்பவருக்கு...அடுத்த டங்கி சந்திரசேகரன் வடிவில்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...ஏ,கே .டி யின் கனவில் மிதப்பவருக்கு...அடுத்த டங்கி சந்திரசேகரன் வடிவில்...

டக்கியின் யாழ் மாவட்ட வேட்பாளர் ஒருவர் இவரை யாழில் வேட்பாளராக நியமித்தமைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிள்ளார்..பிரதேசவாதம் பேசி கிண்டல் அடித்துள்ளார் ....அவரும் முன்னாள் தோழர் ..தோழர்களுக்கு இடையிலும் பிரதேசவாதம் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

பனை அபிவிருத்தி சபையின் பெயர் பலகையை கூட, மரத்திலே ஆணி அறைந்து வைத்திருக்கும் தலைமை காரியாலயம் நல்லாவே அபிவிருத்தி செய்வாய்ங்க!!! 

நன்றாகப் பார்த்தீர்களா Sasi_varnam?  என் பார்வையில் மரத்தில் ஆணி அறைந்தது போல் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில வருடங்களாக பனை அபிவிருத்தி சபையின் பொருட்களின் தரம் நன்றாகவே இருக்கிறது.

ஆனால் பனங்கட்டி கையிருப்பு குறைவாக இருப்பது ஒரு குறை.

பண்டதரிப்பு நிலையம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருந்தாலும், பலவித பனம் பொருட்களை ஒரே இடத்தில் தரமாக வாங்க முடிகிறது.

புதிய தலைவர் இதை அடுத்த நிலைக்கு இட்டு போக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kavi arunasalam said:

நன்றாகப் பார்த்தீர்களா Sasi_varnam?  என் பார்வையில் மரத்தில் ஆணி அறைந்தது போல் தெரியவில்லை

ஆம் அது இரும்புக் குழாயில் பூட்டப்பட்டுள்ளது. 

(அப்பாடா, ஒரு வழியாக சசியில் பிழை கண்டாயிற்று 🤣)

  • கருத்துக்கள உறவுகள்

நேரமுள்ளவர்கள் கட்டாயம் கேளுங்கள்.

புதிய தலைவர் புட்டுப்புட்டு வைக்கும் பல அதிர்ச்சியான செய்திகள்.

இதற்கிடையில இவரது பதவிக்கே வேட்டுவைக்க முற்பட்ட அரசியல்வாதிகள்.

On 31/10/2024 at 17:11, goshan_che said:

கடந்த சில வருடங்களாக பனை அபிவிருத்தி சபையின் பொருட்களின் தரம் நன்றாகவே இருக்கிறது.

பனை அபிவிருத்திக்குப் பதிலாக பனையையே தறிக்கிறார்கள் என்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது - பொ.ஐங்கரநேசன்

image

ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

பனை அபிவிருத்திச்சபையின்  தலைவராக செல்வின் இரேனியஸ்சை கடந்த மாதம் அமைச்சர் விஜிதஹேரத் நியமித்தபோது பனை அபிவிருத்திச்சபைக்கு விடிவுகாலம் பிறந்திருப்பதாகவே நாம் நினைத்தோம். ஆனால், இருவார காலத்துக்குள்ளாகவே அவரது நியமனம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் போலப் பொருத்தமற்ற ஒருவர் பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். 

இந் நியமன மாற்றத்தின் மூலம்  பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சி மேலும் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. எமது மக்களில் சிலரும் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது. 

பனை வளத்துறை முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொண்டு அதனை வினைத்திறனுடன் இயங்கவைத்து அதனூடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

இதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த தொழிற்சங்கவாதி கே.சி.நித்தியானந்தா முதலாவது தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றினார். அதன் பின்னர் தலைவர்களாக இருந்த நடராஜா, கோகுலதாசன் போன்ற  ஒருசிலரைத்தவிர பனை அபிவிருத்திச்சபைக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இதற்குப் பொருத்தமற்றவர்களாகவே இருந்தார்கள்.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளில் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றவர்களும் அக் கட்சிகளின் விசுவாசிகளுமே வேறு போக்கிடமின்றி நியமனம் செய்யப்பட்டதுபோல இங்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. நீரைப் பற்றிப்பிடிக்கும் நீர்க்காந்தம் போலப் பனை தொழிற்படுவதாலேயே நிலத்தடிநீரை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதானமான பொருளாதார வளமும் பனைதான். ஆனால் பனை இன்று தேடுவாரற்ற, ஒதுக்கப்பட்ட மரம் போல் ஆகிவருகிறது. 

பனை அபிவிருத்திச்சபை இப்போது இருப்பது போன்றே தொடர்ந்தால் பனை மரத்துக்குச் சாபவிமோசனமே கிடையாது. மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பனை அபிவிருத்திச்சபையைத் தொடர்ந்தும் நம்பாமல் மாகாண நிர்வாகத்தின் கீழ் அல்லது சுயாதீனமாகவேனும் பனை வளத்தைப்பேணிப் பனைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு அமைப்பை நிறுவவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். துறைசார் வல்லுநர்கள் இதற்கு முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தார். 

https://thinakkural.lk/article/311487

பனை அபிவிருத்தி பற்றிப் பல காலமாக மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். சிறுவனாக இருந்தபோது மில்க் வைற் நிறுவன உரிமையாளர் பாடசாலையில் வழங்கிய பனங்கொட்டைகளைப் பெற்று வீட்டில் முளைக்கப் போட்டது நினைவுள்ளது.

பனை அபிவிருத்திச் சபை மாகண சபை போன்றவற்றை எதிர்பார்க்காமல் பொதுமக்கள் தாமாக உணர்ந்து பனை அபிவிருத்தியில் பங்குகொள்ள வேண்டும்.

5 hours ago, ஏராளன் said:

நீரைப் பற்றிப்பிடிக்கும் நீர்க்காந்தம் போலப் பனை தொழிற்படுவதாலேயே நிலத்தடிநீரை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது.

இது யாருக்காவது புரிகிறதா ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:
5 hours ago, ஏராளன் said:

நீரைப் பற்றிப்பிடிக்கும் நீர்க்காந்தம் போலப் பனை தொழிற்படுவதாலேயே நிலத்தடிநீரை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது.

இது யாருக்காவது புரிகிறதா ?

இதை அழிப்பதற்கு இந்தியா கங்கணம் கட்டி நிற்கிறதே?

நீண்ட விசாரணை நடைபெற்றால் பலர் உள்ளே போகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. நீரைப் பற்றிப்பிடிக்கும் நீர்க்காந்தம் போலப் பனை தொழிற்படுவதாலேயே நிலத்தடிநீரை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதானமான பொருளாதார வளமும் பனைதான். ஆனால் பனை இன்று தேடுவாரற்ற, ஒதுக்கப்பட்ட மரம் போல் ஆகிவருகிறது. 

இதைத்தான் நாம் தமிழர்கட்சியும் அறிவுறுத்துகின்றது. அறிவுறுத்துவது மட்டுமல்லாமல் சுயமாக பனங்கொட்டை  பதிப்பதிலும் முன்னோடியாக உள்ளனர்.
இதே போல் இலங்கை மண்ணிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வடமராட்சியில் ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் இன்று (11) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் பிரதம விருந்தினாராக கலந்து கொண்டு பனம் விதை நடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். 

மேலும் வாசிக்க…..

https://tamilwin.com/article/jaffna-one-lakh-seeds-project-1730543964#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் பெருகி வரும் யாழ்ப்பாணப் பனை!

‘பனைமரக்காடே பறவைகள் கூடே’ என ஒரு திரைப்படப்பாடலில், இலங்கை நாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியைப் பற்றி எழுதியிருப்பார், கவிஞர் வைரமுத்து. அந்தளவுக்குப் பெருமை வாய்ந்தவை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பனை மரங்கள். இவை நம் நாட்டில் உள்ளபனைமரங்களைக் காட்டிலும் சற்றுத் தடித்துக் காணப்படும். தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலை யாழ்ப்பாணப் பனைகள் வளர்வதற்கு ஏற்ற நிலையில் இருப்பதால், பலரும் இம்மரங்களை இங்கு பயிரிட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இம்மரங்கள் அதிகளவில் உள்ளன. 

யாழ்ப்பாணப் பனைமரங்கள் குறித்து, செஞ்சி அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த பனை விவசாயி விஜயராமனிடம் பேசினோம். “நான் சின்ன வயசா இருக்குறப்போ எங்க பகுதியில இருந்து மரம் ஏறுறதுக்காக நிறையபேர் திருப்புவனம் பக்கம் போவாங்க. எங்கப்பாவும் அடிக்கடி போவார். ஒருமுறை இங்கேயிருந்து நிறையபேர் அப்படிப் போனப்போ, அந்தப்பகுதியில கிடைச்ச யாழ்ப்பாணம் பனை விதைகளை எடுத்துட்டு வந்து, இந்தப்பகுதியில பரவலா விதைச்சு விட்டாங்க. கிட்டத்தட்ட ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இது. 

அப்போ விதைச்சு வளர்ந்த மரங்கள்தான் இப்ப நின்னு பலன் கொடுத்துட்டுருக்கு. இந்தப்பக்கம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் யாழ்ப்பாணப் பனைமரங்கள் இருக்கும். என் வயல் ஓரத்துலேயே 300 பனைமரங்கள் இருக்கு. அதுல கிட்டத்தட்ட 200 மரங்கள் யாழ்ப்பாண ரகம்தான். இந்த மரங்கள்ல அதிகமாகப் பதநீர் கிடைக்கும். மாசி மாசத்துல இருந்து ஆனி மாசம் வரைக்கும் சீசன் இருக்கும். சீசன் சமயங்கள்ல பனை விதைகள், பனங்கிழங்கு, பதநீர்னு விற்பனை செய்வோம். 

பனம் பழங்களைச் சேமிச்சு வெச்சு விதை எடுத்து மண்ணுக்குள்ள புதைச்சு வெச்சா மூணு மாசத்துல பனங்கிழங்குகள் கிடைக்கும். பெரும்பாலும் கிழங்கை நாங்களே ஒரு கிழங்கு மூணு ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். வியாபாரிகளும் தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. ஆனா, வியாபாரிங்க ஒரு கிழங்குக்கு ஒரு ரூபாய்தான் கொடுப்பாங்க. சீசன் நேரங்கள்ல பதநீர் விற்பனை நல்லாயிருக்கும். மரங்கள்ல சுண்ணாம்பு தடவுன பானைகளைக் கட்டி பதநீர் இறக்குவோம். 

ஒரு பாளையில ஒரு வேளைக்கு ஒரு லிட்டர்ல இருந்து ஐந்து லிட்டர் வரை பதநீர் இறங்கும். தினமும் ரெண்டு வேளையும் மரம் ஏறுவோம். இந்தப் பகுதிகள்ல நம்ம நாட்டு ரக மரங்களையும் சேர்த்து மொத்தம் ரெண்டு லட்சம் பனைமரங்கள் இருக்கு. நம்ம பனை மரம், அடிப்பகுதியில இருந்து மேல்பகுதிக்குப் போகப்போக மெல்லிசாக இருக்கும். ஆனா, யாழ்ப்பாணப் பனை மரங்கள் அடிப்பகுதியும், மேல் பகுதியும் தடிச்சிருக்கும். நடுவுல மெலிஞ்சுருக்கும். யாழ்ப்பாணப் பனைமரங்களோட ஓலைகள் பூ விரிஞ்ச மாதிரி பார்க்க அழகா இருக்கும்” என்ற விஜயராமன் பனைமரங்களைக் காட்டியபடியே தொடர்ந்தார்.

“இப்போ நிறைய பேர் பனை விதைகளை வாங்கிட்டு போறாங்க. யாழ்ப்பாணப் பனை விதைகளுக்குக் கொஞ்சம் கிராக்கி அதிகம். யாழ்ப்பாணப் பனை விதைகளை மற்ற விதைகளைவிட ஒரு ரூபாய் அதிகமா வெச்சுத்தான் விற்பனை செய்றேன். போன வருஷம் 200 யாழ்ப்பாணப் பனை மரங்கள்ல இருந்து ரெண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சது. எந்தப் பயிர் கைவிட்டாலும், பனை எங்களைக் கைவிடாது” என்றார், விஜயராமன். 

யாழ்ப்பாணப் பனை விதைகளை அதிகளவில் நடவு செய்திருக்கும் ‘எழில்சோலை’ மாசிலாமணி, “நான், பனை விதைகளை வாங்கலாம்னு போனப்போ ‘யாழ்ப்பாணப் பனை விதைகள்’ இங்க கிடைக்கும்னு விவசாயிகள் சொன்னாங்க. நான் ஆச்சர்யத்தோட பார்க்கவும் அந்த மரங்களைக் காட்டி விளக்கிச் சொன்னாங்க. இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் சிறப்பு வாய்ந்த உணவு வகைகளில் பனை சார் உணவுப்பொருள்களுக்கு முக்கியத்துவம் உண்டு. 

அவங்களோட பாரம்பர்ய உணவு பனை உணவுதான். யாழ்ப் பாணத்துக்குச் சுற்றுலா வர்றவங்களும் பனை உணவுகளை விரும்பிச் சாப்பிடுவாங்க. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1981-ம் வருஷம் 11 மில்லியன் (ஒரு கோடியே பத்து லட்சம்) பனை மரங்கள் இருந்ததாகச் சொல்றாங்க. இலங்கையில் பனை மேம்பாட்டுக்காகப் ‘பனை அபிவிருத்திசபை’ ஆரம்பிச்சுப் பனைத்தொழிலை மேம்படுத்திட்டு இருக்காங்க. அதேமாதிரி தமிழ்நாட்டிலும் பனை பத்தின விழிப்பு உணர்வை அதிகரிக்கணும்” என்றார் அக்கறையுடன்.

தொடர்புக்கு மாசிலாமணி, செல்போன்: 94436 38545 

துரை.நாகராஜன் - படங்கள்: தே.சிலம்பரசன் 

நன்றி- பசுமை விகடன்-

#jaffna #palmyrah

https://www.facebook.com/share/p/17rDnXcNKW/?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

இது யாருக்காவது புரிகிறதா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநுரவால் 24 மணித்தியாலத்திற்குள் பறிக்கப்பட்ட தமிழனின் பதவி

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எனக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பதவியை நான் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்குள் என்னுடைய பதவி இரத்துச் செய்யப்பட்டது என்று முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ்(Selvin Irenias)  தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், பதவியை பொறுப்பேற்கும் போது, ஒரு நாள் முதல்வர் போல இந்த பதவி தற்காலிகமானதுதான் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், அமைச்சர் கையொப்பமிட்டு வந்த அனுமதிக் கடிதத்தை அமைச்சர் தான் இரத்துச் செய்ய வேண்டும். எனக்கு அனுமதி கடிதம் கிடைத்த பின்னர் வேலை நாள் ஒன்றும் இருந்தது.

அப்போதே அறிவித்திருக்கலாம். ஆனால் நான் பொறுப்பேற்றதன் பின்னரே எனக்கு அறிவிக்கப்பட்டது என்றும் செல்வின் இரேணியஸ் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

https://tamilwin.com/article/anura-s-new-government-1730725911

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஏராளன் said:

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எனக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பதவியை நான் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்குள் என்னுடைய பதவி இரத்துச் செய்யப்பட்டது என்று முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ்(Selvin Irenias)  தெரிவித்தார்.

புதிய தலைவர் மிகவும் விபரமாக பேசுகிறார்.

வருமானத்துக்காக எப்படியெல்லாம் பனைகள் தறிக்கப்படுகிறது.

3 பனை தறிக்க அனுமதி கொடுக்கும் போது 10 பனைகள் தறிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு பிரதேசசபை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இரண்டு நாட்களில் பல தகவல்களை சேகரித்து சொல்கிறார்.

இதுவரை இருந்தவர்கள் எவரும் குறை எதுவும் கூறவில்லையே?

எதுவாக இருந்தாலும் அங்குள்ள மக்களுக்கே வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அநுரவால் 24 மணித்தியாலத்திற்குள் பறிக்கப்பட்ட தமிழனின் பதவி

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எனக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பதவியை நான் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்குள் என்னுடைய பதவி இரத்துச் செய்யப்பட்டது என்று முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ்(Selvin Irenias)  தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், பதவியை பொறுப்பேற்கும் போது, ஒரு நாள் முதல்வர் போல இந்த பதவி தற்காலிகமானதுதான் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், அமைச்சர் கையொப்பமிட்டு வந்த அனுமதிக் கடிதத்தை அமைச்சர் தான் இரத்துச் செய்ய வேண்டும். எனக்கு அனுமதி கடிதம் கிடைத்த பின்னர் வேலை நாள் ஒன்றும் இருந்தது.

அப்போதே அறிவித்திருக்கலாம். ஆனால் நான் பொறுப்பேற்றதன் பின்னரே எனக்கு அறிவிக்கப்பட்டது என்றும் செல்வின் இரேணியஸ் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

https://tamilwin.com/article/anura-s-new-government-1730725911

செல்வினின் அரசியல் பின்னணியும் (அரசியல் பின்னணியில்லாதவரைநியமிக்க வேண்டும் என்பதற்காக) பழைய ஊழல் பின்னணியும் தான் பதவி பறிப்பிற்கு காரணம் என பேசிக்கொள்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, வாதவூரான் said:

செல்வினின் அரசியல் பின்னணியும் (அரசியல் பின்னணியில்லாதவரைநியமிக்க வேண்டும் என்பதற்காக) பழைய ஊழல் பின்னணியும் தான் பதவி பறிப்பிற்கு காரணம் என பேசிக்கொள்கிறார்கள்

இதையே நானும் யோசித்தேன்.

ஆனாலும் ஆதாரம் ஏதும் இல்லாமல் எப்படி எழுதுவது என்று எண்ணி விட்டுவிட்டேன்.

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

செல்வினின் அரசியல் பின்னணியும் (அரசியல் பின்னணியில்லாதவரைநியமிக்க வேண்டும் என்பதற்காக) பழைய ஊழல் பின்னணியும் தான் பதவி பறிப்பிற்கு காரணம் என பேசிக்கொள்கிறார்கள்

செல்வினின் அரசியல் பின்னணி என்பது சரியாக இருக்கலாம். ஆனால் ஊழல் என்பது மிகவும் தவறான தகவல் என்று நம்புகிறேன். 

இலங்கையில் இருக்கும் /இருந்த மிகவும் வினைத்திறன் மிக்க, ஊழலற்ற தமிழ்  SLAS நிர்வாகிகளில் செல்வினும் ஒருவர். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

தமிழனின் பதவி

புதுத் தலைவர் சகாதேவனும் தமிழன் தானே.  "தமிழனின்" எண்டது தேவையில்லாத ஆணி 😑.

18 hours ago, putthan said:

இவர் சொல்வது முழுவதும் சரியான விளக்கம் கிடையாது. குறிப்பாகப் பனைமர வேர் ஆழமாகச் செல்வது நீரை ஆழத்துக்குக் கொண்டு செல்வதற்கல்ல. மாறாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்காகவே. வறண்ட நிலத்தில் பனை வேர் அதிக ஆழமாகவும் நீர்ப் பிடிப்பான நிலத்தில் ஆழம் குறைவாகவும் இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.